Jump to content

முப்படையினரின் கட்டுப்பாட்டில் 2586 ஏக்கர் நிலம்


Recommended Posts

முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் 2586 ஏக்கர் நிலம் காணப்படுவதாக புள்ளிவிபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

தரைப்படை, கடற்படை, விமானப்படை, பொலிஸ் ஆகிய தரப்புகளிடமே மேற்படி பரப்பளவு காணிகள் உள்ளன. இதில் பொலிஸாரிடம் அரச காணி இருபது ஏக்கர் மாத்திரமே உண்டு. ஏனையவை முப்படையினரிடம் காணப்படுகிறது. அந்த வகையில் அரச காணிகள் தரைப்படையினரிடம் 959 ஏக்கரும், கடற்படையினரிடம் 313 ஏக்கரும், விமானப்டையினரிடம் 14 ஏக்கரும், பொலிஸாரிடம் 20 ஏக்கரும் காணப்படுகிறது.மேலும் மக்களுடைய காணி அனுமதிபத்திரம் உள்ள காணிகளில் தரைப்படையினரிடம் 164 ஏக்கர் காணப்படுகிறது.

இதனை தவிர தனியார் உறுதிக் காணிகளில் தரைப்படையினரிடம் 737 ஏக்கர் காணியும், கடற்படையினரிடம் 379 ஏக்கர் காணியும் காணப்படுகிறது. ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளை கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓயா சிங்கள பிரதேச செயலாளர் பிரிவைத் தவிர ஏனைய ஜந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமே படையினர் இவ்வாறு காணிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

அதனடிப்படையில் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 1671 ஏக்கர் காணியும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 316 ஏக்கர் காணியும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 141 ஏக்கர் காணியும், துனுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 425 ஏக்கர் காணியும், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 33 ஏக்கர் காணியும் படையினரிடம் காணப்படுகிறது.

ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளை கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் 41465 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து முப்பதாயிரத்து 332 பேர் வாழ்கின்றனர். இதில் வெலிஓயா சிங்கள பிரதேச செயலாளர் பிரிவைத் தவிர ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழ்கின்ற மக்களில் பலருக்கு இன்னும் சொந்தக் காணிகள் இல்லாதிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/lifestyle/01/109486

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐநாவில் சொறீலங்கா தீர்மானங்கள் வரும் போது அப்பப்ப விட்டுக்கிட்டு இருக்கனுமில்ல. அதுக்கு நிறைய ஏக்கர் கணக்கில பிடிச்சு வைச்சால் தானே.. 100 விட்டிட்டு 1000 கையப்படுத்தலாம்.. புத்த கோவில் கட்டவும்.. உல்லாச விடுதி கட்டவும்.. இராணுவ கொத்தளங்கள் அமைக்கவும்.. இன்னும் இன்னோரென்ன சிங்கள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும். தமிழ் அரசியல்வாதிகள் இழிச்ச வாயங்களாக நடித்துக் கொண்டிருக்கும் வரை உந்தக் காணிகள் ஒருபோதும் விடுதலை அடையா. அப்பப்ப கொஞ்சம் கொஞ்சம் பிச்சு எறியப்படும்.. சர்வதேச நல்லெண்ணத்தை சொறீலங்கா இராணுவத்தின் மீது கட்டி எழுப்ப. :rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.