Jump to content

சிலை சிலையாம் காரணமாம் - 1: கடல் தாண்டி விரியும் கடத்தல் வலை


Recommended Posts

சிலை சிலையாம் காரணமாம் - 1: கடல் தாண்டி விரியும் கடத்தல் வலை

 

 
சுபாஷ் கபூரின் நியூயார்க் ஆர்ட் கேலரி சிலைகள்
சுபாஷ் கபூரின் நியூயார்க் ஆர்ட் கேலரி சிலைகள்

2011 அக்டோபர் 30... பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் பன் னாட்டு விமான நிலையம். இன்னும் சற்று நேரத்தில் அங்கிருந்து நியூ யார்க் புறப்படுவதற்காக, முதலா வது ஓடுதளத்தில் தன்னை ஆயத் தப்படுத்திக் கொண்டிருக்கிறது யுனை டெட் ஏர்லைன்ஸ் விமானம். அதில் பயணிக்கக் காத்திருக்கும் பயணி களுக்கு இமிக்ரேஷன் சடங்குகளை முடிப்பதற்காக அவசரகதியில் இயங் கிக் கொண்டிருக்கிறார்கள் விமான நிலைய அதிகாரிகள்.

ஆண்டுக்கணக்கில் கூண்டுக்குள் சிக்க வைக்கப் போகும் ஆபத்து தன்னை நெருங்கிக் கொண்டிருப்பது தெரியா மல், 60 வயது மதிக்கத்தக்க அந்தப் பெரியவர் கைப்பேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருக்கிறார். திடீரென பரபரப்பாகிறது விமான நிலையம். வந்திருப்பது சர்வதேச போலீஸான ‘இன்டர்போல்’ என்றதும் வணக்கம் வைத்து வழிவிடுகிறார்கள் விமான நிலைய அதிகாரிகள். அடுத்த சில நிமிடங் களில் ‘இன்டர்போல்’ வாகனத்தில் இறுக்கமான முகத்துடன் பயணித் துக் கொண்டிருந்தார் சுபாஷ் சந்திர கபூர் என்ற அந்தப் பெரியவர்.

சுபாஷ் சந்திர கபூர் - சர்வதேச அளவில் செயல்படும் சிலைக் கடத் தல் மாஃபியாக்களின் அதி முக்கியப் புள்ளி என்றும்; கடந்த 5 ஆண்டுகளாக சென்னை புழல் சிறையில் இருக்கும் கபூர், கடந்த 35 ஆண்டுகளில் இந்தியா வில் இருந்து சுமார் 50 ஆயிரம் கலைப் பொக்கிஷங்களை வெளிநாடுகளுக்குக் கடத்தியிருப்பதாகவும் சொல்கிறது ‘இன்டர்போல்’. இவரால் கடத்தி விற்கப் பட்ட இந்திய கலைப் பொருட்கள் உலகின் அத்தனை பிரபல மியூசியங்களிலும் இப்போது காட்சியில் உள்ளன. கபூர் சரித்திரத்தைப் புரட்டுவதற்கு முன்பாக, இந்தியாவில் இருந்து பழம் சிலைகள் உள்ளிட்ட கலை பொக்கிஷங்கள் கடத்தப்படுவதன் பின்னணியைப் பார்க்கலாம்.

ஆங்கிலேயர்கள் நமது செல்வங் களைக் கொள்ளையடித்துச் சென்றுவிட் டதாக காலம்காலமாக பொதுப்படை பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால், இந்திய கலைச் செல்வங்களையும் தொன்மையான புராதனச் சின்னங் களையும் வெளிநாடுகளுக்குக் கடத்து வதையும் சேதப்படுத்தப்படுவதையும் தடுக்கும் நோக்கில் கடுமையான சட்டங் களை அமல்படுத்தியது ஆங்கிலேய அரசுதான்!

இந்திய பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு 1784-ல் ‘ஆசியவியல் கழகம்’ ஏற்படுத்தப்பட் டது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் மொழியியல் அறிஞருமான சர் வில்லியம் ஜோன்ஸ் தலைமையில் செயல்பட்ட இந்த அமைப்பு, இந்தியாவில் உள்ள பண்பாட்டு மரபுச் சின்னங்களைப் பாது காத்தல், அழிந்துபோன தொன்மை நகரங் கள்குறித்த வரலாற்றை மீட்டெடுத் தல், நல்ல நிலையில் உள்ள வர லாற்று எச்சங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தியது.

இந்தியா முழுமையும் நில அளவை செய்து எல்லைகள் வகுத்தவர் சர்வேயர் ஜெனரல் லெப்டினென்ட் கர்னல் மெக்கன்ஸி. நில அளவை பணிக்குச் சென்ற இடங்களில் இருந்த புராதனச் சின்னங்கள் உள்ளிட்டவைகளை, தனது கைகளாலேயே ஓவியங்களாக வரைந்த மெக்கன்ஸி, 8,076 கல்வெட்டுகளையும் தொகுத்தார். இவர் வரைந்த ஓவியங்கள் மொத்தம் 2,630. இவை அரிய பொக் கிஷங்களாகப் பாதுகாக்கப்பட்டன. 1861-ல் இந்திய தலைமை ஆளுநர் அலெக்சாண்டர் கன்னிங்காம் தலைமை யில் ‘இந்திய தொல்லியல் துறை’ உரு வாக்கப்பட்டது. இதன் பிறகுதான் கோயில்கள், சிலைகள், புராதனச் சின்னங்கள் பாதுகாக்க சட்டம் வகுக்கப்பட்டன.

rock11_2921853a.jpg

தீனதயாள் வீட்டில் சோதனையிடும் போலீஸார்.

இதைத் தொடர்ந்து, 1878-ல் பிரிட்டிஷ் இந்திய அரசின் செயலாளராக இருந்த சாலிஸ்பரி பிரபு இந்திய புதையல் சட்டத்தை (Indian Treasure Trove Act) கொண்டுவந்தார். இதன்படி, பூமிக்கு அடியில் இருந்து கண்டெடுக்கும் பொருட்கள் 100 ஆண்டுகள் பழமை யானதாக இருந்தால் அது அரசுக் குச் சொந்தம். அதன் மதிப்பு 10 ரூபாய்க் குக் கீழிருந்தால் அதை நிலத்தின் உரிமையாளரே அனுபவிக்கலாம். 10 ரூபாய் மதிப்புக்கு அதிகமாக இருந் தால் அதை அரசிடம் ஒப்படைக்க வேண் டும். ஒப்படைக்கப்படும் பொருளின் மதிப் பில் நான்கில் ஒரு பங்குக்கான தொகையை நிலத்தின் உரிமை யாளருக்கும் புதையலை எடுக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளிக்கும் அரசே ஊக்கப் பரிசாக வழங்கும். பூமியில் இருந்து கிடைக் கும் பழம்பொருட்களை மக்கள் மறைத்துவிடவோ, அழித்து வேறு பொரு ளாக மாற்றிவிடவோ கூடாது என் பதற்காக இப்படியொரு வழிமுறையைக் கையாண்டது ஆங்கிலேயே அரசு.

rock1_2921854a.jpg

தீனதயாள் வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகள்

1904-ல் ‘பழங்கால நினைவுச் சின்னங் கள் பாதுகாப்புச் சட்டம்’ இயற்றப்பட் டது. இச்சட்டம், பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து தொன்மையான பழம்பொருட் களை ஏற்றுமதி செய்வதற்கும் வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் இறக்குமதி செய்வதற்கும் தடை விதித் தது. இதை மீறுவோருக்கு ரூ. 5,000 அப ராதம் (அ) 3 ஆண்டுகள் சிறை, அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்பட்டது. 1947-ல் இச்சட்டத்தை கடுமையாக்கி ‘பழம் பொருட்கள் ஏற்றுமதி கட்டுப்பாட் டுச் சட்டம்’ கொண்டுவரப்பட்டது. இதன் படி, 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த பொருட்கள் அனைத்தும் நாட்டுக் குச் சொந்தம் எனவும் தொல்லியல்துறை யின் பொது இயக்குநர் தொன்மை அல் லாத கலைப் பொருட்கள் ஏற்றுமதிக்கான உரிமம் வழங்கும் அதிகாரம் படைத்தவர் எனவும் அறிவிக்கப்பட்டது.

1950 ஜனவரி 26-ல் இந்திய அரசியல மைப்புச் சட்டம் உருவானபோது, அதன் 7-வது அட்டவணையின் பட்டியல் ஒன்று இனம் 67-ல் வரலாற்றுச் சின்னங்கள், ஆவணங்கள், பாரம்பரிய பொருட்கள், உள்ளிட்டவைகளைப் பாதுகாப்பது குறித்து சட்ட வரைவுகள் ஏற்படுத்தப் பட்டன. இதன் பிறகு 1958, 1972, 1976 என மூன்றுமுறை, பாரம்பரியக் கலை மற்றும் புராதனச் சின்னங்கள் பாதுகாப் புச் சட்டத்தில் (The Antiquities and Art Treasures Act) திருத்தங்கள் கொண்டு வரப்பட்டாலும் சிலைகள் உள்ளிட்ட தொன்மைப் பொருட்கள் கடத்தல் சம்பவங்களில் பெரிதாக யாரும் தண்டிக்கப்படவில்லை. ஏன் தெரியுமா?

சிலைக் கடத்தல் மர்மங்கள்!

தமிழக கோயில்களுக்குச் சொந்தமான சிலைகளைக் கடத்தியதாக தீனதயாள் அவரது கூட்டாளி லட்சுமி நரசிம்மன் ஆகியோரை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு (சி.ஐ.டி) போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். தீனதயாளிடம் இருந்து ஓவியங்கள், ஐம்பொன் மற்றும் கற்சிலைகள் நூற்றுக்கணக்கான பழமையான கலைப் பொருட்களும் லட்சுமி நரசிம்மனிடம் இருந்து 9 ஐம்பொன் சிலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களது கிளைகளை நோக்கி விசாரணை போய்க்கொண் டிருக்கும் நிலையில்.., சிலைக் கடத்தல் மர்மங்களை அம்பலப்படுத்துகிறது இந்தத் தொடர்.

rock111_2921852a.jpg

படங்கள்: எல்.சீனிவாசன்

- சிலைகள் பேசும்...

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-1-கடல்-தாண்டி-விரியும்-கடத்தல்-வலை/article8815158.ece?homepage=true

Link to comment
Share on other sites

சிலை சிலையாம் காரணமாம் - 2: கல்லறை திருடர்களின் கைவரிசை

 

 
கல்லறை திருடர்களின் கைவரிசை
கல்லறை திருடர்களின் கைவரிசை

நம் நாட்டு பழம்பொருட் களை வெளிநாடு களுக்குக் கடத்து வதை தடுக்கச் சட்டங்கள் இருந்தும் அதை நடைமுறைபடுத்த வேண்டிய அதிகாரத் தலைகள் சிலரும் கடத்தல் புள்ளிகளோடு கைகோத்து நிற்பதால் இன்றுவரை நம் பாரம்பரியச் சின்னங் கள் சர்வ சுதந்திரமாக கடத்தப்படுகின் றன. அதை பார்ப்பதற்கு முன்பு, பழம் கலைப் பொருட்களை பாதுகாப்பத்தில் இத் தாலியின் அ ணுகு முறையை பார்க்கலாம்.

கடத்தலில் இத்தாலி சுங்கத்துறை தலைவர்

இத்தாலி சுங்கத்துறையின் முன்னாள் தலைவர் பாஸ்கல் கேமரா. இவர் 1995-ல் சாலை விபத்தில் இறக்க, விபத்து நடந்த இடத் துக்கு விரைந்த இத்தாலி போலீஸார், பாஸ் கலின் காருக்குள் ஏராளமான போலாராய்டு போட்டோக்கள் இருந்ததைக் கண்டனர். அவற்றில் சில இத்தாலியின் ரீஜினல் மியூ சியத்தில் திருடுபோன கலைப்பொருட்களின் படங்கள். போலீஸ் விசாரணையில் பல மர்மங்களுக்கு விடை கிடைத்தன.

கிரேக்கர்களின் ஆளுமைக்குள் இருந்த இத்தாலியில் ஒயின் போன்ற மது வகைகளை ஊற்றிவைக்கும் ‘கிரேட்டர்’ எனப்படும் குடுவைகள் மிகப் பிரபலம். 2 மற்றும் 3-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த இக் குடுவைகளில் அழகிய ஓவியங்கள் தீட்டப் பட்டிருக்கும். சில குடுவைகளில் அதில் ஓவியங்களை வரைந்த ஓவியர் யூப்ரனியஸ் கையொப்பம் இட்டிருப்பார். அந்தக் குடுவை களுக்கு மதிப்பு அதிகம். அக்குடுவையின் இன்றைய உலக மார்க்கெட் விலை 10 மில்லியன் டாலர்கள்.

இத்தாலியில் பழமையான கல்லறை களை உடைத்து அதிலுள்ள பழம் பொருட் களை திருடுவதற்கு என்றே ஒரு கூட்டம் (Tomb Robbers) இருக்கிறது. இந்தத் திருடர்கள், தாங்களாகவே அகழ்வு செய்து கிரேட்டர் குடுவை களைக் கண்டு பிடிப்ப தும் உண்டு. அதன் உண்மைத் தன்மைக் காக குடுவைகளை அகழ்வு செய்வதில் இருந்து, அவற்றை சுத்தம் செய்வது வரை அனைத்தையும் படம் பிடிப்பார் கள். பாஸ்கலின் காரில் இருந்த புகைப்படங்கள் இது போன்றவைதான்.

kallarai11_2923011a.jpg

‘கிரேட்டர்’ குடுவையுடன் மெடிசி

கூரியரில் குடுவைத் துண்டுகள்

குடுவைகளை அப்படியே வெளிநாடு களுக்குக் கடத்துவது சிரமம் என்பதால் அவைகளை லாவகமாக உடைத்து, துண்டு களாக்கி கூரியர் சர்வீஸ் மூலம் எங்கு அனுப்ப வேண்டுமோ அங்கு அனுப்பி, அங்கு போனதும் மீண்டும் அந்தத் துண்டு களை எடுத்து ஒன்றாகச் சேர்த்து ஒட்டி குடுவைகளாக்கிவிடுவார்கள். இதற்கா கவே அந்தப் குடுவைகளைப் பல்வேறு கோணங்களில் திருடர்கள் படம் எடுப்பார்கள்.

இந்த வழக்கை விசாரித்தபோது, மிகப் பழமையான மார்பிள் சிலைகளும் இத்தாலி யில் இருந்து வெளிநாடுகளுக்குக் கடத்தப் படுவது தெரியவந்தது. பாஸ்கலின் கைப் பேசியில் பதிவாகியிருந்த குறிப்பிட்ட 18 எண்களை போலீஸார் தொடர்புகொண்ட போது அத்தனையும் ஒரே நபரின் பெயரில், வெவ்வேறு நாடுகளில் செயல்பாட்டில் இருந்தன. பாஸ்கல் சம்பந்தப்பட்ட மேலும் சில இடங்களில் சோதனை மேற்கொண்ட இத்தாலி போலீஸ், மேலும் நூற்றுக் கணக்கான போட்டோக்களையும் கலைப் பொருட்களையும் கைப்பற்றியது.

kallarai1_2923012a.jpg

‘கிரேட்டர்’ குடுவைகள்

பத்து மில்லியன் யூரோ அபராதம்

இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் ஜியா கோமோ மெடிசி என்ற கலைப்பொருள் டீலரை கைதுசெய்தது போலீஸ். ரோம் நீதிமன்றத்தில் நடந்த இவ் வழக்கில் 2004-ல் மெடிசிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 10 மில்லியன் யூரோ அபராதமும் விதிக்கப்பட்டது. இத்தாலி சரித்திரத்தில் மிகப் பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்ட கலைப் பொருள் கடத்தல் வழக்கு இதுதான்.

பழம் பொருட்கள் கடத்தப்படுவதையும் தனியாரால் தோண்டி எடுக்கப்படுவதையும் தடுப்பதற்காக 1992-ல் ‘கராபிநிரி ஆர்ட் ஸ்குவாடு (Carabinieri Arts Squad)’ என்ற சிறப்புப் பிரிவை இத்தாலி அரசு உருவாக்கி யது. பாஸ்கல் விவகாரத்துக்குப் பிறகு இந்த அமைப்பை மேலும் வலுவாக்கியது இத் தாலி. இப்போது 3 ஆயிரம் போலீஸாரைக் கொண்டு செயல்படுகிறது இந்த அமைப்பு.

தமிழகத்தில் 1983-ல் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. அப் போது இப்பிரிவில் 122 போலீஸார் இருந்த னர். வெளிநாடுகளுக்கு சிலைகள் கடத்தப் படும் வழக்குகளை விசாரிப்பதற்காக 1980-ல் கும்பகோணத்திலும் 1995-ல் வில்லிப்புத் தூரிலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப் பட்டன. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக 122 பேராக இருந்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் எண் ணிக்கை படிப்படியாகக் கரைந்து 27 ஆனது. அதுவும் இப்போது ஒரு ஐ.ஜி., ஒரு டி.எஸ்.பி., நான்கு இன்ஸ்பெக்டர்கள், மூன்று தலைமைக் காவலர்கள் என சுருங்கிவிட்டது.

இதிலும் ஒரு காவலர் நீண்ட நாட்களாக மருத்துவச் சிகிச்சையில் உள்ளார். டி.எஸ்.பி. முழுமையாக செயல்பட முடியாதவர். தொடர்ந்து பல வருடங்களாக மாற்று மதத் தைச் சேர்ந்தவர்களையே இங்கு டி.எஸ்.பி-க் களாக வைத்திருந்திருக்கிறார்கள். இங்கு பணியில் உள்ள இன்ஸ்பெக்டர்களிலும் இரண்டு பேர் போக்குவரத்துக் காவலில் இருந்தவர்கள். ஆகமொத்தம் ஒரு புறக் காவல் நிலையம் ரேஞ்சுக்குத்தான் தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் போலீஸின் படை பலம் இருக்கிறது. சர்வதேச அளவில் புகுந்து புறப்பட வேண்டிய இந்தப் பிரிவை முடமாக்கி வைப்பதிலும் மாபெரும் அரசியல் இருக்கிறது.

- சிலைகள் பேசும்...

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-2-கல்லறை-திருடர்களின்-கைவரிசை/article8818552.ece?homepage=true

Link to comment
Share on other sites

சிலை சிலையாம் காரணமாம் - 3: கடத்தலைக் கண்ணிவெடி வைத்து தகர்க்கும் இத்தாலி!

 
  • மீட்கப்பட்ட பாகிஸ்தான் புத்தர் பாதம்
    மீட்கப்பட்ட பாகிஸ்தான் புத்தர் பாதம்
  • மீட்கப்பட்ட பொருட்களுடன் கராபிநிரி ஸ்குவாடு
    மீட்கப்பட்ட பொருட்களுடன் கராபிநிரி ஸ்குவாடு

மெடிசி வழக்கில் உடைந்த மற் றும் நல்ல நிலை யில் இருந்த 3,800 பழம் கலைப் பொருட் கள், 4 ஆயிரம் புகைப்படங்கள், மெடிசி யின் வியாபாரத் தொடர்புகள் சம்பந்த மான 35 ஆயிரம் ஆவணங்கள் உள்ளிட் டவைகளை கைப்பற்றியது இத்தாலி போலீஸ். கடந்த 30 ஆண்டுகளில் இதுவரை இத்தாலியின் சொத்தான 7 லட்சத்து 28 ஆயிரம் பழமையான கலைப் பொருட்களைப் பல்வேறு நாடுகளில் இருந்து மீட்டுள்ளது இத்தாலி.

2009-ல் மட்டும் 39,384 பழமையான கலைப் பொருட்களையும் 19,043 இதரப் பொருட்களையும் மீட்டுள்ளார்கள். இதன் மதிப்பு 165 மில்லியன் யூரோ. இதே போல், 2008-ல் 183 மில்லியன் யூரோ மதிப்புக்கான பொருட்களையும் மீட்டுள்ளது இத்தாலி. நம்மவர்கள், பழிவாங்க நினைக் கும் போலீஸாரைத்தான் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு அனுப்புகிறார்கள். ஆனால் இத்தாலி போலீஸார், ‘கராபிநிரி ஆர்ட் ஸ்குவாடு’ பிரிவில் பணிபுரிவதை பெருமையாகக் கருதுகிறார்கள்.

கலிபோர்னியாவில் உள்ள Paul Getty மியூசியம் தனி நபருக்குச் சொந்தமானது. உலகத்தில் வெறெந்த மியூசியத்திலும் இல்லாத அரிய பொருட்கள் தனது மியூசியத் தில் இருக்க வேண்டும் என கர்வம் கொண் டவர் அந்த மியூசியத்தின் உரிமையாளர். இந்த மியூசியத்தின் பொறுப்பாளரான மரியன் ட்ரூ என்ற பெண்மணி இத்தாலிக்குச் சொந்தமான 15 பழமையான சிலைகளை சுவிட்சர்லாந்து வழியாக அமெரிக்காவுக்குக் கொண்டுபோனார்.

இது தொடர்பாக இத்தாலி நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இறுதி யில், குற்றத்தை ஒப்புக் கொண்டு அந்தச் சிலை கள் அனைத்தையும் இத்தாலியிடம் திருப்பி ஒப்படைத்தார் மரியன் ட்ரூ. இப்படி தொடர்ச்சியாக முயற்சித்து, கடத்தல் புள்ளிகளின் நெட்வொர்க்கை கண்ணிவெடி வைத்துத் தகர்த்து வருகிறது இத்தாலி போலீஸ்.

1_2924664a.jpg

விழா எடுக்கும் போலீஸார்

தங்கள் நாட்டு பழம் கலைப் பொருட் கள் சம்பந்தப்பட்ட புகைப்பட ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறது இத்தாலி. ஆனால், சர்வதேச ஆர்ட் டீலர்கள் எவ்வளவோ அழுத்தம் கொடுத்தும் அதை இதுவரை இத்தாலி வெளியிடவில்லை. அதேசமயம், எந்த நாட்டிலாவது தங்களது கலைப் பொக்கிஷம் இருப்பதாகத் தெரியவந்தால் உரிய ஆவணங்களோடு சென்று மீடியாக்கள் முன்னிலையில் அவற்றை அதிரடியாக மீட்கும் இத்தாலி போலீஸார், கைப்பற்றிய கலைப் பொருட்களை தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்று விழாவே எடுக்கிறார்கள்.

'March Celebration Of Asian Art' - சர்வ தேச அளவில் பழம் கலைப் பொருட்கள் வர்த்தகத்தில் இருப்பவர்கள் விரும்பிக் கொண்டாடும் கலைத் திருவிழா. ஆண்டு தோறும் மார்ச் மாதத்தில் அமெரிக்காவில் நடக்கும் இந்தத் திருவிழாவில் சர்வதேச கலைப் பொருள் வியாபாரிகள் தங்களிடம் உள்ள பொருட்களை விற்க பிரம்மாண்ட அரங்குகளை அமைப்பார்கள்; கோடிகளில் வர்த்தகம் களைகட்டும். இந்த ஆண்டு மார்ச்சில் நடந்த அந்தத் திருவிழாவில் கடத்தல் புள்ளிகளுக்கு மரண அடி கொடுத்தது அமெரிக்காவின் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி போலீஸ்.

இந்தத் திருவிழாவில் கடத்தல் பொருட்களும் சந்தைக்கு வரும் என்பது தெரிந்திருந்தாலும் இதுவரை பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை. ஆனால் இந்த ஆண்டு, முதல்முறையாக ஒரே வாரத்தில் ஆறு முறை சோதனை நடத்திய ஹோம்லேண்ட் செக்யூரிட்டி போலீஸார், பல்வேறு நாடுகளுக்குச் சொந்தமான 10 சிலைகள் மற்றும் கலைப் பொருட்களை கைப்பற்றினார்கள். இதன் மதிப்பு 20 மில்லியன் டாலர்கள். இதில் தமிழகத்தின் சொத்தும் அடக்கம்.

