Jump to content

தமிழ்த் தேசியம் , விடுதலை , சுயநிர்ணயம் அனைத்துக்கும் அவர்கள் Good Bye...

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலவோட்டத்துள் இசைந்த நம்மைக் கடந்தவொரு தலைமுறையைப் பார்க்கிறோம். அஃது, புலத்துள் மிக இடைவெளியை ஏற்படுத்தியிருப்பதையும் பார்க்கின்றோம். தமிழ் மொழிசார்ந்த வாழ்வு இனியெப்படியிருக்கும் என்பதைத் தமிழகத்துக் கலை வடிவங்களிலிருந்து கணித்துவிடவும் முடியும். அவை, கட்டியமைக்கும் போலிப் பிரமாண்டகள், வர்ணங்கள் , மனிதர்கள் யாவும் நமக்கு அந்நியப்பட்டவர்கள். ஆனால் , புலத்தின் இரண்டாம் தலைமுறைக்கேற்ற மாதிரி மனிதர்கள் அவர்கள்.

இன்று, கனேடியத் தமிழர்களைக் குறித்து நோக்குவோமானால் அவர்கள் இந்தப் பிரமாண்டங்களது சாட்சியான போலி மனிதர்களாக வாழ்வதும் , நுகர்வதும் - அதைத் தேடுவதிலும் , திணிப்பதிலும் கோடம்பாக்கப் போலிப் பிரமாண்டத்துக்கு நிகராய் நகர்வது கண்கூடு!

தமிழ் வாழ்வு , அவ் மொழிசார்ந்த வாழ்வு எவருக்கு ? "தமிழ் இன" விடுதலை , தேசம் என்பதெல்லாம் எவருக்கானது?

புலத்து வாழ்வானது அந்தத்தத் தேசத்து மொழிகளோடு சங்கமித்த பின் நினைவுக் கோலமாக "மாதிரி மனிதர்களை" உருவாக்கி வைப்பதற்கும் , சடங்குகள் செய்வதற்கும் கோடம்பாக்கப் பிரமாண்ட மாதிரிகள் மிகப் பெரும் கருத்தியல் மனதை புலத்து மனிதர்களுக்கு ஏற்படுத்தி விட்டது.

எனக்குத் தெரிந்தவொரு பெண்மணி கூறினார் : தற்போது, ஒரு விழாவுக்கு வேண்டிய புதிய சாறியை ஒரு முறை அணிந்துவிட்டு நாம் அதை எறிந்து விடுவோம். அடுத்த முறை, அதைக் கட்ட முடியாது. புதிய டிசையின் வரும். அதைத்தாம் கட்ட வேண்டும். " எனக்கு, இது முற்றிலும் புதிய விடையமாத் தெரிந்தது. பின்புதாம் நம் போலிப் பிரமாண்டத்தின் கோடம்பாக்கச் சூழ்ச்சி புரிந்தது. இதுதாம் இன்றைய யதார்த்தம்.

போராட்டம் , விடுதலை என்பதெல்லாம் வந்தடைந்த கோலமும் இப்படித்தாம் பிழைப்புவாதமாச்சு.

"தமிழீழ விடுதலை" சொல்லி , இலட்சக் கணக்கான பிணங்களாக மக்களை ஆக்கிவைத்து நிதி சேகரித்தவர்கள் எல்லோரும் தற்போது புலத்தில் பெரும் வணிகக் குடும்பங்களாக வலம் வருகிறார்கள். பிரமாண்ட மனிதர்களாகத் தம்மை உருவாக்கி வைத்து, நம்மை மனோவியல் ரீதியாகத் தாக்கி அழிக்கின்றார்கள்! தமக்கு முன் நம்மைச் செல்லாக் காசாக்கியும் விட்டார்கள். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இவர்கள் , ஒரு தோற்பையோடு விமானம் ஏறி, அகதியாகப் பிழைக்கப்பட்ட வாழ்வு மக்களிடம் கொள்ளையிட்ட பணத்தின் மூலம் தொடைத்தெறியப்பட்டுப் பிரமாண்ட போலி மனிதர்களை -தனிநபர்வாத உச்சக் கொம்பர்களை ; கொம்பிகளை உருவாக்கியதுள் தமிழீழவிடுதலைப் போராட்டம் முக்கிய பங்கு வகித்துள்ளது.அதையொட்டி இன்றைய இரண்டாந் தலைமுறை மகிழ்ந்துவிடலாம்! 
அவர்கள் , கனடாவில் வைத்தியக்கும் நிதியானது மட்டும் பல இலட்சம் கோடி அமெரிக்க டொலாராக இருக்கிறது. 

இவையெல்லாம் அப்பாவிகளிடம் "தமிழீழ விடுதலை" சொல்லித் தட்டிப்பறித்தவை என்பதுள் சந்தேகமில்லை! 

இவர்களது விளம்பரப் பிரமாண்டங்கள் உருவாக்கும் கருத்தியலும் ( Tamil Entertainment Television (TET) )அதுசார்ந்த மனித மாதிரிகளும் மிக அற்பத்தனமான மனிதர்களை நமக்குள் உலாவிட்டுள்ளது.

"போராட்டம் -விடுதலை " என்பதெல்லாம் இந்த மனித மாதிரிகளுக்கு அவசியமற்றது. இவர்களது நாவில் போலித்தனமாக உறவாடும் இந்தக் கோசங்களைக் கடந்து, நிலத்தில் மனிதர்கள் இலங்கைத் தேசத்தின் வாழ்வுக்குள் நுழைந்தே தீருவார்கள்.

அவர்கள் , இலங்கையின் இறைமைக்குட்பட்ட வாழ்வையும் , அத்தேசத்துக்குள் பொருண்மிய வாழ்வுக்கானவொரு பொது மொழியாகச் சிங்களத்தையும் பேசித் தம்மை இலங்கையராக்கியே தீருவார்கள். இதுதாம் 21 ஆம் நூற்றாண்டின் பொருளாதாரத் தேவையும் கூட.

