Jump to content

தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள்! -விஜயகாந்துக்கு மா.செ.கள் உருக்க கடிதம்


Recommended Posts

தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள்! -விஜயகாந்துக்கு மா.செ.கள் உருக்க கடிதம்

7.jpg

சென்னை: உங்கள் மீது உள்ள பாசத்தால் வெளியேற முடியாமல் தவிக்கிறோம். தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் என்று 14 தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்துக்கு உருக்கமாக கடிதம் எழுதி உள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன், கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் முரண்பாடு ஏற்பட்டு தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் 10 பேரும், 3 எம்.எல்.ஏ.க்களும் கட்சியை விட்டு வெளியேறினார்கள். தி.மு.க.வுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டனர் என அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது. போட்டியிட்ட 104 தொகுதியிலும் தோல்வியை தழுவியது தே.மு.தி.க. இந்த தேர்தலில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தும் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

தேர்தல் தோல்வி குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். மாவட்டம் வாரியாக கட்சியின் ஒவ்வொரு அணியில் இருந்தும் நிர்வாகிகளை வரவழைத்து கருத்துக்களை கேட்டறிந்தார்.

தே.மு.தி.க. மாநில மாணவர் அணி துணைச் செயலரும் வழக்கறிஞருமான லயன் எஸ்.சங்கர், நேற்று தே.மு.தி.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் தன்னை தி.மு.க.வில் இணைத்து கொண்டார்.

அவருடன் காஞ்சிபுரம் மாவட்ட தே.மு.தி.க.வைச் சேர்ந்த குன்றத்தூர் ஒன்றிய கேப்டன் மன்ற துணைச் செயலாளர் வெங்கடேஷ் கோபு, குன்றத்தூர் பேரூர் முன்னாள் செயலாளர் திருமலை, மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் சூரியமூர்த்தி, பீர்க்கன்கரணை பேரூர்ச் செயலாளர் ஜி.பி.ராமு, பல்லாவரம் நகர துணைச் செயலாளர் கிருஷ்ணசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏழுமலை, பல்லாவரம் நகரம், 33வது வட்டச்செயலாளர் திருவேங்கடம், குன்றத்தூர் ஒன்றியம், ஓரத்தூர் ஊராட்சி செயலாளர் முரளி, திருபெரும்புதூர் ஒன்றியம், பேரீஞ்சம்பாக்கம் ஊராட்சி செயலாளர் சரவணன், பல்லாவரம் நகர முன்னாள் பொருளாளர் குலசேகரன் உட்பட 50க்கும் மேற்பட்ட காஞ்சிபுரம் தே.மு.தி.க. நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்நிலையில், மேலும் 14 மாவட்ட செயலாளர்கள் தற்போது விஜயகாந்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். கட்சி தொடங்கியது முதல் இதுவரையில் நடந்த முக்கிய சம்பவங்களை குறிப்பிட்டு, மாவட்ட செயலாளர்கள் ஏ.எம்.காமராஜ் (சென்னை மேற்கு), எஸ்.நித்யா (வேலூர் கிழக்கு), வி.சந்திரன் (கிருஷ்ணகிரி), டாக்டர் வி.இளங்கோவன் (தர்மபுரி), என்.தினேஷ்குமார் (திருப்பூர் வடக்கு), ஆர்.பாண்டியன் (கோவை வடக்கு), துரை காமராஜ் (பெரம்பூர்),

எஸ்.செந்தில்குமார் (திருச்சி தெற்கு), பி.சம்பத் குமார் (நாமக்கல்), பாலு (திண்டுக்கல்), முத்துகுமார் (மதுரை மாநகர்), கே.ஜெய பால் (திருநெல்வேலி), டி.ஜெகநாதன் (கன்னியா குமரி கிழக்கு), க.ராமசாமி (புதுக்கோட்டை), ஆகியோர் பகிரங்கமாக கடிதம் எழுதி விஜயகாந்துக்கு அனுப்பி உள்ளனர்.

அந்த கடிதத்தில், ''உங்களை சினிமாவில் பார்த்தும், நீங்கள் பேசிய வசனங்களையும் நம்பித்தான் நாங்கள் ரசிகர்கள் ஆனோம். மன்றத்தில் உங்களோடு இருந்தவர்கள் ஆகட்டும் அல்லது தே.மு.தி.க. ஆரம்பித்த பிறகு கட்சியில் சேர்ந்தவர்கள் ஆகட்டும், யாருமே உங்களை சினிமாவில் ரசிக்காமல் உங்களோடு இணையவில்லை.

கேப்டன் என்கிற தனி நபரை நம்பி மட்டுமே உங்களோடு இணைந்தோம். ஆனால் தற்போது ஒரு சிலரை நம்பித்தான் நீங்களே இருக்கிறீர்கள் என்று எண்ணும்போது நாங்கள் உங்களோடு இருக்க முடியாது என்பது தெரிகிறது.

தேர்தலுக்கு முன்பு நடந்த சிலவற்றை கூறுகிறோம்... தே.மு.தி.க. பற்றி பேச வைகோ யார்? வேட்பாளர் பட்டியல் நாளை வெளிவரும் என்று சொல்ல திருமாவளவன் யார்? கேப்டன் தப்பு செய்தால் விடமாட்டோம் என சொல்வதற்கு வாசனும், ராமகிருஷ்ணனும், முத்தரசனும் யார்? அப்படியானால் அவர்கள் கட்டுப்பாட்டிலா தே.மு.தி.க. இருக்கிறது.

