Jump to content

ரியோ 2016 | ஒலிம்பிக் செய்திகள்


Recommended Posts

                                                                                                                      ரியோ 2016 | ஒலிம்பிக் செய்திகள்

                    http://cdn.dailypost.ng/wp-content/uploads/2016/07/2016-rio-olympics759-1.jpg

அபினவ் பிந்திரா: தங்கத்தை சுட்ட விரல்கள்!

 

 
 
abinav_2922969f.jpg
 

கண்களில் குறைபாடு உள்ள ஒரு குழந்தை, தன் தந்தையிடம், “நான் துப்பாக்கி சுடும் வீரனாக விரும்புகிறேன்” என்று கூறினால் என்ன பதில் கிடைக்கும்?

“மகனே துப்பாக்கியில் குறி பார்த்து சுடுவதற்கு நல்ல கண் பார்வை அவசியம். அதனால் அது உனக்கு சரிப்பட்டு வராது. வேறு ஏதாவது துறையை தேர்ந்தெ டுத்துக் கொள்!” என்று ஆலோ சனை கூறி, அவனுக்கு ஏற்ற வேறு ஏதாவது ஒரு துறையை தேர்ந்தெடுக்கச் சொல்வார்.

ஆனால் அபினவ் பிந்திராவின் அப்பாவான அபிஜித் பிந்திரா, அப்படி செய்யவில்லை. ‘மைனஸ் 4’ பார்வை குறைபாடு கொண்ட தன் மகன், அந்த விளையாட்டில் சிறந்து விளங்க என்ன செய்வதென்று யோசித்தார். துப்பாக்கி வாங்கிக் கொடுத்ததுடன், வீட்டிலேயே அவன் பயிற்சிபெற வசதியாக ஒரு சிறிய பயிற்சி மையத்தையும் அமைத்துக் கொடுத்தார். அந்த தந்தை கொடுத்த ஊக்கம்தான் நமக்கு அபினவ் பிந்திரா என்ற துப்பாக்கி சுடும் நாயகனைத் தந்தது. ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கமே வெல்லாமல் இருந்த இந்தியாவின் ஏக்கமும் தீர்ந்தது. 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ஏர் ரைபிள் பிரிவில் அவர் வென்ற தங்கப் பதக்கம்தான் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இந்தியா வென்ற ஒரே தங்கப் பதக்கம்.

1982-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி டேராடூனில் பிறந்த அபினவ் பிந்திராவுக்கு மற்ற வீரர்களுக்கு கிடைக்காத ஒரு வசதி இருந்தது. அது பணவசதி. ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் புழங்கும் ஒரு வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளராக அவரது தந்தை இருந்தார். சிறு வயதில் இருந்தே துப்பாக்கி சுடுதலின் மீது ஆர்வமாக இருந்த அபினவுக்கு அவரது தந்தை ஒரு பொம்மைத் துப்பாக்கியை பரிசளிக்க, அதிலேயே குறிபார்த்து சுடத் தொடங்கினார். அப்போதுதான் தன் மகனுக்கு ஆர்வத்துடன் திறமையும் இருக்கிறது என்பதை அவரது தந்தை உணர்ந்தார்.

இதைத் தொடர்ந்து அமித் பட்டாசார்ஜீ, லெப்டினென்ட் கர்னல் தில்லான் ஆகியோரிடம் பயிற்சிக்காக அனுப்பப்பட்டார் அபினவ் பிந்திரா. கேட்டதை வாங்கிக் கொடுக்கும் அப்பா, சிறப்பாக வழிகாட்டும் குருநாதர்கள் என்று கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட அபினவ் பிந்திரா துப்பாக்கி சுடும் பிரிவில் வேகமாக வளரத் தொடங்கினார்.

“1995-ம் ஆண்டு தனது 13 வய தில் பிந்திரா என்னிடம் பயிற்சிபெற வந்தார். ஏர் ரைபிள் பிரிவில் அதிக ஆர்வம் கொண்ட பிந்திரா, அதிலுள்ள நுணுக்கங்களை தெரிந்துகொள்வதற்காக பல நாட் கள் வகுப்பு முடிந்த பிறகும் என் வீட்டுக்கு வந்து கூடுதலாக கற்பார். ஏழே மாதங்களில் ஒரு துடிப்புள்ள வீரனாக தயாரான அவர், பஞ்சாபில் நடந்த சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி யில் தங்கம் வென்றார். அதே ஆண்டு அகமதாபாதில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் 600-க்கு 600 புள்ளிகள் பெற்று தங்கம் வென்ற அவர், அதன்பிறகு திரும் பிப் பார்க்கவே இல்லை. நாட்டுக் காக பல பதக்கங்களை அவரது விரல்கள் குவித்து வருகிறது” என்று பெருமையுடன் சொல் கிறார் அபினவ் பிந்திராவின் பயிற்சியாளர் தில்லான்.

2000-ம் ஆண்டில் தனது 18 வயதில் சிட்னி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அவர், இளம் வயதில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் என்ற பெயரைப் பெற்றார். இந்தப் போட்டியில் அவர் பதக்கம் எதையும் பெறாவிட்டாலும் அனுப வத்தைக் கொடுத்தது. சர்வதேச போட்டிகளில் ஜெயிக்க திறமை மட்டும் இருந்தால் போதாது, மன உறுதியும் தேவை என்பதை தன் அனுபவத்தால் உணர்ந்த அபினவ் பிந்திரா, போட்டிகளுக்கு முன் சிவப்பு எறும்புகளுக்கு நடுவில் தூங்குவது, ஸ்கை டைவிங் செய்வது என்று வித்தியாசமான பயிற்சிகளையும் மேற்கொண்டார். இந்த பயிற்சிகள் தான் தேசிய போட்டிகள் முதல் ஒலிம்பிக் போட்டிவரை அவருக்கு பல தங்கப் பதக் கங்களை அள்ளிக்கொடுத்தது.

விளையாட்டுத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பயணம் செய்த அவர், ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று விளையாட்டுத் துறையில் இருந்து ஓய்வுபெற விரும்புகிறார். இந்த தங்க மகனை கவுரவிக்கும் விதமாக ரியோ ஒலிம்பிக்கில் இந்திய கொடியை ஏந்திச் செல்லும் பொறுப்பை அபினவுக்கு அரசு வழங்கியுள்ளது. இந்த தங்க மகன் தங்கத்தைச் சுட்டு தாயகம் திரும்ப வாழ்த்துவோம்.

இதுவரை சாதித்தவை

* 2008-ல் நடந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம்

* 2006-ல் நடந்த உலக ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம்

* காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 4 தங்கம், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கம்

* ஆசிய விளையாட்டுப் போட்டியில் 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள்

* 2000-ல் அர்ஜுனா விருது

* 2001-ல் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது

* 2009-ல் பத்மபூஷண் விருது.

விளையாட்டுத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பயணம் செய்த அவர், ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று விளையாட்டுத் துறையில் இருந்து ஓய்வுபெற விரும்புகிறார்.

http://tamil.thehindu.com/sports/அபினவ்-பிந்திரா-தங்கத்தை-சுட்ட-விரல்கள்/article8818374.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

  • Replies 145
  • Created
  • Last Reply

ஜமைக்கா ஒலிம்பிக் அணியில் இடம் பெற்றார் உசேன் போல்ட்!

மைக்கா ஒலிம்பிக் அணியில் உசேன் போல்ட் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   தசைப் பிடிப்பு காரணமாக தற்போது ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வரும் அவர் விரைவில் குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

bolt.jpg

ஒலிம்பிக்கில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று உலக சாதனைக்கு சொந்தக்காரரான  உசேன் போல்ட் அண்மை காலமாக தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வருகிறார். ரியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு, தடகளத்தில் இருந்து ஓய்வு பெறவும் முடிவு செய்திருந்தார் . ரியோவுக்காக முழுமூச்சாக தயாராகி வந்த நிலையில், தசைப்பிடிப்பு காரணமாக போல்ட்டால்,  பயிற்சியில் ஈடுபட முடியாமல் போனது. தற்போது ஜெர்மனியில் சிறப்பு சிகிச்சையில் போல்ட் இருக்கிறார்.

ஜுலை 22ம் தேதி, லண்டன் அனிசவர்சரி தடகளத்தில் பங்கேற்று ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவேன் என்று போல்ட் அறிவித்திருந்தார். இதுதான் ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக நடைபெறவுள்ள கடைசி தகுதி சுற்று போட்டி ஆகும். இதற்கிடையே ஜமைக்கா அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் உசேன் போல்ட்டின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

 

ரியோ ஒலிம்பிக் போட்டியில், உசேன் போல்ட்டின் போட்டியாளராகக் கருதப்படும் அமெரிக்க வீரர் ஜஸ்டின் காட்லீன், போல்ட் குணமாகி ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார் இந்த ஆண்டு நடந்த தடகள போட்டிகளில் 100 மீட்டரை  ஜஸ்டின் காட்லீன் 9.40 வினாடிகளில் கடந்துள்ளார். உசேன் போல்ட் உள்ளிட்ட வேறு எந்த தடகள வீரரும் 100 மீட்டர் ஓட்டத்தை இந்த வேகத்தில் கடக்கவில்லை. அதனால் ஒலிம்பிக்கில் போல்ட் பங்கேற்றால் அவருக்குக் கடும் சவால் காத்திருக்கிறது.

http://www.vikatan.com/news/sports/65985-usain-bolt-to-be-named-in-jamaicas-olympic-team.art

Link to comment
Share on other sites

1900 பாரீஸ் ஒலிம்பிக்: இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நார்மன்

 

 
norman_2927276f.jpg
 

நவீன ஒலிம்பிக்கின் 2-வது போட்டி 1900-ல் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்றது. மே 14-ம் தேதி முதல் அக்டோபர் 28-ம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில் தொடக்க மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. முதல் முறையாக கிரீஸுக்கு வெளியே நடத்தப்பட்ட இந்த ஒலிம்பிக்கில் 19 வகையான விளையாட்டுகளில் 95 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 24 நாடுகளைச் சேர்ந்த 997 பேர் கலந்து கொண்டனர். முதல்முறையாக மகளிருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

ஏதென்ஸ் ஒலிம்பிக்கைப் போலவே இந்தப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வழங்கப்படவில்லை என்றாலும், சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் மாற்றம் கொண்டு வந்ததையடுத்து, தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் கணக்கில் கொள்ளப்பட்டன. அதன்படி போட்டியை நடத்திய பிரான்ஸ் 26 தங்கம், 41 வெள்ளி, 34 வெண் கலம் என மொத்தம் 101 பதக்கங் களுடன் முதலிடத்தைப் பிடித்தது. அமெரிக்கா 19 தங்கம், 14 வெள்ளி, 14 வெண்கலம் என 47 பதக்கங் களுடன் 2-வது இடத்தையும், இங்கிலாந்து 15 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என 30 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன.