பேர்லின் (Berlin) கணேச மூர்த்தி அவர்கள் கூறியமாதிரி :" இந்தியா, அவுஸ்திரேலியா, கனடா முதல் மேற்கு ஐரோப்பிய நாடுகள் முழுவதும் குடியேறிகளாகச் சென்ற தமிழ்தேசியவாதிகள் ,அந்த நாட்டுப் "பிரசைகளாக" ஆகிவிட்ட கொழுப்பெடுத்த யாழ்.மத்தியதர வர்க்கத் தமிழர்கள் , சோத்துக்கு வழி தேடக் கிழக்கில் குடியேறிய ஏழைச் சிங்கள மக்களை தமிழர்களின் நிலத்தைப் பறிக்க வந்தவர்களாகக் கற்பித்தனர். புகலிடத் தமிழர்கள் தாம் குடியேறிய நாடுகளில் ஐரோப்பியர், ஆபிரிக்கர், ஆசியர், லத்தீன் அமெரிக்கர் என்று உலகெல்லாம் உள்ள முன் பின் கேட்டுக் கண்டறியாத மக்களுடன் எல்லாம் வாழ்வார்கள். பல்லினக் கலாச்சாரத்துக்கு ஆட்படுவார்கள் ஆனால் , இலங்கையுள் சொந்த நாட்டுக்குள் மட்டும் சிங்களவர்களுடன் வாழ மறுக்கின்றார்கள். தொட்டால் , பட்டால் தீட்டு என்கிறார்கள். இந்த அநாகரீகர்களை மனித நாகரீகம் திருத்தியெடுக்க இன்னமும் எத்தனை சகாப்தங்கள் தேவை? ; "நாம் இலங்கையர் " என்று சிந்திப்பது என்ன , அத்தனை பெரிய துரோகமா? தமிழர், முஸ்லிம், சிங்களவர், பறங்கியர், வேடர் என்று எல்லா மக்களும் இலங்கையர் என்ற கூட்டுள் ஐக்கியப்படாமல் எப்படி சோசலிசம் வரும்? " 

நிலத்து மக்கள் இலங்கைத் தேசியவின உருவாக்கத்துக் கேற்ப வாழ்வைத் தெரிவார்கள் -இனிப் போராட்டம் , விடுதலை என்பது இலங்கையில் தொழிலாளரது உரிமை சார்ந்த பொருளாதார வாதமாகவே இருக்கும்.
தமிழ்த் தேசியம் , விடுதலை , சுயநிர்ணயம் அனைத்துக்கும் அவர்கள் Good Bye சொல்லிச் சிங்களச் சமுதாயத்தோடு கலந்து -இசைந்து ,இணைந்து இலங்கைத் தேசிய இனமாகவும் , பொதுமொழியான சிங்களத்தை முதன்மை மொழியாகவும் ஏற்றுக் கொள்வர். இது. ஒரு வகையில் சரியானதும் , நேர்மையானதும் -அவசியமானதுங்கூட இந்தப் புலத்துத் "தமிழர்கள்" தம் போலிப் பிரமாண்டத்தின் முன்!

ப.வி.ஶ்ரீரங்கன்
16.05.2016

www.ilankainet.com

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 இலங்கையர் என்ற கூட்டுள் ஐக்கியப்படாமல் எப்படி சோசலிசம் வரும்? "  

உவையள் 60 வ‌ருட‌மாய் சோசலிசம் பேசி கிழிச்சிட்டினம் தொடர்ந்து என்னத்தை கிழிக்க போயினம் என்று பார்க்கத்தானே போறம்.உவையளுக்கு தாடி வளர்க்கிற போராட்டம்தான் சரி.
 
நிலத்து மக்கள் இலங்கைத் தேசியவின உருவாக்கத்துக் கேற்ப வாழ்வைத் தெரிவார்கள் -இனிப் போராட்டம் , விடுதலை என்பது இலங்கையில் தொழிலாளரது உரிமை சார்ந்த பொருளாதார வாதமாகவே இருக்கும். 

பக்கத்தில இந்தியாவும் அவர்களது கூட்டாளிகளான தமிழ் ,சிங்கள அதிகார வர்க்கமும் இருக்கு என்பதை இந்த சோசலிச சமதர்ம புருடாக்கள் மறந்திடியினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

நிலத்து மக்கள் இலங்கைத் தேசியவின உருவாக்கத்துக் கேற்ப வாழ்வைத் தெரிவார்கள் -இனிப் போராட்டம் , விடுதலை என்பது இலங்கையில் தொழிலாளரது உரிமை சார்ந்த பொருளாதார வாதமாகவே இருக்கும்.
தமிழ்த் தேசியம் , விடுதலை , சுயநிர்ணயம் அனைத்துக்கும் அவர்கள் Good Bye சொல்லிச் சிங்களச் சமுதாயத்தோடு கலந்து -இசைந்து ,இணைந்து இலங்கைத் தேசிய இனமாகவும் , பொதுமொழியான சிங்களத்தை முதன்மை மொழியாகவும் ஏற்றுக் கொள்வர். இது. ஒரு வகையில் சரியானதும் , நேர்மையானதும் -அவசியமானதுங்கூட இந்தப் புலத்துத் "தமிழர்கள்" தம் போலிப் பிரமாண்டத்தின் முன்!

ப.வி.ஶ்ரீரங்கன்
16.05.2016

www.ilankainet.com

ஈழ விடுதலைப் போராட்டம் இன்று பிழையானவர்களின் கைகளில் தொங்கி நிற்பது ஏதோவகையில் உண்மைதான்.
கூட்டமைப்பாகட்டும் முன்னணியாகட்டும் அல்லது நிலத்தில் இருக்கும் வேறு எந்தக் சக்தியும் சரியான பாதையில் மக்களை வழி நடத்தத் தவறியுள்ளனர்.இன்னும் தவறிழைத்துக் கொண்டெ உள்ளனர்.

புலத்தில் மக்களிடம் சேர்த்த நிதியை வைத்து சில பிரமாண்டங்கள் உருவாகியிருப்பதும் உண்மைதான்.

அதற்காக அவர்களின் மேலுள்ள வெறுப்பினால் ஈழத்தமிழர்களைச் சிங்களவர்களுடன் கலந்து வாழச் சொல்வதும் பிழையான வாதம்.
ஈழத் தமிழர்கள் காலம் காலமாக சிங்களவர்களுடன் கலந்தே வாழ்ந்தார்கள். சிங்களம் தான் தமிழர்களை அழித்து இலங்கை முழுவதையும் தான் ஏப்பம் விட நினைத்தது.
சிங்களவர்களுடன் ஈழத்தமிழர்கள் கலந்து இணைந்து வாழ்வதற்குச் சிங்களம் இன்னும் பல படிகள் கீழிறங்கி வரவேண்டும்.