2006 தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டோம். அதில் 34 வேட்பாளராவது கட்சியில் தற்போது இருக்கிறார்களா? 2009-ல் 40 பேர் எம்.பி. தொகுதியில் தனித்து போட்டியிட்டோம். அதில் 4 வேட்பாளராவது தற்போது கட்சியில் இருக்கிறார்களா?

2005-ல் கட்சி ஆரம்பிக்கும்போது மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் இருந்தார்கள். தற்போது அதில் யார் மாவட்ட செயலாளராக இருக்கிறார்கள். கடந்த 11 ஆண்டில் தே.மு.தி.க. என்ற மாபெரும் கட்சியை காலியாக்கி விட்டீர்கள்.

சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, சேலம், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தே.மு.தி.க. மாநாடு நடத்துங்கள். நான் பணம் தருகிறேன் என்று கூறினீர்கள். ஆனால் மாநாடு முடிந்த பின்பு நீங்கள் எந்த மாவட்டத்திற்கும், மாநாடு நடத்தியதற்கான பணம் கொடுக்கவில்லை.

உங்கள் ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை இடித்ததற்கு நஷ்ட ஈடாக 9 கோடி வாங்கினீர்கள். அண்ணியின் பிடிவாதத்தால் ஆட்சியில் இருந்த தி.மு.க.வை எதிர்த்தீர்கள். நாங்களும் காரணமே இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு தி.மு.க.வை எதிர்த்தோம்.

உங்கள் சுயநலத்திற்காக 10 வருடமாக தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் நாங்களும் எதிர்த்தோம். 2016-ல் வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைத்த கதையாக தி.மு.க.வோடு கூட்டணி சேர போகிறோம் என்று சொல்லிவிட்டு மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்தீர்கள்.

ஜெயலலிதாவை ஆட்சியில் இருந்து அகற்ற போகிறேன் என்று சொல்லிவிட்டு அதே ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சியில் அமர மிகப் பெரிய உதவி செய்தீர்கள். 2005 முதல் 2016 வரை கட்சி நிதி, தேர்தல் நிதி, வேட்பாளர் கட்டணம் என ரூ.500 கோடிக்கு மேல் பணம் கிடைத்தது. அது எல்லாம் எங்கே போனது? கட்சி பெயரில் டிரஸட் உள்ளது. ஆனால் கட்சிக்கும், டிரஸ்டிற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பது எங்களுக்கு தெரியும்.

தே.மு.தி.க. டிரஸ்ட் என கட்சி பெயரை வைத்துக் கொண்டு, கட்சிக்கு வருகின்ற நன்கொடைகளை எல்லாம் இந்த டிரஸ்ட் பெயரில்தான் வாங்குகிறீர்கள். அந்த டிரஸ்டில் நீங்கள், அண்ணி, சுதீஷ் என மூன்று பேர் மட்டும் தான் இருக்கிறீர்கள். அதுவும் எங்களுக்கு தெரியும்.

கட்சி மாநாடு, மக்களுக்காக மக்கள் பணி, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் என அனைத்தையும் நாங்கள் எங்கள் சொந்த செலவில் செய்தோம். என்றாவது ஒரு நாள் யாராவது ஒரு மாவட்ட செயலாளரையாவது அழைத்து செலவிற்கு என்ன செய்கிறீர்க்ள என்று கேட்டு இருக்கிறீர்களா?.

தே.மு.தி.க. கட்சி துவங்கி யாருக்கும் லாபமில்லை ஆனால் நீங்க உங்கள் குடும்பத்தினக்குத்தான் லாபம். உங்கள் மனைவி எடுத்த தவறான முடிவால் கட்சியே காணாமல் போய்விட்டது. உங்களுக்கு பல ஆண்டு காலம் உழைத்த எங்களைப் பற்றி கவலைப்பாடாமல் உங்கள் குடுபத்தினருக்காக இப்படி ஒரு முடிவு எடுத்தீர்களே இது நியாயமா, அதன் விளைவு 10½ சதவீதம் இருந்த வாக்கு 2½ சதவீதமாகி போனது.

தி.மு.க. நம்மால் தோற்று விட்டதல்லவா, தி.மு.க.வால் ஜெயிக்க முடிஞ்சுதா? என்று தி.மு.க.வுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று நீங்கள் உங்கள் மனதில் இருந்ததை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர்கள்.

இத்தகை பெரிய செயலுக்கு பிறகும் நாங்கள் மாவட்ட செயலாளாக தே.மு.தி.க.வில் இருக்க வேண்டுமா? நீங்களே தே.மு.தி.க. கட்சியை கலைத்து விட்டு எங்களை பிழைக்க விடுங்கள். உங்கள் மீது உள்ள பாசத்தால் வெளியேற முடியாமல் தவிக்கிறோம்" என்று கூறி உள்ளனர்.

http://www.vikatan.com/news/politics/65561-dissolve-dmdk-and-let-us-to-survive-poignantletter.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்புடி சை கோவின் அதிரடி அணுகுண்டு ....?
இருந்த அடையாளமே தெரியாமல் காலி செய்து விட்டார் ...? பொது எதிரி யார் என்று இப்போது விளங்கியிருக்கும் 

Link to comment
Share on other sites

ஆமா தெரியாமல்தான் கேட்க்கிறேன் - இந்தாள் மறுபடியும் நடிக்க வந்துடுவாரா?

mad no emoticon

Link to comment
Share on other sites

7 minutes ago, ஜீவன் சிவா said:

ஆமா தெரியாமல்தான் கேட்க்கிறேன் - இந்தாள் மறுபடியும் நடிக்க வந்துடுவாரா?

mad no emoticon

:grin::grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.