Jump to content

இராஜினாமா செய்கிறார் பிரித்தானியப் பிரதமர் கமெரோன்


Recommended Posts

இராஜினாமா செய்கிறார் பிரித்தானியப் பிரதமர் கமெரோன்
 
 

article_1466753212-qbmigzq9.jpgஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு பிரித்தானியா வாக்களித்துள்ள நிலையில், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமெரோன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம், தனது பதவியிலிருந்து விலகவுள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/175454/இர-ஜ-ன-ம-ச-ய-க-ற-ர-ப-ர-த-த-ன-யப-ப-ரதமர-கம-ர-ன-#sthash.85NF1G80.dpuf
Link to comment
Share on other sites

பிரிட்டிஷ் பிரதமர் கேமரன் பதவி விலகப் போவதாக அறிவிப்பு

 

ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பில் பிரிட்டிஷ் மக்கள் ஒன்றியத்திலிருந்து விலகவேண்டும் என்று அளித்த தீர்ப்பை அடுத்து, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் தான் பதவி விலகப் போவதாக அறிவித்திருக்கிறார்.

 

160624073650_david_cameron_resigns_624x4

 பதவி விலகும் அறிவிப்பைச் செய்யும் டேவிட் கேமரன்

சற்று முன்னர் தனது 10, டௌனிங் வீதி இல்லத்துக்கு வெளியே ஊடகவியலாளர்களிடம் பேசிய டேவிட் கேமரன், எதிர்வரும் அக்டோபரில் தான் பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதாக அறிவித்திருக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து இருக்கவேண்டுமா என்ற கருத்தறியும் வாக்கெடுப்பின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் , கேமரன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

    160624073323_david_cameron_no_10_speech_

வரும் ஒரு சில மாதங்களில் பிரிட்டனை வழி நடத்தப் போவதாக அவர் தெரிவித்தார்.

இந்தக் கருத்தறியும் வாக்கெடுப்பின்போது டேவிட் கேமரன் , ஐரோப்பிய ஒன்றியத்திலேயே பிரிட்டன் தொடர்ந்து இருக்கவேண்டும் என்று வலியுறுத்தி பிரசாரம் செய்து வந்தார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகினால், அதற்கு பொருளாதார மற்றும் பாதுகாப்பு விளைவுகள் இருக்கும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள இங்கிலாந்தும் , வேல்ஸும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று வாக்களித்தன; லண்டன், ஸ்காட்லாந்து மற்றும் வட அயர்லாந்து ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறக்கூடாது என்று வாக்களித்தன.

http://www.bbc.com/tamil/global/2016/06/160624_cameron

Link to comment
Share on other sites

தனி நாடாகிறது பிரித்தானியா-கமரோன் பதவி விலகிகின்றார்(காணொளி)

 
Political-Leaders-Respond-To-The-UKs-EU-
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா 
நிலைத்திருப்பதா இல்லையா என்பது தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) முழு பிரித்தானிய மக்களும் உற்சாகமாக வாக்களித்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பதற்கு மக்களின் ஆதரவு அதிகம் கிடைத்துள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
43 வருடங்களுக்கு பின்னர் பிரித்தானியாவின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்காக நேற்று (வியாழக்கிழமை) பிரித்தானிய மக்கள் தமது வாக்குகளை அளித்திருந்த நிலையில், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பதற்கு ஆதரவாக 52 வீதமான மக்களும் பிரித்தானியா தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக 48 வீதமான மக்களும் தமது வாக்குகளை அளித்துள்ளனர்.
 
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்பதற்கு ஆதரவளித்து பரப்புரை நிகழ்த்தி வந்த பிரித்தானிய UKIP கட்சி தலைவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “ஜூன் 23 ஆம் திகதி பிரித்தானியாவின் சுதந்திரதினம் என்றே கூற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
 
 
 
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்பது பெரும்பான்மையான மக்களின் விருப்பமாக இருக்குமானால் எதிர்வரும் மாதங்களில் பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் பாரிய மாற்றங்களும் தாக்கங்களும் உணரப்படும் என பல்வேறு ஆய்வாளர்களும் கருத்து வெளியிட்டு வந்தனர்.
 