400 புறாக்கள் பலி

துப்பாக்கிச் சுடுதலில் டிராப் ஷூட்டிங் பிரிவில் இலக்காக இப்போது பொறியை பறக்கவிட்டு அதை சுடுகிறார்கள். ஆனால் பாரீஸ் ஒலிம்பிக்கில் புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. போட்டியின்போது புறாக்கள் பறக்கவிடப்பட்டன. அதில் அதிக புறாக்களை சுட்டுக் கொன்றவர் சாம்பியனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தப் போட்டியின்போது 400 புறாக்கள் சுட்டுக் கொல்லப்பட்டன. ஒலிம்பிக் வரலாற்றில் பிராணிகள் கொல்லப்பட்ட ஒரே போட்டி பாரீஸ் ஒலிம்பிக்தான் என்ற வேதனையான வரலாறும் உள்ளது. புறாக்கள் கொல்லப்பட்டதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த பிராணிகள் நல அமைப்புகள், துப்பாக்கிச் சுடுதல் போட்டியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தன.

முதல் பெண் சாம்பியன்

ஒலிம்பிக் போட்டியின் முதல் பெண் சாம்பியன் அமெரிக்காவின் ஹெலன் போர்டேல்ஸ் ஆவார். அப்போது 32 வயதான ஹெலன், தனது கணவர் மற்றும் மருமகனுடன் இணைந்து படகுப் போட்டியில் சாம்பியன் ஆனார். அதேநேரத்தில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் நபர் இங்கிலாந்தின் டென்னிஸ் வீராங்கனை சார்லோட்டே கூப்பர் ஆவார்.

நார்மன் பிரிட்சார்ட்

இந்த ஒலிம்பிக்கில் இந்தியா முதல் முறையாக அடியெடுத்து வைத்தது. இந்தியா சார்பில் தடகள வீரர் நார்மன் பிரிட்சார்ட் கலந்து கொண்டார். அந்த சமயம் இந்தியா, இங்கிலாந்து ஆட்சியின் கீழ் இருந்ததால் கொடியில் இங்கிலாந்தின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த கொடியின் கீழ் தான் பிரிட்சார்ட் போட்டிகளில் பங்கேற்க நேரிட்டது.

இங்கிலாந்து தம்பதியருக்கு மகனாக கொல்கத்தாவின் அலிபூரில் பிறந்தவர் தான் இந்த பிரிட்சார்ட். ஒலிம்பிக்கில் 5 வகையான போட்டிகளில் கலந்து கொண்ட இவர் 200 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் தடை ஓட்டங்களில் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் ஆசிய நாட்டவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 110 மீட்டர் தடை ஓட்டம், 60 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டத்தில் இவரால் ஜொலிக்க முடியவில்லை.

நார்மன் பிரிட்சார்ட் தனது கல்லூரிப் படிப்பை கொல்கத்தாவில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் முடித்தார். நார்மன் சிறந்த கால்பந்து வீரரும் கூட. திறந்த வெளி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் ஹாட்ரிக் கோல் அடித்து சாதனையும் புரிந்துள்ளார் நார்மன். 1897-ல் கல்லூரி அணிகள் இடையேயான ஆட்டத்தில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார்.

மேலும் வங்காள மாகாணத்தில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டத்தில் 1894 முதல் 1900-ம் வரை தொடர்ச்சியாக 7 முறை பட்டம் வென்றும் சாதனை புரிந்துள்ளார். 1900 முதல் 1902 வரை இந்திய கால்பந்து சங்க செயலாளர் பதவியையும் நார்மன் வகித்துள்ளார். 1900-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற தடகள போட்டியில் பங்கேற்றார்.

440 யார்டு, 100 யார்டு, 200 யார்டு தடை தாண்டும் ஓட்டங்களில் முதலிடம் பிடித்தார். இதன் மூலமே அவர் 1900 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வானார். ஒலிம்பிக் போட்டியில் இரு பதக்கங்கள் வென்ற நார்மனை இங்கிலாந்து சொந்தம் கொண்டாடினாலும் அவர் இந்தியாவின் சார்பில் பங்கேற்றவர் என்றே சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன பதிவேட்டில் உள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர் இந்தியா திரும்பிய நார்மன் 1905-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு குடிபெயர்ந் தார். அதன் பின்னர் அங்கிருந்து அமெரிக் காவுக்கு இடம் மாறி ஹாலிவுட்டில் கால்பதித்தார். நார்மன் டிரெவர் என்ற பெயருடன் ஹாலிட் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். புகழ்பெற்ற நடிகரான ரொனால்டு கோல்மேனுடன் இணைந்து பியூ கெஸ்ட், டேன்சிங் மதர்ஸ், டுநைட் அட் டுவெல் ஆகிய படங்களில் நார்மன் நடித்துள்ளார். 1926-ல் மூளை சம்பந்தமான நேயால் பாதிக்கப்பட்ட நார்மன், கலிபோர் னியா நகரில் மரணமடைந்தார்.

http://tamil.thehindu.com/sports/1900-பாரீஸ்-ஒலிம்பிக்-இந்தியாவுக்கு-பெருமை-சேர்த்த-நார்மன்/article8831212.ece

Link to comment
Share on other sites

ஒலிம்பிக் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி

ஒலிம்பிக் தடகள போட்டிக்கான தகுதி சுற்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 4X400 தொடர் ஓட்டத்தில் தருண் அய்யாசாமி, குன்ஹூ முகமது, முகமது அனுஷ், ஆரோக்கிய ராஜூவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 13-வது இடம் பிடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதில் தருண் அய்யாசாமி தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ராவுத்தம்பாளையத்தை சேர்ந்தவர் ஆவார். தருண் அய்யாசாமியை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 3:00.91 விநாடிகளில் கடந்தது.

மகளிர் பிரிவு தொடர் ஓட்டத்தில் டின்டு லுகா, பூவம்மா, அனில்டா தாமஸ், நிர்மலா சியோரன் ஆகியாரை கொண்ட இந்திய அணியும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

http://tamil.thehindu.com/sports/ஒலிம்பிக்-தொடர்-ஓட்டத்தில்-இந்திய-அணி/article8838250.ece

Link to comment
Share on other sites

1908 லண்டன் ஒலிம்பிக்: பதக்கம் வென்ற அண்ணன், தங்கை

 

 
மாரத்தானில் இலக்கை அடையும் போது இத்தாலியின் டொரன்டோ பியட்ரிக்கு உதவிய அதிகாரிகள்.
மாரத்தானில் இலக்கை அடையும் போது இத்தாலியின் டொரன்டோ பியட்ரிக்கு உதவிய அதிகாரிகள்.

நான்காவது ஒலிம்பிக் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 1908-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை 187 நாட்கள் நடைபெற்றது. இந்தப் போட்டி முதலில் இத்தாலி தலை நகர் ரோமில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒலிம்பிக் போட்டிக்கான பணி கள் நடைபெற்று வந்த நிலையில் வேஸூவியூஸ் எரிமலை வெடித் ததால் இத்தாலியின் நேபிள்ஸ் நகர் மிகப்பெரிய பாதிப்புக்குள் ளானது. அதை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற் பட்டதால் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் இருந்து பின்வாங் கியது இத்தாலி.

இதையடுத்து ஒலிம்பிக் போட் டியை நடத்தும் வாய்ப்பு லண்ட னுக்கு கிடைத்தது. 2 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிக்கான மைதானங்கள் தயாரானது. 22 நாடுகளில் இருந்து 1971 வீரர்கள், 37 வீராங்கனைகள் என மொத்தம் 2008 பேர் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை.

இந்த ஒலிம்பிக் போட்டியில் தான் முதல் 3 இடங்களைப் பிடித்த வர்களுக்கு முதல்முறையாக பதக்கம் வழங்கப்பட்டது. இதற்கு முன்பு வரை பட்டயமே வழங்கப் பட்டு வந்தது. போட்டியை நடத் திய இங்கிலாந்து 56 தங்கம், 51 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 136 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலி டத்தைப் பிடித்தது.

அமெரிக்கா 23 தங்கம், 12 வெள்ளி, 12 வெண் கலம் என மொத்தம் 47 பதக்கங்களுடன் 2-வது இடத்தை யும், ஸ்வீடன் 8 தங் கம், 6 வெள்ளி, 11 வெண்கலம் என 25 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன.

பதக்கம் வென்ற அண்ணன், தங்கை

இங்கிலாந்தை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையான சார்லோட்டே டாட், 1908 ஒலிம்பிக்கில் வில்வித்தைப் போட் டியில் கலந்துகொண்டு வெள்ளி வென்றார். அவருடைய சகோதரர் வில்லியம் டாட் ஆடவர் வில் வித்தையில் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் அண்ணன், தங்கை என்ற பெருமை சார்லோட்டே, வில்லியம் ஆகியோருக்கு கிடைத்தது.

டென்னிஸ் வீராங்கனையான சார்லோட்டே, விம்பிள்டனில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 1887-இல் முதல் முறையாக விம்பிள்டனில் சார் லோட்டே சாம்பியன் ஆனபோது, அவருக்கு வயது 15. இன்றள விலும் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீராங்கனை என்ற பெருமை சார்லோட்டேவின் வசமே உள்ளது. டென்னிஸ் வீராங்கனையான அவர் வில் வித்தையிலும் அதீத ஆர்வம் கொண்டவர்.

இந்த ஒலிம்பிக்கில் முதல் முறையாக டைவிங் போட்டி சேர்க்கப்பட்டது. இரண்டு பிரிவு களில் போட்டி நடத்தப்பட்டது. 9 நாடுகளைச் சேர்ந்த 39 வீரர்கள் இதில் பங்கேற்றனர். 3 மீட்டர். ஸ்பிரிங் போர்டு பிரிவில் ஜெர்மனி யின் ஆல்பர்ட் சுர்னரும், 10 மீட்டர் பிளாட்பார்ம் பிரிவில் ஸ்வீடனின் ஜல்மார் ஜோஹன்ஸனும் தங்கம் வென்றனர்.

மாரத்தானில் சர்ச்சை

1904-ம் ஆண்டு ஒலிம்பிக் போட் டியை போன்று இந்த ஒலிம்பிக் கிலும் மாரத்தான் போட்டியின் போது சர்ச்சை ஏற்பட்டது. இதில் முதலில் வந்தவரான இத்தாலியின் டொரன்டோ பியட்ரி, இலக்கை நெருங்கியபோது கீழே விழுந்தார். இதையடுத்து அங்கிருந்த காவலர் களின் உதவியுடன் இலக்கை எட்டினார் பியட்ரி.

அதன் காரணமாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் 2-வது இடம்பிடித்தவரான அமெ ரிக்காவின் ஜானி ஹேய்ஸ் முத லிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட் டது. ஆனால் அடுத்த நாளே வெள்ளி முலாம் பூசிய கோப்பை யை பியட்ரிக்கு பரிசளித்தார் இங்கி லாந்து ராணி அலெக்ஸ்சான்ட்ரா.

