Jump to content

இரண்டு சட்டவிரோத ஆயுதக் களஞ்சியங்கள் சுற்றி வளைப்பு! 15 பேர் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 

இரண்டு சட்டவிரோத ஆயுதக் களஞ்சியங்களை பொலிஸார் சுற்றி வளைத்து ஆயுத விற்பனையில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட 15 பேரை கைது செய்துள்ளனர்.

மனித படுகொலை உள்ளிட்ட பல்வேறு பாதாள உலகக் செயற்பாடுகளுக்கு, பாதாள உலகக் குழுவினருக்கு ஆயுதங்களை விநியோகம் செய்த இரண்டு முக்கிய ஆயுதக் களஞ்சியங்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு மற்றும் கம்பளை பகுதிகளில் இந்த ஆயுதக் களஞ்சியங்கள் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்துள்ளன.

அண்மையில் கைது செய்யப்பட்ட முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களான ஆர்மி சம்பத் மற்றும் புளுமென்டல் சங்க ஆகியோரிடம் நடத்திய விசாரணைகளின் போது இந்த ஆயுதக் களஞ்சியங்கள் பற்றிய விபரங்கள் தெரியவந்துள்ளன.

இதன்படி, பொலிஸ் மா அதிபரின் நேரடி வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களின் ஊடாக பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டதுடன், சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரி56 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், ரிவோல்வர்கள், மைக்ரோ ரக கைத்துப்பாக்கிகள், ஸ்னைப்பர் ரக துப்பாக்கி, அரோகன் ஆயுதம், தோட்டாத் துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பண்டமாற்று அடிப்படையிலும், வாடகை அடிப்படையிலும், ரொக்கப் பண அடிப்படையிலும் இந்த ஆயுதங்கள் பாதாள உலகக் குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆயுத விற்பனையுடன் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதுடன், மேலும் ஆயுதங்களும் மீட்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

http://www.tamilwin.com/crime/01/106215

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழரசு said:

இரண்டு சட்டவிரோத ஆயுதக் களஞ்சியங்களை பொலிஸார் சுற்றி வளைத்து ஆயுத விற்பனையில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட 15 பேரை கைது செய்துள்ளனர்.

13 hours ago, தமிழரசு said:

அண்மையில் கைது செய்யப்பட்ட முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களான ஆர்மி சம்பத் மற்றும் புளுமென்டல் சங்க ஆகியோரிடம் நடத்திய விசாரணைகளின் போது இந்த ஆயுதக் களஞ்சியங்கள் பற்றிய விபரங்கள் தெரியவந்துள்ளன.

சிங்கள ஏரியாவிலை எண்டால் பாதளக்குழு.....பணியாரம்

இதே.....

தமிழ் ஏரியா எண்டால் விடுதலப்புலிகளாம்

என்னங்கடா இது....ஏண்டா....ஏண்டா இப்பிடி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

\

தமிழ் ஏரியா எண்டால் விடுதலப்புலிகளாம்

என்னங்கடா இது....ஏண்டா....ஏண்டா இப்பிடி?

தமிழன்டா தமிழன்டாtw_tounge_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

சிங்கள ஏரியாவிலை எண்டால் பாதளக்குழு.....பணியாரம்

இதே.....

தமிழ் ஏரியா எண்டால் விடுதலப்புலிகளாம்

என்னங்கடா இது....ஏண்டா....ஏண்டா இப்பிடி?

எமது ஊடகங்களே.... எம் மக்களுக்கு, சிக்கலை ஏற்படுத்தி விடுவது...  சோகம்.

Link to comment
Share on other sites

7 hours ago, குமாரசாமி said:

சிங்கள ஏரியாவிலை எண்டால் பாதளக்குழு.....பணியாரம்

இதே.....

தமிழ் ஏரியா எண்டால் விடுதலப்புலிகளாம்

என்னங்கடா இது....ஏண்டா....ஏண்டா இப்பிடி?

சிங்களவனுக்கு ஆயுதங்களைப் பாவிக்கத் தெரியாது என்பது சிங்களவனுக்கே தெரியும்.

புலிகளின் ஆயுதப் பாவனைகளை இன்றும் உலகம் வியந்து பார்க்கிறதே....! அதுதான். :unsure: :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Paanch said:

சிங்களவனுக்கு ஆயுதங்களைப் பாவிக்கத் தெரியாது என்பது சிங்களவனுக்கே தெரியும்:unsure: :unsure:

உப்படி சொன்னா எங்களுக்கு கெட்ட கோபம் வரும்.....எங்கன்ட ச‌கோதரயாக்களை எப்படி நீங்கள்underestimate பண்ணுவீங்கள்tw_tounge_wink:

35 minutes ago, Paanch said:

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.