Jump to content

ரியோ 2016 | ஒலிம்பிக் செய்திகள்


Recommended Posts

ரஷிய வீராங்கனை யூலியா ஸ்டெப்பநோவா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள தடை

160701102133_yulia_stepanova_640x360_afp

 

ரஷிய தடகள போட்டிகளில் ஊக்க மருந்து சோதனை மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ரஷிய வீராங்கனை யூலியா ஸ்டெப்பநோவா, ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்க முடியாது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

அதே சமயம், ஊக்க மருந்திற்கு எதிராக போராடி, விளையாட்டில் நேர்மையை கடைபிடித்த 800 மீட்டர் ஓட்டப் பந்தய வீரங்கனையான யூலியா ஸ்டெப்பநோவாவின் அர்பணிப்புகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பாராட்டி உள்ளது.

ஆனால், முன்னர் ஊக்க மருந்தை அவர் பழகியதை ஒப்புக் கொண்டுள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தேவையான நெறிமுறைகளை அவர் பூர்த்தி செய்யவில்லை என கூறியுள்ளது

http://www.bbc.com/tamil/sport/2016/07/160724_russia_olympic

Link to comment
Share on other sites

  • Replies 145
  • Created
  • Last Reply

உலக மகா ஒலிம்பிக் - 3: மறக்கப்பட்ட கி.மு. ஒலிம்பிக்

 

 
 
_________1_2939155f.jpg
 

சாதனை கிரிக்கெட் தங்கம்

__________2939156a.jpg

இங்கிலாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஜே.டபிள்யு.ஹெச்.டி. டக்ளஸ் மட்டுமே ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 1908 ஒலிம்பிக் போட்டியில் ‘மிடில்வெயிட்’ குத்துச்சண்டைப் போட்டியில் அவர் தங்கம் வென்றார்.

இன்றைக்கு ஆங்கிலத்தில் மைதானங்கள் ‘ஸ்டேடியம்' (Stadium) எனப்படுகின்றன. இது ‘ஸ்டேடு' (Stade) என்ற வார்த்தையி லிருந்து வந்தது. ‘ஸ்டேடு' என்பது வேறொன்றுமில்லை, 192 மீட்டர் நீளம் கொண்ட பண்டைய ஒலிம்பிக் ஓட்டப்பாதைதான். அந்த வகையில் உலக விளையாட்டுப் போட்டிகள், விளையாட்டு மைதானங்களுக்குத் தொடக்கமாகவும் ஒலிம்பிக் போட்டியே இருந்துள்ளது.

# பண்டைய கிரீஸ் என்பது பல்வேறு நகரங்களைத் தனித்தனி மாகாணங்களாகக் கொண்ட நாடாக இருந்தது. அந்த மாகாண ஆட்சி யாளர்கள் போரிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதற்கிடையில்தான் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகள் நடைபெறும்போது வீரர்கள் அமைதியாகப் பயணிப்பதற்கு வசதியாக போர், சண்டைகள் நிறுத்தப்பட்டன.

# ஸீயஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. பண்டைய உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றான ஸீயஸ் கடவுளின் மாபெரும் சிலை, ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக ஒலிம்பியாவில் எழுப்பப்பட்டது.

# ஒலிம்பிக் போட்டிகள் எப்போது தொடங்கின என்பது தொடர்பாக நிறைய புராணக் கதைகளும் கட்டுக்கதைகளும் நிலவுகின்றன. கிடைத்துள்ள பதிவுகளின்படி கி.மு. 776-ல் கிரீஸில் உள்ள ஒலிம்பியாவில் ஒலிம்பிக் போட்டிகள் முதலில் நடைபெற்றன. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டதாலேயே ‘ஒலிம்பியாட்’ என்று அந்தப் போட்டி அழைக்கப்பட்டது.

_________2_2939159a.jpg

# பண்டைக் காலத்தில் மிகக் குறைவான பிரிவுகளிலேயே போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் பங்கேற்பவர்கள் யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது, கிரேக்கத்தில் பேச வேண்டும் என்பது மட்டுமே பங்கேற்பதற்கான அடிப்படை நிபந்தனை. இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் யாரும், எந்த நாட்டைச் சேர்ந்தவரும் போட்டிகளில் பங்கேற்கலாம்.

# எலிஸ் மாகாணத்தைச் சேர்ந்த கோரிபஸ் என்ற சமையல் நிபுணர்தான் ஒலிம்பிக் போட்டிகளின் முதல் வெற்றியாளராகக் கருதப்படுகிறார். போட்டிகளின் தொடக்கத்தில் நடைபெற்ற ‘ஸ்டேடு' என்ற ஓட்டப்பந்தயத்தில் அவர் வெற்றி பெற்றார்.

2016 ஒலிம்பிக்கில்… அழைக்கிறது தென்னமெரிக்கா

இதுவரை நடந்து முடிந்துள்ள 30 ஒலிம்பிக் போட்டிகளில் ஒன்றுகூட தென்னமெரிக்கக் கண்டத்தில் நடத்தப்பட்டதில்லை. ரியோவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 31-வது ஒலிம்பிக் போட்டிதான், தென்னமெரிக்க கண்டத்தில் நடைபெறும் முதல் ஒலிம்பிக் போட்டி.

_________3_2939160a.jpg

 
Link to comment
Share on other sites

தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர்

 

 
கே.டி.ஜாதவ்
கே.டி.ஜாதவ்

பின்லாந்தின் ஹெல்சிங்கி நகரில் 15-வது ஒலிம்பிக் போட்டி 1952 ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 3 வரை நடைபெற்றது. 69 நாடுகளைச் சேர்ந்த 4,436 வீரர்கள், 519 வீராங்கனைகள் என மொத்தம் 4,955 பேர் பங்கேற்றனர். 17 விளையாட்டுகளில் 149 போட்டிகள் நடத்தப்பட்டன.

அமெரிக்கா 40 தங்கம், 19 வெள்ளி, 17 வெண்கலம் என மொத் தம் 76 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. சோவியத் யூனியன் 22 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலம் என 71 பதக்கங்களுடன் 2-வது இடத்தைப் பிடித்தது. 90 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஹங்கேரி 42 பதக்கங்களுடன் 3-வது இடத்தைப் பிடித்தது.

இந்தியாவுக்கு இரு பதக்கம்

இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என இரு பதக்கங்கள் கிடைத்தன. ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து 5-வது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்தது. இறுதி போட்டியில் இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

மல்யுத்தத்தில் இந்தியாவின் கே.டி.ஜாதவ், பாந்தம் வெயிட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை கே.டி.ஜாதவுக்கு கிடைத்தது. இவர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

தங்க மகள்

அமெரிக்க தடகள வீரர் பாப் மத்தியாஸ் டெகத்லான் போட்டியில் 7,887 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது முறையாக தங்கம் வென்றார். மகளிர் பிரிவு குதிரையேற்றப் போட்டியில் தங்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமை டென்மார்க்கின் லிஸ் ஹார்டெலுக்கு கிடைத்தது.

எமில் ஸடோபெக்

செக்கோஸ்லோவேக்கியாவின் எமில் ஸடோபெக், ஆடவர் பிரிவி 5,000 மீட்டர், 10,000 மீட்டர் ஓட்டம் மற்றும் மாரத்தானில் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒரே ஒலிம்பிக்கில் நீண்ட தூர ஓட்டங்களில் அனைத்து போட்டியிலும் வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். எமிலின் மனைவி டானா ஸடோப்கோவாவும் ஹெல்சிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார். அவர் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்றார்.

http://tamil.thehindu.com/sports/தனிநபர்-பிரிவில்-பதக்கம்-வென்ற-முதல்-இந்தியர்/article8893780.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

1948 லண்டன் ஒலிம்பிக்: 4 தங்கம் வென்ற இரு குழந்தைகளின் தாய்

 

 
பேனி பிளாங்கர்ஸ் கோயன்
பேனி பிளாங்கர்ஸ் கோயன்

இரண்டாம் உலகப் போர் காரணமாக 1940, 1944-ம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. 12 ஆண்டுகளுக்குப் பிறகு 14-வது ஒலிம்பிக் போட்டி 1948-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்றது. ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெற்ற இப்போட்டியில் 59 நாடுகளைச் சேர்ந்த 3,714 வீரர்கள், 390 வீராங்கனைகள் என மொத்தம் 4,104 பேர் கலந்து கொண்டனர்.

17 விளையாட்டுகளில் 136 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 2-வது உலகப் போரில் தீவிரமாக செயல்பட்ட ஜெர்மனி, ஜப்பான் நாடுகள் இப்போட்டியில் சேர்க்கப்படவில்லை. அமெரிக்கா 38 தங்கம், 27 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 84 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. ஸ்வீடன் 16 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 44 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், பிரான்ஸ் 10 தங்கம், 6 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன.

இந்தியாவுக்கு 4-வது தங்கம்

ஹாக்கிப் போட்டியில் இந்தியா 4-வது முறையாக தங்கப் பதக்கம் கைப்பற்றியது. இறுதி போட்டியில் இந்தியா 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இங்கிலாந்து வெள்ளியும், நெதர்லாந்து வெண்கலமும் வென்றன.

பிளாங்கர்ஸ்

2 குழந்தைகளின் தாயான நெதர்லாந்தின் 30 வயது தடகள வீராங்கனை பேனி பிளாங்கர்ஸ் கோயன் 4 தங்கம் வென்றார். 100 மீட்டர், 200 மீட்டர், 80 மீட்டர் தடை தாண்டுதல் போட்டி, 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கம் வென்றார். தனது சாதனை மற்றும் குடும்பப் பின்னணியின் காரணமாக இவர் தி பிளையிங் ஹவுஸ் வைஃப் என்று அழைக்கப்பட்டார். நெதர்லாந்து தடகள வரலாற்றில் தலைசிறந்த வீராங்கனையாக கருதப்படும் பிளாங்கர்ஸூக்கு ஆம்ஸ்டெர்டாமில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

ஆர்தர் வின்ட்

இலங்கை வீரர் டங்கன் ஒயிட் 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றார். இலங்கைக்கு கிடைத்த முதல் ஒலிம்பிக் பதக்கம் இதுதான். ஜமைக்காவின் ஆர்தர் வின்ட் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கமும், 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் ஜமைக்கா வீரர் என்ற பெருமையை பெற்றார்.

http://tamil.thehindu.com/sports/1948-லண்டன்-ஒலிம்பிக்-4-தங்கம்-வென்ற-இரு-குழந்தைகளின்-தாய்/article8889846.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

ரஷ்யாவுக்கு முழு ஒலிம்பிக் தடை விதிப்பதை சர்வதேச ஒலிம்பிக் குழு தவிர்த்துக் கொண்டது; ஒவ்வொரு விளையாட்டுக்கும் பொறுப்பான சர்வதேச அமைப்புகளிடம் தீர்மானிக்கும் பொறுப்பு
2016-07-26 10:48:32

ரியோ 2016 ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் பங்­கு­பற்ற முடி­யா­த­வாறு ரஷ்­யா­வுக்கு முழு அள­வி­லான தடை­வி­திப்­பதை சர்­வ­தேச ஒலிம்பிக் குழு தவிர்த்­துக் ­கொண்­டது.

 

மாறாக ரஷ்ய போட்­டி­யா­ளர்கள் தொடர்­பான தீர்­மா­னங்­களை எடுக்கும் பொறுப்பை ஒவ்­வொரு விளை­யாட்­டுக்கும் பொறுப்­பான சர்­வ­தேச ஆளுமைக் குழுக்­க­ளிடம் (சர்­வ­தேச சங்­கங்கள் அல்­லது சம்­மே­ள­னங்கள்) சர்­வ­தேச ஒலிம்பிக் குழு ஒப்­ப­டைத்­துள்­ளது.