புத்தர் பாதத்தின் மதிப்பு

பாகிஸ்தானுக்குச் சொந்தமான புத்தர் பாதம் கல் சிற்பமும் இந்த சோதனையில் சிக்கியது. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த புத்தர் பாதத்தின் மதிப்பு ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகம். பாகிஸ்தானின் ‘ஸ்வாட் வேலி’ என்ற இடத்தில் இருந்து 1982-ல் இது கடத்தப்பட்டது. பல கைகள் மாறி கடைசியில், டோக்கியோவைச் சேர்ந்த ‘டையோ லிமிடெட்’ என்ற ஆர்ட் கேலரியின் உரிமையாளர் டாட்சுஸோ ககூவின் கைக்குப் போனது. ககூ அதை இந்த ஆண்டு ஏசியன் ஆர்ட் கலைத் திருவிழாவில் விற்பனைக்கு வைத்தார்.

இதைக் கண்டுபிடித்த ஹோம்லேண்ட் செக்யூரிட்டி போலீஸார், புத்தர் பாதத்தை கைப்பற்றி டாட்சுஸோ ககூவையும் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். இந்தத் தகவல்களை அறிந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் நான்கே வாரத்தில் புத்தர் பாதத்துக்கான ஆவணங்களை சமர்ப்பித்து அதை மீட்டு தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். இஸ்லாமிய நாடாக இருந்தபோதும், புத்தர் பாதத்தை மீட்க உடனடி நடவடிக்கை எடுத்த பாகிஸ்தான் அரசு, இலங்கையில் இருந்து புத்தத் துறவிகளை அழைத்துவந்து புத்தர் பாதத்தை அதற்குரிய இடத்தில் வைத்து விழாவே எடுத்திருக்கிறது. ஆனால் நாம்..?

- சிலைகள் பேசும்...

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-3-கடத்தலைக்-கண்ணிவெடி-வைத்து-தகர்க்கும்-இத்தாலி/article8823158.ece?homepage=true

Link to comment
Share on other sites

சிலை சிலையாம் காரணமாம் - 4: சிவபுரத்து நடராஜர்!

 

 
 
  • லான்ஸ் டேன்
    லான்ஸ் டேன்
  • scul1_2926221g.jpg
     

சிலைக் கடத் தல் மர்மங் களைச் சொல்லும்போது சிவபுரம் நடராஜர் கடத்தப்பட்ட கதையை எழுதாமல் விட முடி யாது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள சிவபுரத்தில் சிவகுரு நாத சுவாமி கோயில் உள்ளது 1951-ல் இந்த ஊரைச் சேர்ந்த அன்னமுத்து படையாச்சி என்பவர் தனது வயலை உழும்போது மண்ணுக்குள்ளிருந்து நடராஜர், சம்பந்தர், விநாயகர், சோமாஸ் கந்தர் மற்றும் இரண்டு அம்மன்கள் என மொத்தம் ஆறு ஐம்பொன் சிலைகளைக் கண்டெடுத்தார்.

வருவாய்த்துறையில் ஒப் படைக்கப்பட்ட இந்தச் சிலைகளை அப்போதிருந்த தஞ்சை ஆட்சியர் அங்குள்ள சிவகுருநாத சுவாமி திருக்கோயிலுக்கே வழங்கி விட்டார். இதையடுத்து, அந்தச் சிலைகளை சுத்தம் செய்வதற்காக கும்பகோணத்தைச் சேர்ந்த ராம சாமி என்ற ஸ்தபதியிடம் கொடுத் தது கோயில் நிர்வாகம்.

சிலைகளை கடத்திய ஸ்தபதி

அந்தச் சிலைகளின் நேர்த்தியில் மயங்கிய ஸ்தபதி, அவற்றை அப் படியே பதுக்கிவிட்டு அவைகளைப் போலவே ஆறு போலியான சிலை களை செய்து கோயில் நிர்வாகத் திடம் ஒப்படைத்தார். போலியும் கிட்டத்தட்ட அசல் போலவே அசத்தியதால் யாருக்கும் இதில் சந்தேகம் வரவில்லை. இந்த நிலையில் 1960-ல் இங்கிலாந்து ராணி எலிசபெத் சென்னை வரு கிறார். அப்போது, மும்பையின் கலைப்பொருள் டீலரான லான்ஸ் டேன் (Lance Dane) என்பவர் மகாராணி வரு கைக்காக ‘சிறப்பு மலர்’ ஒன்றை வெளியிடுகிறார்.

அந்த மலரில் சிவபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட (உண்மை யான) நடராஜர் சிலையின் புகைப்படம் பளிச்சிடுகிறது. அதைப் பார்த்துவிட்டு பிரிட்டிஷ் மியூசியத்தின் பொறுப்பாளர் டாக்டர் டக்ளஸ் பேரட் அடுத்த சில நாட்களில் சென்னை வருகிறார். சோழர் காலத் துச் சிலைகள் குறித்து புத்தகம் எழுத வேண்டும் என்பதுதான் அவ ரது இந்தியப் பயணத்தின் நோக்கம். அதற்காக ஓராண்டு காலம் தமிழகத் தில் தங்கி இருந்த பேரட், சிவபுரம் கோயிலுக்கும் சென்று அங்கிருந்த சிலைகளையும் பார்வையிட்டார்.

தமிழகத்தில் தனது தேடலை முடித்துக் கொண்டு மும்பை சென்ற பேரட், அங்கிருந்து இங்கிலாந்து திரும்பியதும் ‘சவுத் இண்டியன் பிரான்ஸ்’ என்ற தனது புத்தகத்தை வெளியிட்டார். சிலைகள் பற்றிய அரிய தகவல்களை மாத்திரமல்ல; அந்தப் புத்தகத்தின் வழியாக ஒரு அணுகுண்டையும் சேர்த்தே போட் டார் பேரட். ‘சிவபுரம் கோயிலில் இருக்கும் நடராஜர் சிலை டூப்ளி கேட். ஒரிஜினல் சிலை மும்பையில் இருக்கிறது’ என்பதுதான் பேரட் போட்ட குண்டு. இதன் பிறகு ஆறு மாதங்கள் ஓடிய பிறகுதான், ஒரிஜினல் நடராஜர் சிலையை மும்பை கலைப் பொருள் டீலர் லான்ஸ் டேன் மும்பைக்குக் கடத்தியது தெரிய வருகிறது.

போலீஸுக்கு இது தெரிந்து விசா ரணையைத் தொடங்குவதற்குள் ளாக நடராஜரை நியூயார்க்கைச் சேர்ந்த பென் ஹெல்லர் என்பவ ருக்கு கைமாற்றிவிட்டார் லான்ஸ் டேன். 1962-ல் அந்த சிலையை ஹெல் லரிடம் இருந்து அமெரிக்காவைச் சேர்ந்த நார்டன் சைமன் என்பவர் ஒரு மில்லியன் விலை கொடுத்து வாங்கி, தனது நார்டன் சைமன் ஆர்ட் ஃபவுண்டேஷன் மியூசியத் தில் வைத்தார். இந்தக் தகவல் களை எல்லாம் துப்பறிந்த இந்திய அரசு, லாஸ் ஏஞ்சலீஸ், நியூயார்க், லண்டன் ஆகிய மூன்று நீதிமன்றங் களில் சிவில் வழக்குத் தாக்கல் செய்தது.

வழக்கு நடந்து கொண்டிருந்த போதே நீதிமன்றத்துக்கு வெளியே சைமனுடன் ஒரு ஒப்பந்தம் போட் டது இந்திய தொல்லியல் துறை. நட ராஜர் சிலையை 10 ஆண்டு களுக்கு அமெரிக்காவில் உள்ள பொது மியூசியத்தில் வைத்திருந்து விட்டு அதன்பிறகு இந்தியாவிடம் திருப்பி ஒப்படைப்பது என்பதுதான் அந்த ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம் குறித்து 1975 நவம்பர் 10-ல் தமிழக சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பின. இதற்கு பதில் அளித்த அப்போதைய கல்வி அமைச் சர் நெடுஞ்செழியன், ‘தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல் இப்படியொரு ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது’ என்று சொன்னார்.

ஒப்பந்தத்தின்படி, 10 ஆண்டுகள் அமெரிக்க மியூசியத்தில் அழகுப் பொருளாக இருந்த சிவபுரம் நடராஜர், 1987-ல் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டார். அதே சமயம், அந்த சிலையை கடத்தியதற்காக ஸ்தபதி ராமசாமி, குத்தாலம் திலகர், அவரது சகோதரர் தாஸ் மற்றும் லான்ஸ் டேன் ஆகியோர் இங்கே கைது செய்யப்பட்டார்கள். சிவபுரம் நடராஜர் தற்போது சென்னை கபா லீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான சிலைகள் பாதுகாப்புப் பெட்டகத்தில் பத்திரமாக இருக்கிறார்.

சிவபுரம் சிலைக் கடத்தல் தொடர் பான ஒப்பந்தத்தில் இன்னொரு விநோதமான சரத்தும் சேர்க்கப் பட்டது. ‘இந்தியாவுக்குச் சொந்த மான பழமையான கலைப் பொருட் கள் ஒரு வருடத்துக்கும் மேலாக இந்தியாவுக்கு வெளியில் இருந்து அது தொடர்பாக எந்த விதமான கேள்விகளும் இல்லாதபட்சத்தில் அவற்றை நார்டன் சைமன் மியூசியம் வாங்கிக்கொள்ள இந்தியா ஆட்சேபிக்காது’ என்பது தான் அந்த சரத்து.

scul11_2926222a.jpg

மற்ற ஐந்து சிலைகள்...

இந்த சரத்தை தனக்குக் கிடைத்த கடவுச்சீட்டு போல வைத்துக் கொண்டு இந்தியாவுக்குச் சொந்த மான நூற்றுக்கும் மேற்பட்ட சிலை களையும் இருபத்தைந்துக்கும் மேற் பட்ட சோழர் காலத்து ஐம்பொன் சிலைகளையும் வாங்கிச் சேர்த்தார் சைமன். தொடர்ச்சியாக இந்தியா வின் பழமையான கலைப்பொருட் களையும் சிலைகளையும் வாங்கிக் குவித்த சைமனிடம்தான் சிவபுரத் தின் மற்ற ஐந்து சிலைகளும் போய்ச் சேர்ந்திருக்கின்றன என்பது பின்னால் வந்த செய்தி.

அது சரி.. சிவபுரம் நடராஜர் நாடு திரும்பிவிட்டார். அவரோடு கடத்தப்பட்ட மற்ற ஐந்து சிலை களின் கதி..?

- சிலைகள் பேசும்..

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-4-சிவபுரத்து-நடராஜர்/article8828041.ece?homepage=true

Link to comment
Share on other sites

சிலை சிலையாம் காரணமாம் - 5: பத்தூர் நடராஜர் வந்த கதை!

 
சிவபுரம் கோயில் சோமாஸ்கந்தர் சிலை- ஒப்பீடு
சிவபுரம் கோயில் சோமாஸ்கந்தர் சிலை- ஒப்பீடு

சிவபுரம் நட ராஜர் நாடு திரும்பி விட்டாலும் அத்துடன் திருடப் பட்ட மற்ற ஐந்து சிலைகள் இருக்குமிடம் இதுவரை தெரியவில்லை என்கிறது காவல்துறை. ஆனால், ‘தி இந்தியா ப்ரைடு புராஜெக்ட் (The India Pride Project)' என்ற அமைப்பைச் சேர்ந்த விஜய்குமா ரும் அவரது நண்பர்களும் அந்த சிலைகள் இருக்கும் இடத்தை ஆதாரத்துடன் கண்டுபிடித்து விட்டார்கள்.

இந்தியாவில் இருந்து குறிப் பாக தமிழகத்தில் இருந்து கடத்தப் பட்ட சாமி சிலைகள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருப்பதைக் கண்டுபிடித்ததில் ‘தி இந்தியா ப்ரைடு புராஜெக்ட்’ அமைப்புக்கு முக்கியப் பங்கு உண்டு. சிங்கப் பூரில் கப்பல் நிறுவனம் ஒன்றில் பொதுமேலாளராக பணியாற்றும் சென்னையைச் சேர்ந்த எஸ்.விஜய் குமார்தான் இந்த அமைப்பின் அமைப்பாளர்.

இதுவரை தமிழகம் திரும்பி உள்ள சிலைகளில் பெரும் பகுதியை இங்கு கொண்டுவந்து சேர்த்ததிலும், விஜய்குமார் வட்டத் தின் பிரதிபலன் பாராத உழைப்பு ஒளிந்திருக்கிறது. சிலைக் கடத்தல் மர்மங்களை வெளிச்சம்போட்டுக் காட்ட வேண்டும் என்பதைவிட இந்தியாவுக்குச் சொந்தமான கடவுள் சிலைகளும் பிற கலைச் செல்வங்களும் இந்தியாவுக்கே திரும்பிவர வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கும் ‘தி இந்தியா ப்ரைடு புராஜெக்ட்’ அமைப்பினர் இதற்காக சர்வதேச அளவில் தங்களுக்குள் கைகோர்த்து செயல்படு கிறார்கள்.

சென்னை மியூசியத்தின் பொறுப்பாளராக இருந்தவர் பி.ஆர்.னிவாசன். தொல்லி யல் ஆர்வலரான இவர் 1963-ல் ‘தென் இந்தியாவின் ஐம்பொன் சிலைகள்’ (Bronzes Of South India) என்ற புத்தகம் எழுதினார். சோழர் காலத்து ஐம்பொன் சிலைகள் குறித்து இப்புத்தகத்தில் விரிவாக எழுதப்பட்டிருந்தது. இதில் சிவ புரம் நடராஜர், சோமாஸ்கந்தர் சிலைகளைப் பற்றியும் படங்களு டன் தகவல்களை னிவாசன் பதிவு செய்திருக்கிறார்.

1972-ல் இருந்தே நார்டன் சைமன் மியூசியம் தனது கேலரி யில் சிவபுரம் சோமாஸ்கந்தர் சிலையை வைத்திருப்பதைக் கண்டுபிடித்த விஜய்குமாரின் அமெரிக்க நண்பர்கள், அங்குள்ள சோமாஸ்கந்தர் சிலை மற்றும் சிவ புரத்தில் உள்ள (போலி) சோமாஸ் கந்தர் சிலைகளின் படங்களை ஒப் பிட்டுக் காட்டி, சைமன் மியூசியத் தில் உள்ள சிலை தான் சிவபுரத்தில் இருந்து கடத்தப்பட்ட ஒரிஜினல் சோமாஸ் கந்தர் சிலை என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

1972-ல் சிவபுரம் விநாயகர் மற்றும் சோமாஸ்கந்தர் சிலை களையும் 1973-ல் பார்வதி, சம்பந்தர் சிலைகளையும் நார்டன் சைமன் மியூசியம் விலைக்கு வாங்கி இருப்பது அதன் பழைய ஆவணங்களின் மூலம் தெரியவருகிறது. இதில், விநாயகர் சிலையானது, இந்த நிமிடம்வரை சைமன் மியூசியத்தின் கேலரியில் வைக்கப்பட்டுள்ளது. சிவபுரத்தில் இருந்து கடத்தப்பட்ட மற்ற நான்கு சிலைகளும் நார்டன் சைமன் மியூ சியம் வசமே உள்ளன. சோமஸ் கந்தர் சிலையைப் போலவே நார்டன் சைமன் மியூசியத்தில் உள்ள விநாயகர் உள்ளிட்ட மற்ற நான்கு சிலைகளையும் ஒப்பிட் டுப் பார்த்தால் உண்மை வெளிச்சத் துக்கு வந்துவிடும் என்பது விஜய் குமார் வட்டத்தினரின் நம்பிக்கை.

somas1_2929360a.jpg

பத்தூர் நடராஜர் வந்த கதை

திருவாரூர் மாவட்டம் கொர டாச்சேரி அருகே உள்ள பத் தூரில் 1972-ல் பூமிக்கடியில் இருந்து நடராஜர் சிலை உட்பட 10 ஐம்பொன் சிலைகள் எடுக்கப் பட்டன. இதில் நடராஜர் சிலை மட்டும் கடத்தப்பட்டு லண்டனில் இருந்த கனடா ஆர்ட் கேலரி உரிமையாளர் ஒருவரின் கைக்குப் போய்ச் சேர்ந்தது. இதையடுத்து, கடத்தல் கும்பல் எஞ்சிய ஒன்பது சிலைகளையும் திருட முயற்சித்த போது போலீஸ் பிடியில் சிக்கி யது. எனினும், ஏற்கெனவே கடத்தப்பட்ட நடராஜர் சிலையை மீட்பதற்காக 1982-ல் லண்டன் உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இது தொடர்பாக ஸ்காட்லாந்து போலீஸும் அப் போது விசாரணை நடத்தியது.

அப்போது தமிழக தொல்லியல் துறையின் இயக்குநராக இருந்த தொல்லியல் அறிஞர் முனைவர் நாகஸ்வாமி லண்டன் நீதிமன்றம் வரைக்கும் சென்று சாட்சியம் அளித்தார். 1986-ல் வழக்கு இறுதிக் கட் டத்தை எட்டியபோது, பத்தூரில் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் மண் மாதிரியையும் நடராஜர் சிலையில் ஒட்டி இருந்த மண் மாதிரியையும் ஆய்வுக்கு அனுப்பியது நீதிமன்றம். இரண் டும் வெவ்வேறானவை என எதிர் பார்க்காத முடிவைச் சொன்னது ஆய்வு முடிவு. ஆனால், மண் மாதிரிகள் வெவ் வேறாக இருந்தது ஏன் என்பதற்கு தமிழக தொல் லியல் துறை ஆகமப்படியான ஒரு விளக்கத்தைக் கொடுத்தது. அது என்ன தெரியுமா?

- சிலைகள் பேசும்...

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-5-பத்தூர்-நடராஜர்-வந்த-கதை/article8838445.ece?homepage=true

Link to comment
Share on other sites

சிலை சிலையாம் காரணமாம் - 6: உ.பி. யோகினி சிலை தெரியுமா?

 

 
நியூயார்க்கில் உள்ள சத்தபிஸ் ஆக்‌ஷன் ஹவுஸ்
நியூயார்க்கில் உள்ள சத்தபிஸ் ஆக்‌ஷன் ஹவுஸ்

பத்தூர் நட ராஜர் சிலை தொடர்பான மண் ஆய்வுகள் வெவ்வேறான முடிவுகளைச் சொன்னதால், ‘இது பத்தூர் நடராஜர் இல்லை’ என வாதிட்டது கனடா ஆர்ட் கேலரி. அப்போது குறுக்கிட்ட தொல்லியல்துறை ஆய்வாளர் நாகஸ்வாமி, ‘பேரிடர் அல் லது தீ விபத்து சம்பவங்கள் நிகழும்போது, குழி வெட்டி அதில் மணல் பரப்பி அதன் மீது சுவாமி சிலைகளை வைத்து மீண்டும் அவற்றின் மீது மண லைப் போட்டு மூடி, அதன் மீது மண்ணைத் தள்ளி மூடி சிலை களைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் ஆகம விதி.

அந்நியர் படையெடுப்பின் போது தமிழக கோயில்களில் இருந்த ஐம்பொன் சிலைகளும் விலை மதிப்பற்ற பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன. பேரிடர் நிகழ்வுக்கு நிகரான அந்தத் தருணத்தில் சிவபுரம் சிலைகள் ஆகம விதிப்படி மண் ணுக்குள் வைத்து மூடப்பட்டி ருக்கின்றன. அதனால்தான் சிலையில் இருக்கும் மணலும் சிலை இருந்த இடத்தில் எடுக்கப்பட்ட மண் மாதிரியும் வெவ்வேறாக இருக்கின்றன’ என்று வாதிட்டார்.

இப்படி மொத்தம் 29 கேள்வி களுக்கு தகுந்த ஆதாரங்களுடன் அவர் எடுத்துவைத்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ‘தொல் லியல் துறையின் இணையற்ற நிபுணர் (Unparalleled Expert in this Field) என நாகஸ்வாமியைப் பாராட்டியதுடன் நடராஜர் சிலையையும் இந்தியா வசம் ஒப்படைக்க ஆணையிட்டார். ஆனால், இந்தத் தீர்ப்பை ப்ரிவி கவுன்சிலுக்குக் கொண்டுபோனது கனடா ஆர்ட் கேலரி. அங் கேயும் நீதிமன் றத் தீர்ப்பு உறுதி செய்யப் பட்டதால் 1991-ல் பத்திரமாக தாயகம் திரும்பினார் பத்தூர் நடராஜர்.

லண்டனைச் சேர்ந்தவர் பி.பி.சி. செய்தியாளர் பீட்டர் வாட்சன். தனது ஸ்டிங் ஆப ரேஷன் மூலம் சிலைக் கடத்தல் புள்ளிகள் ஒன்பது பேரைச் சிறைக் கம்பிகளுக்குள் சிக்க வைத்த துணிச்சலான பத்திரிகையாளர் இவர். சிலைகள் மற்றும் பழமையான கலைப் பொருட்கள் கடத்தல் உலகின் மர்மங்களை அம்பலப்படுத்துவதற்காக 1991-ல் ஸ்டிங் ஆபரேஷன் ஒன்றில் இறங்கினார் வாட்சன்.

நியூயார்க்கில் பிரபல கலைப் பொருள் நிறு வனம் சத்தபிஸ் ஆக்‌ஷன் ஹவுஸ். இதன் லண் டன் கிளை யில் பணியில் இருந்த ஜேம்ஸ் ஹாட்ஜஸ் என்ப வரை திருட்டு பட்டம் கட்டி பணி நீக்கம் செய்தது சத்தபிஸ். அந்த ஜேம்ஸ் ஹாட்ஜ ஸைத் தான் தனது ஸ்டிங் ஆபரேஷனுக்குத் தூண்டிலாக்கி னார் வாட்சன். சத்தபிஸ் நிறுவனம் எந்தெந்த வழிகளில் எல்லாம் கலைப் பொருட்களைக் கடத்திக் காசாக்குகிறது என்பதை வாட்ச னுக்கு கச்சிதமாகச் சொல்லிக் கொடுத்தார் ஜேம்ஸ்.

ஜேம்ஸின் தகவல்களை உள்வாங்கிக் கொண்டு ஆக்‌ஷ னில் இறங்கிய வாட்சன், இத்தாலியில் பழமையான ஓவியம் ஒன்றை விலைக்கு வாங்கினார். அந்த ஓவியத்தைக் சத்தபிஸிடம் கொடுத்து, அதை விற்றுத் தரும்படி கேட்டார். ‘இத்தாலி கலைப் பொருட்களை வெளி நாடுகளுக்குக் கொண்டு செல்ல தடை இருப்பதால் இந்தப் பொருட்களை இங்கே அதிக விலைக்கு விற்க முடியாது’ என்று சொன்ன சத்தபிஸ் நிர்வாகம், இந்த ஓவியத்தை கள்ள வழியில் சுவிச்சர்லாந்துக்கு அனுப்பி அங் கிருந்து லண்ட னுக்கு தரு வித்து நல்ல விலைக்கு விற்றுத் தரு கிறோம்’ என்று சொன் னது. அதன் படியே அந்த ஓவியத்தை சுவிட்ஸர்லாந்து வழியாக லண்டனுக் குக் கடத்திக் காசாக்கியும் கொடுத்தார்கள்.

