Jump to content

ரிலாக்ஸ்...:)


Recommended Posts

ஓடிக்கொண்டே இருக்கும் இந்த இயந்திர உலகத்தில் இச்சிறு பதிவுகள் /பகிர்வுக்கள் உங்களை ரிலாக்ஸ் பண்ணலாம் மனதை கனக்க பண்ணலாம் அல்லது விழியோரம் கண்ணீர் துளிர்க்கவும் வைக்கலாம் ஏன்  இதழோரம் சிறு புன்னகையையும் தந்து செல்லலாம் :)

1) 

 

திருமண மேடை. நிறைந்திருக்கிறது மண்டபம். மணமகள் அருகே வந்து அமர்கிறாள். நான் மாப்பிள்ளை. வெட்கமும் நாணமுமாக அவளிடம் ஏதாவது சொல்லத் தோன்றும் இல்லையா. எனக்கு அதெல்லாம் இல்லை. ''இங்க பாத்துக்க... எனக்கு இஷ்டம் இல்லாம இந்தக் கல்யாணத்தை எல்லாரும் முடிவு பண்ணிட்டாங்க. எனக்குப் பிடிச்ச பொண்ணத்தான் நான் கட்டிக்க முடியும். நான் செகன்ட் மேரேஜ் பண்ணிக்க நீ சம்மதம் சொன்னாத்தான் நான் இப்போ உனக்குத் தாலி கட்டுவேன். இல்லைன்னா, இந்த நிமிஷமே நான் எந்திரிச்சிடுவேன். இந்த மாப்பிள்ளையைப் பிடிக்கலைன்னு சொல்லி நீ எந்திரிச்சாலும் எனக்கு ஓகேதான்... நான் வெயிட் பண்றேன்" -யாருக்கும் கேட்காதபடி அவளிடம் சொன்னேன். ஒரு மணமேடையில் எந்தப் பெண்ணுக்கும் இப்படியொரு நிலை வந்திருக்காது. நான் அரக்கன். அவள் சொன்னாள். ''நீங்க யாரை வேணும்னாலும் கட்டிங்க. இந்த இடத்துல என் அம்மா-அப்பாவை அசிங்கப்படுத்திடாதீங்க!" 

இன்று எனக்கும் கலாவுக்கும் பத்தாவது திருமண நாள். வெற்றிகரமான 10-வது வருடம். இப்படியொரு மனைவியைக் கொடுத்ததற்காகக்  காலத்தைக் கைகூப்புகிறேன். குடும்பரீதியான கோபத்தையும் வெறுப்பையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கழுவி, சில வருடங்கள் கழித்துதான் எனக்குள் வந்தாள் அவள். என்னைவிட அவள் மூப்பு. அதனாலேயே பார்த்துப் பார்த்து என்னைக் கவனிக்கும் பக்குவம் அவளுக்கு. தனி மனுஷியாக அத்தனை விஷயங்களிலும் என்னைத் தூக்கிச் சுமப்பவள். வெறுமனே வார்த்தைக்காகச் சொல்லவில்லை. என் வீட்டுக்கு வந்துபோகும் எல்லோருக்கும் இது தெரியும். 

எதைப் படித்தாலும் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒரு பார்வையில் இருந்து கருத்துச் சொல்லும் அவள் குணம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இத்தனைக்கும் அவள் எங்கே வாசிக்கிறாள், எப்போது நேரம் கிடைக்கிறது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அவள் வாசித்து நான் பார்த்ததே இல்லை. சமீபத்தில் விகடனில் வெளியான இயக்குநர் சசிகுமாரின் பேட்டியைப் படித்துவிட்டு, ''ஒரு தயாரிப்பாளருக்கு அவர் எப்படி இருந்தார்ங்கிறதும், ஒரு தயாரிப்பாளரா அவர் எப்படி இருந்தார்ங்கிறதும் புரியுது" என்றாள். நான் யோசிக்காத ஒப்புமை அது. 

எல்லாவிதங்களிலும் என்னை ஆச்சர்யப்படுத்துகிற ஆள் அவள். தேவையற்ற ஒரு பிரச்னையால் பணியாற்றிய இடத்திலும் வெளியிலும் நான் தலைகுப்புற தள்ளப்பட்ட நேரம். தயக்கத்தோடு அவளிடம் சொன்னேன். ''உங்க திறமையைத்தான் நீங்க அடுத்தவங்ககிட்ட நிரூபிச்சுக் காட்டணும். உங்க நியாயத்தை நீங்க உங்களுக்கு மட்டும் நிரூபிச்சுக்கிட்டா போதும்'' என்றாள். பல நாள் வேதனையை சில வார்த்தைகளில் சுண்டிவீசிய ஆச்சர்யக்காரி. 

எதையும் தலைக்கு ஏற்றிக்கொள்ளாதவள். ஒரு நாள் குளித்துவிட்டு வந்தேன். போன் நீட்டினாள். 'யாரோ மாலதின்னு ஒருத்தங்க பேசினாங்க' என்றாள். அப்போதைய தலைமைச் செயலாளர் மாலதி ஐ.ஏ.எஸ்! பெரிய ஆட்களின் பழக்கத்துக்காக என்னை ஒருபோதும் வியப்பாகப் பார்க்காதவள். சொல்லப்போனால், 'அதில் என்ன பெருமை இருக்கிறது?' என்பாள் சாதாரணமாக. 'ஒரு பிரசித்தியான நிறுவனத்தில் வேலை பார்ப்பதால் கிடைக்கிற மரியாதையை நீங்கள் எப்படி உங்களுக்கானதாக எடுத்துக் கொள்கிறீர்கள். சாதாரண சரவணனாக நீங்கள் எத்தனை மனிதர்களைச் சம்பாதிக்கிறீர்களோ... அவர்கள்தான் உங்களுக்கானவர்கள்' என்பாள். கிரீடம் என நினைத்தவற்றைச் சுக்குநூறாக்கிய தெளிவு.    

சஞ்சய் ராமசாமி, சஞ்சனா வதனி... இரண்டு குழந்தைகளுக்குப் பிறகுதான் அவள் மீதான முழுமயக்கம் எனக்கு. அவ்வளவு காதலிக்கிறேன். அவளே சலிக்கிற அளவுக்கு நேசிக்கிறேன். மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ள இருவருக்கும் அவ்வளவு ஆசை. இருமுறை குறைப்பிரசவம் ஆனதால், ரத்தசகதியாக அவளைப் பார்க்கிற சக்தியற்று அந்த ஆசையை போகச் சொல்லிவிட்டேன். 

அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் பணியாற்றிய இடத்தில் ரிசைன் லெட்டர் கொடுத்துவிட்டு வீட்டில் வந்து நின்றேன். எதுவும் சொல்லவில்லை அவள். வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். 30 குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுத்தாள். டி.என்.பி.சி. தேர்வு எழுதி பாஸ் பண்ணினாள். செலக்டான விஷயத்தை அவள் சொல்லும் வரை எனக்குத் தெரியாது. கல்வித்துறையில் ஜூனியர் அசிஸ்டென்ட் போஸ்டிங். நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணம் அருகே உள்ள கிராமப்பள்ளியில் வேலை. ஒரு நாள் அவளிடம் சொல்லாமல் அவள் பள்ளிக்குப் போனேன். பள்ளிவிட்டு அவள் வரும் வரை வாசலில் காத்துக் கிடந்தேன். வெளியே வந்து அவள் விக்கித்து நின்ற கணம், விவரிக்க முடியாதது. அடுத்த நாள் ரிசைன் பண்ணிவிட்டு சென்னைக்கு வந்துவிட்டாள். அவள் வேலைக்குப் போனதும் எனக்காகத்தான். வேலையை விட்டதும் எனக்காக‌த்தான். 

'கத்துக்குட்டி' ஷூட்டிங்கிற்கு ஒரு நாள்கூட அவள் வந்ததில்லை. படம் ரெடியான பின் ஒரு நாள் லேப்டாப்பில் போட்டுக் காட்டினேன். ''டிராமா மாதிரி எடுத்திருப்பீங்கன்னு நினைச்சேன். பரவாயில்ல... நல்லா வந்திருக்கு. அடுத்தடுத்த படத்துல இன்னும் சரியாகிடும்" என்றாள். அவ்வளவுதான். 

மறுபடியும் டெட் தேர்வு எழுதி இப்போது திருவாரூர் நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறாள். தேர்வு எழுத, கவுன்சிலிங் போக, இடம் தேர்வு செய்ய, டிரான்ஸ்பர் கேட்க‌ என எதற்குமே என் தயவை எதிர்பார்க்க மாட்டாள். மகளும் அவளும் அங்கே... மகனும் நானும் இங்கே எனத் தனித்துக் கிடக்கிறோம். 

இன்று காலை 6 மணிக்கு சென்னை வந்து எழுப்பினாள். 'வணக்கம்' சொல்வதுபோல் நெற்றியில் கை வைத்தேன். காதுக்கு அருகே வந்து கேட்டாள்.
''என்ன சார், செகன்ட் மேரேஜ் பண்ண பத்து வருசமா பொண்ணு கிடைக்கலையா?

நன்றி இயக்குநர்  சரவணன் ராமசாமி :முகநூல் 

2)

நான் சினிமாவை நோக்கிக் கிளம்பினப்ப, அதில் கொஞ்சம்கூட விருப்பம் இல்லாமல், ஆனாலும் என்னோட ஆசைக்கு குறுக்கே நிற்காமல் வழியனுப்பி வைச்சது அம்மாதான். எனக்குப் பிடிச்சதை நான் செய்யணும்கிறதில் #அம்மா உறுதியா இருப்பாங்க. 'வீட்டுக்கு வாரப்ப சினிமாவைப் பத்தி யாரும் அவன்கிட்ட கேட்கக்கூடாது'ன்னு 'சுப்ரமணியபுரம்' படத்துக்கு முன்னாலேயே அம்மா சொல்லி வைச்ச சொல்... இன்னிக்கு வரைக்கும் அப்படியே இருக்கு. வீட்ல யாரும் என்கிட்ட சினிமா பத்தி பேசவே மாட்டாங்க. 

'சுப்ரமணியபுரம்' ஜெயிச்ச நேரம். வீட்டுக்கு வந்தேன். 'அதான் ஒரு டைரக்டரா ஜெயிச்சிட்டியேப்பா... இனியும் அங்கபோயி கஷ்டப்படணுமா... இங்கேயே இருந்திடுப்பா'ன்னு அம்மா சொன்னாங்க. புகழ், பெருமை, சம்பாத்தியம், பிரபல்யம் எதையும் பொருட்படுத்தாமல் 'எம்புள்ள கஷ்டப்படக் கூடாது'ங்கிற ஒரே ஒரு நோக்கம்தான் அம்மாவுக்கு. 

'பிரம்மன்' படம் ரிலீஸுக்கு ரெடியான நேரம். சென்னையில இருந்தேன். பரபரப்பா வேலைகள் நடந்துக்கிட்டு இருந்தது. ஆனாலும், பட வேலைகள்ல மனசு ஒட்டாமல் ஏதோ ஒண்ணு தோணுது. அம்மாகிட்ட பேசணும்கிற உணர்வு. மதுரைக்குப் போன் போட்டேன். அம்மா பேசினாங்க. நல்லா பேசினாங்க. 'என்னன்னு தெரியல... நான் உடனே மதுரைக்கு கிளம்பி வரேன். பார்க்கணும் போல இருக்கும்மா'ன்னு சொன்னேன். 'பரவாயில்லப்பா'ன்னு சொன்னாங்க. ஆனாலும், உடனே ஃப்ளைட் டிக்கெட் போட்டு, நான் கிளம்பிட்டேன். மதுரையில் இறங்கிய உடனே என்னோட மேனேஜர் உதய்கிட்ட இருந்து போன். 'சார், அம்மா இறந்துட்டாங்க...' என்றார். 'உங்க அம்மாவுக்கு என்னாச்சு உதய். உடம்பு சரியில்லாம இருந்தாங்களா... நீங்க என்கிட்ட சொல்லி இருக்கலாமே?' என்றேன் பதறிப்போய். 'சார், உங்க அம்மா சார்....' என உதய் சொல்ல, ஒரு நிமிடத்தில் உலகத்தையே தொலைச்சிட்ட மாதிரி இருந்தது. சில மணி நேரத்துக்கு முன்னால நல்லா பேசிய அம்மா, ஒரு நொடியில என்னைய விட்டுப் போவாங்கன்னு நான் நினைக்கவே இல்ல.  அம்மாவுக்கு ஏதோ நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சு எனக்கே தெரியாமல் என்னைக் கிளப்பிய உள்ளுணர்வு, ஒரு நாளைக்கு முன்னாலயே என்னைய‌ உசுப்பியிருக்கக் கூடாதா? 

வெளியூர், ஷூட்டுங் என எங்கே போய் வீட்டுக்கு வந்தாலும் அம்மாதான் எனக்கு எல்லாமுமா நிற்பாங்க. இவ்வளவு சுலபத்தில காலம் அவங்களை என் கையைவிட்டுப் பறிக்கும்னு நினைக்கலை. இறப்பு தவிர்க்க முடியாததுன்னு நல்லா உணர்ந்தவன் நான். ஆனா, மரணத்துக்கான எந்தவித அறிகுறியும் இல்லாம அம்மா மறைஞ்சதை என்னால ஏற்கவே முடியலை. இன்னிக்கும் என் வீட்ல, ஆபிஸ்ல அம்மா போட்டோவை மாட்டி வைக்கலை. ஆபிஸ்ல இருக்கிறப்ப அம்மா மதுரையில வீட்ல இருக்கிறதா நினைச்சுக்குவேன். வீட்ல மேல் ரூம்ல இருந்தா, அம்மா கீழ இருக்கிறதா நினைச்சுக்குவேன். என்னையப் பொறுத்தவரை என்னோட அம்மா இன்னும் இருக்காங்க. அவங்க என்னைய விட்டுப் போகலை.

நம்மளப் பெத்தவங்க நூறு வருசம் தாண்டியும் வாழணும்னுதான் நாம வேண்டுறோம். ஆனா, எது எப்போ நடக்கும்கிறது நம்ம கையில இல்ல. இந்த நேரத்துல நான் வலியுறுத்திச் சொல்ல நினைக்கிறது இதுதான்... தயவுபண்ணி பெத்தவங்ககிட்ட நிறைய பேசுங்க. அம்மாவை பத்திரமா பார்த்துக்கங்க. அவங்க ஆசைப்பட்றதை செஞ்சு கொடுங்க. 'இது போதும்பா எனக்கு'ன்னு அவங்க திருப்திபட்ற அளவுக்கு பாசமா பார்த்துக்கங்க. இந்த உலகத்தில எதை வேணும்னாலும் நாம எதைக் கொண்டும் நிரப்பிடலாம். ஆனா, தாயோட இடத்தில யாரை வைச்சும் நாம நிரப்ப முடியாது.  எனக்கான எல்லாமுமா இருந்த என் அம்மா சொல்லாமல் கொள்ளாமல்
பிரிஞ்சதை இன்னிக்கும் ஏத்துக்க முடியாமல் தத்தளிக்கிறேன். என்னோட தவிப்பு மத்தவங்களுக்கும் ஏற்படக் கூடாதுங்கிறதுக்காகச் சொல்றேன்... இந்த நிமிஷமே அம்மாகிட்ட பேசுங்க. அவங்களை சந்தோஷமா பார்த்துக்கங்க... 

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

பின் குறிப்பு: இந்தப் பதிவில் என் அம்மா போட்டோவை தவிர்த்திருக்கேன். காரணம், இதை வாசிக்கிறப்ப, உங்க அம்மா முகமே உங்களுக்குத் தெரியட்டும்!

#Mothersday

இயக்குனர் சசிக்குமார் ( முகநூல் வழி) 

Link to comment
Share on other sites

விடுமுறைக்கு வந்திருந்த
பேத்தி கேட்டாள் ஆங்கிலத்தில்
“தாத்தா ஒரு பறவைக்கூடு செய்வோமா?”
கூண்டு இல்லை, கூடு என
தகுந்த சொற்களால் உறுதிசெய்தாள்.
யாருக்கும் தெரியாமல் செய்வது என்று
ரகசிய ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று.
அவளுடைய மகா கற்பனைகளும்
என்னுடைய எளிய பறவை அறிவும் சேர்ந்து
நேர்த்தியாகச் செய்யப்பட்டது அது.
அன்றன்று கண்ணில்பட்ட பறவைகளைக்
கணக்கில் எடுத்துக்கொண்டு
அவ்வப்போது செய்த மாறுதல்களுக்குப் பின்னும்
அடிப்படையில் அது பறவையின் கூடாகவே இருந்தது.
“என்ன பறவையின் கூடு இது?”
குனிந்துகொண்டே அவளைக் கேட்டால்
“கூட்டுக்குப் பறவை வந்ததும் சொல்கிறேன்”
களங்கமற்றுச் சிரித்தன அண்ணாந்த கண்கள்.
எல்லாப் பறவைகளும் சுயம்வரிக்கும்படி
சன்னல் கதவுகளைத் திறந்துவைத்திருந்தோம்
ஒவ்வொரு காலையிலும் சிறகறியா ஏமாற்றம்.
விடுமுறை தீரும் வரை வெற்றுக் கூடு.
ஊர் திரும்பியபின் சிலநாள் போனதும்
ஒரு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பியிருந்தாள்
“நான் தான் அந்தச் சின்னப் பறவை”. 

-வண்ணதாசன்

Link to comment
Share on other sites

#விமானபணிப்பெண்கள்1

பாங்காக்கிலிருந்து மும்பை வரும் தாய் ஏர்வேஸில், எனக்கு அடுத்ததாக அமர்ந்திருந்த அப்பெண் நடுத்தர வயதினர். கோவா கிறித்துவர் என்பது முகத்திலேயே தெரிந்தது. 

போயிங் 747-400 என்ற ஜம்போ வெளியேதான் பெரிசாக இருக்கும். இரண்டு முறை கை முட்டி இடித்துவிடவே அவரிடம் ஸாரி என்றேன். என்ன நினைத்திருப்பாளோ? என்ற கவலையும் வேறு. 

“பரவாயில்லை”என்று புன்னகைத்தார். “ எனக்கு இந்த விமானங்கள் பற்றி நன்றாகவே தெரியும். கால்நடைப் பிரிவில் வந்துவிட்ட பயணிகள் இதெற்கெல்லாம் கவலைப்படக்கூடாது”

ஆஹா..

மெதுவே பேச்சு வளர்ந்தது . “ இதற்கு முன் காத்தே பஸிபிக் விமான சேவையில் இருந்தேன். அதற்கு முன் ஏர் இந்தியா. எல்லாமே லாங் ரூட்டுகள். “ என்றார்.
 
”இப்ப?”

“வீட்டுல இருக்கேன். காத்தே இல்லைன்னா கல்ஃப் ஏர் அடுத்த வருஷம் பாக்கணும். I have my in-laws to look after”

"பாங்காக், சிங்கப்பூர்,ஆஃப்ரிக்கா ரூட்ல பயணிகள் கொஞ்சம் சவாலாக இருப்பாங்க” என்றார். “ அடிக்கடி குடிக்கறதுக்கு விஸ்கி அது இதுன்னு.. திடமா, அதே நேரம் பொறுமையா மறுக்கணும். சில பெண்க்ளுக்கு சமாளிக்கத் தெரியாது”

“ஓ. திமிரான பயணிகள்னு சொல்லுங்க”

“அப்படியில்ல. இலவசமா விஸ்கின்னு ஆ-ன்னு வாயைப் பிளப்பாங்க சிலர். அவங்க அவங்க கல்ச்சர், வளர்ப்பு எல்லாம் இந்த விமான நடத்தைல தெரியும்..”

“இதுவே இப்படின்னா, பிஸினஸ் க்ளாஸ், ஃபர்ஸ்ட் கிளாஸ்ல தலைக்கனம் பிடிச்ச ஆளுங்க வந்தாங்கன்னா.. பெரும் தலைவலி இல்ல?”

அவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார் “ ஒரு விசயம் தெரியுமா? அவங்க கண்டுக்கவே மாட்டாங்க. தனியா விட்டாப்போறும்னு இருப்பாங்க. அதிகாரம் , பொறுப்பு கூடக்கூட பெருமளவில் மிக நாகரீகமா நடந்துப்பாங்க, இல்ல.. என்னை நீ யாரு தொந்தரவு பண்றதுன்னு ஒரு ஈகோ”

“அட..” என்றேன். நான் கால்நடை கிளாஸ் எப்பவும். முன்ன பின்ன செத்தாத்தானே சுடுகாடு தெரியும்?
 
“ஒரு தடவை பர்ஸ்ட் க்ளாஸ்ல ஒரு பெரிய தொழிலதிபர் வந்தார். நீட்டான கோட் சூட், வெகு உயரம், நீளமான மூக்கு, வயதானதால கொஞ்சமா முதுகு வளைஞ்சிருந்தது. அவரைப் பாத்ததும் ஆடிப்போயிட்டேன். நான் தான் அந்த வகுப்பைப் பாத்துக்கிற ஆட்கள்ல சீனியர். 

அவர்கிட்ட என்ன வேணும்னு கேக்கறதுக்குள்ள, மூணு தண்ணி பாட்டில் எடுத்து வைச்சுகிட்டார். “வேற ஒண்ணும் வேணாம்மா. ராத்திரியெல்லாம் பறக்கணும். நீ ஓய்வெடுத்துக்கோ” ந்னுட்டு புன்னகைத்தார் பாருங்க.. நெகிழ்ந்து  போயிட்டேன். பொதுவா ஒரு ஜூஸ், நனைஞ்ச டவல்னு நிறைய மொதல்லயே கொடுக்கணும். ஒண்ணுமே வேணாம்னு கை காட்டிட்டார். 

“பரவாயில்ல சார். எதாச்சும் வேணும்னா கூப்பிடுங்க”ன்னு சொல்லிட்டுப் போயிட்டேன். அவர் ஒரு புத்தகத்தை பிரிச்சுகிட்டு நிதானமாப் படிச்சார். அப்புறம் தூங்கிட்டார். சாப்பாடும் கேக்கலை. எனக்கு எழுப்பறதுக்கு ஒரு மாதிரியா இருந்தது. 

நடுராத்திரில யாரோ எழுந்து வந்து தள்ளு வண்டியிலேர்ந்து எதோ எடுக்கற மாதிரி தெரிஞ்சது. அவர்தான் இன்னும் ரெண்டு பாட்டில் எடுத்து வந்துகிட்டிருந்தார். “சார் சொல்லியிருக்கலாமே?”ன்னேன். 

“எனக்கு பாத்ரூம் போணும்,முழிப்பு வந்தது. சரி, அப்படியே தண்ணியும் எடுத்துக்கலாமேன்னு வந்தேன். நீ தூங்கு” என்றபடி அவர் சீட்டுக்குப் போய்விட்டார். மொத்த ஃபர்ஸ்ட் க்ளாஸ்லயும் அவர் ஒருத்தர்தான். 

காலேல மும்பை  விமான நிலையத்துல அவர் ஒரு துணையும் இல்லாம நடந்து போனார். ஒரு அலம்பல் இல்லை, திமிரான பேச்சு இல்லை. என் பையை எடுத்துட்டு வான்னு எவரையும் சொல்லலை.. 
பெரிய மனுஷன். நிஜமா அவருக்காக  அன்னிக்கு ஒரு ப்ரேயர் சொன்னேன்.”

அவர் யாரு?” என்றேன்.

“ஜே.ஆர்.டி. டாட்டா”  

 குறைகுடம்தான் கூத்தாடும்.

மேன்மக்கள் மேன்மக்களே.

 

சுதாகர்  கஸ்தூரி முகநூல் வழி

Link to comment
Share on other sites

மே 1992. மும்பை

அந்த பெரிய கான்ஃபரென்ஸ் ரூமில் நுழைந்ததுமே எனக்கு நடுக்கம் வ்ந்துவிட்டது. நாற்காலிகள் நிறைந்து ஆட்கள். அனைவரும் அந்த பெட்ரோகெமிக்கல் கம்பெனியின் மேலதிகாரிகள். ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட 20வருடங்களுக்கு மேல் அனுபவமுள்ளவர்கள்.
நான் எனது கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதமாகிறது. எங்கள் கருவியின் தொழில்நுட்பம் குறித்துப் பேசி, விற்பனையை சாதகமாக்கவேண்டும். போட்டியாளர்கள் சீனியர்களைக் கொண்டு வந்திருந்தார்கள்.  நான்மட்டும் என் கம்பெனியின் சார்பாகப் போயிருக்கிறேன். 
“ஹலோ” என்றார் ஒரு அதிகாரி “சீனியர் யாரும் வரலையா? எங்க மிஸ்டர் அஞ்சன் டே?”
“அவர்..அவர் வேற இடத்துக்குப்போயிருக்கார். அதான் நான்..” மென்று விழுங்கினேன். இவர்கள் முன்னே எப்படி ஒரு மணி நேரம் பேசப்போறேன்?
முதலில் வந்த இருவர் முனைவர் பட்டம் பெற்றவர்கள் அடிப்படை அறிவியலில் தொடங்கி,  மாதிரிகளை ஆய்வு செய்ததில் கிடைத்த அறிக்கைகள் எனத் தூள் கிளப்பிக்கொண்டிருந்தனர். என்னிடம் சில ஸ்லைடுகள் , ட்ரான்ஸ்பேரன்ஸி ஷீட்டுகள் இருந்தன. பவர்பாயிண்ட் எல்லாம் வராத 1990களின் முதன் வருடங்கள்...
”அடுத்தாக ஹிண்டிட்ரான் ஸர்வீஸஸ். சுதாகர்” அறிவிப்பு வந்தது. எழுமுன் டீ வந்துவிட, ஐந்து நிமிடம் அவகாசம் கிடைத்தது. உதடுகள் உலர்ந்து, கால்கள் நடுங்கி நின்றேன். பேசுவது புதிதல்ல. என்னிடம் இருப்பதை பேசிவிடுவேன். கேள்விகள் கேட்டால்? அனுபவமின்மையின் ஆட்டம் தெரிந்துவிடுமே?
சற்றே சலசலப்பு கேட்டது. “மிஸ்டர் கண்ணன்” என யாரோ முணுமுணுத்தார்கள். திரும்பினே. அவரேதான். எனது கம்பெனியின் டெக்னிகல் டைரக்டர். எனது பிரிவின் மேலதிகாரி. 
“இவரா?” என்று வியப்புடன் திகைப்பும் எழ,  அவரிடம் விரைந்து சென்றேன்.  தோளில் தட்டினார் “ நீ தனியாக வந்திருப்பதாக அறிந்தேன். அதான் வந்தேன்”
“சார்...இதுக்கெல்லாம் நீங்க வரணுமா?” என்றாலும், என் உற்சாகம் தைரியம் மேலெழுந்தது என்னமோ உண்மைதான்.
“கண்ணன். நீங்க பேசப்போறீங்களா?’ என்றார் நிறுவனத்தின் ஒரு மேலதிகாரி.
“இல்லை” என்றார் கண்ணன். “ My boy would talk. பசங்க பேசட்டும். ” 
கண்ணனுக்கு அப்பொழுது ஐம்பது வயதிருக்கும்.பெரிய நெற்றி. அதில் ஒல்லியாக தீர்க்கமாக ஸ்ரீசூர்ணம் எப்போதாவது மின்னும். சிரித்த முகம். கனத்த குரல். அவரது அறையில் குறிப்பிட்ட ஊதுபத்தி ஒன்றின் மணம் எப்போதும் கமழ்ந்து கொண்டிருக்கும். மேசையில் ஒரு பகவத் கீதை. 

 என் பிரிவின் பெரும் அதிகாரிகள் அவரது செக்ரட்டரியிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு நிற்பதைக் கண்டிருக்கிறேன். என் அளவில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதேயில்லை. இப்போது ஏன் திடீரென வந்திருக்கிறார்?
ஒரு உத்வேகத்துடன் எழுந்தேன். ஒரு மணி நேரம் பேச்சு. முடிவில் ஏதோ உளறப்போக, போட்டியாளர் ஒருவர் அதைக் கிடுக்கிப்பிடி போட நான் வாதிக்க ஒரு அமளி. கண்ணன் அமைதியாக அமர்ந்திருந்தார். அனைவரும் அவர் என்ன சொல்லப் போகிறார் எனப் பார்த்திருந்தனர். இறுதி வரை அவர் பேசவில்லை.

 நான் அந்த ஒரு பாயிண்ட்டில் மாட்டினேன் என்றாலும், அங்கிருந்த போட்டியாளர்களில் சீனியர்களால் பாராட்டப்பட்டேன். பெரும் ஊக்கமூட்டிய தினமாக அது அமைந்தது.

வெளியே வந்தபோது, கண்ணனின் டிரைவர் அழைத்தார் .  “ சார் உன்னையும் வண்டியில வரச்சொன்னாங்க” 
கண்ணனின் நீல நிற  ஃபியட் காரில் அவருடன் பின் சீட்டில் அமர்ந்து வருவது எனக்குக் கனவு போலிருந்தது. “சார்” என்றேன் மிகத் தயங்கி. “ எப்படிப் பேசினேன்ன்னு சொன்னீங்கன்னா...”
“குட்” என்றார் சுருக்கமாக. பல நிமிடங்கள் ஒன்றும் பேசாமல் கரைந்தன.
திடீரென “ நீ அந்தப் பாயிண்ட் சொன்னது சரின்னு உனக்குத் தோணுதா?” என்றார். 
“ஆமா” என்றேன் திடமாக “ இன்னும் தகவல் கிடைச்சிருந்தா எதுத்தாப்புல நின்னு கேட்டவனை ஒரு வாங்கு வாங்கியிருப்பேன்.”
“இதப்பார்” என்றார் “ நீ போனது எதுக்கு?”
“டெக்னிகல் பேச்சு, விற்பனை”
“அதை விட்டுட்டு ஒரு பாயிண்டப் பிடிச்சு விவாதம் பண்றது கேலிக்கூத்து இல்ல?
விழித்தேன். அவர் தொடர்ந்தார் “ என்ன கர்மம் செய்ய வந்திருக்கமோ, அதுல குறியா இருக்கணும். துரோணன் ஒர் பிராமண உடலில் இருந்த சத்ரியன். விதுரன் ஒரு சூதன் உடலிலிருந்த பிராமணன்.  நான் ஜாதியச் சொல்லலை. கர்ம வாசனையைச் சொன்னேன். நீ இங்க வந்தது ஒரு வைஸ்ய தருமத்திற்காக. விவாதம் செய்யும் வேதசிரோன்மணியாக இல்லை.. புரியுதா?”

அவர் இதிகாசப் புராணங்களிலிருந்து உவமைகாட்டி மேலாண்மை நெளிவு சுளிவுகளை விளக்குவார் எனக் கேட்டிருக்கிறேன். இன்று எனக்கு முதல் தடவை. அது என்னமோ மனதில் சட்டெனப் பதிந்து போனது.  ஆனாலும், அவர் ஏன் வந்தார் என்பது புரியாமலே இருந்தது.

அடுத்தநாள் அவரது அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டேன். கண்ணன் முன்பு என் மேலதிகாரி அமர்ந்திருந்தார். அவர் முகம் வெளுத்திருந்தது.
கண்ணன் தொடங்கினார் “ அஞ்சன் டே, இந்த வியாபரம் ஒரு போர். தெரியும்ல?”

தெரியும்” என்றார் அஞ்சன் தீனக்குரலில்.

“ தான் சுகமாக இருந்து கொண்டு, படைவீரர்களை மட்டும் போரில் அனுப்பி ஜெயித்த ஜெனரல்கள் இல்லை அஞ்சன்.. அபிமன்யு சக்ரவ்யூகத்தை உடைக்கறேன் -ன்னு போனது அவனுடைய தைரியம். பாண்டவர்கள் அவனைக் காக்காமல் விட்டது , அவர்களது தவறு. “கண்ணன் நிறுத்தினார்.

“அஞ்சன், இவன் கூட நீயும் போயிருக்கணும். . நான் போனது இவனுக்கு தைரியமூட்ட மட்டுமில்ல, மத்தவங்க”இந்த ஆள் ஏன் வந்தான்?”ன்னு கொஞ்சம் குலைஞ்சு போயிருப்பாங்க. அது முக்கியம்.”

கண்ணன் நிறுத்தினார் “வியாபாரம்ங்கற போருக்குன்னு சில தருமங்கள் இருக்கு. அவங்கவங்க தன் நிலையில தன் கருமம் என்னன்னு தெரிஞ்சு இயங்கணும்.” மேசையில் ஹோல்டரில் தலைகுத்தி நின்றிருந்த ஒரு மையூற்றிப் பேனாவால் , சதுரமான சிறிய காகிதத்தில் எதோ எழுதினார். 
“இந்த புஸ்தகம் வாங்கிப்படி” என்றார் இருவரிடமும்.

"The Art of War"-என்று எழுதியிருந்தது. 

போரில் சாரதியாக வந்த கண்ணனுக்கும் இவருக்கும் அதிக வித்தியாசமில்லை என்று உணர்ந்த தருணம் அது. கண்ணன் சார், ஓய்வு பெற்ற பின்னும் எப்போதாவது பார்க்கும்போது அனைவரைப் பற்றியும், அவர்களது குடும்பங்கள் பற்றியும் கேட்பார். எப்போதாவது தொழில் முறையில் குழப்பங்கள் ஏற்படும்போது அவரிடம் ஆலோசனை கேட்பேன். சமீபத்தில் தொடர்பு விட்டுப் போனது. 

இன்று கண்ணன் சாரின் திருமண நாள். எத்தனையோ மேலதிகாரிகள் இருந்திருப்பினும், குருவாக அமைபவர்கள் மிகச் சிலரே. இன்று கிடைக்கும் தூற்றுதல்களும், போற்றுதல்களும்.. போகட்டும் கண்ணனுக்கே.

சர்வம் க்ருஷ்ணார்ப்பணம்.

 

சுதாகர்  கஸ்தூரி முகநூல் வழி

Link to comment
Share on other sites

6)  

முயல், ஆமை கதையின்  #லேட்டஸ்ட்_வெர்ஷன் .

முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம் வைக்கின்றன. முயல் வேகமாக ஓடினாலும், வழியில் தூங்கிவிட, ஆமை மெதுவாகச் சென்றாலும் தூங்கும் முயலைத் தாண்டிச் சென்று பந்தயத்தில் ஜெயித்துவிடுகிறது.

 #நீதி : தலைக்கனம் கூடாது. வேகத்தைவிட, நிதானம் முக்கியம் ஜெயிக்க!

வெயிட்... இனிதான் கதையே ஆரம்பம்!

தோல்வியை நினைத்து மனவேதனை அடைந்த முயல், ‘நாம ஓவர் கான்ஃபிடன்ட்டா இருந்ததாலதான் தோத்துட்டோம்’ என்பதைப் புரிந்துகொண்டு, மீண்டும் ஆமையைப் பந்தயத்திற்கு அழைக்கிறது. ஆமையும் ஒப்புக்கொள்ள, பந்தயம் ஆரம்பிக்கிறது. முயல், இடையில் எங்கேயும் தூங்காமல் ஓடிச் சென்று, ஜெயிக்கிறது.

 #நீதி2 : நிதானம் முக்கியம் தான், ஆனால் வேகம் அதை விட சிறப்பானது!

கதை முடிந்துவிட்டது என்று நினைத்தால்... அதுதான் இல்லை!

காலங்காலமாக ஜெயித்து வந்த ஆமையால் இந்தத் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இம்முறை அது முயலை பந்தயத்துக்கு அழைக்கிறது. இங்குதான் ஒரு ட்விஸ்ட்! பந்தயம் வழக்கமான பாதையில் இல்லை என்று ஆமை சொல்ல, முயலும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது (!).

ஒன்... டூ... த்ரீ...

முயல் இடையில் எங்கேயும் இளைப்பாறாமல் ஓட, ஆமை மெதுவாகச் சென்றது. முயல் ஒரு இடத்தில் சடன் பிரேக் போட்டாற்போல நிற்கிறது. பார்த்தால் அங்கே ஒரு ஆறு!

அதைக் கடந்தால் தான் பந்தய இலக்கை அடைய முடியும். ஆற அமர வந்து சேர்ந்த ஆமை அசால்ட்டாக ஆற்றை நீந்தி கோட்டைத் தொட்டு பந்தயத்தில் ஜெயிக்கிறது!

 #நீதி3 : நாம் போட்டியிடும் போது எதிரியின் பலம் அறிந்து, ஆடுகளத்தை நம் பலத்துக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

இன்னும் கதை முடியவில்லை மக்களே.!

ஒரு வழியாக ஆமையும் முயலும் நண்பர்கள் ஆகி, இருவரும் சேர்ந்து பேசி, ஒரு பந்தயம் வைக்க முடிவு செய்கிறார்கள். ஆமை டிவிஸ்ட் வைத்த அதே பாதையில்தான் இம்முறையும் பந்தயம். முயல் வேகமாக ஓட, ஆமை மெதுவாக நகர்கிறது... ஆற்றின் கரை வரை. அதற்குப் பின்..?

ஆமை ஆற்றில் நீந்துகிறது. அப்படியென்றால் முயல்? ஆமையின் முதுகில். கரை சேர்ந்ததும், மீதம் உள்ள தூரத்தை, ஆமையை தன் முதுகில் வைத்தவாறு முயல் ஓடிக் கடக்கிறது. இருவரும் ஒரே நேரத்தில் பந்தயக் கோட்டை அடைகிறார்கள்; இருவரும் வெல்கிறார்கள்!

 #நீதி4 : டீம் வொர்க் வின்ஸ்!

 #டீம்_வொர்க் 

‘‘கணிதத்தில் 1+1 = 2. ஆனால், வாழ்வில் 1+1 = 3. அதாவது, இருவரின் பலம் சேரும்போது, அது ஒரு புது பலத்தை உருவாக்கும். அதனால்தான் நிறுவனங்களில் பணியாட்களைத் தேர்வு செய்யும்போது, அவர்களின் டீம் வொர்க் திறனை முக்கியமாகச் சோதிக்கிறார்கள்.

அலுவலக வேலைகளுக்கு மட்டும் இல்லை, வீடுகளிலும் டீம் லிவ்ங் இருந்தால்தான், ஒரு குடும்பம் சிறப்பாகச் செயல்படும். எல்லோரின் பங்களிப்பும் தேவை குடும்பத்தில். எனவே, டீம் வொர்க் வளர்ச்சிக்கு மட்டும் இல்ல, வாழ்வதற்கும் மிக முக்கியம்.

இந்த லேட்டஸ்ட் முயல், ஆமை கதையில் வரும் எல்லா கருத்துக்களுமே ஜெயிக்க முக்கியமானவை. நிதானம் முக்கியம், வேகம் முக்கியம், புதுப்புது வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம், இந்த கதை இறுதியாக உணர்த்தும் ‘யூ வின், ஐ வின்!’ அப்ரோச் முக்கியம். மொத்தத்தில், இதுபோல மல்டி ஸ்கில் முக்கியம். அதை கற்றுக் கொடுப்பதும் டீம் வொர்க்கே!

வாழ்க்கையில் 
முயலும் ஜெயிக்கும், 
ஆமையும் ஜெயிக்கும். 
 #முயலாமை  மட்டுமே ஜெயிக்காது.

முயன்று தோற்றால்  #அனுபவம் .

முயலாமல் தோற்றால்  #அவமானம் .

வெற்றி நிலையல்ல,

தோல்வி முடிவல்ல..

முயற்சியை பொறுத்து தான் வெற்றி, தோல்வி..!! நண்பர் அனுப்பியது, மனதை தொட்டதால் பகிர்கிறேன்....!!

