Jump to content

தொன்ம யாத்திரை - நெடுந்தீவு


Recommended Posts

13524305_869855603141199_860618194579846

பெருக்கு மரம் (baobab tree)

(முன்கள ஆய்வு -சுருக்க தொகுப்பு -01)
நெடுந்தீவின் கேந்திர முக்கியத்துவம் கருதி , இந்துக்கடலின் வல்லாதிக்கத்தை நிலைநிறுத்த முனைந்த பல தேசங்களின் அக்கிரமிப்பாளர்களும் , வியாபாரிகளும் வந்து சென்ற , வாழ்ந்த இடமாக காணாப்பட்டதற்கான சான்றாகவும் , தொன்ம அடையாளக்கதைகளை சொல்லும் ஒரு மரமாவும் இது இங்கே நிற்கின்றது. இலங்கை நிலத்திற்கு சற்றும் பொருந்தாத மிக அரிதான ஒரு தாவரம் இது .
அரேபியர்கள் அல்லத்து ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்க தேசங்களில் இருந்து எடுத்து வந்து தங்களுடைய குதிரைகளுக்கு உணவு , மருந்துகளை கொடுப்பதற்காக இவ்வாறான மரங்களை பயிரிட்டு இருக்கின்றார்கள்.
காலணித்துவ காலத்தின் மீதான வாசிப்புக்கு துணை நிற்கும் ஒரு இயற்கை மரபுரிமையாக இதனைக்கருதுதல் பொருந்தும் .

இம் மரங்கள் உலர்ந்த வெப்ப வலயமான ஆபிரிக்காவின் புற்தரைகளில் அதிகம் காணப்படுகின்றது. 18m உயரமும் 9 முதல் 15 அடிவரை விட்டமும் குறுகிய கிளைகளையுடையதாகவும் இருக்கும் இதன் பூக்கள் வெள்ளை நிறமுடையது. இரவில் விரிந்து காணப்படும். மகரந்த சேர்க்கைக்கு வௌவால்கள் உதவுகின்றன. இதன் பழம் 30cm நீளமானது. கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்ட லாம்பு [Lantern] போன்று காட்சியளிக்கும். குகைபோன்ற அமைப்பினை நடுவில் கொண்டு காணப்படுகின்றது.

நெடுந்தீவின் கிழக்கு பகுதியில் காணப்படும் இம் மரமானது ஏறத்தாழ 300-350 ஆண்டுகால வரலாற்றை கொண்டுள்ளது. ஆரம்பத்தில் புற்கள் பற்றைகள் வளர்ந்து மரமிருப்பதையே மறைத்த வண்ணமிருந்தது என வாய்மொழியாக சொல்லப்படுகின்றது. பின்பு நெடுந்தீவுக்கான சுற்றுலா பயணிகளின் வருகையை தொடர்ந்து இலங்கை கடற்படை முட்கம்பி பனைமரக் குற்றிகள் சுற்றி வர அடைத்து பாதுகாத்து வந்தனர். இப்போது நெடுந்தீவுக்கான சுற்றுலா பயணிகளின் அதிகரிப்பினாலும் தொன்மங்கள் பாதுகாத்தல் சட்டத்தினாலும் நெடுந்தீவு பிரதேச சபையினால் நிதி ஒதுக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றது.
மரபுக்கதைகளை பகிர்கின்ற இந்த மரத்தில் பெயரெழுதி விளையாடியிருக்கிறார்கள் மக்கள். பாதுகாப்பு ,பராமரிப்பில் உள்ள குறைபாடுகளாகவும் மரபுரிமை சின்னத்திற்கு எதிரான செயற்பாடாகவும் இதனை உரியவர்களுக்கு அறித்தரவும் ஆவன செய்யவும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு இது பற்றிய விழிப்புணர்வை பிரதேச வாசிகளின் மத்தியிலும் ஏற்படுத்த முனைகின்றோம் . இது பற்றிய மேலதிக உரையாடல்களோ மேற்கொள்ளப்படும் தேவை வேண்டப்படும் ஒன்றாகும் .
தொன்ம யாத்திரை 03 நெடுந்தீவை மரபுரிமைத்தளத்தில் ஆவணப்படுத்தும் போதும் , விழிப்புணர்வை மேற்கொள்ளும் பொதும் இம்மரத்தை பற்றிய உரையாடல்களையும் பதிவு செய்ய முற்படுகின்றது.
மேலும் சுற்றுலாதலமாகவும் , மரபுரிமை ஸ்தலாமாகவும் இதனை மேம்படுத்த பொறுப்பானவர்களுக்கு அழுத்தத்தை மக்களின் பெயரால் வழங்கவும் முற்படுகின்றோம்.
நன்றி -நெடுந்தீவு தனு , மற்றும் தொன்ம யாத்திரை முன்கள ஆய்வுக்குழு.
புகைப்படங்கள் -ஆதிபார்த்தீபன்