அணிவகுப்பு புறக்கணிப்பு

1908-ல் பின்லாந்து, ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அத னால் அணிவகுப்பின் போது பின் லாந்து வீரர்கள் ரஷ்ய கொடியை ஏந்திச் செல்வார்கள் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் களில் பெரும் பாலானோர் எந்தக் கொடியும் இல்லாமல் அணிவகுப் பில் கலந்து கொண்டனர். அமெரிக்காவின் தேசியக் கொடி, ஒயிட் சிட்டி மைதானத்தில் பறக்கவிடப் படவில்லை. அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அணிவகுப்பில் அந்த அணியினர் கலந்து கொள்ளவில்லை.

http://tamil.thehindu.com/sports/1908-லண்டன்-ஒலிம்பிக்-பதக்கம்-வென்ற-அண்ணன்-தங்கை/article8848006.ece

Link to comment
Share on other sites

உலக மகா ஒலிம்பிக்: வேடிக்கையும் விநோதமும்

 
__________2921813f.jpg
 

லண்டன் 3

ஒலிம்பிக் போட்டிகளை அதிக முறை நடத்திய நகரம் லண்டன். 1908, 1948, 2012 என 3 முறை ஒலிம்பிக் போட்டிகள் அதிகாரபூர்வமாக இங்கு நடந்துள்ளன.

2016 ஒலிம்பிக்கில்… இயற்கை செழிக்கும் ரியோ

__________3_2921815a.jpg

பலரும் நினைப்பதுபோல ரியோ, பிரேசிலின் தலைநகரம் இல்லை; பிரேசிலில் அதிக மக்கள் வாழும் இரண்டாவது மிகப் பெரிய நகரம். முழுப் பெயர் ரியோடி ஜெனிரோ. இங்குதான் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடக்கப் போகிறது.

இயற்கை பாரம்பரியம் செழிக்கும் இந்த நகரம் யுனெஸ்கோவின் உலக மரபு சின்னப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. கடலுக்கும் இந்த நகரின் மலைப்பகுதிக்கும் இடைப்பட்ட கரியோகா என்ற இயற்கை நிலக்காட்சிதான் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தவக்காலத்துக்கு முன்னதாக நடக்கும் ரியோ கார்னிவல் உலகப் புகழ்பெற்றது. 1992-ல் ரியோவில் நடைபெற்ற பூமி மாநாடு, உலக அளவில் ரியோ பிரபலமாக முக்கியக் காரணம்.

முதலில் வந்து பதக்கம் இழந்தவர்

_________1_2921816a.jpg

1908-ம் ஆண்டு ஒலிம்பிக் மாரத்தான் போட்டியில் மைதான எல்லைக்குள் முதலில் நுழைந்தவர் இத்தாலிய வீரர் டிராண்டோ பியட்ரி. ஆனால், அவருக்குப் பதக்கம் கிடைக்கவில்லை. அவர் எல்லைக்கோட்டைத் தொடுவதற்கு சில அடிகளே மீதமிருந்தன.

ஆனால், ரொம்ப தூரம் ஓடிவந்ததால் களைப்படைந்த பியட்ரி, தடுமாறி விழுந்தார். எல்லைக் கோட்டைத் தொட, சில ஒலிம்பிக் அலுவலர்கள் அவருக்கு உதவினர். இந்த உதவியின் காரணமாகப் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். பதக்கம் பெறும் வாய்ப்பும் அவருக்குக் கைநழுவியது. அவருடைய முயற்சியைப் பாராட்டும் வகையில், ஆறுதல் பரிசு தரப்பட்டது.

ஒலிம்பிக்கில் இப்படி முதலில் உதவிய அலுவலர் யார் தெரியுமா? ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் கதைகளை எழுதி புகழ்பெற்ற ஆர்தர் கானன் டாயல்தான்.

பேராசை பெரு நஷ்டம்

__________2_2921814a.jpg

ஒலிம்பிக் 100 மீட்டர் சாதாரண நீச்சல் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை (1956, 1960, 1964) தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தவர் ஆஸ்திரேலிய வீராங்கனை டான் பிரேசர். ஆனால், அவரது விளையாட்டு வாழ்க்கை மிக சோகமயமாக முடிவுக்கு வந்தது. 1964-ல் டோக்கியோவில் 100 மீட்டர் நீச்சலில் ஒரு நிமிடத்துக்குள் 100 மீட்டர் தொலைவைக் கடந்து புதிய சாதனையைப் படைத்தார்.

ஆனால், அத்துடன் அவருடைய ஆசை அடங்கவில்லை. பேரரசர் ஹிரோஹிட்டோவின் ஜப்பானிய அரண்மனையின் முன்பு பறந்துகொண்டிருந்த ஒலிம்பிக் கொடியைத் திருட முயன்றதாக பிரேசர் பிடிபட்டார். பின்னர் ஒரு ஒலிம்பிக் கொடி அவருக்கு நினைவுப்பரிசாகக் தரப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலிய நீச்சல் அமைப்பு 10 ஆண்டுகள் விளையாட அவருக்குத் தடை விதித்து, பின்னர் 4 ஆண்டு முடிவில் அதை விலக்கிக்கொண்டது.

தங்கம் வெல்லா சாதனை நாயகன்

ஓட்டப்பந்தயத்தில் (800 மீட்டர்) உலக சாதனை படைத்தவர் பிரிட்டனைச் சேர்ந்த செபஸ்டியன் கோ. அதே பிரிவில் கடைசிவரை ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் தங்கப் பதக்கம் வெல்லவே முடியவில்லை.

1980 மாஸ்கோவில் ஸ்டீவ் ஓவெட்டிடம் தங்கப் பதக்கத்தைத் தவறவிட்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு லாஸ் ஏஞ்சலீஸில் பலம் வாய்ந்த ஜோவாகிம் குரூஸிடம் தங்கத்தை இழந்தார். அந்த இரு முறையும் 1,500 மீட்டர் ஓட்டத்தில் மட்டும் அவர் தங்கம் வென்றார்.

1992 பார்சிலோனா ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெறாத நிலையில், எப்படியாவது அவரைப் பங்கேற்க வைக்க ‘ஒயில்டு கார்டு’ எனப்படும் நேரடித் தகுதி வாய்ப்பை வழங்குவதற்காக விதிமுறைகளில் திருத்தத்தை மேற்கொள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் முயற்சித்தார் என்றால், செபஸ்டியன் கோவின் புகழைப் புரிந்துகொள்ளலாம்.

http://tamil.thehindu.com/society/kids/உலக-மகா-ஒலிம்பிக்-வேடிக்கையும்-விநோதமும்/article8815066.ece

 

 

 

உலக மகா ஒலிம்பிக் 2: சந்தித்ததும் சாதித்ததும்

 
1928-ல் ஒலிம்பிக் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி
1928-ல் ஒலிம்பிக் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி

அஞ்சிய நடுங்கிய பிரிட்டன் இந்தியா விடுதலை பெறும்வரை (1928, 1932, 1936-ம் ஆண்டுகளில்) ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் பிரிட்டன் பங்கேறவில்லை.

இந்திய ஹாக்கி அணி வலுவாக இருந்ததுதான் இதற்கு முக்கியக் காரணம். எல்லா ஹாக்கிப் போட்டிகளிலும் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. தனது அடிமை நாடான இந்தியாவிடம் தோற்றுவிடுவோம் என்ற பயத்தினால்தான் பிரிட்டன் விளையாடவில்லை.

ஆனால், 1948-ம் ஆண்டில் தலைநகர் லண்டனில் ஒலிம்பிக்கை நடத்திய பிரிட்டன், வேறு வழியின்றிப் பங்கேற்க வேண்டிய நிலை. இறுதிப் போட்டிக்குப் பிரிட்டன் முன்னேறியது. ஆனால், என்ன பயன்?

இறுதிப் போட்டியில் 4-0 என்ற கணக்கில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது.

நினைப்பதெல்லாம் நடக்கிறதா என்ன?

ஜெய்பாலின் துரதிருஷ்டம்

_________2930341a.png - ஜெய்பால் சிங்

இந்திய ஹாக்கி அணி முதன்முறையாக 1928-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கச் சென்றபோது, ஜார்கண்ட் பழங்குடி இளவரசர் ஜெய்பால் சிங் பிரிட்டனில் படித்துக் கொண்டிருந்தார்.

ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணிக்குத் தலைமை வகிக்குமாறு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். தொடர்ந்து விளையாடிவந்த அவரால், காயம் காரணமாக இறுதிப் போட்டியில் விளையாட முடியவில்லை. தற்காலிகக் கேட்பனாக எரிக் பென்னிகர் நியமிக்கப்பட்டார்.

ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கப் பதக்கத்தைப் பெறும் வாய்ப்பு பென்னிகருக்குக் கிடைத்தது. போட்டி தொடர் முழுவதும் அணியை வழிநடத்திய ஜெய்பால் சிங்குக்கு, பதக்க மேடை கௌரவம் கிடைக்காதது சோகம்தான்.

இரட்டை சவாரி

_________1_2930340a.png - இஃப்திகார் அலி கான் பட்டோடி

 

இந்திய கிரிக்கெட் வீரர் இஃப்திகார் அலி கான் பட்டோடி (சீனியர்) ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாவிட்டாலும், இரண்டு விளையாட்டுகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்திருக்கிறார். 1928-ம் ஆண்டு முதன்முதலாக ஒலிம்பிக் ஹாக்கி போட்டிக்குச் சென்ற இந்திய அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால், தங்கம் வென்ற அணியில் அவரால் விளையாட முடியவில்லை.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவர் களம் கண்டார். 1946-ல் இந்தியக் கிரிக்கெட் அணிக்குக் கேப்டனான அவர், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.

பயிற்சியாளரின் பிரசவ வேதனை

_________2_2930342a.png - ஸ்ரீ ராம் சிங்

1976 மான்ட்ரீல் ஒலிம்பிக் போட்டியின் 800 மீட்டர் ஓட்டப் பந்தய இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் ராம் சிங் தகுதி பெற்றார். இதை அறிந்தவுடன், தனது மாணவரின் திறனை நேரில் காண சொந்தச் செலவில் மான்ட்ரீல் விரைந்தார், அவருடைய பயிற்சியாளர் முகமது இலியாஸ் பாபர்.

மான்ட்ரீலில் கால்பதித்த அவர், அந்நகரிலேயே பெரிதாக இருந்த ஒரு மசூதியில் தஞ்சமடைந்தார். தனது பயிற்சியாளர் வந்துவிட்டதை அறிந்தவுடனேயே உற்சாகம் பெற்ற ராம், தனது வாழ்விலேயே மிக வேகமாக ஓடினார். ஆனால், தங்கம் வென்றது கியூபாவின் ஆல்பர்ட்டோ யுவான்டரெனா. ராம் சிங் ஏழாவது இடம்பிடித்தார். ஒருவேளை, பயிற்சியாளர் பாபரை முன்கூட்டியே அனுப்பித் தீவிரப் பயிற்சி அளித்திருந்தால், ராம் பதக்கம் வென்றிருக்கலாம்.

