Jump to content

சிட்னி


Recommended Posts

சிட்னி வந்தால் "Jenolan Caves" போங்கோ

 

image001.jpg

image008.jpg

சிட்னிக்கு அலுவலக விஷயமாக வருபவர்களோ அல்லது சுற்றுலாவுக்காக வருபவர்களோ என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி இதுதான். "சிட்னியில் சுற்றிப் பார்க்க உருப்படியான இடம் எது?, வெறும் பீச் இற்கு மட்டும் தான் போகவேண்டியிருக்கே" என்று சலிப்பார்கள். அவர்களுக்கு நான் முதலில் கைகாட்டி விடும் இடம் இந்த "Jenolan Caves".

பொதுவாகவே ஆதிவாசிகள் என்றால் இயற்கையின் சீற்றத்தில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள குகைகளை நாடுவார்கள். அப்படியாக முன்னொரு காலத்தில் அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளான Aborigines வாழ்விடமாக Jenolan Caves என்ற குகைகளே இருந்து வந்திருக்கின்றன. ஐரோப்பியர்களின் கண்ணில் பட்ட கங்காரு தேசம் நாளடைவில் அவர்களின் கழுகுக் கண்களில் இருந்து இந்தக் குகைகளும் தப்பி விடவில்லை. James Whalan என்ற உள்ளூர் குடியானவரின் பார்வையில் தான் இந்தக் குகைகள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த வருஷம் 1838 ஆம் ஆண்டு என்று கொள்ளப்படுகின்றது.


image007.jpgimage006.jpg

James Whalan மற்றும் Charles இன் முயற்சியால் இந்தப் பகுதியில் இருந்த பல குகைகள் கண்டுபிடிக்கப்பட்டு நாளடைவில் அவை முக்கியமான சுற்றுலாத் தலங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இன்று நாளாந்தம் நூற்றுக்கணக்கானோர் செல்லும் இடமாக இந்த "Jenolan Caves" மாறி விட்டது.

இந்த "Jenolan Caves" பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்து ஒவ்வொரு குகைகளாகப் பார்ப்போரும் உண்டு. ஆனால் ஏதாவது ஒரு நல்ல குகையைத் தேர்ந்தெடுத்துப் பார்த்தாலே போதுமானது. ஒவ்வொரு குகைகளைப் பார்ப்பதற்கும் தனித்தனிக் கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. இவை பெரியவர்களுக்கு 27 அவுஸ்திரேலிய டொலர்களில் இருந்து ஒவ்வொரு குகையின் தன்மையைப் பொறுத்து வேறுபடுகின்றது. முழுமையான விபரங்களைப் பெற்றுக் கொள்ள இங்கேசெல்லுங்கள்.

image004.jpgimage003.jpg

ஒவ்வொரு குகைகளைப் பார்ப்பதற்கும் ஒவ்வொரு நேரங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. பேய்கள் உலாவும் குகை கூட இருக்கிறதாம். கிடுகிடுகிடுகிடு
எந்தக் குகைக்குப் பயணிக்க வேண்டும் என்று நுளைவுச் சீட்டை வாங்கியிருக்கிறீர்களோ அந்தக் குகை முகப்பிற்குச் செல்ல வேண்டும். பின்னர் அந்தக் குகையைச் சுற்றிக்காட்ட நியமிக்கப்பட்டிருக்கும் வழிகாட்டி ஒருவர் வந்தது, குறித்த குகையின் பெருமையைச் சிலாகித்துப் பேசி விட்டு எல்லோரையும் உள்ளே அழைத்துச் சென்று ஒவ்வொரு இடமாக விளக்கம் சொல்லிக் காட்டுவார். கிட்டத்தட்ட 45 நிமிட நேரம் இந்தக் குகைப் பயணம் இருக்கும். கரடு முரடான பாதையாக மேலும் கீழும் ஏறி இறங்கும் பயணமாக இருந்தாலும் களைப்பே தெரியாத அளவுக்கு உள்ளே லேசான குளிரோடு இயற்கை செதுக்கி வைத்த நவீன காலச் சிற்பங்களாய் பவளப்பாறைகள் ஒவ்வொன்றும் தென்படும் காட்சிகளைக் காணும் போது உள்ளத்தில் உவகை வந்து சேரும். சில பகுதிகளில் வண்ண வண்ண விளக்குகளை இட்டு அலங்கரித்திருக்கின்றார்கள். இந்தக் குகைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்குள் திருமணம் முடிக்க வேண்டும் என்று மல்லுக்கட்டுபவர்களுக்கும் வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றன.

