Jump to content

போரில் மஹிந்த ராஜபக்ஷே வெற்றி பெறவில்லை. போரில் அநியாயமே நடந்தது


Recommended Posts

போரில் மஹிந்த ராஜபக்ஷே வெற்றி பெறவில்லை. போரில் அநியாயமே நடந்தது

போரில் மஹிந்த ராஜபக்ஷே வெற்றி பெறவில்லை. போரில் அநியாயமே நடந்தது:-

 

போரில் மஹிந்த ராஜபக்ஷேவோ , தமிழ் மக்களோ , சிங்கள மக்களோ  வெற்றி பெறவில்லை. போரில் அநியாயமே நடந்தது. தற்போது சமாதானம் நிலவுகின்றது. அந்த சமாதானம் தொடர அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வடமாகாண ஆளூநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்து உள்ளார்.
 
வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீள குடியமர அனுமதி பத்திரம் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை காங்கேசன்துறை புகையிரத நிலையம் அருகில் நடைபெற்றது.
 
அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , 
 
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் எமக்கு கூறி இருக்கின்றார்கள் உங்களுடைய காணிகளை உங்களுக்கு கொடுக்க சொல்லி இருக்கின்றார்கள்.அவற்றை நடைமுறை படுத்த நாங்கள் உற்சாகத்துடனும் ஊக்கத்துடனும் உள்ளோம். 
 
நீங்கள் இந்த பூமிக்கு சொந்தகாரர் இலங்கை உங்கள் சொந்த பூமி நீங்கள் பிறந்த வளர்ந்த பூமி அதனை கட்டாயம் உங்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும். அதன் பின்னரே நல்ல சமாதானம் நிலவும். 
 
இன மத குல பேதமின்றி ஒரு தாயின் பிள்ளைகள் மாதிரி நாங்கள் இருக்க வேண்டும் இலங்கை தாய்க்கு நாங்கள் பாரமில்லை. நான் சிறுவயதில் ஒரு பாட்டு படித்தேன் ",மண்ணுக்கு மரம் பாரமா , மரத்திற்கு இலை பாரமா , குலைக்கு காய் பாரமா , தாய்க்கு பிள்ளை பாரமா " என்று ஒரு பாடல்  அதேபோன்று இலங்கை தாய்க்கு தமிழ் மக்கள் பாரமில்லை. 
 
நீங்களும் நாங்களும் என எல்லோரும் சேர்ந்து நல்லதை செய்ய வேண்டும் அதற்கு நல்ல சிந்தனை வேண்டும். நல்ல சிந்தனை நெஞ்சில் இருந்தால் எந்நேரமும் நல்லதையே செய்வோம். 
 
சிங்கள இரத்தம் என்று சொல்லும் குழு உண்டு உங்களுக்கு சொல்ல முடியும் தமிழ் இரத்தம் என்று , வேறு நபர்கள் தங்கள் இனத்தை சொல்லி அந்த இனத்தின் இரத்தம் என்று அந்த மாதிரி எந்த இரத்தமும் இல்லை. அனைவருக்கும் ஒரே இரத்தம் தான் உண்டு. 
 
உங்களுக்கு வைத்திய சாலையில் இரத்தம் தேவைப்படும் போது எங்களுக்கு சிங்கள இரத்தம் வேண்டாம் தமிழ் இரத்தம் வேண்டும் என்றோ அல்லது தமிழ் இரத்தம் வேண்டாம் சிங்கள இரத்தம் தான் வேண்டும் என்று எவரேனும்  சொல்வது உண்டா ? 
 
இலங்கை மன்னர்கள் இந்தியாவில் இருந்தே பெண் எடுத்து திருமணம் செய்து கொண்டார்கள். அப்ப  எப்படி தனியே சிங்கள இரத்தம் வரும். தமிழ் சிங்கள இரத்தம் கலந்து இருக்கின்றது. 
 
நீங்கள் விகாரைக்கு சென்றால் அங்கு இந்துக் கடவுள்கள் இருக்கின்றார்கள். அந்த தெய்வங்களை கும்பிடுறவர்கள் சண்டை பிடிக்கின்றார்கள். அங்கே தெய்வங்கள் எல்லாம் ஒன்றாக இருக்கிறது. 
 
எனவே நாங்கள் நீங்கள் எல்லோரும் சேர்ந்து இந்த நாட்டிற்கு நல்லதை செய்ய வேண்டும் என வேண்டி நிற்கிறேன். எதிர்காலம் உங்கள் அனைவருக்கும் சிறப்பாக இருக்க வேண்டும் என வேண்டுகின்றேன். என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133471/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

5 hours ago, நவீனன் said:
போரில் மஹிந்த ராஜபக்ஷேவோ , தமிழ் மக்களோ , சிங்கள மக்களோ  வெற்றி பெறவில்லை. போரில் அநியாயமே நடந்தது. தற்போது சமாதானம் நிலவுகின்றது.

நீங்கள் இந்த பூமிக்கு சொந்தகாரர் இலங்கை உங்கள் சொந்த பூமி நீங்கள் பிறந்த வளர்ந்த பூமி அதனை கட்டாயம் உங்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும். அதன் பின்னரே நல்ல சமாதானம் நிலவும். 

 

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் எமக்கு கூறி இருக்கின்றார்கள் உங்களுடைய காணிகளை உங்களுக்கு கொடுக்க சொல்லி இருக்கின்றார்கள்.அவற்றை நடைமுறை படுத்த நாங்கள் உற்சாகத்துடனும் ஊக்கத்துடனும் உள்ளோம். 