178 கோல்கள்

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி. ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் அதிகபட்ச சாதனை ஹாக்கி அணி வென்ற 8 தங்கப் பதக்கங்கள்தான். 1928 - 1956க்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய ஹாக்கி அணி விளையாடிய 24 ஒலிம்பிக் போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இந்தப் போட்டிகளில் 178 கோல்களை அடித்தது இந்திய அணி. அதேநேரம், எதிரணிகளிடமிருந்து இந்தியா பெற்ற கோல்கள் வெறும் 7 மட்டுமே. இந்தக் காலத்தில் தொடர்ச்சியாக ஆறு தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றது.

சதமடித்த இந்தியா

ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக நூற்றுக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளை ரியோ ஒலிம்பிக்குக்கு இந்தியா அனுப்புகிறது. இவர்கள் 16 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கிறார்கள்.

ஜிம்னாஸ்டிக் இளவரசி

_________4_2930343a.png

ஒலிம்பிக் போட்டிகளின் உச்சங்களைப் பெண்களால் தொட முடியும் எனக் காட்டியவர் ருமேனியாவின் நாடியா காமன்சி. 1976, 1980 ஒலிம்பிக் போட்டிகளில் 5 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களை அவர் வென்றார்.

1976 மான்ட்ரீல் ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்றபோது, அவருக்கு வயது வெறும் 14. அசிமிட்ரிகல் பார் போட்டியில் 10-க்கு 10 எடுத்து, ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் முழுப் புள்ளிகளை அள்ளிய முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். அந்த ஒலிம்பிக்கின் முடிவில் பங்கேற்ற 10 போட்டிகளில் 7-ல் முழுப் புள்ளிகளைப் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

ரப்பர் பெண், ஜிம்னாஸ்டிக் போட்டிகளின் இளவரசி, துல்லியமாக ஜிம்னாஸ்டிக் கலையை வெளிப்படுத்துபவர் என்றெல்லாம் அவர் புகழப்பட்டார்.

1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் புகழைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நெருக்கடி அவருக்கு இருந்தது. பதக்கங்களை வென்று குவிக்காவிட்டாலும், ரசிகர்களை அவர் ஏமாற்றவில்லை. விளையாட்டு வரலாற்றில் தனிமுத்திரை பதித்த பெண்களின் முதல் வரிசையில் காமன்சியின் பெயருக்கு எப்போதும் இடம் உண்டு.

http://tamil.thehindu.com/society/kids/உலக-மகா-ஒலிம்பிக்-2-சந்தித்ததும்-சாதித்ததும்/article8842642.ece

Link to comment
Share on other sites

மரியா ஷர­போ­வா­வுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு நழு­வி­யது
2016-07-15 11:02:06

17978maria.jpgதடை­செய்­யப்­பட்ட ஊக்க மருந்து பாவ­னையில் சிக்­கிய ரஷ்ய டென்னிஸ் வீராங்­கனை மரியா ஷர­போ­வா­ அடுத்த மாதம் நடை­பெ­ற­வுள்ள ஒலிம்பிக் போட்­டி­களில் பங்­கு­பற்ற முடி­யாத நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்ளார்.

 

தனக்கு விதிக்­கப்­பட்ட தடையை எதிர்த்து சர்­வ­தேச விளை­யாட்­டுத்­துறை நியா­யா­திக்க சபையில் ஷர­போவா மேன்­மு­றை­யீடு செய்­தி­ருந்தார். 

 

இந்த மனுவை விசா­ரித்­த சர்­வ­தேச விளை­யாட்­டுத்­துறை நியா­யா­திக்க சபை எதிர்­வரும் 18ஆம் திகதி .தீர்ப்பு வழங்கும் என எதிர்ப்­பார்க்­கப்­பட்­டி­ருந்­தது. 

 

ஆனால், தங்கள் தரப்பு ஆதா­ரங்­களை தாக்கல் செய்ய கால அவ­காசம் வேண்டும் என்று சர்­வ­தேச டென்னிஸ் சம்­மே­ளனம் அவ­காசம் கேட்­டதால் இந்த வழக்கு விசா­ரணை செப்­டம்பர் 19ஆம் திக­தி­வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.  

 

இதன் கார­ண­மாக அடுத்த மாதம் நடை­பெ­ற­வுள்ள ஒலிம்பிக் போட்டியில் ஷரபோவாவுக்கு பங்குபற்ற முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=17978#sthash.Ba7fzd5W.dpuf
Link to comment
Share on other sites

ரியோ தடகளத்தில் இரு தமிழக வீரர்கள்

  •  
 
 
ரியோ ஒலிம்பிக் தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்ளும் இந்திய அணி வீரர்கள் ஆரோக்கிய ராஜீவ், தருண் அய்யாசாமி, குன்ஹூ முகமது, முகமது அனாஸ்.
ரியோ ஒலிம்பிக் தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்ளும் இந்திய அணி வீரர்கள் ஆரோக்கிய ராஜீவ், தருண் அய்யாசாமி, குன்ஹூ முகமது, முகமது அனாஸ்.

ஒலிம்பிக்கில் இந்திய தடகள வீரர்கள், சுதந்திரத்துக்கு பிறகு பதக்கம் வென்றதில்லை. ஏன் இறுதிச் சுற்றில் கால்பதிப்பதே அரிதுதான். 2012-ல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் மட்டும் இந்திய வீரர்கள் இருவர் இறுதி சுற்று வரை முன்னேறியிருந்தனர். இம்முறை ரியோ ஒலிம்பிக்கில் தடகளத்தில் இருந்து அதிக பட்சமாக 16 வீராங்கனைகள் உட்பட 36 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

இதில் ஆடவர் பிரிவில் 4 X 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்ளும் இந்திய அணியில் தருண் அய்யாசாமி, குன்ஹூ முகமது, முகமது அனுஷ், ஆரோக்கிய ராஜீவ் ஆகிய நால்வர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் தருண் அய்யாசாமி, ஆரோக்கிய ராஜீவ் ஆகியோர் தமிழ் மண்ணை சேர்ந்தவர் கள். இந்த நால்வர் கூட்டணி பெங்களூ ருவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் 13-வது இடம் பிடித்தது.

இவர்கள் பந்தய தூரத்தை 3:00.91 விநாடிகளில் கடந்தனர். இது தேசிய சாதனையாகவும் அமைந்தது. இதற்கு முன்னர் இந்த நால்வரை உள்ளடக்கிய அணி துருக்கியில் நடைபெற்ற போட்டியில் பந்தய தூரத்தை 3:02.17 விநாடிகளில் கடந்திருந்தது.

ஆரோக்கிய ராஜீவ் திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் சவுந்தரராஜன், லில்லி சந்திரா. ராஜீவின் தம்பி ரஞ்சித்தும் ராணுவத்தில் பணியாற்றிவருகிறார். இவர்களுக்கு எலிசபெத் என்ற தங்கையும் உள்ளார்.

லால்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த ஆரோக்கிய ராஜீவ், தற்போது இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமாண்டிங் ஆபீசராக பணியாற்றி வருகிறார். இளம் வயதிலிருந்தே தடகள விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்த இவரை ஒரு சிறந்த விளையாட்டு வீரராக உருவாக்கியவர் ரயில்வேயில் பணியாற்றி வரும் தடகள வீரர் ராமச்சந்திரன்தான்.

மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் 400 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் மற்றும் டிரிப்பிள் ஜம்ப் ஆகிய போட்டிகளில் பங்கேற்று, பல்வேறு பதக்கங்களை ஆரோக்கிய ராஜீவ் பெற்றுள்ளார்.

2010-ல் இந்திய ராணுவத்தில் சிப்பாயாக சேர்ந்தார். அங்கு தொடர்ந்து பயிற்சி பெற்று, 2012-ல் தேசிய போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். இதைத் தொடர்ந்து 2013 மற்றும் 2015-ல் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் அதே பிரிவில் தங்கம் வென்றுள்ளார். 2014-ல் ஆசிய போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 2015-ல் தென் கொரியாவில் ராணுவ விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

ரியோ ஒலிம்பிக் குறித்து ஆரோக்கிய ராஜீவ் கூறும்போது, “தகுதிச் சுற்றுப் போட்டியில் நாங்கள் 3.009 விநாடிகளில் இலக்கை எட்டினோம். இந்த நேரம் இந்த ஆண்டில் உலக அளவில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளது. எங்களது பயிற்சியை மேலும் தீவிரப்படுத்துவோம். ரியோவில் தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்ப்போம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

தருண் அய்யாசாமி

தருண் அய்யாசாமி, திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள சின்னேரிபாளையம் ஊராட்சி, ராவுத்தம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை அய்யாசாமி. தாயார் பூங்கொடி. தருணின் ஏழு வயதில் தந்தை இறந்துவிட்டார். தாயார், தனியார் பள்ளி ஆசிரியர். இளம் வயதில் ஆரம்பித்த தடகள ஆர்வம் தற்போது தருணை ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அளவுக்கு இழுத்துச் சென்றுள்ளது.

தருண் தனது பள்ளிப் பருவத்தில் கோ-கோ விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். மாநில அளவிலான போட்டியிலும் அவர் பங்கேற்றுள்ளார். குழு விளையாட்டில் தனது தனிப்பட்ட திறன் வெளியே தெரியாது என கருதிய தருண் 10-ம் வகுப்பு படிக்கும் போதுதான் ஓட்டப்பந்தயத்தின் மீது தனது கவனத்தை திருப்பினார்.

திருப்பூரை சேர்ந்த தடகள பயிற்சியாளர் ஜே.அழகேசனிடம் முறைப்படி பயிற்சி பெற்று தன்னை மெருகேற்றினார்.

2012 முதல் 2014 வரை உள்ள காலகட்டத்தில் மாநில தடகளப் போட்டிகளில் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டங்களில் தொடர்ந்து மூன்றாண்டுகள் தங்கம் வென்று அசத்தினார். 2014-ல் மாநில தடகளப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் 21.4 விநாடிகளிலும், 400 மீட்டர் ஓட்டத்தில் 48.6 விநாடிகளிலும் தருண் இலக்கை கடந்தது தற்போது வரை சாதனையாக உள்ளது.

இதே போன்று மாநில அளவில் 8 சாதனைகளையும், தேசிய அளவில் 6 சாதனைகளையும் தருண் படைத்துள்ளார். தேசிய அளவில் 40 பதக்கங்களை வென்றுள்ளார். 2016-ல் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தருண் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தனிநபர் பிரிவிலும் தங்கம் வென்றுள்ளார்.

