Jump to content

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 வது ஆண்டு நிறைவு விழா தொடர்பான செய்திகள்


Recommended Posts

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 வது ஆண்டு நிறைவு விழா தொடர்பான செய்திகள்

jaffna central

  10389148_836062033096378_915078645175883

யாழ்ப்பாணம்.மத்திய கல்லூரியின் .இருநூறாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு வடமாகாணப்பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட சிறுவர் நாடகப் போட்டியின் நிறைவுப் போட்டி கல்லூரியின் றொமைன் குக் மண்டபத்தில் நாடகப் போட்டி இணைப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் இன்று இடமபெற்றது. நிகழ்விற்க்கு பிரதம விருந்தினராக நாடகவியலாளர் குழந்தை ம.சண்முகலிங்கம் கலந்து கொண்டார்
சிறுவர் நாடக போட்டியில் முதலாவது இடத்தினைமகாஜனக் கல்லூரி தெல்லிப்பளை பெற்று வடமாகாண சம்பியனானது. இரண்டாவது இடத்தினை யாழ் இந்து மகளீர் ஆரம்பப் பாடசாலையும் மூன்றாமிடத்தினை புனித ஜோன் பொஸ்கோ பாடசாலையும் நான்காமிடத்தினை மருதனார் மடம் இராமநாதன் கல்லூரியும் ஜந்தாமிடத்தினை யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியும் பெற்றுக்கொண்டது.
போட்டிக்கான நடுவர்களாக வலிகாமம் கல்விவலய முன்பள்ளி உதவிக்கல்விப்பணிப்பாளர் ச.கிருபாணந்தன் புத்தாக்க அரங்க இயக்கத்தின் நிர்வாக பணிப்பாளரும் மானிப்பாய் இந்துக்கல்லூரி நாடகத்துறை ஆசிரியருமாகிய எஸ்.ரி.அருள்குமரன் சண்டிலிப்பாய் பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தர்மினி ரஜீவன் புத்தாக்க அரங்க இயக்கத்தின் ஆற்றுகையாளர் ஜெயரூபன் ஆகயோா் கலந்து கொணடார்கள் இப்போட்டிக்கு பார்வையாளர்கள அனுமதிக்கப்பட்டார்கள் நாடக முடிவுகள் தொடர்பாக பார்வையாளர் அனைவரிடமும் ஒருமித்த முடிவு காணப்பட்டது.நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.

நாடக மன்றப் பொறுப்பாசிரியர் இருநூறாவது ஆண்டு நாடக தலைவர் சிறுவர் நாடகப்போட்டி இணைப்பாளர் எஸ்.ரி.குமரன்

13782060_1114145555288023_81539619028232

13731651_1114145591954686_21418898142505

13709989_1114145605288018_83823767867087

13690868_1114145615288017_69243258278173

13707644_1114145698621342_18630495272876

13707522_1114145715288007_11252881426616

13781960_1114145741954671_72290550870540

13692459_1114145778621334_89742177758884

13700150_1114145865287992_65714302665866

13775400_1114145901954655_10142850561478

https://www.facebook.com/Jaffna-Oldboys-Association-of-Jaffna-Central-College-836056216430293/

தொடரும்

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் 20.07.2016 அன்று ''ராவணா ஏவியேஷன்'' நிறுவன ஸ்தாபகரான விமானி கப்டன் கர்ஷ கோவிந்த கொரலராச்சியினால் ''விமானத்துறை கழகம்'' (Aeronautical club) கழகம் நிறுவன ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கையிலுள்ள தமிழ் பாடசாலைகளில் யாழ் மத்திய கல்லூரியிலேயே விமானத்துறைக்கழகம் முதன்முதல் ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கழகத்தின் ஊடாக எமது மாணவர்கள் விமானத்துறை, விமானப்பொறியியல் துறை, விமான நிலைய முகாமைத்துவம் போன்ற கற்கைநெறிகளுக்குரிய ஆலோசனைகளையும் வாய்ப்புகளையும் பெற்றுக்கொள்ள முடியும்

https://scontent-frt3-1.xx.fbcdn.net/v/t1.0-9/13754466_1114746538561258_6070968018315136471_n.jpg?oh=c33a1cd1f412d78d562daf7e4337f6ff&oe=581E908E

