Jump to content

போலியோ ஒழிப்புக்கு புலிகளும் பங்காற்றினர்! - ரணில் பாராட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை முழுவதும் போலியோ ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக, தேசிய நோய்தடுப்பு தினமன்று நீங்கள் ஆயுதங்களை கீழே வைப்பதற்கு தயாரானால் நாமும் ஆயுதங்களை கீழே வைத்து போர்நிறுத்தம் ஒன்றை அமுல்படுத்துவதற்கு தயார் என புலிகள் கடிதம் மூலம் அறிவித்திருந்தனர், என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் நேற்று இடம்பெற்ற ரொட்டறி கிளப் மாநாட்டில் உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை முழுவதும் போலியோ ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக, தேசிய நோய்தடுப்பு தினமன்று நீங்கள் ஆயுதங்களை கீழே வைப்பதற்கு தயாரானால் நாமும் ஆயுதங்களை கீழே வைத்து போர்நிறுத்தம் ஒன்றை அமுல்படுத்துவதற்கு தயார் என புலிகள் கடிதம் மூலம் அறிவித்திருந்தனர், என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் நேற்று இடம்பெற்ற ரொட்டறி கிளப் மாநாட்டில் உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

   

இலங்கையில் எமக்கு போலியோ நோய் அச்சுறுத்தல் இல்லை. இரண்டு தசாப்பதத்திற்கு அதிக காலமாக எமது நாட்டில் போலியோ நோய் கண்டறியப்படவில்லை. ஆயுதப்போராட்டத்தில் மூழ்கியிருந்த காலப்பகுதியிலே போலியோ நோயையும் இல்லாது ஒழித்தோம். ரொட்றிக்கழகத்தின் பங்களிப்பு காரணமாகவே போலியோவை கட்டப்பாட்டிற்குள் கொண்டு வந்தோம் எனவும் அதன் தலைவர் ரவீந்திரனிடமிருந்து மிக அதிகளவான அனுசரணைகள் கிடைக்கப் பெற்றதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=158507&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் இப்ப என்னத்துக்கு புலியளை இழுத்து அசை போடுறார்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலில் பேச்சை நம்ப முடியாது !
யாழ் கள சிங்கள பேச்சாளர்கள் என்ன சொல்கிறார்கள் 
எனபதில்தான் 
உண்மை கொட்டி கிடக்கும் !

Link to comment
Share on other sites

2 minutes ago, Maruthankerny said:

ரணிலில் பேச்சை நம்ப முடியாது !
யாழ் கள சிங்கள பேச்சாளர்கள் என்ன சொல்கிறார்கள் 
எனபதில்தான் 
உண்மை கொட்டி கிடக்கும் !

முசுலீம் பேச்சாளர்களும் நிறையவே உள்ளனர். அவர்களை மறந்தது என்ன??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் போலியோ சொட்டு மருந்து நாட்களில் யுத்த நிறுத்தம் செய்தது மட்டுமன்றி மக்கள் அந்த சொட்டு மருந்தைப் பெற ஊக்கப்படுத்தும் பிரச்சாரங்களையும் எடுத்தனர். பள்ளிக்கூடங்கள் ஊடாகவும் இவை முன்னெடுக்கப்பட்டன.

இப்படி எத்தனையோ நல்ல விடயங்கள் புலிகள் காலத்தில்..

கல்வியில் கூட நாம் தெற்கோடு மேற்கோடு மத்தியோடு போட்டி போட்டம். மாவை சேனாதிராஜாவே அதை இப்ப பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். 

புலிகள் யாழ் நூலகம் அழிந்த போதும் நல்லூரில் பல துறை சார்ந்த ஒரு நூலகம் அமையவும் அது வசதிகள் பெறவும் செய்து கொடுத்திருந்தார்கள். அங்கு எல்லா வகை நூல்களும் இருந்தன. நிறைய பல்கலைக்கழக மாணவர்கள் கூட அதனைப் பயன்படுத்தி பயன்பெற்றனர்.

இன்று வசதியான நூலகம் எல்லாம் இருந்தும் மக்கள்.. மாணவர்கள் திட்டமிட்டு போதையில் குழு வன்முறையில்.. கிடக்கச் செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தலுக்கு பொலிஸ் அதிகாரிகள்... இராணுவ அதிகாரிகள்.. கடற்படை அதிகாரிகள் பொறுப்பு. விநியோகம் தமிழ் ஒட்டுக்குழுக்களும்.. வன்முறைக்குழுக்களும்.. முஸ்லீம் குழுக்களும் ஆகும்.

இந்த நிலையில்.. நாடு எப்படி முன்னேறும்...??! tw_angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.