Jump to content

மது, புகைத்தல் மற்றும் போதை வஸ்து பாவனை குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் தண்டிக்கப்படுவார்கள்:-


Recommended Posts

மது, புகைத்தல் மற்றும் போதை வஸ்து பாவனை குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் தண்டிக்கப்படுவார்கள்:-

 

 

 யாழ் நகர பிரபல பாடசாலைகளில் மது, புகைத்தல் மற்றும் போதை வஸ்து பாவனை குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் தண்டிக்கப்படுவார்கள் யாழ் மேல் நீதிமன்றம் எச்சரிக்கை


யாழ் நகர்ப்புறத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் போதை வஸ்து பாவனை சில மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக கவலை வெளியிட்டுள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், பாடசாலை நேரத்தில் போதை வஸ்து பாவனை குற்றச் செயல்களில் மாணவ்கள் ஈடுபடுவதாகவும் அத்தகைய மாணவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வியாழனன்று எச்சரிக்கை செய்துள்ளது.

நூறு கிலோ கஞ்சா உடைமையில் வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்கு தொடர்பான பிணை மனு யாழ் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிபதி இளஞ்செழியன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.  

யாழ் நகரில் உள்ள பிரபல பாடசாலைகளில் உள்ள ஒரு சில மாணவர்களே பாடசாலை நேரத்தில் பாடசாலை வளாகத்தில் மது அருந்துதல், புகை பிடித்தல் மற்றும் போதை கலந்த இனிப்புகளை ருசித்தல் போன்ற போதை வஸ்துகளைப் பயன்படுத்துகின்ற  குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக மேல் நீதிமன்றத்திற்குச் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டையடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக நீதிபதி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

யாழ்;ப்பாணம் நகர்ப்புற பிரபல பாடசாலைகளில் ஒரு சிறு தொகை மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் கல்வி கற்கும் நேரத்தில் போதை வஸ்து பாவிப்பதாகவும், போதை கலந்த இனிப்புகளை உண்பதாகவும், புகை பிடித்தல் மற்றும் மது அருந்துவதாகவும் பாடசாலை சமூகங்களினால் மேல் நீதிமன்றத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அந்தப் பாடசாலைகளின் ஒருசில ஆசிரியர்களும் ஒத்துழைப்பும் உதவியும் வழங்கி வருவதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் பராயத்தினராகிய சிறுதொலை மாணவர்களே இத்தகைய போதை வஸ்து பாவனை குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்தக் குற்றச்  செயல்கள் இடம்பெறுகின்ற பாடசாலைகள் அமைந்துள்ள பிரதேசங்கள் மது பாவனை மற்றும் சிகரட் பாவனை தடை செய்யப்பட்ட பிரதேசங்களாக இருந்த போதிலும் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் ஆசிரியர்கள் அதிபர்கள் இந்தக் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அச்சமடைந்திருப்பதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுடைய பெற்றோருக்கு அதுபற்றி அறிவித்து, அவர்களை பொலிஸ் நிலையத்தி;ல் ஒப்படைக்க வேண்டியது அதிபர் ஆசிரியர்களின் கடமையாகும்.

இத்தகைய மாணவர்களை; பொலிசாரின் ஊடாக நேரடியாகக் கண்காணித்து, அவர்களைக் கையும் மெய்யுமாகப் பிடிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

அந்தப் பாடசாலைகளின் ஏனைய மாணவர்களின் ஒழுக்கம், கல்வி, எதிர்காலம் என்பவற்றின் நலன் கருதி போதை வஸ்து பாவனை குற்றச் செயல்களுக்காகக் கைது செய்யப்படுகின்ற மாணவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

போதை வஸ்து பாவனை இளம் பராயத்தினர் மத்தியில் அதுவும் மாணவர்கள் மத்தியில் அனுமதிக்கப்பட முடியாது. அவர்கள் மத்தியில் இத்தகைய குற்றச் செயல்கள் இடம்பெறுவதை சடடத்தை நேசிப்பவர்களும், சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களும் பார்த்திருக்கவும் முடியாது என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133658/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நகர்ப்புறத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் போதைவஸ்து பாவனை சில மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக கவலை வெளியிட்டுள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், பாடசாலை நேரத்தில் போதைவஸ்து பாவனை குற்றச் செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதாகவும் அத்தகைய மாணவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

100 கிலோ கஞ்சா உடைமையில் வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்கு தொடர்பான பிணை மனு யாழ் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிபதி இளஞ்செழியன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

யாழ் நகரில் உள்ள பிரபல பாடசாலைகளில் உள்ள ஒரு சில மாணவர்களே பாடசாலை நேரத்தில் பாடசாலை வளாகத்தில் மது அருந்துதல், புகை பிடித்தல் மற்றும் போதை கலந்த இனிப்புகளை உண்ணுதல் போன்ற போதைவஸ்துகளைப் பயன்படுத்துகின்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக மேல் நீதிமன்றத்திற்குச் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டையடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக நீதிபதி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

