Jump to content

வட,கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படும்: அரசாங்கம்

Recommended Posts

வட,கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படும்: அரசாங்கம்
 
வட,கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படும்: அரசாங்கம்
1466312310_download%20%281%29.jpg
வடக்குக் கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அரச படையினரை அகற்றிக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் நிறைவேற்றப்படும் என அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். 
 
வடக்கு கிழக்கிலிருக்கும் இராணுவத்தை வெளியேற்றும் நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்காவின் அனைத்துக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் தெரிவித்த  தூதுவர் இந்த விடயத்தில் இலங்கை  அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றும் என்றும் உறுதியளித்துள்ளார். 
 
அடுத்துவரும் இரண்டு வருடங்களுக்குள் இராணுவம் அகற்றிக்கொள்ளப்பட்டு தேவைக்கு ஏற்றளவு படையினர் மாத்திரம் நிலைநிறுத்தப்படுவர் என்றும் பிரசாத் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையின் அமெரிக்காவிற்கான தூதுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உரையாற்றிய இலங்கையின்  இன மற்றும் மத சுதந்திரத்திற்கான அமெரிக்க காங்கிரஸ் குழுக் கூட்டத்தை டெனி டேவிஸ் மற்றும் பில் ஜொன்சன் ஆகிய காங்கிரஸ் உறுப்பினர்களால் வழிநடத்தப்பட்டது. 
 
sumanthiran5.jpg
இலங்கையின்  மனித உரிமை நிலமைகள் தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் சபைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காகவே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 
 
இலங்கை இராணுவம் உட்பட அரச படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பதாக  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உறுதியளித்து ஒன்றரை வருடங்கள் கடந்தும் வடக்கு கிழக்கில் அரச படையினரால் கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளில் 70 வீதமானவை இன்னமும் படையினர் வசமே இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த மேடையில் குற்றம்சாட்டினார்.
 
இதற்கு பதிலளித்த இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் படையினர் கையகப்படுத்தி வைத்துள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் வடக்கை விட அதிகமான காணிகள் கிழக்கில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 
 
இந்த விடயத்தில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகக் கூறிய அவர் எனினும் அந்தப் பணிகள் மந்தமாகவே இடம்பெறுவதாகவும் ஏற்றுக்கொண்டார். 
 
எனினும் இதனை நிராகரித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  இராணுவம் தொடர்ந்தும் சுற்றுலா விடுதிகள் விவசாயப் பண்ணைகளை நடத்தி  பொருளாதாரத்திற்கு பங்கம் விளைவித்து வருவதாக குற்றம்சாட்டினார்.  
 
ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் யோசனைகளுக்கு அமைய  அரசாங்கம் அரச படைக் கட்டமைப்பில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்த அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும தெரிவித்தார். 
 
அரச படைக் கடடமைப்பை மறுசீரமைப்பதற்காக உண்மை நீதி மற்றும் மீண்டும் மோதல்கள் ஏற்படாத வகையில் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதி பெப்லோ டி கிறிப்பின் ஆலோசனைகளை பெற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையின்  சட்டக் கட்டமைப்பு இராணுவம் பொலிஸ் மற்றும் புலனாய்வுத்துறை ஆகியன பாரியஅளவில் மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் சிறப்புப் பிரதிநிதி பெப்லோ டி கிறீப் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் போது வலியுறுத்தியிருந்தார். 
 
எவ்வாறாயினும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலான முன்வைக்கப்பட்ட யோசனைகளை படைத் தரப்பினரின் கடும் எதிர்ப்பை அடுத்து அரசாங்கம்  கைவிட்டுள்ளதாக தெரிவித்த சுமந்திரன் புதிதாக அரசாங்கம் கொண்டுவரவுள்ள சட்டங்கள் படையினரை திருப்திப்படுத்துவதாகவே அமையும் என்றும் சாடியுள்ளார். 
 
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக முன்வைக்கப்படும் சட்டமூலம் உட்பட மேலும் மூன்று சட்டமூலங்கள் யூன் மாத இறுதிக்குள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த பிரசாத் காரியவசம் எனினும் அந்த சட்டங்களின் உள்ளடக்கங்கள் குறித்து தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
 
கிழக்கு மாகாணத்தில் அரசாங்கம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை முன்னெடுத்து வருவதாக குற்றம்சாட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனால் குடிப்பரம்பல் மோசமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
 
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் பொறுமையின் எல்லைக்கே வந்துவிட்டதாகவும் தெரிவித்த அவர் இந்த நிலை தொடர்ந்தும் நீடிக்காது என்றும் சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்
 
Link to comment
Share on other sites

17 minutes ago, நவீனன் said:

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக முன்வைக்கப்படும் சட்டமூலம் உட்பட மேலும் மூன்று சட்டமூலங்கள் யூன் மாத இறுதிக்குள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த பிரசாத் காரியவசம் எனினும் அந்த சட்டங்களின் உள்ளடக்கங்கள் குறித்து தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

சூழ்நிலைக்கு ஏற்ப வாய் கூசாமல் பொய் சொல்லி ஊரை ஏமாற்றுவதில் சிங்கள-பௌத்த இனமதவெறி பிடித்தவர்களை வெல்ல இந்த உலகில் யாராலும் முடியாது.

