Jump to content

நான்தான் சுவாதி பேசுகிறேன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இறந்துவிட்ட நான் இன்னும் சில நாள் காட்சி ஊடகத்தில் உங்களுடன் வாழத்தான் போகிறேன்.

அதற்கு முன் உங்களுடன் சிலவற்றை பேசிவிட்டு போய்விட ஆசைபடுகிறேன்.

எல்லோரையும் போல கனவுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்த சமகால சமுதயத்தில் நானும் ஒருத்தி தான். எனக்கான கனவுகள் அதிகம் இல்லை.

எல்லோரையும் போன்ற நானும் ஒரு சக மனுஷி தான். இன்று நானும் வழக்கம் போல என் அன்றாட வேலைக்கு கிளம்பினேன்.

வார இறுதிநாட்களை மகிழ்ச்சியுடன் செலவழிக்க நினைக்கும் சராசரி கனவுகளுடன். என் அப்பாவும் அப்படித்தான் நினைத்து என்னை அந்த இரயில் நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றார்.

உங்களில் எத்தனை பேர் இன்று அந்த காட்சியை நேரில் பார்த்தவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை ஆனால் உங்களின் மனதிற்க்குத் தெரியும். உங்களில் எத்தனை பேர் பெண்கள் முன்னேற்றத்தை வாய்கிழியப் பேசியவர்கள் என்று எனக்கு தெரியாது.

இன்று நான் வாய்கிழிபட்டுதான் இறந்தேன். உங்களில் ஒருவருக்கு கூட அதைத் தடுக்க ஆண்மை இல்லையே, வரிஜினிட்டியை ஆண்மையாக என்னும் சமூகத்தில்தானே இன்னும் நீங்கள் வாழ்கிறீர்கள்.

அவனைத் தடுக்காத உங்களின் கயமை கூட எனக்குப் புரிந்தது.

ஆனால், அவன் போன பின்பு எனக்கு அடிப்படைச் சிகிச்சை அளிக்கவோ அல்லது என் தாகத்தை போக்க தண்ணி கொடுக்க கூடவா ஆள் இல்லை. இரண்டு மணி நேரம் என்னை வேடிக்கைப் பார்தீர்களே அந்த கணங்கள் கூட உங்களைச் சுடவில்லையா?

உங்களின் அதிகபட்ச சமூக அக்கறை, இன்று ஒரு நாள் உங்களின் பேசு பொருள் நான்.

எப்படியும் இன்னும் இரண்டு-மூன்று நாட்களில் என்னைக் கொன்றவன் எங்கேனும் பிடிபடுவான் இல்லை நீதிமன்றத்தில் சரணைடைவான்.

என் ஒழுக்கத்தைப் பற்றி ஒரு நீண்டவாதம் பேசுவான். இல்லை என்னால் ஏமாற்றப்பட்டதாக புலம்புவான். அதையும் விவாதப் பொருளாக வைத்து விவாதித்துக் கொண்டே இருங்கள்.

இல்லையேல் ஆளும் வர்க்கம் அவனுக்கு ஒரு தோட்டாவைப் பரிசாக அளித்து அவனைக் கொன்றுவிடும். அதையும் பாராட்டி ஒரு பதிவிட்டு உங்கள் சமூக கடமையை ஆற்றிவிடுங்கள்.

மிஞ்சிப் போனால் ஒரு கவிஞனின் இறங்கற்பா. ஒரு பேச்சாலனின் தொண்டை நீர்வற்ற ஒரு உரை. ஒரு எழுத்தாளனின் ஒரு பக்க கட்டுரை... இது தானே என் சாவின் எச்சங்கள்.

நான் நானாக இங்கு வீழ்த்தப்படவில்லை.ஒட்டுமொத்த சமூகமாகவே வீழ்த்தப்பட்டு இருக்கிறேன். அதை மறந்துவிடாதீர்கள்.

பெண் பிள்ளைகள் வெளியில் போகும் போது பார்த்து போக சொல்லும் நீங்கள் அதை ஆண் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். இந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களை விதையிலே மக்கச்செய்யுங்கள். விருட்சாமாக அதை வளர்த்து பின்பு வெட்டுதல் என்பது உங்களுக்கும் சுலபம் அல்ல.

உங்களின் கோடாளிகளுக்கும் சுலபம் அல்ல. பாரதி சொன்னான் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்.அது கடினம் என்று நினைத்து இன்று மாதரையே கொளுத்த முடிவு செய்துவிட்டீர்கள் போல. இறுதியாக ஒன்று வேண்டுகிறேன் கடற்கரை சாலையில் எனக்கும் ஒரு நினைவேந்தல் வைத்து அரசியல் செய்யாதீர்கள்!

