Jump to content

மெஸ்ஸி தவறவிட்ட பெனால்டி கோல்; அர்ஜென்டினாவை வீழ்த்தி சிலி சாம்பியன்


Recommended Posts

மெஸ்ஸி தவறவிட்ட பெனால்டி கோல்; அர்ஜென்டினாவை வீழ்த்தி சிலி சாம்பியன்

 
Chile_2910784f_2910844f.jpg
 

'மேஜிக்' மெஸ்ஸி பெனால்டி ஷூட் அவுட்டில் கோல் அடிக்கத் தவற, இறுதிப் போட்டியில் பெனால்டி முறையில் சிலி அணி 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது முறையாக கோப்பா அமெரிக்கா சாம்பியன் ஆனது.

ஒரு முக்கிய கோப்பையை வென்று அர்ஜென்டினாவுக்கு 23 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் காத்திருப்பு தொடர்கிறது. சிலி வீரர்கள் தங்கள் ரசிகர்களுக்கு சல்யூட் செய்தனர். நாளை சிலியில் பொது விடுமுறை, மைதானத்தில் லத்தீன் அமெரிக்க இசை, பாட்டு, கொண்டாட்டம். ‘வீ ஆர் த சாம்பியன்ஸ்’ பாடல் ஒலித்தது.

மெஸ்ஸி அதிர்ச்சியில் பெஞ்சில் வந்து அமர்ந்தார். 10 வீரர்களுக்கு சிலி அணி குறுக்கப்பட்டவுடன் முடிந்தது என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் அவர்கள் மன உறுதியுடன் ஆடி 90 நிமிடம் மற்றும் கூடுதல் அரை மணி நேர ஆட்டத்தில் அர்ஜெண்டினாவை கோல் அடிக்க விடாமல் செய்து பிறகு ஷூட் அவுட்டில் பதற்றம் தவிர்த்து தைரியத்துடன் ஆடினர். ஆனால் ஒரு நேரத்தில் இரு அணிகளுமே 10 வீரர்களுடன் ஆடினர்.

கடந்த முறை கிளாடியோ பிராவோ, அலெக்சிஸ் சான்சேஸ், பனேகா ஆகியோரது ஹீராயிச ஆட்டத்தினால் சிலி கோப்பா அமெரிக்கா சாம்பியன் ஆனது.

பெனால்டி ஷூட் அவுட்:

இம்முறை பெனால்டி ஷூட் அவுட்டை சிலி வீரர் விடால் தொடங்கினார். நல்ல ஷாட் அல்ல, ரொமீரோ இடது புறம் பந்தை கோல் செல்லாமல் முறியடித்தார்.

இப்போது அர்ஜென்டினா, கிக் அடிக்க வந்தவர் மேஜிக் மெஸ்ஸி, விடாலை விடவும் மோசமான ஷாட், கோல் கம்பிக்கு மேலே நன்றாகவே சென்றது மெஸ்ஸி தான் என்ன செய்து விட்டோம் என்று உணரும் முன்பே இதன் விளைவுகள் தாக்கம் பெற்றன. 25

அடி 30 அடி ஃப்ரீ கிக் எல்லாம் மெஸ்சிக்கு ஒன்றுமில்லாத நிலையில் பெனால்டி ஷூட் அவுட் என்ற கண்ணாடித் தரை எப்பேர் பட்ட வீரரையும் சறுக்கச் செய்வதே. மெஸ்ஸிக்கும் அடி சறுக்கும். சறுக்கியது.

சிலி அணிக்கு காஸ்டிலோ முதல் கோலை அடித்தார். அர்ஜென்டினாவுக்கு மஸ்செரானோ எண்ணிக்கையை தொடங்கினார். மீண்டும் சிலி அணிக்கு அராங்குய் 2-வது கோலை அடித்தார். அகிரோ, சிலி கோல் கீப்பர் பிராவோவைத் தாண்டி தள்ளிவிட்டார் 2-2.

அடுத்ததாக சிலி அணிக்காக 12 ஆண்டுகள் ஆடி வரும் அனுபவ வீரர் பியூசாஜர் ஆற்றல் வாய்ந்த ஷாட், நல்ல பிளேஸ்மெண்ட் 3-2 சிலி. அர்ஜென்டினா அணியின் பிக்லியா பதற்றத்துடனே வந்தார். பதற்றத்துடனேயே அடித்தார். இதனால் பிராவோ தனது இடது புறம் கோலை தடுத்தார்.

சிலி வீரர் சில்வா வந்தார் வென்றார். 4-2 கோல் கணக்கில் சிலி சாம்பியன்.

