Jump to content

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: 11-வது பட்டம் வெல்லும் முனைப்பில் ரியல் மாட்ரிட்


Recommended Posts

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: 11-வது பட்டம் வெல்லும் முனைப்பில் ரியல் மாட்ரிட்

 

 
கிறிஸ்டியானோ ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ

கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த ரியல் மாட்ரிட்-அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதுகின்றன.

அரையிறுதியில் அட்லெடிகோ மாட்ரிட், பேயர்ன் முனிச் அணியையும், ரியல் மாட்ரிட் அணி, மான்செஸ்ட் சிட்டி அணியையும் தோற்கடித்திருந்தன. ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்ஸ் லீக் தொடரில் 14-வது முறையாக இறுதிப்போட்டியை சந்திக்கிறது.

10 முறை சாம்பியன்ஸ்

அந்த அணி 10 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. தற்போது 11-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. மிலன் நகரில் நடைபெறும் இன்றைய ஆட்டத்துக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளது.

போட்டி நடைபெறும் சான் சிரோ மைதானத்தில் சுமார் 80 ஆயிரம் பேர் அமரும் வசதி உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் தொடரில் இந்த இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதின. இதில் ரியல் மாட்ரிட் பட்டம் வென்றிருந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அட்லெடிகோ மாட்ரிட் அணி திட்டமிடக்கூடும். பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.114 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணி ரூ.80 கோடியும் பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது.

ரொனால்டோ

ரியல் மாட்ரிட் அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த தொடரில் 16 கோல்கள் அடித்துள்ளார். இன்று அவர் மேலும் ஒரு கோல் அடிக்கும் பட்சத்தில் ஒரே சீசனில் 17 கோல்கள் அடித்தவர் என்ற சாதனையை படைப்பார்.

ஆனால் சான் சிரா மைதானத்தில் நடை பெற்ற ஆட்டங்களில் ரொனால்டோ இதுவரை கோல்கள் எதுவும் அடிக்க வில்லை. இதுதொடர்பாக அவர் கூறும்போது, "சாதனையை சமன் செய்வதோ அல்லது கடக்கவோ நன்றாக தான் இருக்கும். ஆனால் நான் அந்த சிந்தனையில் இல்லை. ஏனெனில் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதே மிக முக்கியமான விஷயம்" என்றார்.

கனவு நிறைவேறுமா?

அட்லெடிகோ மாட்ரிட் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் கனவுடன் உள்ளது. அந்த அணி 1973-74 மற்றும், 2013-14ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்திருந்தது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி தோல்வியை சந்தித்தால் 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை வெல்லாத அணி என்ற மோசமான சாதனையை படைக்கும்.

இன்றைய ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது. அந்த அணி அட்லெட்டிகோ அணியுடன் கடைசியாக மோதிய 10 ஆட்டத்தில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.

இறுதிப்போட்டி குறித்து அட்லெட்டிகோ அணியின் மேலாளர் சிமியோன் கூறும்போது, " நாங்கள் ஏற்கெனவே உலகின் சிறந்த 3 அணிகளில் இரு அணிகளுக்கு எதிராக விளையாடி உள்ளோம். தற்போது 3-வது ஒரு அணியுடன் மோத உள்ளோம். ரியல் மாட்ரிட் அணியானது பார்சிலோனா, பேயர்ன் முனிச் அணிகளில் இருந்து வேறுபட்டது. அவர்கள் பெரிய அளவிலான அச்சுறுத்தும் அணியாக செயல் படக்கூடியவர்கள். நாங்கள் தயாராக இருக்கிறோம். வெற்றி பெற என்ன தேவையோ அதை களத்தில் சிறப்பாக செயல்படுத்துவோம்" என்றார்.

நேரம்: நள்ளிரவு 12.15

இடம்: மிலன், இத்தாலி

ஒளிபரப்பு: டென் ஸ்போர்ட்ஸ்

http://tamil.thehindu.com/sports/சாம்பியன்ஸ்-லீக்-கால்பந்து-11வது-பட்டம்-வெல்லும்-முனைப்பில்-ரியல்-மாட்ரிட்/article8659434.ece?homepage=true

Link to comment
Share on other sites

சம்பியன்ஸ் லீக்கை வென்றது றியல் மட்ரிட்
 

article_1464514486-LEADCldjrfj16fhnjd.jpஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் கூட்டமைப்பினால் ஒழுங்கமைக்கப்படும் சம்பியன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டியில் சக மட்ரிட் நகர அணியான அத்லெட்டிகோ மட்ரிட்டை தோற்கடித்த றியல் மட்ரிட் 11ஆவது தடவையாக சம்பியன்ஸ் லீக்கை வென்றது.