மகன் ஒலிம்பிக்கில் ஓடுவதை நான் பார்க்க வேண்டும் என்பது கடந்த பிப்ரவரி மாதம் தெற்காசியப் போட்டியில் தருண் அய்யாசாமி தங்கம் வென்றபோது, அவரது தாய் பூங்கொடி சொன்னவார்த்தைகள். இன்றைக்கு அது பலித்துள்ளது. ஒரு தாயின் கனவை தனயன் நிறைவேற்றி யுள்ளார்.

பூங்கொடி கூறும்போது, “வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணம் இது. குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. இத்தனை நாள் பட்ட துயரங்கள் இதனால், கரைந்துவிட்டன. தருண் அய்யாசாமி கர்நாடக மாநிலம் மங்களூர் ஆல்வாஸ் பல்கலையில், பி.ஏ., மனிதவளம் மேம்பாடு முதலாம் ஆண்டு பட்டதாரி.

தருண் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டிருந்தான். கடந்த 6 ஆண்டுகளாக ஓட்டப்போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று மாவட்டம், மாநிலம், தேசிய போட்டிகளில் பங்கேற்று வந்தான். தருண் தடகளப்போட்டிகளில் பங்கேற்க சென்றால், அந்த மாதத்தில் சுமார் ரூ.15 ஆயிரம் கூடுதல் செலவாகும். அன்றைக்கு பட்டசிரமங்கள் எல்லாம், இன்றைக்கு இந்த வெற்றிமூலம் நீங்கியுள்ளது” என்றார்.

ஒலிம்பிக் போட்டி தொடர்பாக தருண் அய்யாசாமி கூறும்போது, “பெங்களூருவில் நடைபெற்ற தகுதிச் சுற்று போட்டியில் நாங்கள் இலக்கை அடைந்த நேரம் இந்த ஆண்டில் உலக அளவில் 2-வது சிறந்த ஓட்டமாக பதிவாகி உள்ளது.

ஒலிம்பிக்கில் அமெரிக்க அணி சவாலாக இருக்கும் என கருதுகிறோம். இம்முறை நிச்சயம் இறுதி சுற்றில் கால்பதித்து தங்கம் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள மற்ற இருவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் குன்ஹூ முகமது இந்திய ராணுவத்தில் சுபைதாராக பணியாற்றி வருகிறார். முகமது அனுஷ் இந்திய கப்பற்படையில் பணியாற்றுகிறார்.

கடந்த 3 ஒலிம்பிக் போட்டியிலும் தொடர் ஓட்டத்துக்கு இந்திய அணி தகுதி பெறவில்லை. மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பிலும் பதக்கம் கைப்பற்றவில்லை.

ஆனால் தற்போது இந்த ஆண்டில் உலகின் சிறந்த அணிகளில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்திய அணி இம்முறை தொடர் ஓட்டத்தில் பதக்கம் வெல்ல வாய்ப்புகள் இருப்பதாகவே கருதப்படுகிறது. ஏனே னில் ஒலிம்பிக் சாம்பியனான பஹா மஸ், வெண்கலப்ப பதக்கம் வென்ற டிரினிடாட் அணிகளின் பார்ம் மோச மாகவே உள்ளது. மேலும் இவர்கள் உலக தரவரிசையில் குறிப்பிடும்படியான இடத்திலும் இல்லை.

ஆனால் பெல்ஜியம், இங்கிலாந்து அணிகள் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற யூரோ சாம்பியன்ஷிப்பில் பெல்ஜியம் அணி பந்தய தூரத்தை 3:01.10 விநாடிகளில் கடந்தது. இங்கிலாந்து அணி கடந்த ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக தடகள போட்டியில் இலக்கை 3:01.44 விநாடிகளில் அடைந்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. எனினும் தமிழக வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

http://tamil.thehindu.com/sports/ரியோ-தடகளத்தில்-இரு-தமிழக-வீரர்கள்/article8853065.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

ஒலிம்பிக் போட்டியில் இருந்து ரோனிக், ஹாலெப் விலகல்

 

சிமோனா ஹாலெப்
சிமோனா ஹாலெப்

ஒலிம்பிக் போட்டியில் இருந்து பிரபல டென்னிஸ் நட்சத்திரங்களான மிலோஸ் ரோனிக், சிமோனா ஹாலெப் ஆகியோர் விலகியுள்ளனர். ஜிகா வைரஸ் நோய் அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் ரியோ நகரில் தொடங்குகிறது. இந்நிலையில் போட்டி நடக்கும் பிரேசில் நாட்டில் ஜிகா வைரஸ் நோய் பரவிவருவதாக கூறி இந்த ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள முன்னணி வீரர்கள் பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் முன்னணி டென்னிஸ் வீரரும், விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 2-ம் இடம் பிடித்தவருமான ரோனிக், தான் இந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதுபற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், “என் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் நடத்திய ஆலோ சனைக்கு பிறகு ஒலிம்பிக் போட்டி யில் பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்துள் ளேன். கனத்த இதயத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ரோனிக்கைப் போன்று ஒலிம்பிக் போட்டி யில் இருந்து விலகும் முடிவை தனது பேஸ்புக் தளத்தில் வெளியிட்டுள்ள ஹாலெப், “ஜிகா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். என் மருத்துவர் களிடமும், குடும்ப உறுப்பினர்களிடமும் நடத்திய ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவை எடுத்துள்ளேன். விளையாட்டை விட எனக்கு என் குடும்பம் மிகவும் முக்கியம்” என்று கூறியுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/ஒலிம்பிக்-போட்டியில்-இருந்து-ரோனிக்-ஹாலெப்-விலகல்/article8862215.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஒலிம்பிக் போட்டியின் பிரமிக்கும் ட்ரைலர் வெளியானது (வீடியோ இணைப்பு)

 

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள ரியோ ஒலிம்பிக்கின்  ட்ரைலர் வீடியோ ஒன்றை பீ.பி.சி வெளியிட்டுள்ளது.

ஒலிம்பிக் தொடர்பாக உலகத்தில் உள்ள பலரின் மத்தியிலும் பலவிதமான சிந்தனைகள் ஏற்பட்டு பல உருவாக்கங்களை செய்துவருகின்றனர்.

இந்நிலையில் பீ.பி.சி. ஆல் அமேசன் காட்டில் உள்ள மிருகங்களை வைத்து ஆக்கப்பட்டுள்ள இந்த வீடியோ காட்சியானது அனைவரையும் கவரும் வகையில் ஆக்கப்பட்டுள்ளது.

அமேசன் காட்டில் உள்ள மிருகங்கள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக்கொண்டால் இவ்வாறுதான் இருக்கும் வீடியோ இதோ!

 

http://www.virakesari.lk/article/9130

Link to comment
Share on other sites

ஜிகா வைரஸால் பயம் இல்லை; ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேனா என்று கணித்து கூற முடியாது: சானியா மிர்சா கருத்து

 

 
சானியா மிர்சா
சானியா மிர்சா

அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வேனா என்று என்னால் கணித்து கூற முடியாது என சானியா மிர்சா தெரிவித்தார்.

ரியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த மாதம் 5-ம் தேதி தொடங்குகிறது. இதில் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவில் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா இந்தியாவுக்காக களமிறங்குகிறார். இரட்டையர் பிரிவில் பிரார்த்தனா தாம்ப்ரே உடனும், கலப்பு இரட்டையரில் ரோகன் போபண்ணாவுடனும் இணைந்து சானியா விளையாடு கிறார்.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டி தொடர்பாக சானியா மிர்சா கூறியதாவது:

பெரிய அளவிலான தொடருக்கு எந்த முறையில் தயார் ஆகுவேனோ, அதே போன்றுதான் ஒலிம்பிக் போட்டிக்கும் தயாராகி வருகிறேன். இங்கே அமர்ந்து கொண்டே ஒலிம்பிக்கில் என்ன நடைபெறும் என்று கணித்து கூற முடியாது.

ரோகன் போபண்ணாவுக் கும் எனக்கும் இடையேயான கெமஸ்டிரி சிறப்பாக உள்ளது. நாங்கள் இரு வரும் ஒருவரையொருவர் நீண்ட காலமாக நன்கு புரிந்து வைத்துள்ளோம். அதிக ஆட்டங்களில் நாங்கள் ஒன் றாக விளையாடி உள்ளோம். ஒலிம்பிக்கில் நாங்கள் இணைந்து விளையாடு வதை ஆவலுடன் எதிர்பார்த்துள் ளோம்.

ஒலிம்பிக் போட்டிக்கு சொந்த உத்வேகம் இருக்க வேண்டும், நீங்கள் அங்கு இருக்க வேண்டு மெனில் உங்கள் சொந்த உத்வேகம் இருக்க வேண்டும். பெரிய உத்வேகம் என்பது நாட்டுக்காக விளையாட உள்ளதை தவிர வேறு ஏதும் இருக்க முடியாது.

ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக நான் கனடா போட்டியில் கலந்து கொள்கிறேன். ஒலிம்பிக் போட்டிக்கென்று சிறப்பு பயிற்சிகள் மேற்கொள்ளவில்லை. விம்பிள்டன், அமெரிக்க ஒபன் உள்ளிட்ட பெரிய அளவிலான தொடருக்கு எப்படி தயார் ஆகு வேனோ அதே போன்று தான் ஒலிம்பிக் போட்டிக்கும் பயிற்சி மேற்கொள்கிறேன். 3-வது முறை யாக ஒலிம்பிக்கில் பங்கேற்கிறேன். இந்த தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்றார்.

ஜிகா வைரஸ் தாக்குதல் பயத் தால் டென்னிஸ் வீரர்கள் சிலர் ஒலிம் பிக்கில் இருந்து விலகி உள்ளனர். இதனால் ஜிகா வைரஸ் தொடர்பாக கவலை ஏதும் உள்ளதா என சானியாவிடம் கேட்ட போது, “ஒலிம்பிக் போட்டிக்காக ரியோ செல்கிறேன். எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ அதை நிச்சயம் செய்துகொள்வோம்” என்றார்.

சானியா மேலும் கூறும்போது, “ஒலிம்பிக் போட்டியை கண்டு பயமில்லையென பிரார்த்தனா தாம்ப்ரே சமீபத்தில் கூறியுள்ளார். இது சிறப்பானது தான். இளம் பெண்கள், இளம் குழந்தைகள் தற்போது அதிக அளவிலான தன்னம்பிக்கையுடன் உள்ளார் கள் என்றே நான் கருதுகிறேன்.

பயம் இல்லாமல் விளை யாடும் பட்சத்தில், பிரார்த் தனாவுக்கு ஒலிம்பிக் போட்டி மிகப்பெரிய ஆச்சரியமாக இருக் கும். ஆனால் நிச்சயம் ஒருவித பதற்றம் இருக்கும். பிரார்த் தனா என்னை சுற்றி நீண்ட காலம் இருந் துள்ளார். அந்த அனுபவம் அவ ருக்கு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது.