Link to comment
Share on other sites

3 hours ago, colomban said:

தமிழ்த் தேசியம் , விடுதலை , சுயநிர்ணயம் அனைத்துக்கும் அவர்கள் Good Bye சொல்லிச் சிங்களச் சமுதாயத்தோடு கலந்து -இசைந்து ,இணைந்து இலங்கைத் தேசிய இனமாகவும் , பொதுமொழியான சிங்களத்தை முதன்மை மொழியாகவும் ஏற்றுக் கொள்வர். இது. ஒரு வகையில் சரியானதும் , நேர்மையானதும் -அவசியமானதுங்கூட 

தோற்றுவிட்ட சோஷலிசத்திற்கு ஒரு  - Good Bye!
தோற்றுவிட்ட தமிழ் ஈழத்திற்கு ஒரு  - Good Bye!
தோற்றுவிட்ட சர்வதேச விசாரணைக்கு ஒரு  - Good Bye!

இதற்குப் பங்காற்றிய தமிழர்களுக்கு நன்றி?????

வாருங்கள் தோழர்களே!  நமோ, நமோ மாதா பாடுவோம்!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியம்.. விடுதலை.. சுயநிர்ணய உரிமை.. தமிழீழம்..  இனப்படுகொலை.. போர்க்குற்ற விசாரணை.. புலி.. புலிக்கொடி.. எல்லாம் சில பலரின் அரசியல்.. மற்றும் அகதி அந்தஸ்து... பொருண்மியம்.. பிராந்திய நலன்.. சர்வதேச நலன் சார்ந்த உச்சரிப்பில் இருந்து.. தேவைகள் நிறைவடைந்து விட்டன என்ற கருதலின் பெயரில் வியாபாரிகளால்... ஒட்டுக்குழுக்களால்.. பிராந்திய சக்திகளால்.. உலக வல்லாதிக்க சக்திகளால்.. விடுபட்டுக் கொண்டிருக்கிறதே தவிர.. அவற்றின் யதார்த்த இருப்பு என்பது தமிழ் மக்களின் மனங்களில் நிலங்களில்.. புதைந்தே கிடக்கிறது. எவர் இவற்றை உச்சரிக்காமல் விடுகினமோ.. அவர்கள் இவற்றிற்காக எப்போதும் நிஜமாகப் போராடியதும் இல்லை.. போராட உதவியதும் இல்லை. அதுவும் யதார்த்தமாகும். வியாபாரத்தில் இவை எல்லாம் சகஜம். tw_blush:

Link to comment
Share on other sites

9 hours ago, nedukkalapoovan said:

தமிழ் தேசியம்.. விடுதலை.. சுயநிர்ணய உரிமை.. தமிழீழம்..  .......................... அவற்றின் யதார்த்த இருப்பு என்பது தமிழ் மக்களின் மனங்களில் நிலங்களில்.. புதைந்தே கிடக்கிறது. 

கால், கை முறிந்த அங்கவீனர்களின் மனங்களில் ..........

யாரும் திரும்பிப் பார்க்காத விதவைகளின் மனங்களில் ..........

அனாதைகளின் மனங்களில்.............

யாரும் தொழில் கூட வழங்க வெறுக்கும் புலிப் போராளிகளின் மனங்களில்..............

வீடு, வாசல்களை இழந்த மனங்களில் எல்லாம்..........

-  தமிழ்த் தேசியத்தின் யதார்த்த இருப்பு (???)  பசுமையாக எப்போதும் இருக்கும் - ஓர் அவலச் சின்னமாக!

இதுதான் யதார்த்தம்.

Link to comment
Share on other sites

16 hours ago, பெரியார் said:

தோற்றுவிட்ட சர்வதேச விசாரணைக்கு ஒரு  - Good Bye!

இதற்குப் பங்காற்றிய தமிழர்களுக்கு நன்றி?????

வாருங்கள் தோழர்களே!  நமோ, நமோ மாதா பாடுவோம்!
 
தோற்றுவிட்ட சர்வதேச விசாரணைக்கு ஒரு  - Good Bye!

வெற்றி பெற்ற குற்றவாளிகளுக்கு ஒரு

- Welcome 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெரியார் said:

கால், கை முறிந்த அங்கவீனர்களின் மனங்களில் ..........

யாரும் திரும்பிப் பார்க்காத விதவைகளின் மனங்களில் ..........

அனாதைகளின் மனங்களில்.............

யாரும் தொழில் கூட வழங்க வெறுக்கும் புலிப் போராளிகளின் மனங்களில்..............

வீடு, வாசல்களை இழந்த மனங்களில் எல்லாம்..........

-  தமிழ்த் தேசியத்தின் யதார்த்த இருப்பு (???)  பசுமையாக எப்போதும் இருக்கும் - ஓர் அவலச் சின்னமாக!

இதுதான் யதார்த்தம்.

கால் கை முறித்தவர் மனங்களோடு...

விதவைகள் ஆக்கியவர் மனங்களோடு...

அனாதைகள்.. அகதிகள் ஆக்கியோர் மனங்களோடு...

யாரும் தொழில் வழங்க முடியாத அளவுக்கு அச்சுறுத்தலை நிலைநிறுத்தி நிற்கும் மனங்களோடு...

வீடு வாசல்களை இடித்துத் தகர்த்து ஆக்கிரமித்தோர் மனங்களோடு...

நல்லிணக்கமும்.. ஐக்கியமும்.. சக வாழ்வும்.. வரும் என்று கனவு காண்பவர்கள் மனங்களோடு...

உள்ளவர் மனங்களில்.. 

தமிழர் மனங்களில்.. புதைந்துள்ள தணியாத தாயகத் தாகங்களும்.. உரிமை அங்கலாய்ப்புக்களும்.. புரியப்பட வாய்ப்பில்லை.

இதுதான் யதார்த்தம் அங்கு.

ஒட்டாத இரு இனங்களை எதற்கு வலிந்து ஒட்டிவைக்க நினைக்கிறார்களோ...

ஒட்டாத இரு மனங்களை இலகுவில் விவாகரத்தில் பிரிக்கலாம்.. சந்தோசமா வாழ வழி இருக்கு..