இது தொடர்பான நடவடிக்கை கள் அனைத்தையும் தனது கேமரா வில் ஆவணப்படுத்திக் கொண்ட வாட்சன், அடுத்த கட்டமாக இந்தியாவின் பழமையான கலைப் பொருட்கள் மீதான தனது ஆர் வத்தை சத்தபிஸிடம் வெளிப் படுத்துகிறார். இந்தியா சம்பந்தப் பட்ட கலைப் பொருட்கள் கடத்தல்களைக் கவனிப்பதற்காக லண்டன் அலுவலகத்தில் ஆலிவர் ஃபோர்ஜ், பிரிண்டன் லிஞ்ச் என்ற இருவரை பிரதிநிதி களாக வைத்திருந்தது சத்தபிஸ் நிறுவனம்.

இவர்கள் இருவரும் இந்தியா வில் மும்பையைச் சேர்ந்த ஷாம் பிரதர்ஸ், ராஜஸ்தானைச் சேர்ந்த வாமன் நாராயண் கியா (Vaman Narayan Ghiya) ஆகியோருடன் தொடர்பில் இருந்தனர். இவர் களின் வழிகாட்டலுடன் இந்தியா வருகிறார் பீட்டர் வாட்சன்.

இந்தியாவில் தொன்மையான இடங்களுக்கு அவரை அழைத் துச் சென்று நோட்டம் காட்டு கிறார்கள் சத்தபிஸ் ஏஜெண்டுகள். ‘இங்கிருந்து எதை வேண்டுமானா லும் எளிதில் எடுத்துச் சென்று விட முடியுமா?’ என்று கொக்கி யைப் போடுகிறார் வாட்சன். ‘தாஜ்மஹாலில் இருந்து வேண்டுமானால்கூட ஒரு சிறு பகுதியை எங்களால் எடுத்துக் கொண்டுவர முடியும்’ என்று தங்களது திறமையின் உச்சத்தைச் சொல்லி அவரை அசர வைத்த சத்தபிஸ் தூதுவர்கள், தங்களது கேட்லாக்கை எடுத்துக் காட்டினார்கள்.

silai_2930405a.jpg

உ.பி. யோகினி சிலை

அவர்கள் காட்டிய 1988-ம் ஆண்டு விற்பனைக்கான சத்தபிஸ் யின் கேட்லாக்கில் 92-வது பொருளாக உத்தரப்பிரதேசத் தைச் சேர்ந்த விருஷ்னான யோகினி அம்மன் சிலைகளும் இருந்தன. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கற்சிலைகள் சுமார் ஐந்தடி உயரம் கொண்டவை. உடல் பெண் வடிவிலும் தலை மட்டும் மிருக வடிவிலும் வடிக்கப்பட்ட இந்த சிலைகள் உ.பி-யின் பாந்தா மாவட்டத்தின் சொத்து. 65 சிலைகள் இருந்த இடத்தில் இப்போது 13 சிலைகள் மட்டுமே உள்ளன. கேட்லாக்கில் இருந்த யோகினி சிலைகளின் படங்களை எடுத்துக் கொண்டு பாந்தா நோக்கிப் புறப்பட்டார் பீட்டர் வாட்சன்.

- சிலைகள் பேசும்..

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-6-உபி-யோகினி-சிலை-தெரியுமா/article8843594.ece

Link to comment
Share on other sites

சிலை சிலையாம் காரணமாம் - 7: விருஷ்னான யோகினி சிலை!

 

 
 
‘வராகா’ சிலை
‘வராகா’ சிலை

பாந்தா வந்து சேர்ந்த வாட்சன், கையோடு எடுத்து வந்திருந்த விருஷ்னான யோகினி சிலையின் படங்களைப் பாந்தா மாவட்ட மக்களிடம் காட்டி விசாரித்தார். அவை இங்கிருந்தவைதான் என் பதையும், அவற்றை யாரோ இங்கிருந்து திருடிவிட்டார்கள் என்பதையும் அந்த மக்கள் ஆதங்கத்துடன் விவரித்தார்கள். இந்த விசாரணையின் மூலம், ‘சத்தபிஸ்’ ஏஜெண்டுகள் கடத்தல் வேலைகளில் மட்டுமல்லாது திருட்டிலும் ஈடுபடுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தினார் வாட்சன்.

இத்துடன் தனது ஸ்டிங் ஆபரேஷனை முடித்துக்கொண்ட அவர், தனது அனுபவத்தை ‘சத்தபிஸ் தி இன்சைடு ஸ்டோரி’ என்று புத்தகமாக எழுதி வெளி யிட்டார். இதில் இந்திய அனு பவம் குறித்து தனி அத்தி யாயமே எழுதினார். இந்தப் புத்தகம் வெளிவந்து பர பரப்பை ஏற்படுத்தியதுமே, இந்தியா மற்றும் இத்தாலிக்கான தங்களது தொடர்புகளையும் திரைமறைவு வர்த்தகத்தையும் உடனடியாக நிறுத்திக்கொண்டது ‘சத்தபிஸ்'.

அத்துடன், இந்தியாவுக்கான வியாபாரப் பிரதிநிதிகளாக நியமித்திருந்த ஆலிவர் ஃபோர் ஜையும், பிரிண்டன் லிஞ்சையும் பணி நீக்கமும் செய்தது. இந்நிலையில், பிரான்ஸ் மியூசியம் ஒன்றிலிருந்து யோகினி சிலை ஒன்று 2013 செப்டம்பர் 19-ல் இந்தியாவிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டது. ஆனால், ‘சத்தபிஸ்' கேட்லாக்கில் இருந்த யோகினி வேறு திருப்பி கொடுத்த சிலை வேறு. பிரான்ஸில் இருந்து வந்த யோகினி சிலை தற்போது, டெல்லி நேஷனல் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் நடந்து மூன்று ஆண்டுகள் கழித்து, ராஜஸ்தா னில் ‘சத்தபிஸ்' ஏஜெண்டாக செயல்பட்ட வாமன் நாராயண் கியாவை ஜெய்பூர் காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் வத்சவாவும் ராம்சிங் என்ற போலீஸ்காரரும் சுற்றி வளைத்தார்கள்.

அந்த ஆபரேஷனை விவரிக் கும் முன்னதாக வாமன் நாராயண் கியாவைப் பற்றி ஓர் அறிமுகம்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ஸ்டில்ஸ் ஸ்டுடியோ வைத்திருந்த பத்ரி நாராயண் என்பவரது மகன் வாமன் நாராயண் கியா. தந்தையின் ஸ்டுடியோவில் இருக்கும்போதே ராஜஸ்தான் ஓவியங்களை விற்றுக் காசு பார்த்த வாமன் கியா, தனியாக கைவினைப் பொருட்கள் விற்கும் கடையைத் தொடங்கி கடத்தல் சந்தையிலும் மெல்ல மெல்ல கால் பதித்தார்.

இந்நிலையில், ஜெய்பூரின் காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆனந்த் வத்சவா ஒருமுறை, கோயில் சிலை திருடர்கள் 34 பேரை ஒரே சம யத்தில் மடக்கிப் பிடித்தார். அவர்களிடம் நடத்திய விசா ரணையில்தான், வாமன் கியா வைப் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிய வந்தன. இன்றைக்கு, சுபாஷ் சந்திர கபூரை ‘சர்வதேச சிலைக் கடத்தல் மன்னன்’ என்கிறார்கள். அப்படிப் பார்த்தால் வாமன் நாராயண் கியா சிலைக் கடத்தலில் மன்னாதி மன்னன்!

வத்சவாவிடம் சிக்கிய கோயில் சிலைத் திருடர்கள் வாமன் கியாவை ‘இந்த உலகத் தின் ராஜா’ என்று புகழ்ந்தார்கள். அவர்கள் சொன்ன மேலதிக தகவல்களைக் கேட்டு அதிர்ந்து போன வத்சவா, வாமன் கியாவின் வியாபாரத் தொடர்பு களைத் தோண்ட ஆரம்பித்தார். கியாவின் வண்டவாளங்கள் அத்தனையும் அறிந்துகொண்டு அவரைச் சுற்றி வளைத்தார். அப்போது, சத்தபிஸில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஆலிவர் ஃபோர்ஜும் வாமன் கியாவின் வீட்டில் இருந்தார். எனினும், பெரிய அளவிலான அரசியல் அழுத்தம் இருந்ததால், இந்தியன் மெடிசி என்று வர்ணிக்கப்பட்ட வாமன் கியாவை அப்போது கைது செய்ய முடியவில்லை. ஆனாலும் மனம் தளராத வத்சவா, இன்னொரு தருணத்துக்காக காத்திருந்தார்.

varaka1_2931551a.jpg

சுற்றி வளைத்த போலீஸ்

2003 ஜூன் 7-ல் அந்தத் தருணம் வாய்த்தது. அன்றைய தினம் வாமன் கியாவைத் தேடி அவரது வீட்டுக்கு வத்சவா சென்ற போது வீடு பூட்டியிருந்தது. பூட்டிய வீட்டுக்குள் ஆட்கள் நடமாட்டம் இருப்பதைக் கண்டு பிடித்தவர், 24 போலீஸாருடன் சென்று வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்றார். வீட்டின் உள் பகுதியில் பழமையான கலைப் பொருட்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் படங்களையும் வாமனும் அவரது சகாக்களும் தீயில் போட்டு எரித்துக் கொண்டிருந்தனர். பாதி எரிந்த நிலையில் அந்த ஆவ ணங்களைக் கைப்பற்றி வாமனை கைது செய்தார் வத்சவா.

அப்போது அந்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 34 கேட்லாக்குகளில் ஏராளமான இந்திய கலைப் பொருட்கள் மற்றும் பழமையான சிலைகளின் படங்கள் இருந்தன. தென்கிழக்கு ராஜஸ்தானின் ஆற்று என்ற கிராமத்தில் இருந்து மிகப் பழமையான ‘வராகா’ கற்சிலை ஒன்றை வாமன் கியாவின் ஆட்கள் 1980-க்குப் பிறகு கடத்தி இருக்கிறார்கள். சுமார் 500 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட விசேஷமான அந்த ‘வராகா’ சிலையைப் பற்றிய தகவல்களும் அப்போது சிக்கின.

போலீஸ் திடீரென தன்னைச் சுற்றி வளைத்ததும் ‘எனது வீட்டுக்குள் போலீஸ் எப்படி நுழையலாம்? ’ என எகிறிக் குதித்த வாமன் கியா, முதல்கட்ட போலீஸ் விசாரணையில் வாயே திறக்கவில்லை. இரண்டு வாரம் கழித்து போலீஸ் பாணியில் விசாரணையை முடுக்கியதும் தான் மர்மங்கள் விலக ஆரம்பித்தன.

- சிலைகள் பேசும்..

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-7-விருஷ்னான-யோகினி-சிலை/article8848320.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலைக் கடத்தல்கனளப் படித்துச் சிலையாகிப் போனேன்,,, .tw_blush:

Link to comment
Share on other sites

சிலை சிலையாம் காரணமாம் - 8: ’க்ரீன் தாரா’ சிலை

 
 
  • நியூயார்க்கில் கபூரின் ஆர்ட் கேலரியில் உள்ள ‘க்ரீன் தாரா’ சிலை
    நியூயார்க்கில் கபூரின் ஆர்ட் கேலரியில் உள்ள ‘க்ரீன் தாரா’ சிலை
  • ‘யோகாசன விஷ்ணு’ சிலை.
    ‘யோகாசன விஷ்ணு’ சிலை.

வாமன் கியாவிடம் நடத் தப்பட்ட தொடர் விசாரணையில் டெல்லி, ஜெய்பூர், மதுரா உள்ளிட்ட இடங்களில் வாமன் கியாவுக்கு சொந்தமான 6 கிடங்குகள் தோண்டித் துருவப் பட்டன. அங்கெல்லாம் இருந்து ஐம்பொன் சிலைகள், பழமை யான கலைப் பொருட்கள் உள் ளிட்ட சுமார் 900 பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதில் 400 பொருட்களைப் பழமையான கலைப் பொருட்கள் என உறுதிப் படுத்தியது இந்திய தொல்லியல் துறை.

சுவிட்ஸர்லாந்தின் தனியார் மியூசிய உரிமையாளரான டாக்டர் ரஸாக் என்பவர், தன்னிடம் உள்ள இந்தியாவின் பழமையான 500 கலைப் பொருட்களில் 50 சதவீதத்துக்கும் மேலானதை வாமன் கியாவிடம் இருந்தே வாங்கியதாக வாக்குமூலம் கொடுத்தார்.

வாமனுக்கு ஆயுள் தண்டனை

1980-ல் இருந்து 20 ஆண்டு களில் லண்டனில் உள்ள ‘சத்தபிஸ்’ ஆக்‌ஷன் ஹவுஸுக்கு ஐரோப்பா வழியாக 20 ஆயிரம் சிலைகள் மற்றும் கலைப் பொருட்களை விற்றிருப்பதாக கியா வாக்கு மூலம் கொடுத்திருப்பதாக நீதி மன்றத்தில் வாமன் சொன்னது போலீஸ்.

இதையடுத்து, 2008-ல் வாமனுக்கு ஜெய்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் வாமன்.

இந்தச் சூழலில் ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட, வாமன் வழக்கை நடத்திய கண் காணிப்பாளர் ஆனந்த் வத் சவாவும் ராம்சிங்கும் சொல்லி வைத்தாற்போல் இடமாற்றம் செய்யப்பட்டார்கள்.

விசாரணையில் மந்த நிலை

அடுத்த நான்கு ஆண்டுகள் வாமன் வழக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் இழுபட்டது. இறுதியாக, ‘பொறுப்பற்ற தன்மையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டுள்ளது. அத னால்தான் விசாரணையில் மந்த நிலை ஏற்பட்டிருக்கிறது’ என்று காவல்துறையை சாடிய நீதிமன்றம், ‘20 ஆயிரம் கலைப் பொருட்களை வாமன் கியா வெளிநாடுகளுக்குக் கடத்தி விற்றதாகச் சொல் கிறீர்கள், இதுவரை அதில் ஒன்றைக்கூட அங்கிருந்து மீட்டு வராதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியது. வாமன் விடுதலையே அந்தக் கேள் விக்கான பதிலாகவும் அமைந்து போனது.

கடத்தலும் அன்பளிப்பும்

2003-ல் வாமன் கியா கைது செய்யப்பட்டபோது, ‘சத்தபிஸ்’ உள்ளிட்ட வெளிநாட்டு கலைப் பொருள் வியாபாரிகளுக்கு லேசான நடுக்கம் வந்தது. ‘இது திருட்டு சிலைதான்’ என்று தெரிந்தே வாங்கியவர்கள், அதை அரசு மியூசியங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து, தங்களை ‘தானப் பிரபு’க்களாக்கிக் கொண்டார்கள். ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடு களில் மியூசியங்களுக்கு அரிய பொருட்களை அன்பளிப்பாகக் கொடுத்தால் அவற்றின் விலை மதிப்பில் 40 சதவீதம் வரை வருமான வரிவிலக்குப் பெற முடியும்.

இப்படி குறுக்கு வழியில் பலரும் வரிவிலக்கு பெறும் அதேநேரம், போலியான கலைப் பொருட்களுக்கு போலி ஆவணங் களைத் தயாரித்து அவற்றை மியூசியங்களுக்கு அன்பளிப் பாகக் கொடுத்து வரி ஏய்ப்பிலும் ஈடுபடுகிறார்கள். விலை கொடுத்து வாங்கப்படும் கலைப் பொருட் களுக்குத்தான் அது எங்கிருந்து, யாரால், எப்போது, எப்படி வாங் கப்பட்டது என்பதற்கான மூலா தாரத்தை வைத்திருக்க வேண்டும். அரசு மியூசியங்களுக்கு அன் பளிப்பாகக் கொடுக்கும் பொருட் களுக்கு அதுபோன்ற மூலாதாரம் காட்டத் தேவையில்லை. இதை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் பெரும்பாலான ஆர்ட் கேலரிகள், தங்களிடம் இருக்கும் கடத்தல் சிலைகள் உள்ளிட்ட பொருட்களை அவ்வப் போது அரசு மியூசியங்களுக்கு அருட்கொடை தந்தும் தப்பித்து வருகின்றன.

சுபாஷ் சந்திர கபூர்… இனி, இந்தத் தொடரின் பெரும் பகுதி இவரைச் சுற்றித்தான் சுழலப் போகிறது. பிரிக்கப்படாத இந்தியாவின் லாகூர் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் புருஷோத்தம் ராம் கபூர். 1949-ல் லாகூரில் இருந்து பஞ்சாப் மாநிலம் ஜலந்தருக்கு நகர்கிறது புருஷோத்தம் குடும்பம். 1962-ல் பிழைப்புக்காக டெல்லிக்கு ஜாகை மாறிய புருஷோத்தம் ராம், டெல்லியின் சவுத் எக்ஸ்டென்ஷன் மார்க்கெட்டில் ‘காங்ரா ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட்ஸ்’ (Kangra Arts And Grafts) என்ற கலைப் பொருள் வர்த்தக நிறுவனத்தைத் தொடங்குகிறார்.

கிழிந்தது கபூரின் காது

இங்கே கலைப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் வியாபாரத்தில் இருக்கும் போதே சிலைக் கடத்தல் கும்பல்களோடு இவருக்கு சகவாசம் ஏற்படு கிறது. அந்த சகவாசம் அவரது குடும்பத்துக்கு பல சங்கடங்களையும் கொண்டுவந்து சேர்த்தது. ஒரு சமயம், சிலைக் கடத்தல் புள்ளிகள் புருஷோத்த மின் மூத்த மகன் சிறுவன் சுபாஷ் சந்திர கபூரை ஹரியாணா - ராஜஸ்தான் எல்லையில் வைத் துக் கடத்திக் கொண்டு போனார் கள்.

அப்போது நடந்த மோதலில் சுபாஷின் வலது காதை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் கடித்ததால் காது கிழிந்து போனது. இதைத்தான் இன்றளவும் கபூரின் முக்கிய அங்க அடை யாளமாக வைத்திருக்கிறது போலீஸ்.

விஷ்ணு சிலை மாயம்

இமாச்சலப் பிரதேசத்தில் சம்பா (Chamba) என்ற இடத்தில் கோயில் ஒன்றிலிருந்து 1971 மே மாதம் 6-ம் தேதி விஷ்ணு சிலை ஒன்று கடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் புருஷோத்தம் ராம் கபூருக்கும் தொடர்பு இருப் பதை உறுதி செய்தது போலீஸ். அந்தச் சிலையை அதே ஆண்டு ஜூலை 23-ல் மும்பை துறைமுகத்தில் கைப்பற்றிய போலீஸார், புருஷோத்தம் ராமையும் கைது செய்தனர். இதுதான் கபூர் குடும்பத்தின் மீது பாய்ந்த முதலாவது சிலைத் திருட்டு வழக்கு.

- சிலைகள் பேசும்…

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-8-க்ரீன்-தாரா-சிலை/article8853291.ece

Link to comment
Share on other sites

காணாமல்போன கோயில்கள்... களவுபோகும் கடவுள் சிலைகள்!

சர்வதேச திருடர்கள் உஷார்கடத்தல்

 

p8a.jpg

சிலைகளைக் கடத்தி வெளிநாடுகளுக்கு விற்பது பணம் கொழிக்கும் பிசினஸ். பல பெரிய முதலைகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பது சமீபகாலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆர்ட் கேலரியுடன் இணைந்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சிலைகள் மற்றும் அபர்ணா கேலரியில் உள்ள ஓவியங்கள் மற்றும் கிடங்கில் இருந்து கைப்பற்றப்பட்ட சிலைகள் என தீனதயாளனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சிலைகளை இந்தியத் தொல்லியல் துறை ஆய்வு செய்திருக்கிறது. ஒவ்வொரு சிலையாக ஆய்வுக்குட்படுத்தி அவற்றின் காலங்களைக் குறித்துள்ளார்கள். கைப்பற்றப்பட்ட சிலைகளில் 90 சதவிகிதத்துக்கு மேல் பழமையானது என்று இந்தியத் தொல்லியல் துறை சான்று அளித்துள்ளது. இந்தச் சிலைகளில் 17  சிலைகள் திருட்டுச் சிலைகள் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தீனதயாளனின் கூட்டாளி லட்சுமிநரசிம்மனின் மகாபலிபுரம் சிற்பக்கூடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சிலைகளைஅடுத்ததாக ஆய்வு செய்ய உள்ளார்கள்.

பிடிகொடுக்காத இந்து அறநிலையத் துறை!

இந்த வேலைகள் முழுவதுமாக முடிந்தபிறகு, இந்து அறநிலையத் துறையின் மூலமாக ஒவ்வொரு சிலையைப் பற்றிய முழுவிவரங்களும் கோயில் குருக்களின் மூலமாகப் பெறப்படும். கைப்பற்றப்பட்ட சிலைகளை இந்து அறநிலையத் துறை கமிஷனர் இதுவரை வந்து பார்வையிடவில்லை. மீடியாக்களுக்குப் பயந்தே பார்வையிடாமல் பயந்து ஒதுங்கிக்கொள்கிறார் என்று காவல் துறை வட்டாரத்திலேயே கிசுகிசுக்கிறார்கள். கைப்பற்றப்பட்ட சிலைகளை ஆய்வு செய்ததில் இரண்டு கோயில்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டு, சிலைகள் திருடப்பட்டுள்ளன எனத் தெரியவந்துள்ளது. அதில் ஒரு கோயில் அடையாளம் காணப்பட்டு, குற்றவாளிகளைக் காவல் துறை நெருங்கிவிட்டது எனவும், அதில் அரசக் குடும்பம் ஒன்றுக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள். இன்னொரு கோயில் எதுவென்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சிலைக் கடத்தலில் இன்டர்நேஷனல் இன்ஃபார்மர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

p8.jpg

சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர்!

அமெரிக்காவில் சிலைகளுக்கான மிகப் பெரிய கேலரியை வைத்திருந்த சுபாஷ் சந்திர கபூர், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். 40 வருடங்களுக்கு முன்பே இவரது குடும்பம் அமெரிக்காவில் செட்டில் ஆனது. இவரது தந்தையும் மோசடிப் பேர்வழி. தந்தையின் மோசடிக்காக 40 வருடங்களுக்கு முன்பு டெல்லியில் சுபாஷ் சந்திர கபூரை கடத்தினார்கள். கடத்தியவர்கள், சந்திர கபூரின் ஒரு பக்க காதை கடித்துவிட்டார்கள். இதனால் ஒரு காது பிளந்த நிலையில் இருக்கும். இதுதான் சுபாஷ் சந்திர கபூரின் அடையாளம். அமெரிக்காவில் இருந்த சுபாஷ் சந்திர கபூருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத அரஸ்ட் வாரன்ட் கொடுத்தும், இவரை கைதுசெய்ய அமெரிக்க அரசு ஒத்துழைப்புத் தராமல் இருந்தது. அமெரிக்காவில் சுகபோகமாக இருந்தார் சுபாஷ் சந்திர கபூர். இரண்டு வருடங்களாகத் தொடர்ந்து வாரன்ட் அனுப்பியும் எந்தப் பலனும் இல்லை. அதைத் தொடர்ந்து சுபாஷ் சந்திர கபூரை பிடிக்க ஒரு ரகசிய ஆபரேஷன் மேற்கொண்டார்கள். ஒரே வாரத்தில் ஜெர்மனியில் உள்ள கோலன் ஏர்போர்ட்டில் கைதுசெய்து இந்தியா கொண்டு வரப்பட்டார் சுபாஷ் சந்திர கபூர். ஸ்ரீபுரந்தானில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் சுத்தவள்ளியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயில் ஆகிய இரண்டு கோயில்களில் உள்ள சிலைகள் திருட்டுத் தொடர்பாகத்தான் சுபாஷ் சந்திர கபூர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

ஸ்ரீபுரந்தானில் உள்ள பிரகதீஸ்வர் கோயிலில் 8, சுத்தவள்ளியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் 28... என மொத்தம் 36 சிலைகள் திருடு போயுள்ளன. ஒரு குட்டிச் சிலையை மட்டும் உள்ளூர் காவல் நிலையத்திலேயே பிடித்து இருக்கிறார்கள். மீதமுள்ள சிலைகளில் 4 அங்குல சிறிய சிலைகளில் இரண்டை இப்போது கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதைத் தவிர்த்து மற்ற சிலைகள் இன்னும் கிடைக்கவில்லை. பிரதமர் மோடியிடம் இருந்து இதுவரை இரண்டே சிலைகள்தான் தமிழகத்துக்கு வந்திருக்கின்றன. டொலிடோ மியூசியம் பிள்ளையார் சிலை மற்றும் மாணிக்க வாசகர் ஆகிய சிலைகள் டெல்லியில் இருக்கின்றன.  இன்னும் ஒருமாதத்தில் தமிழகத்துக்குக் கிடைத்துவிடும். சுபாஷ் சந்திர கபூரிடம் இருந்து மட்டும் தமிழ்நாட்டுக்கு, இன்னும் 37 சிலைகள் கைப்பற்ற வேண்டியுள்ளது. நான்கு வருடங்களாகப் புழல் சிறையில் இருக்கிறார் சுபாஷ் சந்திர கபூர். இந்தியாவில் ஒரு வெளிநாட்டு பிரஜை நான்கு வருடங்களாக, எட்டு முறை ஜாமீன் கேட்டும் இதுவரை வழங்கப்படாதது இதுவே முதல்முறை.

p8b.jpg

சின்ன குழு…  பெரிய வேலை!

