Jump to content

நச்சு கலப்பு? தமிழகத்தில் விற்பனையாகும் 'பிரெட்'டிலும் மாவட்டம் தோறும் ஆய்வு நடத்த முடிவு


Recommended Posts

நச்சு கலப்பு?
தமிழகத்தில் விற்பனையாகும் 'பிரெட்'டிலும்
மாவட்டம் தோறும் மாதிரி ஆய்வு நடத்த முடிவு

டில்லியில் நடத்திய ஆய்வில், 'பிரெட்' வகைகளில், புற்றுநோயை உண்டாக்கும் நச்சு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 

 

Tamil_News_large_1528816_318_219.jpg

எனவே, 'தமிழகத்திலும், உணவு பாதுகாப்புத்துறை இது குறித்த ஆய்வுகளை நடத்த வேண்டும்' என, நுகர்வோர் அமைப்புக்கள் வலியுறுத்தி உள்ளன.

டில்லியில் விற்பனையாகும், 'பிராண்டட்' வகை, 'பிரெட்'களை, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வு மையம் ஆய்வு செய்ததில், புற்றுநோயை உருவாக்க அதிகம் வாய்ப்புள்ள, 'பொட்டாசியம் புரோமேட்' என்ற, ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மற்றொரு வேதிப்பொருளான பொட்டாசியம் அயோடேட், தைராய்டு பிரச்னையை ஏற்படுத்தும் என, தெரிய வந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த, மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆய்வு டில்லியில் மட்டுமே நடந்துள்ளது. தமிழகத்திலும், டில்லியில் விற்பனையாகும் பல பிராண்ட்களின், பிரெட், பன் வகைகள் விற்கப்படுகின்றன. இதுதவிர, மூலை  முடுக்குகளில் எல்லாம் பேக்கரிகள் உருவாகி விட்டன. இங்கு விற்கப்படுபவைகளில், அதுபோன்ற நச்சு உள்ளதா என, ஆய்வு செய்ய, தமிழகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நுகர்வோர் அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

இதுகுறித்து, தமிழக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், 'தமிழகத்தில், வழக்கமான ஆய்வுகள் நடக்கின்றன.பிரத்யேக ஆய்வுக்கு எந்த உத்தரவும் வரவில்லை. பிரெட், பன் குறித்த சர்ச்சை வந்துள்ளதால், அரசின் ஒப்புதல் பெற்று, மாவட்டம் தோறும், பிரெட், பன் மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்ய உள்ளோம்' என்றனர்.

இந்திய நுகர்வோர் சங்கத் தலைவர் நிர்மலா தேசிகன் கூறுகையில், ''பிரெட் மட்டுமல்ல, அனைத்து உணவுப்பொருட்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், தமிழகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு ஆய்வகங்களில், போதிய வசதி இல்லை; ஆட்கள் இல்லை; மேம்படுத்தப் படவில்லை. அப்புறம் எப்படி பரிசோதனை செய்ய முடியும்? அரசு ஆய்வகங்களை மேம்படுத்த கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.

'நுாடுல்ஸ் போல் ஆகாதே?':''நுகர்வோருக்கு தரமான பொருள் கிடைக்கவே, உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இது, கேரளாவில் சிறப்பாக செயல்பாட்டில் உள்ளது. அரசியல் கட்சிகள்,வியாபாரிகள் இதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், தமிழகத்தில் செயல்படுத்த முடியவில்லை. இதை செயல்படுத்தினால், கலப்பட, நச்சு உணவுகளை தடுக்க முடியும். இதற்கு முன், 'நுாடுல்சில்' நச்சு உள்ளதாக பிரச்னை பெரிதாகி அடங்கியது போல், பிரட் விவகாரமும் போய்விடக் கூடாது.

- டி.சடகோபன் தலைவர், தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையம்
'
ஆராய்ச்சியில் முன்னேற்றம்' பிரெட், பன் வகைகளில் உணவு சேர்மான பொருட்கள் போல், வேதி சேர்மான பொருட்களுக்கும் அனுமதி உண்டு. மிருதுவாக்குதல், பெரிதாக்குதல் என்ற தேவைக்காக, பொட்டாசியம் புரோமேட், பொட்டாசியம் அயோடேட் சேர்க்கப்படுகின்றன. இவை, 50 பி.பி.எம்., வரை, அதாவது, 10 லட்சம் உணவு துகள்களில், 50 துகள்கள் இருக்கலாம்.
டில்லி ஆய்வில், 22.54 துகள்கள் என்பது, அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் தான் உள்ளது. ஆராய்ச்சிகள் மேம்பட்டு வரும் நிலையில், இந்த அளவு கூட, புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்பதால், உணவு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் வேண்டும் என, வலியுறுத்தப் படுகிறது; வேறு எந்த சிக்கலும் இல்லை.

- தலைமை ஆராய்ச்சியாளர் தேசிய வேளாண் நிறுவனம்

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1528816

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.