 

18181thomas-bach---russia.jpg

 

ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் ரஷ்ய விளை­யாட்டு வீர, வீராங்­க­னைகள் தூய்­மை­யா­ன­வர்கள் என்­ப­தையும் பங்­கு ­பற்ற அவர்கள் தகுதி உடை­ய­வர்­களா என்­ப­தையும் தீர்­மா­னிக்கும் பொறுப்பை அந்­தந்த விளை­யாட்­டுக்குப் பொறுப்­பான சர்­வ­தேச அமைப்­பு­க­ளிடம் சர்­வ­தேச ஒலிம்பிக் குழு விட்­டு­விட்­டது.

 

அரசு ஆத­ர­வுடன் 2011 முதல் 2015 வரை ஊக்­க­ம­ருந்து பாவனைத் திட்­டத்தில் ரஷ்யா ஈடு­பட்­டு­வந்­துள்­ள­தாக  கன­டாவைச் சேர்ந்த சட்ட நிபுணர் றிச்சர்ட் மெக்­லெரன் அறிக்கை சமர்ப்­பித்த பின்­னரே சர்­வ­தேச ஒலிம்பிக் குழு தனது தீர்­மா­னத்தை வெளி­யிட்­டது.

 

எதிர்­வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள ரியோ 2016 ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் பங்­கு­பற்­ற­வுள்ள ரஷ்ய போட்­டி­ யா­ளர்கள், சர்­வ­தேச ஒலிம்பிக் குழுவின் கடும் சட்­ட­வி­தி­களை எதிர்­கொள்ள நேரிட்­டுள்­ளது. 

 

சர்­வ­தேச ஒலிம்பிக் குழுவின் நிறை­வேற்றுச் சபை உறுப்­பி­னர்­க­ளி­டையே ஞாயி­றன்று நடத்­தப்­பட்ட மூன்று மணி நேர தொலைத்­தொ­டர்­பா­டல்­களை அடுத்தே சர்­வ­தேச ஒலிம்பிக் குழு இந்தத் தீர்­மா­னத்தை எடுத்­துள்­ளது.

 

கூட்டுப் பொறுப்­பு­ணர்­வுகள், ஒவ்­வொரு மானு­ட­னுக்கும் போட்­டி­யா­ள­ருக்கும் வழங்­கப்­ப­ட­ வேண்­டிய தனிப்­பட்ட நியாயம் ஆகிய விட­யங்­களில் சமச்­சீர்த்­தன்­மையைப் பேண வேண்­டி­யுள்­ள­தாக சர்­வ­தேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் குறிப்­பிட்டார்.

 

அரச ஆத­ர­வுடன் ஊக்­க­ம­ருந்து பாவ­னையில் ஈடு­பட்­ட­தாக சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­களின் அடிப்­ப­டையில் ரஷ்­யா­மீது முழு அள­வி­லான ஒலிம்பிக் தடை விதிக்க வேண்டும் என ஊக்­க­ம­ருந்து பாவ­னைக்கு எதி­ரான உலக முகவர் நிறு­வ­னமும் (WADA) ஏனைய ஊக்­க­ம­ருந்து பாவ­னைக்கு எதி­ரான அமைப்­பு­களும் விடுத்த கோரிக்­கையை சர்­வ­தேச ஒலிம்பிக் குழு நிரா­க­ரித்­துள்­ளது.

 

இதே­வேளை, ரஷ்யா தொடர்­பான சர்­வ­தேச ஒலிம்பிக் குழுவின் தீர்­மானம் தமக்கு பெரும் ஏமாற்­றத்தைக் கொடுத்­துள்­ள­தாக ஊக்­க­ம­ருந்து பாவ­னைக்கு எதி­ரான உலக முகவர் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

 

அத்­துடன் இந்த தீர்­மா­னத்­திற்கு எதி­ராக மேலும் சில ஊக்­க­ம­ருந்து பாவ­னைக்கு எதி­ரான சங்­கங்­க­ளி­ட­மி­ருந்து கடு­மை­யான விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளன.

 

ரஷ்­யா­வுக்கு முழு அள­வி­லான தடை விதிக்­க­வேண்டும் என்ற தனது தீர்மானத்தில் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாக வாடா தெரிவித்துள்ளது.

 

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் இந்தத் தீர்மானமானது தூய்மையான (நேர்மையான) போட்டியாளர்கள் பாதுகாக்கப்படுவதை கேள்விக் குறியாக்கிவிட்டுள்ளதாக (WADA) தலைவர் சேர் ஒலிவியர் நிக்லி தெரிவித்துள்ளார்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=18182#sthash.OaqPLsoa.dpuf
Link to comment
Share on other sites

ஒலிம்பிக்: புத்த பிட்சு போடியம் ஏறுவாரா?

ரியோ ஒலிம்பிக்கில், கே - 1 என்று அழைக்கப்படும் அதிவேக படகு ஓட்டும் போட்டியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் ஜப்பானிய புத்த பிட்சு கசூகி யாசுவா, பதக்கம் வெல்லும் நம்பிக்கையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

buth.jpg

 

ஜப்பானின் நாகோனா நகரில், 'செங்கோஜி தைகாஜின்' என்ற புகழ்பெற்ற புத்த மடாலயம் உள்ளது. இங்கு ஏராளமான புத்த பிட்சுகள் பணிபுரிகின்றனர். இந்த மடாலயத்தில் இருக்கும் இளம் துறவி கசூகி யாசுவாவுக்கு, மாலை 3 மணியாகி விட்டால் இருப்புக் கொள்ளாது. கையில் துடுப்புடன் படகை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள சாய்கவா நதிக்கு புறப்பட்டு விடுவார். அப்போது கசூகியின் உடலில் துறவிக்கான எந்த அடையாளமும் இருக்காது. ஸ்போர்ட்ஸ் உடைக்கு மாறி விடும் கசூகி, இரவு வரை தீவிர பயிற்சியில் ஈடுபடுவார். வாரத்தில் ஆறுநாட்களும் இதுதான் கசூகியின் வழக்கமான நடைமுறை.

கடந்த 2008 ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில், முதல் சுற்றிலேயே தோல்வி கண்டார் கசூகி. லண்டன் ஒலிம்பிக்கிலும் ஜப்பான் சார்பாக பங்கேற்றார். இந்த முறை சற்று முன்னேற்றம் கிடைத்தது. அதாவது 9 வது இடத்தை பிடித்தார். ஆனால் ஜப்பானை பொறுத்தவரை இது ஒரு புதிய  சாதனைதான். ஒலிம்பிக் வரலாற்றில், இந்தப் பிரிவில் எந்த ஒரு ஜப்பானிய வீரரும் 9 வது இடம் வரை முன்னேறியது இல்லை. தற்போது கசூகிக்கு 27 வயதாகிறது. மூன்றாவது முறையாக ஜப்பான் அணிக்காக ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்.

ரியோவில் போடியம் ஏறும் ஆசையில் இருக்கும் கசூகி யாசூவா , '' புத்த பிட்சுவாக மாற முடிவெடுத்த பின், கடவுளுக்கு சேவை புரியும் நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் சாய்கவா நதியில்தான் கிடப்பேன். கடந்த ஆண்டு ஜப்பானின் தேசிய சாம்பியன் ஆனேன். எனக்கு இப்போது பதக்கம் வெல்ல முடியும் என்ற நம்பிகை அதிகரித்திருக்கிறது. வெற்றியோ தோல்வியோ இந்த விளையாட்டை நான் விரும்பி விளையாடுகிறேன் '' என்கிறார்.

http://www.vikatan.com/news/sports/66532-japanese-buddhist-priest-sets-sights-rio-olympics.art

Link to comment
Share on other sites

1956 மெல்போர்ன் ஒலிம்பிக்: சோவியத் யூனியன் ஆதிக்கம்

 

rio_2946826h.jpg
 

ஆஸ்திரேலியாவின் மெல் போர்ன் நகரில் 16-வது ஒலிம்பிக் போட்டி 1956-ம் ஆண்டு நவம்பர் 22 முதல் டிசம்பர் 8 வரை நடைபெற்றது. இப்போட்டியில் 72 நாடுகளைச் சேர்ந்த 2,938 வீரர்கள், 376 வீராங் கனைகள் உட்பட 3,314 பேர் பங்கேற்றனர். 17 விளையாட்டு களில் 145 பிரிவுகளில் போட்டி கள் நடத்தப்பட்டன.

சோவியத் யூனியன் 37 தங்கம், 29 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 98 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. அமெ ரிக்கா 32 தங்கம், 25 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 74 பதக்கங்களுடன் 2-வது இடத் தையும், ஆஸ்திரேலியா 13 தங் கம், 8 வெள்ளி, 14 வெண்கலம் என 35 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன.

ஆஸ்திரேலிய தடகள வீராங் கனை பெட்டி குத்பெர்ட் 3 தங்கப் பதக்கங்களை வென்றார். பெட் டியின் சாதனையை அங்கீகரிக் கும் வகையில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தின் அருகே அவருக்கு சிலை அமைத்து கவுரவப்படுத்தியது ஆஸ்திரேலியா.

இந்தியாவுக்கு 6-வது தங்கம்

இந்தியாவின் சார்பில் 59 பேர் களமிறக்கப்பட்டனர். ஆனால் ஹாக்கிப் போட்டியில் மட்டுமே இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்தது. தொடர்ந்து 6-வது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்தது இந்திய அணி. இறுதிப் போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

ஒலிம்பிக்கில் சோவியத் யூனியன், ஹங்கேரி வீரர்கள் இடையே பதற்றம் நிலவியது. வாட்டர் போலோ போட்டியில் ஹங்கேரியின் பயிற்சி முறை மற்றும் உத்திகளை சோவியத் யூனியன் காப்பியடிக்க முயன்ற தால் இவ்விரு அணிகள் இடை யிலான மோதல் அதிகரித்தது. அதன் உச்சக்கட்டமாக சோவியத் யூனியன்-ஹங்கேரி இடையிலான அரையிறுதி ஆட்டத்தின்போது மோதல் வெடித்தது.

அந்த ஆட்டத்தில் ஹங்கேரி அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதால் ஆத்திர மடைந்த சோவியத் யூனியன் வீரர் வாலன்டின் பிரோகோ போவ், ஹங்கேரியின் இர்வின் ஸடோரின் முகத்தில் குத்தினார். இதனால் அவருடைய கண்ணின் கீழ் பகுதியில் இருந்து ரத்தம் வழிந்தது. கடைசி 2 நிமிடங்கள் ரத்தம் வழிய இலக்கை கடந்தார் இர்வின். இறுதியில் ஹங்கேரி 4-0 என்ற கணக்கில் சோவியத் யூனியனை வீழ்த்தியது.

http://tamil.thehindu.com/sports/1956-மெல்போர்ன்-ஒலிம்பிக்-சோவியத்-யூனியன்-ஆதிக்கம்/article8900266.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

1936 பெர்லின் ஒலிம்பிக்: மரணத்தை வென்ற பெட்டி ராபின்சன்

 

 
 
பெட்டி ராபின்சன்
பெட்டி ராபின்சன்

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் 11-வது ஒலிம்பிக் போட்டி 1936-ம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் 16 வரை நடைபெற்றது. 49 நாடுகளைச் சேர்ந்த 3,632 வீரர்கள், 331 வீராங்கனைகள் என மொத்தம் 3,963 பேர் கலந்து கொண்டனர்.

இந்த ஒலிம்பிக் போட்டிதான் முதல்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. வழக்கமாக முதலிடம் பிடிக்கும் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி போட்டியை நடத்திய நாடான ஜெர்மனி 33 தங்கம், 26 வெள்ளி, 30 வெண்கலம் என 89 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. அமெரிக்கா 24 தங்கம், 20 வெள்ளி, 12 வெண்கலம் என 56 பதக்கங்களுடன் 2-வது இடத்தைப் பிடித்தது. ஹங்கேரி 10 தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 16 பதக்கங்களுடன் 3-வது இடத்தைப் பிடித்தது.

டூனியை பாராட்டிய ஹிட்லர்

எகிப்தைச் சேர்ந்த 20 வயது பளுதூக்குதல் வீரரான காதர் சையது எல் டூனி, ஜெர்மனியைச் சேர்ந்த உலக சாம்பியன்களான ரூடால்ப், அடால்ப் ஆகியோரை வீழ்த்தியதோடு புதிய ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைகளை படைத்தார்.