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களான ஏ.சி.மிலான், இன்டர் மிலானின் கால்பந்தாட்ட அரங்கமான சன் சிரோவில் இடம்பெற்ற மேற்படி இறுதிப் போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி மேலதிக நேரத்துக்குச் சென்றிருந்தது. மேலதிக நேரத்தில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாததையடுத்து வெற்றி பெறும் அணியைத் தீர்மானிக்கும் பொருட்டு பெனால்டி வழங்கப்பட்டிருந்தது.

பெனால்டியில், றியல் மட்ரிட்டின் லூகாஸ் வஸ்கூஸ், மார்ஷெல்லோ, கரித் பேல் ஆகியோர் கோல்களைப் பெற்றிருந்த நிலையில், அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாக அந்தோனி கிறீஸ்மன், கபி, சாவூல் நிகூஸ் ஆகியோரும் கோல்களைப் பெற்றிருந்ததனர். அடுத்த நான்காவது பெனால்டியில் றியல் மட்ரிட்டின் சேர்ஜியோ ராமோஸ் கோலைப் பெற, அத்லெட்டிகோ மட்ரிட்டின் ஜூவன்ஃபிறான் அடித்த பந்து கோல்கம்பத்தில் பட, சம்பியன்ஸ் லீக் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த றியல் மட்ரிட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது பெனால்டியை அமைதியாக கோல்கம்பத்துக்குள் செலுத்த, 5-3 என்ற கணக்கில் பெனால்டியில் சம்பியன்ஸ் லீக்கை றியல் வென்றது.

முன்னதாக போட்டியின் 15ஆவது நிமிடத்தில் ராமோஸ் பெற்ற கோலானது ‘ஓஃப் சைட்’ இலிருந்தே பெறப்பட்டிருந்தபோதும் அதை உதவி மத்தியஸ்தர் கண்டுபிடித்திருக்கவில்லை. இதன் காரணமாக மேற்படி கோலானது சர்ச்சைக்குரியதொன்றாக மாறியிருந்தது. எனினும் பின்னர் அத்லெட்டிகோ மட்ரிட் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கிறீஸ்மன் தவறவிட்டிருந்த நிலையில், மாற்று வீரராக களமிறங்கிய அத்லெட்டிகோ மட்ரிட்டின் யன்னிக் கர்ரஸ்கோ போட்டியின் 79ஆவது நிமிடத்தில் பெற்ற கோலின் மூலமே மேலதிக நேரத்துக்குச் சென்றிருந்தது.

2002ஆம் ஆண்டு வீரராக சம்பியன்ஸ் லீக்கை வென்றிருந்த தற்போதைய றியல் மட்ரிட்டின் முகாமையாளரான ஸினேடி ஸிடேனின் அணியானது முன்களத்தில் அழகாக செயற்பட்டிருந்ததோடு, அத்லெட்டிகோ மட்ரிட்டின் தாக்குதல் கூட்டணியான கிறீஸ்மன், பெர்ணான்டோ டோரஸுக்குகான பந்து பரிமாற்றங்களை நிறுத்தும் பொருட்டு றியல் மட்ரிட்டின் நட்சத்திர முன்கள வீரர்களான கரித் பேல், ரொனால்டோவும் மத்திய களத்துக்கு வந்திருந்ததுடன் கரிம் பென்ஸீமாவும் தனது தடுப்பாட்ட கடமைகளையும் நிறைவேற்றி சிறப்பாகச் செயற்பட்டிருந்தனர்.

