Jump to content

பிரிட்டன் விலகியதால் இலங்கைக்கு சிக்கல்


Recommended Posts

பிரிட்டன் விலகியதால் இலங்கைக்கு சிக்கல்

 

பிரிட்டனை பாதுகாப்பதன் மூலம் இலங்கையின் ஏற்றுமதிக்கான ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதியை அதிகரிப்பதுமே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தது என வெளிவிவகார பிரதியமைச்சன் கலாநிதி ஹர்ஷ டி சில்வா   சபையில் தெரிவித்தார்.

பிரிட்டனுடன் விரைவில் வர்த்தக உடன்படிக்கையொன்றை கையெழுத்திட இருப்பதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

பிரதியமைச்சர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில், 

உலகில் மிக விரைவில் பாரிய பொருளாதார நெருக்கடி தலை தூக்கவுள்ளது. இந்த நெருக்கடியை நாமும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். பவுனின் விலை இன்று வீழ்ச்சி கண்டுள்ளது. இவ்விடயங்கள் தொடர்பில் பிரிட்டனில் வாழும் இலங்கை பிரஜைகளை சந்தித்து பேசினோம். 

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை தடுக்க நாங்கள் முயற்சித்தோம். கமரூனை பாதுகாக்கும் நோக்கத்தை கொண்டல்ல.  எமது நாட்டின் ஏற்றுமதியை கருத்தில் கொண்டே இதனை மேற்கொண்டோம்.

ஏனென்றால் ஜீ.எஸ்.பி.வரிச்சலுகை எமக்கு இரத்து செய்யப்பட்டுள்ளது. அதனை மீளப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பத்தை முன்வைக்கவுள்ளோம். அத்தோடு பிரிட்டனுக்கே எமது பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனூடாக பிரிட்டன் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் எமது பொருட்கள் செல்கின்றன.

வரி செலுத்தாமல் பொருட்களை ஏற்றுமதி செய்வதால் எமது நாட்டுக்குத் தான் அதிக நன்மைகள் கிடைக்கின்றன. இதனை பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடனேயே பிரிட்டன் வெளியேறுவதை தடுக்க முயற்சித்தோம்.

எனவே இவ்விடயத்தை அரசியலுக்காக கிணற்று தவளைப் போல் நோக்கலாகாது  என்றார்.  

http://www.virakesari.lk/article/8069

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பிரிட்டன் வெளியேறியதால் ஆட்டம் காணும் ஆபத்தில் இலங்கைப் பொருளாதாரம்! 
[Saturday 2016-06-25 08:00]
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு ஏற்படும் தாக்கத்தை தவிர்ப்பதற்காக அந்நாட்டுன் வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்று  பிரதி வெளிவிவகார அமைச்சரும் பொருளியல் நிபுணருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு ஏற்படும் தாக்கத்தை தவிர்ப்பதற்காக அந்நாட்டுன் வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்று பிரதி வெளிவிவகார அமைச்சரும் பொருளியல் நிபுணருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

   

"ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறவேண்டுமென அந்நாட்டு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். எனவே, அந்நாட்டின் வெளியேற்றமானது உலக பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும். அவை எத்தகைய மாற்றங்கள் என்பதை உரிய வகையில் எதிர்வுகூறமுடியாதுள்ளது. எனினும், அனைத்துலக பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கமானது எமது பொருளாதாரத்திலும் தாக்கத்தை செலுத்தும். எனவே, இதை சாதாரணதொரு விடயமாக கருதிவிடமுடியாது. ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை பெறுவதற்குரிய முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் ஏற்றுமதியில் 40 சதவீதமானவை பிரிட்டனையே தங்கியுள்ளன. இந்நிலையில், மேற்படி ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறினால் வரிச்சலுகைகிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

எனவேதான், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இலங்கை அரசு இருந்தது. அதற்குரிய முயற்சிகளையும் எடுத்திருந்தது. ஆனால், முடிவு சாதகமாக அமையவில்லை. இருப்பினும், அடுத்தகட்ட நடவடிக்கையாக பிரிட்டனுடன் வர்த்தக உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படும். இது பற்றி பிரதமர் சபைக்குத் தெரியப்படுத்துவார்" - என்றார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.