 

 

7)

 

என்ன பெரிய திருமணம் காமத்திற்கான வெளிப்படை அங்கீகாரம் தவிர அதில் வேறென்ன இருக்கப்போகிறது?, முற்றிலும் ஓர் புதிய வாழ்க்கை புதிய குடும்பம் என்று தன்னை மாற்றிக்கொள்ள வேறு வேண்டும். கல்யாணம் என்பதே கடுப்புகளால் ஆனதுதான்.., காமம் முடிந்து களைத்துப்படுத்திருந்தால் காப்பிப்போட்டு தாயேன் என்பான்.., அதிகாலையில் குளித்துமுடித்த புத்துணர்ச்சியை அவன் எடுத்துக்கொண்டு மீண்டும் குளிக்கவைப்பான், ஒருவேலையும் உனக்குத் தெரியல எனக்கடிந்து கொண்டால்.. நிறைமாத வயிற்றில் கைவைத்துப் பெருமிதம் கொள்வான், இவனுக்கு ஆண் குழந்தைகளாகத்தான் பெற்றுகொடுத்திருக்க வேண்டும்.. பெண் குழந்தை பெற்றுக்கொடுத்ததால் என்னை இரண்டாம்பட்சம் ஆக்கிவிட்டான் துரோகி., பிறந்தநாளை மறந்துவிட்டு அதற்கு மறுநாள் பரிசு தருவான் பொறுப்பற்றவன்., சமைத்துக் காத்திருந்தால் தாமதமாக வருவான்.. சமைக்காமல் இருந்தால் முன்னமே வந்து பசிக்கிறதென்பான், கோபத்தில் பேசாமல் இருக்கிறேன்.. மகள் வந்து ''அம்மா நீ அழகா இருக்கியாம் அப்பா சொல்லச்சொன்னிச்சு'' என்கிறாள்! இப்படி தூது போகவா இவனுக்கு நான் பிள்ளை பெற்றுக்கொடுத்தேன் இடியட்., இவளுக்கும் விவஸ்தையே கிடையாது.. அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு இறங்க மறுத்து 'நான் இறங்கினால் அம்மா கட்டிக்கொள்வாள்' எனப்பொதுவில் காட்டிக்கொடுத்து மானத்தை வாங்குகிறாள். நான் சாப்பிடலன்னா அவனுக்கென்ன..? திட்டுகிறான்!..,  சும்மா தலைவலி என்று படுத்திருந்தேன்.. உடனே டீ போடுகிறேன் பேர்வழி என்று அடுப்பாங்கரையை கந்தகோலம் ஆக்கி வைத்திருக்கிறான்.. இப்போது இதனை எழுதக்கூட விடாமல் மடியில் படுத்துக்கொண்டு செல்போனை தட்டித்தட்டி எழுத்துப்பிழை விழவைக்கிறான்., முத்தம் கொடுத்து பாதியில் சட்டென எழுந்து போய் பழிவாங்கவேண்டும். யோசித்துக்கொள்ளுங்கள் பெண்களே இத்தனை சிரமங்களும் தான்டி கல்யாணம் செய்யத்தான் வேண்டுமா?! செய்தால்தான் என்ன! ;)

நீடூழி  வாழ்க..!

மீனம்மா கயல் முகநூல் வழி 

 

பத்து ஆண்டுகளுக்கு முன்னர், திருவல்லிக்கேணி மேன்சஷனில் எனக்கு பக்கத்து அறையில் தென்னக ரயில்வேயில் சிவில் எஞ்சினியராக பணிபுரியும் அன்பர் ஒருவர் தங்கியிருந்தார். ஆரம்ப தயக்கங்கள் மறைந்து அவருடன் சகஜமாக பேசத் தொடங்கியிருந்தபோது ஒரு நாள் அவரிடம் கேட்டேன்.

“ ஏன் சார், இப்போ தமிழ்நாட்டுல அடிக்கடி பாலங்கள் பழுதடைந்தது. உடைந்ததுன்னு நியூஸ் வருது. ஆனா ரயில்வே பாலம் உடைந்ததுன்னு நியூஸ் வரமேட்டேங்குது.

ஆனா, ட்ரைன் நேருக்கு நேர் மோதல், சிக்னல் பெயிலியர் என்றெல்லாம் செய்திகள் வருது”

எப்படி ரயில்வே பாலம் மட்டும் ட்ரைன் ஓடுற அதிர்ச்சிய தாங்கிக்கிட்டு நல்லா இருக்கு?

அதற்கு அவர் சொன்னார்,

நாங்க பாலம் டிசைன் செய்யும்போதே, பாக்டர் ஆப் சேப்டி ஐந்தில் இருந்து பத்து வரைக்கும் வச்சுத்தான் டிசைன் செய்வோம். என்றார்.

அதாவது ஒரு பாலத்தில், 1000 டன் எடையுள்ள புகைவண்டி, 100கி மீ வேகத்தில் ஒரு நாளுக்கு 10 முறை சென்று வருகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் நூறாண்டுக்கு இந்த பாலம் நல்ல முறையில் இருக்க, என்னென்ன தேவை என்று கணித்துக் கொள்வார்கள்.

பின்னர் அதைப்போல ஐந்திலிருந்து பத்து மடங்கு ஸ்ட்ராங்காக டிசைனை செய்து விடுவார்கள்.

பின்னர் டெண்டர் விடுவார்கள். அமைச்சர், அதிகாரி என அனைவருக்கும் அவர்களுக்கு தக்க கமிஷன் கொடுத்தது போக, அந்த காண்டிராக்டர் எவ்வளவு மட்டமாக கட்டினாலும், அந்தப் பாலம் தேவையை பூர்த்தி செய்து விடும். என்றார்.

இதே போல ராணுவத்திலும் பேக்டர் ஆப் சேப்டி என்பது, குறைந்தது ஐந்துக்கு மேல் இருக்கும். அதை மில் (mil standard) ஸ்டேண்டர்ட் என்றும் சொல்வார்கள். ஏனென்றால் எந்த சூழ்நிலையிலும் அந்த உபகரணம் 100% திறனுடன் செயல்பட வேண்டும் என்பதால்.

இந்திய ராணுவத்தில் வில்லிக்ஸ் (WILLYX) என்ற ஜீப் முன்னர் இருந்தது. தன்னுடைய பணிக்காலம் முடிந்ததும், அது ஏலத்துக்கு வரும். மக்கள் அதனை போட்டி போட்டு வாங்குவார்கள். கோவை உட்பகுதி கிராமங்கள், பொள்ளாச்சி மற்றும் அதன் உட்பகுதி கிராமங்களில் பண்ணையார்கள் இந்த வில்லிக்ஸ் ஜீப்பைத்தான் முன் பயன்படுத்துவார்கள். அதே போல ஆந்திரா ஜமீந்தார்கள், நிலச்சுவான்தார்கள் எல்லாம் இந்த ஜீப்பைத்தான் பயன்படுத்துவார்கள்.

போலவே, வடமாநில கிராமங்களிலும் இந்த ஜீப்புக்கு பெரும் மவுசு உண்டு. பீகார் மாநில உயர் ஜாதியினர் தாங்கள் வைத்திருக்கும் பிரத்யேக படைகளுக்கு (ரன்வீர் சேனா போல) இந்த வாகனத்தைத் தான் பயன்படுத்துவார்கள். தங்கள் ஜாதிக்குரிய அடையாளம் அல்லது அரிவாள், கோடாலி, துப்பாக்கி போன்ற மாடல்களுடன் இந்த ஜீப்பை அலங்கரிப்பார்கள். பல திரைப்படங்களிலும் நாம் இதனைக் காணலாம். தயாரிப்பாளர் நிர்ணயித்த ஆயுட்காலம் முடிந்து பல ஆண்டு கழித்தும் சிங்கம் போல் கர்ஜிக்கும் திறன் கொண்டவை இவை.

இப்பேர்பட்ட ஜீப்பின் மைனஸ் எரிபொருள் சிக்கனம். வெயில் களைப்படைந்து வந்தவன் மண்பானைத்தண்ணீரை மடக் மடக் என்று குடிப்பதைப் போல எரிபொருளை விழுங்கும் இது.

இதற்கு காரணம் இந்த ஜீப்பின் எடை என்பதால், இந்திய ராணுவத்தினர் இதன் எடையைக் குறைத்து தங்களுக்கு வழங்குமாறு ஜெர்மானியத் தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்தார்கள். அதிகம் இல்லை ஜெண்டில்மேன், இந்த ஜீப்புக்கு ஐந்து கோட்டிங் பெயிண்ட் அவர்கள் அடிப்பார்கள். அதைக் குறைத்து ஒரு கோட்டிங் அடித்தாலே 50 கிலோ வரை எடை குறையும்.

ஆனால் அந்தக் கம்பெனி அதற்கு மறுத்துவிட்டது. இந்த தகவலை நான் கேட்டபோது, எனக்கு ஹென்றி போர்டின் ஞாபகம் வந்தது.

ஆட்டோமொபைல் துறையின் மறுமலர்ச்சிக்கு காரணமான ட்ரான்ஸ்பர் லைன் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த அவர் சொல்லுவார்.

“மக்கள் எந்த நிறத்தை வேண்டுமானாலும் விரும்பலாம், ஆனால் நான் கறுப்பு நிறத்தைத் தான் அவர்களுக்கு கொடுப்பேன்”

என்று.

காரணம், தொடர்ச்சியான ஆய்வுகளின் மூலம் அவர்கள் கண்டறிந்தது, கறுப்பு நிறம் மற்ற நிறங்களை விட விரைவில் காயும் என்பதே.

பெயிண்ட் காய்வதற்காக நான் அதிக நேரம் என்னுடைய காரை தொழிற்சாலையில் நிறுத்தினால் அதன் விலை கூடிவிடும். பின் எப்படி சாமானியனும் வாங்கும் விலையில் அதைத் தர முடியும் என்பார்?

இரண்டு கொள்கைகளுக்கும் உள்ள வேறுபாட்டை பாருங்கள்.

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போது ஜெர்மன் என்றாலே எனக்கு அலர்ஜி. ஏனென்றால் ஹிட்லர். ஆனால் ஒரு பொறியாளனாக என்னை ஜெர்மனி ஈர்த்தது என்றே சொல்லலாம்.

நாம் இந்திய, சீன, கொரிய, ஜப்பானிய, அமெரிக்க, ரஷ்ய மற்றும் ஜெர்மானிய பொருட்களை நம் வாழ்வில் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு நாடும், தங்களுக்குரிய ஐடியாலஜி படி தங்கள் பொருளைத் தயாரிக்கின்றன.

சீனா – உபகரணம் அந்த வேலையை செய்து விடும், ஆனால் தவறி விழுந்தால் கேட்கக் கூடாது. நீடித்து உழைக்குமா என்றெல்லாம் கேட்கக் கூடாது.

ஜப்பான் – இதை விட அதிக தரம் இந்த வேலைக்குத் தேவையில்லை (ஆப்டிமைசேஷன்). (குறிப்பிட்ட அளவு கேரண்டி)

அமெரிக்கா – வேலை செய்யும். தப்பு பண்ணினா வேற தர்றோம்.

ஜெர்மன் – இதுக்கு மேல தரம் இந்தப் பொருளில் கொண்டு வர முடியாது.

இந்த கொள்கைதான் அவர்கள் அடிநாதம்.

எல்லோருக்கும் தெரிந்த காரை எடுத்துக் கொள்வோம்.

கார்களுக்கு உள்ளே ஓடும் வயர்களின் தூரம் குறைந்தது 5 கி மீ இருக்கும். இதற்கு டொயோட்டா போன்ற ஜப்பானிய கம்பெனிகள், 2 மிமீ தடிப்பான இன்சுலேசன் மற்றும் மேற்புற உரை போதுமென்று தீர்மானித்தால் (ஆப்டிமைசேஷன்), ஜெர்மானிய பென்ஸ்,ஆடி, ஸ்கோடா, பி எம் டபிள்யூ போன்றவை 6 மிமீ திக்கான வயராக அதை தயாரிப்பார்கள். இதனால் செலவு கூடும், காரின் எடை அதிகரிக்கும் அதனால் எரிபொருள் தேவை அதிகரிக்கும். ஆனாலும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
அதேபோல பெயிண்ட், முன்பு வில்லிக்ஸுக்கு சொன்னது போலத்தான், தாராளமாகச் செய்வார்கள். அதனால் தான். ஸ்கிராட்ச் ஆனாலும் உள்ளிருக்கும் பெயிண்ட் மானம் காக்கும்.

நம் இந்தியத் தயாரிப்புகளில் இருக்கும் ஒரு குறைபாடு, அந்தப் பொருள் எல்லா காலநிலைக்கும் தாங்குமா என்று பார்க்கமாட்டார்கள். ஐடியா கிடைத்ததும், டிசைன் செய்து, தயாரிப்புக்கு அனுப்பி விடுவார்கள். ப்ராடக்ட் டெவலப்மெண்ட் சைக்கிள் கால அளவு மிக குறைவாகவே இருக்கும்.

ஆனால் ஜெர்மன் கம்பெனிகளில், தாங்கள் டிசைன் செய்த பாகங்களை புரோட்டோடைப் ரெடி செய்து கம்பெனியின் மேற்கூரையில் போட்டு விடுவார்கள். அது பனி, வெயில், மழை எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும். நான்கு பருவங்களும் முடிந்த பின்னர், அதனை எடுத்து தரப் பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். அது அக்செப்டபிள் லெவலில் இருந்தால் மட்டுமே, அதனை அப்ரூவ் செய்வார்கள். எனவே அந்தப் பொருள் எந்தச் சூழலையும் தாங்கும்.

இதைப் பற்றி ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது, அங்கே விண்டர்,ஆட்டமன், சம்மர், ஸ்ப்ரிங் என்று நான்கு காலநிலைகள் உள்ளன. ஆனால் இந்த விருதுநகர் மாவட்டத்தில் இரண்டே காலநிலைகள் தானே உள்ளன. சம்மர் மற்றும் ஹாட்சம்மர். ஏப்ரல், மேயில் ஹாட் சம்மர் மற்ற மாதங்கள் சம்மர் என்று நண்பர்கள் கலாய்த்தார்கள்.

அதே போல பாக்டர் ஆப் சேப்டி. ஒருமுறை நான் உபயோகித்த லோட் செல் 400 டன் வரை உள்ள தாக்கும் எடையை அளக்கக்கூடிய கெப்பாசிட்டி கொண்டது. பொதுவாக மற்ற நாட்டு தயாரிப்புகள் 300 டன் வரையே தாக்கும் எடையை நன்கு அளக்கும். அதன்பின் அதன் லீனியாரிட்டி குறையும். 400டன்னுக்கு மேல் எடை தாக்கினால் செயல் இழந்து விடும்.

சரியாக கணக்கிடாமல், 600 டன் வரை அதில் வேகமான எடை விழும்படி தவறு செய்து விட்டேன். ஆனாலும் அது அசரவில்லை. விழுந்த எடை 600 டன் என காட்டியது. அடுத்தடுத்தும் நன்கு இயங்கியது. ஏனென்றால் அது ஜெர்மானிய தயாரிப்பு.

இதைப் பற்றி நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒருவர் கேட்டார்.

இவ்வளோ நல்லா பண்ணுறாங்க. ஆனா சாப்ட்வேர் மற்றும் கணிணியில அவங்க ஒண்ணும் பெரிசா சாதிக்கலையே? என்றார்.

உடனே இன்னொருவர் சொன்னார். சிஸ்டம் ஹேங்க் ஆகுது, வைரஸ் வருது, பக் இருக்குது, அடுத்த வெர்சன்ல சரி பண்ணிடுறோன்னு சொல்லுறாங்க. அது அமெரிக்கன் ஐடியாலஜி.

ஆனா ஜெர்மன் தப்பே வரக்கூடாதுன்னு நினைப்பாங்க. அதனால் அவங்க புராடக்ட் டெவலப் பண்றதுக்குள்ள அது அவுட் டேட் ஆகுதோ என்னவோ என்று அங்கலாய்த்துக் கொண்டார்.

(1)
ஜெர்மானியர்கள் "செய்வன திருந்தச்செய்" ரகம். அங்க புரடக்ஷன் இஞினியரை விட தரக்கட்டுப்பாடு இஞினியருக்கு சம்பளமும் அதிகம் என்பதை நான் கண்கூடா கண்டவன். அவங்க கூட ஒரு மூன்று வருஷம் குப்பை கொட்டியவன் என்பதால் எனக்கு அது தெரியும். அப்படின்னா அவங்க "மோட்டோ" என்ன? வியாபாரம் என்பதை விட நாட்டின் பெயர் முக்கியம்... தரம் முக்கியம் என நினைக்கும் மனோபாவம் தான் இப்படி ஒரு பதிவு நம்ம சயிண்டிஸ் போடும் அளவு காரணம்.

சாதரணமான ஒரு டூல். ரின்ச்சஸ் (wrenches) எடுத்துகோங்க. நம்ம நாட்டிலே எது ஒசத்தின்னு கேட்டா "டபாரியா" மேக் தன் பெஸ்ட்ன்னு சொல்லுவாங்க. ஆனா ஒரு டபாரியா ரின்ச் வச்சுகிட்டு பத்தாவது மாடில ஸ்கஃபோல்டிங்ல வேலை பார்க்கும் ஒருத்தன் அதை கீழே தவறி போட்டுட்டா அது ஒரு காண்ட்கிரீட் தரையில் விழுந்தா டமால் தான். ஆனா அதே ஜெர்மானியின் usag, upak பிராண்டு வாங்கி புர்ஜ் கலீஃபாவின் 160 வது மாடில இருந்து கீழே போட்டுட்டு கீழே வந்து அவ்வை நெல்லிக்கனியை ஊதி எடுத்து சுருக்குப்பையிலே போட்டுகிட்டு போவது போல டூல் பாக்ஸ்ல போட்டு கிட்டு நடையை கட்டலாம். என்ன காரணம்னு யோசிச்சு பார்த்தா இந்த பதிவிலே மு.க. சொன்னது போல "பாக்டர் ஆஃப் சேஃப்டி" என்கிற ஒத்தை வார்த்தை தான் அவர்களின் பிரதானம். 

அவர்கள் வாட்ச் சிலது பார்த்தா "22 மீட்டர் கெப்பாசிட்டி"ன்னு போட்டிருக்கும். ஆனா அது 40 மீட்டர் உயரத்தில் இருந்து போட்டாலும் ஒன்னும் ஆகாது. ஏன்னா அவங்களின் "பாக்டர் ஆஃப் சேஃப்டி" சதம் பத்து முதல் 15 வரை. 

உதாரணத்துக்கு ஒரு தராசு இருக்குன்னு வச்சுகுங்க. ஒரு நாளைக்கு ஒருவன் அந்த தராசில் ஒரு கிலோ கத்தரிக்காய் ஒரு 500 முறை நிறுவை செஞ்சு போடுவான். அந்த தராசு ஒரு இரண்டு மாதத்தில் கன்ஸ்யூமருக்கு ஒரு கிலே சரக்கு தருவதுக்கு பதில் ஒரு கிலோவுக்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ ஆகிடும். ஏன்னா அது உழைக்கும் உழைப்பு அப்படி. எதுனா நெளிஞ்சு போகும். எடையில் வேரியேஷன் இருக்கும். அதை இரண்டு மாதத்துக்கு ஒரு முறை காலிப்ரேஷன்க்கு அனுப்பினா அவங்க சர்வீஸ் செஞ்சு அதே ஒரு கிலோ மட்டும் சரியா இருப்பது போல மாத்தி தருவாங்க. (நான் இங்க தராசு - கத்தரிக்காய்னு சொன்னது ஒரு உதாரணம் மட்டுமே. )

ஆனால் ஜெர்மானிய டூல்ஸ் எல்லாம் விற்பனையின் போதே இதன் காலிப்ரேஷன் பீரியட் 6 மாதம் அல்லது ஒரு வருஷம் ஆனா 100 சதம் யூஸ் பண்ணினா மட்டுமே என்ற குறிப்போடு வரும். அப்படி 100 சதம் நாம அதை யூஸ் செஞ்சாலும் காலிப்ரேஷன் அனுப்பும் போது அதன் வேரியேஷன் என்பது 0.1 சதம் தான் இருக்கும் என்பது கண்கூடு. (மற்ற நாட்டு பொருட்கள் 5 முதல் 7 சதம் வரை வேரியேஷன் இருக்கும்)அப்படின்னா அதன் தரம் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்க. ஆக ஒரு லெவல் மிஷின் ல அதாவது 100 மாடி, 150 மாடி கட்டிடம் கட்ட லெவல் மிஷின் என்பது எத்தனை துள்ளியமாக இருக்க வேண்டும் தெரியுமா? கொஞ்சம் மாறினா கூட பில்டிங் பைசா நகரத்து சாய்ந்த பில்டிங் மாதிரி ஆகிடும். அப்படி இருக்கும் போது ஒரு கஸ்டமர் ஜெர்மன் மிஷின் வாங்குவானா? அல்லது விலை குறைவா இருக்குன்னு வேற மிஷின் வாங்குவானா?

