Jump to content

மாணவிகள் மீதான பாலியல் வதை புரியும் ஆசிரியர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்படுவார்கள்:


Recommended Posts

மாணவிகள் மீதான பாலியல் வதை புரியும் ஆசிரியர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்படுவார்கள்:

நீதிபதி இளஞ்செழியன் கடும் எச்சரிக்கை.:-




மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது சட்டரீதியாக பாரதூரமான குற்றமாகும். அதிலும், ஆசிரியர்களே மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது மேலும் மோசமான குற்றமாகும். எனவே, பாடசாலை மாணவிகள் மீது பாலியல் இம்சை புரியும்  ஆசிரியர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார்.

யாழ் மேல் நீதிமன்றத்தில் செவ்வாயன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பிணை மனு ஒன்று சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றின்போது, சமூக விரோதக்குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றி குறிப்பிடுகையிலேயே, நீதிபதி இளஞ்செழியன் இவ்வாறு கடுமையாக எச்சரித்துள்ளார்.

அந்த எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்களில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

பாடசாலை மாணவிகள் மீது பாலியல் வதை அல்லது பாலியல் இம்சை புரியும் ஆசிரியர்களின் குற்றச்செயல்கள் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளியாகக் காணப்படுபவருக்கு பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறைத் தண்டனை விதிப்பதற்கு தண்டனைச் சட்டக் கொவையின் 365 பிரிவில் சட்டம்  பரிந்துரை செய்கின்றது.

பதினாறு வயதுக்குக் குறைந்த மாணவிகள், பாடசாலை வளாகத்தில் அரச கடமையில் உள்ள  ஆசிரியர்களின் அதிகாரபூர்வமான கட்டுப்பாட்டில் இருக்கும்போது, அந்த மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது பாரதூரமான குற்றமாகும். இத்தகைய குற்றம் புரியும் ஆசிரியர்களுக்கு தண்டனைச் சட்டக் கோவையின் விதிகளுக்கு அமைவாக, 7 ஆண்டுகளில் இருந்து, 15 ஆண்டுகள் வரை கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

மாணவிகள் அல்லது பதின்ம வயதுடைய சிறுமிகள் மீதான பாலியல் வதை குற்ற வழக்குகள் மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும் வழக்குகளாகும். மாணவிகள் மீது குற்றம் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்படும் ஆசிரியர்கள் விசாரணைகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்டால், அவர்களுக்கு ஈவிரக்கமின்றி, இவ்வாறாக கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.  

பாடசாலை மாணவிகள் மீதான பாலியல் வதை குற்றம் புரிந்த ஆசிரியரைக் காப்பாற்றுவதும் குற்றச் செயலாகவே கருதப்படும். சாட்சிகள், பாதிக்கப்பட்ட நபர்கள் பாதுகாப்புக் கட்டளைச்சட்டமானது, பாலியல் குற்றம் புரிந்தவர்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன், செயற்படுகின்ற அதிபர் ஆசியர்களை, தண்டிக்கப்படக்கூடிய குற்றத்தைப் புரிந்தவர்களாகவே கருதுகின்றது.

அதேநேரம், குற்றச் செயல் ஒன்று நடைபெற்றுள்ளது என தகவல் அல்லது முறைப்பாடு கிடைத்தவுடன், அதுபற்றி, பொலிசாருக்கு அறிவிக்காமல், அந்த ஆசிரியர் குற்றம் புரிந்ததாகக் கருதி, ஒழுக்காற்று விசாரணை நடத்துகின்ற அனைத்து உயர் அதிகாரிகளுக்கும், எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச் செயல் தொடர்பாக பொலிசாருக்கு அறிவிக்கத் தவறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிமன்றின் மூலம் சட்டப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பாலியல் வதை குற்றச் செயல்களை நீதிமன்றத்தில் நீதிபதிகளினாலேயே சமாதானமாக இணங்கி வைக்க முடியாத குற்றச் செயல் என சட்டம் பரிந்துரைக்கின்றது. இச் சூழ்ந்pலையில் மாணவிகள் மீது பாடசாலை வளாகத்தில் பாலியல் வதை செய்யும் ஆசிரியர்களை சட்டத்தின் முன் நிறுத்தாமல், பாரிய சிறைத் தண்டனைக்குரிய குற்றம் புரியப்பட்டிருக்கினற்து என்று தெரிந்து கொண்டும், பொலிசார் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினருக்கு அறிவிக்காமல், அதிபர், ஆசிரியர், பழையமாணவர் சங்கம் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன ஒன்றிணைந்து சமாதானமாக இணங்கி வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பது, குற்றச் செயல்களுக்கு உதவியாக உடந்தையாக இருந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