ஆனால் ஒட்டாத மனங்களோடு உள்ள ஒரு இனத்துக்கு பிரிந்து போகும் உரிமை கூட இல்லை இந்த உலகில்.. அவ்வளவு அடாத்தும் சொந்த வியாபாரச் செருக்கும்.. இதுதான் யதார்த்தம்.. இத்தனைக்கும். tw_blush:

Link to comment
Share on other sites

10 hours ago, nedukkalapoovan said:

தமிழர் மனங்களில்.. புதைந்துள்ள தணியாத தாயகத் தாகங்களும்.. உரிமை அங்கலாய்ப்புக்களும்.. புரியப்பட வாய்ப்பில்லை.

தமிழர் மனங்களில் தற்போது புதைந்துள்ள தணியாத தாகம்,  ஒருமித்த சிறி லங்காவில் சிங்கள, முஸ்லிம் மக்களுடன் இணைந்து வாழ்வதுதான்.

தனித் தமிழ் தாயக உணர்வுகள், இலங்கைத் தமிழரிடத்தில் சிறிதும் இல்லை.

அவைகளைத் தூசி துடைப்பது, தமிழ் அரசியல்வாதிகளின் தேர்தல் ஓட்டுக்காக.

அவ்வளவுதான்.  தேர்தல் முடிந்தபின் எல்லாம் அம்போ.

11 hours ago, nedukkalapoovan said:

ஆனால் ஒட்டாத மனங்களோடு உள்ள ஒரு இனத்துக்கு பிரிந்து போகும் உரிமை கூட இல்லை இந்த உலகில்.. 

ஒட்டாத மனம் இருப்பதனால்தான், நீங்கள் ஸ்ரீ லங்காவை விட்டு உரிமையோடு வெளியேறிவிட்டீர்கள்.

12 hours ago, trinco said:

தோற்றுவிட்ட சர்வதேச விசாரணைக்கு ஒரு  - Good Bye!

வெற்றி பெற்ற குற்றவாளிகளுக்கு ஒரு

- Welcome 

குற்றவாளிகள் பெற்ற வெற்றிக்கு, தமிழ்த் தலைவர்களின் பங்களிப்பு   -   பலே பலே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெரியார் said:

தமிழர் மனங்களில் தற்போது புதைந்துள்ள தணியாத தாகம்,  ஒருமித்த சிறி லங்காவில் சிங்கள, முஸ்லிம் மக்களுடன் இணைந்து வாழ்வதுதான்.

தனித் தமிழ் தாயக உணர்வுகள், இலங்கைத் தமிழரிடத்தில் சிறிதும் இல்லை.

அப்படிங்களாண்ணே.. இதை நீங்கள் சொல்லக் கூடாது. மக்களே சொல்லட்டும்.. தமிழீழம் தேவையா.. இல்லையா என்று அதே மக்களிடம் உலகம் போற்றும் சனநாயக வழியில் ஐநா கண்காணிப்பின் கீழ் ஒரு தேர்தலை நடத்திக் கருத்துக் கேட்டால் போச்சு. ஆளாளுக்கு மக்கள் சார்பா கருத்துச் சொல்லுறீங்களே தவிர மக்கள் கருத்துச் சொல்ல வாய்ப்பளிக்கிறீங்களே இல்லையே. முதலில் அதைச் செய்யுங்கண்ணே. அதுதான் சனநாயகமாகும். நீதியான நடைமுறையும் ஆகும். அதுக்கேன் தயங்குறீங்க.. இவ்வளவு உறுதியா எல்லாரும் ஒன்றுக்கிருக்கணுன்னு சொல்லிக்கிற ஆக்கள். tw_blush:

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

நீங்களே ஐ.நா விடம் பேசி, முடிவு எடுங்கள் தேர்தலுக்கு.

தமிழீழம் தேவையா இல்லையா என்று - இலங்கை மக்களிடம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் கேட்பது சொறீலங்கா மக்கள் அல்ல. தமிழ் மக்கள். அவர்களிடம் தான் கருத்துக்கணிப்பு நடத்தனும்.. தமிழீழம் தேவையா இல்லையான்னு. சிங்களவனிடம் எதற்கு கருத்துக்கணிப்பு. அவன்ற நாட்டையா கேட்கினம். 

ஸ்காட்லாந்து பிரிவதை தீர்மானிப்பது இங்கிலாந்து மக்கள் அல்ல.. ஸ்காட்லாந்து மக்களே. அதேபோல் கியுபெக் பிரிவதை தீர்மானிப்பது கியுபெக் மக்களே அன்றி ஒட்டுமொத்த கனடியரும் அல்ல.

தமிழீழத்தை தமிழ் மக்கள் கேட்கல்லை என்று சொல்லுறதவை தான் தேர்தலை நடத்தி ஐநாவை கூப்பிட்டு கண்காணிப்பு வைச்சு.. அவை சொல்லுறதை தான் மக்கள் பிரதிபலிக்கினமா என்று சொல்லனும். அதைவிட்டிட்டு.. தமிழ் மக்கள் தமிழீழத்தை கைவிட்டிட்டு.. சிங்களவனோடு முஸ்லீம்களோடு ஒண்டுக்கு இருக்கனும்.. என்பது பித்தலாட்டம். பொய். கொத்தடிமைத்தனமாக்கலாகும். அது 21ம் நூற்றாண்டில் எடுபடாது.

காஷ்மீரிலும் அது நிகழும் என்று தான்ஹிந்தியா என்ற அரக்காடும்.. ஐநா தலையீட்டை மறுதழித்து ஒளித்து விளையாடி வருகிறது... போலிச் சனநாயக வேசம் பூசிக் கொண்டு. இவர்களின் முகத்திரை கிழியனுன்னா.. தமிழீழத்துக்கான தேர்தல் நடத்தி தமிழ் மக்களிடம் கூடியது தமிழ் பேசும் மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும். tw_blush:

Link to comment
Share on other sites

2 hours ago, nedukkalapoovan said:

தமிழீழம் கேட்பது சொறீலங்கா மக்கள் அல்ல. தமிழ் மக்கள். அவர்களிடம் தான் கருத்துக்கணிப்பு நடத்தனும்.. தமிழீழம் தேவையா இல்லையான்னு. சிங்களவனிடம் எதற்கு கருத்துக்கணிப்பு. அவன்ற நாட்டையா கேட்கினம். 

சிறி லங்கா என்பது சிங்கள, தமிழ், முஸ்லிம்களுக்குச் சொந்தமானது.

கருத்துக் கணிப்பு நடக்கும்போது, எல்லாரினதும் அபிலாசைகளும் வெளிப்படுத்தப் பட வேண்டும்.