13726783_1114746661894579_85225432271272

13700071_1114746725227906_26491034289261

13726773_1114746761894569_12204689899335

 

Link to comment
Share on other sites

மத்தியின் மைந்தர்களே,
எமது வேண்டுகோளிற்கு இணங்க யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் 27ம் திகதி ஆவணி மாதம் இரத்தம் வழங்குவதற்காக ஒதுக்கி தந்துள்ளார்கள். குறைந்தது 200 பேராவது பங்களிப்பு செய்யவேண்டும். எனவே மத்தியின் மைந்தர்களின் ஒத்துளைப்பை நாடுகின்றோம். 200 பேருக்கு மேலே பங்களிப்பீர்களாயின் வரவேற்கதக்கது. ஆனால் இரத்த வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். ஆதலால் உங்கள் பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்து உங்கள் ஆதரவை தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
ந.தமிழ் அழகன்
தலைவர்- JOBA

13770337_10153882435213823_7631917776137

Link to comment
Share on other sites

  • 1 month later...
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு விழா
 

யாழ். மத்­திய கல்­லூ­ரியின் 200ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு இடம்­பெறும் இறுதி நிகழ்­வுகள் இன்று தொடக்கம் எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை வரை­யான ஐந்­து­ நாட்கள் மிகக் கோலா­க­ல­மாக கல்­லூரி வளா­கங்­களில் இடம்­பெ­ற­வுள்­ளன. அதற்­க­மைய முதல் நாளான இன்­றைய தினம் காலை 8 மணிக்கு ஆரம்ப நிகழ்வு இடம்­பெ­ற­வுள்­ளது.

இந்­நி­கழ்வில் பிர­தம விருந்­தி­ன­ராக வடக்­கு ­மா­காண கல்­வித்­தி­ணைக்­க­ளத்தின் மாணவர் அபி­விருத்தி உதவிக் கல்விப் பணிப்­பாளர் க.சத்­தி­ய­பா­லனும் மாலை 4 மணிக்கு ஆரம்­ப­மாகும் நிகழ்வில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்­தாவும் கலந்து சிறப்­பிக்­க­வுள்­ளனர்.

இரண்டாம் நாளான நாளைய தினம் மாலை 5 மணிக்கு ஆரம்­ப­மாகும் நிகழ்வில் பிர­தம விருந்­தி­ன­ராக வடக்­கு ­மா­காண கல்­வி­ய­மைச்சின் செய­லாளர் ஆர்.ரவீந்­தி­ரனும் மூன்றாம் நாளான புதன்­கிழமை மாலை 4 மணிக்கு ஆரம்­ப­மாகும் நிகழ்வில் பிர­தம விருந்­தி­ன­ராக வட­ மா­காண கல்வி அமைச்சர் த.குரு­கு­ல­ரா­ஜாவும் நான்காம் நாளான வியா­ழக்­கி­ழமை மாலை 4 மணிக்கு ஆரம்­ப­மாகும் நிகழ்வில் இரா­ஜாங்க கல்வி அமைச்சர் வீ. இராதா­கி­ருஷ்­ணனும் கலந்து சிறப்­பிக்­க­வுள்­ளனர்.

இறுதி நாளான 9ஆம் திகதி வெள்­ளிக்­கிழமை காலை 11 மணிக்கு ஆரம்­ப­மாகும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறி-சேன பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிட-த் த-க்கது.

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=05/09/2016

 

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

article_1473412136-DSC_0189.JPG

article_1473412148-ttt%20%281%29.JPG

article_1473412158-ttt%20%285%29.JPG

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.