ஆகா அவங்க தரத்தில் நோ காம்ப்ரமைஸ் என்பதால் வியாபாரம் பத்தி அதிகம் கவலைப்படாமல் தானாக விற்பனை ஆகிவிடும். ஆக அவங்க கொள்கையில் உறுதியா இருக்காங்க. அதனால நாம எல்லாம் அதை நம்பி வாங்கும் அளவும், அதை புகழும் அளவும் ஜெர்மானிய பொருட்கள் இருக்கு.

அதே போல ஜெர்மானியர்கள் ஒரு பொருளை தயாரிக்கும் போது தரம் என்பதை மட்டுமே கொள்கையா வச்சிருக்காங்களே தவிர அது எங்க தயாராகுது, எந்த நாடு, எவன் அதை தயாரிக்கிறான் என்பதை பார்ப்பதில்லை. உதாரணம் அப்போதே ஹிட்லர் கோவையில் இருந்த ஜி டி நாயுடு கிட்டே ஹாட்லைன் போன் செஞ்சு வாங்கி பயன் படுத்தியதோடு அதே போல அங்கயும் தயரிச்சார் என்பதும் இப்போதும் பி எம் டபில்யூ காருக்கு தேவையான ஒரு சின்ன ரப்பர் (சுண்டுவிரலில் மாட்டிக்கும் அளவிலான) ஓ ரிங் மாயவரத்தில் சுஜா ரப்பர் பேக்டரி என்னும் நிறுவனத்தில் இருந்து தான் போகுது என்பதெல்லாம் சின்ன உதாரணங்கள். 

ஆக தரம் சரியா இருக்கனும் என்பது அவர்களின் ஒரே தாரக மந்திரம்.

(2)
ஜெர்மனியின் இந்த தொழில் புரட்சியில் ஹிட்லருக்கு பெரும் பங்கு உண்டு.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில், உலகம் முழுவதையும் பிடிக்க வேண்டும் என்ற வெறி கொண்ட ஹிட்லர் நாட்டின் அனைத்து உற்பத்திகளையும் நிறுத்தி விட்டு வெறும் ஆயுதங்களும், ஆயுதம் சார்ந்த இயந்திரங்களும் மட்டுமே தயாரிக்க கட்டளையிட்டார். 

அப்படி தயாரிக்கப்படும் இயந்திரங்களில் பழுது என்ற சொல்லே இருக்கக் கூடாது என்பதை கட்டாயமாக்கினார். ஆகவே தான் இன்றும் ஜெர்மனிய பொருள்களில் பழுது என்பது மிக அரிதான ஒன்றாகவே இருக்கிறது. 

ஆனால் இது ஒரு விபரீத விளைவையும் ஜெர்மனியில் விளைவித்தது. தங்கள் நாட்டு இயந்திரங்கள் என்றுமே பழுதாவதில்லை என்ற இறுமாப்பு ஜெர்மானிய இன்ஜினியர்கள் மனதில் வேரூன்ற ஆரம்பித்து விட்டது. அவர்கள் இன்னும் அந்த இரண்டாம் உலகப் போர் கால உற்பத்தி நிபுணங்களின் போதையில் கண்முடி திளைத்திருக்க, மற்ற நாடுகளெல்லாம் சந்தடியின்றி சந்தியில் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க பல டெக்னிக்குகளை களமிறக்கி விட்டன.

ஜெர்மனி கண் திறந்து பார்த்த பொழுது உலகம் எங்கேயோ போய் விட்டிருந்தது. இன்னும் என்னோடு பணி செய்யும் பல ஜெர்மனிய இன்ஜினியர்கள் அந்த பழைய போதையிலிருந்து வெளி வரவில்லை. 

அதனால்தான் அவர்கள் எதையும் தாங்கும் (Robust) இயந்திரங்களை உருவாக்கினாலும் இன்னும் சந்தையில் அதை விற்க முடியாமல் திணறுகிறார்கள்.

ஆனால் இன்றைய இளைய தலைமுறை ஜெர்மானியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த மாயையிலிருந்து வெளி வருகிறார்கள் என்பது உண்மை.

பகுதி 1 மற்றும் 2 முறையே நண்பர்கள் அபி அப்பா மற்றும் தராசு அப்போது பின்னூட்டத்தில் தெரிவித்தது.

முரளிகண்ணண் முகநூல் வழி 

Link to comment
Share on other sites

 

டீ · @teakkadai

 

திருமணமான புதிதில் உன்னிடம் பேசிக் கொண்டேயிருப்பேன். ஒரு தொடர்வண்டி பயனத்தில் அதே போல் நான் பேசிக்கொண்டே வந்தபோது, எதிர் இருக்கை பயணி புருவம் உயர்த்தினார். அவரிடம் நான் சொல்லலாம் என நினைத்தேன். " நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன். இந்த 25 ஆண்டுகளில் காதலாக யாரிடமும் பேசியதில்லை. இப்போது சேர்த்து வைத்து பேசிக்கொண்டிருக்கிறேன்".

ஒருமுறை அலுவலகத்தில் இருந்து திரும்பிவந்த போது கோபமாய் இருந்தாய். திருமணத்துக்கு இரு ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு நோட்டில் எழுதி வைத்திருந்த மொக்கை கவிதைகளை காட்டி, "யாரை நினைத்து எழுதுயது இது?" என சண்டையிட்டாய். அப்பொழுது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி இருக்கிறதே, இன்று வரை அதை அனுபவித்ததில்லை நான். ஆஹா நம் மீதும் பொசசிவ்வாய் இருக்க ஒரு பெண் இருக்கிறாளே!!! . நம்மாலும் ஒரு பெண்ணின் மனதில் இடம் பிடிக்க முடிந்திருக்கிறதே!!! என்று.

உறவிலும் சரி, நட்பு வட்டாரத்திலும் சரி என்றும் நான் முதன்மையாகவோ, முக்கியமான நபராகவோ கருதப்பட்டதில்லை. வந்தால் சரி என்பார்கள். வராவிட்டால் அதைப்பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். நீ இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்டா என்ற பூச்செண்டை யாரும் எனக்கு கொடுத்ததில்லை. ஒரு முறை உன் ஊர் திருவிழாவுக்கு சென்றிருந்தாய். நான் தொலைபேசியில் அழைத்த போது சொன்னாய் "போன தடவை ஒவ்வொண்ணுக்கும் கமெண்ட் அடிச்சு சிரிக்க வச்சீங்க, இந்த தடவை நீங்க இல்லாம ஒரே போர்". கால காலமாய் பூச்செண்டு எதிர்பார்த்தவனுக்கு ஆர்கிட் மலர் தோட்டம் அந்த பதில்.

ஜாதி, ஜாதகம் பார்த்து திருமணம் செய்கிறார்களே என்று சமுதாயத்தின் மீது ஒரு வெறுப்பு இருந்தது. காதல் திருமணங்கள் மட்டும் தான் நடக்க வேண்டும் என நினைப்பேன். ஆனால் இப்போதோ சமுதாயத்தை வணங்கிக்கொண்டிருக்கிறேன். பெண்களை துளியளவு கூட இம்ப்ரெஸ் பண்ண இயலாத தோற்றம், ஆரம்பித்த உடனேயே அறுக்காதடா என நண்பர்களே புலம்பும் அளவுக்கு போரான என் பேச்சு, சராசரி அறிவு, அதற்கும் கீழான வசதி என இருந்த எனக்கு உன்னைப்போல் ஒரு தேவதையை எப்படி காதலித்து அடையமுடியும். வாழ்க ஜாதி,ஜாதகம்.

இதுவரை நான் அடைந்த தோல்விகளெல்லாம் உன்னை திருமணம் செய்ததால் அர்த்தமற்றதாகிப் போய்விட்டது.

எவ்வளவு அழைப்பு வார்த்தைகள் இருந்தாலும் உன்னை அழைப்பது சகி என்று தான். தொடர்ந்து இதுபோலவே என்னை சகித்துக்கொள் என்று வேண்டிக்கொள்ளத்தான்.

 

 

2)

 

ப்பா! 

சொல்லு நவீன். 

அப்பா படித்துக்கொண்டிருந்த பக்கத்தின் எதிர்பக்கம் இருந்த India is the fifth largest producer if e waste செய்தியைப் பார்த்துவிட்டு

" e waste ன்னா என்னப்பா?"

போன வாரம் எட்டு ஜி பி பத்தல அப்டின்னு ஒரு பதினாறு ஜி.பி மெமரி கார்ட் வாங்கினோம்ல. அந்த எட்டு ஜி.பிய என்ன பண்ணோம். 

சும்மாதான் வச்சுருக்கோம். அத என்ன பண்ண முடியும். 

பீரோக்குள்ள எவ்வளவு செல் சும்மாக் கிடக்கு

மூணு. 

எதுக்காக? 

புதுசு வாங்கினோம் ஆன்லைன்ல. அதனால சும்மா கிடக்கு. நம்மளோட செல்லுக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா போட்டுக்கலாம்னு வச்சிருக்கோம். ஆனா அது அப்டியேதான் இருக்கு.

அதான் நீ கேட்ட e waste. நம்ம வீட்டுல மட்டும் ஒரு மெமரி கார்ட், மூணு செல்போன் இருக்கு. இதத்தவிர அதோட ஹெட்போன், சார்ஜர், டேட்டா கேபிள்னு. சிலந்திவலை மாதிரி வீடுபுல்லா ஒயர் வலை. இப்படி எலெக்ட்ரானிக்ஸா வாங்கிக் குவிச்சா இதான் நெலம. நாலு வருஷம் முன்னாடி செல்போன்ல பேட்டரி கழட்டற மாதிரி வந்துச்சு. பேட்டரி போச்சுன்னா புதுசு வாங்கிப்போட்டு அதே செல் வச்சுகிட்டோம். ஒரு விஷயம் சொல்றேன். நீ சைக்கிள் துடைக்க வச்சிருக்கற துணி இதுக்கு முன்னாடி கிச்சன்ல கால்மிதியா கிடந்தது. அதுக்கும் முன்னாடி இட்லித்துணி, அதுக்கு முன்னாடி வடகம் போட வச்சிருந்தது, அதுக்கு முன்னாடி என் இடுப்பு வேட்டி. இப்போ சொல்லு இதே மாதிரி நாம எலெக்ட்ரானிக்ஸையும் வச்சிருந்தா கம்பெனிக்காரன் என்ன ஆவான்?

ஹா ஹா. ஆமாம். பாவம்.

இப்போ நம்ம வீட்டுல உனக்கும் சேர்த்து மூணு செல்போன். எந்த செல்லுலயாவது பேட்டரிய தனியா கழட்ட முடியுமா? 

முடியாது! 

பேட்டரி போச்சுன்னா செல்லு போச்சுல்ல. டிஸ்ப்ளே போச்சுன்னா சரி பண்ண மூவாயிரம் ஆகும். இன்னொரு மூவாயிரம் போட்டா புதுசுன்னு மனசுல விழுந்துடுச்சில்ல. அவனுக்கு வியாபாரம் நடக்குதுல்ல. அந்த குப்பைல லெட், குரோமியம், கேன்சர் வரவைக்கற பொருட்கள்னு நிறைய இருக்கு. இது வீடுகள்ல மட்டும். இதத்தவிர சிடி, டிவிடி, ப்ளாப்பி டிஸ்க் அப்புடின்னு அலுவலகங்கள்ல இருந்து வர்ற எலெக்ட்ரானிக் குப்பைகளும் இதுல வரும்.

ஆமால்ல. இதுக்கு என்னப்பா  பண்ணலாம்?

கூட இருக்கறவன் வச்சிருக்கான். பார்க்க நல்லாருக்கு இதயெல்லாம் விட்டுட்டு அதுல இருக்கற எல்லா வசதிகளும் நமக்குத் தேவையான்னு பாக்கனும். ரெண்டு வருஷமாவது தாக்குப் பிடிக்கற அளவுக்கு உபயோகப்படுத்தனும்.அப்புடி வேற வழியே இல்ல குப்பைதான் அப்டின்னா கம்பெனி சர்வீஸ் சென்டர்கள்ல இப்படிப்பட்ட குப்பைகளுக்காக தனி தொட்டி வச்சுருப்பாங்க. வீட்டுக்குப்பையோட போடாம அதுல போட்டுட்டா அவங்க அதை முறையா மறுசுழற்சிக்கு பயன்படுத்துவாங்க. கடைகள்ல வாங்குனா எக்ஸ்சேஞ்ல போடலாம். சில ஆன்லைன் சந்தைகள் இப்போ எக்ஸ்சேஞ்ச் கொண்டு வந்துட்டாங்க. அத பயன்படுத்தலாம். 

முகநூல் 

Link to comment
Share on other sites

தனித்து நிற்கும் பறவை..!
----------------------------------------

ஏன் என்று தெரியாது.. சிலரை பிடித்துவிடும்.. அப்படிதான்  அந்த  தாத்தா பாட்டியையும் எனக்கு பிடித்திருந்தது. அவர்கள் பெயர் மைக்கேல்-லில்லி. 

மூன்றாண்டுகளுக்கு முன் எங்கள் எதிர் வீட்டுக்கு வாடகைக்கு குடி வந்தார்கள்.  வயது 70க்கும் மேலிருக்கும். மலையாளிகள். 

எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் இளமாறனை தவிர குழந்தைகளே இல்லை என்பதால் எதிர் வீட்டுக்கு புதிதாக வருபவர்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் இளமாறனுக்கு விளையாட துணை கிடைக்கும் என்று நானும் மனைவியும் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் வந்தவர்கள் வயதான தம்பதிகள் மட்டுமே என்றதும் சிறிது ஏமாற்றமாக தான் இருந்தது. 

முதல் நாள் பரஸ்பர அறிமுகத்திற்காக மனைவியுடன் போய் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள்   பல ஆண்டுகளாக சென்னையில் இருப்பவர்கள். 

திருமணமான  மகனும்  மகளும் உண்டு. பணி நிமித்தம்  மகன் குடும்பம் பூனாவிலும், மகள் குடும்பம் கனடாவிலும் இருக்கிறார்கள். 

பூனாவிற்கு  வந்துவிடுமாறு மகன் எவ்வளவோ கூப்பிட்டும் அடம்பிடித்து சென்னையிலேயே இருந்திருக்கிறார்கள்.

அண்ணா நகரில் சொந்தமாக பெரிய வீடொன்று இருக்கிறது. ஆனால் அங்கு தனியாக இருப்பது சரியல்ல என நினைத்து அதை வாடகைக்கு விட்டுவிட்டு இந்த வீட்டிற்கு குடி வந்திருப்பதாக தெரிவித்தார்கள். 

வயதானவர்கள்.. தனியாக இருக்கிறார்கள் என்பதால் கூட அவர்களை எனக்கு பிடித்துப்போயிருக்கலாம். ஆறுதலற்ற உணர்வு வந்துவிடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது பேசப்போவேன். 

அப்போதெல்லாம் வீட்டில் கிறிஸ்த்துவம் சார்ந்த டிவி சேனல்கள் தான் ஓடிக் கொண்டிருக்கும்.
வயதானவர்களின் இயல்புபடி  தாத்தா தான் பேசிக் கொண்டிருப்பார். நான் `ம்ம்’ கொட்டிக் கொண்டிருப்பேன். 

தாத்தா கொஞ்சம் படம் வரைவார். கிறிஸ்த்துமஸ்க்கு ஸ்டார்ஸ் எல்லாம் அவரே செய்து வீட்டை அழகு படுத்துவார். அதை சந்தோசமாக என்னை கூப்பிட்டு குழந்தைபோல் காட்டுவார்.

``சூப்பரா இருக்கு தாத்தா..” என்று நான் சொல்லும்போது தாத்தாவுக்கும் பாட்டிக்கும் அவ்வளவு சந்தோசமாக இருக்கும். 

அவ்வப்போது  ஒரு உறவினர் பையன் மட்டும் வந்து எட்டிப் பார்த்துவிட்டு போவான். விடுமுறையில் மகனும், மகளும் குடும்பத்தோடு வந்துவிட்டு போவார்கள். 

தாத்தாவும் பாட்டியும் அவ்வளவு அந்நியோன்யமாக இருப்பார்கள். இருவரில் பாட்டி நல்ல ஆரோக்கியமாக இருந்தார். தாத்தா தடுமாற்றமாக தான் நடப்பார். பாட்டி தான் அவரது கையை பிடித்து கொண்டு சர்ச்சுக்கும் வாக்கிங்கும் கூட்டிச் செல்வார். 

வயதான தம்பதிகள் பரஸ்பரம் ஒருவர் கையை ஒருவர் பிடித்து நடந்து செல்லும் காட்சி அவ்வளவு அழகாக இருக்கும். . நானும் மனைவியும் அந்த காட்சியை பால்கனியில் நின்று ரசித்து பார்த்து கொண்டிருப்போம். 

இளஞ்செழியன் பிறந்த சமயத்தில் பாட்டி என் மனைவிக்காக ஏதாவது டிபன் செய்து கொண்டு வந்து ``சாப்பிடு மோளே..” என்று சொல்லி கொடுத்துவிட்டு போவார். அவரது மகனுக்கு குழந்தை இல்லை என்ற ஏக்கம் அவர்களிடம் பேசும்போது கவனித்திருக்கிறேன்.   அதோடு மகனும் மகளும் கூட இல்லை என்பதால் எங்கள் மீது பாசமாக இருந்தார்கள். நாங்களும் அவர்களிடம் அதே பாசத்துடன் தான் இருந்தோம்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஒரு நாள் பாட்டிக்கு உடம்பு சரியில்லாமல் போனது. கிளினிக்கில் மருத்துவரை பார்த்துவிட்டு வந்து ``ஒண்ணுமில்ல.. ஒரு வாரம் மாத்திரை சாப்பிட்டா போதும்னு டாக்டர் சொல்லியிருக்கார்” என்றார் தாத்தா. 

மாத்திரைகள் முடியும்போது சொல்வார். வாங்கி கொண்டு வந்து கொடுப்பேன். மனைவி அவர்களுக்கும் சேர்த்து சமையல் செய்து கொடுப்பார். அவ்வப்போது பக்கத்துவீட்டு அக்காவும் ஏதாவது செய்து கொடுப்பார்.

இரண்டு வாரம் ஒண்ணும் பிரச்னை இல்லை. ஆனால் ஒரு நாள் வேலை முடிந்து வீட்டுக்குள் நுழைந்த உடனே , ``பாட்டிக்கு ரொம்ப முடியல போல.. பார்த்துட்டு வாங்க” என்றார் மனைவி. 

போய் பார்த்தேன். பாட்டி படுக்கையில் இருந்தார். தாத்தா பக்கத்தில்  அமர்ந்து பைபிள் படித்துக் கொண்டிருந்தார். பாட்டிக்கு மூச்சு விட கடும் சிரமமாக இருந்தது. ஒவ்வொரு முறை மூச்சு இழுக்கும்போதும் வயிறு தூக்கி தூக்கி போட்டது. ஏதோ சரியில்லை என்று உள்ளுணர்வு சொன்னது. 