டூனியின் அபார திறமையைக் கண்டு வியந்த ஜெர்மனி அதிபர் ஹிட்லர், பதக்க மேடைக்கு சென்று அவரைப் பாராட்டினார். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக எங்கள் வீரர்கள் எதிரணியினரை புரட்டியெடுப்பார்கள் என ஹிட்லர் சவால் விடுத்திருந்தார்.

ஆனால் போட்டி முடிந்த பிறகு டூனிக்கு தங்கப் பதக்கத்தை வழங்கிய ஹிட்லர், "உங்க ளால் எகிப்து பெருமையடைகிறது. நீங்கள் ஜெர்மனியைச் சேர்ந்தவராக இருந்திருந் தால் உங்களை தூக்கி வைத்து கொண்டாடி யிருப்பேன். எனினும் நீங்கள் ஜெர்மனியை உங்களின் இரண்டாவது தாய் நாடாக கருதுவீர்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

இந்தியா ஹாட்ரிக்

ஹாக்கி போட்டியில் இந்தியா 3-வது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்தது. இறுதி போட்டியில் 8-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை பந்தாடியது. இந்த ஆட்டத்தில் தயான் சந்த் 3 கோல்களை அடித்தார்.

தயான் சந்தின் ஆட்டத்தைப் பார்த்து வியந்த ஜெர்மனி அதிபர் ஹிட்லர் தனது நாட்டு குடியுரிமை தருவதாகவும், ஜெர்மனி ராணுவத்தில் உயர் பதவி வழங்குவதாகவும் உறுதி கொடுத்தார். ஆனால் தயான் சந்த் அதற்கு சிரித்துக் கொண்டே மறுத்துவிட்டார்.

மரணத்தை வென்ற பெட்டி ராபின்சன்

மகளிர் 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஜெர்மனி அணியினர் தங்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜெர்மனி வீராங்கனைகள் ‘பேட்டனை' தவறவிட்டதால் அந்த அணி தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.

இதனால் அமெரிக்காவுக்கு தங்கம் கிடைத்தது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த பெட்டி ராபின்சன், 1931-ல் நடைபெற்ற விமான விபத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரை பிணவறைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறக்கவில்லை என்பதும், கோமாவில் இருப்பதும் தெரியவந்தது.

தீவிர சிகிச்சையால் அடுத்த 6 மாதத்தில் கோமாவில் இருந்து மீண்டார் ராபின்சன். ஆனால் அவர் நடப்பதற்கு மேலும் 2 ஆண்டுகள் ஆனது. இதன் காரணமாக அவரால் 1932 ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாமல் போனது. எனினும் மனம் தளராத ராபின்சன், பெர்லின் ஒலிம்பிக்கில் மகளிர் 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்று தங்கம் வென்றார். மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்து தங்கம் வென்ற ராபின்சன் அமெரிக்க தடகளத்தில் சரித்திர புகழை பெற்றவராக திகழ்கிறார்.

http://tamil.thehindu.com/sports/1936-பெர்லின்-ஒலிம்பிக்-மரணத்தை-வென்ற-பெட்டி-ராபின்சன்/article8885064.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

1932 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்: இரு உலக சாதனை படைத்த டிட்ரிக்சன்

 

 
டிட்ரிக்சன்
டிட்ரிக்சன்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 1932-ம் ஆண்டு ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 14 வரை 10-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. உலகலாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக 37 நாடுகளைச் சேர்ந்த 1,206 வீரர்கள், 126 வீராங்கனைகள் என மொத்தம் 1,332 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

அமெரிக்கா 41 தங்கம், 32 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 103 பதக்கங் களைக் பெற்று முதலிடம் பிடித்தது. இத்தாலி 12 தங்கம், 12 வெள்ளி, 12 வெண் கலம் என 36 பதக்கங்களுடன் 2-வது இடத்தைப் பிடித்தது. பிரான்ஸ் 10 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என 19 பதக்கங் களுடன் 3-வது இடத்தைப் கைப்பற்றியது.

பிரம்மாண்டமான கிராமம்

முதல்முறையாக விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக பால்ட்வின் மலை பகுதியில் 321 ஏக்கர் பரப்பளவில் 500 பங்களாக்கள் கொண்ட பிரம்மாண் டமான விளையாட்டு கிராமம் அமைக்கப் பட்டது. ஆனால் இதை முழுவதுமாக வீரர்களே ஆக்கிரமித்துக் கொண்டதால், வீராங்கனைகளுக்கு இங்கு இடம் கிடைக்க வில்லை.

இதனால் அவர்கள் ஹோட்டலிலேயே தங்க வைக்கப்பட்டனர். விளையாட்டு கிராமத்தில் மருத்துவமனை, நூலகம், அஞ்சல் அலுவலகம் ஆகியவையும் இடம் பெற்றிருந்தன. வீரர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக 40 சமையலறைகள் இருந் தன.

இரு உலக சாதனை

அமெரிக்க வீராங்கனை யான பேபி டிட்ரிக்சன் ஈட்டி எறிதல், தடை ஒட்டத்தில் தங்கம் வென்றார். அவர் தடை ஓட்டத்தில் 11.7 விநாடிகளில் இலக்கை எட்டி புதிய உலக சாதனை படைத்தார். ஈட்டி எறிதலில் 43.69 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனையை நிகழ்த்தினார்.

இந்தியாவுக்கு 2-வது தங்கம்

இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக ஹாக்கிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தது. இந்தியா 24-1 என்ற கணக்கில் அமெரிக்காவையும் ஜப்பானை 11 -1 என்ற கோல் கணக்கிலும் தோற்கடித்து முதலிடம் பிடித்தது.

இந்தியாவின் தயான்சந்த் 12 கோல்களும், ரூப் சிங் 13 கோல் களும் அடித்து அசத்தினர். 3 நாடுகள் மட்டுமே கலந்து கொண்ட இந்த போட்டியில் ஜப்பான் 2-வது இடமும், அமெரிக்கா 3-வது இடமும் பிடித்தன.

இளம் நீச்சல் வீரர்

15 வயதை நெருங்கிய ஜப்பானின் கிடமுரா, ஆடவர் 1,500 மீட்டர் ப்ரீஸ்டைலில் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்த சாதனையை 1988 சியோல் ஒலிம்பிக்கில் ஹங்கேரி வீராங்கனை கிறிஸ்டினா முறியடித்தார். அவர் 200 மீட்டர் பேக் ஸ்டிரோக் போட்டியில் தங்கம் வென்றார். அப்போது அவருடைய வயது 14 ஆண்டுகள், 41 நாள்கள்.

http://tamil.thehindu.com/sports/1932-லாஸ்-ஏஞ்சலீஸ்-ஒலிம்பிக்-இரு-உலக-சாதனை-படைத்த-டிட்ரிக்சன்/article8879203.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

1928 ஆம்ஸ்டெர்டாம் ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் தங்கம்

 

 
ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட இந்திய அணி
ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட இந்திய அணி

நெதர்லாந்தின் ஆம்ஸ்டெர்டாம் நகரில் 1928-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை 9-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இந்த ஒலிம்பிக் போட்டி 16 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டது. கோடைகால ஒலிம்பிக் என்ற பெயரில் நடத்தப்பட்ட முதல் ஒலிம்பிக் இதுதான்.

இதில் 46 நாடுகளைச் சேர்ந்த 2,606 வீரர்கள், 277 வீராங்கனைகள் என மொத்தம் 2,883 பேர் கலந்து கொண்டனர். 15 விளை யாட்டுகளில் 109 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் முறையாக ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. முதல் முறையாக போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணி வகுப்பு நடத்தப்பட்டது. மகளிர் பிரிவில் முதல் முறையாக தடகளம், ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் நடத்தப்பட்டன.

22 தங்கம், 18 வெள்ளி, 16 வெண்கலம் என 56 பதக்கங்களை வென்ற அமெரிக்கா பதக்கப் பட்டியலில் முதலிடத் தைப் பிடித்தது. 1920, 1924 ஆகிய ஒலிம்பிக் போட்டிகளில் தடை செய்யப்பட்ட ஜெர்மனி இந்த முறை பங்கேற்று 10 தங்கம், 7 வெள்ளி, 14 வெண்கலம் என 31 பதக்கங்களுடன் 2-வது இடத்தைப் பிடித்தது. பின்லாந்து 8 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என 25 பதக்கங்களுடன் 3-வது இடத்தைப் பிடித்தது.

இளவரசர் ஜப்பானின் மிகியோ ஓடா மும்முறைத் தாண்டுதல் போட்டியில் 15.21 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றார். இதன் மூலம் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் ஆசிய நாட்டவர் என்ற பெருமை பெற்றார். பின்லாந்தின் பாவோ நர்மி, 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக்கில் 9-வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். நார்வே இளவரசர் ஓலேவ், படகுப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றார்.

முதல் தங்கம்

ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று சாதனை படைத்தது. இதுதான் ஒலிம் பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம். இறுதிப் போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் நெதர் லாந்தை வீழ்த்தி தங்கம் வென்றது. இந்த தொடரில் 18 ஆட்டங்களில் 69 கோல்கள் அடிக்கப் பட்டன. இந்தியாவின் தயான் சந்த் 14 கோல் களை அடித்து முதலிடம் பெற்றார்.

உயிரைப் பறித்த பரிசு

கனடாவின் பெர்ஸி வில்லியம்ஸ் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டங்களில் தங்கம் வென்றார். அப்போது அவருக்கு 20 வயது மட்டுமே. இந்த வெற்றிகளால் கனடாவின் கதாநாயகனாக உருவெடுத்தார். இதுமட்டு மின்றி 1930-ல் நடைபெற்ற முதல் காமன் வெல்த் போட்டியிலும் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். 69 வயது வரை தனது தாயுடன் வசித்தார் வில்லியம்ஸ். அதன்பிறகு மூட்டு வலியால் பாதிக்கப்பட்ட அவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்தத் துப்பாக்கி 1928-ல் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதற்காக அவருக்கு பரிசாக அளிக்கப்பட்டதாகும்.

http://tamil.thehindu.com/sports/1928-ஆம்ஸ்டெர்டாம்-ஒலிம்பிக்-இந்தியாவுக்கு-முதல்-தங்கம்/article8873596.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

1924 பாரீஸ் ஒலிம்பிக்: களத்திலும் படத்திலும் அசத்திய வெய்ஸ் முல்லர்

 

ஜானி வெய்ஸ் முல்லர்
ஜானி வெய்ஸ் முல்லர்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 8-வது ஒலிம்பிக் போட்டி 1924-ம் ஆண்டு மே 4-ம் தேதி முதல் ஜூலை 27-ம் தேதி வரை நடைபெற்றது. இதன்மூலம் நவீன ஒலிம்பிக்கை 2 முறை நடத்திய ஒரே நகரம் என்ற பெருமை பாரீஸுக்கு கிடைத்தது. 44 நாடுகளைச் சேர்ந்த 135 வீராங்கனைகள், 2,954 வீரர்கள் என மொத்தம் 3,089 பேர் கலந்து கொண்டனர்.

17 விளையாட்டுகளில் 126 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப் பட்டன. இந்த ஒலிம்பிக்கில் இருந்து தான், ‘ஒலிம்பிக் விளை யாட்டு கிராமம்' உருவாக்கும் பழக்கம் கொண்டுவரப்பட்டது. மேலும் நிறைவு விழாவும் நடத்தப் பட்டது.

இந்த ஒலிம்பிக்கில் தான் மாரத்தான் ஓட்டத்துக்கான தூரம் 42.195 கிலோ மீட்டர் தூரம் என நிர்ணயிக்கப்பட்டது. நீச்சல் குளத் தின் அளவும் முறைப்படுத்தப் பட்டு ஒவ்வொருவருக்கும் தனித் தனி லேன் அமைக்கப்பட்டது.