இந்தக் கருத்தறியும் வாக்கெடுப்பின்போது டேவிட் கேமரன் , ஐரோப்பிய ஒன்றியத்திலேயே பிரிட்டன் தொடர்ந்து இருக்கவேண்டும் என்று வலியுறுத்தி பிரசாரம் செய்து வந்தார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகினால், அதற்கு பொருளாதார மற்றும் பாதுகாப்பு விளைவுகள் இருக்கும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள இங்கிலாந்தும் , வேல்ஸும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று வாக்களித்தன; லண்டன், ஸ்காட்லாந்து மற்றும் வட அயர்லாந்து ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறக்கூடாது என்று வாக்களித்தன.


இந்த முடிவுகளின் பிரகாரம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு ஆதரவாக ஒரு கோடியே 74 இலட்சத்து 10 ஆயிரத்து 742 பேர் வாக்களித்துள்ளனர்.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதற்கு ஆதரவாக ஒரு கோடியே 61 இலட்சத்து 41 ஆயிரத்து 241 பேர் வாக்களித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதற்கு ஆதரவாக வட அயர்லாந்து, லண்டன் மற்றும் ஸ்கொட்லாந்தில் உள்ள மக்கள் வாக்களித்துள்ளனர்.

வட அயர்லாந்தில், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா, நீடிப்பதற்கு ஆதரவாக 55 தசம் 8 வீதமான மக்கள் ஆதரவு வழங்கியுள்ளதுடன், இந்த எண்ணிக்கை நான்கு இலட்சத்து 40 ஆயிரத்து 437 ஆக பதிவாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்தோரின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து 49 ஆயிரத்து 442 ஆக அமைந்துள்ளதுடன், இந்த எண்ணிக்கை 44 தசம் 2 வீதமாக பதிவாகியுள்ளது.

வட அயர்லாந்தில் 62 தசம் 9 வீதமான மக்கள் தமது வாக்குரிமையை இந்த சர்வஜென வாக்கெடுப்பில் பயன்படுத்தியுள்ளனர்.

இதேவேளை ஸ்கொட்லாந்தில் 16 இலட்சத்து 61 ஆயிரத்து 191 பேர் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிப்பதற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

அத்துடன் 10 இலட்சத்து 18 ஆயிரத்து 322 பேர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவதற்கு ஆதரவாக தமது வாக்கினை பதிவுசெய்துள்ளனர்.

ஸ்கொட்லாந்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் 67 தசம் 2 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

எனினும் இங்கிலாந்தின் வட பிராந்தியம் மற்றும் வேல்ஸ்சிலுள்ள மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவதற்கு ஆதரவளித்துள்ளனர்.

இங்கிலாந்தில் ஒரு கோடியே 51 இலட்சத்து 88 ஆயிரத்து 406 பேர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என கோரி, தமது வாக்கை பதிவுசெய்துள்ளனர்.

இதேவேளை ஒரு கோடியே 32 இலட்சத்து 66 ஆயிரத்து 996 பேர் , ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிப்பதற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

இங்கிலாந்தில் அதிக வாக்களிப்பு வீதம் பதிவாகியுள்ளதுடன், மொத்த வாக்காளர்களில் 73 வீதமான மக்கள் தமது வாக்குகளை பயன்படுத்தியுள்ளனர்.

அத்துடன் வேல்ஸ்சில் எட்டு இலட்சத்து 54 ஆயிரத்து 572 பேர் பிரித்தானியா வெளியேறுவதற்கு ஆதரவாகவும், 7 இலட்சத்து 72 ஆயிரத்து 347 பேர் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிப்பதற்கு ஆதரவாகவும் தமது வாக்கினை பதிவுசெய்துள்ளனர்.

வேல்ஸ்சில் 71 தசம் 7 வீதமான மக்கள் சர்வஜென வாக்கெடுப்பில் பங்கேற்றுள்ளனர்.
 
இந்நிலையில், பிரித்தானிய மக்களின் விருப்பம் என்னவென்பது வெளியாகி சில மணித்தியாலங்களிலேயே பிரித்தானிய நாணயமான பவுண்களின் பெறுமதி பாரிய வீழச்சியை சந்தித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த வீழ்ச்சியானது 1985ஆம் ஆண்டுக்குப் பின்னர் பவுணுக்கு ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி என பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட இங்கிலாந்தின் குக்கிராமங்கள் எங்கும், நீக்கமற புகுந்து விட்ட கிழக்கு ஐரோப்பியர்களால் வந்த தொல்லையை கணக்கெடுக்காமல், ஒன்றியம், ஒன்றியம் என்று குளறிக் கொண்டிருந்த கமரோன் பதவி விலகுகிறார். 

