Jump to content

EURO 2016 உதைபந்தாட்ட போட்டி செய்திகள், கருத்துக்கள்


Recommended Posts

வேல்ஸ் 3 - 1  கோல் அடிப்படையில் பெல்ஜியத்தை வென்று அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 163
  • Created
  • Last Reply

பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதியில் வேல்ஸ்

ரோப்பிய கால்பந்து தொடரில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட, பெல்ஜியம் அணி 3-1 என்ற கோல் கோல் கணக்கில் வேல்ஸ் அணியுடம் படுதோல்வி கண்டு தொடரை விட்டு வெளியேறியது.

wales.jpg

 

இந்த ஆட்டத்தில் 13வது நிமிடத்தில் வேல்ஸ் முதல் கோல் அடித்தது. சுமார் 30 அடி தொலையில் இருந்து ரட்ஜா நர்ங்லோன் அடித்த பந்து புல்லட் வேகத்தில சென்று வளைக்குள் சென்று புகுந்து கொண்டது. வேல்ஸ் வீரர் ஆஸ்லே வில்லியம்ஸ் 30 வது நிமிடத்தில் கார்னர் கிக்கை தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் ஆட்டம் சமநிலையடைந்தது.

பிற்பாதியில் 55வது நிமிடத்தில் ராப்சன் கானு வேல்ஸ் அணிக்கான 2வது கோலை அடித்தார். இதனால் அந்த அணி முன்னிலை பெற்றது. பின்னர் ஆட்டம் முடியும் தருவாயில் சாம் வாக்ஸ் தலையால் முட்டி ஒரு கோல் அடிக்க, இறுதியில் வேல்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இதற்கு முன் கடந்த கடந்த 1958ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் காலிறுதியில் ஸ்வீடன் அணியுடன் மோதியதே வேல்ஸ் அணி ஒரு முக்கிய கால்பந்து தொடரில் அதிகபட்சமாக முன்னேறியதே. அரையிறுதியில் வேல்ஸ் அணி போர்ச்சுகல் அணியை எதிர்கொள்கிறது.

http://www.vikatan.com/news/sports/65755-wales-shock-belgium-to-reach-semifinals-at-euro.art

Link to comment
Share on other sites

யூரோ 2016: பெல்ஜியம் அதிர்ச்சித் தோல்வி; அரையிறுதியில் வேல்ஸ் அணி

 
பெல்ஜியத்தை வீழ்த்தி வெற்றியைக் கொண்டாடும் வேல்ஸ் அணி. | படம்: கெட்டி இமேஜஸ்.
பெல்ஜியத்தை வீழ்த்தி வெற்றியைக் கொண்டாடும் வேல்ஸ் அணி. | படம்: கெட்டி இமேஜஸ்.

பிரான்ஸில் நடைபெறும் யூரோ கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டத்தில் வலுவான பெல்ஜியம் அணியை வேல்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

உலகத் தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள பெல்ஜியம் இந்த அதிர்ச்சிகரத் தோல்வியிலிருந்து மீண்டு வர நீண்ட காலமாகும் என்று கூறப்படுகிறது. வேல்ஸ் அணி தரவரிசையில் 26-வது இடத்தில் உள்ளது.

அரையிறுதியில் போர்ச்சுகல் அணியை சந்திக்கிறது வேல்ஸ்.

பெல்ஜியம் தரப்பில் ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் நைகோலன் ஒரு அபாரமான கோலை அடித்து முன்னிலை கொடுத்தார். 31-வது நிமிடத்தில் வேல்ஸ் கேப்டன் ஆஸ்லே வில்லியம்ஸ் தலையால் முட்டி கோல் அடித்து 1-1 என்று சமன் செய்தார். பிறகு வேல்ஸ் அணியின் ராப்சன் கேனு 55-வது நிமிடத்திலும் சாம் வோக்ஸ் 86-வது நிமிடத்திலும் கோல்களை அடிக்க வேல்ஸ் வெற்றி பெற்றது, மைதானத்தில் குடிபோதையில் இருந்த வேல்ஸ் ரசிகர்களின் சத்தம் விண்ணைப் பிளந்தது.

முதல் முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது வேல்ஸ்.

ஆட்டம் தொடங்கிய போது பெல்ஜியம் அணியின் ஆதிக்கம் தூக்கலாக இருந்தது. முதல் 3 கோல் முயற்சிகளை வேல்ஸ் அணி சுவராக நின்று தடுத்தது. முதலில் யானிக் பெரைரா கராஸ்கோ அருமையான கோல் வாய்ப்பை வேல்ஸ் கோல் கீப்பர் ஹென்னிஸியிடம் நேராக அடித்தார். அதன் பிறகு தாமஸ் மியூனியரின் கோல் முயற்சியை நீல் டெய்லர் தடுத்தார். பிறகு பெல்ஜியத்தின் நட்சத்திர வீரர் ஈடன் ஹசார்டின் கோல் முயற்சியை ஆஷ்லே வில்லியம்ஸ் பென் டேவிஸ் சேர்ந்து தடுத்தனர். இதெல்லாம் முதல் 8 நிமிடங்களுக்குள் நடந்து முடிந்தது.

