Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வை.கோ அண்ணை பற்றி ஒரு கதை உலாவுகிறது.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றை சொல்லணும். சொல்லவேண்டிய நேரத்தில் சொல்லாமல் விடுவதும் அதற்கு துணை போவதாகும்.

வை.கோ அண்ணை பற்றி ஒரு கதை உலாவுகிறது.

அரசியல் காலம் ஈழத்தமிழர் அவசரசுயநலம் தவிர்த்து பார்த்தால் வை.கோ அண்ணை மேல் உள்ள மதிப்பும் நன்றிக்கடனும் என்றுமே முதன்மையானவை.

அவருக்கு அரசியல் தெரியாது
கூட்டுவைக்க தெரியாது
சுயநலமாக சிந்திக்கத்தெரியாது என்று சொல்லுங்கள். ஏற்கலாம்.

ஆனால் வை.கோ அண்ணன் பணம் பெற்றுக்கொண்டு சில கட்சிகளை வேறாக்கி காசுக்காக சில கட்சிகளின் முதுகில் குத்தினார். 
ஒரு கட்சியை ஆட்சியில் இருத்த இந்த நரி வேலையை செய்தார் என்று மட்டும் தயவு செய்து சொல்லாதீர்கள்.

மக்கள் நலக்கூட்டணி என்பது மிகவும் நல்லதொரு முயற்ச்சி. அதில் விஐயகாந்தை சேர்த்து அவரை முதல்வராக அறிவித்து அவரது நடவடிக்கைகளால் அவமானப்படுத்தப்படத்தொடங்கிய பின்னர் தான் அக்கூட்டணி அருவருப்பானது.

அவரை ஆதரித்தவர்களே வை.கோ அண்ணரை புத்திசாலி எனக்காட்ட இவ்வாறு அவரை கேவலப்படுத்தி எழுதுவது கவலை தருகிறது.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின் தோல்வியத் தான் முன்கூட்டியே  எதிர்பார்த்ததாகவும்
 அதற்குப் பணம் தான் காரணம்  எனவும்

தி மு க வைத் தோற்கடிப்பதற்காக அ தி மு க   தன்னைப் பயன்படுத்தியதாக தி மு க  கூறியுள்ளதாகவும்
வை கோ அண்ணரே அறிக்கை விட்டுள்ளாரே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வை.கோவில் இப்ப சந்தேகம் தான் வருகிறது. காரணம் 2009 மே க்கு முன் ஈழத்தமிழர்கள் என்று எப்பாவவதும் பேசி வந்த அவர்.. இம்முறை அதனை உச்சரிக்கக் கூட இல்லை. ஏன் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளை நடத்தி வந்த அவர்.. இம்முறை மூச்சும் விடவில்லை.

வை.கோ அவர்களின் ஈழ ஆதரவு என்பது அரசியலுக்கானதா.. தார்மீகமானதா என்ற சந்தேகம் இப்போது எழுவது தவிர்க்க முடியாததாகிறது..?!

ஒரு காலத்தில்.. ஈழப்பிரச்சனைக்கு தார்மீக ஆதவுன்னு பேசி வந்தவர்கள் எல்லாம் அதனை மறந்தது போல் வை.கோவும் மறந்துவிட்டாரா.. மேலும்.. தமிழ் தேசியம் மீது அவருக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு...?! இப்படி பல கேள்விகள் வை.கோ சமீப காலத்தில் எழ இடமளித்திருக்கிறார்.. தன் செயற்பாட்டால்.

அதற்காக கடந்த காலங்களில் செய்த உதவிகளை மறப்பது அழகல்ல. ஆனால்.. அவை உதவிகளா.. அல்லது ஏதேனும் நோக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஊடுருவல்களா என்றும் கேள்விகள் எழக் கூடிய சூழலை வை.கோ உருவாக்கி வருவதும் யதார்த்தமாகும். 

வை.கோ இப்ப கேள்வியின் நாயகன் ஆகி இருக்கிறார் என்பது உண்மையே. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில இதெல்லாம் சகசமப்பா....

அவரில பிழை சொல்ல முடியாது. அம்மா உள்ள 18 மாதம் போட்ட பின்னர் வெளிய வந்து, அம்மாவுக்கு எதிராக வீராப்பு அரசியல் செய்வார் என்று பார்த்தால், அம்மாவுடன் சேர்ந்தார்.

காசு கொடுக்கப்படாமலா கோபம் ஆறியது?