-விதை -அக்கினிச்சிறகுகள் - யப்னா டுடே

13450891_868196753307084_644807839069592

 

13434745_868196723307087_167028213011991

 

நெடுந்தீவு- குதிரைகள்.
(முன்கள ஆய்வு சுருக்கத்தொகுப்பு -2)

ஐரோப்பிய காலணித்துவ காலத்தின் சான்றுகளை முன்வைக்கும் ஓர் இயற்கை மரபுரிமை எச்சங்களாக நெடுந்தீவின் குதிரைகள் காணப்படுகின்றன. இத்தனை நூறாண்டுகள் கடந்த பின்னரும் கூட இவை மிகக்கடினமான வறட்சி , பராமரிப்பு இன்மை என்பவற்றிற்கு மத்தியில் இங்கே தங்களுடைய பிழைத்தலை மேற்கொள்கின்றன. இது அக்காலகட்டத்தில் குதிரைகள் ஏராளமாக இருந்ததற்கு சான்று பகர்கின்றன.
இன்று குதிரைகளின் தன்மையில் இருந்து விகாரப்பட்டு மட்டக்குதிரைகள் , கோவேறுகழுதைகள் என்றும் இவற்றை அழைக்கின்றனர். இவை இனக்கலப்பு செய்தவையாக இருக்கின்றன.
நெடுந்தீவு நிலத்தின் கடந்தகாலம் மீதான வாசிப்பிற்கும் , அடையாளத்திற்கும் இக்குதிரைகள் பிரதிநிதிகளாக இருக்கின்றன. இங்கே இருக்கும் மூத்த பிரஜைகள் தங்களுடைய தீவு பற்றிய ஞாபகங்களில் குதிரைகள் பற்றிய ஏராளம் கதைகளைப்பகிர்கின்றனர்.