இதுதான் ஜனநாயகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெரியார் said:

சிறி லங்கா என்பது சிங்கள, தமிழ், முஸ்லிம்களுக்குச் சொந்தமானது.

கருத்துக் கணிப்பு நடக்கும்போது, எல்லாரினதும் அபிலாசைகளும் வெளிப்படுத்தப் பட வேண்டும்.

இதுதான் ஜனநாயகம்.

வடக்குக் கிழக்கு..தமிழ் மக்கள் சொறீலங்கா மொத்தத்திலும் நாடு கேட்கவில்லை. தமிழ் மக்கள் கேட்பது தங்களின் பாரம்பரிய நிலத்தில் தங்களின் ஆட்சி உரிமை. நான் என் வீட்டில் வாழ்வதற்கான உரிமையை பக்கத்து வீட்டுக்காரனிடம் அனுமதி கேட்டு பெற வேண்டும் என்பது உலகில் எங்கும் சனநாயகம் என்று கொள்ளப்படுவதில்லை. தமிழ் மக்கள் தான் தீர்மானிக்கனும்.. தங்களைக் கொல்பவர்களோடு கூடி வாழ்வதா.. அல்லது தன் தேசத்தோடு தான் பிரிந்து செல்வதா என்பதை.

சிங்களவன்.. முஸ்லீம் அதனை தமிழ் மக்களுக்கு சொல்ல முடியாது. சொல்ல அவைக்கு அருகதையும் இல்லை. 

உலகில் நடந்த எல்லா உரிமைப்போராட்டங்களின் போதும்.. பொது நடைமுறை என்பது பாதிக்கப்பட்ட பாதிக்கப்படும் உரிமை இழந்த மக்களிடம் கருத்துக் கேட்பதே தவிர ஆட்சிப் பீடத்தில் இருக்கும் மக்களிடம் அல்ல. அதுதான் சனநாயகம். 

எனி சனநாயகம் என்ன என்று படிப்பிக்கனும் போல.. அந்தளவுக்கு சிங்கள விசுவாசம் விசம் தலைக்கேறி இருக்கு சிலருக்கு. tw_blush:

Link to comment
Share on other sites

4 hours ago, nedukkalapoovan said:

வடக்குக் கிழக்கு..தமிழ் மக்கள் சொறீலங்கா மொத்தத்திலும் நாடு கேட்கவில்லை. 

கேட்ட தமிழ் ஈழம் என்னவாயிற்று!

தோற்றுப் போனபின், நாடு கேட்கவில்லை???  ஹி ஹி

சிறி லங்கா என்பது சிங்கள, தமிழ், முஸ்லிம்களுக்குச் சொந்தமானது.

கருத்துக் கணிப்பு நடக்கும்போது, எல்லாரினதும் அபிலாசைகளும் வெளிப்படுத்தப் பட வேண்டும்.

இதுதான் ஜனநாயகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, nedukkalapoovan said:

தமிழீழம் கேட்பது சொறீலங்கா மக்கள் அல்ல. தமிழ் மக்கள். அவர்களிடம் தான் கருத்துக்கணிப்பு நடத்தனும்.. தமிழீழம் தேவையா இல்லையான்னு. சிங்களவனிடம் எதற்கு கருத்துக்கணிப்பு. அவன்ற நாட்டையா கேட்கினம். 

ஸ்காட்லாந்து பிரிவதை தீர்மானிப்பது இங்கிலாந்து மக்கள் அல்ல.. ஸ்காட்லாந்து மக்களே. அதேபோல் கியுபெக் பிரிவதை தீர்மானிப்பது கியுபெக் மக்களே அன்றி ஒட்டுமொத்த கனடியரும் அல்ல.

தமிழீழத்தை தமிழ் மக்கள் கேட்கல்லை என்று சொல்லுறதவை தான் தேர்தலை நடத்தி ஐநாவை கூப்பிட்டு கண்காணிப்பு வைச்சு.. அவை சொல்லுறதை தான் மக்கள் பிரதிபலிக்கினமா என்று சொல்லனும். அதைவிட்டிட்டு.. தமிழ் மக்கள் தமிழீழத்தை கைவிட்டிட்டு.. சிங்களவனோடு முஸ்லீம்களோடு ஒண்டுக்கு இருக்கனும்.. என்பது பித்தலாட்டம். பொய். கொத்தடிமைத்தனமாக்கலாகும். அது 21ம் நூற்றாண்டில் எடுபடாது.

காஷ்மீரிலும் அது நிகழும் என்று தான்ஹிந்தியா என்ற அரக்காடும்.. ஐநா தலையீட்டை மறுதழித்து ஒளித்து விளையாடி வருகிறது... போலிச் சனநாயக வேசம் பூசிக் கொண்டு. இவர்களின் முகத்திரை கிழியனுன்னா.. தமிழீழத்துக்கான தேர்தல் நடத்தி தமிழ் மக்களிடம் கூடியது தமிழ் பேசும் மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும். tw_blush:

தேர்தல் ஒன்று நடத்த உலகம் முன்வந்திருந்தால் அதை புலிகளும் எற்றிருக்கமாட்டார்கள் அரசும் ஏற்றிருக்காது.மக்கள் விசித்திரமானவர்கள் என்று இருபகுதிக்குமே தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ ஊ என்றால் ...................
கூட பிறந்த சகோதர்களை விட 
காயபட்ட முன்னாள் போராளிகளின் நிலை கண்டு 
அழுகுகிறவன் யார் என்று பார்த்தால் .

சிங்களவனுடன் கூடி நின்று காட்டி கொடுத்தவன்தான்.

30 வருடமா சிங்களவனின் காக்குசுக்குள் வாழ்ந்த 
பிரதி பலனோ என்னமோ 

என்ன நாற்றம் என்றே இவங்களுக்கு மறந்து போச்சு !

"நக்குற நாய்க்கு செக்கு என்ன சிவலிங்கம் என்ன?"
எனும் நிலையும் கடந்து போச்சு. 