- See more at: http://www.tamilmirror.lk/173276#sthash.G8YL6FtO.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடுவரும் சேர்ந்து அடித்த முதலாவது கோல் ரியாலிற்கு உதவியாக இருந்திருக்கும்.
இந்த மாதிரி ஒவ்வொருமுறையும் நடந்தால் 50 முறையும் கோப்பையை வெல்லலாம் 

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் லீக்: 11வது முறையாக வென்று அசத்தியது ரியல் மாட்ரிட்!

fs4.jpg

கிளப் கால்பந்து போட்டிகளில் மிகவும் உயரிய தொடரான யு.சி.எல் எனப்படும், யு.இ.எஃப்.ஏ சாம்பியன்ஸ் லீக் தொடரை வென்று அசத்தியுள்ளது ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணி. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த இப்போட்டியில் அதே மாட்ரிட்டைச் சார்ந்த மற்றொரு அணியான அத்லெடிகோ மாட்ரிட் அணியை பெனால்டியில் வென்று 11வது முறையாக சாம்பியன்ஸ் லீக்கை அவ்வணி கைப்பற்றியுள்ளது. அவ்வணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இத்தொடரில் 16 கோல்கள் அடித்து தங்கக் காலணி விருதை வென்றார்.

கடந்த ஜூன் மாதம் தொடங்கிய இத்தொடரில், உள்ளூர் தொடர் பங்களிப்பு மற்றும் தகுதிச் சுற்று ஆகியவற்றின் அடிப்படையில் தலைசிறந்த 32 அணிகள் 8 பிரிவுகளாகப் பங்கேற்றனர். லீக் சுற்றுகள் முடிந்து 16 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. நாக் அவுட் சுற்றுகள் முடிவில் ஸ்பெயினின் மாட்ரிட் நகரை மையமாகக் கொண்ட ரியல் மாட்ரிட் மற்றும் அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. ரொனால்டோ, பேலே, பெஞ்சிமா, க்ரூஸ், ரமோஸ் என நட்சத்திரப் பட்டாளம் நிறைந்த ரியல் மாட்ரிட் அணி வோல்ஸ்பெர்க், மான்செஸ்டர் சிட்டி போன்ற சுமாரான அணிகளோடு திக்கித் தினறி வென்று 14வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. ஆனால் இளம் வீரர்கள் நிறைந்த அத்லெடிகோ அணியோ நடப்பு யு.சி.எல் சாம்பியன் பார்சிலோனா, ஜெர்மன் சேம்பியன் பேயர்ன் மூனிச் போன்ற பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் 3வது முறையாக நுழைந்தது. கடந்த 2014ம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியிலும் இவ்விரு அணிகளே மோதின என்பது குறிப்பிடத்தக்கது. அப்போட்டியில் ரியல் அணி கூடுதல் நேரத்தில் 4-1 என்ற கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.

fs3.jpg

 

உடைந்தது அரண்

இன்று அதிகாலை தொடங்கிய இறுதிப் போட்டியில் இரு அணிகளும் தங்கள் முழு பலத்துடன் களம் புகுந்தன. அத்லெடிகோ மாட்ரிட் அணியின் தடுப்பாட்டம் பலமாக இருக்கும் என்பதால் ரியல் அணி கௌன்டர் அட்டாக் முறையில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தொடக்கம் முதலே அவ்வணி நேரடியாக தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. அவ்வணியின் பேலே, க்ரூஸ் ஆகியோர் கோல் நோக்கி பந்துகளை செலுத்திக்கொண்டே இருந்தனர். அதற்குப் பலன் 15வது நிமிடத்திலேயே கிடைத்தது. க்ரூஸ் அடித்த ஃப்ரீ-கிக்கை, உலகின் காஸ்ட்லி வீரர் பேலே தட்டிவிட, ரியல் மாட்ரிட் அணியின் கேப்டன் செர்ஜியோ ரமோஸ் அதை கோலாக்கினார். மிகச்சிறந்த அரணாகக் கருதப்படும் அத்லெடிகோ அணியின் தடுப்பு இவ்வளவு சீக்கிரம் உடைக்கப்படும் என யாரும் நினைக்கவில்லை. ஒரு கோல் வாங்கிய பிறகு அத்லெடிகோ அணியின் ஆட்டம் முன்னேறியது. ரியல் அணி பலமுறை கோலடிக்க முற்பட்ட போதும், அத்லெடிகோ கோல்கீப்பர் ஓப்லாக்கின் மிகச்சிறந்த செயல்பாடு அவையனைத்தையும் தடுத்தது. முதல் பாதியின் முடிவில் ரியல் அணி 1-0 என்று முன்னிலை பெற்றது.