இந்த முறையும் வெறும் கை

இந்தியாவின் சார்பில் 7 தடகள வீரர்கள் பங்கேற்றாலும், பதக்கம் கிடைக்கவில்லை. முதல் உலகப் போரை முன்னின்று நடத்திய ஜெர்மனி இந்தப் போட்டியிலும் பங்கேற்க முடியாமல் போனது. ஈக்வேடார், ஹைதி, அயர்லாந்து, லிதுவேனியா, பிலிப்பைன்ஸ், மெக்ஸிகோ, உருகுவே, லாட்வியா, போலந்து ஆகிய நாடுகள் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றன.

முதல்முறையாக கலைப் பிரிவிலும் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 5 பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் 193 பேர் பங்கேற்றனர்.

இப்போட்டிக்கு மொத்தம் 14 பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஆனாலும் இசைப் பிரிவில் பதக்கம் எதுவும் வழங்கப்பட வில்லை.

டெகத்லானில் சாதனை

அமெரிக்காவின் ஹரோல்ட் ஆஸ்பார்ன் உயரம் தாண்டுதல் மற்றும் டெகத்லான் போட்டி களில் தங்கம் வென்றார். உயரம் தாண்டுதலில் 6.6 அடி உயரம் தாண்டினார். இதன்மூலம் ஒலிம் பிக்கில் அதிக உயரம் தாண் டியவர் என்ற சாதனையைப் படைத்தார். இந்த சாதனை 12 ஆண்டுகளுக்குப் பிறகு முறிய டிக்கப்பட்டது. டெகத்லானிலும் 7,710.775 புள்ளிகளைப் பெற்று உலக சாதனை படைத்தார்.

அமெரிக்கா ஆதிக்கம்

இந்த ஒலிம்பிக்கிலும் அமெரிக் காவே ஆதிக்கம் செலுத்தியது. 45 தங்கம், 27 வெள்ளி, 27 வெண் கலம் என மொத்தம் 99 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

பின்லாந்து 14 தங்கம், 13 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 37 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், போட்டியை நடத்திய பிரான்ஸ் 13 தங்கம், 15 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 38 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன.

களத்திலும்... படத்திலும்

அமெரிக்காவின் ஜானி வெய்ஸ் முல்லர் ஒரே நாளில் 100 மீட்டர், மற்றும் 400 மீட்டர் ப்ரிஸ்டைல் நீச்சல் போட்டிகளில் தங்கம் வென்றார். அதேநாளில் நடந்த வாட்டர் போலோ போட்டி களில் வெண்கலம் கைப்பற்றி னார். இவரது உடல் வலிமையை கண்ட ஹாலிவுட் தயாரிப்பாளர் கள், டார்சன் வேடத்தில் நடிக்க அழைத்தனர். ஒலிம்பிக் களத்தில் அசத்திய இவர் டார்சனாக 20 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

சாதனை வீரர் நுர்மி

கடந்த ஒலிம்பிக்கில் அசத் திய பின்லாந்தின் பாவே நுர்மி இந்த ஒலிம்பிக்கில் 1500 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். இப் போட்டி முடிந்த 55-வது நிமிடத் தில் 5,000 மீட்டர் ஓட்டம் தொடங்குவதாக அறிவிக்கப் பட்டது. இதனால் நுர்மியால் முதலிடம் பிடிக்க முடியாது என்ற கருத்து நிலவியது. ஆனால் மனம் தளராமல் ஓடி மீண்டும் தங்கம் வென்றார்.

தனிநபர் 5 ஆயிரம் மீட்டர் கிராஸ் கன்ட்ரி பிரிவு, அணி அளவிலான 5 ஆயிரம் மீட்டர் கிராஸ் கன்ட்ரி, 3 ஆயிரம் மீட்டர் அணி பிரிவு ஓட் டத்தில் தங்கம் வென் றார். மொத்தம் 5 தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். ஒரே ஒலிம்பிக்கில் தடகளத்தில் அதிக தங்கம் வென்றவர் என்ற சாதனை இன்றளவும் நர்மி வசமே உள்ளது. மற்றொரு பின்லாந்து வீரரான வில்லே ரிடோலா 10,000 மீட்டர் ஓட்டத்தில் தனது சொந்த உலக சாதனையை முறியடித்தார். இவர் 2 தங்கம், ஒரு வெள்ளி வென்றார்.

http://tamil.thehindu.com/sports/1924-பாரீஸ்-ஒலிம்பிக்-களத்திலும்-படத்திலும்-அசத்திய-வெய்ஸ்-முல்லர்/article8869446.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மகா ஒலிம்பிக் 4: பிறந்தது நவீன ஒலிம்பிக்

 

 
book_2947894f.jpg
 

நவீன ஒலிம்பிக் போட்டிகள் தோன்றக் காரணமாக இருந்த ஊர், பிரிட்டனில் உள்ள ஒரு சிறிய கிராமமான மக் வென்லாக். 1866-ல் இந்தக் கிராமத்தில் வாழ்ந்த டாக்டர் வில்லியம் பென்னி புரூக்ஸ் என்பவரை சந்தித்தார் ஃபிரான்ஸைச் சேர்ந்த பியர் தெ குபர்தென். சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக புரூக்ஸின் கருத்தால் உத்வேகம் பெற்ற குபர்தென், 1894-ல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை உருவாக்கினார்.

சகாப்தம் ஓட்டப்பந்தய ராணி

“வேகமாக விரையும் ரயில்கள், பின்வாங்கும் அலைகளோடு போட்டியிட்டு என்னுடைய வேகத்தையும் மனவலிமையையும் அதிகரித்துக்கொண்டேன்” என்று சொன்ன ஓட்டப்பந்தய வீராங்கனை யார் தெரியுமா? ‘பய்யோளி எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்பட்ட பி.டி. உஷா.

பி.டி. உஷா நான்காம் வகுப்பு படிக்கும்போது, அவருடைய உடற்கல்வி ஆசிரியை ஓட்டப்பந்தயம் வைத்தார். அதில் அந்தப் பள்ளியின் சாம்பியன் பேபி சரளாவுடன் (7-ம் வகுப்பு) போட்டியிட்ட உஷா, மிக எளிதாக வெற்றி பெற்றார். அவருடைய சிறு வயது திறமைக்கு இதுவே சான்று.

1980 மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவருடைய வயது 16 தான். 1984 லாஸ்ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடையோட்டப் பந்தயத்தில் விநாடியில் 100-ல் ஒரு பங்கு தாமதமாக வந்ததால், வெண்கலப் பதக்கத்தை உஷா இழந்தார். ஆனால், அதேநேரம் அந்த 400 மீட்டரை 55.42 விநாடிகளில் அவர் கடந்தது, இப்போதும் காமன்வெல்த் நாடுகள் அளவில் சாதனையாகவே உள்ளது.

இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிகளின் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார். இதைத் தொடர்ந்து அந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருது, 1985-ல் பத்ம விருதுகளைப் பெற்றார்.

1986 சியோல் ஆசியப் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று, அந்தப் போட்டிகளின் சிறந்த வீராங்கனை விருதையும் பெற்றார். ‘ஆசியாவின் ஓட்டப்பந்தய ராணி’ என்று புகழப்பட்டார். தடகளப் போட்டிகளில் 30 சர்வதேசப் பதக்கங்களைப் பி.டி. உஷா வென்றுள்ளார்.

‘கடந்த நூற்றாண்டின் சிறந்த இந்திய வீராங்கனை’ என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அறிவிக்கப்பட்ட பெருமைக்குரியவரும்கூட.

# 20-ம் நூற்றாண்டு தொடங்குவதற்கு முன்னர் 1896-ல் பண்டைய ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில், நவீன ஒலிம்பிக் போட்டி முதன்முதலில் நடத்தப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஒவ்வொரு நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. 1916 (முதல் உலகப் போர்), 1940, 1944 (இரண்டாம் உலகப் போர்) காலத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை.

# இரண்டாவது ஒலிம்பிக் போட்டியில், அதாவது 1900-ல்தான் ஒலிம்பிக்கில் முதன்முதலாகப் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.

# பண்டைய ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே, நவீன ஒலிம்பிக் போட்டிகளிலும் ஆரம்பத்தில் தங்கப் பதக்கம் தரப்படவில்லை. முதலிடம் பிடித்தவர்களுக்குப் பாரம்பரிய முறைப்படி ஆலிவ் இலை கிரீடத்துடன் வெள்ளிப் பதக்கம் பரிசாகத் தரப்பட்டது. 1904 போட்டிகளிலிருந்தே முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்குத் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் தரும் வழக்கம் ஆரம்பித்தது.

# பண்டைய கிரீஸில் சில வீரர்கள் சிறப்பு இறைச்சி அல்லது மந்திர மருந்துகளைக் குடித்துவிட்டுச் சக போட்டியாளர்களை வெற்றிகொள்ள முயற்சித்தனர். இப்படிச் செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், அதற்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் தண்டனையாக அவர்களுடைய முகம் சிற்பமாக வடிக்கப்படுவது, அவமானமாகக் கருதப்பட்டது.

பண்டைக் காலத்தைப் போலவே, இன்றைக்கும் ஊக்கமருந்துகளை உட்கொண்டு போட்டிகளில் வெல்லச் சிலர் முயற்சிக்கிறார்கள். இதைக் கண்டுபிடிப்பதற்குப் போட்டிகளின்போது பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்படும்போது பதக்கம் பறிக்கப்படுகிறது, விளையாடத் தடையும் விதிக்கப்படுகிறது.

2016 ஒலிம்பிக்கில்… எத்தனை எத்தனை?

parise_2947896a.jpg

old_2947897a.jpg

ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக 1 கோடித் தட்டு உணவுகள், ஒரு லட்சம் இருக்கைகள், 72,000 மேஜைகள், 60,000 துணி ஹேங்கர்கள், 34,000 மெத்தைகள், 25,000 டென்னிஸ் பந்துகள், 8,400 ஷட்டில்காக், 315 குதிரைகள் போன்றவற்றை ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழு பயன்படுத்த உள்ளது.

விநோதச் சாதனை ஒலிம்பிக் பதக்கமும்

old3_2947895a.jpg

நோபல் பரிசும் உலகின் உயரிய விளையாட்டுப் போட்டிகளான ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களில் ஒருவர் மட்டுமே, உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசையும் பெற்றுள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த பிலிப் நோயல் பேக்கர் 1920 ஆண்ட்வெர்ப் ஒலிம்பிக்கில் 1,500 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இவர், போர் தடுப்பு மற்றும் நாடுகளிடையே அமைதியையும் இணக்கத்தையும் உருவாக்கியதற்காக 1959-ல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

# பண்டைய ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே, நவீன ஒலிம்பிக் போட்டிகளிலும் ஆரம்பத்தில் தங்கப் பதக்கம் தரப்படவில்லை. முதலிடம் பிடித்தவர்களுக்குப் பாரம்பரிய முறைப்படி ஆலிவ் இலை கிரீடத்துடன் வெள்ளிப் பதக்கம் பரிசாகத் தரப்பட்டது. 1904 போட்டிகளிலிருந்தே முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்குத் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் தரும் வழக்கம் ஆரம்பித்தது.

# ஒலிம்பிக் விளையாட்டுகளிலேயே ஆண்கள் - பெண்கள் இரு பாலினத்தவரும் சேர்ந்து போட்டியிடும் ஒரே விளையாட்டு குதிரையேற்றம் மட்டுமே.

# பண்டைய கிரீஸில் சில வீரர்கள் சிறப்பு இறைச்சி அல்லது மந்திர மருந்துகளைக் குடித்துவிட்டுச் சக போட்டியாளர்களை வெற்றிகொள்ள முயற்சித்தனர். இப்படிச் செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், அதற்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் தண்டனையாக அவர்களுடைய முகம் சிற்பமாக வடிக்கப்படுவது, அவமானமாகக் கருதப்பட்டது.

http://tamil.thehindu.com/society/kids/உலக-மகா-ஒலிம்பிக்-4-பிறந்தது-நவீன-ஒலிம்பிக்/article8905019.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து ரோஜர் பெடெரெர் விலகினார். 