----------------------------------------------------------------------------------------------------------------------------
 இதை தமிழர்கள் மிக சாதரணமாகவே பார்கிறார்கள் 
நிழலியால் கூட இது புரிய படுவதில்லை 
எந்த புத்தகம் என்றாலும் வாங்கி படிக்கும் நிலையில் இருக்கும் 
கிருபன் கூட இதன் தாக்கம் புரிய கூடியவர் அல்ல 
ஒரு இனத்தை அழிக்க ஆயுத போர் என்பது ஒரு சிறு பகுதி மட்டுமே 
மனோதத்துவ போர் தான் மிக முக்கிய பங்கு ஆற்றுவது.
இரண்டாம் உலக யுத்த வராலாறு எப்படி இன்று பரப்ப படுகிறது 
என்பது யாரும் கண்டுகொள்வதில்லை.
இதன் பின்னால் ஒரு பாரிய மனோதத்துவ போர் இருப்பதை யாரும் அறிவதில்லை.

நிலவில் தரை இறங்கியதாக அமெரிக்கா காட்டிய வீடியோதான் 
அவர்கள் இறங்கவில்லை என்பதற்கு ஆதாரம். ஆனால் உலகில் 
எத்தனை பேர்கள் அதை நம்புகிறார்கள் ?எப்படி நம்ப வைக்கபட்டார்கள் ? 
வீடியோவில் இரண்டு தடவை காற்றில் கொடி ஆடுகிறது.
தவிர தொலைத்தொடர்பு என்பது 1972இல்தான் ஒரு அமெரிக்க கொம்பனி 
செயல் வடிவில் வெற்றி பெற்று பாராட்டு பெறுகிறது 
ஆம்ஸ்ட்ராங் இறங்கியது 1969.

உப்பு சத்திய கிரகத்துடன் காந்தியை தூக்கி உள்ளுக்குள் போட்டவுடன் 
காந்தி 30 மன்னிப்பு கடிதம் எழுதுகிறார் உள்ள பிரிடிஸ் காரர்கள் எல்லோருக்கும் 
அவர்களுக்கு தெரிந்துவிடுகிறது. சுத்த சுயநலவாதி  இவர்தான் சரியான ஆள் எமக்கு என்று. 
அன்றில் இருந்து காந்தி செயற்பட்டது ஒரு பிரிட்ஸ் அஜென்ட்டாக.
தென் ஆப்ரிக்காவில் இருந்து வந்த காந்தியை இதுவரைக்கும் தூக்கியது 
ஜின்னாவும் அவரது சகோதரியும் காரணம் ஏற்றகனவே இருந்தவர்கள் 
இந்துவதாத்தை முன்னிறுத்தியவர்கள் அதனால் மனமுடைந்த ஜின்னா 
காந்தி பொது நிலையில் இருப்பார் என்றே நம்புகிறார். பின்பு காந்தியும் 
அதே சேற்றில் வீழ்ந்து விடுகிறார் என்பதை ஜின்னா போடும் மேடைகளில் 
நின்று பேசும் காந்தியின் பேச்சில் இருந்து புரிந்து கொள்கிறார். 
பகவத்சிங்கை தூக்கில் போடுவது என்பது காந்தியின் ஒப்புதலின் பின்பே 
நடக்கிறது இது எல்லா பத்திரிகையிலும் வெளி வருகிறது.
பிரிடிஸ் காரன் சைகொலோஜி என்பதை எவ்வாறு செயல் படுத்துகிறான் 
என்பதை அந்த விடயத்தில் கொஞ்சம் கவனாமாக பார்த்தல் புரியும். 
சொந்த நாட்டுக்கே வில்லங்கம் வந்த பின்பு இதியாவை விட்டு வெளியேற வேண்டிய தேவை 
பிரிடிஸ் இற்கு வந்துவிடுகிறது.
முக்கிய காரணம் பிரிடிஸ் இந்தியாவை ஆண்டது என்பது 
இந்தியாவில் இல்லாத துப்பாக்கியை காட்டியே. இப்போ இந்திய தேசிய இராணுவம் 
அதே துப்பாக்கியை பெறுகிறது அணிசேரா நாடுகள் இன்னமும் அள்ளிகொடுக்க 
தயாராகவும் இருக்கிறது. இந்த நிலையில் இந்தியா என்ற பாரிய பிரதேசத்தில் 
அந்நிய ஆதிக்கம் சாத்தியம் இல்லாதது. அதை சாத்திய படுத்துவது என்றால் 
பாரிய இராணுவம் தேவை. பிரிடிஸ் வெளியேறுகிறது. 
கந்தியால்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்பது என்பதை 
காங்கிரஸ் கட்சிகூட இன்று பேசுவது இல்லை 
பிரிடிஸ் இன்னமும் ஓயவில்லை மனோதத்துவ போர் என்பது அதுதான்.
இது இரண்டு மூன்று நாளில் சாத்தியம் ஆவது ஒன்று இல்லை.

யாழ் களத்தில் இருந்த முக்கிய புலி செய்தியாளர்கள்
இப்போ யாழ் பக்கம் வருவதில்லை ஆனால் இன்னமும் எழுதிக்கொண்டுதான் 
இருக்கிறார்கள் ஏன் அவர்கள் யாழில் எதை இணைப்பதில்லை ??
இங்கு திருப்பி கேள்வி கேட்பார்கள் ...... ஆதராம் கேட்பார்கள் ?
பிரபாகரன் சர்வதிகாரி எதையும் விட்டுகொடாதவர் என்ற 
"ப்ரோபகண்டா" என்பதை இந்தியா 1984இலேயே தொடங்கி விடுகிறது 
ஆலாலசுந்தரம்  தர்மலிங்கம் போறவர்களை டெலோ மூலம் 
"றோ"தான் போட்டுகொள்கிறது பழியை புலிமூலம் போடுகிறது.
டேலோதான் போட்டது என்பது பின்பு பகிரங்கம் ஆனாலும் 
விக்கிபீடியா  இலங்கை இராணுவ இந்திய அரசு நடத்தும் 
தென் ஆசிய பயங்கரவாத தடுப்பு வெப்சைட் பூர இது பிராபகரனின் பெயரில்தான் 
இருக்கிறது.
இனி இந்த கொலைகளை யார் செய்தார் என்பது ஈழதமிழருக்கு தேவை இல்லாத ஒன்று 
ஆனால் ஈழ தமிழர் விடயத்தில் புதிதாக யாராவது எதையாவது அறிய முயற்சி செய்தால் 
எங்கு போவார்கள் ? அங்கெல்லாம் இது இருக்கிறது.
தமிழர் ஓய்ந்துவிட்டார் ..... அவர்கள் ஓயாபோவது இல்லை.