குற்றச்செயல்களை மறைப்பதற்கு உதவியாக - உடந்தையாக இருந்தமை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

பாலியல் வதை குற்றம் தொடர்பிலான தண்னைகள் பற்றியும் குற்றச் செயலின் தன்மை பற்றியும் குறிப்பிட்ட நீதிபதி இத்தகைய சந்தர்ப்பங்களில் சட்டப்படி என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிவித்துள்ளார்.

அது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது:

காலை 7 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரையும், பாடசாலை மாணவிகள், அதிபர், ஆசிரியர்களின் அதிகார எல்லைக்குட்பட்ட, பாடசாலையின் பாதுகாவலில் இருந்து வருகின்றார்கள். அத்தகைய நேரத்தில் பாலியல் வதை குற்றம் ஒன்று ஆசிரியரினால் புரியப்பட்டால், அந்த மாணவி எந்த ஆசிரியரிடம் அல்லது எந்த அதிபரிடம் முறைப்பாடு செய்கின்றாரோ, அவர், அந்த மாணவியின் பெறறோருக்கு அதுபற்றி உடனடியாக அறிவித்து, அந்த மாணவியை பெற்றோருடன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, முறைப்பாடு செய்ய வேண்டியது சட்டத்தின் முதற் தேவையாகும்.

கல்வித்துறை உயரதிகாரிகளுக்கு பாலியல் வதை குற்றம் சம்பந்தமாக தகவல் கிடைத்தவுடன், பாதிக்கப்பட்ட மாணவியை, பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று முறைப்பாடு செய்யுமாறு சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபருக்கு அறிவுறுத்த வேண்டியது, உயரதிகாரிகளின் கடமையாகும்.

இந்தச்செயற்பாடுகள் செய்ததன் பின்பே,  குற்றம் சுமத்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக நிர்வாக ரீதியான ஒழுக்காற்று நடவடிக்கை பற்றி அறிவிக்கப்பட வேண்டும்.

சட்டரீதியான பொலிஸ் விசாரணைகள், நீதிமன்ற விசாரணைகளைத் தவிர்த்து, ஒழுக்காற்று விசாரணை நடத்துகின்ற அனைத்து அதிகாரிகள் மீதும், பாலியல் வதை குற்றச் சம்பவத்தை அல்லது குற்றச் செயலை, பொலிசாருக்கு அறிவிக்கத் தவறிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, பாடசாலை மாணவிகள் மீதான பாலியல் வதை குற்றச் செயலானது இரண்டு விதமான விசாரணைகளைக் கொண்டிருக்கின்றது. ஒன்று பொலிஸ் நீpதிமன்ற விசாரணையின் மூலம:; குற்றம் புரிந்த ஆசிரியர் சிறையில் அடைக்கப்படுவது, இரண்டாவது நிர்வாக ஒழுக்காற்று விசாரணையின் மூலம் வேலையில் இருந்து இடை நிறுத்தப்படுவது. ஒழுக்காற்று விசாரணை என்ற போர்வையில், குற்றச் செயலில் ஈடுபட்ட ஆசிரியரை வேறு பாடசாலைக்கு இடம் மாற்றம் செய்து, பாலியல் வதை குற்றச் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கல்வித்துறை உயர் அதிகாரிகள், தண்டனைக்குரியவர்கள் என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

யாழ் குடாநாட்டு மாணவர்களின் ஒழுக்கம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், பாடாசலை மாணவிகள் மீதான ஆசிரியர்களின் ஒழுக்கக் கேடான செயற்பாடுகள் சகிக்க முடியாதவை. மன்னிக்கப்படவும் முடியாதவை. மாணவிகள் மீதான ஆசிரியர்களின் பாலியல் வதை செயற்பாடுகுளுகு;கு முற்றுப்புள்ளி இடவேண்டுமானால், பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனை வழங்கி தண்டிப்பதுதான் அதற்குரிய ஒரே மருந்தாகும்.