என்னை பார்த்ததும், ``அதே மாத்திரை கொடுத்தா போதும்.. பயப்பட ஒண்ணுமில்லனு டாக்டர் சொல்லியிருக்காரு” என்றார் தாத்தா நான் கேட்பதற்கு முன்பே. 

பாட்டிக்கு மகன் மீது ஏக பாசம்.  அவரை பார்க்கும் ஆசை இருந்தது. மகன் வந்து பார்த்துவிட்டாலே தெம்பாகிவிடுவார் என்று தோன்றியது. 

ஆனால் தாத்தாவுக்கோ பையனை சென்னைக்கு வரச்சொல்லி தொந்தரவு பண்ண விரும்பவில்லை. அதனால் சாதாரண காய்ச்சல் தான் என்று மகனிடம் தகவல் சொல்லியிருக்கிறார். 

``ஏதும் அவசரம்னா கூப்பிடுங்க..” என்று சொல்லிவிட்டு படுக்க போய்விட்டேன். நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை.

காலையில் சீக்கிரமே எழுந்து பாட்டியை பார்க்க போனேன். கொஞ்சம் கூட முன்னேற்றமில்லை. இனிமேலும் தாத்தா பேச்சை கேட்பது வேலைக்கு ஆகாது என்று உடனடியாக டாக்ஸியை வரவைத்தேன். 

`அப்பல்லோ’ என்ற கொள்ளைகார மருத்துவமனைக்கு அழைத்துப்போக விருப்பமில்லை. சகோதரி இளவஞ்சியின் கணவர் மருத்துவர் இளையகுமாரிடம் விவரம் சொல்லி எங்கு சேர்க்கலாம் என்று கேட்டேன். 

``அண்ணா நகர் பக்கம் என்பதால் சுந்தரம் மெடிக்கல் பவுண்டேஷனில் சேர்ப்பது நல்லது” என்றார். 

அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லிவிட்டு, பாட்டியை டாக்ஸியில் ஏற்றிக் கொண்டு உடனடியாக எஸ்.எம்.எஃப். மருத்துவமனை போய் சேர்ந்தேன். எமர்ஜென்ஸி என்றதும் ஊழியர்கள் பரபரவென்று இயங்கினார்கள். 

அட்மிஷன் பார்மாலிட்டி எல்லாம் முடித்தப்பின் தாத்தாவை ஒரு இருக்கையில் அமர வைத்துவிட்டு, அவருக்கு தெரியாமல் சிறிது தள்ளி வந்து அவரது மகனுக்கு போன் பண்ணி  விபரத்தை சொன்னேன். 

பதறியவர் `உடனே கிளம்பி வருகிறேன்.. “என்றபடி போனை வைத்தார். மீண்டும் தாத்தா அருகே வந்து அமர்ந்தேன். தாத்தாவின் கைகள் நடுங்கி கொண்டிருந்தது. ``பயப்பட ஒண்ணுமில்ல தாத்தா.. பாட்டிக்கு சரியாகிடும்.. கவலைப்படாதீங்க” என்று அந்த கைகளை பிடித்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தேன். 

பூனாவிலிருந்து அவரது மகன் விமானத்தில் கிளம்புவதற்கு முன் சென்னையிலிருக்கும் உறவினர்கள் சிலரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தார். அவர்களை பார்த்ததும் தான் தாத்தாவுக்கு நான் அவரது மகனிடம் தகவல் சொல்லிவிட்டேன் என்பது புரிந்து விட்டது. 

அவ்வளவுதான்.. ``எதுக்கு பாலா என் பையன்கிட்ட சொன்னீங்க.. பாருங்க இப்போ இவங்களாம் வர்றாங்க..” என்று என்னிடம் கோபப்பட ஆரம்பித்தார். நான் கண்டுக்கொள்ளவில்லை. 

மாலையில் மகன் வந்து சேர்ந்தார்.. மருத்துவர்களுடன் பேசினார்.. அம்மாவும் மகனும் கண்ணீரில் நனைந்தார்கள். பாட்டிக்கு முதுகில் ஊசி குத்தி  நீரை வெளியே எடுத்தார்கள்.  கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேல் பாட்டி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்து ஓரளவு நடமாட முடியும் அளவு உடல்நிலையில் வீடு வந்து சேர்ந்தார்.  

வீடு வந்து சேர்ந்ததும்.. ``எண்ட மோனே.. ” என்று நடுங்கும் விரல்கள் என் கைகளை அணைத்துக் கொண்டார். `` எண்ட மோன் பாலாவாக்கும்  என்னை காப்பாத்தினது” என்று பக்கத்திலிருந்த உறவினரை பார்த்து சொல்லும்போதே கண்களில் நீர் வடிந்தது. 

பாட்டிக்கு நுரையீரல் கேன்ஸர்.. அதிக பட்சம் 3 மாதம் தாங்கும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.. இந்த தகவல் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் சொல்ல வேண்டாம் என்று தவிர்த்துவிட்டார்கள். என்னிடமும் அதையே சொல்லிவிட்டார்கள்.

இனி தனியாக விட முடியாது என்பதால் மகன் இருவரையும் பூனாவுக்கே அழைத்து செல்ல முடிவு செய்துவிட்டார். வீடு காலி செய்வதற்கு முன் என் மனைவியிடம் வந்தார் பாட்டி, 

``மோளே.. உனக்கு என் வீட்டிலிருந்து என்ன பொருள் வேணும்னாலும் எடுத்துக்கோ.. நாங்க பையன் கூடவே போறோம்..” என்றார்.

``அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.. நீங்க நல்லபடியா திரும்ப வாங்க.. அதுபோதும்..” என்று கூறி வழி அனுப்பி வைத்தோம். 

விமான நிலையத்திற்கு செல்வதற்காக காரில் ஏறி அமர்ந்திருக்கும் வரை ``எண்ட மோன் பாலாவாக்கும்..” என்று சந்தோசமாக சொல்லிக் கொண்டிருந்தார்.

பாட்டியும் தாத்தாவும் இங்கிருந்து உயிரோடு  போகிறார்கள் என்பதே எங்களுக்கு பெரிய நிம்மதியாக இருந்தது.

பூனா போனப்பிறகும் மாதத்திற்கு ஒருமுறையாவது என் மனைவியுடன் போனில் பேசிவிடுவார். தாத்தாவுக்கு மறுபடியும் சென்னைக்கு அதே வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்ற ஆசை இருந்தது. பேசும்போதெல்லாம் ``அந்த வீட்டுக்கு புதுசா ஆளுங்க வந்துட்டாங்களா..” என்று கேட்க தவற மாட்டார்.

ஒராண்டுக்கும் மேலாகிவிட்டது. அவர்கள் பூனாவுக்கு சென்று. ஒரு மாதத்திற்கு முன்பு கூட பேசினேன். ``பாட்டி நல்லா இருக்காங்க” என்றார். 

கடந்த இரு வாரத்திற்குமுன் அதிகாலை தூக்கத்திலிருந்தவனை செல்போன் எழுப்பி விட்டது. புது எண். யார் என்ற யோசனையில் எடுத்தபோது, ``பூனாவிலிருந்து டெரிக்.. மைக்கேல்  பையன் பேசுறேன்” என்றார். 

அதிகாலை போன்.. புரிந்து விட்டது.. பாட்டி.? என்றேன் பதட்டமாக..

``இப்போ தான் கொஞ்ச நேரம் ஆச்சு.. பெயின் இல்லாம அமைதியா போய்ட்டாங்க.. உடனே உங்க கிட்ட சொல்லணும்னு தோணுச்சு.. அதான்..” என்றார் கலங்கியபடி.

``எண்ட மோன் பாலாவாக்கும்..” காரில் அமர்ந்தபடி பாட்டி சொன்னது இப்போது அப்படியே நினைவில் இருக்கிறது..

லில்லி பாட்டி இறந்து இரண்டுவாரம் ஆகிவிட்டது.. 
தாத்தாக்கிட்ட இன்னும் பேசல..

பேசணும் .. 

ஆனா என்ன பேசுறதுனு தான் தெரியல.. :(

-கார்ட்டூனிஸ்ட் பாலா( முகநூல் )
29-5-15

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரின் அனுபவபப் பகிர்வுகளை... வாசிக்கும் போது, நன்றாக உள்ளது.
கார்ட்டூனிஸ்ட் பாலாவின், எதிர் வீட்டுக்கு வந்த  முதிய மலையாளத் தம்பதிகளுக்கு....
அவர் உதவி செய்த விதம், நெஞ்சை தொட்டது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 5/28/2016 at 1:36 PM, தமிழ் சிறி said:

ஒவ்வொருவரின் அனுபவபப் பகிர்வுகளை... வாசிக்கும் போது, நன்றாக உள்ளது.
கார்ட்டூனிஸ்ட் பாலாவின், எதிர் வீட்டுக்கு வந்த  முதிய மலையாளத் தம்பதிகளுக்கு....
அவர் உதவி செய்த விதம், நெஞ்சை தொட்டது.

நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் :)

1)

 

பொதுவாக கூட்டம் அதிகமில்லாமல் உட்கார்ந்து செல்ல கூடிய பேருந்தில் தான் பெரும்பாலும் பயணிப்பேன். இதற்காக சற்று முன்னமயே வீட்டிலிருந்து கிளம்பிவிடுவேன். தவிர்க்க முடியாத நேரத்தில் தான் கூட்டமான பேருந்தில் பயணம். இன்று சற்று காலியான ஒன்றில் ஏறி கடைசி பின் ஸீட்டின் நடுவே உட்கார்ந்து புத்தகத்தை விரித்தேன்.

சில நேரங்களில் கால் மேல் கால் போட்டு உட்காருவேன். அது ஒரு கம்போர்ட் Sometimes  அவ்வளவு தான்.அதை தாண்டி அதில் ஏதுமில்லை. வாசிப்பு சுவராஸ்யத்தில் மூழ்க அடுத்த நிறுத்தத்தில் எனக்கு முன் இருந்த ஆண் எழுந்தார்.

எந்த இடம் என பார்ப்பதற்காக புத்தகத்தில் இருந்து தலையை நிமிர்த்த ஒரு அருவெறுப்பான தோணியில் முகத்தை வைத்துகொண்ட அந்த ஆண், கால் மேல இருந்து கால எடும்மா என சொல்ல சுர்ரென உச்சிக்கு ரத்தம் பாய உங்களுக்கு என்ன வந்துச்சு, என் கால் மேல் நான் கால் போட்டிருப்பது உங்களை எங்கே பாதிச்சுது. என் வசதிக்கு உட்காருகிறேன் என்று சற்று சத்தமாக பேசினேன்.

என் குரல் உயர்ந்ததை எதிர்பார்க்கவில்லையோ என்னவோ  எனக்கு ஒண்ணுமில்லை, உங்களுக்கு முன்னாடி வயசானவங்க உட்கார்ந்திருக்காங்க அவங்க வயசுக்கு மரியாதை கொடுங்க என்று சொல்ல, நான் வேணா இறங்கி அவங்க. கால்கிட்ட உட்காரவா என கேட்க, அந்த ஆள் முறைக்க,  வாயை மூடிட்டு இறங்குங்க இந்த அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றது க்ளாஸ் எடுக்குற வேலையெல்லாம் வேற எங்கயாச்சும் வச்சுக்குங்க என்று சொன்னேன்.

பொம்பிளைகளுக்கு மரியாதையே தெரியுறதில்லை எல்லாம் திமிரு,  படிக்கிற திமிரு, சம்பாரிக்கிற திமிரு என்று முணுமுணுக்க சத்தம் கேட்டு வந்த கண்டக்டர் யாருட்டயோ வசமா வாங்க போற இறங்கு என்றார்.

கோவத்தில் புத்தகம் தொடர முடியவில்லை. அறிமுகமே இல்லாத ஒரு பெண் தன் கால் மேல் போட்டு உட்காருவதை கூட தாங்க முடியாத இந்த ஆண் வீட்டு பெண்களின் நிலையை நினைத்து பார்த்தேன். கோவம் போய் மிகப்பெரும் ஆயாசம் வந்தது.

 

முகநூல் -kamali pannerselvam

 2)

கடலிலும் , வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் நேரிடையாக பருவநிலை மாற்றங்களுக்கு வித்திடுகிறது . குறிப்பாக பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்பநிலை  மாற்றம் புவியின் காலநிலை மாற்றங்களுக்கு முக்கிய காரணியாக இருக்கிறது. அங்கு கடலின் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக உயர்ந்தால் அந்த நிலையை எல்நினோ  ( El Niño ) என்ற பெயரிலும்  , வெப்பநிலை குறைந்தால் லா நினோ (  La Niña )  என்ற பெயரிலும் அழைக்கபடுகிறது. ‘‘எல்-நினோ‘‘ க்கள் பெரும்பாலும் மேற்கு திசையை நோக்கி தான் விரும்பிப்போகும். மேற்காக தமிழகத்தை நோக்கி அல்லது தென்மேற்கு, அல்லது ஆந்திரா, ஒரிஸ்ஸா ஏன் சில சமயம் ஏன் பங்களாதேஷை நோக்கியும் போகும். சில சமயம் நீண்ட கடற்பயணமாக போகும்போது இந்தக் காற்று அதிக சக்தியை பெறும். இதனால் புயலாகவும் மாறும். பெரும்பாலும்  நீண்ட பயணத்தை தொடராது அது மீளாது, இதனால் புயலும் உருவாகாது. இப்படி பலம் அடையாது என்றாலும் அழுத்தக் குறைவு(depression) குறைந்த அழுத்தம்(low pressure) போன்றவைகளால் மழையை உருவாக்கும் எல்லா அம்சங்களும் இதற்கு உண்டு.

 சில சமயங்களில் வெவ்வேறு இடங்களில் ஏற்ப்படும் இந்த இரண்டு காலநிலை மாற்றங்களும் பூமத்திய ரேகை பகுதியில் ஒன்றாக சேரும்பொழுது மேலும் சில வளி மண்டலங்களின் செயல்பாடுகளும் ஒன்றாக சேரும்பொழுது என்சோ (  El Niño Southern Oscillation ) என்ற பருவநிலை அமைப்பு உருவாகும். இது நிலையாக ஒரே இடத்தில் மையம் கொண்டு பல்வேறு காலநிலைகளுக்கு காரணமாகிறது . இந்த வகை காலநிலையில்தான் தென்மேற்கு பருவமழை, புயல் போன்ற பருவநிலை காரணிகள் உருவாகிறது. இப்பொழுது உருவாகியிருக்கும் என்சோ அமைப்போடு புதிதாக என்.ஜே.ஒ என்ற மேடன் ஜூலியன் அலைவு(Madden–Julian oscillation) உருவாகி இருக்கிறது . இது இடைப்பட்ட பருவக்காலங்களில் வேறுபட்ட வெப்பமண்டலங்களை வளிமண்டலத்தில் உருவாக்கும். இந்திய கடற்பகுதியில் தொடங்கி பசிபிக் பெருங்கடல் வரை ஒரு சர்கிளில் முப்பது முதல்  நாற்பது நாட்கள் வரை பயணிக்கும். 

இந்த அழுத்த அலைவு(pressure wave) தான் தற்போது மேம்பட்ட மற்றும் வெப்ப மண்டல மழை அடக்கியாக இருந்தது. சிலசமயம் இது பலவீனமாகவும் இருக்கும் இம்முறை பலமாக இருக்கிறது . இந்த அலைவு கடலில் இருந்தால் அது வேறுவகையில் செயல்படும். அதாவது செயல்பாடுகளில் மாற்றத்தை(convert activity) ஏற்படுத்திவிடும். ஒன்று போய் ஒன்றாக குறைந்த காற்றழுத்த மண்டலம் வங்களாவிரிகுடாவில் உருவாவதற்கு இந்த மேடன் ஜூலியன் அலைவு தான் காரணம். இதனுடைய ஓட்டு மொத்த சுற்றோட்டங்கள் சிலநாள் மழை மற்றும் சிலநாள் அனல்காற்றும் கொடுக்ககூடிய முரண்பாடான காலநிலை மாற்றமும்  அல்லது தாறுமாறான மழையையும்  கொடுக்கும் வில்லன் இது. எப்போதெல்லாம் இந்திய பெருங்கடலுக்கு இது வருகிறதோ அப்போதெல்லாம் நம்முடைய கடற்பகுதியின் செயல்பாடும் வேகமாக இருக்கும். ஏற்கனவே இவ்வாண்டு எல்-நினோ இருந்து அது பொதுவாக மேற்கு நோக்கி[தமிழக கடற்கரையை] தான் பயணிக்கும். இது மிஞ்சிய மழையை தான் கொடுத்திருக்கும். ஆனால் எல்-நினோவோடு என்.ஜே.ஓ சேர இரண்டும் சேர்ந்து செயல்படும் ‘‘என்சோ‘‘(El-Nino-Southern oscillation) வே அதிக மழையைக் கொடுக்கும்.

இந்த அமைப்பு தற்போது இலங்கை  மற்றும் தென் தமிழகம் இடையில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக பலமான காற்றுடன் ,பெரும் மழையை தென் தமிழகத்திற்கு கொண்டுவரும். இது மேலும் வலுப்பெறும் பட்சத்தில் சென்னை பெருவெள்ளம் போல தென் தமிழகத்தில் மழையையும் ,பெரு வெள்ளத்தையும் எதிர்நோக்கலாம்.

முகநூல் - பெயர் தெரியாது

 

3)

இப்ராஹிம் லோடியை வீழ்த்த படையெடுத்து வந்த பாபர் லோடியின் பிரம்மாண்ட படை பலத்தை பார்த்து மலைத்து நின்றார்.ஆனாலும் தனது பீரங்கிபடையின் மீது பெரும் நம்பிக்கை பாபருக்கு இருந்தது.

போருக்கு முந்தைய நாள் முகாமிட்ட பாபர் தனது வீரர்களுக்கு இரவு உணவு தயாரிப்பதை பார்வையிட்டு கொண்டிருந்தார்.தொலைவில் முகாமிட்டிருந்த இந்தியபடை முகாமில் பல இடங்களில் அடுப்பு எரிந்ததால் குழப்பமடைந்தார்.விசாரித்த போது சாதிவாரியாக பிரிந்து வீரர்கள் உணவு சமைப்பதை அறிந்து கொண்டார்.அப்போதே வெற்றிப்புன்னகை பாபரின் உதடுகளில் அமர்ந்தது."உணவு உண்பதில் கூட ஒற்றுமை இல்லாத இந்தியர்களை வெல்வது எளிது.!"பாபரின் கணிப்பு பலித்து மொகாலய சாம்ராஜ்ஜியம் இந்தியாவில் கால் பதித்தது.!#அப்பவே அப்படி.!

 

முகநூல் -கார்த்திக் கார்த்திக் 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

ஹோண்டாவின் வெற்றிப் பயணம்!

“பிழைக்கத் தெரியாத முட்டாள்” என்று அந்த 18 வயது இளைஞனைத் திட்டினார் அவனது அப்பா.

“தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன்” என்று கேலி பேசினர் அவனது நண்பர்கள்.

அவன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை முடிவுக்குப் போயிருக்கக்கூடும்.அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியைச் சாதித்த அந்த மாமனிதர் சாய்க்கிரோ ஹோண்டா. தனது வாழ்க்கை அனுபத்தைச் சாறுபிழிந்து சொன்னார்: “வெற்றி என்பது 99 சதவிகிதம் தோல்விகளால் நிரம்பியது! "

டொயோட்டா கம்பெனிக்குப் பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்க வேண்டும் என்பது மாணவர் சாய்க்கிரோ ஹோண்டாவின் கனவு. யாருக்காகவும் அவர் காத்திருக்கவில்லை. அப்பாவின் வசவு, சக மாணவர்களின் பரிகசிப்புக்கு இடையே, மாதிரி உலைக்கூடம் ஒன்றை 1928-ம் ஆண்டு உருவாக்கினார். இரவு பகலாக உழைத்தார்.