fs1.jpg

 

தொடரும் பெனால்டி சோகம்
 
இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே அத்லெடிகோ அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அவ்வணியின் டாரசைக் ரியல் வீரர் பெபே கீழே தள்ளியதால் பெனால்டி வழங்கப்பட்டது. பேயர்ன் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் டாரஸ் பெனால்டியைத் தவறவிட்டதால், இம்முறை கிரீஸ்மேன் பெனால்டியை அடித்தார். ஆனால் அவரும் கோல்கம்பத்தில் பந்தை அடித்து வாய்ப்பை வீனாக்கினார். ஆனாலும் ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் அத்லெடிகோ அணியின் இளம் பெல்ஜியம் வீரர் கராஸ்கோ கோலடித்து ஆட்டத்தை சமனாக்கினார். பின்கள வீரர் ஜுவான்ஃபிரான் அற்புதமாக பந்தை கிராஸ் செய்ய, கராஸ்கோ அதை எளிதில் கோலாக்கினார். ஆட்ட நேரம் முடிவடைந்தும் இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால் 30 நிமிட கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேர முடிவிலும் இரு அணிகளும் மேற்கொண்டு கோலடிக்காததால் ஆட்டம் பெனால்டிக்குச் சென்றது.

fs6.jpg

 

எமனாய் மாறிய ஆப்த்வாந்தவன்

முதல் மூன்று பெனால்டி வாய்ப்புகளில் ரியல் அணியின் லூகாஸ், பேலே, மார்செலோ ஆகியோரும், அத்லெடிகோ அணியின் கிரீஸ்மேன், காபி, சவுல் ஆகியோரும் கோலடித்தனர். 4வது வாய்ப்பில் ரியல் கேப்டன் ரமோஸ் கோலடித்தார். அத்லெடிகோ அணி சமநிலை அடைய உதவிய ஜுவான்ஃபிரான் தனது வாய்ப்பை கோல்கம்பத்தில் அடித்து வீனாகினார். ரியல் அணியின் கடைசி வாய்ப்பை நட்சத்திர வீரர் ரொனால்டோ கோலாக்க 11வது முறையாக கோப்பையை வென்றது ரியல் மாட்ரிட் அணி. சாம்பியன்ஸ் லீக் வரலாற்றிலேயே அதிக முறை கோப்பையை வென்ற அணி ரியல் மாட்ரிட் தான். அதற்கு அடுத்தபடியாக ஏ.சி.மிலன் அணி 7 முறை கோப்பையை வென்றுள்ளது. ரியல் மாட்ரிட் அணி கோப்பையை வென்றதன் மூலம் அவ்வணியின் பயிற்சியாளர் ஜிடேன், ஒரு வீரராகவும் அதே சமயம் பயிற்சியாளராகவும் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்ற 7வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். பெனிட்சின் தலைமையின் கீழ் தினறிய ரியல் அணியின் தலைமைப் பொறுப்பேற்ற முதல் சீசனிலேயே ஜிடேன் கோப்பையை வென்றுள்ளது அதைவிடச் சிறப்பாகும்.

 
நான்கு ஆண்டுகளாக லாலிகா தொடரை வெல்ல முடியாமல் தவித்து வரும் ரியல் மாட்ரிட் வீரர்களுக்கும், அவர்களது ரசிகர்களுக்கும் இவ்வெற்றி மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது. ஆனாலும் இளம் வீரர்களை வைத்துக்கொண்டு மிகப்பெரிய ஜாம்பவான் அணிகளையெல்லாம் பந்தாடிய அத்லெடிகோ அணியும் பலரின் மனதைக் கொள்ளையடித்தது. இரு அணிகளும் மாட்ரிட்டையே மையாமகக் கொண்ட அணிகளென்பதால் ரசிகர்களின் அவ்வூர் மகிழ்ச்சி சோகம் என இரண்டும் கலந்த காக்டெயிலாகவே இருக்கும்.

http://www.vikatan.com/news/sports/64671-real-madrids-champions-league-win-over-atletico.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.