Jump to content

பிரெக்ஸிட்: 2-வது வாக்கெடுப்பு நடத்த 10 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆதரவு

Recommended Posts

பிரெக்ஸிட்: 2-வது வாக்கெடுப்பு நடத்த 10 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆதரவு

பிரெக்ஸிட்: 2-வது வாக்கெடுப்புக்கு கோரிக்கை மனு. | படம்: கெட்டி இமேஜஸ்.
பிரெக்ஸிட்: 2-வது வாக்கெடுப்புக்கு கோரிக்கை மனு. | படம்: கெட்டி இமேஜஸ்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக பொதுவாக்கெடுப்பு முடிவுகள் வெளியானதையடுத்து, இரண்டாவது பொதுவாக்கெடுப்பு கோரும் மனுவில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

தற்போது 2-வது பொதுவாக்கெடுப்பு கோரி மனு ஒன்றில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டதையடுத்து பிரிட்டன் நாடாளுமன்றம் இதனை விவாதித்தாக வேண்டும்.

வியாழனன்று நடந்த பொதுவாக்கெடுப்பில் 72% வாக்களிக்க, அதில் 52% ஐரோப்பிய யூனியனிலிருந்து விலக ஆதரவாக வாக்களித்தது ஐரோப்பா உள்ளிட்ட கண்டங்களில் அதிர்ச்சி அலைகளை தோற்றுவித்தது.

தற்போது 2-ம் வாக்கெடுப்புக்கான கோரிக்கை மனுவை வில்லியம் ஆலிவர் ஹீலி என்பவர் தொடங்கி வைக்க இதில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இது குறித்து வில்லியம் ஆலிவர் ஹீலி கூறும்போது, “75% க்கும் குறைவான வாக்குகள் பதிவாகியிருக்கும் நிலையில் வெளியேறுவதற்கு ஆதரவாக 60%க்கும் குறைவானவர்களே வாக்களித்திருக்கும் போது 2-ம் பொது வாக்கெடுப்ப்பு நடத்த விதிமுறையை அமலாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை நாங்கள் உருவாக்கி அதன் கீழ் கையெழுத்திட்டுள்ளோம்” என்றார்.

நாடாளுமன்ற கோரிக்கை மனு இணையதளம் ஒரு நேரத்தில் முடங்கியது, காரணம் பலரும் தங்கள் பெயர்களை இந்த 2-வது பொதுவாக்கெடுப்பு விண்ணப்பத்தில் சேர்க்க முட்டி மோதினர்.

ஆனால், 2-வது வாக்கெடுப்புக்கான விதிமுறை மாற்றத்துக்கு நாடாளுமன்ற அனுமதி கிடைக்குமா என்பதெல்லாம் தெளிவாகத் தெரியவில்லை. 2014-ம் ஆண்டு ஸ்காட்லாந்து சுதந்திரம் மீதான பொதுவாக்கெடுப்பின் போதும் இரண்டாம் பொதுவாக்கெடுப்பு கோரப்பட்டது.

தற்போது ஐரோப்பிய யூனியனை விட்டு பிரிட்டன் விலக பொதுவாக்கெடுப்பு முடிவுகள் வெளியானதையடுத்து ‘லண்டிபெண்டன்ஸ்’ அல்லது பிரிட்டன் தலைநகர் லண்டன் ஒரு தனி ஸ்டேட் என்று கோரும் லண்டன் மேயர் சாதிக் கானின் கோரிக்கை மனுவிலும் ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த மனுவின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் ஓ மாலே கூறும்போது, “தலைநகர் லண்டன் என்பது உலக நகரம், அது ஐரோப்பாவின் இருதயத்தில் இருக்க வேண்டும்” என்றார்.

லண்டன்வாசிகளில் 60%க்கும் மேலானோர் ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். ஆனால் பர்மிங்ஹாம், கோவெண்ட்ரி உள்ளிட்ட மற்ற பிரிட்டன் நகர மக்கள் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற பெருமளவு வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/world/பிரெக்ஸிட்-2வது-வாக்கெடுப்பு-நடத்த-10-லட்சத்துக்கும்-அதிகமானோர்-ஆதரவு/article8773148.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://petition/parliament.uk/petitions/131215

18 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆதரவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆதரவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

23 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆதரவு

Link to comment
Share on other sites

வாக்களிக்காத சோம்பேறிகளுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் கிடைத்தால் வாக்களிப்பார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

23 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆதரவு

இதில போலந்தில் ருமேனியாவில் இப்படி அப்படி போட்டதுகளும் வரும் தானே முனி சார்.