கடைசி முயற்சி தடுக்கப்பட்ட போது கிடைத்த கார்னர் வாய்ப்பை கெவின் டி புருயின் அடிக்க ரொமிலு லகூகு வினையாற்றுவதில் மந்தமாகச் செயல்பட்டார். 6 அடிக்குள்ளிலிருந்து கோல் அடிக்க வேண்டிய அருமையான வாய்ப்புப் தவற விடப்பட்டது.

எனவே முதல் 8 நிமிடங்களில் குறைந்தது 2 கோல்களையாவது பெல்ஜியம் அடித்திருக்க வேண்டும், ஆனால் 3 முறை வேல்ஸ் அருமையாக தடுத்தனர். இந்த இழுபறி நிலை 13-வது நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. நட்சத்திர வீரர் ஈடன் ஹசார்ட் பந்தை அருமையாக நைங்கோலனுக்கு அளிக்க அவர் சுமார் 25-30 அடி தூரத்திலிருந்து நீளமான ஷாட் ஒன்றில் பந்தை உயரமாக வலைக்குள் செலுத்த வேல்ஸ் கோல் கீப்பர் ஹென்னிசியின் முயற்சி பலனளிக்கவில்லை பெல்ஜியம் 1-0 என்று முன்னிலை பெற்றது.

இதனையடுத்து 26-வது நிமிடத்தில் வேல்ஸ் சமன் செய்திருக்க வேண்டும், ஆனால் ஆரோன் ராம்சே பந்தை வெட்டி எடுத்துச் சென்று டெய்லரிடம் அனுப்ப 6 அடியிலிருந்து டெய்லர் கோல் அடித்திருக்க வேண்டும், ஆனால் திபா கர்டாய்ஸின் அருமையான டைவ் கோலை முறியடித்தது.

ஆனால் நீண்ட நேரம் பெல்ஜியம் முன்னிலையைத் தக்க வைக்க முடியவில்லை, 31-வது நிமிடத்தில் ராம்ஸேயின் கார்னர் ஷாட்டில் ஆஷ்லே வில்லியம்ஸ் தலையால் முட்டி கோலுக்குள் செலுத்த 1-1 என்று சமன் ஆனது, இது வில்லியம்சின் 2-வது சர்வதேச கோல், முதல் கோல் 6 ஆண்டுகளுக்கு முன்பாக அடித்தது குறிப்பிடத்தக்கது. ஆஷ்லே வில்லியம்சை ஒருவரும் கவர் செய்யவில்லை.

பிறகு காரத் பேல் எடுத்த அருமையான முயற்சி முறியடிக்கப்பட்டது.

இடைவேளைக்குப் பிறகும் பெல்ஜியமே கோல் அடிக்கும் என்பது போல் ஆடியது. ரொமீலு லகூகு தலையால் அடித்த ஷாட் வெளியே சென்றது. டி புருயின் ஷாட் ஒன்று கிராஸ் பாருக்கு மேலே சென்றது. ஈடன் ஹசார்டின் இன்னொரு முயற்சியும் வெளியே சென்றது.

ஆனால் 55-வது நிமிடத்தில் ராப்சன் கேனு வேல்ஸ் தரப்பில் 2-வது கோலை அடிக்க, 86-வது நிமிடத்தில் சாம் வோக்ஸ் 3-வது கோலை அடித்தார். 55-வது நிமிடத்தில் அடிக்கப்பட்ட வேல்ஸ் கோலுக்கு இரண்டே இரண்டு பேர்தான் காரணம், பெல்ஜியம் தடுப்பாட்டத்தில் கோட்டை விட்டது. கோல் கீப்பரை டென்ஷன் படுத்தியது.

இடையே 73-வது நிமிடத்தில் மிக அருகிலிருந்து தலையால் கோலுக்குள் தள்ளும் முயற்சியில் பெல்ஜியம் கோட்டை விட்டது. 82-வது நிமிடத்தில் பெனால்டி பகுதியில் பெல்ஜியம் வீரர் கோல் அடிக்கும் நிலையில் கீழே தள்ளப்பட்டார், ஆனால் அது வேல்ஸ் பந்தை எடுக்கும் முயற்சியே என்று பெனால்டி கிக் கொடுக்கப்படவில்லை. 90-வது நிமிடத்தில் நைங்கோலன் தூரத்திலிருந்து அடித்த ஷாட்டை வேல்ஸ் கோல் கீப்பர் பிடித்தார். ஆட்டம் காய நேரத்துக்குச் சென்றது ஆனால் ஒன்றும் நடக்கவில்லை பெல்ஜியம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது

http://tamil.thehindu.com/sports/யூரோ-2016-பெல்ஜியம்-அதிர்ச்சித்-தோல்வி-அரையிறுதியில்-வேல்ஸ்-அணி/article8801162.ece?homepage=true