தீவில் குதிரைகளை அடைத்து வைப்பதற்கான லாயங்களும் , குதிரைகளை பராமரிக்கும் மூலிகை தொட்டிகளும் இன்னும் காணப்படுகின்றன. இங்கிருக்கும் பெருக்க மரம் குதிரைகளின் உணவு , மூலிகைத்தேவைகளுக்காக கொண்டு வரப்பட்டதாக ஊர்வாசிகள் தெரிவிக்கின்றனர். சிலர் வெடியரசன் காலத்தில் இங்கே சுதேசிகளும் குதிரைகளை பயன்படுத்தினார்கள் என்றும் , குதிரைகள் வர்த்தகம் , பொதி சுமத்தல் , போர் என்பவற்றுக்கு பயன்படுத்த பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஐரோப்பியருக்கு பிறகு நிலச்சுவாந்தார்கள் , சில குடும்பங்கள் தங்கள் தேவைகளுக்காக குதிரைகளை பராமரித்து பயன்படுத்தி வந்ததாக அறிகின்றோம்.அத்தோடு அரசாங்கம் இக்குதிரைகள் திரியும் தரவைகள் , காடுகள் , மேய்சல் நிலங்களை அடையாளப்படுத்தி அவற்றை “விலங்குகள் சரணாலயமாக ” அறிவித்துள்ளது . அத்தோடு பிரதேச சபை , கடற்படை , மற்றும் மக்கள் இணைந்து தொட்டிகள் நீர் நிலைகளை அமைத்து இக்குதிரைகள் பசி தாகத்தால் இறப்பதை கட்டுப்படுத்த முயற்சிகள் செய்கின்றனர். குதிரைகளை பிடிப்பத் வளர்ப்பது தடை செய்யப்பட்டிருக்கின்றது எனினும் பரம்பரையாக குதிரைகளை கொண்டவர்கள் அவற்றை பராமரிக்கின்றனர்.
நெடுந்தீவின் மரபுக்கதைகளை ஞாபகமூட்டும் உயிரினங்களாகவும் தங்களுடைய அடையாளமாகவும் மக்கள் இவற்றை பார்க்கின்றனர் . ஆதாலால் நெடுந்தீவின் தொன்மங்களுகுள் இவற்றையும் தொன்ம யாத்திரை பதிவு செய்கின்றது.

போதிய பராமரிப்பும் விழிப்புணர்வும் இன்மையால் இவை இப்போது அழியும் அபாயத்தில் உள்ளன. இனப்பெருக்கம் செய்ய முடியாதவையாக இஅவை இருப்பதனால் இவற்றிகு அச்சுறுத்தல் அதிகமாக இருக்கின்றது .
இவற்றைப் பாதுகாக்க 
ஆவன செய்தல் அவசியமாகும்.
‪#‎தொன்ம‬ யாத்திரை - 03
‪#‎நெடுந்தீவு‬
விதை குழுமம் -அக்கினிச்சிறகுகள் -ஜப்னா டுடே

மூலிகைக் கேணி - நெடுந்தீவு
(முன்கள ஆய்வுச்சுருக்க குறிப்புகள் 03)

மூலிகைக்கேணிகள் , எனப்படும் இவ்வகை ஓடை போன்ற தொட்டி அமைப்புக்கள் , காயம் , நோய் வாய்ப்பட்ட குதிரைகள் , மாடுகள் போன்றவற்றிற்கு இலகுவாக உடல் முழுவதும் மூலிகை நீரை வீணாகாமல் பூசுவதற்காக அமைக்கப்பட்டவை.
ஒரு சிறிய நீர் தொட்டியில் மூலிகைச்சாறுகள் கலக்கப்பட்டு அதன் ஊடாக மூலிகைக்கேணிக்குள் நீருடன் சேர்த்து நிரப்பப்படும் பின்னர் குதிரைகளோ , மாடுகளோ ஒன்றன் பின் ஒன்றாக இக்கேணி அமைப்பினுள் உடல் மூழ்கி மேலே மீழும் .
இத்தகைய வைத்திய முறைக்காக லாயங்களுக்கு அருகில் , இவ்வகை மூலிகை கேணிகள் இருந்திருக்கின்றன. இவ்வகை கேணி ஒன்றை லாயங்கள் , குடியிருப்புக்கள் இருந்த சான்றுகள் காணப்படும் வெளி ஒன்றில் பற்றைகளுக்கு மத்தியில் இளைஞர்கள் சிலர் கண்டறிந்தனர்.
பண்டைய தொழிநுட்பங்களை வாசிக்க உதவும் முக்கிய மரபுரிமை இடமாக இதனை தொன்ம யாத்திரை கருதுவதுடன் இதனைப் பதிவு செய்யவும் முற்படுகின்றது.
‪#‎தொன்மயாத்திரை‬ 03
‪#‎நெடுந்தீவு‬
விதை குழுமம் - அக்கினிச்சிறகுகள்- யப்னா டுடே.