10 பேருக்கும் குறைவானவர்களே வேலைசெய்யும் ஒரு சின்னப் பிரிவு, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு. சிலைக் கடத்தல் தொடர்பாக அனைத்து முக்கிய வழக்குகளுக்கும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் நேரடியாக ஆஜராகி வருகிறார். இந்தச் சிறிய குழுவால் கைப்பற்றப்பட்ட சிலைகளின் மதிப்பு மட்டும் பலநூறு கோடிகளைத் தாண்டுகிறது.

கொலையும் சிலையும்!

2005-ல் பழவூரில் உள்ள நாரும்பூநாதர் கோயிலில் இருந்து 13 சிலைகள் திருடு போயுள்ளன. 7 சிலைகள் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டு, அதில் 4 சிலைகள் ரிட்டன் ஆகிவிட்டன. அதில், 5 சிலைகள் மதுரையில் பிடிபட்டுள்ளன. அதில் ஒரு சிலையில் இருந்து தங்கம் எடுப்பதற்காக அதைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டனர். கொளுத்தப்பட்ட நடராஜர் சிலையின் மதிப்பு ரூ.16 கோடி என நியூயார்க்கில் உள்ள சுபாஷ் சந்திர கபூரின் கேலரியில் விலைநிர்ணயம் செய்து இருக்கிறார்கள். இதில், மதுரை நகைக்கடை உரிமையாளர் ஒருவருக்கும் கடத்தல் கும்பலுக்கும் ஏற்பட்ட தகராறில், நகைக்கடை உரிமையாளர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். நான்கு வருடங்கள் கழித்துத்தான் இந்தக் கொலையின் முழு விவரங்கள் காவல் துறைக்குக் கிடைத்துள்ளன.

விறுவிறு மேல்விசாரணை!

2008-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இதில் தீனதயாளன் குற்றவாளி. சிலை வாங்கியவர்கள் யாரும் வழக்கில் சேர்க்கப் படாமலே இருந்தனர். அவர்களையும் குற்றவாளிகளாகச் சேர்க்கும் முயற்சியில் அறநிலையத் துறை அதிகாரிகள் மும்முரமாக இருக்கிறார்கள். இதனால், விசாரணையை நிறுத்திவைத்துள்ளார். இந்த வழக்கில் விசாரிக்கப்பட வேண்டிய உண்மைகள் நிறைய இருக்கின்றன. அவை விசாரிக்கப்பட வேண்டும். மேல்விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், விசாரணையை தற்காலிகமாக நிறுத்தவேண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பொன். மாணிக்கவேல் 2 மாதங்களுக்கு முன் மனு அளித்தார். நீதிபதியும் அந்த மனுவை ஏற்று விசாரணையை நிறுத்தி வைத்துள்ளார். சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிப்பதற்கென்றே ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்புக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உள்ளது. கும்பகோணத்தில் கூடுதல் குற்றவியல் நீதிமன்றம் உள்ளது. வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக சுபாஷ் சந்திர கபூர் சென்னை புழல் சிறையில் இருந்து திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

p8c.jpg

கடத்தலைத் தடுக்க அதிரடி எப்போது?

புதிதாகச் செதுக்கும் சிலையில், சிலை செய்த சிற்பியின் பெயரை எழுதி, அதில் சிலை செய்த வருடத்தைக் குறிப்பிட்டாலே அந்தச் சிலையை யாரும் வாங்கமாட்டார்கள். பழமையான சிலைகளில் கோயில் சிலைகளின் வருடம் மற்றும் கோயில் பெயர்களைக் குறிப்பிட்டு எழுதிவிட்டால் வெளிநாட்டில் இந்தப் பழமையான சிலைகளை யாரும் வாங்கமாட்டார்கள். சிலைக் கடத்தல் என்பதே முற்றிலும் அழிந்துவிடும். ஆனால், சிலைகளில் பெயர்களை எழுதுவதை இந்து அறநிலையத் துறை செய்வதில்லை. இந்து அறநிலையத் துறையினரின் அலட்சியம் காரணமாகச் சிலைகள் திருடுபோவதைத் தடுக்க முடியவில்லை. சிலைக் கடத்தல் பிரிவில் கைதுசெய்யப்படுபவர்களுக்குக் குறைந்தபட்சமாக இரண்டு வருடங்களும், அதிகபட்சமாக 3 வருடங்களும் மட்டுமே தண்டனை கிடைக்கிறது. நீதிபதி நினைத்தால் இரண்டு வருடங்களுக்கும் குறைவாகத் தண்டனை கொடுக்க முடியும். ஈரோட்டில் உள்ள கொடுமுடி சிலை திருட்டு வழக்கு ஏழு வருடங்கள் நடைபெற்றது. அதில், குற்றவாளிக்கு வெறும் 6 மாதகாலமே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிலைக் கடத்தல் தடுப்புக்குச் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறையும்.

See also: ஆடம்பர சிற்பக்கூடத்தில் அரிய சிலைகள் பதுக்கல்!

சிலை நெட்வொர்க்… போலீஸ் டார்கெட்!

தமிழகத்தில் கடத்தப்படும் சிலைகள் சென்னையில் உள்ள அபர்ணா கேலரியில் இருந்து டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டு, டெல்லியிலிருந்து மும்பை, மும்பையிலிருந்து ஹாங்காங், ஹாங்காங்கிலிருந்து லண்டன், லண்டனிலிருந்து மேன் ஹேன்டன் (நியூயார்க்), செல்கின்றன. அங்குள்ள கேலரியில் இருந்து சிலைகள் விற்பனையாகின்றன. சிங்கப்பூரில் வசிக்கும், உளுந்தூர்பேட்டையைப் பூர்வீகமாகக்கொண்ட ஒரு பெண்மணிக்கு இதில் தொடர்பு உள்ளது. சுபாஷ் சந்திர கபூரின் முன்னாள் காதலியான இவர், தற்போது கபூருக்கு பரம எதிரி. இதுபோல சிலைக் கடத்தலில் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். அவர்களைப் பிடிப்பதுதான் அடுத்த டார்கெட் என்று காவல் துறை வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

http://www.vikatan.com/juniorvikatan/2016-jul-20/exposure/121243-idol-kidnaping-international-thieves.art

Link to comment
Share on other sites

சிலை சிலையாம் காரணமாம் - 9: கடத்தப்பட்ட பிரத்தியங்கரா கற்சிலைகள்!

 

 
சுபாஷ் கபூரின் ‘ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட்’ கேலரி (உள்படம்) சுபாஷ் சந்திர கபூர்
சுபாஷ் கபூரின் ‘ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட்’ கேலரி (உள்படம்) சுபாஷ் சந்திர கபூர்

புருஷோத்தம் ராம் கபூரின் மகனான சுபாஷ் சந்திர கபூர், டெல்லி டி.ஏ.வி. பள்ளியில் படித்தவர் என்பது மட்டுமே உறுதியாகத் தெரி கிறது. தந்தைக்குத் துணை யாக ஆர்ட் கேலரி வேலை களைக் கவனித்துக்கொண்ட இவர், 1974-ல் அமெரிக்காவுக் குப் பயணமானார். நியூயார்க் கில் ‘டெம்பிள் ஆர்ட்ஸ்’ என்ற கலைப் பொருள் நிறுவனத்தைத் தொடங்கி நிர்வகித்தார். 1976-ல் டெல்லியில் பெரும் படோடோப மாக நடந்தது சுபாஷ் கபூரின் தி ருமணம். அந்த ஆண்டே கபூரின் ஒட்டுமொத்த குடும்பமும் அமெ ரிக்காவுக்கு இடம் பெயர்ந்தது.

1980-ல் கபூர் அவரது தம்பி, தங்கை உள்ளிட்டவர்கள் அமெ ரிக்கக் குடியுரிமை பெற்றார்கள். 1987-ல் தனது ‘டெம்பிள் ஆர்ட்' நிறுவனத்தை ‘ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட்’ (Art Of The Past) என்று பெயர் மாற்றிய சுபாஷ் கபூர், ‘சோபியா செல்ஃப் ஸ்டோரேஜ்’ என்ற கலைப் பொருள் கிடங்கை யும் தொடங்கினார். தொழிலில் ஓரளவுக்கு பணம் சம்பாதித்த பிறகு தந்தையின் வழியில் பழமையான சிலைகள் மற்றும் கலைப் பொருட் களை இந்தியாவில் இருந்து கடத்தி, காசாக்கும் வேலைகளில் இறங்கினார் சுபாஷ் கபூர்.

தொடக்கத்தில், கவனிப் பாரின்றி விடப்பட்டுள்ள கற் சிலைகள், வேலைப்பாடுகளைக் கொண்ட பழைய கல்தூண்கள் தான் கபூரின் இலக்காக இருந் தது. இதற்காக அடிக்கடி இந்தியாவுக்கு வந்து போன அவர், இங்குள்ள மத்திய மாநிலத் தொல்லியல் துறை யினருடன் தன்னை நெருக் கப்படுத்திக் கொண்டார். அவர்களின் துணையோடு தொல்லியல் துறையின் கட்டுக்குள் உள்ள பழமையான கோயில்களுக்கு பயணித்து, அங் குள்ள பழமையான சிலைகள் மற்றும் கலைப் பொக்கிஷங் களை நோட்டமிட்டார். அவற்றில் இருந்து தனக்குத் தேவையான வற்றை சமயம் பார்த்துக் கடத்தவும் ஆரம்பித்தார். கபூரின் மகுடிக்கு மயங்கிய அரசுத் துறை சார்ந்த சிலரும் இதற்கு உடந்தையானதால் விஷயம் வெளியில் கசியாமல் பார்த்துக் கொண்டார்கள்.

silai_2934842a.jpg

சுத்தமல்லி சுந்தரேஸ்வரர் கோயில்

இந்நிலையில், இந்தியா உள் ளிட்ட நாடுகளில் இருந்து கடத்தி வரும் சிலைகளையும் பழம் கலைப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்காகவே ‘நிம்பஸ் இம்போர்ட் எக்ஸ்போர்ட் இன்கார்ப்பரேட் (Nimbus Import Export Inc.)’ என்ற நிறுவனத்தை 2001-ல் நியூயார்க்கில் தொடங் கினார் சுபாஷ் கபூர். இந்நிறு வனத்தை அவரது மகள் மம்தா சாகரும் தங்கை சுஷ்மா சரீனும் கவனித்துக் கொண்டார்கள்.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கடத்தப்பட்டு வரும் கலைப்பொருட்களை அமெரிக்கா வுக்கு இறக்குமதி செய்து, அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு இனம் பிரித்து அனுப்புவதுதான் இந்த இருவரின் வேலை. வாமன் நாராயண் கியா போலீஸ் கையில் சிக்கும் வரை சுபாஷ் சந்திர கபூர் திரைமறைவு நபராகத்தான் இருந்தார். 2003-ல் வாமன் கைது செய்யப்பட்ட பிறகுதான் கபூர் மெல்ல வெளி யில் தெரிய ஆரம்பித்தார். தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்வதற்காகவும் சிலைக் கடத்தல் உலகில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கு வற்காகவும், வெளி நாடுகளுக் குக் கடத்திவரப்பட்ட ஏராளமான பழமையான கலைப்பொருட் களைத் தாராளமாக மியூசியங் களுக்கு அன்பளிப்பாக அள்ளி வழங்க ஆரம்பித்தார் கபூர்.

2006-ல் அமெரிக்காவில் உள்ள ‘டொலைடோ’ மியூசியத் துக்கு மட்டுமே 244 சிலைகள் மற்றும் கலைப் பொருட்களை அன்பளிப்பாக கொடுத்து அசத்திய சுபாஷ் கபூர், அதே ஆண்டில் அந்த மியூசியத்துக்கு 250 ஆயிரம் டாலரில் இருந்து 500 ஆயிரம் டாலருக்குள் நிதியாக நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியலிலும் இடம்பிடித்தார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையைச் சேர்ந்த சஞ்சீவி அசோகன்தான் சுபாஷ் சந்திர கபூரின் நம்பிக்கைக்குரிய தளபதி. 2005-ல் சென்னையில் பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில்தான் இருவரும் முதன்முதலில் சந்தித் தாகச் சொல்கிறது போலீஸ். 2005 மற்றும் 2006-ல் தமிழகத் துக்கு நான்கைந்து முறை வந்து போயிருக்கிறார் கபூர். அப்போ தெல்லாம், தான் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பதை மறைத்து இந்திய பிரஜை என அடையாளம் கொடுத்தே ஹோட்டலில் அவர் தங்கியதாகத் தெரிகிறது.

silai1_2934844a.jpg

விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயில்

தமிழகப் பயணங்களின்போது தமிழகத்தின் பல்வேறு பகுதி களுக்கும் குறிப்பாக சோழர் காலத்து கோயில்கள் அதிகம் உள்ள மிகப் பழமையான கோயில் களுக்கு சஞ்சீவி அசோகனின் வழிகாட்டலில் சென்று வந்த கபூர், அங்கெல்லாம் தனக்கு என்ன தேவை என்பதை குறிப் பெடுத்துக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். கபூர் விரும்பி யதை எல்லாம் தனது லோக்கல் ஏஜெண்ட்கள் மூலமாக கச்சிதமாக செய்துகொடுத்து வளமடைந்தார் சஞ்சீவி அசோகன். இப்படித்தான் சுத்தமல்லி சுந்தரேஸ்வரர் மற்றும் புரந்தான் பிரகதீஸ்வரர் கோயில்களுக்குச் சொந்தமான 26 ஐம்பொன் சிலைகளும், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலின் அர்த்தநாரீஸ்வரர், பிரத்தியங்கரா கற்சிலைகளும் நாடு கடத்தப்பட்டன. அது எப்படி தெரியுமா?

- சிலைகள் பேசும்...

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-9-கடத்தப்பட்ட-பிரத்தியங்கரா-கற்சிலைகள்/article8858768.ece?homepage=true

Link to comment
Share on other sites

சிலை சிலையாம் காரணமாம் - 10: நடராஜரும் நர்த்தன கிருஷ்ணரும்!

 
silai1_2937961f.jpg
 

சுபாஷ் கபூரின் நம்பிக் கைக்குரிய கூட்டாளி களில் ஒருவரான சஞ்சீவி அசோகன் கேரள மாநிலத்தின் கொச்சியில் பிறந்து சென்னைவாசி ஆன வர். சென்னை எழும்பூரில் ‘செல்வா எக்ஸ்போர்ட்ஸ்’ என்ற ஆர்ட் கேலரியை நடத்திக் கொண்டே கபூரின் கடத்தல் கூட்டாளியாக இருந்தவர். இவர் மீது கடந்த காலங்களில் பல்வேறு சிலைக் கடத்தல் வழக்குகள் பதிவாகி இருந்தும் போலீஸ் கையில் சிக்காமல் இருந்தார். இவர் மூலமாகத்தான் தமிழகத்தின் பழமையான கோயில்கள், சிலைகள், தொல்லி யல் சின்னங்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்தார் கபூர்.

குறிப்பாக, South Indian Bronzes, Master Pieces of Indian Sculptures And Survey Maps என்ற புத்தகங்களில் இருந்தே இவர்கள் தகவல்களை திரட்டியதாகச் சொல்கிறது சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு (சி.ஐ.டி.) போலீஸ். அரியலூர் மாவட்டம் புரந்தானில் உள் ளது கைலாசநாதர் கோயில். மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டது இந்தக் கோயில். சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்த இக்கோயி லுக்குள் ‘கதண்டு இருப்பதாக யாரோ சிலர் கிளப்பிவிட, ஆண்டுக்கணக்கில் மூடிக் கிடந்தது கோயில். இதை நோட்டம்விட்ட சஞ்சீவி, அங்கிருந்த ஐம்பொன் சிலைகளை கடத்துவதற்கு திட்டம் போடுகிறார்.

இதற்காக உடையார் பாளையத்தைச் சேர்ந்த கலிய பெருமாளையும் உள்ளூர்வாசி யான ரத்தினத்தையும் தயார் செய்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஜனவரி 2006-ல், விநாயகர், சம்பந்தர், அம்மன் ஆகிய மூன்று சிலைகளை கோயிலிருந்து கடத்துகிறார்கள். கடத்தப்பட்ட சிலைகளை சூட்டோடு சூடாக சென்னைக்கு கொண்டுவந்து சஞ்சீவியிடம் ஒப்படைக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு 2 லட்ச ரூபாய் கொடுத்த சஞ்சீவி, அவைகளைப் போலவே மூன்று போலி சிலைகளை தயாரித்து அத்துடன் ஒரிஜினல் சிலை களையும் வைத்து அனைத்துமே கைவினைப் பொருட்கள்தான் என தொல்லியல் துறையில் சான்றிதழ் பெறுகிறார்.

silai_2937960a.jpg

இந்தப் போலி ஆவணத்தை வைத்துக்கொண்டு தனது கூட் டாளி பாக்கியகுமாரின் ‘எவர் ஸ்டார் இண்டர்நேஷனல் சர் வீசஸ்’ கம்பெனி மூலமாக ஜனவரி 2006-ல் சென்னை துறை முகம் வழியாக புரந்தானின் மூன்று சிலைகளையும் அமெரிக் காவுக்குக் கடத்துகிறார் சஞ்சீவி. அடுத்ததாக 2006 மே மாதத்தில் கலியபெருமாளும் ரத்தினமும் அதே கோயிலில் தனி அம்மன், சந்திரசேகரர், சிவகாமி அம்மன் ஆகிய மூன்று சிலைகளையும் திருடுகிறார்கள். இதற்கு சஞ்சீவி கொடுத்த சன்மானம் 2 லட்ச ரூபாய்.

இந்த மூன்று சிலைகளும் வழக்கமான பாணியில் போலி ஆவணங்களோடு 2006 மே மாதம் 12 மற்றும் ஜூலை 28-ல் இரண்டு பிரிவாக சென்னை துறைமுகம் வழியாக கபூரின் ‘நிம்பஸ்’ கம்பெனிக்குப் போய்ச் சேர்ந்தன. இரண்டு முறை திருட்டுச் சம்ப வங்கள் நடந்த பிறகும் சிலைகள் திருடுபோன விவகாரம் உள்ளூர் முக்கியஸ்தர்களுக்கோ, கோயில் நிர்வாகத்துக்கோ தெரிய வில்லை. கோயிலில் உள்ள சிலைகளைக் கொள்ளையடிக்க வசதியாகவே ‘கதண்டு’ புரளி கிளப்பப்பட்டிருக்கிறது என்பது பின்னாளில் போலீஸுக்குக் கிடைத்த தகவல். இதேபோல் இந்தக் கடத்தலுக்குப் பிறகு, அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் திடீர் பணக்காரர்கள் ஆனதாகவும் சொல்லப்படுகிறது.

தங்களுக்குச் சாதகமான பல அம்சங்கள் இருந்ததால் அதே சிவன் கோயிலில் இருந்த நடராஜர், நர்த்தன கிருஷ்ணர் சிலைகளை கடத்த திட்டமிடுகிறார் சஞ்சீவி அசோகன். இம்முறை ராஜபாளையத்தைச் சேர்ந்த பிச்சைமணியிடம் அசைன்மென்ட் ஒப்படைக்கப்படுகிறது. ரத் தினம், கலியபெருமாளை துணைக்கு வைத்துக் கொண்டு இதை கச்சிதமாக செய்து முடிக் கிறார் பிச்சைமணி. இதற்காக அவருக்கு 3 லட்ச ரூபாய் தருகிறார் சஞ்சீவி.

நடராஜரும் நர்த்தன கிருஷ்ண ரும் வழக்கமான பாணி யில், வழக்கமான வழியில் 25.11.2006-ல் அமெரிக்காவுக்கு வழியனுப்பப்படுகிறார்கள். இந்த நிலையில், சிலைகள் கடத்தலை சிக்கலின்றி செய்துமுடித்த சஞ்சீவிக்கு தனது நியூயார்க் ஹெச்.எஸ்.பி.சி. வங்கிக் கணக் கிலிருந்து 1,16,37,694 ரூபாயை டாலராக டிரான்ஸ்ஃபர் செய் கிறார் சுபாஷ் கபூர்.

இந்நிலையில் (சிலைகள் திருடுபோன பிறகு), புரந்தான் சிவன் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்ப தாக(!?) கருதிய அறநிலையத் துறை அதிகாரிகள், சிலைகளை எடுத்துக் கொண்டுபோய் பக்கத் துக் கோயிலில் பாதுகாப்பாக வைப்பதற்காக 14.06.2008-ல் அங்கு வருகிறார்கள். அப்போது, ‘எங்கள் ஊர் கோயிலில் இருந்து சிலைகளை எடுக்க வேண்டாம். நாங்களே கிரில் கதவுகள் அமைத்து சிலைகளைப் பத்திர மாகப் பார்த்துக் கொள்கிறோம்’ என்று ஊர்மக்கள் ஒருமித்து சொல்லவும்; வந்த வழியே திரும்புகிறார்கள் அறநிலையத் துறை அதிகாரிகள்.

சொன்னபடியே, கோயில் வாசலுக்கு புதிதாக கிரில் கதவை ஏற்பாடுசெய்த ஊர்மக்கள், அதை பொருத்துவதற்காக 18.08.2008-ல் கோயிலுக்குப் போகிறார்கள். அப்போதுதான், கோயில் பூட்டு உடைக்கப்பட்டு சிலைகள் திருடப்பட்ட விஷ யமே தெரியவருகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த விக்கிரமங்கலம் போலீ ஸார், சென்னையில் பதுங்கி இருந்த கலிய பெருமாளையும் ரத்தினத்தையும் 24.08.2008-ல் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு 3.11.2008-ல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு (சி.ஐ.டி)-க்கு மாற, அப்புறம்தான் விசாரணை சூடுபிடித்தது.

- சிலைகள் பேசும்..

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-10-நடராஜரும்-நர்த்தன-கிருஷ்ணரும்/article8869586.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக நடராஜர்தான் நர்த்தனமாடுவார், கிருஸ்ணர் ஊதுறதை விட்டுட்டு எதுக்கு ஆட வெளீக்கிட்டவர்,அதுதான் கடத்திட்டுப் போட்டார்கள்....! tw_blush:

Link to comment
Share on other sites

சிலை சிலையாம் காரணமாம் - 12: கடத்தல் மன்னன் கபூர்!