சுற்றுலா முடித்து வெளியில் வந்தால் பசி எடுக்கிறதா, அங்கேயே நல்ல உணவகமும் உண்டு. கூடவே "Jenolan Caves" இற்கு வந்து போனதன் ஞாபகமாக வாங்கி வைக்க ஞாபகச் சின்னங்களை விற்கும் கடையும் உண்டு.

Blue Mountains என்ற இன்னொரு முக்கிய சுற்றுலா மையத்துக்கு அருகைமையிலேயே இந்த இடம் இருப்பது இன்னொரு வசதியான அம்சமாகும். நாளாந்தம் சுற்றுலாப் பயணிகளை இந்த இடங்களுக்கு ஏற்றிச் செல்லும் Sydney Explorer பஸ் வசதியும் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த இடத்திற்கு நேரடியான புகையிரதச் சேவை கிடையாது. சொந்த வாகனத்தில் வருபவர்களும் தாராளமாகப் பயணிக்கலாம். குறுகலான பாதையாக மலையைச் சுற்றுச் சுற்றி மேல் முகட்டுக்கு வருவதற்குள் ஒவ்வாமையால் வாந்தி/சத்தி வருபவர்களும் உண்டு. இன்னொரு விஷயம், இந்த இடத்துக்கு சொந்த வாகனத்தில் பயணிக்கும் போது வாகனத்தில் தாராளமாக எரிபொருள் உள்ளதா எனச் சரி பார்த்த பின்னரே பயணப்படுங்கள். காரணம், இந்த இடத்துக்குப் பயணிக்கும் கிட்டத்தட்ட 45 நிமிட சுற்று வட்டாரத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் காணக்கிடைப்பதே அபூர்வம். ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று மலையின் இடையில் இருந்த ஒரு எரிபொருள் நிரப்பு நிலையமும் போன தடவை போனபோது இழுத்து மூடப்பட்டிருந்தது.
ஒகே, சிட்னி வந்தால் "Jenolan Caves" போங்கோ, போயிட்டு வந்து அனுபவத்தைச் சொல்லுங்கோ


image002.jpgimage032.jpgimage031.jpgimage030.jpgimage029.jpgimage028.jpgimage027.jpgimage026.jpgimage024.jpgimage023.jpgimage022.jpgimage019.jpgimage018.jpgimage015.jpgimage014.jpgimage012.jpgimage010.jpg

 
Link to comment
Share on other sites

சிட்னி ஹாபர்பிரிட்ஜில் நடக்கலாம், வாங்க

1.jpg

அவுஸ்திரேலியாவின் குறிப்பிடத்தக்க கேந்திரங்களில் ஒன்று ஹாபர் பிரிட்ஜ் எனப்படும் சிட்னி மேம்பாலம். அவுஸ்திரேலியா வர விரும்பாதவர்கள் இந்தியன் படத்தில் வரும் "ரெலிபோன் மணி போல்" பாடலை மீண்டும் பார்க்கவும்.அதில் வரும் மேம்பாலம் தான் இது. உலகின் மிகப்பெரிய (உலகின் மிக நீளமானது அல்ல)மேம்பாலமாகக் கருதப்படும் இது நீர் மட்டத்திலிருந்து 134 மீற்றர் மேலே உள்ளது.1932 ஆம ஆண்டு கட்டப்பட்ட இந்த ஹாபர் பிரிட்ச் இந்த ஆண்டுடன் தனது 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. இந்த மேம்பாலம் உள்ளூர் வாசிகளால் Coathanger கோர்ட்டுக் கொழுவி (இது வேற கொழுவி) என்று அழைக்கப்படுகின்றது.