1992 இற்குப் பின் எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு பிரித்தானிய மக்கள் வெளிய வந்து வாக்களிச்சிருக்கினம். அதிலும் இங்கிலாந்தின்.. வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்று எல்லாமே.. வெளில போ என்று வாக்களிச்சிருக்குது. குடியேற்றக்காரர்களைக் கொண்ட சில நகரங்களையும் சில ஊர்களையும் தவிர.

ஸ்காட்லாந்து.. 1975 தேர்தலிலும்.. சார்ப்பாகவே வாக்களிச்சது. வட அயர்லாந்தும் தான். ஏன்.. வேல்ஸூம். இம்முறை இங்கிலாந்தும்.. வேல்ஸூம் வெளியேற வாக்களித்துள்ளது.

வாக்காளர்களின் வாக்குகளை மதிக்காமல்.. குறுகிய காலத்தில் இரண்டாம் தேர்தல் என்பது வாக்களர்களை கோபப்படுத்தும். விளைவு.. இன்னும் மோசமாக இருக்கும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

30 இலட்சம்.

நீங்கள் சொல்வது போல அரசியல் வாதிகள் சொல்லப் போவதில்லை.

உங்கள் பார்வையில் எதிர்காலம் ?

சோசன் சொல்கிறார், யூகே சொந்தக்காசில சூனியம் வைச்சிட்டுதாம். ஸ்கொட்ஸ் பிரிவினமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சற்று முன்னர் பிபிசியில் ரொனி பிளேயர் இன்ரவீயூ போனது.

அவர் சொல்கிறார். தேர்தலில் வெல்ல இரு பகுதியும் பல விடயங்களை சொல்லியிருப்பார்கள்.

ஆனால் இப்ப நிதர்சனத்துக்குள் வர வேண்டும். அடுத்த பிரதமர், லீவ் காரரா அல்லது ரிமைன் காரரா என்பதில் தான் EU உடனான சிக்கல் மிக்க பேச்சுவார்த்தை தங்கப் போகிறது. 

யாராயிருந்தாலும் பிளவு பட்ட வாக்காளரின் இரு பகுதியையும் திருப்திப் படுத்தியவாறு பேச்சுவார்தை நடாத்த வேண்டும். 

இன்னுமோர் ரெபரண்டம்.... ? இப்போது சொல்ல முடியாது. எதிர்வரும் வாரங்கள், மாதங்கள் அதற்கான பதிலைத் தரும் என்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Nathamuni said:

30 இலட்சம்.

நீங்கள் சொல்வது போல அரசியல் வாதிகள் சொல்லப் போவதில்லை.

உங்கள் பார்வையில் எதிர்காலம் ?

சோசன் சொல்கிறார், யூகே சொந்தக்காசில சூனியம் வைச்சிட்டுதாம். ஸ்கொட்ஸ் பிரிவினமாம்.

30 இலச்சம் என்ன.. 50 இலச்சத்தையும் தாண்டும்.. உலகம் பூராவும் இருந்து கிலிக் பண்ணிக்கிட்டு இருந்தா.

இந்த வாக்கெடுப்பினை முன்வைத்த பிரித்தானிய பிரதமர் கம்ரூன் மக்களுக்கு தெளிவாக ஒன்றைச் சொன்னார்.. இரண்டாம் வாக்கெடுப்புக்கு வழியே இல்லைன்னு. இந்த இரண்டாம் வாக்கெடுப்பை முதலில் கையில் எடுத்துப் பேசியது.. யு கிப்.. தலைவர். அவர் கடைசிவரை நம்பவில்லை தன் தரப்பு வெல்லும் என்று. முடிவுகள் நெருங்கிய போது தான் அவருக்கே தெரியும்.

இதில் எல்லாமே பிளேயர் காலத்தில் அவர் எடுத்த தவறான குடிவரவுக் கொள்கையால் வந்த பிரச்சனை. இப்ப அதுக்கு லேபர் நல்ல விலை கொடுக்குது. இதில.. பிளேயர் கருத்துச் சொல்லி.................... tw_blush::rolleyes:

David Cameron has previously said there will be no second referendum.

http://www.bbc.co.uk/news/uk-politics-eu-referendum-36629324

கம்ரூனை அரசியல்வாதி இல்லை என்றீங்க போல. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

அது தான் அரசியல் வாதிகள் பிளேட்டை மாத்திப் போடுவார்களே.