 

 
தீனதயாள் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளுடன் பொன்.மாணிக்கவேல்
தீனதயாள் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளுடன் பொன்.மாணிக்கவேல்

தன்னுடைய ஆர்ட் கேல ரிக்கு புதிதாக விற் பனைக்கு வந்திருக்கும் கலைப் பொருட்கள் குறித்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பத்திரிகைகளில் பளிச் படங்களோடு விளம்பரம் செய் வது கபூரின் வழக்கம். அந்த விளம்பரங்களில் சிலவும், தமிழகக் கோயில்களில் இருந்த சிலைகள் கபூர் கேலரியில் இருந்த தைக் காட்டிக் கொடுத்தன. சஞ்சீவி அசோகன் கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்து ‘லேப்டாப்’ ஒன்றையும் போலீஸ் கைப்பற்றியது. ஆனால், அதில் இருந்து தகவல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டதாக(?) பின்னர் தெரிவித்த போலீஸார், ‘லேப்டாப் ஹார்டு டிஸ்க்கை டெல்லி வரைக் கும் எடுத்துச் சென்றும், அழிந்த தகவல்களை மீட்க முடியவில்லை’ என்று கைவிரித்துவிட்டார்கள்.

தொடர் விசாரணையில், சஞ்சீவி அசோகனிடம் இருந்து சுபாஷ் கபூரைப் பற்றிய திடுக்கிடும் பல தகவல்கள் கிடைத்தாலும், அவர் இருக்கும் திசையைத் தெரிந்துகொள்வதற்குக் கூட நம்மூர் போலீஸ் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில், கபூருக்கு நெருக்கமான சிங்கப்பூர் பெண்மணி ஒருவர்தான் கபூரைப் பற்றிய ரகசியங்களை தானே முன்வந்து கொட்டினார்.

கபூருக்கு பல்வேறு நாடு களைச் சேர்ந்த பெண் தோழி களோடு வர்த்தக தொடர்புகள் இருப்பதாகச் சொல்கிறது போலீஸ். சிங்கப்பூரில் ஆர்ட் கேலரி நடத்தும் தமிழ் பெண்மணி ஒருவருக்கும் கபூருக்கும் வியாபாரத் தொடர்புகள் உண்டு. ஒருகட்டத்தில், இவர்களுக்குள் ஏதோ ஒரு காரணத்துக்காக பிரச்சினை வெடிக்க, தன் னிடம் வாங்கிய சிலைகளுக் குப் பணம் தர மறுப்பதாக அந்தப் பெண்மணி மீது வழக்குப் போட்டார் கபூர்.

அந்த வழக்கில் தனக்குப் பாதகமான தீர்ப்பு வந்ததால் கோபமுற்ற சிங்கப்பூர் பெண் மணி, கபூரை காட்டிக் கொடுக்கவும் துணிந்தார். அவர் தான் கபூரைப் பற்றிய ரகசிய தகவல்களையும் அவரது பாஸ்போர்ட் எண், லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளிட்ட தகவல் களை தமிழக போலீஸ், இந்திய தொல்லியல் துறை, அமெரிக் காவின் ஹோம்லேண்ட் செக் யூரிட்டி போலீஸ் உள்ளிட்ட இடங்களுக்கு ரகசியமாக அனுப்பி இருக்கிறார். '

silai1_2940366a.jpg

சிலை கடத்தல் புகாரில் சிக்கிய சென்னை தீனதயாள் வீட்டில் கைப்பற்றப்பட்ட கற்சிலைகள்

2011 அக்டோபரில் ஜெர்மனி யின் ‘கெலோன்’ நகருக்கு அருகே ‘ஸ்டுட்கார்ட்’டில் (Stuttgart) நடைபெறும் கலைப் பொருள் கண்காட்சிக்காக கபூர் ஜெர்மனி வரவிருக்கும் தகவலையும் முன் கூட்டியே ஜெர்மனி ‘இண்டர் போல்’ அமைப்புக்குச் சொன் னதும் அதே பெண்மணி தான். இவர் கொடுத்த தகவல் களை வைத்து விசா ரணையை விரித்த அமெரிக்க போலீஸார், கபூரை கைது செய்து அவரது கடத்தல் சாம்ராஜ்யத்தை அடியோடு வீழ்த்தும் சூழலை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், அதற்குள்ளாக ஜெர்மனி ‘இண்டர்போல்’ உதவி யுடன் கபூரை வளைத்துவிட்டது தமிழக போலீஸ். அமெரிக்க போலீஸ் கையில் கபூர் சிக்கி யிருந்தால் அவரது ‘நெட்வொர்க்’ என்னவென்று இந்நேரம் முழுமை யாக வெளிவந்திருக்கும். தமிழக போலீஸ் கையில் சிக்கியதால் நான்கு ஆண்டுகளாகி யும் கபூரின் மர்ம சரித்திரம் இன்னும் வெளிச்சத்துக்கு வராமலேயே இருக்கிறது. விசாரணையில் கபூர் அளித்த வாக்குமூலமும் இதுவரை வெளியிடப்படாமல் ரகசியம் காக்கப்படுகிறது.

இதனிடையே, ஜெர்மனியில் கைது செய்யப்பட்ட கபூரை தமிழகம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு (சி.ஐ.டி) பிரிவு போலீஸார் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூலம் மேற்கொண்டார்கள். இது தொடர் பாக கடிதத் தொடர்புகள் நடந்து, பூர்வாங்க நடவடிக்கைகளைத் தொடங்குவதற்குள்ளாக ஐந்து மாதங்களை விழுங்கிவிட்டது நமது அரசு இயந்திரத்தின் அசுர வேக(!) இயக்கம்.

அதுவரை சும்மா இருக்குமா கடத்தல் மாஃபியா? ‘ஜெர்மனியில் கைது செய்யப்பட்ட கபூரை ஐந்து மாதங்களாக சட்டவிரோத காவலில் வைத்திருக்கிறார்கள். எனவே, அவருக்கு எதிரான பிடிவாரண்ட் உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என்று சென்னை நீதிமன்றத்தில் கபூருக்காக மனு தாக்கல் செய்யப்பட்டது. இப்படி ஒரு மனு தாக்கலானது தெரிந்ததுமே ஜெர்மனி போலீ ஸார் ஆடிப் போனார்கள். ‘சட்டவிரோத காவல்’, என்று சொல்லி தங்களுக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு வந்துவிடுமோ என்பதே அவர் களின் அச்சம்.

அந்த சமயத்தில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மட்டும் சிலைக் கடத்தல் தடுப்பு (சி.ஐ.டி.) பிரிவில் இல்லாமல் போயிருந்தால், கபூர் இந்நேரம் வெளியில் சுதந்திரமாக உலவிக் கொண்டிருப்பார். கபூர் தரப்பில் தாக்கலான மனுவுக்கு உடனடியாக பதில் தந்த பொன்.மாணிக்கவேல், கபூரை தமிழகம் கொண்டுவர எடுக்கப்பட்டு வந்த நடவடிக்கைகளை உரிய முறையில் நீதிமன்றத்துக்கு புரியவைத்தார். இதை ஏற் றுக்கொண்டு, பிடிவாரண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரும் மனுவை நிராகரித்தது நீதிமன்றம்.

dey_2940371a.jpg

சுபாஷ் சந்திர கபூர் ஜெயகொண்டம் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட போது...

2011-ல் கபூர் கைதானதுமே ‘கபூரிடம் கடத்தல் சிலைகள், கலைப் பொருட்களை வாங்கியவர் கள் அதை உடனடியாகத் தெரிவிக்கவும்’ என அமெரிக்க அரசு ஓர் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், கபூரிடம் சிலைகளை வாங்கி வைத்திருப்பவர்களில் ஒருவர்கூட மூச்சுக் காட்டவில்லை. அதே சமயம், கபூர் கைது செய்யப்படுவதற்கு இரண்டரை மாதங்கள் முன்னதாக 8.8.11-ல் இங்கே தமிழக சிலைக் கடத் தல் தடுப்பு (சி.ஐ.டி) பிரிவு போலீஸார் ஒரு செய்தி அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் பல மர்மங்கள் மறைந்திருந்தன.

- சிலைகள் பேசும்…

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-12-கடத்தல்-மன்னன்-கபூர்/article8879704.ece?homepage=true

Link to comment
Share on other sites

சிலை சிலையாம் காரணமாம் - 13: ஐம்பொன் சிலையில் தங்கம் இருக்கிறதா?

 

 
மோகன்ராஜ் ஸ்தபதி
மோகன்ராஜ் ஸ்தபதி

நெல்லை மாவட்டம் பழவூரில் உள்ளது நாறும்பூநாதர் கோயில். இங்கிருந்த நடராஜர், சிவகாமி அம்மன், விநாயகர், கிருஷ் ணர், நாறும்பூநாதர் உள்ளிட்ட 13 ஐம்பொன் சிலைகள் 2005 ஜூன் 18-ல் களவுபோனது. இதுவும் சுபாஷ் கபூரின் இயக் கத்தில் நடந்த கடத்தல்தான். அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சக்திமோகன், பாலச்சந்தர், சின்னக் காஞ்சிபுரம் ஆறுமுகம் ஆகியோர் இந்தச் சிலைகளைத் திருடியதாகவும் மதுரையைச் சேர்ந்த சவுதி முருகன், ஷாஜ கான், அருணாசலம், காரைக் குடி தினகரன் ஆகியோர் அந்த சிலைகளில் சிலவற்றை 9 லட்ச ரூபாய்க்கு கபூரின் கூட்டாளியான அண்மையில் சென்னையில் கைது செய் யப்பட்ட தீனதயாளுக்குக் கைமாற்றிவிட்டதாகவும் சொல் கிறது போலீஸ்.

கூரியரில் சென்னைக்கு வந்த சிலைகள்

இந்த வழக்கில் தீன தயாளும் கபூரும் முக்கியக் குற்றவாளிகளாகச் சேர்க்கப் பட்டார்கள். திருடப்பட்டதில் பெரும்பகுதி சிலைகள் திரு வனந்தபுரத்தில் இருந்து மும் பைக்கு கூரியர் சர்வீஸ் மூலம் அனுப்பப்பட்டு மும்பையில் இருந்து சென்னைக்கு வந்ததாக வும்; அங்கே இருந்து நியூயார்க் கில் உள்ள கபூரின் ‘ஆர்ட் கேலரி’க்குக் கடத்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.

இதற்கிடையே, திருடப்பட்ட சிலைகளில் ஒன்றான பால விநாய கரை இரண்டு மாதம் கழித்து கேர ளத்தில் விற்க முயன்றதாக கொல் லத்தைச் சேர்ந்த சேது, அஜீஸ், தமிழகத்தைச் சேர்ந்த விநாயகம், செல்லப் பாண்டி, காமராஜ் ஆகியோரை கைது செய்தனர் போலீஸார். அதேசமயம், பழவூர் சிலைத் திருட்டின் பின்னணியில் ஒரு கொலையும் நடந்தது. அந்தக் கொலை ஏன் நடந்தது என்று பார்ப்பதற்கு முன்பாக, ஐம்பொன் சிலைகளைப் பற்றி சொல்லியாக வேண்டும்.

ஐம்பொன் சிலையில் தங்கம் இருக்கிறதா?

ஐம்பொன் சிலை என்றாலே அது ஏதோ விலை மதிக்க முடியாத உலோகம் என்றும், அதில் தங்கம் அதிகம் கலந்திருக்கும் என்றும் பரவலான கருத்து உள்ளது. இது உண்மையில்லை. ‘‘ஐம்பொன் சிலைகள் அதன் பழமையைப் பொறுத்து உத்தேசமாக மதிப்பீடு செய்யப்படுகின்றன’’ என்கிறார் சுவாமி மலையைச் சேர்ந்த கே.மோகன்ராஜ் ஸ்தபதி. தஞ் சைப் பெரிய கோயிலை உரு வாக்கிய ஸ்தபதிகளின் 30-ம் தலைமுறை வாரிசான மோகன் ராஜ், ‘குடந்தை வட்ட கோயில் செப்புத் திருமேனிகள், படிமக் கலை, அலங்காரக் கலை’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரைக் காக ஆய்வுகள் மேற்கொண் டிருப்பவர்.

‘‘பொதுவாக அந்தக் காலத்தில் உலோகத்தை ‘பொன்’ என்று சொல்வது மரபு. ஐம்பொன் சிலைகளில் செம்பு, பித்தளை, காரீயம், வெள்ளி, தங்கம் ஆகிய ஐம்பொன்னும் சேர்ந்திருக்கும். இதில் தங்கம், வெள்ளியின் அள வானது மிகச் சொற்பமானது. ஐம்பொன் சிலைகளில் 85 சதவீதம் செம்பும், 13 சதவீதம் பித் தளையும், 2 சதவீதம் காரியமும் இருக்கும். இதுவே 100 சதவீதமாகி விடும். இதில்லாமல் கிராம் கணக்கில் வெள்ளியும் தங்கமும் அதில் சேர்க்கப்படும். இது சிலை யின் எடைக் கணக்கில் வராது.

சோழர் காலத்தில்தான் மிக அதிக அளவில் ஐம்பொன் சிலைகள் செய்யப்பட்டன. அந்தக் காலத்தில் திருக்கோயில்களை எழுப்பிய அரசர்கள், அவை களில் வைப்பதற்காக ஐம்பொன் சிலைகளை செய்ய ஸ்தபதி களுக்கு ஒப்புதல் வழங்கினார்கள். அதன்படி சிலைகளுக்கான வார்ப் பட அச்சு தயாரானதும் அரசர் களோ, அவர்களால் அங்கீகரிக்கப் பட்ட ராஜப் பிரதானிகளோ சிலை செய்யும் இடத்துக்கு நேரில் வருவார்கள்.

அவர்கள் முன்னிலையில் ஐம் பொன் சிலைக்கான மூன்று உலோகங்கள் களிமண் மூசை களில் உருக்கப்பட்டு வார்ப்படத் தில் ஊற்றப்படும். வார்ப்பட அச்சை தலைகீழாக மண்ணுக்குள் புதைத்து வைத்து, அதன் கால் பகுதி வழியாகத்தான் உலோ கக் குழம்பை ஊற்றுவது வழக்கம். அப்போதுதான் உலோ கக் குழம்பானது சீரான அழுத் தத்தில் காற்றுக் குமிழிகள் இல்லாமல் அச்சின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று உறுதியான சிலை கிடைக்கும்.

silai1_2943620a.jpg

சிலைகளின் முகங்கள் பிரகாசிக்க இதுவும் காரணம்

சிலை வார்க்கப்படுவதை நேரில் பார்வையிட வரும் ராஜப் பிரதானிகள், தாங்கள் அணிந் திருக்கும் தங்கம், வெள்ளி நகை களில் ஒன்றிரண்டை பயபக்தி யுடன் எடுத்து கொதிக்கும் உலோ கக் குழம்பில் போடுவது உண்டு. நகைகளில் உள்ள தங்கமும் வெள்ளியும் உருகி, உலோகக் குழம்பின் மேல் பகுதியில் படிமமாக நிற்கும். உலோகக் குழம்பை அச்சின் கால் பகுதி வழியாக ஊற்றும்போது தங்கம், வெள்ளி கலவையானது பெரும் பாலும் சிலையின் தலைப் பகுதிக்குப் போய்விடும். ஐம் பொன் சிலைகளின் முகப் பகுதிகள் கூடுதல் பிரகாசமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். சுமார் 6 அங்குல ஐம்பொன் சிலைக்கு வார்ப்படம் சுமார் ஒரு மணி நேரம் மண்ணுக்குள் புதைந்திருந்தால் போதும், குளிர்ந்துவிடும். அதுவே மூன்றடி சிலையாக இருந்தால் குளிர ஒருநாள் ஆகும். ஐம்பொன் சிலைகள் செய்ய ஆர்டர் கொடுப்பவர்கள் கிராம் கணக்கில் தங்கம், வெள்ளியை தங்கள் கையால் கொடுக்கும் நடைமுறை இப்போதும் தொடர்கிறது’’ என் கிறார் மோகன்ராஜ்.

அதுசரி, கடத்தல்காரர்கள் நடராஜர் சிலைகளையே குறி வைத்து தூக்குவது ஏன்? அதற்கு என்ன பதில் சொன்னார் மோகன்ராஜ்?

- சிலைகள் பேசும்...

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-13-ஐம்பொன்-சிலையில்-தங்கம்-இருக்கிறதா/article8889919.ece

Link to comment
Share on other sites

சிலை சிலையாம் காரணமாம் - 14: நடராஜர் சிலைகளை கடத்துவது ஏன்?

 

 
  • silai1_2946851g.jpg
     
  • சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு இணைய பக்கத்தில் நடராஜர்.
    சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு இணைய பக்கத்தில் நடராஜர்.

தமிழகத்தில் இதுவரை நடந்திருக்கும் கோயில் சிலை திருட்டு சம்பவங் களில் நடராஜர் சிலையே பிர தானமாகக் கடத்தப்பட்டுள் ளது. நடராஜர் சிலைகள் மீதான ஈர்ப்பின் காரணத்தை விளக் கிய ஸ்தபதி மோகன்ராஜ், ‘‘இப்போது நாம் பேசிக் கொண்டிருக்கும் விஞ்ஞானத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தெரிந்து வைத்திருந் தார்கள். அதை பின்னணியாக வைத்துதான் நடராஜர் சிலை கள் வடிக்கப்பட்டன. நடராஜர் சிலையானது படைத்தல் (உடுக் கையுடன் கூடிய வலது மேல் கை), காத்தல் (வலது முன் கை), அருளல் (பூமியை நோக்கி இறங்கும் இடது முன் கை), மறைத்தல் (இடது மேல் கை) ஆகிய அம்சங் களைச் சொல்கிறது.

அண்டத்தின் சுழற்சியை தனது சுழற்சி நடனத்தின் மூலம் உணர்த்தும் நடராஜர், ஐம்பூதங் களால் உண்டானது இந்த அண்டம் என்பதை புரிய வைக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, அள வில் பெரியதாக இருக்கும் நடராஜர் சிலையை வைத்திருப் பது பெருமை, அதனால் ஐஸ் வர்யம் பெருகும் என்று நம்பப் படுகிறது. இத்தகைய நம்பிக்கை கள் இருப்பதால் நடராஜரைக் கடத்தினால் கை நிறையக் காசு பார்க்கலாம் என்பது கடத்தல் காரர்களின் கண்ணோட்டமாக இருக்கிறது. ஆனால், ‘சிவன் சொத்து குலநாசம்’ என்பதை ஏனோ அவர்கள் மறந்து விடுகிறார்கள்’’ என்றார்.

இனி, பழவூர் சிலைக் கடத்தலுக்கு வருவோம். கபூருக்காக கடத்தப்பட்ட நாறும்பூநாதர் கோயில் சிலைகளில் நடராஜர் சிலை மட்டும் நகைக் கடைக்காரர் ஒருவரின் பொறுப்பில் இருந்தது. அந்த சிலையில் பெருமளவு தங்கம் அல்லது அதன் உள்ளே விலை உயர்ந்த கற்கள் இருக்கலாம் என நினைத்த அவர், நடராஜர் சிலையின் ஒரு கையை மட்டும் அறுத்து உருக்கினார். ஆனால், அதில் அவர் எதிர்பார்த்த எதுவும் இல்லை. நடராஜர் சிலையின் கை அறுக்கப்பட்ட விஷயத்தைக் கேட்டு, சிலைக் கடத்தல் ஏஜென்ட் கள் கொதித்துப் போனார்கள்.

ஒச்சமான (மூளி) சிலை சர்வதேச சந்தையில் விலை போகாதே என்று ஆத்திரப்பட்ட அவர்கள் நகைக் கடை புள்ளி யோடு மோதலில் ஈடுபடுகிறார்கள். இந்த மோதலில் நகைக் கடைப் புள்ளி மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். ஆக, தனது கையை அறுத்தவரின் கருவை அப்போதே அறுத்துவிட்டார் நட ராஜர்! கை அறுந்தாலும் பரவா யில்லை என்று சொல்லி பழவூர் நடராஜரை லண்டனுக்கு அனுப்பி வைக்கச் சொல்கிறார் கபூர்.

வெளிநாடுகளில் இருந்து கடத்தப்பட்டு சிதிலமடைந்து, அரைகுறையாக வரும் சிலை களை சரிசெய்து கொடுப்பதற் காகவே லண்டனில் கெட்டிக்காரக் கொல்லர் ஒருவரை கைவசம் வைத்திருக்கிறார் கபூர். லண்டனுக்குத் தருவிக்கப்பட்ட பழவூர் நடராஜருக்கு புதிதாக கை செய்து பொருத்திக் கொடுக்கிறார் அந்தக் கொல்லர். இதையடுத்து, பழவூர் நடராஜர் புதுப் பொழிவு பெற்று கபூரின் ‘ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட்’ ஏப்ரல் 2007 கேட்லாக்கில் இடம்பிடிக்கிறார். இந்தத் தக வலை ‘தி இந்தியா ப்ரைடு புரா ஜெக்ட்’ தன்னார்வலர்கள்தான் ஆதாரத்துடன் உறுதிப்படுத்து கிறார்கள்.

silai11_2946854a.jpg

பழவூர் வழக்கில் மறைக்கப்பட்ட உண்மைகள்

பழவூர் சிலைக் கடத்தலின் பின்னணியில் நடந்த கொலை உட்பட பல உண்மைகள் மறைக் கப்பட்டன. இதில், போலீஸ் தரப் பிலும் சிலர் பலன் அடைந்ததை மறுப்பதற்கு இல்லை. இன் னொருபுறம், இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளிகளைக் காபந்து பண்ணவும்; வழக்கை நீர்த்துக் போகச் செய்யவும் சதி வேலைகள் நடந்தன. ஜெர்மனி யில் அக்டோபர் 30-ல் கபூர் கைது செய்யப்படுகிறார். அதற்கு இரண்டரை மாதங்கள் முன்னதாக 8.8.11-ல் ஒரு செய்தி அறிக்கை வெளியிடுகிறது தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு (சி.ஐ.டி.) பிரிவு, பழமையான இரண்டு ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டதாகச் சொன்னது அந்த அறிக்கை. அந்த இரண்டு சிலைகளில் ஒன்று பழவூர் கோயிலில் திருடுபோன நடராஜர் சிலை என்பதுதான் அதிர்ச்சியான செய்தி.

கைப்பற்றப்பட்ட அந்த இரண்டு சிலைகளும் எந்தக் கோயிலுக்குச் சொந்தமானவை? அவை எப்படி இங்கு வந்து சேர்ந்தன என்ற விவரம் எதையும் வெளியிடாத சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், ‘‘கலைப் பொருள் டீலர் ஒருவர் தன்னிடம் இருந்த இந்தத் திருட்டு சிலைகளை நன்னடத்தையின் காரணமாக தாமாகவே கொண்டுவந்து திருப்பி ஒப்படைத்துவிட்டார். அவர் யார் என்ற விவரத்தை வெளியில் சொல்லமுடியாது’’ என்று கெட்டிக்காரத்தனமாக மழுப்பினார்கள். (இந்த அறிக்கை வெளியானபோது பொன்.மாணிக்கவேல் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் இல்லை என்பது முக்கியமான விஷயம்).

நடராஜரை ஒப்படைத்த சென்னைப் புள்ளி

பழவூரில் இருந்து கடத்தப்பட்ட கை அறுந்த நடராஜர் சிலை நியூயார்க்கில் கபூரிடம் இருந்த நிலையில், அது எப்படி எந்த வழியில் என்ன காரணத்துக்காக மீண்டும் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டது என்பது இதுவரை விளங்காத மர்மம்!

