Jump to content

Recommended Posts

இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றபட்டு ஒன்பது மாதங்கள் கடந்துள்ள நிலையில் இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக தற்போதும் பலர் கைது செய்யப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடர் தற்போது ஜெனிவாவில் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கை தொடர்பாக வாய்மூல அறிக்கையினை ஆணையாளர் சமர்ப்பித்துள்ளார்.

இலங்கை தொடர்பான ஆணையாளரின் வாய்மூல அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிகளவான இராணுவ பிரசன்னம் காணப்படுகின்றது. தனது இலங்கை விஜயத்தின் போது இதனை நன்கு அவதானிக்க முடிந்தது.

அதிகளவான இராணுவம் நிலைகொண்டுள்ளதால் அப்பகுதிகளிலுள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் இதன் போது கண்டறிய முடிந்தது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை இன மக்கள் மத்தியில் நம்பிக்கையினை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் இன்னும் கிரமமான முறையில் அதன் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.

இதேவேளை, பொறுப்புகூறல் பொறிமுறையில் அனைத்துலக பங்களிப்பு அவசியமானது எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் தனது வாய்மூல அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் வாய்மூல அறிக்கை, முன்கூட்டியே அதன் பிரதி ஒன்று வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/politics/01/109413

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது இப்ப தானா... ஐ.நா. வுக்கு தெரிந்தது.
இப்பிடியே..... அறிக்கையும், குற்றச்சாட்டும் விட்டுக் கொண்டிருப்பது தான்... ஐ.நா. வின் தொழிலா?
ஆக்க பூர்வமான  நடவடிக்கையை எப்ப ஆரம்பிக்கப் போகிறார்கள்.

Link to comment
Share on other sites

ஐநா மனிதவுரிமை சபையின் ஆணையாளர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதை தாமதிப்பதற்கும், போர்க் குற்றவாளிகள் காலத்தைக் கடத்தி தப்பிப்பதற்கும் உதவும் மாஃபியா தலைவர் போல செயற்படுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

இது இப்ப தானா... ஐ.நா. வுக்கு தெரிந்தது.
இப்பிடியே..... அறிக்கையும், குற்றச்சாட்டும் விட்டுக் கொண்டிருப்பது தான்... ஐ.நா. வின் தொழிலா?
ஆக்க பூர்வமான  நடவடிக்கையை எப்ப ஆரம்பிக்கப் போகிறார்கள்.

ஐ நா கடுமையாக நடந்து கொண்டால் சொறீலங்கா வல்லரசு ஐநாவில் இருந்து விலகுவதா நீடிப்பதா என்ற வாக்கெடுப்பை நடத்திடுமோ என்று பயப்பிடுகினம் போல. இதெல்லாம் சர்வதேச அரசராஜகங்களில் சகஜம். tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.