முன்னாள் புலிகள் பற்றி அதி தீவிரமாக யார் அழுகிறான் 
என்பது இப்போது மிக சாதரணமான ஒரு விடயமாகவே இப்போது தெரியும் 
என்னோடு என்னை விரும்பாத ஒருவன் தொடர்பை ஏற்படுத்த எண்ணினால் ?
சமூகவலை தளத்தில் ....
இது இலகுவான சாத்தியமான விடயம் இன்றைய நாளில் ??
ஈழ தமிழருக்குள் ஒருவன் இலகுவாக உட்புக வேண்டும் என்றால் 
எது மிகவும் சாத்தியமான ஒன்று ?
அல்லலூயா ஜெகோவா எல்லாம்  எங்கே இருந்து ஊற்று எடுத்தது ?
இந்துக்கள் இவர்கள் மதம் மாற்றுகிறார்கள் என்று மட்டுமே கோப படுகிறார்கள்.
எங்களின் வீட்டிற்குள் இனொரு கண்டத்தில் இருந்து ஒருவன் 
வந்து படுத்திருந்து எல்லாவற்றையும் பார்க்கிறான் என்பதை 
யாரும் புரிந்துகொள்வதில்லை. 

"ப்ரோபகண்டா" என்பது மிக பெருத்த ஆயுதம் 
தமிழனை அழிக்க மிகவும் பொருத்தமானதும் கூட 
காரணம்.நான்தான் அதி மேதாவி ...அறிவாளி... சாதி கூடியவன் 
என்ற செருக்கு நாட்டு பற்றை விட தமிழனுக்கு அதிகம். 
அதைவிட சுத்த சுயநல வாதி!

சிங்கள இந்திய பார்ப்பானிய அரசுகள்  இன்னும் 20 வருடத்தில் ஒரு அதிகாரமும் 
ஒரு சிறு குழும கூட்டமாக இலங்கையில் தமிழனை மாற்றிவிடும்.
சீமான் தோற்றுபோனான் என்று கைதட்டுபோது நான் அறிவாளி 
என்று சிலருக்கு உள் மனதில் தோன்றும். தோற்றது சீமான் இல்லை என்பது 
ஓரளவு அறிவிருந்தால் 20 வருடம் பின்பாவது புரியும்.
சீமான் 2020இலும் தோற்கடிக்கபடுவார் ஒரு அங்குலமும் நகர முடியாது.
அதோடு கட்சியில் இழுபடுபவர்கள் எல்லோரும் ஓடி விடுவார்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அழிக்கப்பட வேண்டியவர்கள்.

புலிகள் செய்தது எல்லாம் பிழை 

எல்லோரும் சாகவேண்டியவர்கள் 

சர்வதேசம் எல்லாம் தெரிந்துதான் அழித்து 

ஆனால் இந்த முன்னாள் புலிகள் மட்டும்.........????
என்ன காரணம் என்பது பலருக்கு புரியாது.
இதை இங்கிருக்கும் சில சில்லறைகள் எழுதுவதால் நான் எழுதவில்லை 
இது கொப்பி பேஸ்ட் வகையறைகள்.
கொப்பி பேஸ்ட் வகையறையும் பின்னலில் கூலி இல்லா 
தொழிலாளி ஆகிவிடுகிறது தனக்கு தெரியாமலே.

முக்கிய காரணம் இந்த இடர் என்பதும் துன்பம் 
என்பதும் தற்போதைய மக்கள் மனதில் ஊடுருவ 
மிகவும் எளிமையானது. தவிர மற்ற நச்சு கருத்துக்களை 
உள்வாங்குகிறோம் என்று சிந்திக்க தோன்றாது 
கஸ்ட்ரபடும் முன்நாள் போராளிகள் மேல் எவளவு 
கவனமாக இருக்கிறார் என்ற எண்ணம் 
ஒரு கவனயினத்தில் எம்மை வைத்திருக்கும்.  

இவர்களின் வாதப்படி 
 முன்னாள் போராளிகள் 
புலிகளோடு தொடர்பில்லாதவர்கள் !
   
இந்த முரண்பாட்டை ...
முரண்பாடு என்று தெரியாமேலே நாம் இலகுவாகுவாக 
உள்வாங்குகிறோம்.
இதுதான் மனோதத்துவாத போர்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26 May 2016 at 10:23 AM, பெரியார் said:

கேட்ட தமிழ் ஈழம் என்னவாயிற்று!

தோற்றுப் போனபின், நாடு கேட்கவில்லை???  ஹி ஹி

சிறி லங்கா என்பது சிங்கள, தமிழ், முஸ்லிம்களுக்குச் சொந்தமானது.

கருத்துக் கணிப்பு நடக்கும்போது, எல்லாரினதும் அபிலாசைகளும் வெளிப்படுத்தப் பட வேண்டும்.

இதுதான் ஜனநாயகம்.

ஐயா பெரியவரே.. உங்கள் சிந்தனைமுறைக்கு பெரியார் என்ற பெயர் சரியாக இல்லை என்று நினைக்கின்றேன். வேறு ஏதாவதாக மாத்தினால் என்ன?

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

ஐயா பெரியவரே.. உங்கள் சிந்தனைமுறைக்கு பெரியார் என்ற பெயர் சரியாக இல்லை என்று நினைக்கின்றேன். வேறு ஏதாவதாக மாத்தினால் என்ன?

நீங்கள் மேற்கோள்காட்டிய எனது பின்னூட்டத்தில் என்ன பிரச்சனை இருக்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெரியார் said:

நீங்கள் மேற்கோள்காட்டிய எனது பின்னூட்டத்தில் என்ன பிரச்சனை இருக்கிறது?

மேற்கோள் தெளிவாகத்தான் உள்ளது. நீங்கள் தமிழர் என்ற அடையாளத்தைத் துறந்து இலங்கையர் என்று மனதார ஏற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வந்துள்ளீர்கள் என்று தெரிகின்றது.

நம் சிறீலங்கா, நமோ நமோ தாயே என்று சொன்னால் சிங்களவர்கள் நம்மை அரவணைத்து ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கின்றீர்கள் போலுள்ளது.

