Jump to content

நீல்கிரீஸ் சிக்கன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

13495047_1039097179470671_14721382826783

தேவையான பொருட்கள்

சிக்கன் ஊறவைக்க 
சிக்கன் 300 கிராம் ( எலும்பில்லாத நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ள வேண்டும் )
தயிர் 4 மேஜைகரண்டி ( புளிக்காதது )
உப்புத்தூள் கொஞ்சம் 
மிளகு தூள் 5 சிட்டிகை

தாளிக்க 
எண்ணெய் 3 மேஜைக்கரண்டி 
கறிவேப்பிலை 1 கொத்து 
வெங்காயம் 1 ( பொடியாக நறுக்கியது )
சீரகம் 1/4 தேக்கரண்டி

சில்லி கார்லிக் சாஸ் செய்ய 
வரமிளகாய் 5
பூண்டு பற்கள் 5 ( நன்றாக நசுக்கியது )
எலுமிச்சை பழச்சாறு 1 மேஜைக்கரண்டி 
சர்க்கரை 1/4 தேக்கரண்டி 
உப்பு தேவையான அளவு 
தண்ணீர் 30 மில்லி

கொத்தமல்லி இலைகள் கொஞ்ச தூவி விட

செய்முறை

1. தயிர், உப்பு, மிளகு தூள் தண்ணீர் 1/2 கப் சேர்த்து கலந்து வைத்து கொள்ள வேண்டும்.

2. சிக்கனை கழுவி சுத்தம் செய்து பின்னர் தயார் செய்து வைத்துள்ள தயிர் கலவையில் சேர்த்து நன்கு கலந்து ஊறவைக்கவும். இந்த ஊறல் குறைந்தது 6 மணிநேரம் இருக்க வேண்டும்.

3. சில்லி கார்லிக் சாஸ் செய்ய கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக மிக்ஸியில் விட்டு அரைத்து கொள்ளவும்.

4. மோரில் இருந்து சிக்கனை வடித்து விட்டு சில்லி கார்லிக் சாஸ்சில் சேர்த்து நன்கு கலந்து ஊறவைக்கவும்.

5. இப்பொழுது வடச்சட்டியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து நன்கு பொரிந்ததும் அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

6. இப்பொழுது அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதில் சிக்கன் மசாலா கலவையை சேர்த்து நன்கு வதக்கவும், பின்பு 5 நிமிடங்கள் வரை வேக விடவும் . மூடி போட்டு வேக வைக்கவும்.

7. இப்பொழுது வடைச்சட்டியை மு
மூடி வைத்துள்ள மூடியை எடுத்து விட்டு நன்றாக வதக்கவும். அதில் உள்ள ஈரப்பதம் குறையும் வரை வதக்கவும். சிக்கனில் அந்த சாஸ் நன்கு ஒட்டிய பிறகு கொத்தமல்லிஇலைகளை தூவி இறக்கவும்.

குறிப்பு 
1. சிக்கனை மிகவும் ஃப்ரை பண்ணாமல் சிக்கன் கடினமானதாக ஆகி விடும். கவனம் தேவை.

 

FB

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப ரிச்சான ரெசிப்பி..., அந்த சிக்கனுக்கு அவ்வை சண்முகியைவிட அதிக மேக்கப் போட்டு ஊறவிட்டிருக்கு....!  tw_blush:

நன்றி தமிழரசு....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா வரவர வாயிலை நுழையாத பேரிலை எல்லாம் சாப்பாடு வரவெளிக்கிட்டுது. :grin:
நன்றி தமிழரசு. Super

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.