இது வாட்ஸ்ஆப்பில் வலம் வரும் ஒரு பதிவு. கண் முன்னே நடக்கும் கொடூரங்களைக் கண்டும் காணாமல் போகும் நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் சாட்டையடி!

http://www.tamilwin.com/living/01/108890

Link to comment
Share on other sites

48 minutes ago, தமிழரசு said:

இன்று இறந்துவிட்ட நான் இன்னும் சில நாள் காட்சி ஊடகத்தில் உங்களுடன் வாழத்தான் போகிறேன்.

யார் இந்த சுவாதி? நேற்று ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்தவரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பெண்[அழகான பெண்] அதிகாலை வேலைக்கு போவதற்காக ரயில் நிலையத்தில் காத்திருக்கும் போது ஒரு இளைஞனால் கொரூரமாக வெட்டப்பட்டார்.தமிழ்நாட்டில் திருநெல்வேலியோ[சரியாய் ஞாபகமில்லை] இடம் பெற்றது.வெட்டினவன் ஓடிட்டான்.அந்தப் பெட்டை 2 மணித்தியாலம் கிடந்து துடிச்சிருக்குது.பொலீசும் வரவில்லை.பாத்துக் கொண்டு இருந்த சனங்களும் உதவவில்லை.கேடு கெட்ட சனம்.

Link to comment
Share on other sites

1 hour ago, ஜீவன் சிவா said:

யார் இந்த சுவாதி? நேற்று ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்தவரா?

சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை விரைவில் பிடிப்போம்: காவல்துறை உறுதி

 
 
இடது: சிசிடிவியில் பதிவான மர்ம நபர் படம்; வலது: கொலையான இளம் பெண் சுவாதி.
இடது: சிசிடிவியில் பதிவான மர்ம நபர் படம்; வலது: கொலையான இளம் பெண் சுவாதி.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் கண்ணெதிரே ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை விரைவில் பிடித்துவிடுவோம் என ரயில்வே காவல்துறை டிஐஜி பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி கொலை செய்யப்பட்ட இடத்தை டிஐஜி பாஸ்கர் இன்று (சனிக்கிழமை) மீண்டும் பார்வையிட்டார். அப்போது அவர், "இந்த கொலை குறித்து விசாரிப்பதற்கு ரயில்வே காவல்துறை எஸ்.பி. விஜயகுமார், எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழு சுவாதியின் பணியிடம், தோழிகள், உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அவர் பயணித்த ஆட்டோ டிரைவர் மற்றும் கால்டாக்சி டிரைவர்களிடமும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி கேமராவில் பதிவான சந்தேக நபரைத் தேடி வருகிறோம். கொலையாளியை விரைவில் பிடித்துவிடுவோம்" என்றார்.

கூலிப்படையாக இருக்க வாய்ப்பு:

அவர் மேலும் கூறும்போது, "இந்த கொலையை செய்த நபர் கூலிப்படையைச் சேர்ந்தவராகவும் இருக்கக்கூடும். ரயில் நிலையத்தில் சுவாதியுடன் பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென்று வெட்டிவிட்டு ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் உதவிக்கு வரும்முன் தப்பி சென்றிருக்கிறார். எனவே அந்த நபர் கூலிப்படையைச் சேர்ந்தவனாக இருக்கலாம். இந்த கொலை குறித்து பொதுமக்கள் தகவல் ஏதும் தெரிந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கலாம்" என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/சுவாதி-கொலை-வழக்கில்-குற்றவாளியை-விரைவில்-பிடிப்போம்-காவல்துறை-உறுதி/article8772947.ece?homepage=true

Link to comment
Share on other sites

12 minutes ago, ரதி said:

இந்தப் பெண்[அழகான பெண்] அதிகாலை வேலைக்கு போவதற்காக ரயில் நிலையத்தில் காத்திருக்கும் போது ஒரு இளைஞனால் கொரூரமாக வெட்டப்பட்டார்.தமிழ்நாட்டில் திருநெல்வேலியோ[சரியாய் ஞாபகமில்லை] இடம் பெற்றது.வெட்டினவன் ஓடிட்டான்.அந்தப் பெட்டை 2 மணித்தியாலம் கிடந்து துடிச்சிருக்குது.பொலீசும் வரவில்லை.பாத்துக் கொண்டு இருந்த சனங்களும் உதவவில்லை.கேடு கெட்ட சனம்.