 

received_10209988621101655

ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து ரோஜர் பெடெரெர் விலகினார்.

சுவிஸ்லாந்தின் பிரபல டென்னிஸ் நட்ஷத்திரமான ரோஜர் பெடெரெர் எதிர்வரும் ரியோ ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அண்மைய நாட்களாக உபாதைகளால் அவதிப்பட்டுவரும் பெடெரெர்,இந்த ஆண்டில் இடம்பெறவுள்ள மீதமான டென்னிஸ் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

17 கிராண்ட்ஸ்லாம் படங்கள் வென்ற பெடெரெர்,அண்மையில்  நடைபெற்ற பிரெஞ் பகிரங்க டென்னிஸ் போட்டியிலிருந்தும்  உடற்தகுதி பிரச்னை காரணமாக விலக்கியமை கவனிக்கத்தக்கது.

முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, வருகிற ஒலிம்பிக் போட்டியில்  சுவிஸ்லாந்து அணிக்காக விளையாடமாட்டேன் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.நல்ல உடற்தகுதியுடன் 2017 ல் களமிறங்குவேன் எனவும் பெடெரெர் தனது பேஷ்புக் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்

http://vilaiyattu.com/16577-2/

Link to comment
Share on other sites

1920 ஆன்ட்வெர்ப் ஒலிம்பிக்: வெறுங்கையோடு திரும்பிய இந்திய அணி

 

 
பாவோ நுர்மி
பாவோ நுர்மி

முதல் உலகப் போர் காரணமாக 1916-ல் ஜெர்மனியில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் ரத்தானது. இதையடுத்து 7-வது ஒலிம்பிக் போட்டி பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் நகரில் 1920-ம் ஆண்டு ஏப்ரல் 20 முதல் செப்டம்பர் 12 வரை நடைபெற்றது. உலகப் போரில் தீவிரமாகச் செயல்பட்ட ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, பல்கேரியா, துருக்கி ஆகிய நாடுகள் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இந்த ஒலிம்பிக்கில்தான் முதல் முறையாக உறுதிமொழி எடுக்கப்பட்டது. முதல் உலகப் போருக்குப் பின்னர் நடைபெற்றதால் அமை தியை வலியுறுத்தி சமாதானப் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. முதல் முறையாக ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது. 29 நாடுகளைச் சேர்ந்த 65 வீராங்கனைகள், 2,561 வீரர்கள் என மொத்தம் 2,626 பேர் பங்கேற்றனர்.

22 விளையாட்டுகளில் 154 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆனால் உலகப் போர் பாதிப்பின் காரணமாக பெரிய அளவில் ரசிகர்கள் மைதானத்துக்கு வரவில்லை. அமெரிக்கா 41 தங்கம், 27 வெள்ளி, 27 வெண் கலம் என மொத்தம் 95 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

ஸ்வீடன் 19 தங்கம், 20 வெள்ளி, 25 வெண் கலம் என மொத்தம் 64 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், இங்கிலாந்து 15 தங்கம், 15 வெள்ளி, 13 வெண்கலம் என 43 பதக் கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன.

பிரேசிலுக்கு முதல் தங்கம்

இந்த ஒலிம்பிக்கில் பிரேசில் துப்பாக்கி சுடுதல் வீரர் குய்ல்ஹெர்மே தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் பிரேசிலுக்கு முதல் தங்கம் வென்று தந்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

முதல் இந்திய அணி

1900-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் நார்மன் பிரிட்சர் என்ற ஒரு தடகள வீரரை மட்டும் அனுப்பிய இந்தியா 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெல்ஜியம் ஒலிம்பிக் போட்டிக்கு 3 பேர் அடங்கிய தடகள அணியையும், இருவர் அடங்கிய மல்யுத்த அணியையும் அனுப்பியது. இந்த ஒலிம்பிக்கில் இந்தி யாவுக்கு பதக்கம் கிடைக்கவில்லை. இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பப்பட்ட முதல் அணி இதுதான்.

வாள்வீச்சு நாயகன்

இந்த ஒலிம்பிக்கில் வாள் சண்டையில் பங்கேற்ற இத்தாலி வீரர் நீடோ நாடி, 5 பிரிவுகளில் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒரு ஒலிம்பிக்கில் வாள் சண்டையில் 5 தங்கம் வென்ற ஒரே வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். 7-வது வயதில் வாள் சண்டையைக் கற்றுக்கொண்ட நீடோ, அடுத்த 11-வது ஆண்டில் ஒலிம்பிக்கில் மிகப்பெரும் சாதனை படைத்தார்.

பாவோ நர்மி

இந்த ஒலிம்பிக்கில் பின்லாந்தின் தடகள வீரரான பாவோ நர்மி 10 ஆயிரம் மீட்டர் ஓட்டம், 8 ஆயிரம் மீட்டர் தனி நபர் கிராஸ் கன்ட்ரி, அணி பிரிவிலான கிராஸ் கன்ட்ரி ஓட்டம் ஆகியவற்றில் தங்கம் வென்றார். இதுதவிர 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதன்மூலம் அறிமுக ஒலிம்பிக்கில் தான் பங்கேற்ற 4 பிரிவுகளிலும் வெற்றி கண்டவர் என்ற சாதனையைப் படைத்தார். பாவோவின் சாதனையால், தடகளத்தில் கோலோச்சி வந்த அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

http://tamil.thehindu.com/sports/1920-ஆன்ட்வெர்ப்-ஒலிம்பிக்-வெறுங்கையோடு-திரும்பிய-இந்திய-அணி/article8862213.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

1904 செயின்ட் லூயிஸ் ஒலிம்பிக்: மாரத்தானில் தில்லுமுல்லு

 

 
1904 செயின்ட் லூயிஸ் ஒலிம்பிக்
1904 செயின்ட் லூயிஸ் ஒலிம்பிக்

3-வது ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் 1904-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் நவம்பர் 23-ம் தேதி வரை நடைபெற்றது. தற்போதைய ஒலிம்பிக் போட்டிகள் இரண்டு வார காலத்தில் நடத்தி முடிக்கப்படும் நிலையில் செயின்ட் லூயிஸ் ஒலிம்பிக் போட்டி யானது 5 மாதங்கள் நடத்தப்பட்டது. இந்த ஒலிம்பிக்கில் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.

முன்னதாக இப் போட்டி அமெரிக்கா வின் சிகாகோவில் நடை பெறும் என அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் அதே நேரத்தில் அங்கு வர்த்தக கண் காட்சி நடைபெற்றது. அதனால் அங்கு ஒலிம்பிக் போட்டியை நடத்த கண்காட்சி அமைப் பாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் வேறு வழி யில்லாமல் செயின்ட் லூயிஸுக்கு ஒலிம்பிக் போட்டி மாற்றப்பட்டு 146 நாட்கள் நடைபெற்றன.

ஐரோப்பாவுக்கு வெளியே நடைபெற்ற முதல் ஒலிம்பிக் போட்டி இது. இந்தப் போட்டி நடை பெற்ற நேரத்தில் ஜப்பான்-ரஷியா இடையே போர் நடந்ததால் ஐரோப்பிய நாடுகளில் பதற்றம் நிலவியது. இதனால் பல நாடுகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க மறுத்துவிட்டன.

ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா உட் பட 12 நாடுகளைச் சேர்ந்த 651 தடகள வீரர், வீராங்கனை கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட வர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். இந்தியா சார்பில் யாரும் பங்கேற்க வில்லை.

17 வகையான விளையாட்டு களில் 91 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. குத்துச்சண்டை, டம்பிள்ஸ், ஃப்ரீஸ்டைல் மல்யுத் தம், டெகத்லான் ஆகிய விளை யாட்டுகள் புதிதாக இடம்பெற்றன.

அமெரிக்கா 78 தங்கம், 82 வெள்ளி, 79 வெண்கலம் என 239 பதக்கங்களைக் குவித்து பதக்கப் பட்டியலில் முதலிடத் தைப் பிடித்தது. ஒலிம்பிக் போட் டியில் இன்றளவும் எந்த ஒரு நாடும் இவ்வளவு பதக்கங்களை பெற்றதில்லை. ஜெர்மனி 4 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 13 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், கியூபா 4 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களுடன் 3-வது இடத்தை யும் பிடித்தன.

கரடு, முரடான புழுதி நிறைந்த சாலையில், மோசமான காலநிலைக்கு மத்தியில் நடைபெற்ற மாரத்தான் போட்டி மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானது. அதில் அமெரிக்காவின் ஃபிரடெரிக் லோர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் 9 மைல் தூரம் ஓடிய பிறகு களைப்படைந்ததும், பின்னர் தனது பயிற்சியாளரின் காரில் ஏறி 19-வது மைல் தூரத்தில் காரில் இருந்து இறங்கி மீண்டும் ஓடி இலக்கை எட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்து பதக்கம் பறிக்கப் பட்டதோடு, அவருக்கு ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டது. இதை யடுத்து அமெரிக்காவின் தாமஸ் ஹிக்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிக் கப்பட்டார். ஆனால் அவரும் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்தது.

ஹிக்ஸ் ஒரு கட்டத்தில் மிகுந்த களைப்படைந்தபோது, அவருக்கு ஸ்ட்ரிச்னின் என்ற மருந்தை சிறி தளவு மதுவில் கலந்து கொடுத்து ஊக்கப்படுத்தியுள்ளார் அவரு டைய பயிற்சியாளர். ஸ்ட்ரிச்னின் என்பது எலி போன்ற ஜந்துக் களை கொல்வதற்காக பயன்படுத் தப்படும் விஷப் பொருளாகும். ஊக்கமருந்து பயன்படுத்திய போதும் ஹிக்ஸ் வெற்றி அங்கீகரிக் கப்பட்டது.

இதே போன்று குத்துச்சண்டை போட்டியிலும் தில்லு முல்லு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆள் மாறாட்டம் செய்து கலந்து கொண்ட ஜேம்ஸ் போலிங்கர் என்ற வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

6 பெண்கள் மட்டுமே

91 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்த ஒலிம்பிக்கில் பெண்கள் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அதிலும் வில்வித்தை போட்டியில் தான். இதில் கலந்து கொண்ட 6 பேரில் 45 வயதான அமெரிக்காவின் லிடா ஹோவெல் 3 தங்கப் பதக்கம் வென்றார்.

4 பதக்கம் வென்ற வீரர்

அமெரிக்க வீரர் பிராங்க் குக்லர், ஆடவர் ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், பளுதூக்குதல் போட்டியில் 2 வெண்கலமும், கயிறு இழுத்தல் போட்டியில் ஒரு வெண்கலமும் வென்றார். இதன்மூலம் ஒரே ஒலிம்பிக் போட்டியில் 3 வகையான விளையாட்டுகளில் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார்.

ஊனத்தை வென்ற ஜார்ஜ்

ரயில் விபத்தில் இடது காலை இழந்து, செயற்கைக் கால் (மரக்கட்டை கால்) பொருத்தி யவரான அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர் ஜார்ஜ் எய்சர் 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 6 பதக்கங்களை வென்று பிரமிக்க வைத்தார்.

http://tamil.thehindu.com/sports/1904-செயின்ட்-லூயிஸ்-ஒலிம்பிக்-மாரத்தானில்-தில்லுமுல்லு/article8838260.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

1900 பாரீஸ் ஒலிம்பிக்: இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நார்மன்

 

 
norman_2927276f.jpg
 

நவீன ஒலிம்பிக்கின் 2-வது போட்டி 1900-ல் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்றது. மே 14-ம் தேதி முதல் அக்டோபர் 28-ம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில் தொடக்க மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. முதல் முறையாக கிரீஸுக்கு வெளியே நடத்தப்பட்ட இந்த ஒலிம்பிக்கில் 19 வகையான விளையாட்டுகளில் 95 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 24 நாடுகளைச் சேர்ந்த 997 பேர் கலந்து கொண்டனர். முதல்முறையாக மகளிருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

ஏதென்ஸ் ஒலிம்பிக்கைப் போலவே இந்தப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வழங்கப்படவில்லை என்றாலும், சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் மாற்றம் கொண்டு வந்ததையடுத்து, தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் கணக்கில் கொள்ளப்பட்டன. அதன்படி போட்டியை நடத்திய பிரான்ஸ் 26 தங்கம், 41 வெள்ளி, 34 வெண் கலம் என மொத்தம் 101 பதக்கங் களுடன் முதலிடத்தைப் பிடித்தது. அமெரிக்கா 19 தங்கம், 14 வெள்ளி, 14 வெண்கலம் என 47 பதக்கங் களுடன் 2-வது இடத்தையும், இங்கிலாந்து 15 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என 30 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன.