நிலைமைகளைப் பார்க்கும்போது, யாழ் குடாநாட்டில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை இயங்குகின்றதா, அவர்களின் பணிகள் என்ன, சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் கடமை புரிகின்றார்களா, குடும்ப நல அதிகாரிகள் கடமையாற்றுகின்றார்களா, சிறுவர் பாதுகாப்பு அரச மட்ட திணைக்களங்கள் இயங்குகின்றனவா, என்ற சந்தேகம் எழுகின்றது.

மாணவர்கள் போராட்டம் நடத்தினால்தான், மாணவிகள் மீதான பாலியல் வதை குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய ஆசிரியர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற நிலைமை யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் போராட்டம் நடத்தாமல் விட்டிருந்தால், கைதுகள் நடைபெறமாட்டாது என்ற நிலைமையும் உருவாக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய அரச திணைக்களங்கள், ஒழுங்கு முறையாகக் கடமையாற்றியிருந்தால், போராட்டங்கள் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கமாட்டாது. எனவே, குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள சூழ்நிலையில் உரிய முறையில் கடமை புரியாத அனைத்து அரச அதிகாரிகளும் நீதி;மன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் எனவும் நீதிபதி இளஞ்செழியன் எச்சரித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133598/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

6 hours ago, நவீனன் said:

காலை 7 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரையும், பாடசாலை மாணவிகள், அதிபர், ஆசிரியர்களின் அதிகார எல்லைக்குட்பட்ட, பாடசாலையின் பாதுகாவலில் இருந்து வருகின்றார்கள்.

ஏன் முப 7 மணி முதல் பிப 2 மணிவரை?

பாடசாலைகளில் மேலதிக வகுப்புகள் மாலை 5, 6 மணிவரை நடக்கும் போது யார் பொறுப்பு?

24 மணி நேரமும் பாடசாலையினுள் நடைபெறும் சம்பவங்களுக்கு அதிபர், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பொறுப்பு.

6 hours ago, நவீனன் said:

பாடசாலை மாணவிகள் மீது பாலியல் இம்சை புரியும்  ஆசிரியர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்படுவார்கள்

இதை மிகவும் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//பதினாறு வயதுக்குக் குறைந்த மாணவிகள், பாடசாலை வளாகத்தில் அரச கடமையில் உள்ள  ஆசிரியர்களின் அதிகாரபூர்வமான கட்டுப்பாட்டில் இருக்கும்போது, அந்த மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது பாரதூரமான குற்றமாகும். இத்தகைய குற்றம் புரியும் ஆசிரியர்களுக்கு தண்டனைச் சட்டக் கோவையின் விதிகளுக்கு அமைவாக, 7 ஆண்டுகளில் இருந்து, 15 ஆண்டுகள் வரை கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

அதேநேரம், குற்றச் செயல் ஒன்று நடைபெற்றுள்ளது என தகவல் அல்லது முறைப்பாடு கிடைத்தவுடன், அதுபற்றி, பொலிசாருக்கு அறிவிக்காமல், அந்த ஆசிரியர் குற்றம் புரிந்ததாகக் கருதி, ஒழுக்காற்று விசாரணை நடத்துகின்ற அனைத்து உயர் அதிகாரிகளுக்கும், எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச் செயல் தொடர்பாக பொலிசாருக்கு அறிவிக்கத் தவறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிமன்றின் மூலம் சட்டப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவிகள் மீதான ஆசிரியர்களின் பாலியல் வதை செயற்பாடுகுளுகு;கு முற்றுப்புள்ளி இடவேண்டுமானால், பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனை வழங்கி தண்டிப்பதுதான் அதற்குரிய ஒரே மருந்தாகும்.

மாணவர்கள் போராட்டம் நடத்தினால்தான், மாணவிகள் மீதான பாலியல் வதை குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய ஆசிரியர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற நிலைமை யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.//

இதற்குப் பிறகும்... மாணவ மாணவிகளின் மீது.... எந்த ஆசிரியராவது கை வைக்க துணிய மாட்டார், என்றே நம்புகின்றேன்.
நன்றி  நீதிபதி இளஞ்செழியன்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.