120 நிமிட நேர கடும் சவாலான ஆட்டத்தில் 0-0:

ஆட்டம் தொடங்கி முதல் 3 நிமிடத்திலேயே லாங் பாஸ் ஒன்று வர அதனை அர்ஜென்டினா, சிலி கோலுக்கு வெளியே அடித்தது, உடனடியாகவே சிலி அணியின் விடாமல் அருமையாக அர்ஜென்டின தடுப்பரணை உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல அவர்

அருகில் சகாக்கள் யாரும் இல்லை, ரொமீரோ பந்தை சேகரித்தார். 6-வது நிமிடத்தில் மெஸ்ஸியின் முதல் சுவையை உணர்ந்தது சிலி. இஸ்லா மெஸ்சியை தடுக்க முயல மெஸ்ஸி பந்தை டி மரியாவிடம் அடித்தார். இது கார்னர் கொடி அருகே ஃப்ரீ கிக் ஆனது. சிலி இதனை கிளியர் செய்தது.

17-வது நிமிடத்தில் மெஸ்ஸி மின்னல் வேகம் காட்ட சிலி வீரர் டயஸ் ஃபவுல் செய்துதான் காப்பாற்ற நேரிட்டது, இதனால் இவர் புக் செய்யப்பட்டார், 35 யார்டு ஃப்ரீ கிக் கிடைத்தது, மெஸ்சி பிரீ கிக் என்றால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், ஆனால் இம்முறை சிலி கோல் கீப்பர் பிராவோவிடம் நேராக வந்தது. 20-வது நிமிடத்தில் டி மரியா ஓர் அற்புதமான நகர்வில் ஷூட் செய்யும் நிலைமையை உருவாக்கினார், ஆனால் ஷாட்டை சரியாக ஆட முடியவில்லை. பந்து மேலே சென்றது. அதேபோல் 23-வது நிமிடத்தில் ஹிகுவெய்னுக்குக் கிடைத்த வாய்ப்பையும் பிரேவ் பிராவோவினால் முறியடிக்கப்பட்டது.

28-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு முறை மெஸ்ஸிக்கென்றே நியமிக்கப்பட்ட சிலி வீரர் டயஸ் ஃபவுல் செய்ய சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். 42வது நிமிடத்தில் சிலி வீரர் விடால் பந்தை எடுத்துச் செல்ல, அர்ஜென்டின வீரர் ரோஜோ அவருக்கு கடும் சவால் அளிக்கும் முயற்சியில் தவறகா விடாலின் பின்னாலிலிருந்து தடுக்க முயன்றார். இது மஞ்சள் அட்டைக்குரிய தவறுதான் ஆனால் நடுவர் மிகக் கடுமையாக நடந்து கொண்டு ரெட் கார்டு காண்பித்தார், இரு அணிகளுமே 10 வீரர்களுக்குக் குறுக்கப்பட்டது.

2-வது பாதியில் இரு அணிகளும் ஆக்ரோஷ வார்த்தை பரிமாறல் முழங்கை இடிப்புகளுடன் தொடங்கின. இரு அணிகளுமே ஒரு சரியான லயத்திற்கு வர முடியவில்லை பாஸ்கள் தடம் மாறியபடி இருந்தன. மைதானத்தின் மத்திய வட்டத்திலேயே ஆடிக் கொண்டிருந்தனர், தாக்குதல் வீரர்கள் ஏனோ ஊடுருவ முயலவில்லை.

இப்படியே சென்று கொண்டிருந்த போது சிலியின் மும்மூர்த்திகள் சான்சேஸ், வார்கஸ், சார்ல்ஸ் அராங்குய் ஆகியோர் கூட்டிணைந்து தொல்லை கொடுக்க தொடங்கினர். வலது புறம் பந்து மாறி மாறி வந்து மரியா வார்கஸிடம் வர இறுக்கமான கோணத்திலிருந்து வார்கசின் ஷாட் அர்ஜென்டின கோல் கீப்பர் ரொமிரோவிடம் நேராக வந்தது, இது ஒரு ஹாஃப் சான்ஸ்.

மெஸ்ஸி, சிலி அணியின் 2,3 தடுப்பாட்ட வீரர்களுக்குப் போக்குகாட்டி பந்தை அகிரோவுக்கு அடிக்க அருமையான வாய்ப்பை அவர் வைடாக அடித்து தவற விட்டார். இதில் மெஸ்ஸி வெறுப்படைந்தார். மெஸ்ஸி மீண்டும் கடுமையாகவே முயன்றார். கடைசியில் சுமார் 50 அடி தூரம் வரை ஓடி பந்தை தன் வசம் வைத்திருந்தார்.

ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது. கூடுதல் நேர 9-வது நிமிடத்தில் வார்கஸ் கிட்டத்தட்ட கோல் அடித்திருப்பார். டைவ் அடித்து தலையால் முட்டிய பந்தை ரொமிரோ அருமையாகப் பிடித்தார்.

இதற்கு அடுத்த நிமிடத்தில்தான் அர்ஜென்டினா அதிர்ஷ்டம் சோதிக்கப்பட்டது, பந்தை அருமையாக எடுத்து வந்து அர்ஜென்டின வீரர்கள் சிலி எல்லைக்குள் புகுந்து பந்து அகிரோவுக்கு வர அகிரோவின் அபாரமான கோல் முயற்சியில் பந்து வலைக்குள் செல்லும் கடைசி விநாடியில் தன் சக்திக்கும் மீறி எம்பிய சிலி கோல் கீப்பர் பிராவோ பந்தை பாருக்கு மேலே தட்டி விட்டார், இந்த தொடரின் ஆகச் சிறந்த கோல் தடுப்பு இது என்றே கூறிவிடலாம். உண்மையில் இந்த கோல் வாய்ப்பு கடைசி விநாடியில் பிராவோவினால் தட்டி விடப்படும்போதே இது சிலிக்கான இரவு என்று தெரிந்தது. இரு அணிகளும் கடைசியில் தங்களால் இயன்ற அளவுக்கு சவாலாக ஆடினர். ஆனால் கோல் வரவில்லை. ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டுக்குச் சென்றது.

இதில் சிலி 4-2 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பா அமெரிக்காவை 2-வது முறையாக தொடர்ச்சியாக வென்று சாதனை படைத்தது.

http://tamil.thehindu.com/sports/மெஸ்ஸி-தவறவிட்ட-பெனால்டி-கோல்-அர்ஜென்டினாவை-வீழ்த்தி-சிலி-சாம்பியன்/article8779210.ece?homepage=true

Link to comment
Share on other sites

கோபா அமெரிக்கா தோல்வி மெஸ்சி ஓய்வு அறிவிப்பு : கால்பந்து உலகம் அதிர்ச்சி

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் டைபிரேக்கரில் பெனால்டியை மெஸ்சி வெளியே அடிக்க அர்ஜென்டினா மீண்டும் தோல்வியடைந்தது. 23 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய கோப்பையை வெல்லும் வாய்ப்பை அர்ஜென்டினா இழந்தது.கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் தோல்வி கண்டதையடுத்து மெஸ்சி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
 

cops.jpg

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இறுதி ஆட்டம் இன்று காலை 5.30 மணிக்கு நடந்தது. நியூஜெர்சியில் நடந்த இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிலியுடன் அர்ஜென்டினா மோதியது.  ஆட்டத்தை காண 82 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்தனர். தொடக்கம் என்னவோ அர்ஜென்டினா அணிக்கு சாதகமாகத்தான்  இருந்தது. முதல் பாதியில் ஹீகுவானுக்கு கிடைத்த ஓபன் நெட் வாய்ப்பையே அவர் வீணடித்தார். தொடர்ந்து  28வது நிமிடத்தில் இரு முறை மஞ்சள் அட்டை பெற்ற சிலி வீரர் டயாஸ் களத்தை விட்டு வெளியேற்றப்பட, அந்த அணி 10 வீரர்களுடன் ஆட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஆனால் 42வது நிமிடத்தில் அர்ஜென்டினாவும் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. அர்ஜென்டினாவின் தடுப்பாட்ட வீரர் ரோஜா சிலி வீரர் விடாலின் கணுக்காலை குறி வைத்து  தாக்க  நேரடி சிவப்பு அட்டைக் காட்டப்பட்டது.  இரு அணிகளும் 10 வீரர்களுடன் விளையாடின. ஆனாலும் வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் இரு அணி வீரர்களுமே தவறு செய்தனர்.

இதனால் 90 நிமிட ஆட்டமும் சமனில் முடிய,   கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.கூடுதல் நேரத்தின் இறுதிக்கட்டத்தில் மெஸ்சியின் ஃப்ரீகிக்கை அகுரா தலையால் முட்ட,  பந்து அட்டகாசமாக கோலை நோக்கி சென்றது.  ஆனால் சிலி கோல்கீப்பர் கிளாடியோ பிரேவோ அற்புதமான முறையில் தடுத்து விட்டார். 120 நிமிட நேர ஆட்டமும்  கோல் விழாமல் சமனில்முடிந்ததையடுத்து வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.

man.jpg

டைபிரேக்கரில் முதல் பெனால்டியை சிலி வீரர் விடால் அடித்தார் அதனை  அர்ஜென்டினா கோல்கீப்பர் ரொமேரோ  தடுத்து விட்டார். அடுத்து பெனால்டியை அடிக்க வந்த மெஸ்சி அதனை வெளியே அடிக்க மைதானமே அதிர்ந்து போனது. இறுதியில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் தோற்று கோப்பையை கோட்டை விட்டது. சிலி அணி நடப்புச் சாம்பியன் அந்தஸ்த்தை தக்க வைத்துக் கொண்டது.