Link to comment
Share on other sites

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரான் பதவி விலகல்!

ரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கு ஆதரவு பெருகியதையடுத்து, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 

cams.jpg

ஐரோப்பிய யூனியனில் 28 நாடுகள் உள்ளன. இந்த 28 நாடுகளும் உறுப்பு நாடு என்ற வகையில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடியை ஐரோப்பிய யூனியனுக்கு வழங்கி வந்தன. பிரிட்டனும் அவ்வாறு செலுத்தி வந்தது. இதனால் தங்கள் நாட்டுக்கு பொருளாதார சுமை ஏற்படுவதாகவும்  சுதந்திரமாக செயல்பட முடியாத நிலையும் இருப்பதாக பிரிட்டன் மக்கள் கருதினர்.

உள்நாட்டவர்களின் வேலை வாய்ப்பு பறி போவது, பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்றவையும் பிரிட்டன் மக்களை ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக வேண்டுமென்ற மனநிலைக்கு கொண்டு வந்தது. இதையடுத்தே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற கோரிக்கையும் வலு பெற்றது.

ஆனால் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரான் மட்டும் பிரிட்டன் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனிலேயே நீடிக்க வேண்டும் என்றும், வாக்கெடுப்பில் தோல்வி கண்டால்  பதவி விலகுவதாகவும் அறிவித்திருந்தார். அதன்படி வாக்கெடுப்பில் தோல்வி கண்டதையடுத்து அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

லண்டன் டவுனிங் தெருவில், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் வாசலில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய டேவிட்  கேமரான்,  '' நான் பதவி விலகும் சமயம் வந்து விட்டது. புதிய பிரதமர் அக்டோபர் மாதத்தில் தேர்வு செய்யப்படுவார். தேசம் மற்றொரு இலக்கை நோக்கி செல்லும் போது, நான் தலைமை பதவியில் இருப்பது சரியானதாக இருக்காது'' என்றார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முதல் பெரிய நாடு பிரிட்டன். யூனியனில் இருந்து வெளியேறுவதால் பிரிட்டனை சில விஷயங்கள் பெரிதும் பாதிக்கக்கூடும்.  ஐரோப்பிய யூனியனில்  உள்ள நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்திற்கு ஏற்றுமதி, இறக்குமதி வரி விதிப்பு கிடையாது. பிரிட்டனில் உற்பத்தியாகும் பொருட்களில் 50 சதவீதத்தை, ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குள் ஏற்றுமதி வரி இல்லாமல் கொண்டு செல்லலாம். இனிமேல் வரி செலுத்த வேண்டியது இருக்கும்.

ஐரோப்பிய யூனியனின் முக்கிய வர்த்தகப் பகுதியாக பிரிட்டன் இருப்பதால்,  கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதன் மூலம் அதன் பொருளாதாரம் பாதிக்கப்படலாம். பிரிட்டனை விட்டு பெரிய பெரிய  நிறுவனங்கள் வெளியேறவும் வாய்ப்புள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருப்பதே பிரிட்டனின் பலம் என கருதும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், பிரிட்டனுக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்காமல் கூட போகலாம்.

http://www.vikatan.com/news/world/65507-david-cameron-to-step-down-as-pm.art

Link to comment
Share on other sites

டேவிட் கமரூன் பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார்!

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறும் கென்சவேட்டிக் கட்சியின் மாநாட்டில் தனது இடத்திற்கு புதியவர் ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்கவேண்டுமென தான் விரும்பினாலும் பிரித்தானிய மக்கள் பிரிந்து வேறு பாதையில் பயணிக்க விரும்பி புதிய பாதையைத் தெரிவுசெய்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கப்பலின் கப்டனாக இருப்பதற்கு நான் தகுதியானவன் அல்ல எனவும் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமா இல்லையா என்பது தொடர்பான சர்வஜென வாக்கெடுப்பிற்கான பிரசாரத்தின் போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் பதவி விலகப் போவதில்லை என டேவிட் கமரூன் கூறியிருந்தார்.