இப்ப தான் மனிதர் பிழைக்க தெரிந்து கொண்டிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் அரசியல் என்பதுதான் உலக மகா அரசியல் இதில் நொந்து நூலாவது ஈழத் தமிழர்கள் தான் அவர்களை நம்பி 

Link to comment
Share on other sites

ஜெயலலிதா தனது வாக்கு வங்கியை தக்க வைக்க பலரை பயன்படுத்தி எதிர்கட்சிகளின் வாக்கு வங்கிகளை சிதறடித்தார் என்பது உண்மை. பலர் விலை போயுள்ளனர். பலரில் பல மில்லியன் மக்களும் அரசியல்வாதிகளும் அடங்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவிற்கு வாழ்வா, சாவா என்ற நிலையில் வழக்குப் பிரச்சணை. பதவி இல்லாவிடில் செல்வாக்கு இராது. எல்லோரும் விலகிப் போக தனியே அவதிப்பட நேரும். 

தூக்கி உள்ள போட்டு விட்டு மறுவேலை பார்க்கத் தான் எல்லோரும்... ஏன் பன்னீர் கூட அதையே விரும்புவார்.

வழக்கைப் போட்ட கருணாநிதி, வென்று பதவியில் இருந்தால் அது வேற பிரச்சணை.

ஆகவே, அம்மாவுக்கு எவ்விலை கொடுத்தும் வெல்வதைத் தவிர வேறு மார்க்கம் இருக்கவில்லை.

வைக்கோ பயன்படுத்தப் பட்டிருக்க
லாம்... ஏன் பிரேமலதா, சுதீஸ் கூட...

பணம்.. ஐயா.... பணம்...

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

இவ்வளவு பிரைச்சனைக்குள்ளும் மம்மி தனிய நின்டாவே.
பன்னீருக்கும் சீற்று  கிடைகாதுன்னாங்கள் 

தமிழ் நாட்டு அரசியலில் தெரிவு ஒன்று பூதம் அல்லது பேய்
இங்கு பூனைக்குட்டிகளுக்கும் ...  இடமில்லை இப்ப.

..  (மனிதர்களுக்கும்) 

Link to comment
Share on other sites

14 hours ago, nedukkalapoovan said:

வை.கோவில் இப்ப சந்தேகம் தான் வருகிறது. காரணம் 2009 மே க்கு முன் ஈழத்தமிழர்கள் என்று எப்பாவவதும் பேசி வந்த அவர்.. இம்முறை அதனை உச்சரிக்கக் கூட இல்லை. ஏன் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளை நடத்தி வந்த அவர்.. இம்முறை மூச்சும் விடவில்லை.

வை.கோ அவர்களின் ஈழ ஆதரவு என்பது அரசியலுக்கானதா.. தார்மீகமானதா என்ற சந்தேகம் இப்போது எழுவது தவிர்க்க முடியாததாகிறது..?!

ஒரு காலத்தில்.. ஈழப்பிரச்சனைக்கு தார்மீக ஆதவுன்னு பேசி வந்தவர்கள் எல்லாம் அதனை மறந்தது போல் வை.கோவும் மறந்துவிட்டாரா.. மேலும்.. தமிழ் தேசியம் மீது அவருக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு...?! இப்படி பல கேள்விகள் வை.கோ சமீப காலத்தில் எழ இடமளித்திருக்கிறார்.. தன் செயற்பாட்டால்.

அதற்காக கடந்த காலங்களில் செய்த உதவிகளை மறப்பது அழகல்ல. ஆனால்.. அவை உதவிகளா.. அல்லது ஏதேனும் நோக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஊடுருவல்களா என்றும் கேள்விகள் எழக் கூடிய சூழலை வை.கோ உருவாக்கி வருவதும் யதார்த்தமாகும். 

வை.கோ இப்ப கேள்வியின் நாயகன் ஆகி இருக்கிறார் என்பது உண்மையே. tw_blush:

இப்படி நன்றி கெட்ட தனமாக சிந்திப்பது தமிழனுக்கு கூட பிறந்த குணம் போலுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கெட்ட தனமா ஹிந்தியாவும் வை.கோவும் சிந்திக்கும் போது.. தமிழன் ஏன் கேள்வி கேட்கக் கூடாது.. சந்தேகிக்கக் கூடாது. எல்லாரையும் புட்டும்.. தேங்காய்ப்பூவும்.. தாயும் தொப்புள் கொடியும் என்று நம்பிச் சீரழிந்த காலங்களையும் தமிழன் கடந்து வந்துள்ளான். அந்த அனுபவம் கேள்வி கேட்க வைக்கும். அதற்கு வாய்ப்பளிப்பதை வை.கோ போன்றவர்கள் தவிர்ப்பது நல்லது. :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.