மார்ட்டினா ஹிங்கிஸூக்கு எதிராக இந்த ஆண்டில் இருமுறை மோதி உள்ளேன். அதனால் அந்த வித பிரச்சினையும் இல்லை. நாங்கள் ஒரு வொருக்கொருவர் எதிராக விளையாடுவது என்பது கடினமானதுதான். மீண் டும் நாங்கள் எதிர் எதிரே சந்திக்க நேரிட் டால் அது இறுதிப் போட்டியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு சானியா மிர்சா கூறினார்.

http://tamil.thehindu.com/sports/ஜிகா-வைரஸால்-பயம்-இல்லை-ஒலிம்பிக்கில்-பதக்கம்-வெல்வேனா-என்று-கணித்து-கூற-முடியாது-சானியா-மிர்சா-கருத்து/article8869440.ece

Link to comment
Share on other sites

ஒலிம்பிக் செல்லும் இலங்கை அணிக்கு இந்திரஜித் குறே தலைவர்
2016-07-21 09:58:56

(நெவில் அன்­தனி)

 

18084Anuradha_Cooray_-_2012_Olympic_Maraரியோ ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் பங்­கு­பற்­ற­வுள்ள இலங்கை குழா­முக்கு சிரேஷ்ட மரதன் ஓட்ட வீரர் அநு­ராத இந்­தி­ரஜித் குறே அணித் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

 

ஒலிம்பிக் செல்லும் இலங்கை குழுவின் தலைமை அதி­கா­ரி­யாக தேசிய ஒலிம்பிக் குழுவின் செய­லாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா செயற்­ப­ட­வுள்ளார்.

 

லண்­டனில் வசித்­து­வரும் அநு­ராத இந்­தி­ரஜித் குறே பங்­கு­பற்­ற­வி­ருக்கும் மூன்­றா­வது ஒலிம்பிக் விளை­யாட்டு விழா இது­வாகும்.

 

கடந்த வருடம் நடை­பெற்ற லண்டன் மரதன் ஓட்டப் போட்­டி­யின்­போது எஸ். எல்.பி. ரோசா­வுக்கு 4 தசாப்­தங்­க­ளாக சொந்த­மா­க­வி­ருந்த தேசிய சாத­னையை முறி­ய­டித்து புதிய தேசிய சாதனை (2 மணி. 13 நி. 47 செக்.) நிலை­நாட்­டி­யதன் மூலம் ரியோ ஒலிம்பிக் தகு­தியைப் பெற்­றி­ருந்தார்.

 

ஜப்­பானின் ஃபக்­கு­ஓக்­காவில் 1975 இல் நடை­பெற்ற சர்­வ­தேச பகி­ரங்க மரதன் ஓட் டப் போட்­டியை 2 மணி. 14 நி. 41 செக்­கன்­களில் நிறைவு செய்து ரோசா முன்­னைய தேசிய சாத­னைக்கு சொந்­தக்­கா­ர­ராக இருந்தார். 

 

ஒலிம்­பிக்கின் பிறப்­பி­ட­மான ஏதென்ஸில் 2004இல் நடை­பெற்ற ஒலிம்பிக் வியைாட்டு விழா மற்றும் லண்டன் 2012 ஒலிம்பிக் விளை­யாட்டு விழா ஆகி­ய­வற்றில் இந்திர ஜித் குறே பங்­கு­பற்­றி­யி­ருந்தார்.

 

இலங்­கைக்­கான மரதன் ஓட்ட தேசிய சாத­னை­யையும் (2 மணி. 13 நி. 47 செக்.) மற்றும் அரை மரதன் ஓட்ட தேசிய சாத­னை­யையும் (1 மணி. 4 நி. 45 செக்.) தன்­ன­கத்தே கொண்­டுள்ள குறே, ஏதென்ஸ் 2004 ஒலிம்­பிக்கில் 30 ஆவது இடத்­தையும் லண்டன் 2012 ஒலிம்­பிக்கில் 55 ஆவது இடத்­தையும் பெற்றார்.

 

பெய்ஜிங் 2008 ஒலிம்­பிக்கில் பங்­கு­பற்று ­வ­தற்­கான தகு­தியை அவர் எட்­டி­யி­ருக்­க­வில்லை.

 

ரியோ ஒலிம்பிக் ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவின் ஆரம்ப விழா ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடை­பெ­றும்­போது தேசிய கொடியை ஏந்­தி­ய­வாறு இலங்கை அணி­யி­னரை வழி­நடத்­த­வுள்ளார்.

 

நான்கு வரு­டங்­க­ளுக்கு முன்னர் லண்டன் ஒலிம்­பிக்கில் இலங்கை குழாமில் தலை­வ­ராக தேசிய கொடியை ஏந்திச் சென்ற பட்­மின்டன் வீரர் நிலூக்க கரு­ணா­ரட்­ணவும் இவ்­வ­ருட ஒலிம்பிக் அணியில் இடம்­பெ­று­கின்றார். 

 

நீச்சல் வீரர் மெத்யூ அபே­சிங்க, நீச்சல் வீராங்­கனை கிமிக்கொ ரஹிம், மரதன் ஓட்ட வீராங்­கனை நிலூக்கா ராஜ­சே­கர, ஈட்டி எறி தல் வீரர் சுமேத ரண­சிங்க, ஜூடோ வீரர் சமிந்த தர்மவர்தன, குறிபார்த்து சுடும் வீரர் மங்கள சமரக்கூன், பளு தூக்கல் வீரர் சுதேஷ் பீரிஸ் ஆகியோரும் ரியோ ஒலிம்பிக்கில் இலங்கை சார்பாக பங்குபற்றுகின்றனர்.

- See more at: http://metronews.lk/article.php?category=sports&news=18084#sthash.X2ml6Xd6.dpuf
Link to comment
Share on other sites

ஒலிம்பிக்: 416 வீரர்களுடன் களமிறங்குகிறது சீனா..!

லிம்பிக் போட்டியில் பங்கேற்கும் சீனக் குழுவில் 416 பேர் இடம் பெற்றுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு அணியில் இருந்து இவ்வளவு வீரர் -  வீராங்கனைகள் பங்கேற்பது இதுவே முதல் முறை.

chin.jpg

 

கடந்த லண்டன் ஒலிம்பிக்கில் அமெரிக்க அணி 46 தங்கப்பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. சீன அணி 38 தங்கப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றது. இந்த ஒலிம்பிக்கில் முதல் இடத்தைப் பிடிக்கும் நோக்கில் சீனா 416 பேர் கொண்ட மிகப் பெரியக் குழுவை அனுப்புகிறது. இதில் 216 வீராங்கனைகளுடன் 160 வீரர்களும் உள்ளனர். மொத்தம் 26 விளையாட்டுப் போட்டிகளில் சீன அணி பங்கேற்கிறது.  லண்டன் ஒலிம்பிக்கில் 396 பேர் சீன அணி தரப்பில் இருந்து பங்கேற்றனர்.

பயிற்சியாளர்கள் , அலுவலர்கள் என கணக்கிட்டால் சீனக் குழுவின் மொத்த எண்ணிக்கை 711 ஆகும். 29 வெளிநாட்டு பயிற்சியாளர்களும் குழுவில் இடம் பெற்றுள்ளனர். 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் உலகச் சாம்பியனான ஒரே ஆசிய வீராங்கனை ஜிங் ஸெட்டோ முதலில் சீனக் குழுவில் இடம் பெறவில்லை என சொல்லப்பட்டது. அதிகமான விளம்பரங்களில் அவர் நடித்ததால், குழுவில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் பரவியது.  ஆனால் அவரும் தற்போது சீனக் குழுவில் இடம் பெற்றுள்ளார்.

சீனக் குழுவில் இடம் பெற்றுள்ள இளவயது உறுப்பினர் 14 வயது நீச்சல் வீராங்கனையான ஐ யான்ஹன், இவர் 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில்  பங்கேற்கிறார். 39 வயது நிரம்பிய சென் யிங், குழுவில் அதிக வயது நிரம்பியவர். ஒலிம்பிக்கில் 5 தங்கம் வென்றுள்ள ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சூ காய், காயம் காரணமாக சீனக் குழுவில் இடம் பெறவில்லை

http://www.vikatan.com/news/sports/66375-china-to-send-416-athletes-to-rio-2016.art

Link to comment
Share on other sites

ரியோ ஒலிம்பிக்: ரஷிய முறையீட்டை தள்ளுபடி செய்த விளையாட்டு தீர்ப்பாயம்

160718134255_russia_doping_640x360_ap_no

 

ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியதன் விளைவாக ரஷிய தடகள வீரர்கள் விளையாட்டு மைதானங்களில் பங்கேற்க உள்ள தடையை எதிர்த்து ரஷியா செய்த முறையீட்டை சுவிட்ஸர்லாந்தில் உள்ள விளையாட்டுக்கான மத்திய தீர்ப்பாயம் தள்ளுபடி செய்துள்ளது.

சர்வதேச தடகள சங்கங்களின் கூட்டமைப்பின் விதிமுறைகளின்படி, ரஷிய வீரர்கள் அடுத்த மாதம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி இல்லை என கூறியுள்ளது.

தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவு சட்டப்படியாக கட்டுப்படுத்தாது என்று ரஷிய விளையாட்டுத் துறை அமைச்சர் விட்டலி முட்கோ தெரிவித்துள்ளார்.

160609085502_mutko_russia_thinking_640x3

 

 விட்டலி முட்கோ

மேலும், சர்வதேச தடகள சங்கங்களின் கூட்டமைப்பை முற்றிலும் ஊழல் மிகுந்தது என்றும் அழைத்துள்ளார்.

ரஷிய வீரர்கள் மீதான கூட்டு தண்டனைக்கு தன்னுடைய கண்டனங்களை பதிவு செய்துள்ள விட்டலி முட்கோ, தற்போது நிலையை ரஷிய

சுவிஸ் மத்திய நீதிமன்றத்தில் இன்னும் ரஷியா முறையீடு செய்யலாம்.

இந்த நிலையில், மற்ற போட்டிகளில் ஊக்க மருந்து தொடர்பான குற்றச்சாட்டு காரணமாக, ஒட்டு மொத்த ரஷிய வீரர்களை ரியோ போட்டிகளிலிருந்து தடை செய்ய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பரிசீலித்து வருகிறது.

http://www.bbc.com/tamil/global/2016/07/160721_russia_dopping

Link to comment
Share on other sites

ரஷ்யா மீதான நடவடிக்கை: உசைன் போல்ட் வரவேற்பு

160702084707_usain_bolt_of_jamaica_640x3

 

ரஷ்ய தடகள வீரர்களுக்கு எதிரான ஊக்கமருந்து பயன்பாடு குறித்த சர்ச்சையில், ரஷ்யாவின் முறையீட்டை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்திருக்கும் நிலையில், ரஷ்ய தடகள வீரர், வீராங்கனைகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இரண்டு முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற போல்வால்ட் வீராங்கனை யெலனா இசின்பயெவா, தடகள விளையாட்டுக்கு அதிகாரிகள் இறுதி அஞ்சலி நடத்தியிருப்பதற்காக நன்றி தெரிவிப்பதாக கேலியாகத் தெரிவித்துள்ளார். இதில் பெரும் அரசியல் உள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த முடிவு, மிகவும் சோகமானது என்றும், சூழ்நிலை ஆரோக்கியமற்றது என்றும் தடை தாண்டும் சாம்பியன் செர்ஜி சுபென்கோய் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், உலகின் அதிவேக வீரரான உசைன்போல்ட், இந்தத் தடை நடவடிக்கை கடுமையான செய்தியை அனுப்பும் என்றும், பல பேருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/global/2016/07/160721_russia_athelets

Link to comment
Share on other sites

ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் உசேன் போல்ட்!