Link to comment
Share on other sites

யூரோ 2016: பிரான்ஸை வெளியேற்றும் முனைப்பில் ஐஸ்லாந்து; 5 அபாய வீரர்கள்

 
கவனம் ஈர்க்கும் ஐஸ்லாந்து அணியின் 5 அபாய வீரர்கள். | படம்: ராய்ட்டர்ஸ்.
கவனம் ஈர்க்கும் ஐஸ்லாந்து அணியின் 5 அபாய வீரர்கள். | படம்: ராய்ட்டர்ஸ்.

ஞாயிறன்று யூரோ 2016 கால்பந்து காலிறுதியில் பிரான்ஸ் அணியை ஐஸ்லாந்து அணி எதிர்கொள்கிறது, அன்று இங்கிலாந்தை தோற்கடித்து அதிர்ச்சியளித்த ஐஸ்லாந்து அணியை முறியடிக்க பிரான்ஸ் கவனத்தில் கொள்ள வேண்டிய 5 ஐஸ்லாந்து வீரர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

யார் அந்த 5 வீரர்கள்?

கோல்கீப்பர் ஹால்டர்சன்:

ஹால்டர்சனுக்கு கோல் கீப்பிங் என்பது பகுதி நேர பொழுதுபோக்குதான். அவருக்கு முக்கியத் தொழில் திரைப்படங்கள் இயக்குவது, இசை வீடியோக்களை வெளியிடுவது. இந்த யூரோ 2016 தொடரில் ஹால்டர்சன் சிறந்த முறையில் கோல் கீப்பிங் செய்து வருகிறார். இங்கிலாந்தை வீழ்த்திய போட்டியில் ரஹீம் ஸ்டெர்லிங்குடன் ஏற்பட்ட மோதலில் பெனால்டி கிக்கிற்கு வழிவகுத்தாலும் ஹால்டர்சனின் பங்கு பிரான்ஸுக்கு அச்சுறுத்தல்தான்.

ரேக்னர் சைகர்ட்சன்:

இங்கிலாந்துக்கு எதிராக முதல் கோலை அடித்து ஐஸ்லாந்தை உலகறியச் செய்தவர் மேலும் இங்கிலாந்தின் கடைசி நேர சமன் முயற்சியை தனது தடுப்பாட்டத்தினால் முறியடிதவர் ரேக்னர் சைகர்ட்சன். அன்று இங்கிலாந்து தோல்வியடைந்த பிறகு அந்த அணி எப்படி ஐஸ்லாந்தை தரக்குறைவாக எடை போட முடியும் என்று உரத்த குரலில் சாடினார். ‘அவர்கள் ஏதோ லண்டன் பூங்காவில் நடைபழகுவது போல் நினைத்து விட்டனர்” என்றார். தற்போது கால்பந்து கிளப்கள் இவரை ஒப்பந்தம் செய்ய முண்டியடித்து வருகின்றன.

‘மகா த்ரோ’ மன்னன் ஆரோன் குனார்சன்:

இங்கிலாந்தை மட்டுமல்ல இந்தத் தொடரில் பக்கவாட்டு எல்லைக்கோட்டிலிருந்து தனது மிகப்பெரிய த்ரோ மூலமே அணிகளை அச்சுறுத்தி வருகிறார், விட்டால் த்ரோவையே கோலுக்குள் விட்டெறிவது போல் உள்ளது இவரது மகா த்ரோக்கள். இவரைக் கடந்து பந்தை எடுத்துச் செல்வது கடினம். இவரது லாங் த்ரோவினால் ஆஸ்திரியா, இங்கிலாந்துக்கு எதிராக கோல்கள் அடிக்கப்பட்டன. இன்னும் சொல்லப்போனால் அன்று இங்கிலாந்து இவரது த்ரோவை என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தது. ஐஸ்லாந்து அணிக்காக அதிக போட்டிகளை ஆடும் 2-வது வீரராராவர் குனார்சன். பிரான்ஸ் இவரது மகா த்ரோவை எப்படி கையாளப்போகிறது என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளது.