சிலைகளை ஒப்படைத்தவருக் கும் சிலைக் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருக்கிறது என்பது தெரிந்திருந்தும், சிலையை ஒப்படைத்த நபரை அன்றைக்கு சொல்லாமல் மறைத்தது போலீஸ். இப்போது சிக்கி இருக்கும் தீனதயாள்தான் பழவூர் நடராஜரை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவிடம் மீண்டும் ஒப்படைத்தவர் என்பது இதுவரை வெளியிடப்படாத செய்தி.

இந்த உண்மைகள் மறைக் கப்பட்ட நிலையில், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பே, வில்லிப்புத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் எப்படியோ முடிந்திருக்க வேண்டிய இந்த வழக்கை மறுவிசாரணைக்கு எடுத்திருக்கும் பொன்.மாணிக்க வேல், தீனதயாளையும் நீதிமன்றத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டார். குறுக்கீடுகள் இல்லாமல் விசாரணை நடந்தால் பழவூர் நடராஜர், நிச்சயம் பலரது தூக்கத்துக்கு வேட்டு வைப்பார்.

- சிலைகள் பேசும்.. | ‘The India Pride Project’ உதவியுடன்..

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-14-நடராஜர்-சிலைகளை-கடத்துவது-ஏன்/article8900317.ece

Link to comment
Share on other sites

சிலை சிலையாம் காரணமாம் -15: கோடிகளில் விற்பனையாகும் ஐம்பொன் சிலைகள்!

 

 
ஜெனிவா ஃப்ரீபோர்ட்டில் இருந்த கல் சவப் பெட்டி
ஜெனிவா ஃப்ரீபோர்ட்டில் இருந்த கல் சவப் பெட்டி

பல்லவர், சோழர், பாண்டி யர் மற்றும் விஜயநகர காலத்தைச் சேர்ந்தவை என தமிழகத்தின் சிலைகளை வகைப்படுத்துகிறார்கள். இதில் பல்லவர் காலத்து சிலைகள்தான் அதிக விலை யில் மதிப்பிடப்படுகிறது. தொன்மையையும் வேலைப்பாடு களையும் வைத்தே சிலைகளின் விலையை நிர்ணயம் செய்கிறார் கள். சோழர் காலத்தில் கி.பி. 9-ம் நூற்றாண்டில் இருந்து 11-ம் நூற்றாண்டு வரையில்தான் ஐம்பொன் சிலைகள் அதிக அளவில் வடிக்கப்பட்டன. இந்தச் சிலைகளுக்குத்தான் இப்போது கடத்தல் சந்தையில் கோடிகளைக் கொட்டிக் கொடுக்கிறார்கள்.

ஐம்பொன் சிலைகள் ஆண்டுக் கணக்கில் மண்ணுக்குள் புதைந் திருந்தால் அவைகளின் மீது பச்சை நிறத்தில் ஒரு படிமானம் (Patina) படிந்திருக்கும். இந்த படிமானத்தின் அளவைப் பொறுத் தும் சிலைகளுக்கு விலை மதிப் பிடப்படுகிறது. சுபாஷ் சந்திர கபூரின் கூட்டாளியான லண்டன் கொல்லர், சிலைகளில் செயற்கை யாக (Artificial Patina) பச்சை படிமத்தை படியவைப்பதில் கெட்டிக்காரர். இயற்கையான படிமானம் சிலைகளைப் பாது காக்கும். ஆனால் செயற்கைப் பூச்சு சிலைகளை அரித்து விடும் என்கிறார்கள். தமிழ கம் திரும்பியிருக்கும் புரந்தான் நடராஜர் சிலை உள்ளிட்டவைகளில் பூசப்பட்டுள்ள செயற்கை படிமானத்தை உடனடியாக அகற்றாவிட்டால் சிலைகளுக்கு ஆபத்து என்கிறார்கள்.

சுவிஸ் வங்கியில் கள்ளப் பணத்தை பதுக்கி வைத்திருப் பதைத்தான் நாம் இதுவரை பிர மாதமாக பேசிக் கொண்டிருக் கிறோம். ஆனால், சுவிட்ஸர்லாந் தில் இன்னொரு வகையான பதுக்கலும் நடைபெறுகிறது. சுவிட்ஸர்லாந்து அரசாங்கமானது ஜெனிவா துறைமுகத்தில் ‘ஃப்ரீபோர்ட் (Freeport)' ஒன்றை வைத்திருக்கிறது. இங்கே, முற்றிலும் குளிரூட்டப்பட்ட ‘க்ளை மேட்டிக் கண்ட்ரோல்’ கிடங்குகள் ஏராளம் உள்ளன. சர்வதேசப் பதுக்கல் புள்ளிகள் பலரும் இந்தக் கிடங்குகளை வாடகைக்கு எடுத்து வைத்திருக்கிறார்கள்.

கருப்புப் பண முதலைகள் தங்களிடம் உள்ள கருப்புப் பணத் தைக் கொண்டு உலகச் சந்தையில் விலை மதிப்பு மிக்க பழமையான கலைப் பொருட்களை மில்லியன் கணக்கில் டாலர்களைக் கொட் டிக் கொடுத்து வாங்கிக் கொண்டு வந்து, இந்தக் கிடங்குகளில் பதுக்கி வைக்கிறார்கள். இதை அங்கீகரிக்கும் சுவிஸ் நாட்டு அரசு, கிடங்குகளில் இருக்கும் பொருட்கள் பற்றிய விவரங்களை யாருக்கும் தெரிவிக்காமல் ரகசியமும் காக்கிறது.

இந்தக் கிடங்குகளில் உள்ள பழமையான கலைப் பொருட் களை அங்கு வைத்தே ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பண்டம் மாற்றிக்கொள்ளவும் முடியும். இதேபோல் வேறு சில நாடுகளும் ‘ஃப்ரீ போர்ட்'களை வைத்துள்ளன. இந்தியப் பெரும் புள்ளிகள் சிலருக்கும் சுவிட்ஸர் லாந்தின் ஃப்ரீபோர்ட்டில் கிடங்கு கள் இருக்கின்றன என்பது கூடுதல் தகவல்.

லண்டனைச் சேர்ந்தவர் ராபர்ட் சைம்ஸ் என்ற கலைப் பொருள் டீலர். இவரது காதலி கிறிஸ்டோ மைக்க லைட்ஸ். கிரேக்கத்தைச் சேர்ந்த கப்பல் நிறுவன முதலாளி யின் மகள். சைம்ஸும் மைக்க லைட்ஸும் தொழில் பார்ட்னர்கள். 1970-ல் இருந்து சர்வதேச கலைப் பொருள் சந்தையின் கவர்ச்சி ஜோடியாக செயல்பட்டு வந்த இவர்கள் ‘ராபின் சைம்ஸ் லிமி டெட்’ என்ற கலைப் பொருள் நிறு வனத்தையும் லண்டனில் நடத்தி வந்தனர். இந்த நிலையில், 1999-ல் தனது 55 வயதில் எதிர்பாராத விதமாக மைக்கலைட்ஸ் இறந்து போனார்.

silai1_2947933a.jpg

இதையடுத்து, மைக்கலைட் ஸின் உறவினர்கள், ராபின் சைம்ஸ் நிறுவனத்தில் மைக்கலைட்ஸுக் கான பங்கைக் கேட்டனர். அப்போது அந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு 125 மில்லியன் டாலர்கள். கேட்டதைத் தர மறுத்த சைம்ஸ், ‘மைக்கலைட்ஸ் தனது நிறுவனத்தின் பணியாளர் மட்டுமே’ என்று சொன்னார். இது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்தபோது, தனக்கு லண்டன், நியூயார்க் உள்ளிட்ட ஐந்து இடங்களில் மட்டுமே கலைப் பொருள் கிடங்கு கள் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார் சைம்ஸ். ஆனால், அவருக்கு 29 இடங்களில் கிடங்குகள் இருப்பதை துருவிக் கொண்டுவந்தது போலீஸ்.

இதையடுத்து, நீதிமன்ற அவ மதிப்பில் ஈடுபட்ட குற்றத்துக்காக 2005-ல் சைம்ஸுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது நீதிமன்றம். அந்த நேரத்தில் சட்ட நடவடிக்கை களுக்காக செலுத்த வேண்டிய 5 மில்லியன் டாலரை செலுத் தத் தவறிய சைம்ஸ், தான் திவாலாகிவிட்டதாக நீதிமன்றத் தில் தெரிவித்து ஏழே மாதத்தில் விடுதலையும் ஆனார்.

இதற்கிடையில், மெடிசி வழக்கு கள் சிலவற்றில் சைம்ஸுக்கு உள்ள தொடர்புகளைக் கண்டுபிடித்த இத்தாலி போலீஸார், 2013-ல் சுவிஸ்ஸின் ஜெனீவா ஃப்ரீபோர்ட் டில் சைம்ஸுக்குச் சொந்தமான கிடங்கை நீதிமன்ற உத்தரவு பெற்று திறந்தனர். அதில் பண்டைய இத்தாலியின் ஈட்ரூஸ்கான் நாகரீகத்தைச் சேர்ந்த கல் சவப் பெட்டிகள் இரண்டு இருந்தன. இது இல்லாமல் அங்கே சைம்ஸ் பதுக்கி வைத்திருந்த கலைப் பொருட்கள் எவ்வளவு தெரியுமா? நாளை பார்ப்போம்.

- சிலைகள் பேசும்.. | ‘The India Pride Project’ உதவியுடன்

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-15-கோடிகளில்-விற்பனையாகும்-ஐம்பொன்-சிலைகள்/article8905627.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

சிலை சிலையாம் காரணமாம் -16: அர்த்தநாரீஸ்வரர் கடத்தப்பட்டதன் பின்னணி!

 

 
vijaykumar1_2949144f.jpg
 

நீதிமன்றத்தில், தான் திவாலாகிவிட்டதாக தெரிவித்த சைம்ஸின் சுவிஸ் ஃப்ரீபோர்ட் கிடங்கில் 45 கிரேட்டுகள் இருந்தன. அதில் 17 ஆயிரம் கிரேக்க மற்றும் ரோமன் கலை மற்றும் பழமையான கலைப் பொருட்கள், ஒயின் நிரப்பிய 3 மில்லியன் பாட்டில்கள் உள்ளிட்டவை இருந் தன. இந்தக் கிடங்கை 15 ஆண்டு களாக திறக்காமல் பூட்டியே வைத்திருந்தாராம் சைம்ஸ்.

இனி, விருத்தாச்சலம் அர்த்தநாரீஸ்வரர், பிரத்தியங்கரா தேவி கற்சிலைகளை கபூர் ஆஸ்திரேலியாவுக்குக் கடத்திய கதையைப் பார்க்கலாம்.

அர்த்தநாரீஸ்வரர் கடத்தப் பட்டதன் பின்னணியில் சுவாரஸ் யமான தகவல்கள் உண்டு. முற்காலச் சோழர் காலத்து அர்த்தநாரீஸ்வரர் சிலைகள் குறித்து ஆய்வு ஒன்றை ‘தி இந்தியா ப்ரைடு புராஜெக்ட்’ விஜய்குமார் 2006-ல் மேற்கொண்டார்.

இதற்காக தமிழகத்தின் பல் வேறு கோயில்களில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் சிலைகளை ஆய்வுசெய்த அவருக்கு, ஆஸ்தி ரேலியாவில் உள்ள ‘ஆர்ட் கேலரி ஆஃப் நியூ சவுத்வேல்ஸ்’ஸில் அர்த்தநாரீஸ்வரர் கற்சிலை ஒன்று விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தாகத் தகவல் வருகிறது. ஏதோ பொறிதட்ட, அதன் ஆதி அந்தத்தைத் துருவினார்.

அது விருத்தாச்சலம் கோயில் அர்த்தநாரீஸ்வரர் சிலை என்பது தெரிந்துவிட்டாலும் அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தனது நண்பர் ஒருவரை விருத்தாச்சலம் கோயிலுக்கு அனுப்பினார் விஜய்குமார். கோயிலுக்குப் போன அவரது நண்பர், ‘கோயில் கோஷ்ட்டத்தில் அர்த்தநாரீஸ்வர் சிலை இருக்கிறதே’ என்று சொல்ல.. குழம்பிப் போனார் விஜய்குமார். இதில் ஏதோ சதி இருப்பதாக சந்தேகித்த அவர், இன்னும் கொஞ்சம் விசாரணையை விசாலப்படுத்த, பல உண்மைகள் வந்து விழுந்தன.

போலி ஆவணங்கள் கொடுத்த கபூர்

அர்த்தநாரீஸ்வரர் சிலையை கபூர்தான் ‘நியூ சவுத் வேல்ஸ் ஆர்ட் கேலரி’க்கு விற்றிருக்கிறார். அந்தச் சிலையை டெல்லி செங்கோட்டை அருகில் உள்ள ‘உத்தம் சிங் அண்ட் சன்ஸ்’ என்ற கலைப் பொருள் விற்பனைக் கடையில் இருந்து 25 ஆயிரம் ரூபாய்க்கு 15.4.1970-ல் அப்துல்லா மேஹூப் என்பவர் வாங்கியதாகவும் பிற்பாடு மேஹூப் அதை தனது மகள் செலினா முகம்மதுக்கு (இவர் கபூருக்கு நெருக்கமான பெண் தோழிகளில் ஒருவர்) தந்ததாகவும் அதை செலினா, தனக்கு விற்றதாகவும் போலியான ஆவணங்களைத் தயாரித்து ஆர்ட் கேலரிக்குக் கொடுத்திருக்கிறார் கபூர்.

இந்தத் தகவல்கள் அனைத்தையும் தனது நண்பரும் ‘தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகையின் நிருபருமான நிக்கேல் போலன்ட் மூலம் தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டுப் பெறுகிறார் விஜய்குமார். கபூர் கூட்டத்தினர் கொடுத்திருந்த ஆவணங்கள் சரிதானா என்பதை சோதிக்க, டெல்லி ‘உத்தம் சிங் அண்ட் சன்ஸ்’ கம்பெனிக்கு நேரிலும் சென்றார். பித்தளை விளக்குகள் தயாரித்து விற்கும் தங்களுக்கும் கலைப் பொருட்கள் வியாபரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனச் சொன்னது ‘உத்தம் சிங் அண்ட் சன்ஸ்.’

vijaykumar_2949148a.jpg

‘உத்தம் சிங் அண்ட் சன்ஸ்’ கடையின் முன்னால் விஜய்குமார்.

1994-ம் ஆண்டு வரை அர்த்த நாரீஸ்வரர் சிலை விருத்தாச்சலம் கோயிலில் இருந்ததை போட்டோ எடுத்து ஆவணப்படுத்தி இருக்கிறது புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனம். ஆனால், 1970-ல் அது டெல்லியில் விலைக்கு வாங்கப்பட்டதாக போலி ஆவணத்தை வைத்திருந்தார் கபூர். மிகப் பழமையான அர்த்தநாரீஸ் வரர் கை உடைந்த நிலையில் இருந்தபோதும் அதைக் கடத்திக் கொண்டுபோக ஸ்கெட்ச் போட்டது கபூர் டீம். இதற்கு ஏதுவாக 2002-ல் கோயில் திருப்பணிகள் தொடங்க, ‘பின்னமான சிலையைக் கோயி லில் வைத்திருப்பது ஆகமத்துக்கு ஆகாது’ என சிலர் திட்டமிட்டு கதை கட்டினார்கள்.

விசாரணையில் மந்தம்..

இதையடுத்து, அந்தச் சிலையை அப்புறப்படுத்திவிட்டு அதற்குப் பதிலாக புதிய சிலையைப் பிரதிஷ்டை செய்வது என முடிவெடுத்து, கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திர சிங்கையும் சம்மதிக்க வைக்கிறார்கள். புதிய சிலையை செய்து கொடுப்பதற்கு டோனர் ஒருவரையும் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். அவசர கதியில் அனைத்தும் நடந்து, பழைய அர்த்தநாரீஸ்வரரை, கோயிலுக்கு வெளியே தந்திரமாக நகர்த்திவிட்டு புதிய சிலையை பிரதிஷ்டை செய்கிறார்கள். பழையவர் கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியாவுக்குக் கடத்தப் படுகிறார்.

அர்த்தநாரீஸ்வரர் ஆஸ்திரேலி யாவில் இருப்பதை ஆதாரத்துடன் விஜய்குமார் நிரூபித்த பிறகு, 31.07.2013-ல் அதாவது சிலை கடத் தப்பட்டு 11 ஆண்டுகள் கழித்து எஃப்.ஐ.ஆர். போடுகிறது போலீஸ். அதற்குப் பிறகும் விசாரணை மந்தமாகவே இருந்தது. அதனால் தான் வழக்குப் பதிவான பிறகும் தாயகம் திரும்ப வழி பிறக்காமல் மேலும் மூன்று ஆண்டுகள் ஆஸ்திரேலியாவிலேயே முடங்கிக் கிடந்தார் அர்த்தநாரீஸ்வரர். இவராவது எப்படியோ நாடு திரும்பிவிட்டார். ஆனால், பிரத்தி யங்கரா தேவி..?

- சிலைகள் பேசும்… | ‘The India Pride Project' உதவியுடன்

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-16-அர்த்தநாரீஸ்வரர்-கடத்தப்பட்டதன்-பின்னணி/article8910135.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

சிலை சிலையாம் காரணமாம் -17: சிங்கமுக பிரத்தியங்கரா தேவி!

 

 
gangai_jpg1_2950900f.jpg
 

அர்த்தநாரீஸ்வரருடன் விருத்தாச்சலம் கோயி லில் இருந்த சிங்கமுக பிரத்தியங்கரா தேவி கற்சிலை யும் அதே சமயத்தில் கடத்தப் பட்டது. இந்த இரு சிலை களைக் கடத்தியதன் பின்னணி யில் தீனதயாள் இருப்பதாகச் சந்தேகிக்கும் தமிழக போலீஸ், இந்தச் சிலைகள் மும்பை துறை முகம் வழியாக ஆஸ்திரேலி யாவுக்குக் கடத்தப்பட்டதாகச் சொல்கிறது.

பிரத்தியங்கரா சிலையை 1971 ஆகஸ்ட் 12-ல் டெல்லியில் ‘கங்கா ஆர்ட் பேலஸ்’ என்ற கலைப் பொருள் விற்பனைக் கடையில் இருந்து அப்துல்லா மெஹூப் வாங் கியதாகவும், அதை அவர் தனது மகள் செலினா முகம்மதுக்கு 1990-ல் விற்றதாகவும் செலினா விடம் இருந்து அதை கபூர் வாங்கியதாகவும், வழக்கம் போல போலியான ஆவணங்களைத் தயாரித்து வைத்திருக்கிறார்கள். ‘நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’வில் உள்ள பிரத்தியங்கரா சிலை விருத் தாச்சலம் கோயிலுக்குச் சொந்த மானது என்பதும் பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் ஆவணப்படங்கள் மூலமே உறுதிசெய்யப்பட்டது. அர்த்தநாரீஸ்வரர் கடத்தப் பட்டதற்கு 11 ஆண்டுகள் கழித்து வழக்கு பதிவுசெய்த போலீஸ், பிரத்தியங்கரா சிலை கடத்தப்பட்டதற்கு இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை.

கோயில் சிலைகள் திருட்டு வழக்குகள் அனைத்தையுமே சிலைக் கடத்தல் தடுப்பு (சி.ஐ.டி.) பிரிவு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதில்லை. ஐம்பொன் சிலைகளாக இருந்து அவை 5 லட்ச ரூபாய் (1995 ஆண்டின் மதிப்பீடு) மதிப்புக்கு மேல் இருந்தால் மட்டுமே சிலைக் கடத்தல் தடுப்பு (சி.ஐ.டி.) பிரிவு விசாரிக்கும். கற்சிலைகள் திருட்டு வழக்கை இந்தப் பிரிவு விசாரிக்காது என்றாலும் முக்கிய மான வழக்காக கருதி அரசு தரப்பில் இருந்து சிறப்பு உத்தரவுகள் வந்தால் தங்கள் வரம்புக்குள் வராத சிலைத் திருட்டு வழக்குகளையும் இந்தப் பிரிவு விசாரிக்கும். சிலைக் கடத் தல் தடுப்புப் பிரிவின் விசாரணை வரம்புக்குள் வராத வழக்குகளை அந்த எல்லைக்கு உட்பட்ட போலீஸார்தான் வழக்கு பதிவுசெய்து விசாரிக்க வேண்டும்.

வழக்குப் பதிய மறுக்கும் போலீஸார்

பழமையான கோயில்களில் உள்ள கற்சிலைகள் குறித்து உள்ளூர்வாசிகளுக்கு போதுமான புரிதல் இருப்பதில்லை. அதே சமயம், கோயில் சிலைகள் காணாமல் போய்விட்டதாக உள்ளூர் பிரமுகர்கள் தரும் புகார்கள் மீது, காவல் துறையினர் அவ்வளவு எளிதில் வழக்கும் பதிவு செய்வதில்லை. வழக்கு பதிவு செய்தால், காணாமல் போன சிலையைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதாலேயே, ஏதாவது காரணங்களைச் சொல்லி வழக்கு பதியாமல் தட்டிக் கழித்து விடுகிறார்கள். இதுவும் சிலைக் கடத்தல் பேர்வழிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.

இந்த விஷயத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கூறுகிறார் கங்கை கொண்ட சோழ புரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலை வர் பொறியாளர் கோமகன். ‘‘அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் ஊர் நடுவே நாச்சியார்குளம் உள்ளது. அந்தக் குளத்தைப் பற்றி நானும் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் இல.தியாகராஜனும் கடந்த ஆண்டு ஆய்வு ஒன்றை மேற்கொண்டோம். அப்போது, நாச்சியார்குளக் கரையில் இருந்த அம்மன் சிலையானது செல்லியம்மன் கோயிலில் கைவிடப்பட்ட நிலையில் இருப் பதைக் கண்டுபிடித்தோம்.

gangai_2950899a.jpg

திருடுபோன கங்கைகொண்ட சோழபுரம் சிலை

அதுகுறித்து அப்போதே மீடியாக்களில் பதிவு செய்தோம். அடுத்த இரண்டு நாட்களில் அந்த அம்மன் சிலையும் இன்னும் சில சிலைகளும் அங்கிருந்து காணாமல் போய்விட்டன. இது குறித்து ஊராட்சி தலைவர் மூலமாக போலீஸில் புகார் கொடுத்தோம். ஆனால், எஃப்.ஐ.ஆர். போட மறுத்துவிட் டது போலீஸ். தப்பித் தவறி, திருடுபோன சிலையை போலீஸ் கண்டுபிடித்தாலும் இதுதான் உங்களுடைய சிலை என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட் கிறார்கள்.

இந்தச் சிக்கலைக் போக்க தமி ழகத்தின் அனைத்து பழமையான கோயில் சிலைகள், புராதனச் சின்னங்கள் உள்ளிட்டவைகள் குறித்து அரசிடமும் அந்தந்தக் கோயிலிலும் முறையான பதி வேடுகள் பராமரிக்கப்பட வேண் டும். அத்துடன், கோயில்களில் உள்ள சிலைகள் பற்றிய விவரங்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் விதமாக இணையதளத்தில் வெளியிட வேண்டும். அப்போதுதான், சர்வ தேச கலைப் பொருள் சந்தை யில் திருட்டுச் சிலைகளை வாங்குவதற்கு யோசிப்பார்கள்’’ என்கிறார் கோமகன்.

கோமகன் சொல்வதுபோல தமிழகத்தில் அறநிலையத் துறை கோயில்களுக்குச் சொந்தமான 25 ஆயிரம் ஐம்பொன் சிலைகள் பற்றிய முழுவிவரங்கள் ஒருமுறை முழுவீச்சில் ஆவணப்படுத் தப்பட்டன.

அது எப்போது தெரியுமா?

- சிலைகள் பேசும்.. | IFP/EFEO - புதுச்சேரி, ‘The India Pride Project’ உதவியுடன்..