2.jpg
1815 ஆம் ஆண்டு பிரான்சிஸ் கிறீன்வே என்பவரால் திட்டமிடப்பட்டு சிட்னித் துறைமுகத்தின் வட, தென்முனைகளுக்கான தொடுப்பாக இது கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் 1900 ஆம் ஆண்டு வரை வரைபட மாதிரிகளுக்காகக் காலம் செலவழிந்தது. பின்னர் முதலாம் உலக யுத்தத்தைத் தொடந்து முனைப்போடு இப்பணியில் இறங்கி பொதுவான ஒரு நிர்மாண மாதிரிப்படத்தை Dr J J C Bradfield மற்றும் NSW Department of Public Works சார்ந்த நிபுணர்கள் தயாரித்தனர்.பின்னர் உலகளாவிய ரீதியில் இதை நிர்மாணிப்பதற்கான கேள்வி விண்ணப்பங்களை நியூ சவுத்வேல்ஸ் மாநில அரசினால் கோரப்பட்டு 1922 ஆம் ஆண்டு Dorman Long and Co of Middlesbrough என்ற ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் 1400 தொழிலாளர்களுடன் 8 ஆண்டுகள் காலத்தில் 4.2 மில்லியன் பவுண்ட் செலவில் நிர்மாணிக்கப்பட்டது. 6 மில்லியன் ஆணிகளும் 53000 தொன் உருக்கும் இதற்குப் பயன்படுத்தப்பட்டனவாம். தற்போது 8 வாகனச் சாலைகள் 2 ரயில் தடங்கள் கொண்டு அமைந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ட்றாம் வண்டிக்கான வழித்தடமொன்றும் இருந்தது பின்னர் 1950 இச்சேவை நிறுத்தப்பட்டது.

1932 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் John T. Lang இனால் இது உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் ரிப்பன் வெட்டவில்லை, அது ஒரு வேடிக்கையான சம்பவம் Captain Francis De Groot என்பவர் இதை அரசியலாக்கி ரிப்பன் வெட்டும் உரிமை அரச குடும்பத்துக்கு மட்டுமே உண்டு என்று கண்டனம் தெரிவித்ததே அதற்குக் காரணம்.

3.jpg

சிட்னி நகருக்கும் புறநகர்ப்பகுதிகளுக்குமான போக்குவரத்துக்கான பிரதான மேம்பாலமாக இது இருந்தாலும்வருடாவருடம் உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் Bridge climb எனப்படும் பாலம் ஏறும் வழக்கத்தையும் வைத்திருக்கின்றார்கள். தகுந்த பயிற்சிகளுடன் பாலத்தின் மேற்பரப்பில் உலாவி வரலாம், கட்டணம் உண்டு, நானும் போயிருக்கிறேன் (அது பெரிய கதை)இந்த பாலமேறுதல் பற்றி இன்னொரு பதிவில் நானோ அல்லது இன்னொரு கங்காருவோ சொல்லுவோம்.

சரி விஷயத்துக்கு வருவோம்.
வரும் ஞாயிற்றுக்கிழமை 18, மார்ச் அன்று இந்த மேம்பாலம் கட்டிய 75 ஆம் ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்து ஹாபர் மேம்பால நடை (bridge walk) ஒன்று சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது, அன்று புழக்கத்திலிருக்கும் போக்குவரத்துக்கள்இந்த மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டு காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிக்குட்பட்ட வசதியான நேரத்தில் காலாற நடந்து வரலாம்.
4.bmp

இன்னும் ஒரு கிழமை இருக்கிறது, வெளிநாட்டிலோ, உள்நாட்டிலோ இருப்பவர்கள் பஸ், ரயில், கார், விமானம் (கருடா ஏர்லைன்ஸ் வேண்டாம்)ஏதாவது பிடித்து வந்து சேர்ந்தால் ஒரு வலைப்பதிவாளர் மாநாடு நடாத்தி போண்டாவிற்கு பதில் Aussie meat pie இலவசம்.
நடை போட இருப்பவர்கள் ஹாபர் பிரிட்ஜ் இன் உத்தியோகபூர்வத்தளத்தில் முற்கூட்டியே பதிவு செய்யவேண்டும்.
இதோ அந்த முகவரி
http://ourbridge.com.au/