கில்ஃபி சைகர்ட்சன்:

இவரை ரேக்னர் சைகர்ட்சனுடன் குழப்பிக் கொள்ள கூடாது. ஐஸ்லாந்து தடுப்பாட்டத்திலிருந்து தாக்குதல் ஆட்டம் ஆட முடிவெடுக்கும் போது கில்பி சைகர்ட்சன் அதில் முக்கியப் பங்கு வகிப்பவர். தகுதிச் சுற்றுப் போட்டிகளில் 6 கோல்களுடன் முன்னிலை வகித்தார். குறிப்பாக ஹாலந்து அணியை அதிர்ச்சித் தோல்வியுறச் செய்த போட்டியில் 3 கோல்கள். இந்த போட்டித் தொடரில் ஹங்கேரிக்கு எதிராக ஸ்பாட் கிக்கில் ஒரு கோல் அடித்துள்ளார். இங்கிலாந்து பிரிமியர் லீகில் ஸ்வான்சீ மற்றும் டாட்டன்ஹம் ஹாட்ஸ்பர் அணிக்கு ஆடியதால் இங்கிலாந்து வீரர்கள் பற்றிய இவரது அறிவு அன்று இங்கிலாந்துக்கு எமனானது.

கோல்பீன் சிதர்சன்:

இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி கோலை அடித்தவர் கோல்பீன் சிதர்சன். அதாவது இங்கிலாந்து கோல் கீப்பர் ஜோ ஹார்ட் சற்றே மந்தமாகச் செயல்பட்டதால் அதனை பயன்படுத்திக் கொண்டார். பெரிய அணிகளை அதிர்ச்சித் தோல்வியுறச் செய்யும் ஆற்றல் கொண்டவர் இவர். ஐஸ்லாந்து அணிக்காக இதுவரை 21 கோல்களை அடித்துள்ளார். இவரும் பிரான்ஸுக்கு எதிராக முன்னணி வீரராகக் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது.

http://tamil.thehindu.com/sports/யூரோ-2016-பிரான்ஸை-வெளியேற்றும்-முனைப்பில்-ஐஸ்லாந்து-5-அபாய-வீரர்கள்/article8801332.ece?homepage=true

Link to comment
Share on other sites

கால்பந்து உலக சாம்பியன் ஜேர்மனி யூரோ கிண்ண அரை இறுதியில் 

 

FB_IMG_1467526809391கால்பந்து உலக சாம்பியன் ஜேர்மனி யூரோ கிண்ண அரை இறுதியில்.

யூரோ 2016 இல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 3 ஆவது காலிறுதி போட்டியில் ஜெர்மனி இத்தாலி அணிகள் மோதின.

இதற்கு முன் இத்தாலி ஜெர்மனி அணிகள் மோதிய 33 ஆட்டங்களில் இத்தாலி 15 ஆட்டங்களிலும் ஜெர்மனி 8 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்ததுடன் 10 ஆட்டங்கள் சமநிலையில் முடிந்திருந்தன. அத்துடன் நொக் போட்டிகளில் ஜெர்மனி இத்தாலி அணியை இதுவரை வெற்றி கொள்ளவில்லை என்ற நிலையில் நொக் அவுட் சுற்றுக்களில் இத்தாலிக்கு எதிராக முதல் வெற்றியை பெற ஜெர்மனியும் தனது ஆதிக்கத்தை தக்க வைத்து அரை இறுதிக்குள் நுழைய இத்தாலியும் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கின.

எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் ஆட்டம் ஆரம்பித்தது முதலே ஆட்டம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்தது. முதல் பாதியில் இரு அணிகளும் சிறப்பான தடுப்பாட்டத்தை மேட்கொண்டமையால் கோல் ஏதும் இல்லாத நிலையில் முதல் பாதி 0-0 என சமநிலையில் முடிவடைந்தது. இரண்டாம் பாதியில் இரு அணி வீரர்களும் சற்று ஆக்ரோஷமாக விளையாடினர். சமநிலையை நோக்கி சென்ற போட்டியில் 65 ஆவது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ஓஸில் கோல் அடித்து திருப்புமுனையை ஏற்படுத்தினார். 78 ஆவது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் கையால் பந்தை தடுத்ததனால் இத்தாலிக்கு பெனல்ட்டி உதை வழங்கப்பட்டது. பெனல்ட்டி வாய்ப்பை போனுஸ்ஸி கோளாக மாற்றி ஆட்டத்தை மீண்டும் சமநிலைப் படுத்தினார். 90 நிமிட முடிவில் ஆட்டம் 1-1 என சமநிலையானது. வெற்றியாளரைத் தீர்மானிக்க மேலதிக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. மேலதிக நேரத்திலும் கோணல்கள் இல்லாத நிலையில் பெனல்ட்டி உதை மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.

முதல் வாய்ப்பில் இத்தாலி கோல் அடித்தது. பதிலுக்கு ஜெர்மனியும் தனது முதல் வாய்ப்பில் கோல் அடித்தது.