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-17-சிங்கமுக-பிரத்தியங்கரா-தேவி/article8915176.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

சிலை சிலையாம் காரணமாம் - 18: 35 ஆண்டுகளுக்கு முன் பதிவுசெய்யப்பட்ட சிலை ஆவணங்கள் எங்கே?!

 

 
தீனதயாள் வீட்டில் மீட்கப்பட்ட சிலைகள்
தீனதயாள் வீட்டில் மீட்கப்பட்ட சிலைகள்

முன்பு, மத்திய மாநில அரசுகளுக்கு பொது வான அம்சமாக தொல் லியல் மற்றும் கலைப் பொருட் கள் சட்டம் இருந்தது. அப் போது அதற்கான சட்டங் களை மத்திய அரசுதான் இயற்றி அரசிதழில் வெளி யிட்டு தொல்லியல் சின்னங் களைப் பாதுகாத்தது. 1966-ல் தான் தமிழ்நாடு தொல்லியல் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட் டது. இதையடுத்து 1972-ல் கலைப் பொருட்கள் வைத்திருப்பதை பதிவுசெய்யும் பொறுப்பு மாநில அரசுக்கும் அதை விற்பனை செய்ய அனுமதிக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கும் பிரித்துக் கொள்ளப்பட்டது.

இதன்படி தமிழகத்தில் அற நிலையத் துறை கோயில்களுக்குச் சொந்தமான 25 ஆயிரம் செப்புத் திருமேனி (ஐம்பொன்) சிலைகள் 1976-82 காலகட்டத்தில் தமிழக தொல்லியல் துறையால் முறைப் படி பத்திரங்கள் மூலமாக பதிவு செய்யப்பட்டன. இந்தப் பத்திரங்களின் ஒரு நகல் சம்பந் தப்பட்ட கோயிலிலும் இன்னொரு நகல் அறநிலையத் துறையிலும், இன்னொரு நகல் மாநிலத் தொல் லியல் துறையிலும், இன்னொரு நகல் மத்திய தொல்லியல் மற்றும் பரப்பாய்வுத் துறையிலும் ஒப்படைக்கப்பட்டன. பத்திர நகல் ஓரிடத்தில் காணாமல் போனாலும் மற்ற இடங்களில் இருப்பதை வைத்து உறுதிப்படுத்திக் கொள்ள லாம் என்பதற்காக இந்த ஏற் பாட்டை செய்தது தமிழக தொல்லியல் துறை.

தமிழகத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு பதிவுசெய்யப்பட்ட 25 ஆயி ரம் சிலைகளுக்கான ஆவணங்கள் இப்போது எங்கு உள்ளன? அவை முறையாக பராமரிக்கப்பட்டதா என்பதெல்லாம் கேள்விக் குறியாகி இருக்கும் நிலையில், ஆவணப்படுத்தப்படாத கற்சிலை களைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்?

தமிழகத்திலாவது 25 ஆயிரம் கோயில் சிலைகள் ஆவணப்படுத்தப்பட்டன. மற்ற மாநிலங்கள் சிலைகளை ஆவணப்படுத்திப் பாதுகாப் பதில் அவ்வளவாக அக் கறை காட்டவில்லை. இத னால் மீண்டும் மத்திய தொல் லியல் துறையே அனைத்து அதிகாரங்களையும் எடுத்துக் கொண்டு மாநிலத் தொல்லியல் துறைகளை டம்மியாக்கியது. அனைத்து மாநிலங்கள் சம்பந்தப் பட்ட சிலைகள் உள்ளிட்ட கலைப் பொருட்களை மத்திய தொல்லி யல் துறை கண்காணித்து, பதிவு செய்து, பாதுகாப்பதில் நடை முறைச் சிக்கல்கள் நிறையவே உள்ளன.

கற்சிலைகள் மாத்திரமல்ல, பழமையான கோயில்களுக்குச் சொந்தமான பண்டைக் காலத்து விளக்குகள், மடப்பள்ளி பாத்திரங் கள், கலைநயம் கொண்ட மரச் சாமான்கள், சாமி எழுந்தருளும் வாகனங்கள் இவையெல்லாம்கூட பல கோயில்களில் காணாமல் போயிருக்கின்றன. தொன்மை யைப் பாராமல் இவை எல்லாம் வெறும் பொருட்களாக மட்டுமே பார்க்கப்படுவதால் இதெல்லாமே வெளியில் தெரியாமலேயே மறைக்கப்பட்டுவிட்டன.

silai1_2952506a.jpg

தீனதயாள் வீட்டில் மீட்கப்பட்ட சிலைகளை பார்வையிட்டுத் திரும்பும் கர்நாடக அதிகாரிகள்

சில கோயில்களில் பழைய தேர்கள் சிதிலமடைந்துவிட்டதாகச் சொல்லி அவைகளை அடிமாட்டு விலைக்கு சில லட்சங்களுக்கு ஏலம் விடுகிறார்கள். ஏலம் எடுப்பவர்கள் அதிலுள்ள வேலைப்பாடுகளுடன் கூடிய மர சிற்பங்களைத் தனியாக பிரித்து எடுத்து அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து லட்சக் கணக்கில் லாபம் சம்பாதிக்கிறார்கள். கோயில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் உள்ளூர் முக்கியஸ்தர்களின் அனுசரணையுடன் இந்தப் பகல் கொள்ளை இப்போதும் தொடர்கிறது.

தற்போது, சிலைக் கடத்தல் புள்ளிகளிடம் இருந்து ஏராளமான சிலைகள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்தச் சிலைகளின் தொன்மையைச் சோதிப்பதற்காக இந்திய தொல்லியல் மற்றும் பரப்பாய்வுத் துறை அதிகாரிகள் பெங்களூருவில் இருந்து வருகிறார்கள். இதுகுறித்தும் சர்ச்சை கிளப்பும் தமிழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள், ‘‘தமிழகத்தில் உள்ள சிலைகளைப் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றி யும் அண்டை மாநிலத்து அதிகாரிகளுக்கு முழுமையாகத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதனால்தான் தீனதயாள் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட சிலைகளில் பெரும்பகுதியானவை எந்தக் கோயிலுக்குச் சொந்தமானது என்பதை இன்னமும் இனம் காணமுடியவில்லை.

தமிழக பழமையான கோயில் கள் மற்றும் சிலைகள் பற்றித் தெரிந்த அறிஞர்கள் தமிழகத்தி லேயே நிறையப் பேர் இருக்கிறார் கள். பார்த்த மாத்திரத்திலேயே இது எந்த அரசர் காலத்து சிலை என்பதை துல்லியமாகச் சொல்லி விடுவார்கள். இவர்களைத் தவிர, தொல்லியல் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் மாவட்ட வாரியாக இருக்கிறார்கள். இவர்களைக் கொண்டு நிபுணர் குழு ஒன்றை அமைத்து, திருட்டு சிலைகளை அடையாளம் காணவேண்டும்.

அத்துடன், மாவட்ட வாரியாக குழுக்களை அமைத்து அந்தக் குழுக்கள் வழியாகக் கோயில் சிலைகளை அவ்வப்போது கண்காணிப்பதன் மூலம் சிலைத் திருட்டுக்களை தடுக்க முடியும். அதேபோல், சிலைகளை பதிவு செய்து பாதுகாக்கும் பொறுப்பை மாநில தொல்லியல் துறைக்கே மீண்டும் வழங்க வேண்டும்’’ என்கிறார்கள்.

- சிலைகள் பேசும்...

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-18-35-ஆண்டுகளுக்கு-முன்-பதிவுசெய்யப்பட்ட-சிலை-ஆவணங்கள்-எங்கே/article8921027.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

சிலை சிலையாம் காரணமாம் - 19: கடல் தாண்டி விரியும் கடத்தல் வலை

 

 
1_2955854f.jpg
 

கோயில் சிலைகளையும் பழமையான கலைப் பொருட்களையும் கடல் தாண்டி எப்படிக் கடத்துகிறார்கள் என்று பார்ப்பதற்கு முன்பாக, இன்னும் சில கடத்தல் சம்பவங்களைப் பார்த்துவிடலாம்.

கி.மு. 2-ம் நூற்றாண்டில் மேற்கு வங்கத்தில் சுங்கர்கள் ஆட்சியில் சந்திரகேது கர்க் என்ற நகரம் இருந்தது. புதையுண்ட இந்நகரத்தை 1968-ல் அகழ்வாராய்ச்சி செய்தது இந்தியத் தொல்லியல் மற்றும் பரப்பாய்வுத் துறை. அதற்கு முன்னதாகவே இங்கிருந்து எடுக்கப்பட்ட ‘டெரகோட்டா’ என்று சொல்லப்படும் சுடு மண்ணால் ஆன பொம்மைகள், குழந்தைகள் - பெண்கள் சிலைகள், கல் பானை கள் உள்ளிட்டவைகளை கூரியர் சர்வீஸ் மூலம் நியூயார்க்கிற்கு கடத்தினார் கபூர். 1998-ல் இருந்து 2002 வரை பல்வேறு கட்டங்களாக இவைகள் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டதாகச் சொல்லப்படு கிறது. அப்படி கடத்தப்பட்ட கலை நயமிக்க பழமையான பானை ஒன்றை நியூயார்க்கின் உலகப் புகழ்பெற்ற மெட்ரோபாலிட்டன் மியூசியத்துக்கு தனது மகள் மம்தா சாகர் பெயரில் 2003-ல் அன்பளிப்பாகக் கொடுத்தார் கபூர்.

கடத்தப்பட்டு பிடிபட்ட சிலைகளில் உலகிலேயே அதிக விலைமதிப்பிலான சிலை ‘யக்‌ஷி’ தான். மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் பர்குத் என்ற பகுதியைச் சேர்ந்த ‘யக்‌ஷி’ சிலை கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந் தது. இந்தக் கற்சிலையின் மதிப்பு சுமார் 95 கோடி ரூபாய். பர்குத் தில் ராம்பிரதாப் சிங் என்ற விவசாயி தனது வீட்டில் வைத்து வழிபட்டு வந்த இந்த ‘யக்‌ஷி’ சிலை 2004 ஜூலையில் திருடுபோனது. இது தொடர்பாக அப்போதே போலீஸில் புகார் செய்தார் ராம் பிரதாப் சிங். 19.07.2004-ல் எஃப்.ஐ.ஆர். பதிவு செய் திருக்கிறது போலீஸ். இந்தச் சூழலில் அடுத்த சில மாதங்களில் வெளி யான கபூரின் ஆர்ட் கேலரி ‘கேட்லாக்’கில் இந்த ‘யக்‌ஷி’ சிலையின் போட்டோவும் வருகிறது.

இதைக் கவனித்த ‘தி இந்தியா ப்ரைடு புராஜெக்ட்’ தன்னார்வலர்கள் அந்தச் சிலை குறித்த பின்னணித் தகவல்களைத் திரட்டினார்கள். மும்பையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இந்தியத் தொல்லியல் அதிகாரியான கிரீத் மான்கோலி அந்த ‘யக்‌ஷி’ சிலை குறித்த அரிய தகவல்களை 1978-ல் ஆவணப் பதிவு செய்திருக்கிறார். அதையும் கபூரின் ‘கேட்லாக்’ கையும் ஒருங்கிணைத்து அமெ ரிக்க ஹோம்லேண்ட் செக்யூ ரிட்டி போலீஸுக்குத் தகவல் அனுப்புகிறார்கள் தன்னார்வலர் கள். இதையடுத்து, திருட்டு வழக்குப் பதிவுசெய்து சிலையை 2011-ல் பறிமுதல் செய்துவிட்டது ஹோம்லேண்ட் செக்யூரிட்டி போலீஸ். இந்தத் தகவல்கள் 2014 ஏப்ரலிலேயே டெல்லியில் உள்ள இந்தியத் தொல்லியல் துறைக்குத் தெரிவிக்கப்பட்டும் ‘யக்‌ஷி‘ இன்னும் இந்தியா வந்தபாடில்லை.

2_2955853a.jpg

‘தடயம்’ காட்டிக் கொடுத்த தச்சூர் முருகன்

கள்ளக்குறிச்சி அருகே உள்ளது தச்சூர். இங்கே பழமையான சிவன் கோயில் ஒன்று உள்ளது. இதன் அருகே, பல்லவர் காலத்து (எட்டாம் நூற்றாண்டு) சிற்பங் கள் மண்ணுக்குள் புதையுண்டு கிடந்தது 1990-ல் கண்டுபிடிக் கப்பட்டது. மண்ணுக்குள் இருந்த சிலைகளை வெளியில் எடுத்த தொல்லியல் ஆர்வலர்கள், அவற்றை கோயிலுக்கு அருகி லேயே பாதுகாப்பாக வைத்தனர். இந்தச் சிலைகள் பற்றிய விவரங்களை முனைவர் நாகஸ்வாமி 2002-ல் ‘தடயம்’ என்ற புத்தகத்தில் படங்களோடு பதிவும் செய்கிறார்.

ஆண்டுகள் சில கடந்தன. சிவன் கோயிலின் திருப்பணி வேலைகள் தொடங்குகின்றன. அப்போது, பல்லவர் கால சிலைகளை மீண்டும் பத்திரப்படுத்தும் பணியில் ஈடுபட்டபோதுதான், அதில் இருந்த முருகன் சிலை ஒன்று அங்கிருந்து கடத்தப் பட்டது தெரியவருகிறது. உடனே களத்தில் இறங்கிய தன்னார்வலர் கள், ‘தடயம்’ இதழில் வெளியாகி இருந்த தச்சூர் முருகன் சிலையின் படத்தை தங்களது முகநூல் மூலமாக பரப்பி, தகவல் சேகரித்தனர். அப் போதுதான், சுபாஷ் கபூரின் ‘கேட்லாக்’கில் அந்த முருகன் சிலையின் படமும் இருப்பது தெரிய வந்தது. பாண்டியர் காலத்து சிவன் சிலை என பொய்யான தலைப்பில் முருகன் சிலையை தனது ‘கேட்லாக்’கில் வெளியிட்டிருக்கிறார் கபூர். இந்தச் சிலையும் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், தச்சூர் முருகனுக் காக தமிழகத்தில் இதுவரை எஃப்.ஐ.ஆர். கூட போடப்பட வில்லை.

இதேபோல், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊருக்குப் பக்கத்தில் இருந்து பிரம்மா - பிரம்மி கற்சிலை ஒன்றும் லண் டனுக்குக் கடத்தப்பட்டது. அதை மீட்டு வரப்போன நமது இந்தியத் தொல்லியல் துறை அதிகாரிகள் என்ன காரியம் செய்தார்கள் தெரியுமா?

- சிலைகள் பேசும்...

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-19-கடல்-தாண்டி-விரியும்-கடத்தல்-வலை/article8931923.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

சிலை சிலையாம் காரணமாம் - 20: லண்டனில் பிரம்மா, பிரம்மி சிலை!

 

இரண்டு சிலைகளுக்கும் உள்ள ஒற்றுமை
இரண்டு சிலைகளுக்கும் உள்ள ஒற்றுமை

குஜராத் மாநிலத்தின் வாத்நகர் - பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊர். இதன் அருகே உள்ள நகரம் பட்டன். இங்கே ‘சகசரலிங்க தலவ்’ என்ற இடத்தில் இந்தியத் தொல்லியல் துறையின் திறந்தவெளி மியூசியம் ஒன்று உள்ளது. இந்த மியூசியத்தில் பழமையான சிலைகளை சேக ரித்து வைத்து பாதுகாத்து வருகிறது இந்தியத் தொல்லியல் துறை. 2006-ல் இங்கிருந்த பிரம்மா - பிரம்மி கற்சிலை திருடு போனது.

இந்தச் சிலையை லண்டனில் உள்ள ஜெர்மி நோவல்ஸ் என்பவர் தனது ‘ஆர்ட் கேலரி’யில் விற்பனைக்கு வைத்திருந்ததைத் தன்னார்வலர்கள்தான் கண்டு பிடித்தார்கள். இதுகுறித்து அவர் கள் இந்தியத் தொல்லியல் துறைக்கு தொடர் அழுத்தங்கள் கொடுத்து வந்தனர்.

தாமாகவே முன்வந்து..

இதையடுத்து, இந்திய தொல் லியல் பரப்பாய்வுத் துறையின் வதோதரா சர்க்கிள் கண்காணிப் பாளர் ஜீதேந்திரநாத் தலைமை யில் ஒரு குழுவினர் 6.11.2015-ல் லண்டன் சென்றனர். ஆனால், அதற்கு முன்பாகவே விஷயம் தெரிந்து ஜெர்மி தாமாகவே முன்வந்து அந்தச் சிலையை லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஒப்படைத்துவிட்டார்.

இந்தியத் தூதரகத் தில் இருந்த பிரம்மா - பிரம்மி சிலையை ஆய்வு செய்த நமது தொல்லி யல் துறை அதிகாரிகள், ‘சகசரலிங்க தலவ்-வில் இருந்த சிலை 72 செ.மீ. உயரம் கொண்டது. ஆனால், இந்தச் சிலை 42 செ.மீ. உயரம்தான் உள்ளது. மேலும், மண் ஒட்டிய அழுக்கு இல்லாமல் சுத்தமாகவும், புதிது போன்றும் உள்ளது இந்தச் சிலை. எனவே இது சகசரலிங்க தலவ்-வில் திருடுபோன சிலையாகத் தெரிய வில்லை’ என்று சொல்லி பிரம்மா - பிரம்மி சிலையை அங்கேயே விட்டுவிட்டு வந்து விட்டார்கள்.

பொதுவாக நம்மவர்கள், சிலை களின் அளவீடுகளை அளக்கும் போது தோராயமாகத்தான் குறிப் பிடுவார்கள். ஒருவேளை, மிகச் சரியாக குறிப்பிட்டிருந்தாலும், கடத்தல் புள்ளிகள் கடத்தப்பட்ட சிலைகளின் அடிப்பகுதி உள் ளிட்டவைகளை செதுக்கி அதன் உயரத்தைக் குறைத்துவிட முடி யும். இதையெல்லாம், கவனத்தில் கொள்ளாத இந்தியத் தொல்லி யல் துறையினர், லண்டனில் இருந்த பிரம்மா - பிரம்மி சிலை 30 செ.மீ. உயரம் குறைவாக உள்ளதைப் பெரிய கண்டு பிடிப்பாகச் சொன்னார்கள்.

அத்துடன், அந்தச் சிலை மிக நேர்த்தியாகவும் ‘ஷார்ப்’பாக இருந்ததாகவும்; அது பழமையான சிலை என்பதற்கு அதன் மீது மண் படிந்த அடையாளங்கள் எதுவும் இல்லை என்பதும் அந்தச் சிலையை நிராகரிக்க அதிகாரிகள் சொன்ன காரணங்களாகும். சிலை களுக்கு மதிப்புக் கூட்ட எத் தனையோ பம்மாத்து வேலை களைச் செய்யும் கடத்தல் புள்ளி களுக்கு சிலையில் படிந்திருக்கும் மண்ணை சுத்தம் செய்வதும், சிலைகளை மீண்டும் மெருகூட்டி ‘ஷார்ப்’ ஆக்குவதும் இயலாத காரியம் என்று தொல்லியல் வல்லுநர்கள் எப்படி முடிவுக்கு வந்தார்கள்?

நீடிக்கும் சிக்கல்கள்

கடத்தப்பட்ட சிலைகளை மீட்டுக் கொண்டு வருவதில் இந்தியத் தொல்லியல் துறை மெத்தனம் காட்டுவதாக பரவலான குற்றச்சாட்டு தொடக்கத்தில் இருந்தே உண்டு. ஆனால், அப்படி மீட்டு வருவதிலும் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.

அமெரிக்காவின் சில மாகா ணங்களில் ‘Statute of Limitations’ என்ற சட்ட நடைமுறையை வழக் கத்தில் வைத்திருக்கிறார்கள். இதன்படி, இன்னொரு நாட்டுக்குச் சொந்தமான பழமையான கலைப் பொருட்களைப் பொதுமக்கள் பார்வையில் படும்படியாக மியூசியம் போன்ற இடங்களில் வைத்திருக்கலாம். அது, தங்கள் நாட்டுக்குச் சொந்தமானதாக கருதும் நாடுகள், மியூசியத்தில் வைக்கப்பட்டு ஐந்து ஆண்டு களுக்குள் உரிய ஆவணங்களை தந்து அதை மீட்டுச் செல்ல வேண்டும். ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டால் அந்தப் பொருளை சம்பந்தப்பட்ட நாடு உரிமை கொண்டாட முடியாது.

இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களாலும் இந்தியச் சிலை களும் கலைப் பொருட்களும் நாடு திரும்புவதில் சிக்கல் நீடிக்கிறது. அதே நேரத்தில், வெளிநாடுகளில் உரிய ஆவணங்களைக் கொடுத்து மீட்கப்படும் நமது பழமையான கலைச் செல்வங்களை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டுமானால், அதை குறிப் பிட்ட தொகைக்கு காப்பீடு செய்யவேண்டும். அத்துடன் அவற்றை கப்பல் அல்லது விமானம் மூலமாக இந்தியா கொண்டு வருவதற்கு ‘கார்கோ’ கட்டணம் செலுத்த வேண் டும். இந்தச் செலவுகளுக்கு எல்லாம் யார் நிதி ஒதுக்கு வது என்பதில் நீயா, நானா போட்டி நீடிக்கிறது. இதனா லேயே, சிலைகளை இந்தியா வுக்கு மீட்டுவரும் விஷயத் தில் அதிகாரிகள் மெத் தனப் போக்குடன் செயல்படு வதாகச் சொல்லப்படுகிறது.

silai1_2957118a.jpg

25 ஆண்டுகளில் 19 சிலைகள்

இந்தியாவில் இருந்து பழமை யான சிலைகள், மற்றும் கலைப் பொருட்கள் ஆயிரக் கணக்கில் வெளி நாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ள நிலையில், 1976-ல் இருந்து 2001 வரையிலான 25 ஆண்டுகளில் 19 சிலைகள் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து மீட்டு வரப்பட்டதாக 2013-ல் வெளியிடப்பட்ட இந்திய அரசின் தலைமை கணக்கு தணிக்கை யாளரின் அறிக்கை சொல்கிறது. 2001 முதல் 2013 வரை யிலான 12 ஆண்டுகளில் ஒரு சிலைகூட மீட்டு வரப்படவில்லை என்பதும் கவலைப்பட வேண்டிய விஷயம்.

இப்போதிருக்கும் அதிகாரி கள்தான் சிலைகளை மீட்கும் விவகாரத்தில் மெத்தனப்போக் குடன் செயல்படுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில், வெளி நாடுகளுக்குக் கடத்தப்பட்ட நமது சிலைகளை மீட்க ஒரு சிறு துரும்பை ஆதாரமாகப் பிடித்துக் கொண்டு லண்டன் வரைக்கும் போய் போராடிய அதிகாரிகளும் இருந்தார்கள். அடுத்துச் சொல்லப்போகும் சம்பவம் அதற்கு உதாரணம்.

- சிலைகள் பேசும்…

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-20-லண்டனில்-பிரம்மா-பிரம்மி-சிலை/article8937151.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

சிலை சிலையாம் காரணமாம் - 21: திருநீலக்குடி நடராஜர் சிலை!

 

கடத்தப்பட்ட ஸ்ரீபுரந்தான் நடராஜர் சிலை திரும்பி வந்தபோது...
கடத்தப்பட்ட ஸ்ரீபுரந்தான் நடராஜர் சிலை திரும்பி வந்தபோது...