400 புறாக்கள் பலி

துப்பாக்கிச் சுடுதலில் டிராப் ஷூட்டிங் பிரிவில் இலக்காக இப்போது பொறியை பறக்கவிட்டு அதை சுடுகிறார்கள். ஆனால் பாரீஸ் ஒலிம்பிக்கில் புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. போட்டியின்போது புறாக்கள் பறக்கவிடப்பட்டன. அதில் அதிக புறாக்களை சுட்டுக் கொன்றவர் சாம்பியனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தப் போட்டியின்போது 400 புறாக்கள் சுட்டுக் கொல்லப்பட்டன. ஒலிம்பிக் வரலாற்றில் பிராணிகள் கொல்லப்பட்ட ஒரே போட்டி பாரீஸ் ஒலிம்பிக்தான் என்ற வேதனையான வரலாறும் உள்ளது. புறாக்கள் கொல்லப்பட்டதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த பிராணிகள் நல அமைப்புகள், துப்பாக்கிச் சுடுதல் போட்டியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தன.

முதல் பெண் சாம்பியன்

ஒலிம்பிக் போட்டியின் முதல் பெண் சாம்பியன் அமெரிக்காவின் ஹெலன் போர்டேல்ஸ் ஆவார். அப்போது 32 வயதான ஹெலன், தனது கணவர் மற்றும் மருமகனுடன் இணைந்து படகுப் போட்டியில் சாம்பியன் ஆனார். அதேநேரத்தில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் நபர் இங்கிலாந்தின் டென்னிஸ் வீராங்கனை சார்லோட்டே கூப்பர் ஆவார்.

நார்மன் பிரிட்சார்ட்

இந்த ஒலிம்பிக்கில் இந்தியா முதல் முறையாக அடியெடுத்து வைத்தது. இந்தியா சார்பில் தடகள வீரர் நார்மன் பிரிட்சார்ட் கலந்து கொண்டார். அந்த சமயம் இந்தியா, இங்கிலாந்து ஆட்சியின் கீழ் இருந்ததால் கொடியில் இங்கிலாந்தின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த கொடியின் கீழ் தான் பிரிட்சார்ட் போட்டிகளில் பங்கேற்க நேரிட்டது.

இங்கிலாந்து தம்பதியருக்கு மகனாக கொல்கத்தாவின் அலிபூரில் பிறந்தவர் தான் இந்த பிரிட்சார்ட். ஒலிம்பிக்கில் 5 வகையான போட்டிகளில் கலந்து கொண்ட இவர் 200 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் தடை ஓட்டங்களில் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் ஆசிய நாட்டவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 110 மீட்டர் தடை ஓட்டம், 60 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டத்தில் இவரால் ஜொலிக்க முடியவில்லை.

நார்மன் பிரிட்சார்ட் தனது கல்லூரிப் படிப்பை கொல்கத்தாவில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் முடித்தார். நார்மன் சிறந்த கால்பந்து வீரரும் கூட. திறந்த வெளி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் ஹாட்ரிக் கோல் அடித்து சாதனையும் புரிந்துள்ளார் நார்மன். 1897-ல் கல்லூரி அணிகள் இடையேயான ஆட்டத்தில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார்.

மேலும் வங்காள மாகாணத்தில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டத்தில் 1894 முதல் 1900-ம் வரை தொடர்ச்சியாக 7 முறை பட்டம் வென்றும் சாதனை புரிந்துள்ளார். 1900 முதல் 1902 வரை இந்திய கால்பந்து சங்க செயலாளர் பதவியையும் நார்மன் வகித்துள்ளார். 1900-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற தடகள போட்டியில் பங்கேற்றார்.

440 யார்டு, 100 யார்டு, 200 யார்டு தடை தாண்டும் ஓட்டங்களில் முதலிடம் பிடித்தார். இதன் மூலமே அவர் 1900 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வானார். ஒலிம்பிக் போட்டியில் இரு பதக்கங்கள் வென்ற நார்மனை இங்கிலாந்து சொந்தம் கொண்டாடினாலும் அவர் இந்தியாவின் சார்பில் பங்கேற்றவர் என்றே சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன பதிவேட்டில் உள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர் இந்தியா திரும்பிய நார்மன் 1905-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு குடிபெயர்ந் தார். அதன் பின்னர் அங்கிருந்து அமெரிக் காவுக்கு இடம் மாறி ஹாலிவுட்டில் கால்பதித்தார். நார்மன் டிரெவர் என்ற பெயருடன் ஹாலிட் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். புகழ்பெற்ற நடிகரான ரொனால்டு கோல்மேனுடன் இணைந்து பியூ கெஸ்ட், டேன்சிங் மதர்ஸ், டுநைட் அட் டுவெல் ஆகிய படங்களில் நார்மன் நடித்துள்ளார். 1926-ல் மூளை சம்பந்தமான நேயால் பாதிக்கப்பட்ட நார்மன், கலிபோர் னியா நகரில் மரணமடைந்தார்.

http://tamil.thehindu.com/sports/1900-பாரீஸ்-ஒலிம்பிக்-இந்தியாவுக்கு-பெருமை-சேர்த்த-நார்மன்/article8831212.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

1896 ஏதென்ஸ் ஒலிம்பிக்: இந்திய வைஸ்ராயின் கொள்ளு பேரன்

 

லான்செஸ்டன் எலியாட்
லான்செஸ்டன் எலியாட்

கி.மு.776-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த பழங்கால ஒலிம்பிக் போட்டிக்கு பிற்காலத்தில் ரோம் பேரரசர் தியோடோஸியஸ் தடை விதித்தார். அதன்பிறகு மீண்டும் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு 1,500 ஆண்டுகள் ஆனது. அதுதான் நவீன ஒலிம்பிக். நவீன ஒலிம்பிக்கின் முதல் போட்டி 1896-ம் ஆண்டு பழங்கால ஒலிம்பிக்கின் பிறப்பிடமான கிரீஸ் தலைநகர் ஏதென்ஸிலேயே நடத்தப்பட்டது.

ஏப்ரல் 6 முதல் 15 வரை நடைபெற்ற இப்போட்டியில் 9 விளையாட்டுகளில் 43 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 14 நாடுகளைச் சேர்ந்த 241 தடகள வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இப்போட்டியின் தொடக்க விழாவைக் காண 80 ஆயிரம் பேர் குவிந்தனர்.

இப்போட்டியில் உலக சாதனைகள் எதுவும் நிகழ்த்தப் படவில்லை. போட்டியில் பங்கேற்ற 14 நாடுகளில் 10 நாடுகள் பதக்கம் வென்றன. 3 நாடுகள் கலப்பு அணிகள் பிரிவில் பதக்கம் வென்றன. இந்தப் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்தவர்களுக்கு வெள்ளிப் பதக்கமும், ஆலிவ் கிளை கிரீடமும் வழங்கப்பட்டன. இரண்டாவது இடத்தைப் பிடித்தவர்களுக்கு தாமிரப் பதக்கம் வழங்கப்பட்டது. அமெரிக்கா 11 வெள்ளியும், கிரீஸ் 10 வெள்ளியும் வென்றன.

நவீன ஒலிம்பிக்கின் முதல் பதக்கத்தை கைப்பற்றியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக அமெரிக்காவின் ஜேம்ஸ் ஹானோலி உள்ளார். அவர் முதல் நாளில் நடைபெற்ற டிரிப்பிள் ஜம்ப்பில் பதக்கம் வென்றார்.

இதன்பிறகு சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் பதக்கங்களில் மாற்றம் கொண்டு வந்தது. ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் அமெரிக்கா 11 தங்கம் வென்று முதலிடத்தைப் பிடித்ததாகவும், கிரீஸ் 10 தங்கம், 17 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 46 பதக்கங்களுடன் 2-வது இடத்தைப் பிடித்ததாகவும் கணக்கில் கொள்ளப்பட்டது. இந்தப் போட்டியில் இந்தியா பங்கேற்கவில்லை. எனினும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஸ்காட்லாந்து வீரர் தங்கப் பதக்கம் வென்றார்.

1984-ல் லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் முதல்முறையாக நடைபெற்ற பெண்கள் மாரத்தான் பந்தயத்தில் 28 நாடுகளை சேர்ந்த 50 பெண்கள் கலந்து கொண்டனர். இதில் 44 பேர் பந்தயத்தை நிறைவு செய்தனர். அமெரிக்காவின் ஜோயன் பெனோயிட் தங்க பதக்கம் வென்றார்.

தண்ணீர் விற்ற ஸ்பைரிடன் லூயிஸ்

நவீன ஒலிம்பிக்கில் முதல் முறையாக மாரத்தான் சேர்க்கப்பட்டது. இதில் கிரீஸின் ஸ்பைரிடன் லூயிஸ் தங்கம் வென்றார். இதில் தங்கம் வென்றதன் மூலம் கிரேக்கத்தின் நாயகனாக உயர்ந்தார் லூயிஸ்.

மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னணியைக் கொண்டவர் லூயிஸ். இவருடைய தந்தை மினரல் வாட்டர் விற்பனை செய்தார். அப்போது அவருக்கு உதவியாக லூயிஸும் வாட்டர் கேன்களை தூக்கிச் செல்வார். வறுமையில் வாடினாலும் நம்பிக்கையுடன் செயல்பட்டு அனைவரையும் வியக்கவைத்தார்.

தங்க மகன் ஷூமான்

1896 ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்கள் வென்றவர் என்ற பெருமையை ஜெர்மனியின் மல்யுத்த மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் வீரரான கார்ல் ஷூமான் பெற்றார். இவர் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸில் 3 தங்கமும், மல்யுத்தத்தில் ஒரு தங்கமும் வென்றார். இவர் பளுதூக்குதல் பிரிவிலும் பங்கேற்றார். ஆனால் அதில் பதக்கம் கிடைக்கவில்லை.

பளு தூக்குதலில் ஸ்காட் லாந்தை சேர்ந்த லான்செஸ்டன் எலியாட் தங்கம் வென்றார். லான்செஸ்டன் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர். 1874-ல் கர்நாடகாவில் பிறந்தார்.

இந்தியா ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது லான்செஸ்டனின் கொள்ளு தாத்தா மின்டோ இந்தியாவின் வைஸ்ராயாக இருந்துள்ளார். இவர் 1905 முதல் 1910-ம் ஆண்டு வரை இந்த பதவியில் இருந்துள்ளார். மேலும் லான் செஸ்டனின் தந்தை கில்பர்ட், இந்தியாவில் மாஜிஸ்திரேட் டாகவும் பணியாற்றியுள்ளார்.

லான்செஸ்டன், இங்கிலாந்து நாட்டுடன் இணைந்திருந்த ஸ்காட்லாந்தில் சிறுவயதிலேயே தனது குடும்பத்தினருடன் குடியேறினார். தனது 16 வயதில் பளுதூக்கும் வீரராகும் எண்ணம் அவருக்குள் உதித்தது. அந்த காலத்தில் பாடிபீல்டிங்கின் தந்தை என அழைக்கப்பட்ட யுஜென் சன்டோவின் உதவியால் பிரிட்டிஷ் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக காலடி எடுத்து வைத்தார்.