இவர்கள் தான் மகா பொய் வம்சத்தின் (මහා බොරු වංශය) சொந்தக்காரர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வட,கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படும்: அரசாங்கம்
வட,கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படும்: அரசாங்கம்
1466312310_download%20(1).jpg
வடக்குக் கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அரச படையினரை அகற்றிக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் நிறைவேற்றப்படும் என அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். 
 
வடக்கு கிழக்கிலிருக்கும் இராணுவத்தை வெளியேற்றும் நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்காவின் அனைத்துக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் தெரிவித்த  தூதுவர் இந்த விடயத்தில் இலங்கை  அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றும் என்றும் உறுதியளித்துள்ளார். 
 
அடுத்துவரும் இரண்டு வருடங்களுக்குள் இராணுவம் அகற்றிக்கொள்ளப்பட்டு தேவைக்கு ஏற்றளவு படையினர் மாத்திரம் நிலைநிறுத்தப்படுவர் என்றும் பிரசாத் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையின் அமெரிக்காவிற்கான தூதுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உரையாற்றிய இலங்கையின்  இன மற்றும் மத சுதந்திரத்திற்கான அமெரிக்க காங்கிரஸ் குழுக் கூட்டத்தை டெனி டேவிஸ் மற்றும் பில் ஜொன்சன் ஆகிய காங்கிரஸ் உறுப்பினர்களால் வழிநடத்தப்பட்டது. 
 
sumanthiran5.jpg
இலங்கையின்  மனித உரிமை நிலமைகள் தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் சபைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காகவே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 
 
இலங்கை இராணுவம் உட்பட அரச படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பதாக  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உறுதியளித்து ஒன்றரை வருடங்கள் கடந்தும் வடக்கு கிழக்கில் அரச படையினரால் கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளில் 70 வீதமானவை இன்னமும் படையினர் வசமே இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த மேடையில் குற்றம்சாட்டினார்.
 
இதற்கு பதிலளித்த இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் படையினர் கையகப்படுத்தி வைத்துள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் வடக்கை விட அதிகமான காணிகள் கிழக்கில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 
 
இந்த விடயத்தில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகக் கூறிய அவர் எனினும் அந்தப் பணிகள் மந்தமாகவே இடம்பெறுவதாகவும் ஏற்றுக்கொண்டார். 
 
எனினும் இதனை நிராகரித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  இராணுவம் தொடர்ந்தும் சுற்றுலா விடுதிகள் விவசாயப் பண்ணைகளை நடத்தி  பொருளாதாரத்திற்கு பங்கம் விளைவித்து வருவதாக குற்றம்சாட்டினார்.  
 
ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் யோசனைகளுக்கு அமைய  அரசாங்கம் அரச படைக் கட்டமைப்பில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்த அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும தெரிவித்தார். 
 
அரச படைக் கடடமைப்பை மறுசீரமைப்பதற்காக உண்மை நீதி மற்றும் மீண்டும் மோதல்கள் ஏற்படாத வகையில் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதி பெப்லோ டி கிறிப்பின் ஆலோசனைகளை பெற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையின்  சட்டக் கட்டமைப்பு இராணுவம் பொலிஸ் மற்றும் புலனாய்வுத்துறை ஆகியன பாரியஅளவில் மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் சிறப்புப் பிரதிநிதி பெப்லோ டி கிறீப் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் போது வலியுறுத்தியிருந்தார். 
 
எவ்வாறாயினும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலான முன்வைக்கப்பட்ட யோசனைகளை படைத் தரப்பினரின் கடும் எதிர்ப்பை அடுத்து அரசாங்கம்  கைவிட்டுள்ளதாக தெரிவித்த சுமந்திரன் புதிதாக அரசாங்கம் கொண்டுவரவுள்ள சட்டங்கள் படையினரை திருப்திப்படுத்துவதாகவே அமையும் என்றும் சாடியுள்ளார். 
 
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக முன்வைக்கப்படும் சட்டமூலம் உட்பட மேலும் மூன்று சட்டமூலங்கள் யூன் மாத இறுதிக்குள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த பிரசாத் காரியவசம் எனினும் அந்த சட்டங்களின் உள்ளடக்கங்கள் குறித்து தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
 
கிழக்கு மாகாணத்தில் அரசாங்கம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை முன்னெடுத்து வருவதாக குற்றம்சாட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனால் குடிப்பரம்பல் மோசமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
 
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் பொறுமையின் எல்லைக்கே வந்துவிட்டதாகவும் தெரிவித்த அவர் இந்த நிலை தொடர்ந்தும் நீடிக்காது என்றும் சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

http://onlineuthayan.com/news/13873

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 உந்த வெறும் வார்த்தைக்கே பாராட்டி, பரிசுக்கும் சிபாரிசு செய்வினம்.