ஓராண்டு உழைத்து உருவாக்கிய, மாதிரி பிஸ்டனை பெரும் எதிர்பார்ப்புடன் டொயோட்டா கம்பெனிக்கு எடுத்துச் சென்றார். “எங்கள் எதிர்பார்ப்புக்குரிய தரத்தில் உனது பிஸ்டன் இல்லை” என்று நிராகரித்துவிட்டார்கள் பொறியாளர்கள். முதலாவது கனவுத் திட்டம் படுதோல்வி அடைந்தது. மனம் பாரமாக இருந்தது. திரட்டிவைத்த முதலீடு மொத்தமும் காலி. எல்லோரும் வசைமாரி பொழிந்தார்கள்.

புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மனப் பக்குவத்தோடு, ஹோண்டா மீண்டும் முயற்சித்தார். மேலும் பல மாதங்கள் விடாப்பிடியாக உழைத்து அவர் உருவாக்கிய புதிய பிஸ்டன் மாதிரியை டொயோட்டா கம்பெனி, “அருமை” என்று பாராட்டி ஏற்றுக்கொண்டது. தயாரிப்புக்குக் கான்ட்ராக்ட் கொடுக்கப்பட்டது. மனதுக்குள் சிறிய வெற்றிக் களிப்பு. பெரிய தொழிற்கூடம் கட்டினால்தான் அவர்கள் கேட்கும் எண்ணிக்கையில் பிஸ்டன் தயாரிக்க முடியும். எனவே, கட்டடம் கட்டத் திட்டமிட்டார் ஹோண்டா. அப்போது ஜப்பான் நாடு உலகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்ததால், அங்கே வரலாறு காணாத சிமென்ட் தட்டுப்பாடு. எவ்வளவோ முயற்சி செய்தபோதும் 10 மூட்டைச் சிமென்ட்கூட கிடைக்கவில்லை.

“ஒழுங்காக ஏதாவது வேலையில் போய்ச் சேர்ந்துவிடு” – அப்பா.

“வாழ்க்கை முழுவதுமா ரிஸ்க் எடுத்துக்கொண்டே இருப்பாய்?” – உயிர் நண்பன்.

தனது நலன் விரும்பிகளுடன் விவாதித்து, சிமென்ட் கலவைக்கு இணையான மாற்றுக் கலவையை உருவாக்கும் ஃபார்முலாவை கண்டுபிடித்தார் ஹோண்டா. ஆங்காங்கே கடன் வாங்கி, அடுத்த சில மாதங்களில் பெரிய தொழிற்சாலையைக் கட்டி முடித்தார். தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, பிஸ்டன் தயாரிக்கும் தொழில் அமர்க்களமாகத் தொடங்கியது.

கூடவே இரண்டாம் உலகப்போரும் தொடங்கியது. அமெரிக்கா போட்ட குண்டு, ஹோண்டாவின் தொழிற்சாலையில் பெரும் பகுதியை உடைத்துச் சுக்குநூறாக்கியது. ஹோண்டாவின் வாழ்க்கை முடிந்தது என்று பேசிக் கொண்டார்கள் நண்பர்கள். ஆனால், தனது மொத்தத் தொழிலாளர்களையும் திரட்டிக்கொண்டு, தானே களமிறங்கி இடிபாடுகளைச் சீர்செய்து, தொழிற்சாலையை மீண்டும் இயக்கிக் காட்டினார் ஹோண்டா.

ஜப்பான் நாட்டில் நிலநடுக்கங்கள் அதிகம். ஒரு நாள் திடீரெனத் தாக்கிய நிலநடுக்கம் ஹோண்டாவின் தொழிற்சாலையைத் தரைமட்டமாக்கிவிட்டது. மொத்தத் தொழிற்சாலையையும் திருப்பிக்கட்ட முடியாத அவலநிலை. வேறு வழியின்றி உடைந்த கருவிகள், மூலப்பொருட்களைக் கிடைத்த விலைக்கு டொயோட்டா கம்பெனிக்கு விற்றுவிட்டார் ஹோண்டா. இப்படிப்பட்ட நிலைமையில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எண்ணிப் பாருங்கள். ஹோண்டா தனது அப்போதைய நிலைமைபற்றிச் சொல்கிறார். “நான் ஆசைப்பட்ட ஒரு திட்டம் தோல்வி அடைந்தால், துளிகூட கவலைப்பட மாட்டேன்… இருக்கிற நிலைமையை எப்படி மாற்றலாம் என்று தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கி விடுவேன்.”

இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம். ஜப்பான் பொருளாதாரம் சாம்பலாக்கப்பட்ட காலகட்டம். எங்கும் பெட்ரோல் தட்டுப்பாடு. கார்கள் எல்லாம் முடங்கிவிட்டன. எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிள் மிதிக்கிறார்கள். சாய்க்கிரோ ஹோண்டா, வீட்டில் அமர்ந்திருந்தார். அருகில் சைக்கிள் நின்றது. சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருந்தது. அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி, இந்தச் சைக்கிளில் இணைத்தால் என்ன என்று ஹோண்டாவுக்கு ஒரு புத்தம்புது ஐடியா பளிச்சிட்டது.

அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார் ஹோண்டா. புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து, தனது சைக்கிளில் அவர் பொருத்தியபோது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது. அதை எடுத்துக்கொண்டு ஜம்மென்று சுற்றி வந்தார் ஹோண்டா.

‘‘அதே போன்று எனக்கும் செய்துகொடு’’ என்று மொய்க்கத் தொடங்கினர் மக்கள். அவரும் சளைக்காமல் செய்துகொடுத்தார். விளைவு? அந்த ஊரில் மோட்டார் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார் ஹோண்டா. கையில் பணமில்லை. வங்கிகள் கடன் தரத் தயாரில்லை. ‘ஹோண்டா துரதிர்ஷ்டக்காரன்’ என்று எல்லோரும் சான்றிதழ் கொடுத்துவைத்திருந்தார்கள். கலங்கவில்லை ஹோண்டா. தனது தொழில் திட்டத்துக்குப் பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்களுக்குக் கடிதம் எழுதினார். முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்களாக நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார். 5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள் முன்வந்து பண உதவி செய்தனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் கம்பெனி உதயமானது. முதலில் தயாரான மோட்டார் சைக்கிள்குறித்து விமர்சனங்கள் வந்தபோது, தானே உலைக்கூடத்தில் அமர்ந்து, அழகான வடிவமைப்புடன் அற்புதமான மோட்டார் சைக்கிள் ரகங்களைக் கொண்டுவந்தார்.

அவமானகரமான தொடர் தோல்விகளுக்குப் பின்னர் பெரும் வெற்றி பெற்றார் சாய்க்கிரோ ஹோண்டா. இப்போது ஹோண்டா கம்பெனி ஆண்டுக்குச் சுமார் 2 கோடி மோட்டார் பைக்குகளைத் தயாரிக்கிறது. ஹோண்டா கார்களுக்கு மேலை நாடுகளிலும் பெரும் வரவேற்பு. எத்தனையோ வகை வகையான தயாரிப்புகளில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது இந்த நிறுவனம்.

ஹோண்டா தயாரிப்புகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருவது, அதன் பிதாமகன் சாய்க்கிரோ ஹோண்டா தனது வாழ்க்கை அனுபவங்களைச் சாறுபிழிந்து சொன்ன வார்த்தைகள்தான்: “வெற்றி என்பது 99 சதவிகிதம் தோல்விகளால் நிரம்பியது! "

 

 

முகநூல் -கார்த்திக் கார்த்திக்

 

 

 

கொசு அடிக்கும் பேட் சீனாவில் இருந்து, இந்தியாவுக்கு பெருமளவில் இறக்குமதி ஆகிறது . கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் ஏன் இந்தியாவில் அதன் பயன்பாடு  தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் இன்னமும் அந்த பேட்டை இந்தியாவில் பிராண்டடாக பெரிய அளவில் யாரும் தயாரிக்க முடியவில்லை. 

அந்த கொசு பேட்டானது, இங்கே 150 ரூபாய் முதல் கிடைகிறது. இரண்டு மூன்று நிறுவனங்கள் அதை தயாரிக்க முற்பட்டன. ஆனால் விலை ஐநூறு ரூபாயை நெருக்கி வந்தது. எனவே அதனை கைவிட்டு விட்டனர். கோவையில் உள்ள பல தொழிற்சாலைகள், வெளிநாட்டு பொருட்களை குறுக்கு வாக்கில் அறுத்து, அதன் பாகங்களையும், இயங்கும் விதத்தையும் காப்பியடித்து, இங்கே உருவாக்கி சந்தைக்கு கொண்டு வருவார்கள். அவற்றின் விலை, அந்த வெளிநாட்டுப் பொருட்களின் விலையை விடக் குறைவாகவே இருக்கும். ஆனால் சீனத் தயாரிப்புகளிடம் மட்டும் அவர்களின் பாச்சா பலிக்கவில்லை.

தற்போது, சீனர்கள் கொசுவை இழுத்துப் பிடித்து கொல்லும் மெஷினை உருவாக்கி சந்தைக்கு அனுப்பியிருக்கிறார்கள். 1 கிலோ ரசகுல்லா டப்பா அல்லது பழைய பாமாயில் 1 லிட்டர் டப்பா போல இருக்கும் அந்த மெஷினின் பக்கவாட்டின் மேற்புறம் ஒரு திறப்பு இருக்கும். அதில் அல்ட்ரா வயலட் கதிரியக்கம் இருக்கும். கொசுக்கள் அந்த கதிரியக்கத்தால் இழுக்கப்பட்டு (பகலிலும் கூட) மெஷினின் திறப்பு அருகே வந்ததும்,  அடியில் உள்ள புளோயரால் விருட்டென உள்ளே இழுக்கப்பட்டு, சொர்க்கத்துகோ நரகத்துக்கோ போய்விடும்.  நாம் பொதுவாக உபயோகிப்பது மஸ்கிடோ ரிப்பல்லண்ட். இவை கொசுவை ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு துரத்தவே செய்யும். துரத்தப்படும் கொசுவானது, தன்னுடைய வாழ்க்கையில் 10000 கொசுவாக இனப்பெருக்கம் அடையும் வல்லமை வாய்ந்தது. ஆனால் இம்முறையிலோ சந்ததி பெருக்கம் கட்டுப்படுத்தப் படுவதால், நாளடைவில் கொசுக்களின் பெருக்கம் கட்டுப்படுத்தப் படுகிறது. இந்த பொறி 500 ரூபாய்க்கே கிடைக்கிறது.

இதே போல் எலியை கொல்லும் எலெக்ட்ரானிக் இயந்திரமும் சந்தைக்கு வந்துள்ளது. நம்முடைய எலிப்பொறியைப் போன்றே இருக்கும் இதில், தேங்காய் சில்லோ, மசால் வடையோ வைக்க வேண்டியதில்லை. எலிகளுக்குப் பிடித்தமான வாசனையால் இழுக்கப்பட்டு உள்ளே வரும் எலி மின்னழுத்தத்தால் உயிரிழக்கும். இந்தியா தான் இதற்கு மிகப்பெரிய மார்க்கெட். எத்தனை ஆயிரம் மளிகைக் கடைகள் உள்ளன. ஆளுக்கு ஒன்று வாங்கினாலே போதும்.

இதுமட்டுமல்ல, தற்போது மிகப்பெரிய பில்டர்கள் எல்லோரும் சீனாவில் தான் பினிஷிங் செய்வதற்கான பொருட்களை வாங்கிகிறார்கள். கட்டிடத்திற்கு அடிப்படைத் தேவையான மணல், செங்கல், சிமெண்ட் மட்டும் தான் இங்கே வாங்குகிறார்கள். மற்ற கட்டுமானப் பொருட்கள் எல்லாம் சீனாவில் இருந்துதான். சின்ன பில்டர்கள் கூட தங்கள் கட்டிட பிளானை எடுத்துக் கொண்டு சீனாவிற்கு செல்லுகிறார்கள். சுற்றிப்பார்த்து தங்களுக்கு தேவையான பொருட்களை ஆங்காங்கே உள்ளவர்களிடம் ஆர்டர் கொடுத்து விடுகிறார்கள். இந்தியா திரும்பிவந்து, அந்த விலாசங்களை கொடுத்துவிட்டால் போதும். ஏஜெண்டுகள், அந்தப் பொருட்களை வாங்கி, தேவைக்கேற்ப  கண்டெய்னர்களில் போட்டு சீனத் துறைமுகத்தில் கிளியரன்ஸ் வாங்கி அனுப்பிவிடுவார்கள். இங்கே சென்னைத் துறைமுகத்தில் இருந்து, நாம் எடுத்துக் கொள்ளவேண்டியது. இவ்வளவு தூரம் அதை கொண்டுவந்தாலும், இங்கே வாங்கும் விலையை விட  குறைவாகவே இருக்கும்.

80களில் வெளிவந்த திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள், பணக்காரராக சித்தரிக்கப்படுபவரின் வீட்டிலோ அல்லது கதாநாயகியின் அறையிலோ வால் பேப்பர்களை சுவற்றில் ஒட்டியிருப்பார்கள். சில அலுவலகங்களிலும் கூட நீங்கள் பார்த்திருக்கலாம்.  இப்போதும் அப்படிப்பட்ட வால் பேப்பர்கள் சென்னையில் கிடைக்கின்றன. ஒரு சதுர அடி 120 ரூபாய் விலை. ஆனால் சுவரில் பெயிண்டிங் செய்ய சதுர அடிக்கு 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரைதான் ஆகும். அதனால் எல்லோரும் பெயிண்ட் செய்யத்தான் முதலிடம் கொடுக்கிறார்கள். ஆனால் இப்போது சீன வால் பேப்பர்கள் சதுர அடி 10 ரூபாய்க்கு கிடைக்கும் தருவாயில் உள்ளன. 10 ஆண்டுகள் உத்திரவாதம் தருகிறார்கள். அந்த வால் பேப்பரை ஒட்டுவதற்கான பசை மற்றும் ஆட்கூலி சேர்த்து அதிகபட்சம் சதுர அடி 20 ரூபாய்க்குள் முடிந்துவிடும். எனவே தற்போது தங்கள் வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் உத்தேசத்துடன் இருப்பவர்கள் சற்று பொறுமை காக்கவும். விதவிதமான வண்ணங்களில், ஏராளமான டிசைன்களில் வால்பேப்பர்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதைப் போலவே ஆஃபீஸ் பர்னிச்சர்களும். அருமையான மாடல்களில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத குறைந்த விலையில் கிடைக்கின்றன.

எப்படி சீனர்களுக்கு இது கட்டுப்படியாகிறது?  எந்த சாதனமாய் இருந்தாலும், அதன் தயாரிப்பு விலையில் மூன்று காரணிகள் அடங்கியிருக்கும். ஒன்று அந்த சாதனத்தை கண்டுபிடித்ததற்கு ஆகும் ஆராய்ச்சி செலவு, இரண்டாவது அதை தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருட்களின் விலை, மூன்றாவது அதை தயாரிக்க ஆகும் செலவு.

நம் நாட்டில் தான் ஆராய்ச்சி என்பது, குறைந்தது 25 வயதுக்கு மேல் ஆரம்பிக்கும் விஷயமாக இருக்கிறது. 17 வயது வரை பாடம் மட்டும். பி ஈ படிக்கும் போது கடைசி செமஸ்டரில் கூட்டத்தோடு கோவிந்தாவாக ஒரு காப்பியடிக்கப்பட்ட/விலைக்கு வாங்கப்பட்ட பிராஜக்ட், எம் ஈ யில் ஏதாவது ஒரு கான்பரன்ஸ்ஸில் பிரசண்ட் பண்ணும் அளவிற்கு, மேக்கப் செய்து விட்டால் போதும். பி எச்டி படிக்கும் போதுதான் ரிஸர்ச் மெதடாலஜியே தெரிய வரும். அங்கேயும் நான்கு கோர்ஸ், பின்னர் காம்பெரஹென்சிவ் வைவா என்று இரண்டு ஆண்டு ஓடிவிடும். பின்னர் ஒரு இண்டர்நேஷனல் ஜர்னலில் பேப்பரை அடித்துப் பிடித்து போட்டு விட வேண்டியது. பழைய சமன்பாட்டில் டெல்டா எக்ஸ் இப்போ நான் கண்டு பிடிச்சது டெல்டா எக்ஸ் பை ரூட் டூ. இதனால என்னய்யா பிரயோஜனம்னு? கேட்டா, அடுத்து பண்றவங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும்னு பதில் வரும்.

அடுத்து வர்றவன் இந்த லிட்டரேச்சரையெல்லாம் படிச்சிட்டு வழக்கமான சடங்கையெல்லாம் பண்ணிட்டு டெல்டா எக்ஸ் பை ரூட் டூ மைனஸ் 1 ந்னு தீஸிஸ் எழுதி முடிப்பான். கேட்டா ரிஸர்ச் எல்லாம் உடனே உலகத்தை தலைகீழா மாத்திடாது, சின்ன சின்ன சேஞ்ச் எல்லாம் சேர்ந்து தான் ரிசல்டண்ட் கிடைக்கும்னு வியாக்கியானம் பேசுவான்.

அன்றாட வாழ்க்கைக்கு என்ன தேவை? எப்படி நம்ம வாழ்க்கையை எளிமையாக்கலாம் என்று யோசித்தாலே ஏகப்பட்ட பிராடக்ட்களுக்கு ஐடியா கிடைக்கும். சீனர்கள்  அப்படித்தான் பிராக்டிக்கலாக யோசிக்கிறார்கள். இந்த தேவையை எப்படி சமாளிப்பது? அதற்கு என்ன தீர்வு? அவ்வளவுதான். நூற்றுக் கணக்கில் ஆராய்ச்சிக்கட்டுரைகளை ஒரு முடிவெடுப்பதற்கு பதிலாக, சிந்திக்கிறார்கள். செயல்படுத்துகிறார்கள். பள்ளி அளவிலேயே சிந்தனையை தூண்டும்படி அங்கே பாடத்திட்டம் இருக்கிறது. சுற்றுப்புறத்திலும் ஏராளமான உதாரணங்கள் கிடைக்கின்றன. நம் நாட்டிலோ, படி,படி,படி. சுற்றுப்புறத்திலும், உறவு வட்டத்திலும் பெரும்பாலும் படித்து முன்னேறியவர்கள் பற்றியே சிலாகிக்கப்படும். இதனால் போட்டு வைத்த பாதையிலேயே நம் பயணம்.

சின்ன வயதில்தான் மூளை கட்டுப்பாடுகள் இல்லாமல் யோசிக்கும். முப்பது வயதுக்குப் பின்னர், பி எச் டி முடித்தபின்னர், எதை எடுத்தாலும் கன்ஸ்ட்ரயின்கள் தான் நம் மனதில் முதலில் தோன்றும். இது முடியாது, அது கஷ்டம் என்றேதான் ஆரம்பிப்போம்.எனவே யூஸ்புல்லான, வாழ்வுக்கு தேவையான பிராடக்ட் நம்மிடம் இருந்து உருவாகாது. பிராய்லர் கோழி இறக்கை பிய்க்கும் மெசின் ஒரு பி ஈ பிராஜக்ட்தான். மிக உபயோகமான கண்டுபிடிப்பு. ஆனால் இப்போதோ, பிராஜக்டை விலைக்கு வாங்கும் கலாச்சாரம் மலிந்துவிட்டது.