சரி நான் நடக்கப் போறன்,

வரலாற்றுக்குறிப்புக்கள் உதவி
அவுஸ்திரேலிய அரசின் கலாச்சார மற்றும் பொழுபோக்கு தகவல் தளம்

http://2cinaustralia.blogspot.ch/search/label/சிட்னி

விமான இருந்து சிட்னி ஹார்பர் பாலம்

விமான இருந்து சிட்னி ஹார்பர் பாலம்

சிட்னி துறைமுகம் ஜாக்சன் இரவு நேரத்தில்

சிட்னி துறைமுகம் ஜாக்சன் இரவு நேரத்தில்

சிறந்த காட்சியமைப்பு இருந்து PortJackson

போர்ட் ஜாக்சன் உள்ள சிட்னி ஹார்பர்

http://tourism-spot.com/ta/port-jackson-most-beautiful-port-in-the-world-australia/

Link to comment
Share on other sites

"Bondi Beach" போனோம்

1.jpg

சிட்னிக்குச் சுற்றுலா வருபவர்கள், ஒபரா ஹவுசையும், டார்லிங் ஹாபரையும் தரிசித்து விட்டு, இன்னும் கொஞ்சம் ஒரு படி பக்திப்பழமாக இருந்தால் சிட்னி முருகன் ஆலயத்துக்குப் போய் அருச்சனையும் செய்வார்கள். இவற்றோடு இணையும் இன்னுமொரு சுற்றுலாத் தலம், சிட்னியின் கடற்கரைப் படுக்கைகள் ஆகும். சிட்னியின் கரையோரப் படுக்கைகளில் நல்ல கடற்கரைகள் அதிகம் இருக்கின்றன.

8.jpg

போர்ச் சூழல் நிலவும் இலங்கை போன்ற பகுதிகளைத் தவிர்த்து விட்டு டிசம்பர் மாதக் கோடைகாலத்தின் இதமான இளஞ்சூட்டைப் பருக விரும்பும் மேற்குலகத்தோர், அவுஸ்திரேலியாவின் Queensland மாநிலத்தில் உள்ள Gold Coast பிரதேசம் மற்றும் சிட்னியில் உள்ள கடற்கரைப் பகுதிகள், அதுவும் குறிப்பாக Bondi கடற்கரையைத் தேடி வருவார்கள். டிசம்பர் மாதம் தொடங்கி பெப்ருவரி மாத இறுதி வரை இப்படியான கடற்கரைகளை ஈ மொய்ப்பது போல கடற்கரையில் வெறும் மேலுடன் மனித உடல்கள் சூடு வாங்கிக் கொண்டிருக்கும்.

6.jpg

நல்ல சுத்தமான குருமண் படுக்கையும், சுத்தமான ஆழமற்ற கடற்படுக்கையும் கொண்டது Bondi கடற்கரை. இங்கே வருவதற்கு சிட்னியின் மத்திய புகையிரத நிலையமான Central Station சென்று Bondi Junction என்ற தரிப்புக்கு ஒரு ரயில் எடுக்க வேண்டும். பின் Bondi Juntion இல் இருந்து 10 - 15 நிமிட இடைவேளையில் இந்தக் கடற்கரை செல்லும் பஸ் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். பயணத்தினைப் பார்த்துப் பயந்து விடாதீர்கள். சிட்னியின் பெரும்பாகத்தில் இருந்து ஆகக் குறைந்தது ஒன்றரை மணி நேரத்துக்குள் இந்தக் கடற்கரையை வந்தடையலாம். மெல்பன் நண்பர்கள் இந்த கிறிஸ்மஸ் விடுமுறைக்கு வந்ததால் அவர்களோடு காரில் பயணம் செய்து இங்கு போனேன். நாலு மணி நேரக் கட்டண கார் தரிப்பு வசதிகள் கடற்கரையோரத்திலும், மற்றும் கார் தரிப்பு நிலையங்களிலும் உண்டு.