எனினும் வாக்கெடுப்பின் முழுமையான முடிவு வெளியாகி சில மணி நேரத்தின் பின்னர் அவர் தனது இராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக வரப்போகிறவர் யார் என்பது தொடர்பிலேயே அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.

http://thuliyam.com/?p=31565

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

David-Cameron.jpg  David-Cameron-in-Jaffna-c-011.jpgDavid-Cameron-in-Jaffna-011.jpgCameron%20motorcade%20woman.jpg

"கவரி மான்.... தன் உடலிருந்து  ஒரு, முடி இழந்தாலும்... உயிர் வாழாது" என்று சொல்வார்கள்.
அதற்கு ஒப்பானவர்... பிரித்தானிய பிரதமர் கேமரூன்.

இவர் இலங்கைக்கு வந்து... யாழ்பாணத்து மக்களை சந்தித்த அளவுக்கு...
அங்கேயே பிறந்து வளர்ந்து, அரசியல் செய்து.... புளிச்சல் ஏவறை (ஏப்பம்)  விட்டுக் கொண்டிருக்கும்....
 சம்பந்தன், சுமந்திரன் போன்ற ஆக்கள் செய்யாத செயலை செய்தவர்,  டேவிட் கமரூன்.
அவரின்  சில படங்கள்.... எங்கள் நியூஸ் பேப்பர் படிக்கும் தமிழ் தலைவர்களின் பார்வைக்கு, 

சும்மா... ஒப்புக்கு, சப்பாணியாய் குந்திக் கொண்டு, பேப்பர் படிப்பதை விட.....
இனியாவது.... இந்த மனிதரைப் பார்த்தாவது திருந்தப் பாருங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

sam.sum.com.wicki_CI.jpg

டேவிட் கமரூன் யாழ்ப்பாணம் வந்திருந்த போது.....
இடமும், வலமும் உள்ள எங்கள் சிந்தனை சிற்பிகளான  சம்பந்தர், சுமந்திரனின்.....  "பாடி லாங்குவேஜ்" எப்படி இருக்கு?

முயல் பிடிக்கிற.... ஆக்கள், இவங்கள் தான்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Athavan CH said:

இந்நிலையில் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக வரப்போகிறவர் யார் என்பது தொடர்பிலேயே அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.

12799083_10153423830498008_2657890165804
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Nathamuni said:

வட இங்கிலாந்தின் குக்கிராமங்கள் எங்கும், நீக்கமற புகுந்து விட்ட கிழக்கு ஐரோப்பியர்களால் வந்த தொல்லையை கணக்கெடுக்காமல், ஒன்றியம், ஒன்றியம் என்று குளறிக் கொண்டிருந்த கமரோன் பதவி விலகுகிறார். 

இது தனியே பிரித்தானியாவில் மட்டுமல்ல. யேர்மனி, பிரான்ஸ் எனப்பல நாடுகளிலும்தான் நடைபெறுகிறது. கிழக்கைரோப்பியரின் வருகையைத் தடுக்க முடியாது. ஏனென்றால் பொருண்மியச் சமத்தவமும்  வாழ்வும் எங்கே சாத்தியமோ அங்கு மனிதன் போவதற்கான வாய்ப்பிருந்தால் போகின்றான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nochchi said:

இது தனியே பிரித்தானியாவில் மட்டுமல்ல. யேர்மனி, பிரான்ஸ் எனப்பல நாடுகளிலும்தான் நடைபெறுகிறது. கிழக்கைரோப்பியரின் வருகையைத் தடுக்க முடியாது. ஏனென்றால் பொருண்மியச் சமத்தவமும்  வாழ்வும் எங்கே சாத்தியமோ அங்கு மனிதன் போவதற்கான வாய்ப்பிருந்தால் போகின்றான்.

அப்படியானால் சிங்களவர், தமிழ் பகுதியில் குடியேறி விகாரை கட்டுவதெல்லாம் ஓகே தானோ?