பாலகனான அவர், லாரன்ஸ் லெவி என்ற வீரரிடம் தோல்வியை சந்தித்தார். எனினும் மனம் தளராமல் அடுத்த 3 ஆண்டுகள் கடினமான பயிற்சிகளில் ஈடுபட்டார். இதற்கு பலனாக 1894-ல் பிரிட்டிஷ் போட்டியில் பட்டம் வென்றார்.

22 வயதில் ஏதேன்ஸ் ஒலிம் பிக்கில் பங்கேற்றார். கட்டுக்கோப்பான இவரது உடல் அமைப்பு, சிகை அலங்காரம், உயரம் அனை வரையும் கவர்ந் தது. இந்த ஒலிம் பிக்கில் இவரை உலகமே ஆணழக னாக புகழ்ந்தது. இவரது அழகில் மயங்கி செல்வாக்கு மிகுந்த பெண் ஒருவர் திருமணம் செய்து கொள்ள முன்வந்ததாக வும் சில குறிப்புகள் கூறுகின்றன.

ஒலிம்பிக் பளுதூக்குதலில் இவரும் டென்மார்க்கை சேர்ந்த விகோ ஜென்சனும் மட்டுமே பங்கேற்றனர். இரு கைகளால் எடையை தூக்கும் பிரிவில் இருவரும் 111.5 கிலோ எடையை தூக்கினர். ஆனால் எடையை தூக்கிய போது லான்செஸ்டனின் கால் ஆட்டம் கண்டதாக கூறிய நடுவர் விகோ ஜென்சன் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

ஆனால் ஒரு கையால் எடையை தூக்கும் பிரிவில் லான் செஸ்டன் தக்க பதிலடி கொடுத்து தங்கம் வென்றார். லான்செஸ் டன் பளுதூக்குதல் போட்டி மட்டு மில்லாது 100 மீட்டர் ஓட்டம், ஜிம்னாஸ்டிக், மல்யுத்தம், வட்டு எறிதல் ஆகியவற்றிலும் பங்கேற் றார். ஆனால் இந்த போட்டிகளில் அவர் ஜொலிக்கவில்லை.

http://tamil.thehindu.com/sports/1896-ஏதென்ஸ்-ஒலிம்பிக்-இந்திய-வைஸ்ராயின்-கொள்ளு-பேரன்/article8827730.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

1972 மூனிச் ஒலிம்பிக்: கறுப்பு செப்டம்பர்

 

 
மார்க் ஸ்பிட்ஸ்
மார்க் ஸ்பிட்ஸ்

மேற்கு ஜெர்மனியின் மூனிச் நகரில் 20-வது ஒலிம்பிக் போட்டி 1972-ல் நடைபெற்றது. ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 10 வரை நடைபெற்ற இந்த ஒலிம் பிக்கில் 12 நாடுகளில் இருந்து 7170 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

சோவியத் யூனியன் 50 தங்கம், 27 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 99 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. அமெரிக்கா 33 தங்கம், 31 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 94 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், கிழக்கு ஜெர்மனி 20 தங்கம், 23 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன.

கூடைப்பந்தில் சர்ச்சை

கூடைப்பந்து இறுதி ஆட்டத்தில் ரஷ்யா - அமெரிக்கா அணிகள் மோதின. அமெரிக்கா 50-49 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெறும் நிலையில் இருந்தது.

ஆனால் கடைசி கட்டத்தில் ரஷ்யா மேலும் 2 புள்ளிகளைப் பெற்று வென்றது. ஆனால் அதற்கு முன்னரே ஆட்டநேரம் முடிந்துவிட்டதாக கூறிய அமெரிக்கா வெள்ளிப் பதக்கத்தை பெற மறுத்துவிட்டது.

இந்தியாவுக்கு வெண்கலம்

இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அமெரிக்க நீச்சல் வீரர் மார்க் ஸ்பிட்ஸ் 7 தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஒரு ஒலிம்பிக் போட்டியில் தனி வீரர் ஒருவர் வென்ற அதிகபட்ச பதக்கம் இதுவாகும். 2008-ல் பெய்ஜிங் ஒலிம்பிக்கின்போது அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் 8 தங்கம் வென்று மார்க் ஸ்பிட்ஸின் சாதனையை முறியடித்தார்.

கறுப்பு செப்டம்பர்

ஒலிம்பிக் போட்டி இறுதிக்கட்டத்தில் ஒலிம்பிக் கிராமத்துக்குள் புகுந்த பாலஸ்தீன பயங்கரவாதிகள் 8 பேர், இஸ்ரேலைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் என 9 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்தனர்.

இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டுமென்று அவர்கள் கோரினர். அதைத்தொடர்ந்து அவர்களை சுட்டுக்கொன்றனர்.

பின்னர் ஜெர்மனி போலீ ஸாருடன் நடந்த மோதலில் பயங்கரவாதிகளும் கொல்லப் பட்டனர். இந்த சம்பவம் கறுப்பு செப்டம்பர் என்று வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.

http://tamil.thehindu.com/sports/1972-மூனிச்-ஒலிம்பிக்-கறுப்பு-செப்டம்பர்/article8920808.ece

Link to comment
Share on other sites

ரியோ ஒலிம்பிக் கால்பந்து: பிரேசில் அணியின் கேப்டன் நெய்மர்

 

 
பயிற்சியில் நெய்மர். | படம்: ராய்ட்டர்ஸ்.
பயிற்சியில் நெய்மர். | படம்: ராய்ட்டர்ஸ்.

வரவிருக்கும் ரியோ ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளில் பிரேசில் அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் நெய்மர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரொஜீரோ மிகேல் அறிவித்தார். 2 ஆண்டுகளாக நெய்மர்தான் பிரேசில் அணியை தலைமைதாங்கி நடத்தி வருகிறார், ஆனாலும் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் அவரது பதவி பறிக்கப்படலாம் என்ற செய்திகள் உலவின.

ஆனால் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு பிரேசில் பயிற்சியாளர் கூறும்போது, “கேப்டனாக நெய்மர் நீடிப்பார். அவரது தரநிலையைப் பொறுத்தவரை என்னுடைய எதிர்பார்ப்பையும் அவர் கடந்து விட்டார். ஆட்டத்தில் தனது திசையை விரைவில் மாற்றிக் கொள்பவர். தனிப்பட்ட வீரர் என்ற முறையில் இவரது ஆட்டமே அலாதியானது. குழுவில் அவர் அனைவராலும் நேசிக்கப்படுகிறார். விசாலமான இருதயம் படைத்த ஒரு நல்ல வீரர். இளம் வீரர்களிடத்தில் அன்பும் ஆதரவும் காட்டுபவர்” என்றார்.

நெய்மர் அடிக்கடி விருந்தில் கலந்து கொள்ளும் மற்றும் சில பிரபலங்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை தானே சமூக வலைத்தளத்தில் வெளியிடுவது பற்றி அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

மேலும் சமீபகாலஙக்ளில் அவரது ஆட்டம் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை என்பதாலும அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 18 மாதங்களில் 5 முறை சிகப்பு அட்டைக் காண்பிக்கப்பட்டுள்ளார்.

இன்று ஜப்பானுக்கு எதிராக நட்பு ரீதியிலான பயிற்சி ஆட்டத்தில் ஆடுகிறது பிரேசில்.

http://tamil.thehindu.com/sports/ரியோ-ஒலிம்பிக்-கால்பந்து-பிரேசில்-அணியின்-கேப்டன்-நெய்மர்/article8921514.ece?homepage=true

Link to comment
Share on other sites

1976 மாண்ட்ரியல் ஒலிம்பிக்: வெறும் கையுடன் திரும்பிய இந்திய ஹாக்கி அணி

 

 
nadiya_2953513h.jpg
 

கனடாவின் மான்ட்ரியல் நகரில் 21-வது ஒலிம்பிக் போட்டி 1976-ல் நடைபெற்றது. பிரிட்டிஷ் ராணி 2-வது எலிசபெத் இந்தப் போட்டியைத் தொடங்கி வைத்தார். போட்டியை நடத்திய கனடா 5 வெள்ளியும், 6 வெண் கலமும் கைப்பற்றி பதக்கப்பட்டியலில் 27-வது இடத்தை பிடித்தது. கோடை கால ஒலிம்பிக் வரலாற்றில் போட்டியை நடத்திய நாடு தங்கப்பதக்கத்தை கைப் பற்றாதது இதுவே முதல் முறையாக அமைந்தது.

பதக்கப்பட்டியலில் அமெரிக்காவை ஓரங்கட்டிய சோவியத் யூனியன் 49 தங்கம், 41 வெள்ளி, 35 வெண்கலம் என்று மொத் தம் 125 பதக்கங்களுடன் முதலிடத்தையும், கிழக்கு ஜெர்மனி 40 தங்கம் உட்பட 90 பதக்கத் துடன் 2-வது இடத்தையும், அமெரிக்கா 34 தங்கம் உட்பட 94 பதக்கத்துடன் 3-வது இடத்தையும் பிடித்தன. இந்த ஒலிம்பிக் போட்டியில் ஜப்பானின் துப்பாக்கிச் சுடும் அணியில் இடம் பிடித்திருந்த தாரா அசோ, 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பான் பிரதமரானார்.

ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஒரே நம்பிக்கையாக இருந்த ஹாக்கியும் இம்முறை கைகொடுக்கவில்லை. முதல்முறையாக செயற்கை புல்தரை பயன்படுத்தப் பட்டது. 11 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றது. ஒலிம்பிக் ஹாக்கியில் ஆசியா மற்றும் ஐரோப்பா அல்லாத ஒரு அணி தங்கம் வென்றது இதுதான் முதல்தடவையாகும்.

ஜிம்னாஸ்டிக் சிறுமி

14-வயது ருமேனிய வீராங்கனை நாடியா கொமான்சி ஜிம்னாஸ்டிக் போட்டியில் அதிகபட்சமான பெர்பெக்ட் 10 புள்ளிகளைப் பெற்று 3 தங்கப் பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்தார். சிறுமி என்றபோதிலும் போட்டியில் அவர் சிறு தவறு கூட செய்யவில்லை.

எலும்பு முறிவு

ஜப்பானின் ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர் ஷான் பிரிஜிமோடோ ‘புளோர் எக்சர்சைஸ்’ பிரிவில் தனது திறமையை வெளிப்படுத்த முயற்சித்த போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் வலது கால் முட்டியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. என்றாலும் தங்கள் அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக வலியையும் தாங்கிக் கொண்டு போட்டியில் தொடர்ந்து கலந்து கொண்டது அனைவரையும் வியக்க வைத்தது.

http://tamil.thehindu.com/sports/1976-மாண்ட்ரியல்-ஒலிம்பிக்-வெறும்-கையுடன்-திரும்பிய-இந்திய-ஹாக்கி-அணி/article8924504.ece?homepage=true

Link to comment
Share on other sites

ரியோ 2016: 3-வது முறையாக தங்க வேட்டைக்கு உசேன் போல்ட் தயார்

 

உசேன் போல்ட்.
உசேன் போல்ட்.

உலகின் அதிவேக மனிதர் என்ற பெருமை பெற்றவர் பிரபல தடகள வீரர் உசேன் போல்ட். உலகிலேயே அதிக வேகமாக ஓடக்கூடியவர் என்பதை அவர் பங்கேற்கும் போட்டிகளில் அனைத்திலும் நிரூபித்து வருகிறார்.

ஜமைக்காவை சேர்ந்த 30 வயதான உசேன் போல்ட் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையாளராக திகழ்கிறார். 2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 3 தங்கம் வென்றார். 100 மீட்டர் ஓட்டத்தை 9.69 வினாடியில் கடந்து சாதனை படைத்தார். இதேபோல 200 மீட்டர் ஓட்டத்தில் 19.30 வினாடியில் கடந்து சாதனை புரிந்து தங்கம் வென்றார்.

அதோடு 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்றார்.