2 ஆவது வாய்ப்பில் இத்தாலி வீரர் சாச்சா பந்தை வெளியில் அடித்து வீணடித்தார். முல்லர் அளித்த ஜெர்மனியின் 2 ஆவது வாய்ப்பை இத்தாலி கோல் காப்பாளர் தடுத்தார். 3 ஆவது வாய்ப்பில் இத்தாலி கோல் அடித்தது. ஜெர்மய சார்பாக 3 ஆவது வாய்ப்பை ஓஸில் கோல் கம்பத்தில் அடித்து வீணடித்தார். முதுநிலையில் இருந்த இத்தாலிக்கு 4 ஆவது வாய்ப்பை பெல்லே வெளியே அடித்து அதிர்ச்சி கொடுத்தார். 4 வாய்ப்புக்கள் முடிவில் 2-2 என சமநிலையில் இருந்தது.

5 ஆவது வாய்ப்பில் இத்தாலி சார்பாக போனுஸ்ஸி அடித்த பந்தை ஜெர்மன் கோல் காப்பாளர் நேயர் தடுத்தார். கோல் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ஜெர்மனின் 5 ஆவது வாய்ப்பை சுவின்ஸ்ரெய்ஜ்ர் வெளியில் அடித்து வீணடித்தார். 5 வாய்ப்புக்கள் முடிவில் போட்டி 2-2 என சமநிலையில் இருந்தது. 6 ஆவது 7 ஆவது 8 ஆவது வாய்ப்புக்களில் இரு அணிகளும் கோல் அடித்தன. 8 வாய்ப்புக்கள் முடிவில் போட்டி 5-5 என சமநிலையில் இருந்தது. 9 ஆவது வாய்ப்பில் இத்தாலி வீரர் டார்மியான் அடித்த பணத்தை நேயர் தடுத்தார். கோல் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ஜெர்மனியின் 9 ஆவது வாய்ப்பில் ஹெக்டர் கோல் அடித்து ஜெர்மனியை வெற்றி பெற செய்தார்.

இவ்வெற்றியின் மூலம் முதல் முறையாக நொக் அவுட் சுற்றுக்களில் இத்தாலியை வீழ்த்தியது ஜெர்மனி.  அத்துடன் 8 ஆவது முறையாக அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது ஜெர்மனி.

காலிறுதியுடன் விடைபெற்றது இத்தாலி.

FB_IMG_1467526790085 FB_IMG_1467526800437

http://vilaiyattu.com/15937-2/

Link to comment
Share on other sites

யூரோ காலிறுதியில் இத்தாலியை வீழ்த்தியது ஜெர்மனி

ரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலி அணி ஜெர்மனியிடம் டைபிரேக்கரில் தோல்வி கண்டது.

euro.jpg

 

ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில் போர்டியாக்ஸ் நகரில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி இத்தாலி அணியிடம் மோதியது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட நேர ஆட்டத்தில் கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. இதனைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.

அதிலும் முடிவு கிடைக்காததால் சடன் டெத் முறைக்கு ஆட்டம் சென்றது. இதில் 4 பெனால்டிகளுக்கு பிறகே முடிவு கிடைத்தது. அதாவது,  மொத்தம் 18 பெனால்டிகள் அடிக்கப்பட்டன. அதில் ஜெர்மனி 6-5 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. 

http://www.vikatan.com/news/sports/65782-germany-vs-italy-euro-2016-match-report.art

Link to comment
Share on other sites

நேற்றய வெற்றியை தொடர்ந்து பெர்லின் இல் மிகபிரபல்யமான kudamm  வீதியில்..

 

Link to comment
Share on other sites

யூரோ அரையிறுதியில் ஜெர்மனி- பிரான்ஸ், போர்ச்சுகல் -வேல்ஸ் மோதல்

ரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில் ஐஸ்லாந்து அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

gied.jpg

ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி ஆட்டத்துக்கு ஏற்கனவே போர்ச்சுகல், வேல்ஸ், ஜெர்மனி அணிகள் தகுதி பெற்றிருந்தன.  கடைசி காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி  ஐஸ்லாந்து அணியுடன் மோதியது. ஆட்டம் தொடங்கிய, 12வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஓலிவர் ஜிரார்ட் முதல் கோல் அடித்தார்.

 

தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தில் அசத்திய பிரான்ஸ் அணி கோல் மழை பொழிந்தது. 19வது நிமிடத்தில் பால் போக்பா, 42வது நிமிடத்தில் பேயட், 45 நிமிடத்தில் கீரீஸ்மேன், 59வது நிமித்தில் மீண்டும் ஓலிவர் ஜிரார்ட் கோல் அடித்தனர். ஐஸ்லாந்து அணியும் தன் பங்குக்கு இரு கோல்களை அடித்தது. இறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பிரான்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியது.