கமரோன் சொன்னது பழைய வெருட்டல் கதை. இனி புது பிரதமர், புது முடிவு.... என்று போகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

அது தான் அரசியல் வாதிகள் பிளேட்டை மாத்திப் போடுவார்களே.

கமரோன் சொன்னது பழைய வெருட்டல் கதை. இனி புது பிரதமர், புது முடிவு.... என்று போகும்.

அரசியல்வாதிகள் பிளேட்டை மாத்திப் போடலாம்.. ஆனால் மக்கள் தாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை உருவாக்காமல்.. அரசியல்வாதிகள் இரண்டாம் வாக்குப்பதிவுக்குப் போனால்.. வோட்டை மாத்திப் போடுவினம் என்று எதிர்பார்த்தால்.. அது முழு முட்டாள் தனமாகவே இருக்கும். பிரிட்டன் மக்கள் சவால்களுக்கு முகம் கொடுத்தாவது தங்கள் நாட்டை தக்க வைக்கும் உறுதி கொண்டவர்கள். tw_blush:

ஜேர்மனி.. பிரான்ஸூக்கு பயந்துகிட்டு பிரிட்டன் மக்கள் வாழத் தலைப்படுவினம் என்று கனவு கண்டால்.. அது.. அந்த மக்களின் மனவோட்டத்தைப் புரிந்து கொள்ள முடியாத கனவு என்றே அமையும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன முனி அண்ணை.. உங்கட நிலைமை இப்படியாச்சுது. இரண்டாம் வாக்குப்பதிவு பெட்டிசன் பிராடு என்றாங்க. tw_blush:

Quote

Second EU referendum petition investigated for fraud.

The House of Commons petitions committee is investigating allegations of fraud in connection with a petition calling for a second EU referendum.

Its inquiry is focused on the possibility that some names could be fraudulent -77,000 signatures have already been removed.

http://www.bbc.co.uk/news/uk-politics-eu-referendum-36634407

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் பூகம்பம் முடிவின்றித் தொடர்கிறது;
 ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை உருவாகியுள்ளது.
1.பிரித்தானிய் பவுண் என்றுமில்லாதவாறு பெறுமதி குறைந்துள்ளது.
2.பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதற்கு கொன்சவேட்டிக் கட்சிக்குள் பலத்த போட்டி நிலவுகிறது.
3.தொழிற்கட்சித் தலைவரை பதவி இறக்கும் முயற்சியில் 7 மேற்பட்ட தொழிற்கட்சியின் நிழல் அமைச்சர்கள் பதவி விலகி யுள்ளனர்.
4.ஸ்கொட்லாண்ட பிரதமர் தனிநாடக வேண்டும் என்பதற்கான பொதுசன வாக்கெடுப்பை நடாத்த வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை வைக்கிறார்.
5. ஸ்கொட்லாண்ட் பிரிந்தால் வட அயர்லாந்து கூட அயர்லாந்துடன் சேரக்கூடிய வாய்புக்கள் உள்ளதாக  அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
6. பிரிவினைக்கு ஆதரவாக 60 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் கிடைத்திருப்பதால் 2 வது வாக்கெடுப்பை நடாத்துமாறு கோரும் பெட்டிசன் மனு  முன்னெப்போது; இல்லாதவாறு 3 மில்லியனைத்தாண்டித் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
4. அடுத்த பிரதமர் தெரிவு வரை காத்திருக்காது பிரிந்து செல்வதற்குரிய அடுத்த கட்ட பேச்சு வார்ததைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் நெருக்கடி கொடுக்கிறது.
5.வெறும் 4 சதவீத மேலதிக வாக்குகளால் பிரிந்து செல்லும் பிரித்தானியா பலம் பெறுவதற்குப்பதலாக துண்டு துண்டாக உடைந்து விடப்போகும் அபாயம் இல்லாமல் இல்லை.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி நம்ம நாட்டில நம்ம நனம் என்ன செயகினம்.:rolleyes:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Brexit | Kann die Brexit-Abstimmung wiederholt werden?

ஜேர்மனிய செய்தித்தாள் ஒன்றில் இப்படி ஒரு படம்....:cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.