2009-ம் ஆண்டு பெர்லினில் நடந்த உலக தடகள சாம்பியன் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்திலும், 200 மீட்டர் ஓட்டத் திலும் தனது ஒலிம்பிக் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்தார். 100 மீட்டர் ஓட்டத்தை 9.58 வினாடியிலும், 200 மீட்டர் ஓட்டத்தை 19.19 வினாடியிலும் கடந்து உசேன் போல்ட் புதிய உலக சாதனை புரிந்து இரண்டிலும் தங்கம் வென்றார்.

இதன்மூலம் உலக மற்றும் ஒலிம்பிக் போட்டியில் ஒரே நேரத்தில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் சாதனை மற்றும் தங்கம் வென்ற உலகின் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் போல்ட்.

2012 லண்டன் ஒலிம்பிக்கிலும் உசேன் போல்ட் ஆதிக்கம் செலுத்தினார். அவர் 100 மீட்டர் ஓட்டத்தை 9.63 வினாடியில் கடந்து புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். லண்டன் ஒலிம்பிக்கிலும் 3 தங்கம் (100 மீட்டர், 200 மீட்டர், 4X100 மீட்டர் தொடர் ஓட்டம்) வென்றார். ஒலிம்பிகில் அவர் மொத்தம் 6 தங்கம் வென்றுள்ளார்.

பிரேசில் ஒலிம்பிக் போட்டி உசேன் போல்டுக்கு சவாலாக இருக்கலாம். ஆனாலும் தன்னால் ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளார். ஒலிம்பிக் போட்டி தொடர்பாக அவர் கூறும்போது, “ரியோ ஒலிம்பிக்கில் 3 வித ஓட்டத்திலும் மீண்டும் தங்கம் வெல்வதே எனது இலக்கு.

200 மீட்டர் ஓட்டத்தை 19 விநாடிகளில் எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை படைக்க விரும்புகிறேன். 100 மீட்டர் ஓட்டத்தில் என்னை அமெரிக்க வீரர் ஜஸ்டின் காட்லின் முந்துவார் என சிலர் கூறுகின்றனர். இதை கேட்டால் சிரிப்பு தான் வருகிறது’’ என்றார்.

உசேன் போல்டை வெற்றி பெற யாராலும் முடியாது என்று கூறப்பட்டா லும், அமெரிக்காவைச் சேர்ந்த ஜஸ்டின் கேட்லின் முயற்சித்தால் போல்ட்டின் சாதனையை முறியடிக்க வாய்ப்பிருப்பதாகவே கருதப்படுகிறது.

பெய்ஜிங்கில் நடை பெற்ற ஒலிம்பிக் போட்டி யில் கேட்லின் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் நூலி ழையில்தான் உசைன் போல்டிடம் வெற் றியை பறிகொடுத்தார்.

இதனால் ரியோ ஒலிம்பிக் போட்டிக்காக ஜஸ்டின் கேட்லின் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் கூறும்போது, "ரியோவில் உசேன் போல்ட்டை வீழ்த்தி சாதனை படைப்பேன். அவரை வீழ்த்திய பின்னர் பெறும் பதக்கத்தை அணிந்து கொண்டு அமெரிக்கா முழுவதும் சுற்றி வருவேன்" என்றார்.

http://tamil.thehindu.com/sports/ரியோ-2016-3வது-முறையாக-தங்க-வேட்டைக்கு-உசேன்-போல்ட்-தயார்/article8924499.ece

Link to comment
Share on other sites

றியோ ஒலிம்பிக்: '2016' என்று சொன்னால் பதக்கம் பறிபோகும்
 
29-07-2016 09:10 AM
Comments - 0       Views - 16

article_1469871647-OlympicIladpsajdhs.jpறியோ ஒலிம்பிக் போட்டிகள், ஓகஸ்ட் 5ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டிகளின் உத்தியோகபூர்வ அனுசனையாளர்கள் அல்லாத அனுசரனையாளர்களுக்கும் வீரர்களுக்கும், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜூலை 27ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்த இந்தக் கட்டுப்பாடுகள், ஓகஸ்ட் 24ஆம் திகதிவரை தொடரவுள்ளன.

இதன்படி, ஒலிம்பிக்கினால் அங்கிகரிக்கப்பட்ட அனுசணையாளர்கள் தவிர ஏனையோர், ஒலிம்பிக் சம்பந்தப்பட்ட சொற்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான சொற்களில் "வெற்றி", "திறமை வெளிப்பாடு", "முயற்சி", "2016" ஆகிய சொற்கள்/சொற்றொடர்களும் உள்ளடங்குகின்றன.

வீரர்களுக்கான சீருடைகளுக்கு அனுசரணை வழங்கும் நிறுவனங்கள் போன்றன, ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடும் வீரர்களை மீள்-டுவீட் செய்யவோ அல்லது போட்டிகளுக்காக வாழ்த்துவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகளை மீறும் வீரர்களுக்கு, பதக்கத்தைப் பறிப்பதற்கான விதி ஏற்பாடுகளும் காணப்படுகின்றன. ஆனால் பொதுவாக, உத்தியோகபூர்வ எச்சரிக்கையோடு அவர்கள் விட்டுவிடப்படுவர்.

- See more at: http://www.tamilmirror.lk/178275#sthash.E0XprDpo.dpuf
Link to comment
Share on other sites

பலவீனமான அணியுடன் றியோ புறப்பட்டது ரஷ்யா
 

article_1469866766-RussiaPaldatyhdsauud.ஊக்கமருந்துப் பாவனை பற்றிய பல சர்ச்சைகளைச் சந்தித்த நிலையில், அணியின் வீரர்கள் பலரையும் இழந்துள்ள ரஷ்யாவின் றியோ ஒலிம்பிக்குக்கான அணி, புதன்கிழமை புறப்பட்டது. மொஸ்கோவிலிருந்தே இவ்வணி புறப்பட்டது.

அரச ஆதரவுபெற்ற ஊக்கமருந்துப் பாவனை, ரஷ்யாவில் இடம்பெறுவதாக ஆதாரங்களுடன் கூடிய அறிக்கைகள் வெளியானதைத் தொடர்ந்து, இந்த ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யா பங்குபற்றுமா என்ற சந்தேகம் காணப்பட்டது. ஒட்டுமொத்த ரஷ்ய வீரர்களுமே தடைசெய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்திருந்தன.
எனினும், ஏற்கெனவே தடைக்குள்ளான தடகள வீரர்கள் தவிர ஏனைய வீரர்கள், கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்த நிலையில், சுமார் 70 பேரைக் கொண்ட ரஷ்ய அணியே, புதன்கிழமை புறப்பட்டது. வலைப்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், நீச்சல் அணி ஆகியன உள்ளடங்கிய வீரர்களே இவ்வாறு புறப்பட்டனர்.
இன்னும் பல வீரர்கள், அவர்களால் பங்குபற்ற முடியுமா, இல்லையா என்பது பற்றிய தெளிவில்லாமல், இறுதிநேர அனுமதிக்காகக் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/178263#sthash.YHvKuyxt.dpuf
Link to comment
Share on other sites

ஒலிம்பிக்கில் களம் இறங்குகிறார் நார்சிங்..! ஊக்கமருந்து விசாரணையில் வெற்றி

 

Narsinghyadav.jpg

ஊக்க மருந்து புகாரில் சிக்கிய இந்திய வீரர் நார்சிங் யாதவ் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று அவரை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்திருக்கிறது தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம். இதையடுத்து அவர் ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்பதில் இருந்த தடை நீங்கியிருக்கிறது.

இருப்பது தெரியாமலேயே நார்சிங் உணவை உட்கொண்டுள்ளார். அவர் மீது எந்த தவறும் இல்லை. அவரை ஒலிம்பிக்கில் அனுமதிக்கலாம் என்று  தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் கூறியுள்ளது.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் அடுத்தமாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தத் தொடரில் இந்தியா சார்பில் 120 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். முன்னதாக இந்த தொடரில் ஆண்கள் 74 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் பங்கேற்க இந்திய வீரர் நார்சிங் யாதவ் தகுதி பெற்றிருந்தார். ஆனால், தேசிய ஊக்கமருந்து தடுப்புக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில், அவர் தடை செய்யப்பட்ட ஸ்டீராய்டு மருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நார்சிங் யாதவ் ஊக்க மருந்து பயன்படுத்தியதால் ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக பிரவீன் ராணா ஒலிம்பிக்கில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, நார்சிங் யாதவை திட்டமிட்டு சிக்க வைக்கும் விதமாக அவரது உணவில் ஊக்க மருந்து கலக்கப்பட்டது தெரிய வந்தது. சோனிபட்டில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மையத்தில் அவரது உணவில் ஊக்க மருந்து கலக்கப்பட்டதாக இந்திய மல்யுத்த சங்க தலைவர் பிரிவூபூசன் சரண் சிங் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தியது. அப்போது, 'தேசிய விளையாட்டு ஆணையம் வழங்கிய உணவில் ஊக்கமருந்து இருந்துள்ளது. ஊக்க மருந்து இருப்பது தெரியாமலேயே நார்சிங் உணவை உட்கொண்டுள்ளார். அவர் மீது எந்த தவறும் இல்லை. அவரை ஒலிம்பிக்கில் அனுமதிக்கலாம்' என்று தெரிவித்துள்ளது.

http://www.vikatan.com/news/sports/66727-narsingh-back-in-action-he-proves-in-dope-test.art

Link to comment
Share on other sites

ரியோ ஒலிம்பிக் கிரா­மத்தில் ஆஸி அணி­யி­னரின் பொருட்கள் திருட்டு
2016-08-02 10:34:51

ஒலிம்பிக் போட்­டி­களில் பங்­கு­பற்­று­வ­தற்­காக   பிரே­ஸிலின் ரியோ டி ஜெனெய்ரோ நக­ருக்குச் சென்­றுள்ள அவுஸ்­தி­ரே­லி­யர்­களின் மடிக்­க­ணி­னிகள் மற்றும் அங்­கிகள் திரு­டப்­பட்­டுள்­ள­தாக முறைப்­பாடு செய்­யப்பட்­டுள்­ளது.

 

ரியோ நக­ரி­லுள்ள ஒலிம்பிக் கிரா­மத்­தி­லேயே இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. ஒலிம்பிக் கிரா­மத்தில் அவுஸ்­தி­ரே­லிய அணி­யினர் தங்­கி­யி­ருந்த கட்­ட­டத்தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை தீ விபத்து ஏற்­பட்­டது.

 

18335australia.jpg

 

 

இதை­ய­டுத்து அங்­கி­ருந்­த­வர்கள் அவ­ச­ர­மாக வெளி­யேற்­றப்­பட்­டி­ருந்­த­போதே இத்­தி­ருட்டு இடம்­பெற்­றுள்­ளது. 

 

இரு மடிக்­க­ணி­னிகள், அவுஸ்­தி­ரே­லிய அணியின் 4 ஷேர்ட்கள் ஆகி­யன திரு­டப்­பட்­ட­தாக முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. ஸிகா வைர­ஸி­லி­ருந்து பாது­காத்துக் கொள்­வ­தற்­கான 3 ஷேர்ட்­டு­களும் இவற்றில் அடங்கும்.
அவுஸ்­தி­ரே­லிய அணியின் சுமார் 100 பேர் சுமார் 30 நிமிட நேரம் ஒலிம்பிக் கிரா­மத்தின் கட்­ட­டத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டி­ருந்­தனர். 

 

அவுஸ்­தி­ரேலிய குழுவின் தலைவர் கிட்டி சில்லர் மேற்­படி திரு­டர்­களைக் கண்­டி­ருந்தார். எனினும் அவர்கள் தீய­ணைப்பு வீரர்கள் எனவும், அவுஸ்­தி­ரே­லிய அணியினர் தமது அங்கிகளை அவர்களுக்குப் பரிசாக வழங்கியிருக்கலாம் என தான் கருதியதாகவும் கிட்டி சில்லர் தெரிவித்துள்ளார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=18335#sthash.biabowbu.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.