நன்றி ரதி  + நவீனன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இந்தப் பெண்[அழகான பெண்] அதிகாலை வேலைக்கு போவதற்காக ரயில் நிலையத்தில் காத்திருக்கும் போது ஒரு இளைஞனால் கொரூரமாக வெட்டப்பட்டார்.தமிழ்நாட்டில் திருநெல்வேலியோ[சரியாய் ஞாபகமில்லை] இடம் பெற்றது.வெட்டினவன் ஓடிட்டான்.அந்தப் பெட்டை 2 மணித்தியாலம் கிடந்து துடிச்சிருக்குது.பொலீசும் வரவில்லை.பாத்துக் கொண்டு இருந்த சனங்களும் உதவவில்லை.கேடு கெட்ட சனம்.

திருநெல்வேலி அல்ல.

சென்னை நுங்கம்பாக்கம் மின்சார ரயில் நிலையம். பல நூறுக்கணக்கில் ஆட்கள் இருந்தும் ஒருவர் கூட கொலையாளியை படம் எடுக்கவோ, பின்னால் திருத்தி செல்லவோ முயலவில்லை. பெண் இறந்ததை உறுதி செய்த பின்பே கொலையாளி நகர்ந்து இருக்கிறான். இரண்டு மணிநேரமாக உடல் அங்கேயே இருந்திருக்கிறது.

stalking எனும் அதிதீவிர தொல்லை, அது கொலை வரும் போகும் என கண்டறிந்து அதுக்கு உரிய சட்டங்களை மேல் நாடுகளில் உரு வாக்கி, மக்களுக்கு அது குறித்து அறிவுறித்தி உள்ளனர். 

தமிழ் நாட்டில் இதனை, திரைப் படங்களில் ஆண்மகனின் வீர தீர குறும்புச் செயலாக காட்டுவதால், அங்கே இது சர்வ சாதாரணமாக செய்கிறார்கள்.

மக்களுக்கும் இது புரியாமல், ஏதோ இருவருக்கும் தொடர்பு இருந்திருக்கும் என்பதாக முடிவுரை எழுதி விடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு ஏன் வம்பு என்ற மனநிலை மக்களுக்கு வந்துவிட்டதுதான் பொது இடங்களில் கொலை செய்யும் துணிச்சலை கொலைகாரர்களுக்கு கொடுக்கிறது..Verärgert

Link to comment
Share on other sites

3 hours ago, Nathamuni said:

சென்னை நுங்கம்பாக்கம் மின்சார ரயில் நிலையம். பல நூறுக்கணக்கில் ஆட்கள் இருந்தும் ஒருவர் கூட கொலையாளியை படம் எடுக்கவோ, பின்னால் திருத்தி செல்லவோ முயலவில்லை.

அந்த நேரத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் இருக்கும் சாத்தியம் இல்லை என்று சொல்கிறார்கள். கொலை சில ஒரு வினாடிகளில் தான் நடந்திருக்கும்.

 

6 hours ago, ரதி said:

அந்தப் பெட்டை 2 மணித்தியாலம் கிடந்து துடிச்சிருக்குது.பொலீசும் வரவில்லை.பாத்துக் கொண்டு இருந்த சனங்களும் உதவவில்லை.கேடு கெட்ட சனம்.

வெட்டப்பட்ட கணத்திலேயே அந்தப் பெண் இறந்துவிட்டார் என்று செய்தி தெளிவாக உள்ளது. எனவே மக்கள் துடிச்சுக் கொண்டிருந்த பெண்ணை 2 மணித்தியாளம் பார்த்துக் கொண்டிருக்கவில்லை.

 

இது போன்ற சந்தர்ப்பங்களில் ஆயுதம் வைத்திருப்பவனை மக்கள் மடக்கிப் பிடிக்க வேண்டும் என்பது கொஞ்சம் அதிகமான எதிர்பார்ப்பு.

எது எப்படி இருந்தாலும் நடந்தது மிகமிகக் கொடூரமான கொலை!

சில மாதங்கள் முன்னர் தான் இன்னொரு பெண்ணையும் கணவனையும் இன்னொரு ஊரில் (ஊர் பெயர் ஞாபகம் இல்லை) பெண்ணின் பெற்றோர்கள் கூலிப்படையின் உதவியுடன் வெட்டினார்கள்.

தமிழ் நாட்டில் கொலை வன்முறை பெருகிச் செல்கிறது.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.