Link to comment
Share on other sites

உப்பிடி எத்தனை பொய் வாக்குறுதிக்ளை தமிழ் மக்கள் கேட்டுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nochchi said:
இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் படையினர் கையகப்படுத்தி வைத்துள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் வடக்கை விட அதிகமான காணிகள் கிழக்கில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 
 
இந்த விடயத்தில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகக் கூறிய அவர் எனினும் அந்தப் பணிகள் மந்தமாகவே இடம்பெறுவதாகவும் ஏற்றுக்கொண்டார். 

தருவம்,விடுவம் எண்டு சொல்லீனம் தானே பிறகேன் அவசரப்படுவான். ஒண்டும் செய்யேலாது எண்டே சொல்லீனம்?? இல்லயே!!!! :cool:

Link to comment
Share on other sites

மைத்திரி ஒரு நேர்மையான, பண்பான, எளிமையான மனிதர் என்றே பலரும் என்னைப்போல் நினைக்கின்றார்கள். அது உண்மையும் கூட. ஆனால் இப்பண்புகள் தான் நினைத்ததை செய்ய உதவவில்லை என்பதுதான் பெரும் சோகம். இவரால் முப்படைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. இதனால்தான் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட பல பகுதிகளை விடுவிக்க முடியாதுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஜீவன் சிவா said:

மைத்திரி ஒரு நேர்மையான, பண்பான, எளிமையான மனிதர் என்றே பலரும் என்னைப்போல் நினைக்கின்றார்கள். அது உண்மையும் கூட. ஆனால் இப்பண்புகள் தான் நினைத்ததை செய்ய உதவவில்லை என்பதுதான் பெரும் சோகம். இவரால் முப்படைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. இதனால்தான் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட பல பகுதிகளை விடுவிக்க முடியாதுள்ளது.

ரணிலுக்குப் பதிலாக வந்த முகமே மைத்திரி. ரணிலை நம்பியிறக்க முடியாத(வெல்லமாட்டார்; மகிந்தவின் போர் வெற்றிச் சூழலலை சாய்ப்பது கடினம்) சூழலில், மேற்குலகு சந்திரிகாவூடாகக் காய் நகர்த்தி மைத்திரியை வைத்து இனப்படுகொலை அரசை வெள்ளையரசாகக் காட்ட, வெள்ளையடிக்கப் பல்வேறு முனைப்புகளைச் செய்துவருகிறது. அதனது ஒரு அங்கமே இந்த சில நடவடிக்கைகளாகும். ஒரு சிலவற்றையாவது சிறிலங்காவும் அனைத்துலகும் செய்ய வேண்டிய கடப்பாடொன்று ஏற்பட்டள்ளதேயன்றித் தமிழ் மக்கள் மீதான பரிவோ அக்கறையோ அல்ல. அப்படியொன்றிருந்திருப்பின் சலாவ வெடிவிபத்திலே பாதிக்கப்பட்ட மக்களைவிட அதிகளவான உயிர் உடலுறுப்பு பொருளிழப்பு என்பவற்றைக் கொண்ட தமிழினத்துக்கு அவர்களது வாழ்வாதார மேம்பாடுகளை விரைவுபடுத்தியிருக்க வேண்டும். அவர்களை வாழவிடவேண்டும். 

மிகவும் நேர்த்தியாகக் கட்டுமைக்கப்பட்டுள்ள பௌத்த பேரிவாதச் சிந்தனை, அதாவது மகாவம்ச மனோநிலை மாறாதவரை, தமிழினம் சார்ந்து அவர்களது சுதந்திரமான வாழ்வு சார்ந்து எதுவும் செய்ய முடியாது. செய்யமாட்டார்கள். தமிழினத்தை ஆக்கிரமித்து கபளீகரம் செய்து அனாதைகளாக்கிவிட்டு அவர்களது நிலங்களில் விவசாயம் முதல் விடுதிகள் வரையமைத்து வாழத்தலைப்பட்டுள்ள சிங்களத்திலேயிருந்து தமிழரை ஏற்கும் பண்போடு எவருமே இல்லை என்பதே யதார்த்தமாகும். இது 1956முதல் 2002வரையான பட்டறிவு. இதே மைத்திரியவர்கள்தான் இறுதியுத்த காலத்தில் பாதுகாப்பமைச்சராக இருந்தவர். மகிந்தவை மாலைபோட்டு 17.05.2009இல் கட்டுநாயக்காவில் வரவேற்றவரும் கூட. 

சிங்களவரது அரிச்சுவடியானது இலங்கைத்தீவைச் சிங்களமயமாக்குதல் என்றே போதிக்கிறது. செய்கிறது. நடக்கிறது.

ஒருவேளை உங்கள் நம்பிக்கை சரியாயின் ஏன் உலகிலேயே அதிக அதிகாரங்களைக் கொண்ட அதிபராட்சிமுறையைக் கொண்டவரென்ற வகையிலே, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு வர்த்மானி அறிவித்தலூடாகச் செய்துவிடலாமே. 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.