ஸ்டேட் டி பிரான்சில்  நடைபெறவுள்ள முதல் அரையிறுதி ஆட்டத்தில் வரும் 6ம் தேதி ரொனால்டோவின் போர்ச்சுகலும் காரத் பேலின் வேல்ஸ் அணியும் மோதுகின்றன. மார்செலியில் 7ம் தேதி நடைபெறவுள்ள மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வலுவான ஜெர்மனியை எதிர்கொள்கிறது. உலகச் சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்துவது பிரான்சுக்கு கடுமையான சவால்தான்.

http://www.vikatan.com/news/sports/65794-euro-2016-france-move-into-semi-finals.art

Link to comment
Share on other sites

ஐஸ்லாந்தை வீழ்த்தி அரையிறுதியில் ஜெர்மனியைச் சந்திக்கும் பிரான்ஸ்: 5 முக்கிய அம்சங்கள்

 

 
ஆட்ட நாயகனான பிரான்ஸ் வீரர் கிரவ்த் மகிழ்ச்சிக் கொண்டாட்டம். | படம்: ராய்ட்டர்ஸ்.
ஆட்ட நாயகனான பிரான்ஸ் வீரர் கிரவ்த் மகிழ்ச்சிக் கொண்டாட்டம். | படம்: ராய்ட்டர்ஸ்.

யூரோ 2016 கால்பந்து தொடரில் அச்சுறுத்தும் அணியாக திகழ்ந்த ஐஸ்லாந்து அணியை பிரான்ஸ் தங்களது மிரட்டலான அதிரடி ஆட்டத்தினால் 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

அரையிறுதியில் வரும் வியாழனன்று ஜெர்மனியை சந்திக்கிறது பிரான்ஸ்.

இந்த ஆட்டத்தின் 5 முக்கிய அம்சங்கள் வருமாறு:

1. கோல்கள்

பிரான்ஸ் தரப்பில் ஆட்ட நாயகன் கிரவ்த் 12 மற்றும் 59வது நிமிடங்களில் கோல் அடிக்க, போக்பா 19வது நிமிடத்திலும், பயேட் 42 வது நிமிடத்திலும் கிரெய்ஸ்மேன் 45-வது நிமிடத்திலும் கோல்களை அடிக்க, ஐஸ்லாந்து தரப்பில் மகா த்ரோ மன்னன் குனார்சென்னின் இரண்டு அருமையான த்ரோக்களில் சிதர்சன் 56-வது நிமிடத்திலும் ஜார்னசன் 84-வது நிமிடத்திலும் கோல்கலை அடிக்க 5-2 என்று ஐஸ்லாந்தை முறியடித்தது பிரான்ஸ்.

இந்த வெற்றியை அடுத்து பிரான்ஸ் அணி பயிற்சியாளர் திதியர் டெஸ்சாம்ப்ஸ் ஜெர்மனிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 1958க்குப் பிறகு பிரான்ஸ் அணி ஜெர்மனியை எந்த ஒரு சீரியஸான போட்டித் தொடரிலும் வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2. வேகமும் ஆக்ரோஷமும்:

கடைசி நிமிட கோல்களினால் சிலபல வெற்றிகளைப் பெற்ற பிரான்ஸ், ஐஸ்லாந்துக்கு எதிரான காலிறுதியில் அருமையான கட்டுப்பாட்டுடன் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. பிரான்ஸ் அணியின் ஆட்ட நாயகன் ஆலிவியர் கிரவ்த் 12-வது நிமிடத்திலேயே கோலை அடித்தார். மட்டுய்டியின் அருமையான பாஸை, பர்கிர் செவர்சனைக் கடந்து கேரி ஆர்னசனையும் கடந்து அடிக்கப்பட அங்கு கிரவ்த் ஐஸ்லாந்து கோல் கீப்பர் ஹால்டர்சன் கால்களுக்கு இடையே வலைக்குள் செலுத்தினார். ஆனால் கிரவ்த் ஆஃப் சைடு என்று பிற்பாடு ரீ-ப்ளேக்களில் தெரியவந்தது, ஆனால் கொடுப்பதற்கு மிகவும் கடினமான ஆஃப் சைடாகும் இது.

19-வது நிமிடத்தில் கிரெய்ஸ்மேனின் கார்னரை போக்பா தலையால் முட்டி கோலுக்குள் செலுத்தினார். அதன் பிறகு 42-வது நிமிடத்தில் பகாரே சாக்னா கிராஸ் ஆட கிரவ்த் கீழே தள்ளப்பட்டார், ஆனால் பயேட் இடது காலால் மிக அருமையாக கோலுக்குள் அடித்தார். இது இந்தத் தொடரில் பயேட்டின் 3-வது கோலாகும். 45-வது நிமிடத்தில் மத்துய்தி, தாழ்வான பாஸை கிரவ்திற்கு அனுப்ப அவர் கிரெய்ஸ்மானுக்கு அனுப்ப அவர் கோல்கீப்பரை முன்னே இழுத்து பிறகு கோலுக்குள் அடித்தார் பிரான்ஸ் 4-0 என்று இடைவேளையின் போதே ஆதிக்கத்தை நிலைநாட்டியது.