******

கடந்த 72 மணிநேரத்தில் சுமார் 7,000 பேர் வட ஆபிரிக்காவில் இருந்து கிளம்பி, இத்தாலிய கடற்படையால் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

இத்தாலிய அல்லது ஏதாவது நாட்டு கடற்படை படகு அப்பசுதியில் ரோந்து போகிறது என்ற உள் தகவல் கிடைத்ததும், அவர்கள் கண்ணில் பட்டு கரை சேர, சடுதியாக கிளம்புகிறார்களோ என்ற சந்தேகம் இப்போது எழுகிறது.

எந்த வித அனுமதியும் இன்றி இவ்வாறு புற்றீசல் போல் ரிஸ்க் எடுத்து வருபவர் அணைவரதும் இலக்கு, பிரித்தானியா. காரணம், அரச மானியம், ஆங்கில கல்வி.

அப்படியால் அனுமதி இருப்பவர்கள் எவ்வாறு வருவார்கள்?

பத்தாதற்கு, ஜேர்மனி வந்த அண்மைய அகதிகளில், அங்கே உரிய பத்திரங்கள் கிடைத்ததும், இங்கே வருவார்கள் என்ற பீதி. துருக்கி இணைந்தால் மேலும் ஒரு கூட்டம் வரும்.

அணைத்துக்கும் மேலே, அகதிகளூடு வரும் இஸ்லாமிய தீவிரவாதம்.

பிச்சை வேண்டாம் நாயைப் பிடி கதையில் முடிஞ்சு போட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அப்படியானால் சிங்களவர், தமிழ் பகுதியில் குடியேறி விகாரை கட்டுவதெல்லாம் ஓகே தானோ?

******

 

ஐரோப்பிய ஒன்றியத்தினது பிரிவு அல்லது விலகிச்செல்லல் என்பதையும், எமது இழந்த அல்லது வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட தேசத்தினது விடுதலையையும் ஒப்பிடுதல் பொருத்தமற்றது. அதைவிட நாம் இனஅழிப்பிற்குள்ளாகிவருபவர்கள் என்றவகையிலே எமது உரிமையை மீட்பது எமது இருப்பக்கானது. 

1 hour ago, Nathamuni said:

கடந்த 72 மணிநேரத்தில் சுமார் 7,000 பேர் வட ஆபிரிக்காவில் இருந்து கிளம்பி, இத்தாலிய கடற்படையால் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

இத்தாலிய அல்லது ஏதாவது நாட்டு கடற்படை படகு அப்பசுதியில் ரோந்து போகிறது என்ற உள் தகவல் கிடைத்ததும், அவர்கள் கண்ணில் பட்டு கரை சேர, சடுதியாக கிளம்புகிறார்களோ என்ற சந்தேகம் இப்போது எழுகிறது.

எந்த வித அனுமதியும் இன்றி இவ்வாறு புற்றீசல் போல் ரிஸ்க் எடுத்து வருபவர் அணைவரதும் இலக்கு, பிரித்தானியா. காரணம், அரச மானியம், ஆங்கில கல்வி.

அப்படியால் அனுமதி இருப்பவர்கள் எவ்வாறு வருவார்கள்?

பத்தாதற்கு, ஜேர்மனி வந்த அண்மைய அகதிகளில், அங்கே உரிய பத்திரங்கள் கிடைத்ததும், இங்கே வருவார்கள் என்ற பீதி. துருக்கி இணைந்தால் மேலும் ஒரு கூட்டம் வரும்.

அணைத்துக்கும் மேலே, அகதிகளூடு வரும் இஸ்லாமிய தீவிரவாதம்.

பிச்சை வேண்டாம் நாயைப் பிடி கதையில் முடிஞ்சு போட்டுது.

அகதிகள் வருகை மற்றும் இஸ்லாமிய தீவிரவாதம் பொருண்மியக் காப்பு என்ற நோக்கிலே பிரித்தானிய மக்களின் சிந்தனை நியாயமானது. அவர்களது பார்வையில் சரியாகவும் ஒன்றிணைந்த ஐரோப்பாவை விரும்புவோரினது பார்வை வேறாகவும் உள்ளது. சனனாயக மரபுகளின் படி தீர்வைக்கண்ட பிரித்தானியாவை பொறுத்திருந்து பார்ப்போம். எல்லா செயல்களிலும் எங்கோ ஒரு பலவீனம் இருக்குமல்லவா!  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.