யாழ்ப்பாணம் நகர்ப்புற பிரபல பாடசாலைகளில் ஒரு சிறு தொகை மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் கல்வி கற்கும் நேரத்தில் போதைவஸ்து பாவிப்பதாகவும், போதை கலந்த இனிப்புகளை உண்பதாகவும், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதாகவும் பாடசாலை சமூகங்களினால் மேல் நீதிமன்றத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அந்தப் பாடசாலைகளின் ஒருசில ஆசிரியர்களும் ஒத்துழைப்பும் உதவியும் வழங்கி வருவதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் பராயத்தினராகிய சிறுதொகை மாணவர்களே இத்தகைய போதைவஸ்து பாவனை குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்தக் குற்றச் செயல்கள் இடம்பெறுகின்ற பாடசாலைகள் அமைந்துள்ள பிரதேசங்கள் மது பாவனை மற்றும் சிகரட் பாவனை தடை செய்யப்பட்ட பிரதேசங்களாக இருந்த போதிலும் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் ஆசிரியர்கள் அதிபர்கள் இந்தக் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அச்சமடைந்திருப்பதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுடைய பெற்றோருக்கு அதுபற்றி அறிவித்து, அவர்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டியது அதிபர் ஆசிரியர்களின் கடமையாகும்.

இத்தகைய மாணவர்களை பொலிஸாரின் ஊடாக நேரடியாகக் கண்காணித்து, அவர்களைக் கையும் மெய்யுமாகப் பிடிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

அந்தப் பாடசாலைகளின் ஏனைய மாணவர்களின் ஒழுக்கம், கல்வி, எதிர்காலம் என்பவற்றின் நலன் கருதி போதைவஸ்து பாவனை குற்றச் செயல்களுக்காகக் கைது செய்யப்படுகின்ற மாணவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

போதைவஸ்து பாவனை இளம்பராயத்தினர் மத்தியில் அதுவும் மாணவர்கள் மத்தியில் அனுமதிக்கப்பட முடியாது. அவர்கள் மத்தியில் இத்தகைய குற்றச் செயல்கள் இடம்பெறுவதை சட்டத்தை நேசிப்பவர்களும், சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களும் பார்த்திருக்கவும் முடியாது என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/community/01/109614

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//யாழ்ப்பாணம் நகர்ப்புற பிரபல பாடசாலைகளில் ஒரு சிறு தொகை மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் கல்வி கற்கும் நேரத்தில் போதைவஸ்து பாவிப்பதாகவும், போதை கலந்த இனிப்புகளை உண்பதாகவும், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதாகவும் பாடசாலை சமூகங்களினால் மேல் நீதிமன்றத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.//

மிகவும், கவலையான செய்தி.
மாணவர்கள் பாடசாலையில் இருக்கும் நேரம் 7 மணித்தியாலம்.
பிள்ளையை  பெற்றவர்களுக்கு,  தன் பிள்ளையின் மீது  அக்கறை இருந்தால்,  
மீது மிகுதி 17 மணித்தியாலத்தையும்.... கண்ணும், கருத்துமாக.... கவனித்து வந்திருப்பார்கள்.

 

அந்தக் கடமையை செய்யத் தவறிய, பெற்றவர்களின் குற்றம் தான்... இங்கு கவனத்தில் எடுக்கப் பட வேண்டும்.
பிள்ளை பெத்தவன் தன் பிள்ளையை, வளர்க்க தெரியாவிட்டால், பிள்ளை பெத்திருக்கக் கூடாது. 

அதனை விட்டு,  எல்லாவற்றுக்கும்... பாடசாலை  ஆசிரியர்,  நீதி மன்றம்..... என்று,  குறைகளை சொல்லிக் கொண்டு இருந்தால்,  
எம்மை நாமே.... முட்டாளாக்கி,  கொள்வதாக  முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

யாழ் நகரில் உள்ள பிரபல பாடசாலைகளில் உள்ள ஒரு சில மாணவர்களே பாடசாலை நேரத்தில் பாடசாலை வளாகத்தில் மது அருந்துதல், புகை பிடித்தல் மற்றும் போதை கலந்த இனிப்புகளை ருசித்தல் போன்ற போதை வஸ்துகளைப் பயன்படுத்துகின்ற  குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக மேல் நீதிமன்றத்திற்குச் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டையடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக நீதிபதி கூறியுள்ளார்.

நடத்தைகள் சீர்கெட்டுவிட்டது. கடுமையான கண்காணிப்பும்,கடுமையான தண்டனைகளாலுமே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.