நீங்கள் விகாரைக்கு சென்றால் அங்கு இந்துக் கடவுள்கள் இருக்கின்றார்கள். அந்த தெய்வங்களை கும்பிடுறவர்கள் சண்டை பிடிக்கின்றார்கள். அங்கே தெய்வங்கள் எல்லாம் ஒன்றாக இருக்கிறது. 

ஜெனீவா உயர் அழுத்தத்தில் உளறிக் கொட்டியுளார் குரே!

Link to comment
Share on other sites


"இலங்கைத் தாய்க்கு தமிழர்கள் பாரமில்லை"
 
 

article_1466939460-LEAD%20%281%29.jpg-செல்வநாயகம் கபிலன்

நடந்து முடிந்த 30 வருட யுத்தத்தில் யாரும் வெற்றிபெறவில்லை. இதனால், மக்கள் அனுபவித்தது வேதனை மட்டுமே. தற்போது நாட்டில் சமாதானம் மலர்ந்துள்ளது. இலங்கை உங்களுடைய சொந்த பூமி. நீங்கள் பிறந்து வளர்ந்து வாழும் பூமி. உங்கள் காணி உங்களுக்கு வழங்கப்படவேண்டுமென வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பாதுகாப்பு தலைமையகத்தினால், உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் கையகப்படுத்தப்பட்டிருந்த காணிகளில் 201.3 ஏக்கர் காணியை விடுவிக்கும் நிகழ்வு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியின் தலைமையில், காங்கேசன்துறையில், சனிக்கிழமையன்று (26) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

'நடந்து முடிந்த 30 வருட யுத்தத்தில் வெற்றிபெற்றவர்கள் யார்? தோற்றவர்கள் யார்? மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றாரா? சிங்களவர்களா? தமிழர்களா? எவரும் வெல்லவில்லை. இன்று நல்லகாலம். நல்ல தினம். யுத்தம் முடிந்தது. முப்பது வருட யுத்தத்தில் நடந்தது என்ன என்று எல்லோருக்கும் தெரியும். நடந்தது மிக மோசமான அநியாயம் மட்டுமே. இதனால் மக்கள் அனுபவித்தது சோதனை, வேதனை, வருத்தம், அநியாயம் மட்டுமேயாகும். தற்போது நாட்டில் சமாதானம் மலர்ந்துள்ளது.

இலங்கை உங்களுடைய சொந்த பூமி. நீங்கள் பிறந்து வளர்ந்த பூமி, உங்கள் காணி உங்களுக்கு வழங்கப்படவேண்டும். அதற்காகத் தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நல்லெண்ண அடிப்படையில், இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகள், தற்போது மீளவும் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது நல்லகாலம் பிறந்துள்ளது. யுத்தகாலத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களுடைய காணிகளை மீண்டும் வழங்குவதற்கு தற்போது அரசாங்கம் படிப்படியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இன, மத, குல பேதமில்லாமல் ஒரு தாயின் பிள்ளைகள் போல் நாம் எல்லோரும் இருக்கவேண்டும். இலங்கைத் தாய்க்கு மக்கள் பாரமில்லை. இரு இனத்தவரும் ஒன்று சேர்ந்து நல்லதை செய்யவேண்டும். அதற்கு நல்ல எண்ணங்கள் மனதில் பிறக்க வேண்டும். நல்ல சிந்தனை மனதில் இருந்தால் செய்யப்படும் காரியங்களும் நல்லதாகவே இருக்கும். அதனால், நல்ல சிந்தனையுடன் நீங்கள் பணியாற்றவேண்டும்.

சிலர், 'சிங்க லே' என கூறுகின்றனர். அதாவது, சிங்கள இரத்தம் என்று அர்த்தப்படும். அப்படியாயின், தமிழ் மக்கள், 'தமிழ் இரத்தம்' எனக் கூறமுடியுமா? ஒவ்வொரு இனத்தவர்களும் தங்கள் இரத்தத்தினை சுட்டிக்கூற முடியும். ஆனால், அதன் அர்த்தம் ஒன்றுமே இல்லை. காயமடைந்து வைத்தியசாலைக்கு ஒருவரை கொண்டுசென்று இரத்தம் ஏற்றும் நிலை வந்தால், எந்த சிங்களவரும் தமிழ் இரத்தம் வேண்டாம் எனக் கூறுவதில்லை.

எல்லோருக்கும் இரத்தம் ஒன்றே. அதே போல் பௌத்த விகாரைக்கு சென்று பாருங்கள் அங்கே இந்து தெய்வங்களான கணபதி, விஸ்ணு, சிவன் போன்ற தெய்வங்கள் ஒன்றுமையாக இருக்கின்றன. ஆனால், குப்பிடப் போனவர்கள் வெளியில் நின்று சண்டை போடுகிறார்கள். நாம் ஒற்றுமையாக வாழப் பழகிக்கொள்ளவேண்டும். நல்லெண்ணத்துடன் இந்நாட்டினை கொண்டுசென்று, எதிர்வரும் சந்ததிக்கு வழிசமைத்து கொடுக்கவேண்டியது எல்லோருடைய கடமையாகும்' என ஆளுநர் மேலும் கூறினார்.

- See more at: http://www.tamilmirror.lk/175620/-இலங-க-த-த-ய-க-க-தம-ழர-கள-ப-ரம-ல-ல-#sthash.N84fZVGe.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.