அடுத்த விஷயம், மூலப் பொருள். முன்னர் சீனாவின் துயரம் என்று வர்ணிக்கப்பட்ட மஞ்சள் நதி, இப்பொழுது மற்ற நாடுகளுக்கு பொருளாதார துயரத்தை கொடுக்கிறது. நதி நீர் இணைப்பை அவ்வளவு அருமையாக செயல்படுத்தி இருக்கிறார்கள். பஞ்சாப் கோதுமை, பெல்லாரி வெங்காயம், ராஜஸ்தான் மார்பிள் எல்லாம் கன்னியாகுமரிக்கு வந்து சேரும்பொழுது போக்குவரத்து செலவு, பொருளின் விலையில் முக்கிய அங்கமாய் மாறிவிடுகிறது. அங்கே மஞ்சள் நதி சீனாவின் முக்கிய நகரங்களை எல்லாம் இணைக்கின்றது. எரிபொருள் செலவு இல்லாமல், நதியின் போக்கிலேயே பொருட்களை கொண்டு செல்லும்படி நீர்வழிகளை உருவாக்கியிருக்கிறார்கள். இதனால் பொருட்களை கொண்டு செல்லும் செலவு அவர்களுக்கு மிச்சமாகிறது. முன்னர் சென்னையிலும் பக்கிங்ஹாம் கால்வாய் அப்படித்தான் பயன்பட்டது. இப்பொழுது காமெடி சீன் எடுக்க மட்டும்தான் பயன்படுகிறது.

மூன்றாவது தயாரிக்கும் முறை. முன்னர் இந்திய அணியில் வெங்கடபதி ராஜு என்ற இடதுகை சுழற்பந்து வீச்சாளர் இருந்தார். பீல்டிங் செய்யும்போது, பவுண்டரி லைன் அருகே நிற்பார். எந்த பக்கம் பந்து மிகக் குறைவாக வருமோ அந்தப் பக்கத்தில்தான் கேப்டன்கள் அவரை நிறுத்துவார்கள். ஏனென்றால், பந்தைக் கண்டதும் அவர், காதலில் விழுந்த கதாநாயகிகளைப் போல ஸ்லோ மோசனில் ஓடிச்சென்று, பந்தை எடுப்பார். ஒரு வேளை வலது கையில் பந்தை எடுத்து விட்டால், அதை மெதுவாக இடது கைக்கு கொண்டுவந்து, கையை வாகாக ஒரு சுழற்று சுழற்றி விக்கெட் கீப்பருக்கு எறிவதற்குள் இரண்டு ரன்களை எதிரணியினர் கூடுதலாக எடுத்து விடுவார்கள்.

ஆனால் சில பீல்டர்கள் பந்தை எடுக்கும் போதே, தங்கள் துரோயிங் ஆர்மால் தான் எடுப்பார்கள். எடுத்த உடனே பிக்கப் துரோ செய்து விடுவார்கள். இரண்டு ரன் எடுக்க நினைக்கும் எதிரணியினர் கூட ஒரு ரன்னுடன் திருப்தி பட்டுக் கொள்வார்கள். இடையில் ஆஸ்திரேலிய அணியில் கூட ஒரு பிராக்டீஸ் செய்து பார்த்தார்கள். இரண்டு கைகளாலுமே பிக் அப் துரோ செய்ய முடிந்தால், ரன்களை குறைக்கலாம், ரன் அவுட் வாய்ப்புகளை அதிகரிக்கலாம் என. சீனர்கள் தங்கள் பொருட்களை தயாரிக்கும் போது, இப்படித்தான் நேரம் குறைவாகப் பிடிக்கும்படி வேலை செய்யும் பொசிசன்களை அமைத்துக் கொள்கிறார்கள். வேலைக்குத்தகுந்தபடி அதை மாற்றியும் கொள்கிறார்கள்.

வேலையை விரைவாக செய்து முடிக்கும் உபகரணங்களையும் அவர்கள் தொடர்ந்து கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் வேலை நேரம் மிகவும் குறைகிறது. தற்போது கூட சுவர்களுக்கு சிமெண்ட் பூசும் இயந்திரம் ஒன்றை வடிவமைத்து உள்ளார்கள். இரண்டு பில்லர்கள் அதில் இரண்டு பிரேம்கள் மேலும் கீழும் செல்லும். எந்த பொசிசன் வேண்டுமென்றாலும் எளிதில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். கீழே சிமெண்ட் கலவையை வைத்து விட்டால் போதும்.நாம் செட் செய்த ஏரியாவில் சீராக, விரைவாக கலவையை பூசி விடும். இப்போதைய அடக்க விலை 5 லட்ச ரூபாய் ஆகிறது. விரைவில் பில்டர்கள் இங்கே அதை கொண்டுவந்து விடுவார்கள். இப்போதைய கட்டடங்களில் ஆட்களுக்கு கொடுக்கப்படும் கூலி 30 முதல் 40 சதவிகதம் வரை ஆகிறது. அது இனி விரைவாக குறையும்.

மேலும் சீன அரசு சிறப்பு உறபத்தி மண்டலங்களை பல இடங்களில் அமைத்துள்ளது. அடிப்படை வசதிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கும். ஒரு நல்ல ஐடியா உடன் இருப்பவர், பொருளுக்கு இருக்கும் மார்க்கெட்டுக்கு ஏற்ப தொழிற்சாலை வசதிகளை லீசுக்கு எடுத்து உற்பத்தியை தொடங்கி விடலாம். தொழிற்சாலை அடிப்படை கட்டமைப்பு வசதிக்கு மற்ற நாடுகள் செலவழிக்கும் தொகை, அந்த சாதனத்தில் ஏறிவிடும். இங்கே குறைவான வாடகை மட்டுமே கொடுப்பதால், மூலப் பொருளின் விலை மட்டுமே சாதனத்தின் விலையில் பெரும்பங்காக இருக்கிறது.

நம் நாட்டில் பட்டாசு இறக்குமதிக்கு தடை இருப்பதால் சீன பட்டாசுகளை நேரடியாக இங்கே கொண்டுவர முடியவில்லை. சென்ற இரண்டு ஆண்டுகளாக பீகார், உத்திரப்பிரதேச இண்டீரியர் கிராமங்களில் சீனப் பட்டாசுகள் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு கூட ஏகப்பட்ட சீன பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. பட்டாசுகள் இறக்குமதி தடை நீக்கப்பட்டால் சிவகாசியினர் எல்லோரும் காசிக்கு செல்ல வேண்டியதாகி விடும். ஒரு சீனி வெடி விலைக்கு சீனாக்காரர்கள் ஒரு லட்சுமி வெடியே கொடுப்பார்கள். கண்டுபிடித்ததே அவர்கள் தானே.

பாதுகாப்பாக இருக்குமா என யோசிக்கலாம். மாவுக்கேத்த பனியாரம் என்பதற்கு சீனாதான் உதாரணம். ஒரே டிசைனில், ஒரே நிறத்தில் ஒரு லிட்டர் பெட் பாட்டில்களை தயாரிக்கிறார்கள், ஆனால் ஐந்து விதமான குவாலிட்டியில். முதல் தரமானவை, நார்த் அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும். அவர்கள் கொடுக்கும் விலைக்கு, அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் மூன்றாம் தரத்தைத் தான் தயாரிக்கமுடியும். நம் நாட்டில் உள்ள இறக்குமதி வணிகர்கள் பெரும்பாலும் தரம் குறைந்த பொருட்களையே பெரும்பாலும் வாங்கி மார்க்கெட்டுக்கு கொண்டு வருகிறார்கள். அதனால்தான் பொது மக்களிடம் சைனா பீஸ் என்றாலே மட்டம் என்ற எண்ணம் நிலவுகிறது. சீனாவோடு ஒப்பிடுகையில் தொழில்நுட்பத்தில் நாம் தான் பின் தங்கி இருக்கிறோம்.

முரளிகண்ணண்- முகநூல் 

Link to comment
Share on other sites

  • 1 month later...

உங்களிடம் எனக்கு ஒரு கேள்வி உண்டு. கேட்கலாமா?

”துணையை இழந்து தனியே வாழும் ஒரு பெண்ணை உங்கள் வாழ்வின் Companionனாக ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாரா?”

ஆம் எனில் இன்னொரு கேள்வி..

“காதலை அல்லது கணவனை இழந்து தனியே போராடும் உங்கள் மகளோ சகோதரியோ.. அல்லது தோழியோ இருப்பின் அவர்களுக்கென இன்னொரு வாழ்வை அமைத்துத் தர முயற்சிப்பீர்களா?”

ஆம் எனில் உங்களுக்கான என் கடைசி கேள்வி..

”உங்கள் அம்மா அல்லது அப்பா, அதே சூழ்நிலையில் உங்கள் கண்முன் தனியே வாழ்ந்து கொண்டிருந்தால் அவர்களுக்கு இன்னொரு Companion தேவை என்பதை அட்லீஸ்ட் உணர்ந்தாவது இருக்கிறீர்களா??”

இக்கேள்விக்கு பெரும்பாலும் நீங்கள் புருவம் சுளிக்கலாம் அல்லது மௌனமாயிருக்கலாம். இதற்கு பெரும்பாலான.. அல்லது ஒட்டுமொத்த பதிலும் “இல்லை“ என்பது தான் நிதர்சனம்.

ஒரு முறை “அப்பாவின் காதல்“ என்ற குறும்படத்தை தற்செயலாக காண நேர்ந்தது. மனைவியின் முன்னாள் காதலன் இறந்துவிட்டதாக செய்தி கிடைத்ததும், இறுதி மரியாதை செலுத்த அவளை அழைத்துச் செல்லும் கணவனின் கதாப்பாத்திரத்தை, அவர்களுடைய மகன் வாயிலாக சொல்லும் குறும்படம் அது. சுமாரான நடிப்பு என்றாலும் கதைக்கரு மிகவும் அழுத்தமானது. இதில் ‘அப்பா’வின் காதல் என்ற தலைப்பு தான் Highlight.

இன்றைய காலகட்டத்தில் ‘Ex’ காதல்களைப் புரிந்துகொள்ளும் தம்பதிகள் அதிகம். ஆனால் இப்பதிவில் முன்வைக்கப்படும் சந்தேகம் அது சார்ந்ததல்ல. ஒருவேளை அந்த மகன் கதாப்பாத்திரத்தில் நம்மை நிறுத்திப் பார்ப்போமெனில் நமது நிலைப்பாடு என்னவாக இருந்திருக்கும்? ஒரு மகனாய், மகளாய் நம் அம்மாவின் இன்னொரு காதலை எப்படி எடுத்துக்கொண்டிருப்போம்?

பொதுவாக, அப்பாவைக்கூட நாம் கண்டுகொள்வதில்லை, அவருக்கு எத்தனை காதல் வேண்டுமனாலும் இருந்திருக்கலாம். எத்தனை துணையை வேண்டுமானாலும் நிர்ணயித்துக் கொள்ளலாம். “நான் என் அப்பாவுடன் பேசுவதில்லை“ என்ற ஒற்றை பதிலில் நம் கோபத்தை வெளிப்படுத்தி நமக்கான நியாயத்தை புதுப்பித்துக் கொள்கிறோம் தானே! 

ஆனால் நம் அம்மா..? அப்பா இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரையே உருகி உருகி காதலிப்பவள், குடும்பத்தையே உலகமாய் கருதுபவள், அழும்போது ஆறுதல் சொல்பவள், பிள்ளைகளுடன் ஃப்ரெண்ட்லியாக அரட்டை அடிப்பவள். வேறென்ன? அதிலும் அப்பா இல்லாத வீடு எனில், தனியே போராடி குழந்தைகளை ஆளாக்கும் கதாநாயகி. தியாகச் சுடர். தைரியமான பெண்மணி. ஒரு அம்மாவிற்கென நாம் வகுத்து வைத்திருக்கும் Graph இதுதான். அம்மா என்பவள் எப்போதும் வரையறைக்குட்பட்ட கலாச்சார கட்டுப்பாட்டுக் குப்பைகள் நிறைந்தவளாகத்தான் இருக்கவேண்டுமென நாமாய் நிர்ணயித்துக்கொண்டுள்ளோம். இது எத்தனை அபத்தமானது!

‘M.குமரன் S/o மஹாலஷ்மி’ திரைப்படத்தைப் பார்த்து நம்மில் எத்தனை பேர் அம்மா-மகன் உறவைப் பற்றி சிலாகித்திருப்போம்? நதியா கதாப்பாத்திரம் எத்தனை பேருக்கு தன் அம்மாவை நினைவுபடுத்தியிருக்கிறது? “ஒரு பொம்பளை.. தனியா நின்னு எல்லாத்தையும் சமாளிச்சு பிள்ளைகளையும் ஆளாக்கியிருக்குறா“ என்ற அவளைப் பற்றிய கைதட்டல்களுக்கு  பிள்ளைகளாக எத்தனை பெருமையுடன் நம் காலரைத் தூக்கிவிட்டிருப்போம்?

எல்லாம் சரி தான். ஆனால் இங்கு தனியே வாழும் தன் தாய் அல்லது தந்தைக்கு இன்னொரு வாழ்க்கைத் துணையை அமைத்துத் தர தயாராய் இருப்பவர்கள் அல்லது அவர்களாக அறிமுகப்படுத்தும் இன்னொரு துணையை ஏற்றுக்கொள்ளும் பிள்ளைகள் எத்தனை பேர்? சமுதாயத்தை விட்டுத் தள்ளுங்கள். கணவனை இழந்த தாய், நட்பாய்கூட ஒரு ஆணிடம் பேசுவதை எந்த பிள்ளைகளும் (பெரும்பாலும்) விரும்புவதில்லை. Companionship, தன் மீதி வாழ்நாட்களை பகிர்ந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்படும் துணை. அது sexual relationship என்பதாகவும் இருக்கலாம். அந்த இன்னொரு relationship, தன் தாய் / தந்தைக்கு எந்த அளவிற்கு தேவை என்பதைப் புரிந்து கொள்ளும் பக்குவப்பட்ட மகன் / மகள் எத்தனைபேர்?

புரிதலில் பிடித்திருந்தாலும் தன் பிள்ளைகளுக்காக, அவர்கள் அந்த உறவின் நிலைப்பாட்டை புரிந்துகொள்ளமாட்டார்களோ என்ற பயத்தினாலேயே நிறைய பெண்கள் தனக்கென புதிதாக வரும் இன்னொரு துணையை புறக்கணிக்கிறார்கள்.

கணவனை இழந்த மகளையும் சகோதரியையும் பார்த்து பொங்கியெழும் போராளிகள் கூட, சிறுவயதிலேயே கணவனை இழந்து தனியே வாழ்ந்துவரும் தன் தாய் பற்றி எப்போதும் யோசிப்பதில்லை. தன் தாயின் நிலையை நன்கு புரிந்தவன் ஆதலால் அதுபோன்ற ஒரு பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க முன்வருகிறானே தவிர, தன் தாய் கடைசிவரை அதே மனோரமா ஆச்சியாகத்தான் இருக்க வேண்டுமென நிர்ணயிக்கின்றான்.

இதைக் கேட்ட சில தோழிகளும் கூட, “அம்மாவுக்கு வரன்கள் தேவை என்று விளம்பரம் தரச்சொல்றீங்களா? ப்ராக்டிக்கலா முடியாதே இந்திரா. அதுவுமில்லாம அவள் அந்தக்காலத்துப் பெண்ணாச்சே. நமக்குப் புரியிறது இருக்கட்டும். முதல்ல அவளுக்கே இதுமாதிரியான பேச்சுக்கள் புரியுமா?” என்று முகம் சுளிப்பதைப் பார்த்திருக்கிறேன். என் கேள்வியின் உள்ளர்த்தம் அதுவல்ல. 

“நேத்து வீட்டுக்கு வந்தார்ல ஒரு Uncle.. அவரைப் பத்தி நீ என்ன நினைக்கிற?“ என்று தன் பிள்ளையிடம் தயக்கமாய், ஆர்வமாய் கேட்கும் அம்மாக்களின் கேள்விகளை புரிந்துகொள்வதற்கும்,. அடுத்தமுறை “அவரை“ பார்க்கும்போதெல்லாம் அனிச்சையாய் முகம் திருப்பிக்கொள்ளாமல் இருப்பதற்கும், “அவர்“ எண் கொண்ட தொலைபேசி அழைப்பைப் பார்க்கும்போதெல்லாம் ஏற்படும் வெறுப்பை தூக்கி எறிவதற்கும் நாம் கடக்க வேண்டிய தூரம் எப்போதும் தொலைவாகவே இருக்கிறது.

வாழ்வின் மீதி நாட்களை பகிர்ந்துகொள்ள தனக்கென ஒரு நட்பு எல்லோருக்கும் அவசியம் தேவை. அதில் செக்ஸ் என்பது அவரவர் விருப்பம். Teenage பையனைப் பொறுத்தவரை, ‘தன் அம்மா யாரோ ஒரு அம்பளையிடம் பேசுறா.. ஏதோ தப்பான உறவு’ என்ற அருவறுப்பு தான் தோன்றுமேயொழிய நிச்சயம் அதற்கான புரிதல் ஏற்படுவதில்லை. நாற்பத்தி ஐந்து வயதுத் தாயின் தனிமையை இருபத்தி ஐந்து வயதிலும் கூட பிள்ளைகளால் புரிந்துகொள்ள முடிவதில்லை என்பதுதான் so called ‘the ugly truth’.

தன் தவறை உணர்ந்து, சாரதா டீச்சரைத் தேடச் சொல்லும் இயக்குநர் வசந்தின் “அனு“ கதாப்பாத்திரம் எத்தனை வீடுகளில் இருக்கக்கூடும்? இன்னொரு உறவை அவளுக்கு ஏற்படுத்தித் தரவில்லையெனினும், அவளாய் அறிமுகப்படுத்தும் ஒரு புதிய உறவை புரிந்து கொள்ள நமக்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகளாகும்?

அப்பாவின் replacement சாத்தியப்படாவிட்டாலும், நம் அம்மாவின் நல்லதொரு நண்பனாக, அவளின் துணையாக, அவளாய் தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் நாம் தடுக்காமல் புரிந்துகொண்டாலே போதும். 

உங்கள் முற்போக்கு சிந்தனையை முதலில் வீட்டிலிருந்து ஆரம்பியுங்கள். அவசியப்படாவிட்டாலும் உங்கள் அம்மாவிடம் இப்பதிவு பற்றி பேசவாவது முயற்சியுங்களேன்.

 

 

இந்திரா கிறுக்கல்கள் -முகநூல் 
.

Link to comment
Share on other sites

  • 2 months later...

கதை கூறும் படமொன்று 

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

முப்பத்தைந்து வருடங்கள் V C member ஆக இருந்தவராம், 
நாற்பது வருடங்கள் பாமங்கை கண்டத்துக்கு வட்ட விதானையாக இருந்தவராம் . 
அப்போதெல்லாம் குழந்தை வண்ணக்கர், குழந்தை வட்டானை என்று என் தந்தையை தெரியாதவர்களே இல்லை. 

விடிந்தால் யாராவது ஓரிரு முஸ்லீம் அன்பர்கள் அப்பாவை சந்திக்க வந்து வாசலில் நின்றதை கண்டிருக்கின்றேன்.

வெள்ளாமைக்காரராக நின்ற அவர் தன் போடியாரோடு எங்கள் வீட்டுக்கு வந்த என் சிறு பராயத்தில்தான் நான் அவரை அறிந்திருந்தேன் . 
அப்போது நான் சிறு பையன் . 
நான் வளர வளர என்னைக்காணும் போதுகளில் வட்டானர மகன் என்ற கணிப்பில் என்னை காணும் போதுகளில் ஒரு சிரிப்போடும் , தலையசைப்போடும் நகர்வார். போடியாரோடு என்ன பிரச்சினையோ தெரியாது அவர் கன காலம் வெள்ளாமைக்காரனாக நீடிக்கவில்லை.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

:::::   தகவல் ::::

தம்பி " சிறாஜ் " 12_11_2016 இல் இந்த படத்துடன் ஒரு பதிவிட்டிருந்ததற்கு பலரும் ஆச்சர்ய பின்னூட்டம் இட்டிருந்தார்கள். 
நானும் " இன்னுமா " என்ற ஒற்றை சொல்லொன்றையே பின்னூட்டியிருந்தேன் .
அதற்கு " சிறாஜ் " ஆயிரம் அர்த்தங்கள் கொண்ட கேள்வியிது என்று பதிலிட்டிருந்தார். 
அது எனக்கும் அவருக்குமே மட்டும் புரிந்த நயன மொழியாகக் கூட இருந்திருக்கலாம். 
அந்த படத்தை பார்த்து ஆச்சர்யப்பட்டவர்களுக்கு அதற்கு பின்னால் உள்ள வாழ்வு தெரியுமா என்பது தெரியாது. 