இலங்கைத் தீவு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சொந்தமானது என்று தமிழர்கள் ஏற்றுக் கொள்வதால் தமிழர்களின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. சிங்களைவர்கள்தான் மனதால் உணர்ந்து, தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளைக் கொடுக்கவேண்டும். தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரிக்காமல் இருக்கவேண்டும். ஆனால் முழுத்தீவுமே சிங்களவர்களுக்குச் சொந்தமானது என்ற தம்மதீபக் கொள்கையுடன் ஊறிப்போயிருக்கும் மேலாதிக்க சிந்தனையுள்ள சிங்களவர்கள் தமிழர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாகவே இப்போதும் நடாத்துகின்றார்கள். தருவதை வாங்கிக்கொண்டு பொத்திக்கொண்டு வாழப் பழகவேண்டும் என்பது உங்கள் அறிவுரையாக உள்ளது. இந்த win-lose strategy ஒருபோதும் நிரந்தரத் தீர்வாக இருக்கப்போவதில்லை.

..

மேலும் பெரியாரைப் பற்றி.

பெரியார் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கி சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையைக் களையவும், மூடநம்பிக்கைகளை தகர்க்கவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். பகுத்தறிவாளர்களாக சமூகத்தை உருவாக்க தன் வாழ்வை அர்ப்பணித்தவர்.

பினாமிப் பெரியாராக வந்துள்ள நீங்கள் சுயமரியாதையில்லாமல் அடிமைவாழ்வே உத்தமம் என்று போதிக்கின்றீர்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

மேலும் பெரியாரைப் பற்றி.

பெரியார் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கி சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையைக் களையவும், மூடநம்பிக்கைகளை தகர்க்கவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். பகுத்தறிவாளர்களாக சமூகத்தை உருவாக்க தன் வாழ்வை அர்ப்பணித்தவர்.

பினாமிப் பெரியாராக வந்துள்ள நீங்கள் சுயமரியாதையில்லாமல் அடிமைவாழ்வே உத்தமம் என்று போதிக்கின்றீர்கள்.  

நீங்க வேற..

அவர் குத்த வந்த அவசரத்தில..

வைத்த பெயருக்கு......???

Link to comment
Share on other sites

தேசீயம் சுயநிர்ணயம் விடுதலை என்பதற்கான அவசியம் அல்லது தேவை குறைந்துகொண்டே போகின்றது என்பதே உண்மை. சிங்கள பேரினவாத அழுத்தம் சார்ந்தே இந்த தேவைகள் மேல் எழுந்தது. தவிர போலிகள் என்பது புதுமை கிடையாது. எப்போதும் நாம் போலிகளாகவே வாழ்ந்துவருகின்றோம். நாம் எந்தக்காலத்தில் இனமாக இனத்தேசீயத்தை முதன்மைப்படுத்தியவர்களாக வாழ்ந்திருக்கின்றோம்? சாதி மத பிரதேசவாதங்களையே முன்நிறுத்தி எமக்குள் இரைதேடி பரம்பரையாக வாழ்ந்துவருகின்றோம். இடையில் சிங்களம் கொடுத்த அழுத்தத்தினால் தமிழ்த்தேசீயம் என்று அதை எதிர்க்க முற்பட்டு மூக்க உடைபட்டு குப்புற வீழ்ந்து கிடக்கின்றோம். சிங்களம் தனது ஒடுக்கு முறையை குறைத்துக்கொள்ளும் போது சுயநிர்ணயத்தக்கான அவசியம் அற்றுப்போகும். மேலும் தொழிலாளர் புரட்சி சோசலிசப்புரட்சி என்பதற்கான எந்த அவசியமும் சாதியச் சமூகத்தில் எப்போதும் நடமுறைச் சாதியம் கிடையாது. கனடாவில் போலிகள் உலகம் முழுக்க போராட்ட நிதியை உடமைகளை சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள் வாழ்க்கை முறை ஆச்சரியமானதில்லை. அது இந்த இனத்தின் பாரம்பரிய இயல்பு. முன்பும் பல முறை எழுதியது போல் எமக்கு விடுதலை என்பது எமது இன தேசீய கட்டுமானங்களின் ஒட்டுமொத்த அழிவு சிதைவைக்குறிக்கும். இனத்தில் இருந்து அந்நியப்படும்போதே எமது இனத்தில் இருந்து ஒருவன் சுரண்டலுக்கோ அல்லது ஒருவனுக்கு இரையாவதற்கோ சந்தர்ப்பம் இல்லாமல் போகின்றது. இந்த அடிப்படையிலேயே நாம் இன்று பயணிக்கின்றோம். புலம்பெயர் தேசத்து அடுத்தடுத்த தலைமுறைகள் வேகமாக இதில் பயணிக்கும். அடயளங்களை இழப்பது இனத்தின் நகர்வு சார்ந்து இயற்கையானது அன்றி ஆச்சரியம் இல்லை. மேலும் தவிர்க முடியாமல் நடந்தேறும்.

Link to comment
Share on other sites

4 hours ago, கிருபன் said:

மேற்கோள் தெளிவாகத்தான் உள்ளது. நீங்கள் தமிழர் என்ற அடையாளத்தைத் துறந்து இலங்கையர் என்று மனதார ஏற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வந்துள்ளீர்கள் என்று தெரிகின்றது.

கேட்ட தமிழ் ஈழம் என்னவாயிற்று!

தோற்றுப் போனபின், நாடு கேட்கவில்லை???  ஹி ஹி

சிறி லங்கா என்பது சிங்கள, தமிழ், முஸ்லிம்களுக்குச் சொந்தமானது.

கருத்துக் கணிப்பு நடக்கும்போது, எல்லாரினதும் அபிலாசைகளும் வெளிப்படுத்தப் பட வேண்டும்.

இதுதான் ஜனநாயகம்.

இதுதான் நீங்கள் மேற்கோள் காட்டிய என் பின்னூட்டம்.

நீங்களே தெளிவாக இருக்கிறது என்று சொல்கிறீர்கள்.

அப்புறம் என்ன பிரச்சனை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26.5.2016 at 11:23 AM, பெரியார் said:

சிறி லங்கா என்பது சிங்கள, தமிழ், முஸ்லிம்களுக்குச் சொந்தமானது.

கருத்துக் கணிப்பு நடக்கும்போது, எல்லாரினதும் அபிலாசைகளும் வெளிப்படுத்தப் பட வேண்டும்.

இதுதான் ஜனநாயகம்.

ஒரே சிறிலங்காவுக்குள் எல்லோரும் சேர்ந்து  ஒண்டுக்கிருக்க வேண்டுமென்றால் நீங்கள் சொல்வது சரியே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.