கடந்த உலகக் கோப்பை இறுதி ஆட்டத்திலும் ஜெர்மனியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா தோற்று கோப்பையை பறி கொடுத்திருந்தது.கடந்த 1993ம் ஆண்டு அர்ஜென்டினா அணி கோபா அமெரிக்காவில் சாம்பியன் ஆனது. அதற்கு பிறகு எந்த ஒரு முக்கியத் தொடரிலும் கோப்பையை வென்றதில்லை. 

messiiiiii.jpg

இதற்கிடையே இறுதிப் போட்டி முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய லயனல் மெஸ்சி சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது 27 வயதே நிரம்பிய மெஸ்சி அர்ஜென்டினா அணிக்காக 112 சர்வதேச போட்டிகளில் விளையாடி 55 கோல்களை அடித்துள்ளார். அர்ஜென்டினா அணிக்காக சர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்த வீரர் இவர்தான்.மெஸ்சி மட்டுமல்ல அவரது  பார்சிலோனா டீம் மேட் ஜேவியர் மச்சரானாவும் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.
 

ஓய்வு பெறுவது குறித்து மெஸ்சி கூறுகையில், ''தேசிய அணிக்கு விளையாடியது போதும். என்னால் முடிந்த வரை போராடி பார்த்து விட்டேன். ஒரு சாம்பியனாக முடியாதது என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்குகிறது ''என்றார்.

ஆனால் அர்ஜென்டினா அணியின் கோல்கீப்பர் ரொமேரோ, மெஸ்சி இல்லாத அர்ஜென்டினா அணியை நினைத்து கூட பார்க்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். சக வீரர்கள் மெஸ்சியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் பிரேசில் அணியிடம் அர்ஜென்டினா தோல்வி கண்டது. கடந்த 2014ம் ஆண்டு உலகக் கோப்பையில் ஜெர்மனியிடமும்   இரு கோபா அமெரிக்கத் தொடரில் சிலி அணியிடம்  தொடர்ச்சியாக அர்ஜென்டினா தேற்றுள்ளது.

http://www.vikatan.com/news/sports/65568-chile-defending-champs-sink-messi-and-co-again.art

Link to comment
Share on other sites

கோபா அமெரிக்க கிண்ணத்தை கைப்பற்றியது சிலி: மீண்டும் வாய்ப்பை தவறவிட்டது ஆர்ஜன்டீனா (படங்கள் இணைப்பு)

Published by Pradhap on 2016-06-27 13:42:50

 

கோபா அமெரிக்க கால்பந்தாட்ட போட்டியின் இந்த ஆண்டிற்கான செம்பியன் பட்டத்தை சிலி அணி கைப்பற்றியது.

copa1.jpg

நேற்று (26) நியுயோர்கில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் சிலி மற்றும் ஆர்ஜன்டீனா அணிகள் மோதின.

நடப்பு செம்பியனான சிலி அணிக்கு கடந்த முறை பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்குமா அர்ஜன்டீனா? என்ற ரசிகர்களின் கேள்விக்கு இந்த முறை பெறும் ஏமாற்றம்தான் காத்திருந்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில், போட்;டியின் நேரம் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் கோல் போடவில்லை.

இதனால் இரு அணிகளுக்கும் பெனால்டிக் வாய்ப்பு வழங்கப்பட்டது.

பெனால்டிக் வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்ட சிலி அணி 4-2 என்ற கோல்கணக்கில் செம்பியன் பட்டத்தை தன் வசப்படுத்தியது.

ஆர்ஜன்டீனா அணியின் தலைவர் மெஸ்ஸிக்கு கிடைத்த பெனால்டிக் வாய்ப்பை அவர் தவறவிட்டதே அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்ததென விளையாட்டு வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

copa1.jpg

Chile-win-the-Copa-America-Centenario-fiChile-win-the-Copa-America-Centenario-fiChile-win-the-Copa-America-Centenario-fiChile-win-the-Copa-America-Centenario-fiChile-win-the-Copa-America-Centenario-fiChile-win-the-Copa-America-Centenario-fiChile-win-the-Copa-America-Centenario-fiChile-win-the-Copa-America-Centenario-fiCopa-America-Final-Penalty-shootout.jpgCopa-America-Final-Penalty-shootout__1_.

http://www.virakesari.lk/article/8175

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.