13507090_868752486584844_435712031724903

 

13521828_868752453251514_317914011685290

 

நெடுந்தீவு யாத்திரை முதல் தொடர்ந்து வர இருக்கும் மாத இதழ் . ஒவ்வொரு யாத்திரையிலும் அந்த பிரதேசம் அல்லது குறித்த மரபுச் சின்னம் அல்லது சொத்து அல்லது நடவடிக்கை சார்ந்து இதழ் வெளியாகும்.
நண்பர்களுடன் பகிருங்கள் !

13501683_869278496532243_354988352398555

https://www.facebook.com/Thonma-Yathirai-தொன்ம-யாத்திரை-822197481240345/?fref=nf

 

Link to comment
Share on other sites

தொன்ம யாத்திரை 03 நிறைவு

தொன்ம யாத்திரை 03 நிறைவு செய்திருக்கின்றோம் . நெடுந்தீவின் தொன்மங்களைப் பார்வையிட்டதும் அவற்றைப்பற்றிய கதைகளை அங்குள்ள மக்களுடன் உரையாடியதும் புது அனுபவங்களைத்தந்தது. அவர்களுடைய பண்பாட்டையும் வாழ்வு முறைகளையும் முடிந்தவரை உள்ளெடுத்துக்கொண்டோம்.

தொன்ம யாத்திரை இதழ் வெளியிடப்பட்டதுடன் ,இதழ் மக்களுக்கு விழிப்புணர்வு களப்பணிகளின் போது உரையாடலோடு கொண்டு சேர்க்கப்பட்டது . அத்தோடு பாடசாலை மாணவர்களுடன் அவர்களுடைய தொன்மங்கள் பற்றிய சிறிய உரையாடலும் அவர்களிற்கான மரபுரிமை பற்றிய அறிமுகம் , மற்றும் நெடுந்தீவின் மரபுரிமைகள் பற்றிய விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டதுடன் பாடசாலைகளின் நூலகத்திற்கு தொன்ம யாத்திரை இதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும் யாத்திரை அனுபவங்களும் தகவல்களும் அடங்கிய நெடுந்தீவின் மரபுரிமைகள் பற்றிய , 
ஆவணப்படம் ஒன்றும் விரைவில் வெளியிடப்பட இருக்கின்றது. விதை , அக்கினிச்சிறகுகள் , யப்னா டுடே மற்றும் இதர அமைப்புக்களின் , ஊடகங்களின் நண்பர்க ,செயற்பாட்டாளர் கள் தமது அனுபவங்களை எழுத்து வடிவில் எழுதவும் எதிர்பார்க்கின்றோம்.

மனநிறைவுடன் , எம்முடைய சக்திக்கு ஏற்ற அளவிற்கு மரபுரிமைகளை அறியவும் கொண்டாடவும் பதிவு செய்யவும் முயன்றுள்ளோம். இதன் பின்னணியில் உருவாகி உள்ள மரபுரிமைப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் உரையாடல் வெளியினை இன்னும் வளர்த்துச்செல்ல சமூக செயற்பாட்டாளர்களினதும் மக்களினதும் ஒத்துழைப்பை கோரி நிற்கின்றோம். மேலதிக படங்கள் ஆவணமாக்கல் விபரங்களை தொடர்ந்து பதிவிடுகின்றோம்

-விதைகுழுமம் -அக்கினிச்சிறகுகள் - ஜப்னா டுடே

ஒளிப்படங்கள்- வ.தனுஜன்

13502036_871935632933196_427391769356172

 

13501771_871937412933018_789651510420062

 

13557657_871936286266464_449473104688954

 

13532970_871936442933115_383902028817808

13511990_871936639599762_353775920705379

https://www.facebook.com/ThonmaYathirai/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஆதவன்....! பகிர்வுக்கு நன்றி....!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.