லண்டனில் உள்ள ‘எவ ரெஸ்ட் ஆர்ட் கேலரி’ என்ற நிறுவனம் தன்னிடம் உள்ள பழமையான கலைப் பொருட்களை விற்பதற்காக 1976-ல் விற் பனை விளம்பரம் ஒன்றை பத் திரிகைகளில் வெளியிடுகிறது. தமிழக தொல்லியல் துறையில் பணியாற்றிய ராஜசேகரன் நாயர் என்பவர் எதார்த்தமாக அந்த விளம் பரத்தைப் பார்க்கிறார். அதில் தமிழகத் தின் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திருநீலக்குடி சிவன் கோயிலின் நடராஜர் சிலையின் போட்டோக்களும் அதில் இருந்தன.

திருநீலக்குடி கோயில் அர்ச்சகரும் அது அங்குள்ள நடராஜர்தான் என உறுதிப்படுத்துகிறார். அத்தோடு ஒதுங்கிவிடாத நாயர், இந்த விவகாரத்தை இந்தியத் தொல்லி யல்துறையின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படை யில் இந்திய தொல்லியல் துறையானது ‘ஸ்காட்லாந்து யார்டு’ போலீஸ் உதவியோடு லண்டன் ‘எவரெஸ்ட் ஆர்ட் கேலரி’க்கே நேரில் சென்று விசாரணை நடத்தியது. ஆனால், இந்தியத் தொல்லியல் அதிகாரிகள் அங்கு போவதற்குள் டெக்சாஸில் உள்ள ‘கிம்பெல் ஆர்ட் மியூசியத்துக்கு’ அந்தச் சிலையை ரூ.60 லட்சத்துக்கு விற்றுவிட்டது ‘எவரெஸ்ட் ஆர்ட் கேலரி’.

தங்களது முயற்சியை கைவிடாத நாயரும் இந்தியத் தொல்லியல் துறை யினரும் ‘எவரெஸ்ட் கேலரி’யை மேலும் துருவியபோது, நாகை மாவட் டம் செம்பனார்கோவில் நல்துணை ஈஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான வள்ளி, தெய்வானை உட்பட மொத் தம் 8 ஐம்பொன் சிலைகள் சிக்கின. (இவைகள் 1975-ல் அந்தக் கோயிலில் இருந்து திருடப்பட்டவை) இதை யடுத்து, ‘எவரெஸ்ட் கேலரி’ சம்பந்தப் பட்ட மேலும் சில இடங்களைச் சோதனையிட்டபோது, இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 240 ஐம்பொன் மற்றும் கற்சிலைகள் சிக்கின.

இப்படி ஒரே நேரத்தில் மொத்த மாக இவ்வளவு சிலைகள் சிக்கிக் கொண்டதால் மிரண்டுபோன எவ ரெஸ்ட் நிர்வாகம், தனது கவுரவத் தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக லண்டனின் ‘ராயல் கோர்ட் ஆஃப் ஜஸ்டீஸில்’ வழக்குப் போட்டது. அந்த வழக்கில் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததால், பிடிபட்ட சிலை களை இந்தியாவுக்கு மீட்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. அதேசமயம், கிம் பெல் மியூசியத்துக்கு விற்கப்பட்ட நடராஜர் சிலை மட்டும் மீட்டுவரப்பட் டது. இதன் தொடர் நடவடிக்கையாக ‘ஸ்காட்லாந்து யார்டு’ போலீஸார் எவரெஸ்ட் ‘ஆர்ட் கேலரி’யின் உரிமையாளர் எல்.பி.சொராரியாவை (L.P.Choraria) கைது செய்து, அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

மேலும் 41 சிலைகள்

அங்கே, தஞ்சை திருநீலக்குடி சிவன் கோயிலுக்குச் சொந்தமான சந்திரசேகரர், நடராஜர், இரண்டு அம்மன்கள், மற்றும் விக்கிரமங்கலம் சிவன் கோயிலுக்குச் சொந்தமான சிலைகள் என மொத்தம் 41 சிலைகள் சிக்கின. இந்தச் சிலைகளையாவது மீட்டுவிடலாம் என நம்மவர்கள் முயற் சித்தபோது, நீதிமன்றத் தடை இந்தச் சிலைகளுக்கும் சேர்த்துத்தான் எனச் சொல்லித் தப்பித்துக் கொண்டது எவரெஸ்ட் நிறுவனம்.

தொடர்ந்து அந்த வழக்கை நடத்தி தடையை உடைப்பதற்கு இந்திய அரசிடம் இருந்து உரிய அனுசரணை கிடைக்காததால் களத்தில் நின்ற அதிகாரிகள் சோர்ந்து போனார்கள். இதனால், 281 சிலைகளையும் இந்தியாவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் தொய்வு ஏற்பட்டு, முடிவு தெரியாமலேயே போய்விட்டது அந்த வழக்கும் சிலைகளின் நிலையும்.

சிலைகள் திருட்டுத்தனமாக கடத்தப்பட்டு அவை ‘வெளிநாட்டு ஆர்ட் கேலரி’களில் வைக்கப்பட்டிருந் தாலும் அவைகளை அவ்வளவு எளிதில் மீட்க முடியாது. எந்த நாட்டில் சிலை உள்ளதோ அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் சிலைகளை மீட்க முடியும்.

இழுத்தடிக்கும் சிங்கப்பூர் மியூசியம்

பொதுவாக ‘ஆர்ட் கேலரி’களில் திருட்டு சிலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டாலும், சம்பந்தப்பட்ட காலரியின் உரிமையாளர், ‘‘இதை நான் சட்டப்படி விலை கொடுத்து வாங்கி இருக்கிறேன்’’ என்று ஆவணங்களைக் காட்டி வாதம் செய்வதுதான் இதுவரை நடந்துவருகிறது. இதனாலேயே பெரும் பகுதியான சிலைகளை மீட்டு வருவதில் சட்டச் சிக்கல்கள் நீடிக்கின்றன.

அண்மைக்காலமாக இதுபோன்ற திருட்டு சிலை விவகாரங்கள் அதிகம் தலைதூக்க ஆரம்பித்திருப்பதை அடுத்து, மேலைநாடுகளில் உள்ள ஒருசில பெரிய அருங்காட்சியகங்கள் திருட்டு சிலைகளை வாங்குவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கின்றன. அதேசமயம், சிங்கப்பூரில் உள்ள ‘ஏசியன் சிவிலைசேஷன் மியூசியம்’ போன்றவைகள் திருட்டு சிலைகள் என்று தெரிந்தாலும் சம்பந்தப்பட்ட நாட்டிடம் அதைத் திருப்பி ஒப்படைப்பதில் இழுத்தடிக்கின்றன. வெளிநாட்டுக் கதைகள் இருக்கட்டும்.. தஞ்சையில் இருந்து கடத்தப்பட்டு குஜராத்தில் இருக்கும் ராஜராஜன் சிலையை மீட்கப்போன அதிகாரிகள் வெறும்கையோடு கையோடு வந்த கதை தெரியுமா?

sri1_2958266a.jpg

அரியலூரில் திறக்கப்படாமல் காத்திருக்கும் சிலை பாதுகாப்பு மையம்

இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களில் 35 சதவீத கோயில்கள் தஞ்சை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் உள்ளன. செம்பியன்மாதேவி, குந்தவை நாச்சியார் காலத்தில் கட்டப்பட்ட சோழ மண்டல திருக்கோயில்களில் உள்ள சிலைகள் அனைத்துமே ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. அதனால்தான் சிலைத் திருட்டுக் கும்பல்கள் சோழ மண்டலத்தை தங்களின் முக்கிய கேந்திரமாக வைத்துள்ளன. புரந்தான், சுத்தமல்லி கோயில்களில் மொத்தமாக சிலைகள் திருடப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து கோயில் சிலைகளைப் பாதுகாப்பதற்காக அரியலூரில் 90 லட்ச ரூபாய் செலவில் சிலை பாதுகாப்பு மையம் ஒன்று கட்டப்பட்டது. ஆனால், யார் வரவுக்காக காத்திருக்கிறதோ தெரியவில்லை கட்டிமுடிக்கப்பட்டு ஓராண்டாகியும் அந்த மையம் இன்னும் திறக்கப்படாமலேயே இருக்கிறது.

- சிலைகள் பேசும்…

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-21-திருநீலக்குடி-நடராஜர்-சிலை/article8941120.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

சிலை சிலையாம் காரணமாம் - 22: தஞ்சை ராஜராஜன், லோகமாதேவி சிலைகள்!

 

 
குஜராத்தில் உள்ள ராஜராஜன் மற்றும் லோக மாதேவி சிலைகள்.
குஜராத்தில் உள்ள ராஜராஜன் மற்றும் லோக மாதேவி சிலைகள்.

ராஜராஜ சோழன் காலத் தில் தஞ்சை பிரகதீஸ் வரர் கோயிலின் கார்யமாக பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் என்பவர் இருந்தார். இவர் கிபி. 1010-ல் ராஜராஜ சோழனுக்கும் அவனது பட்டத்து அரசியான லோகமாதேவிக்கும் முறையே 74 செ.மீ, 53 செ.மீ. உயரத்தில் செப்புச் சிலைகளை செய்கிறார். ராஜராஜனும் தேவி யும் நான்கு கைகளைக் கொண்ட சந்திரசேகரரை வழிபடுபது போல் தனித்தனியாக சிலைகளை வடித்திருக்கிறார் கார்யம்.

ராஜராஜன் இறந்த பிறகு அவற்றோடு குத்துவிளக்கு, விபூதி மடல் இவைகளையும் செய்து வைத்தார் கார்யம். இந்தக் தகவல்கள் அனைத்தையும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயி லின் மேற்கு திருச்சுற்றில் உள்ள கல்வெட்டு இன் றைக்கும் பேசுகிறது.

ராஜராஜன் லோகமா தேவி சிலைகள் 1900 வரை பிரகதீஸ்வரர் கோயிலில் இருந்ததாகச் சொல்லப்படு கின்றன. அதன்பிறகு அங் கிருந்து எப்படியோ கடத்தப்பட்டு விட்டதால் புதிய சிலை ஒன்றை செய்து, அதன் பீடத்தில் ‘பெரிய கோயில் ராசா ராசேந்திர சோள ராசா’ என்று பெயர்வெட்டி வைத்து விட்டார்கள். கடத்தப்பட்டது ராஜ ராஜன் சிலை என்பது தெரியாமல் ராஜேந்திர சோழன் பெயரை வெட்டி இருக்கிறார்கள். ஒரி ஜினல் ராஜராஜன் சிலையானது இப்போது அகமதாபாத்தில் உள்ள கவுதம் சாராபாய் ஃபவுண்டே ஷனுக்குச் சொந்தமான ‘காலிக்கோ’ மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தனியார் மியூசியத்தில் ராஜராஜன் - லோகமாதேவி சிலைகள் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட சோழர்கால செப்புச் சிலைகள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன. எம்.ஜி.ஆர். முதல்வ ராக இருந்தபோது தஞ்சை பெரிய கோயிலில் இப்போதுள்ள ராஜ ராஜன் சிலைக்கு காஞ்சி மடம் வைரக் கிரீடம் வழங்கியது. அதை அணிவிப்பதற்காக பிரதமர் இந்திரா காந்தியை தஞ்சைக்கு அழைத்து வந்தார் எம்.ஜி.ஆர். அதுசமயம், தஞ்சை கோயிலில் இருப்பது ஒரிஜினல் ராஜராஜன் சிலையே இல்லை என்று ஆதா ரத்துடன் சர்ச்சையை கிளப்பினார் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத் தின் வெளியீட்டு மேலாளராக இருந்த தொல்லியல் ஆர்வலர் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

குஜராத் சென்ற தமிழகக் குழு

இதுவே பெரும் சர்ச்சையாகிப் போகவே, ராஜராஜனை மீட்டுவர இந்திராவும் எம்.ஜி.ஆரும் முயற்சி எடுத்தார்கள். அத்தனையும் தோற் றுப்போன நிலையில், 2010-ல் தஞ்சை பெரியகோயில் எழுப்பப் பட்டு, ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவின்போது ஆட்சியில் இருந்த திமுக, ராஜராஜன் சிலையை மீட்கும் முயற்சிகளில் இறங்கியது. இதற்காக, அப்போ தைய சுற்றுலாத்துறைச் செய லாளர் வெ.இறையன்பு, கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, தொல்லியல் அறிஞர் முனைவர் நாகஸ்வாமி, குடவாயில் பால சுப்பிரமணியன் உள்ளிட்டோரைக் கொண்ட குழு ஒன்று குஜராத் சென்றது.

அப்போது குஜராத் முதல்வ ராக இருந்த நரேந்திர மோடியும் ராஜராஜன் சிலையை தமிழகத் துக்கு மீட்டுக் கொடுப்பதில் ஆர்வமாக இருந்தார். குஜராத் அரசுச் செயலாளராக இருந்த வெ.இறையன்புவின் சகோதரர் திருவாசகம் மற்றும் அங்கிருந்த தமிழகத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அத்தனை பேரும் அப்போது இவ் விஷயத்தில் ஆர்வம் காட்டினார் கள். ஆனாலும், ராஜராஜனை தமிழகம் கொண்டுவரமுடிய வில்லை. அதற்கு என்ன காரணம் தெரியுமா?

ராஜராஜன் சிலைதான்

டெல்லி நேஷனல் மியூசியத் தின் டைரக்டர் ஜெனரலாக இருந்த சி.சிவமூர்த்தி 1963-ல், தான் எழுதிய தென் இந்திய செப்புச் சிலைகள் குறித்த ஒரு நூலில் சாராபாய் மியூசியத்தில் இருப்பது ராஜராஜன் சிலைதான் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார். 1983-ல் டெல்லியில், அணிசேரா நாடுகள் கூட்டம் நடந்தபோது, டெல்லி நேஷனல் மியூசியம் இந்தியாவின் அரிய செப்புச் சிலைகள் பற்றி, ‘The Great Tradition India Bronze Master Pieces' என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டது. அதில், ‘காலிக்கோ மியூசியத்தில் உள் ளது ராஜராஜன் - லோகமாதா சிலைகள்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை’ என்று தெள்ளத்தெளிவாக குறிப் பிட்டிருக்கிறார் முனைவர் நாக ஸ்வாமி.

ஆனால் பிற்பாடு, காலிக்கோ மியூசியத்தில் உள்ள சோழர் காலத்து செப்புச் சிலைகள் குறித்து அந்த மியூசியத்திற்கு ‘கேட்லாக்’ எழுதிக் கொடுத்த நாகஸ்வாமி, முன்பு ராஜராஜன் என்று தான் தெரிவித்த அதே சிலையை, ‘கிங்க் ஆஃப் கிங்ஸ்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிலையை மீட்டுவர சென்றிருந்த தமிழக குழுவினரிடம் பேசிய காலிக்கோ மியூசியத்தின் தலைவரான கிரா சாராபாய், ‘இது ராஜராஜன் சிலைதான் என்று நாகஸ்வாமி கூறினால், இப்போதே சிலையை உங்களிடம் ஒப்படைக்கத் தயார்’ என்று கூறினார். அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட தமிழக குழுவினர் அதீத ஆர்வத்துடன் நாகஸ்வாமியின் முகத்தைப் பார்த்தார்கள். பிறகு என்ன நடந்தது?

- சிலைகள் பேசும்…

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-22-தஞ்சை-ராஜராஜன்-லோகமாதேவி-சிலைகள்/article8946944.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

சிலை சிலையாம் காரணமாம் - 23: செப்பேடுகளின் நிலை!

 
‘காலிக்கோ’ மியூசியத்துக்கு நாகஸ்வாமி எழுதிக் கொடுத்த கேட்லாக்.
‘காலிக்கோ’ மியூசியத்துக்கு நாகஸ்வாமி எழுதிக் கொடுத்த கேட்லாக்.

ராஜராஜன் சிலை தஞ்சை பெரிய கோயிலில் இருந்ததுதான் என நாகஸ்வாமி நிச்சயம் உறுதிப் படுத்துவார் என்று தமிழகக் குழுவினர் ஆவலோடு எதிர் பார்த்திருந்த நிலையில், ‘இது ராஜராஜன் சிலை இல்லை’என்று ஆணித்தரமாகச் சொல்லிவிட்டார் நாகஸ்வாமி. அமைச்சர் தங்கம் தென்னரசு நாகஸ்வாமியிடம் தனியாகப் பேசிப் பார்த்தபோதும், ‘அது ராஜ ராஜன் சிலை’ என்று உறுதிப் படுத்த மறுத்துவிட்டார். அதற்கு மேல் எதுவும் பேசமுடி யாமல் போனதால், வெறும் கையுடன் வீடு திரும்பியது தமிழகக் குழு.

‘இந்த முரண்பாடு ஏற்பட்டது ஏன்?’ என நாகஸ்வாமியிடம் கேட்ட தற்கு, ‘‘டெல்லி மியூசியத்துக்கு நான் நூல் எழுதியபோது, சாராபாய் மியூசியத்தில் இருப்பது ராஜராஜன் சிலைதான் என ஒரு ஊகத்தின் அடிப்படையில்தான் எழுதிக்கொடுத்தேன். ஆனால், சிலையை நேரில் பார்த்த பிறகு மாற்றுக் கருத்து வந்துவிட்டது. மியூசியத்தில் இருப்பது சோழர் காலத்துச் செப்புச் சிலைதான். ஆனால், அது ராஜராஜன் சிலை என்பதற்கு உரிய ஆதாரம் இல்லை. அந்தக் காலத்தில் சண்டிகேஸ்வரர் சிலைகளைக் கூட இதே தோற்றத்தில் செய் திருக்கிறார்கள். அப்படி இருக் கும்போது, அது ராஜராஜன் சிலை என்பதை எப்படி உறுதிப் படுத்த முடியும்? அந்தச் சிலை தஞ்சையில் இருந்தது என்பதற் கான அடையாளமோ, அது அங்கிருந்து காணாமல்போனது குறித்து புகார் செய்யப்பட்டதற் கான ஆதாரமோ இல் லாதபோது, எந்த அடிப் படையில் அது ராஜராஜன் சிலைதான் என நாம் உரிமை கொண்டாட முடி யும்?’’ என்றார்.

அது ராஜராஜன் சிலையே இல்லை என்று ஒரு வாதத்துக்காக வைத் துக்கொண்டாலும் இருப துக்கும் மேற்பட்ட சோழர் காலத்துச் செப்புத் திருமேனிகள் குஜராத்துக்கு அதுவும் ஒரு தனியார் மியூசியத்தின் கைக்குப் போனது எப்படி என்பது குறித்து விசாரிக்கக்கூட இங்குள்ள யாரும் இதுவரை மெனக்கெட்டதாகத் தெரியவில்லை.

silai1_2961484a.jpg

கோயில் சிலைகள் மாத்திர மல்லாமல் பழங்காலத்து தேர் சிற்பங்கள், பழமையான செப்பேடுகள் உள்ளிட்டவைகளும் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளன. அந்தக் காலத்தில் மன்னர்கள் தங்களது முக்கியமான அரசாணைகளை செப்பேடுகளில்தான் வெளி யிட்டார்கள்.

எதற்காக அந்த ஆணைகள் வெளியிடப்பட்ட னவோ, அது தொடர்பான அம்சங்கள் மட்டுமல்லாது, ஆணை வெளியிடப்பட்டபோது இருந்த அரசு அதிகாரிகள், ஆட்சி முறை உள்ளிட்ட தகவல்களும் அந்தச் செப்பேடுகளில் விவரிக் கப்படும். ‘கல்லிலும் செம்பிலும் வெட்டினான்’ எனச் சோழர் காலத்து கல்வெட்டுக்கள் பல வற்றில் வரிகள் வருகின்றன. ஆனால், கல்வெட்டுகள் மட்டும் தான் நம்மிடம் உள்ளன. பெரு வாரியான செப்பேடுகள் எங்கே போயின என்றே தெரிய வில்லை.

முதலாம் ராஜராஜன் தனது 21-வது ஆட்சி ஆண்டில், (கி.பி. 1005) நாகை அருகே அமைந்த சூடாமணி புத்த விகாரைக்கு ஆனைமங்கலம் என்ற ஊரை தானமாக எழுதிக் கொடுத்தான். இந்தோனேசியா அருகே கடார தேசத்தை ஆண்ட சூடாமணி வர்மனின் குமாரர் மாற விஜயதுங்க வர்மன்தான் அந்த புத்த விகாரையை அமைத்தவர் என்பதால், அவரது பெயருக்கு ஆனைமங்கலத்தை செப்புப் பட்டயம் எழுதிக் கொடுக்கிறான் ராஜராஜன்.

ஆனைமங்கலம் செப்பேடு

ராஜராஜன் செப்புப் பட்டயத் தில் அளித்த அந்த அரசாணையை கி.பி. 1090-ல் முதலாம் குலோத்துங்கன் மீண்டும் உறுதிப் படுத்தி இன்னொரு ஆணை வெளியிடுகிறான். ராஜராஜன் வெளியிட்ட செப்புப் பட்டயம் ‘ஆனைமங்கலம் பெரிய செப் பேடு’ என்றும் குலோத்துங்கன் வெளியிட்டது ‘ஆனைமங்கலம் சிறிய செப்பேடு’ எனவும் சொல்லப்படுகிறது. பெரிய செப்பேடு 21 ஏடுகளைக் கொண்டது. இதில் முதல் ஐந்து ஏடுகள் வடமொழியில் 111 வரிகள் கொண்டது. எஞ்சிய ஏடுகள் தமிழில் 332 வரிகள் கொண்டது. சிறிய செப்பேடு 3 ஏடுகளில் 52 வரிகளைக் கொண்டது.

16-ம் நூற்றாண்டின் பிற் பகுதியில் டச்சுக்காரர்கள் இந்தியாவை தங்களது ஆதிக் கத்தில் வைத்திருந்தபோது நாகப்பட்டினத்தை தங்களது வணிக நகரமாக வைத்திருந் தார்கள். அந்த சமயத்தில் இவ்விரண்டு செப்பேடுகளும் நாகையில் இருந்து நெதர் லாந்துக்குக் கடத்தப்பட்டது. தற்போது இவ்விரு செப்பேடு களும் தெற்கு ஹாலந்தில் உள்ள லைடன் பல்கலைக் கழக மியூசியத்தில் வைக்கப் பட்டுள்ளன.

இந்தச் செப்பேடுகளில் வெறும் அரசாணைகள் மட்டுமின்றி வேறு சில வரலாற்றுப் பதிவு களும் உள்ளன. சோழர்கள் அண்டை நாடுகளுடனும் சுமூக உறவை வைத்திருந்து தங்களது வணிகத் தொடர்புகளை விரிவுபடுத்தினார்கள் என் பதற்குச் சான்று இந்த செப்பேடுகள். ராஜராஜன் காலத் தில்தான் தமிழ் மொழி யானது அழகுபெற்று எளிய நடைக்கு வந்தது. இதற் கான ஆதாரங்களும் இந்தச் செப்பேடுகளில் உள்ளன.

தெளிவான விவரம்

இதேபோல்தான் வேள்விக் குடி செப்பேடும். கி.பி. 770-ல் பராந்தகன் நெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னனால் வெளியிடப்பட்டது இந்தச் செப்பேடு. களப்பிரர்களிடம் இருந்து தமிழகத்தை பாண்டி யர்கள் எப்படி மீட்டெடுத்தார்கள் என்பதை தெளிவாக விவரிக்கிறது இந்தச் செப்பேடு. இது மட்டும் கிடைக்காமல் போயிருந்தால் பாண்டிய மன்னர்களின் பரம்பரை வரலாறேகூட நமக்குத் தெரியாமல் போயிருக்கலாம். பத்து ஏடுகளைக் கொண்ட இந்தச் செப்பேடானது தற்போது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ளது.

செப்பேடுகள் மாத்திரமல்ல; நாகப்பட்டினம் புத்த விகாரையில் இருந்த புத்தர் சிலை ஜப்பான் வரைக்கும் போனதும் இப்படித் தான்.

- சிலைகள் பேசும்…

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-23-செப்பேடுகளின்-நிலை/article8952097.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.