இரண்டு நாட்களுக்கு முன்பே காட்டுக்குள் போகவேண்டும் . 
இரு பக்கமும் சம அளவில் அடுக்கிய விறகுச்சுமையுடன் நாம் பார்த்த அந்த படத்தில் உள்ளது போல் அவர்கள் தொடர்ச்சியாக ஓடி வருவதில்லை என்பதும் , சம தரை பாதையில் மட்டும்தான் அப்படி வரமுடியும் என்பதையும் கண் கூடாக கண்டிருக்கின்றேன் நான். 

மேட்டுப் பாதையில் ஓட்ட முடியாது. 
இறக்கத்திலும் ஓட்ட முடியாது . பலன்ஸ் தவறி கவுண்டு விடுவார்கள். 
மணல் பொதிந்த பாதையில், சேற்று நில தெருவில் , தண்ணீர் நிறைந்த குண்டுகுழி ரோடில், ஒற்றையடி பாதை வழி உயர்ந்த கட்டுகளில் ( இதை வண்டு என்று சொல்வது எத்தனை பேர்களுக்கு நினைவிருக்கோ தெரியாது ) வரப்புகளில் , வேகத்தடை பாதைகளில் ,என்று பல சந்தர்ப்பங்களில் அவர்கள் விறகுச் சுமை கொண்ட சைக்கிளை தள்ளி உறுட்டிக்கொண்டுதான் வருவார்கள் என்பதை பனங்காட்டு பால்ததில் நின்ற நேரங்களில் பார்த்திருக்கின்றேன். 
அந்த நேரங்களில் காணும் அவர் அதே தலையசைத்த சிரிப்புடன் போவதையும் கண்டிருக்கின்றேன்       ............................................................

::::::: சம்பவம்  :::::::

அரச ஊதியத்தை பெற்றுக் கொண்டே அதிகாரிகளும், காவல் துறையினரும் கடமை செய்யத்தேவை இல்லையெண்டிருந்த காலம்து. 

காடு, காணி, வயல் வரப்பு , நீர் நிலம் வந்து சேர்ந் ராஜகுமாரர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த எனது இருபத்தி இரண்டு வயதுக்காலமது.

எங்கள் ஊரையும் ஒரு ராஜகுமாரன் தன்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தான் . என்னோடு தின்று உறங்கி நெருங்கிப்பழகியவன்.

ஒரு நாள் காலை நேரப்பொழுதில்தான் இவர் என்னை தேடி வந்தார். 
அப்பா இறந்த பிற்பாடு எவரும் வரவதில்லை என்றானதான காலத்தில் இவர் ஏன் வந்திருக்கின்றார் என்றுதான் யோசிக்க வேண்டியிருந்தது. 
" என்ன காக்கா" வியத்தை வினாவினேன் . 

" வாப்பா . . எண்ட சைக்கிள கொள்ளியோட ராவு புடிச்சி வைச்சிற்றாங்க வாப்பா . ஒங்களுக்கு தெரிஞ்சாக்களென்டா ஒள்ளம் செல்லி வாங்கி தாறயளாம்பி " ? 
எனக்கு என்ன சொல்வதென்று தெரிந்திருக்கவில்லை. 

நாட்டு நடப்பின் பயனாக நான் இது வரைக்கும் எந்த அனுகூலத்தையோ, யாரிடமும் எந்த உதவியையுமோ எதிர் பாராதவன் . 
இருந்தாலும் என்னையும் நம்பி கூட ஒருவர் வந்திருக்கின்றாரே, அதுவும் இது வரையில் எதுவும் கேளாதவர் கேட்கின்றாரே என்ற நினைப்பில்தான் அவரை கூட்டி சென்றேன்.

வளவு முளுவதிலும் அவரின் சைக்கிள்கள் போல விறகு சுமந்த சைக்கிளகள் தென்னைகளிலும் , சுவரிலும் சாய்த்து கிடக்கின்றது . 
பலபேர் சோக முகத்துடன் வாசலிலில் காத்து நிற்கின்றனர். 

தங்கள் பாதுகாப்புக்கான காட்டை இந்த சைக்கிள் விறகு வியாபாரிகள் அழிக்கின்றார்களாம். 
தஙகளால் தடை செய்யப்பட்ட காரயத்தை இவர்கள் செய்ததற்காக சைக்கிளும் விறகுகளும் பறிமுதல் செய்யப் பட்டிருக்கிறதாம். 
தாங்கள் விதித்த அபராதத் தொகையை செலுத்தினால் மட்டுமே சைக்கிளையும் விறகையும் மீட்டுக்கொள்ளலாமாம் . 

பொஞ்சாதி புள்ளத்தாய்ச்சி இண்டைக்கு நாளைக்கெண்டு புள்ளை புறக்க இரிக்கு வாப்பா என்று இவர் அன்று கெஞ்சியது எனக்கு இப்போதும் நினைவிருக்கு. 

உள்ளே இருக்கும் அந்த தேசத்தை மீட்க வந்தவர்களிடம் இவருக்காக தயவு காட்டச்சொல்லி கேட்கின்றேன். 

எங்கள் சட்டம் எல்லோருக்கும் பொதுவானதுதான் உனக்காக மட்டும் தயவு காட்ட முடியாது. 
சொல்லி விட்டார்கள். 
வெளியில் வந்து அவரின் முகத்தை பார்க்கிறேன் , அவர் சிறிது நேரம் நின்று விட்டு என்ன யோசித்தாரோ தெரியவில்லை போய்விட்டார். 
அதன் பின்பாய் என்ன ஆனார் என்று கூட நான் அறிந்திருக்க வில்லை .

என்னை, எனது கையறு நிலை நினைத்து நானே அவமானப்பட்டேன் அன்று. 
இதுதான் எனக்கான பெறுமதியா ? இவ்வளவு தானா நான்? 
வெறுத்துப் போனேன். 

நான்கு வருடங்களுக்கு முன்பு சந்தைக்கு போயிருந்த நாளொன்றில் அவராகத்தான் வந்து பேசினார் . 

முதலில் என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியாமலிருந்தது அவரை. பின்புதான் அந்த சைக்கிளுக்கும் ,விறகுக்குமுடையவரென்று நினைவில் வந்தார். 
எனது ஞாபகம் அதுவாகவே இருக்க அதையெல்லாம் நினைவில் கொள்ளாதவர் போல . 
" என்ன வாப்பா என்னய மதிக்கலயா ? நீங்க குழந்தை வட்டானர மகன் தானே "? 
நான் மீண்டும் ஒரு முறை கூனிக் குறுகி நின்றேன். 

" எங்க வாப்பா வெளி நாடா? எந்த நாடு " ? 

"லண்டன்" 
"ஆ . . . லண்டனா . . . நம்முட மகனொண்டும் அங்கானே இரிக்கான் கடசிப்புள்ள " 

நான் அவரிடம் சொல்ல நினைத்தேன் , உங்களுக்கு அன்று இரங்க மறுத்த அந்த ராஜகுமாரனும் லண்டனில்தான் இருக்குறானென்று. 

சிறிது நேர உரையாடலுக்குப் பின் விடை பெறும் போதுதான் கேட்டேன் 
" காக்கா உங்களுக்கு என்னில குறை கோவமேதுமில்லையோ "?

மீண்டும் ஒரு முறை பனித்தது என் கண்கள் அவர் பதிலில்

" என்ன கத வாப்பா இது சீ . . அப்பிடியெல்லாம் இல்ல வாப்பா நீ எங்குட புள்ளையெல்லுவா "

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இந்த படத்துக்கும் , இதை எழுத பண்ணியதற்கும் நன்றி  #சிறாஜ்#

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
#மனவடைசல்#
।।।।।।।।।।।।।।।।।।।।

விமல் குழந்தை வேல் - முகநூல் வழி

 

FB_IMG_1479563221954.jpg

Link to comment
Share on other sites

  • 5 months later...

இதை எழுதியவர் ஒரு பிரபல கண்டாக்டர்

##########

Vision 

விஷன்

 

மார்கழி மாசத்தின் பனி போர்த்திய மலரைப் போன்றிருந்தாள் மெஹர்…

பதினாறு வயதிலும் பால் மணம் மாறாத சிறுமி… 

 

“போர்டு தெரியல டாக்டர்”

 

மைனஸ் மூன்றரை போட்டதும், சார்ட்டில் அனைத்து வரிகளையும் கடகடவென்று படித்தாள்…

 

“இவ்வளவு பவர் வரும் வரைக்கும் ஏன் காண்பிக்கவில்லை? எப்படிச் சமாளித்தாய்?”

 

ஒரு அசாதாரண நிசப்தம்… அவளைப் போன்றே மென்மையாயிருந்த அவள் தாயும், மெஹரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்… 

 

ஏதோ ஒரு raw nerve  ஐத் தொட்டுவிட்டேன்  என்பது அனுபவத்தில் புரிந்தது.. உள்ளுணர்வு குறுகுறுக்க, ஆப்டிக் நரம்பை, தீவிரமாகப் பரிசோதனை செய்தேன்… சத்துக் குறைபாடு போல், சிறிது வெளுத்திருந்தது..[pallor]..

colour vision normal  ஆக இருந்தது.

 

“எப்போதாவது காய்ச்சல் வந்திருக்கா?”

 

“ஆமாம் டாக்டர்…..”.. ஒரு தயக்கமான பதில்

“நான் கேட்பது, மூளைக் காய்ச்சல் மாதிரி கடுமையான காய்ச்சல்… அட்மிட் செய்து வைத்தியம் பார்க்குமளவிற்கு….”

 

ஷாக் அடித்த மாதிரி, அந்தத்தாய் நிமிர்ந்து உட்கார்ந்தாள்..

 

“மெஹர்!.. நீ வெளியே இரும்மா….!” என்று மகளை வெளியே அனுப்பினாள்.

 

“டாக்டர்…இதை நான் உங்களிடம் சொல்வதாக இல்லை… ரெக்கார்ட்ஸ் எதுவும் எடுத்து வரவில்லை”

 

“ஆறு வருஷம் முன்னர், திடீரென ஒரு நாள் கடும் காய்ச்சல் ஏற்பட்டு, மெஹருக்கு, ஒரே நாளில், இரண்டு கண்களும் பார்வை தெரியாமல் போய் விட்டது.. வளைகுடா நாடொன்றில் இருக்கிறோம்..”

 

”admit செய்து scan எடுக்கப்பட்டு,  intravenous ஆக மருந்து உடனடியாக செலுத்தப்பட்டதா?”

 

“ஆமாம், சில மணி நேரங்களுக்குள் எல்லாம் செய்தும் பார்வை வரவில்லை.  முதல் நாள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்த என் கண்மணி கையைப் பிடித்து அழைத்துச் செல்லும் படியாக முழுமையாக பார்வை இழந்து விட்டாள்”

 

அந்த நிமிடங்களை விவரிக்கும் போதே, தாங்க முடியாத வேதனையில் அந்தத் தாயின் குரல் கம்மி, நடுங்கிற்று.

 

“இரண்டு மிகக் கொடுமையான வருடங்கள், டாக்டர்.. வெளிநாட்டிலும், இந்தியாவிலும், நாங்கள் போகாத மருத்துவமனையே கிடையாது.. கேரளாவின் ஆயுர்வேத வைத்தியத்தையும் விடவில்லை…”

 

“ஒரு பலனும் இல்லை..”

 

“”என் குழந்தைக்கு பார்வை வர வாய்ப்பே இல்லை என்று அடித்துச் சொன்னது உங்கள் மருத்துவ உலகம்…..அவள், கண் தெரியாதவள் என்று எழுதிக் கொடுத்த சான்றிதழ் என்னிடம் உள்ளது..கண் பார்வையற்றோருக்கான பள்ளியில் சேர்க்கச் சொன்னார்கள்”

 

“பல சமயங்களில், திடீரென்று பார்வை போன பேரதிர்ச்சியில் இந்தக் குழந்தை உள்ளது, அதன் தாய் நான் என்று உணராமலேயே பலர் பேசினார்கள்…அதனால் தான் உங்களிடம் கூட முதலில்…..”

 

“பரவாயில்லை, எனக்குப் புரிகிறது. சொல்லுங்கள்… பார்வை எப்படி வந்தது?”

 

“ஒன்றுமில்லை டாக்டர்….எல்லா மருத்துவமும் கை விரித்து விட்ட நிலையில், மனமுடைந்து, இறைவனிடம் கையேந்தினோம்… முழு நம்பிக்கையுடன், குடும்பம் முழுவது, இறைவனிடம் தஞ்சம் புகுந்து,

 

“இது நீ கொடுத்த மகள்…. நீயே பார்வை கொடு “ என்று கரைந்து, அழுது தொழுதோம்” 

 

“படிப் படியாக பார்வையில் முன்னேற்றம் ஏற்பட்டு, பள்ளி செல்ல ஆரம்பித்து விட்டாள்”

 

“கண்ணாடிக் குறை பாடு தவிர வேறு ஏதேனும் உள்ளதா டாக்டர்? பழைய ரெக்கார்ட்ஸ் வேண்டுமானால் நாளை எடுத்து வருகிறோம்”

 

“இல்லை ..வேண்டாம் என்றேன்.”

 

மெஹரை உள்ளே அழைத்து, கண்ணாடிச்சீட்டை அவள் கையிலே கொடுத்து, கன்னத்தில் மெல்லத் தட்டினேன்.

 

“கண்ணாடி ரெகுலரா போட்டுக்கோ, நல்லாப் படி..” 

 

“டாக்டர், மறுபடி ஏதாவது….?” 

 

“ஒன்றும் வராதம்மா…….உங்கள் மகளுக்கு கிடைத்திருப்பது, சாதாரணப் பார்வையல்ல, விஷன்…. “vision”…..  மனித சக்திக்கு அப்பாற்பட்ட, பிரபஞ்ச சக்தியால் கொடுக்கப் பட்டது.. அதற்கு முன் நாமெல்லாம் தூசு…”

 

எத்தனை பெரிய வானம்

எண்ணிப்பார் உனையும் நீயே..

இத்தரை கொய்யாப் பிஞ்சு…

நீயதில் சிற்றெரும்பே….!

#######################################################'###

 

நேற்று ஐஸ்லாந்து பகுதி மிருகங்கள் பற்றிய டாக்குமெண்டரியை பார்த்தேன்.

 

ஐஸ்லாந்து துருவபகுதியில் இருந்தாலும் அதை சுற்று வெப்பநீரோட்டம் இருப்பதால் அதன் கடல் உறைவதில்லை. நீரோட்டம் காரணமாக ஏராளமான மினரல்கள் அதன் பாறைகளில் அடித்து கொண்டுவரப்படுவதால் அதை உண்ண ஏராளமான அளவில் க்ரில் எனப்படும் மீன்கள் கூடுகின்றன

 

ஏராளம் என்றால் எந்த அளவு?

 

உலகில் உள்ள மனிதர்கள் அனைவர் எடைக்கும் சமமான அளவு எடையுள்ள க்ரில்மீன்கள்.

 

இத்தனை சத்தான ஊட்டசத்து கிடைக்கையில் அதை உண்ண உயிரினங்கள் வராமலா இருக்கும்?

 

ஐஸ்லாந்து பகுதியில்க் கிடைக்கும் க்ரில்மீன்களை உண்ண பூமத்தியரேகை பகுதியில் இருந்து நீலதிமிங்கிலங்கள் ஐஸ்லாந்துக்கு வருகின்றன. நீலதிமிங்கிலங்கள் உலகின் மிகப்பெரும் உயிரினமாகும். அவை மிக எக்ஸ்ட்ரீம் ஆன வாரியர் டயட்டை கடைபிடிக்கின்றன. க்ரில் மீன்கள் கிடைக்கும் காலத்தில் அவற்றை உண்டு கொழுக்கின்றன. அதன்பின் பூமத்தியரேகை பகுதிக்கு திரும்பி மாதகணக்கில் அடுத்த க்ரில்மீன் சீசன் வரும்வரை முழுபட்டினியாக உள்ளன.

 

நீலதிமிங்கிலங்கள் எடை 200 டன்

 

அதன் நாக்கின் எடை ஒரு யானையின் எடைக்கு சமம்

 

அதன் இதயநாளத்தின் வழியே ஒரு மனிதன் தாராளமாக நீந்தி செல்லும் அளவு இடம் உள்ளது

 

அதன் இதயத்தின் எடை மட்டும் 1000 கிலோ

 

அது பாலூட்டிவகை. அதன் பால் தான் உலகிலேயே அதிக கொழுப்பு நிரம்பிய பாலாகும். அதை மட்டுமே உண்டுவளரும் அதன்குட்டிகள் ஒரு நாளைக்கு 90 கிலோ அளவு எடை அதிகரித்து வளரும்.

 

க்ரில் மீன்களை நம்பி வாழும் இன்னொரு உயிரினம் கில்லிமட் பறவை. ஐஸ்லாந்து பகுதியில் வாழும் இப்பறவை நீரில் மூழ்கி தேர்ந்த வேட்டைகாரனை போல மீன்பிடிக்கும். இனப்பெருக்கம் செய்யமட்டுமெ கரைக்கு வரும். ஐஸ்லாந்து பகுதிகளின் மிக உயர்ந்த மலைகளில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும்.

 

குஞ்சுகள் முதல்முதலாக மலையுச்சியில் இருந்து தான் பறக்கும் என்பதால் பறக்கதெரியாமல் கீழே விழும் பறவைகள் ஏராளம். அவற்றை உண்ண கீழே தயாராக நார்டிக் நரிகள் காத்திருக்கும். பறந்து கடலை அடைந்தால் மன்னன். பறக்கமுடியாது கிழே விழுந்தால் நரிகளின் டின்னர்.

 

ஐஸ்லாந்தில் இருக்கும் இன்னொரு உயிரினம் ஐஸ்லாந்து குதிரை. போர் என வருகையில் எத்தகைய நிலப்பரப்பையும் கடக்கும் ஆற்ரல் உள்ளவை இவை என்பதால் உலகின் மிக சிறப்பான போர்குதிரைகளாக இவை அறியப்படுகின்றன. இவற்றுக்கு இனக்கலப்பு நிகழாமல் தடுக்க ஐஸ்லாந்து அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொன்டுள்ளது. ஐஸ்லாந்துக்குள் எந்த குதிரையையும் யாரும் இறக்குமதி செய்யகூடாது. ஐஸ்லாந்து குதிரைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபட்டபின் அவை மீன்டும் இங்கே திரும்பிவரகூடாது. இப்போது குதிரைகளில் யாரும் போர் புரிவதில்லை. ஆனால் ஆடுகளை மேய்க்க பல நாடுகளில் மேய்ப்பர்கள் இவற்றை வாங்குகிறார்கள்.

 

கடற்கரையோரம் உள்ள பவளப்பாறைகளை அழிவில் இருந்து காக்க ஐஸ்லாந்து அரசு மேற்கொன்டுள்ல நடவடிக்கைகளால் தான் இத்தகைய அரிய சுற்றுசூழல் சங்கிலி அங்கே வலுவாக உள்ளது. நீரோட்டத்தை நம்பி க்ரில் மீன்கள்., க்ரில்மீன்கலை நம்பி கில்லிமட் பறவைகள், நீலதிமிங்கிலங்கள், கில்லிமட் பறவைகளை நம்பி நார்டிக் நரிகள் என சுற்றுசூழல் சங்கிலிபிணைப்புகள் ஒன்றை ஒன்று நம்பியே இயங்குகிறது.

 

நன்றி -நியான்டர் செல்வன் 

Source -Facebook

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.