மைக்காவில் நடந்த தடகள போட்டியின் போது, தசைப்பிடிப்பு காரணமாக ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் அவதிப்பட்டார். இதையடுத்து  ஜெர்மனியில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இதனால் ஒலிம்பிக்கில் உசேன் போல்ட் கலந்து கொள்வதில் சந்தேகம் இருந்தது. எனினும் லண்டன் டயமண்ட் லீக்கில் பங்கேற்று ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவேன் என உசேன்  அறிவித்திருந்தார்.

usain.jpg

ண்டன் ஒலிம்பிக் மைதானத்தில்  டயமண்ட் தடகளப் போட்டி நேற்று தொடங்கியது. இதில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்,  உசேன் போல்ட் 19.89 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். கடந்த 2009ம் ஆண்டு, 200 மீட்டர் ஓட்டத்தை 19.19 வினாடிகளில் கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பனமா வீரர் அலான்சோ எட்வர்ட்,  20.04 வினாடிகளில் இலக்கை கடந்து 2வது இடத்தையும், காமன்வெல்த் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றிருந்த பிரிட்டன் வீரர் ஆடம் ஜெமிலி, 20.07 வினாடிகளில் 3வது இடத்தையும் பிடித்தனர்.

ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றாலும், ''இன்னும் முழுமையான ஃபார்மில் நான் இல்லை . கடினமாக உழைக்க வேண்டியது இருக்கிறது. எனினும் இந்த வெற்றி நம்பிக்கையை அளித்திருக்கிறது'' என உசேன் போல்ட் தெரிவித்துள்ளார்.

தற்போது 29வயது நிரம்பிய உசேன் போல்ட், பெய்ஜிங் மற்றும் லண்டன் ஒலிம்பிக்கில் 100 மற்றும் 200 ஓட்டப்பந்தயத்திலும்,  ரீலே உள்பட 6 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். ரியோவிலும் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மகளிர் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில், அமெரிக்க வீராங்கனை கென்னி ஹாரிசன் 12.20 வினாடிகளில் இலக்கை கடந்து 28 ஆண்டு கால உலக சாதனையை முறியடித்தார்.இதற்கு முன் கடந்த 1988ம் ஆண்டு, பல்கேரிய வீராங்கனை யார்டங்கா டோங்கோவா,  12.21 வினாடிகளில் இலக்கை கடந்ததே 200 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையாக இருந்தது.

http://www.vikatan.com/news/sports/66438-usain-bolt-eases-to-victory.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ரஷிய தடகள வீரர், வீராங்கனைகள் ஊக்க மருந்தில் சிக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்நாட்டு அரசே இதற்கு அனுமதி அளித்து இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதைத் தொடர்ந்து ரஷிய தடகள வீரர், வீராங்கனைகள் 68 பேர் பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை நீக்கக்கோரி தாக்கல் செய்த அப்பீலையும் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.இந்த ஊக்க மருந்து விவகாரத்தில் ஒட்டு மொத்த ரஷிய வீரர், வீராங்கனைகளுக்கும் தடை விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஒ.சி) செயற்குழு கூட்டம் நாளை நடக்கிறது. இந்த கூட்டத்தில் ரஷியாவுக்கு தடை விதிப்பது பற்றி முடிவு செய்யப்படும்.

ரஷிய தடகள வீரர், வீராங்கனைகள் ஊக்க மருந்தில் சிக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்நாட்டு அரசே இதற்கு அனுமதி அளித்து இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதைத் தொடர்ந்து ரஷிய தடகள வீரர், வீராங்கனைகள் 68 பேர் பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை நீக்கக்கோரி தாக்கல் செய்த அப்பீலையும் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.இந்த ஊக்க மருந்து விவகாரத்தில் ஒட்டு மொத்த ரஷிய வீரர், வீராங்கனைகளுக்கும் தடை விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஒ.சி) செயற்குழு கூட்டம் நாளை நடக்கிறது. இந்த கூட்டத்தில் ரஷியாவுக்கு தடை விதிப்பது பற்றி முடிவு செய்யப்படும்.

   

இதற்கிடையே பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷியாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று இங்கிலாந்து ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் ஆடம் பென் ஹில்லி வலியுறுத்தி உள்ளார்.அவர் கூறும்போது, ஊக்க மருந்தில் சிக்கியவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். இதனால் ரஷியாவுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்றார். ஆடம் பென் ஹில்லி இங்கிலாந்துக்கான ஐ.ஒ.சி.யின் உறுப்பினர் ஆவார்.அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஜப்பான் ஆகியவையும் ரஷியாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தி இருந்தன.உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்டும் இதே கோரிக்கையை வலியுறுத்தி இருந்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=162080&category=WorldNews&language=tamil

Link to comment
Share on other sites

ஒலிம்பிக் போட்டியை காண சச்சினுக்கு அழைப்பு

 

 
சச்சின் டெண்டுல்கர் | கோப்புப் படம்: ஏ.பி.
சச்சின் டெண்டுல்கர் | கோப்புப் படம்: ஏ.பி.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான நல்லெண்ண தூதராக இந்திய ஒலிம்பிக் சங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நியமித்தது.

இதைத்தொடர்ந்து அவர் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள உள்ள மல்யுத்த அணியை சந்தித்து வாழ்த்தும் தெரிவித்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் வெளியானது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியை நேரில் காண வருமாறு சர்வதேச ஒலிம்பிக் சங்கம் சச்சினுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

உலகில் உள்ள முக்கியமான பிரமுகர்களுக்கான அழைப்பின் பேரில் சச்சினை, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாஹ் அழைத்துள்ளார். இந்த அழைப்பை சச்சின் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 2-ம் தேதி ரியோ புறப்படுகிறார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரியோ செல்லும் சச்சின், ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகளை சந்தித்து வாழ்த்து கூறவும் உள்ளார். ஒலிம்பிக் போட்டியை சச்சின் நேரில் பார்வையிட செல்வது இதுவே முதன்முறையாகும்.

இதற்கிடையே சச்சின் சமீபத்தில் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பு போட்டுள்ளார். ஒலிம்பிக் போட்டி நடைபெறும் ரியோ டி ஜெனிரோ நகரில் தற்போது ஜிகா வைரஸ் தாக்குதல் அபாயம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/ஒலிம்பிக்-போட்டியை-காண-சச்சினுக்கு-அழைப்பு/article8889838.ece

Link to comment
Share on other sites

ரியோ ஒலிம்பிக்கில் தாயும் மகனும்!...சுவராஸ்யத்தைக் காண காத்திருக்கும் ரசிகர்கள்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் தாயும் மகனும் ஒன்றாக பங்கேற்கும் நிகழ்வு அரங்கேற இருப்பது,  பார்வையாளர்களை சுவராஸ்யத்திற்குள்ளாக்கியுள்ளது. ஜார்ஜியா வீராங்கனை நினோ, தனது மகனுடன் பங்கேற்கிறார்.

ris.jpg

வரும் ஆகஸ்ட் 5ம் தேதி ரியோடி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டித் தொடங்குகிறது.  இந்த போட்டியில் துப்பாக்கி சுடுதல் பந்தயத்தில் ஜார்ஜியா வீராங்கனை 47 வயதான நினோ சலுக்வாட்சே பங்கேற்கிறார். கடந்த 1988–ம் ஆண்டு இவர் சியோலில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் சோவியத் யூனியன் சார்பில் பங்கேற்று பெண்களுக்கான 25 மீட்டர் ஸ்போட்டிங் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கமும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்று சாதனை படைத்தவர். அப்போது நினோவின் வயது 19.

தற்போது சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த ஜார்ஜியா சார்பில் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். இந்த நிலையில் ரியோ ஓலிம்பிக்கில் 8வது முறையாக நினோ பங்கேற்கிறார். இதில் இன்னொரு அரிய நிகழ்வாக அவரது மகன் 18 வயது டிசாட்னேவும் தாயுடன் சேர்ந்து 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

 

இது ஒரு ஆச்சர்யமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. நினோ இது குறித்து கூறுகையில், ''ஒரே ஒலிம்பிக்கில் நானும் எனது மகனும் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்களால் முடிந்தளவு திறமையை வெளிப்படுத்துவோம். எனது மகனின் ரசிகன் நான்'' என்றார். டிசாட்னே கூறுகையில், ''எனது முதலாவது ஒலிம்பிக் போட்டி இது. அதுவும் எனது  தாயுடன் இணைந்து போட்டியில் பங்கேற்பது இரட்டிப்பு மகிழ்ச்சி'' என்கிறார். 

http://www.vikatan.com/news/sports/66456-mom-and-son-first-olympics-together.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பிரேசிலின் Guarulhos நகரில் வைத்து ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் சென்ற நபரிடம் இருந்து தீபத்தை பறிக்க முயன்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.பிரேசிலின் சாவோ பாவ்லோ மாகாணத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள Guarulhos நகரில் ஒலிம்பிக் தீபம் கடந்து சென்றபோது பார்வையாளர்கள் வரிசையில் நின்ற நபர் ஒருவர் திடீரென்று குதித்து வந்து அந்த தீபத்தை பறிக்க முயன்றுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த கூட்டம் சில நிமிடங்கள் ஸ்தம்பித்து நின்றது. இதனிடையே பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த தேசிய பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த நபரை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்து ஒலிம்பிக் தீபத்தை திரும்ப பெற்றனர்.மட்டுமின்றி அவரை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேசிலின் Guarulhos நகரில் வைத்து ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் சென்ற நபரிடம் இருந்து தீபத்தை பறிக்க முயன்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.பிரேசிலின் சாவோ பாவ்லோ மாகாணத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள Guarulhos நகரில் ஒலிம்பிக் தீபம் கடந்து சென்றபோது பார்வையாளர்கள் வரிசையில் நின்ற நபர் ஒருவர் திடீரென்று குதித்து வந்து அந்த தீபத்தை பறிக்க முயன்றுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த கூட்டம் சில நிமிடங்கள் ஸ்தம்பித்து நின்றது. இதனிடையே பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த தேசிய பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த நபரை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்து ஒலிம்பிக் தீபத்தை திரும்ப பெற்றனர்.மட்டுமின்றி அவரை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

   

தீபத்தை பறிக்கும் முன்னர் அந்த நபர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பெண் பொலிஸார் ஒருவரை தலையில் தாக்கியதாகவும் கூறப்படுகிறது,அந்த நபரை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்திய பின்னர் ஒலிம்பிக் தீபமும் ஏந்தியுள்ள பேரணி தொடர்ந்து நடைபெற்றது.ஒலிம்பிக் தீபம் ஏந்திய பேரணி துவங்கிய நாளில் இருந்தே பல்வேறு குழப்பங்களும் விவாதங்களையும் ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.கடந்த ஜூன் மாதம் இந்த பேரணி நடைபெற்ற Manaus பகுதியில் வைத்து சிறுத்தை ஒன்றை ராணுவ அதிகாரி ஒருவர் சுட்டு வீழ்த்தினார்.