கடற்கரையோரம் நிறைய உணவகங்கள், தங்குமிடங்கள் இருந்தாலும் வாய்க்கு ருசியாக கடலுணவை புத்துணர்வோடு பெற்றுச் சாப்பிட நல்ல உணவகம் இல்லாதது பெருங்குறை. ஆனாலும் வயிற்றை நிறைத்து விடலாம்.

கடலில் நீந்தவும், உடை மாற்றவும், குளிக்கவும், கழிப்பகங்களும் கூடவே நல்ல வசதியோடும் பராமரிப்போடும் உள்ளன. கூடவே கடலில் மிதந்து களிக்கும் நீர்ச்சறுக்கல்(surfing) ஏற்பாடும் உண்டு. உலகின் முதல் கடல் மிதப்போர் பாதுகாப்பு கழகம் (world's first surf lifesaving club) ஆன Bondi Surf Bathers Life Saving Club இங்கு தான் ஆரம்பிக்கப்பட்டது. 1000 அங்கத்தவர்களையும் 260 தொண்டர்களையும் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு பல நல்ல சேவைகளைக் கடற்கரை நுகர்வோருக்கு வழங்குகின்றது.

10.jpg

ஆழக்கடலுக்குச் செல்வோரை ஒலிபெருக்கி மூலம் எச்சரித்துக் கரைக்கு வருமாறு ஆப்பு வைக்கின்றது. கூடவே எந்தெந்தப் பகுதிகள் கடல் நீராட உகந்தவை என்பதை அறிவித்தும் கொடிகள் நட்டும் காட்டுகின்றது இந்த அமைப்பு. மற்றைய கடற்கரைகளோடு ஒப்பிடும் போது சற்றே ஆழம் குறந்த கரை ஆனால் அதிக அலை அடிப்பை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

கடற்கரை எங்கணும் திறந்த வெளி வெற்றுடலோடு ஆண்களும், மேலே பாதி கர்ச்சிப் கீழே பாதி கர்ச்சிப் உடன் பெண்களும் (சிலர் மேலேயும் இல்லாமல் ;)"கடலோரும் வாங்கிய காற்று" பாட்டை ஆங்கிலத்தில் ரீமிக்ஸுகிறார்கள்.

சிட்னிக்குப் போய்ப் பார், Bondi Beach இல் ஒண்டியாய் குளித்துப் பார் ;-)

( மெல்பன் நண்பர்களோடு எடுத்த கவர்ச்சிப் படங்கள் தணிக்கை செய்யப்பட்டு ;-) மேலதிக படங்கள் கீழே

2.jpg

5.jpg

http://2cinaustralia.blogspot.ch/search/label/சிட்னி

பொண்டாய் கடற்கரை

Double rainbow at Bondi Beach

பொண்டாய் கடற்கரை (Bondi Beach) அவுஸ்திரேலியாவிலுள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பொண்டாய் என்னும் இடத்திலுள்ள புகழ்பெற்ற கடற்கரை ஆகும். இது சிட்னியின் கிழக்குப் பிரதேசத்தில் நகரின் மத்தியில் இருந்து அண்ணளவாக ஏழு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. வருடம் முழுவதும் பெருந்தொகையான உல்லாசப்பயணிகள் பொண்டாய் கடற்கரைக்கு வருகைதருகிறார்கள். பல பிரித்தானிய மற்றும் அயர்லாந்து சுற்றுலாப்பயணிகள் கிறிஸ்துமஸ் தினத்தினை இங்கே கழிக்கிறார்கள்.

IMG_8635

Icebergs and Mackenzie's Point

 

DSC01163.JPG


More:https://ta.advisor.travel/poi/ponnttaay-kttrrkrai-8080 'bondi fashion accessory' by Frank Malerba - Sculpture by the Sea 2007

https://ta.advisor.travel/poi/ponnttaay-kttrrkrai-8080

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.