கூண்டில் இருந்து தப்பிய சிறுத்தையை கட்டுப்பாட்டில் கொண்டுவர விலங்கியல் மருத்துவர்களால் முடியாமல் போனதை அடுத்தே ஒலிம்பிக் தீபத்திற்கு பாதுகாப்பு வழங்கி வந்த ராணுவத்தினர் நடவடிக்கை எடுக்க நேர்ந்தது.இந்த ஆண்டின் பேரணியானது கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி பாரம்பரியம் மிக்க கிரேக்கத்தின் ஒலிம்பியா பகுதியில் இருந்து துவங்கியது.பின்னர் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பிரேசில் நாட்டின் 300 நகரங்களை சுற்றி வந்து வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி ரியோ நகரில் வந்து சேரும். பிரேசிலின் சமூகவலைத்தள பயன்பாட்டாளர்கள் இந்த தீப பேரணியை சாபத்தின் தீபம் என வசைபாடி வருவது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=162162&category=WorldNews&language=tamil

Link to comment
Share on other sites

பிரேசிலில் ஒலிம்பிக் தீபத்தை திருட முயற்சி

160715141213_olympic_torch_640x360_getty

 

சௌம் பௌலோ மாநிலம் வழியாக கடந்து செல்லுகிறபோது, ஒலிம்பிக் தீபத்தை திருட முயன்ற ஒருவரை பிரேசில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தடுப்பு வேலியை உடைத்து வந்து, தீபத்தை ஏந்தி ஓடி வந்தவரை அடைய முயன்ற அவர், பாதுகாப்பு பணியாளரால் தடுத்து அடக்கப்படுவது காணொளி காட்சியாக வெளியிடப்பட்டுள்ளது.

அவரை மடக்கி பிடித்து அப்புறப்படுத்திய பிறகு, ஒலிம்பிக் தீப ஓட்டம் தொடர்ந்தது.

இந்த ஒலிம்பிக் தீபமானது, ஒலிம்பிக் விளையாட்டுக்கள் தொடங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக, ஆகஸ்ட் மாதம் நான்காம் நாள் ரியோ டி ஜெனிரோவை வந்தடையும்.

http://www.bbc.com/tamil/sport/2016/07/160724_olyumpic_torch

Link to comment
Share on other sites

IOC will not impose blanket ban on Russia for Rio Olympics

 
A man walks out of the Russian Olympic Committee headquarters building in Moscow
View photos
 
A man walks out of the Russian Olympic Committee headquarters building in Moscow, Russia, July 20, 2016. REUTERS/Sergei Karpukhin

By Karolos Grohmann

(Reuters) - The International Olympic Committee (IOC) will not impose a blanket ban on Russia for next month's Rio Olympics over the nation's doping record but will leave decisions on individual athletes' participation to the relevant sports federations.

The IOC's announcement follows the World Anti-Doping Agency's (WADA) call for a Rio ban in response to the independent McLaren report that found evidence of widespread state-sponsored doping by Russian athletes at the 2014 Winter Olympics in Sochi.

The world governing body's ruling 15-member executive board met on Sunday via teleconference -- with the Rio Games' Aug. 5 opening ceremony less than two weeks away -- and decided that responsibility for ruling on the eligibility of Russians remains with the international federations.

While calls had been growing for a blanket ban after the damning evidence in the McLaren report, the IOC said that Russians would be able to participate if cleared by their respective international federations.

"Under these exceptional circumstances, Russian athletes in any of the 28 Olympic summer sports have to assume the consequences of what amounts to a collective responsibility in order to protect the credibility of the Olympic competitions, and the 'presumption of innocence' cannot be applied to them," the IOC said.

However, the IOC added that the rules of natural justice mean that each athlete must be given the opportunity to show that such collective responsibility is not applicable in his or her individual case.

SPOTLESS RECORD REQUIRED

For individuals to be excluded from the "collective responsibility" they must have a spotless international records on drug testing, the IOC said, adding that no athlete who has been sanctioned for doping will be eligible to compete in Rio.

That would include middle-distance runner Yulia Stepanova, the whistleblower and former drug cheat whose initial evidence led to one of the biggest doping scandals in decades.

The report produced by Canadian law professor Richard McLaren described extensive doping and cover-ups across a series of summer and winter Olympic sports and particularly at the Sochi Winter Olympics hosted by Russia in 2014.

The IOC said this week that it would not organise or give patronage to any sports event in Russia, including the planned 2019 European Games, and that no member of the Russian Sports Ministry implicated in the report would be accredited for Rio.

It had also ordered the immediate re-testing of all Russian athletes from the Sochi Olympics and instructed international winter sports federations to halt preparations for major events in Russia.

Since then a series of international federations, anti-doping agencies and athletes have called for a blanket ban, though some have said they are against punishing innocent athletes.

"It would be quite difficult for us to think we should ban an entire team, which will include some cyclists who are not implicated in any of these stories we've been hearing," said Brian Cookson, president of the International Cycling Union.

"We're going to have look at it case by case, rider by rider and team by team. At the end of the day, Russians are not the only sportsmen or women who have been found doping."

Russian officials and government officers have said the doping allegations are part of a Western conspiracy against their country.

Russian President Vladimir Putin had warned that the affair could split the Olympic movement, bringing echoes of the 1980s. The United States led a political boycott of the Moscow Games of 1980 and the Soviet Union led an Eastern Bloc boycott of the Los Angeles Games four years later.

https://ca.news.yahoo.com/ioc-set-decide-russias-rio-fate-sunday-102644417--spt.html

Link to comment
Share on other sites

ஊக்க மருந்து சோதனையில் தோல்வி: மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் ஒலிம்பிக் பங்கேற்பு சிக்கல்

 
 
நர்சிங் யாதவ்.| படம்: சந்தீப் சக்சேனா.
நர்சிங் யாதவ்.| படம்: சந்தீப் சக்சேனா.

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் 74 கிலோ உடல் எடைப்பிரிவு மல்யுத்தத்தில் கலந்து கொண்டு பெருமை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீரர் நர்சிங் யாதவ் ஊக்க மருந்து சோதனையில் தோல்விகண்டார்.

அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடைபெற்ற ஃப்ரீஸ்டைல் மல்யுத்த பிரிவில் வெண்கலம் வென்ற நர்சிங் யாதவ், ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே கூடியது.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் டெல்லியில் உள்ள ஊக்கமருந்து தடுப்பு இயக்ககத்தில் ஆஜரான நர்சிங் யாதவ் ரத்த மாதிரி சோதனையில், அதாவது பி-சாம்பிள் சோதனையில் தடைசெய்யப்பட்ட ஸ்டிராய்ட் மருந்து இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இவர் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வது சிக்கலாகியுள்ளது.

இவரது பி-சாம்பிள் சோதனை முடிவுகள் திறக்கப்படும் போது நர்சிங் யாதவ் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க மற்றொரு வீரர் சுஷில் குமாருடன் நீண்ட சட்டப்போராட்டம் நடத்திய நர்சிங் யாதவ் தற்போது ஊக்க மருந்து ஸ்டிராய்ட் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பது சிக்கலாகியுள்ளது.

ஊக்க மருந்து எடுத்துக் கொண்ட 67 ரஷ்ய தடகள வீரர்கள் ஒலிம்பிக் பங்கேற்புக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/ஊக்க-மருந்து-சோதனையில்-தோல்வி-மல்யுத்த-வீரர்-நர்சிங்-யாதவ்-ஒலிம்பிக்-பங்கேற்பு-சிக்கல்/article8893860.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஒலிம்பிக் போட்டிகளில் ரஷிய வீரர்களுக்கு ஒட்டு மொத்த தடையில்லை

 

அரசின் ஆதரவுடன், ரஷிய தடகள வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதியான நிலையில், ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ஒட்டுமொத்த ரஷ்ய அணிக்கும் தடை விதிக்கப் போவதில்லை என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவெடுத்துள்ளது.

160616124816_flags_doping_live_624x415_p

தனித்தனி விளையாட்டுக்களுக்கான சர்வதேச அமைப்புக்கள், வீர்ர், வீராங்கனைகளின் ஊக்கமருந்து பயன்பாடு தொடர்பான ஆய்வுகளை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது.

போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படும் எந்த ஒரு ரஷ்ய வீர்ரும், கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது..

இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்ட முடிவல்ல என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் ஊக்க மருந்து குற்றச்சாட்டுக்கு உள்ளான ரஷிய வீரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த முடிவை ரஷிய விளையாட்டு அமைச்சர் விடலி முட்கோ வரவேற்றுள்ளார்

http://www.bbc.com/tamil/global/2016/07/160724_russia_ioc

Link to comment
Share on other sites

ரியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஆஸ்திரேலிய அணியினர் தங்க மறுப்பு

140128210002_roi_olympic_950x633_afp_noc

 

ரியோ டி ஜெனிரோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தங்கும் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கள் நாட்டு வீரர்கள் நுழையமாட்டார்கள் என ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

போட்டியாளர்கள் அங்கு வசிக்க முடியாத சூழல் இருப்பதாக காரணம் சொல்லப்பட்டுள்ளது.

151102171635_australia_flag_640x360_isto 

அடைப்பு ஏற்பட்ட கழிவறைகள், வெளியே தெரியும் வயர்கள், கசியும் குழாய்கள் மற்றும் விளக்கு வசதி இல்லாத படிகள் ஆகிய பிரச்சினைகள் இருப்பதாக ஆஸ்திரேலிய குழுவின் தலைவர் கிட்டி சில்லர் தெரிவித்துள்ளார்.

அங்கு கூடுதல் பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணியாளர்களின் வேலை நடந்துவரும் போதிலும், இந்த பிரச்சினைகள் எப்போது தீர்த்து வைக்கப்படும் என்பதை சொல்ல முடியாது என்று அவர் கூறியுள்ளார்.,

தற்போது, ஆஸ்திரேலிய அணியானது அருகே உள்ள விடுதிகளில் தங்கி உள்ளது.

தங்கள் அணியை போலவே பிரிட்டிஷ் மற்றும் நியுசிலாந்து அணியினரும் இதே பிரச்சினையை சந்தித்து வருவதாக சில்லர் கூறியுள்ளார்.

http://www.bbc.com/tamil/sport/2016/07/160724_australia_olympic_village

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.