3. ஐஸ்லாந்து த்ரோ மன்னன் கேப்டன் குனார்சென்னின் அச்சுறுத்தல்:

ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் வலது புறத்திலிருந்து மகா த்ரோ குனார்சன் மீண்டும் ஒரு ஆற்றல் வாய்ந்த த்ரோவை சிதர்சனுக்கு அனுப்ப 6 அடி தூரத்திலிருந்து சிதர்சன் தலையால் அடிக்க பந்து போவர்சன்னிடம் வந்தது ஆனால் உமிட்டி அவருக்கு கடும் நெருக்கடி கொடுக்க இவரது ஷாட் பாருக்கு மேல் சென்றது. த்ரோ மூலமே பெனால்டி பகுதிக்குள் விட்டெறிகிறார் குனார்சன். இங்கிலாந்தை அன்று இப்படித்தான் காலி செய்தார். ஆனால் இம்முறை இது கோலாக மாறவில்லை. ஆனால் இரண்டாவது பாதியில் குனார்சென் மீண்டும் அப்படிப்பட்ட த்ரோவை செய்ய கோல்பீன் சிதர்சன் அதனை கோலாக மாற்றினார். 84-வது நிமிடத்தில் ஸ்குலாசென் இடது புறத்திலிருந்து ஒரு அருமையான பாஸை மேற்கொள்ள ஜார்னசன் அதனைத் துல்லியமாக தலையால் முட்டி கோல் ஆக்கினார். ஐஸ்லாந்து அணி தோல்வியடைந்தாலும் எப்போதும் கோல் அடிக்கும் முயற்சியிலேயே இருந்தது. ஐஸ்லாந்து இந்தத் தொடரில் தங்களது முத்திரையைப் பதித்தனர்.

4.சுறுசுறுப்பான பிரான்ஸ் தாக்குதல்:

ஜெர்மனிக்கு எதிரான மிக முக்கியமான அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸின் எந்த வீரர் சரியான பார்மில் இருப்பார் அல்லது இருக்கிறார் என்பதைக் கூறுவது கடினம். ஆலிவியர் கிரவ்த் இரண்டு அபாரமான கோல்களை அடித்தார், அவருக்கு கிடைத்த 2 வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டார். ஆண்டாய்ன் கிரெய்ஸ்மான் தனது ஆக்ரோஷத்தினால் சுவர் போன்ற ஐஸ்லாந்து தடுப்பாட்டத்தை நிறைய முறை ஊடுருவினார். இவர் அடித்த கோல் யூரோ 2016-ல் அடிக்கப்பட்ட 100-வது கோலாகும்.

5. தடுப்பாட்டக் கோளாறுகள்:

பிரான்ஸின் தடுப்பாட்ட ஐயங்கள் எழக்காரணம் ஐஸ்லாந்தின் கேப்டன் குனார்சன் த்ரோ கோலாக மாறியதே. மேலும் 25-வது நிமிடத்தில் குனார்செனின் த்ரோ கோலாக மாறியிருக்கும், அப்போதும் பிரான்ஸ் தடுப்பாட்ட உத்திகள் கேள்விகளை எழுப்புவதாக இருந்த்து. 2-வது கோலின் போதும் ஜார்னசன் சுத்தமாக கவர் செய்யப்படவில்லை. எனவே ஐஸ்லாந்து 2 கோல்களை அடித்ததே பிரான்ஸின் தடுப்பாட்ட பலவீனங்களை காண்பிப்பதாக உள்ளன. இதனை நிச்சயம் ஜெர்மனி பயன்படுத்திக் கொள்ளும். எனவே இந்தப் புலத்தில் பயிற்சியாளர் டெஸ்சாம்பிற்கு வேலை உள்ளது.

http://tamil.thehindu.com/sports/ஐஸ்லாந்தை-வீழ்த்தி-அரையிறுதியில்-ஜெர்மனியைச்-சந்திக்கும்-பிரான்ஸ்-5-முக்கிய-அம்சங்கள்/article8807157.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

இந்த வெற்றியை அடுத்து பிரான்ஸ் அணி பயிற்சியாளர் திதியர் டெஸ்சாம்ப்ஸ் ஜெர்மனிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 1958க்குப் பிறகு பிரான்ஸ் அணி ஜெர்மனியை எந்த ஒரு சீரியஸான போட்டித் தொடரிலும் வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உப்புடித்தான் இத்தாலியும்  பழைய வரலாறை கையிலை தூக்கிப்பிடிச்சுக்கொண்டு ஜேர்மனியோடை விளையாட வந்தது. கடைசியிலை என்ன நடந்தது? வீரம் எல்லா நேரமும் சரிவராது. வெற்றி தோல்வி சகஜம்.tw_blush:

Link to comment
Share on other sites

6 minutes ago, குமாரசாமி said:

உப்புடித்தான் இத்தாலியும்  பழைய வரலாறை கையிலை தூக்கிப்பிடிச்சுக்கொண்டு ஜேர்மனியோடை விளையாட வந்தது. கடைசியிலை என்ன நடந்தது? வீரம் எல்லா நேரமும் சரிவராது. வெற்றி தோல்வி சகஜம்.tw_blush:

அவருக்கு கொஞ்சம் மறதி கூட போல கிடக்கு..tw_blush: 2014 இல் உலக கிண்ணபோட்டிகளில் ஜெர்மனி அடித்தது.

Aus gegebenem Anlass ein Blick zurück auf die WM 2014 und den 1:0-Viertelfinalsieg des DFB-Teams gegen Frankreich. Erinnert Ihr euch noch?

13606965_1174341972618647_88426435265941

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

உப்புடித்தான் இத்தாலியும்  பழைய வரலாறை கையிலை தூக்கிப்பிடிச்சுக்கொண்டு ஜேர்மனியோடை விளையாட வந்தது. கடைசியிலை என்ன நடந்தது? வீரம் எல்லா நேரமும் சரிவராது. வெற்றி தோல்வி சகஜம்.tw_blush:

என்னப்பா இரண்டு பேரும் நீங்களும் என்னையும் குழப்புறீர்கள்.அதில  பிரான்ஸ் யோ்மனியை 1958 க்கு பிறகு வெண்டதில்லை எண்டு தானே இருக்கு.:rolleyes:

Link to comment
Share on other sites

2 hours ago, சுவைப்பிரியன் said:

என்னப்பா இரண்டு பேரும் நீங்களும் என்னையும் குழப்புறீர்கள்.அதில  பிரான்ஸ் யோ்மனியை 1958 க்கு பிறகு வெண்டதில்லை எண்டு தானே இருக்கு.:rolleyes:

மன்னிக்கவும் சுவைப்பிரியன், நீங்கள் சொல்வது சரி.. நான் தவறாக விளங்கி கொண்டேன்.

 

Link to comment
Share on other sites

46 minutes ago, சுவைப்பிரியன் said:

என்னப்பா இரண்டு பேரும் நீங்களும் என்னையும் குழப்புறீர்கள்.அதில  பிரான்ஸ் யோ்மனியை 1958 க்கு பிறகு வெண்டதில்லை எண்டு தானே இருக்கு.:rolleyes:

 

http://www.11v11.com/teams/germany/tab/opposingTeams/opposition/France/

Link to comment
Share on other sites

நாடு திரும்பிய ஐஸ்லாந்து அணிக்கு மாபெரும் வரவேற்பு..

Iceland receive heroes reception in Reykjavik!

13585130_1175490592503785_88915948111564

13575809_1175490565837121_69032171751407

13603706_1175490589170452_82208303935671

13613536_1175490669170444_88926917369002

13584903_1175490709170440_57378604285077

13603649_1175490799170431_69454522205556

13580519_1175490905837087_27672269735180

13558677_1175490885837089_49298597927854

13585126_1175490922503752_79878137937722

 

Link to comment
Share on other sites

பிரான்ஸ்: ஜேர்மன் அணிக்கு வழக்கம்போல உதை குடுப்போம்.. muscle-boy.gif

ஜேர்மனி: ஏன்.. முன்னம் வாங்கிக் கட்டினது எல்லாம் மறந்து போச்சா? icon_rolleyes.gif

பிரான்ஸ்: அது போனமாசம்.. இது இந்த மாசம்smileys-afraid-885309.gif

giggling%20emoticon.png

 

Link to comment
Share on other sites

1 hour ago, இசைக்கலைஞன் said:

பிரான்ஸ்: ஜேர்மன் அணிக்கு வழக்கம்போல உதை குடுப்போம்.. muscle-boy.gif

ஜேர்மனி: ஏன்.. முன்னம் வாங்கிக் கட்டினது எல்லாம் மறந்து போச்சா? icon_rolleyes.gif

பிரான்ஸ்: அது போனமாசம்.. இது இந்த மாசம்smileys-afraid-885309.gif

giggling%20emoticon.png

 

வேலை இடத்தில் ஜேர்மன்காரன் ரொம்ப தொல்லைதாரான் போல..:grin:

Link to comment
Share on other sites

2 hours ago, நவீனன் said:

வேலை இடத்தில் ஜேர்மன்காரன் ரொம்ப தொல்லைதாரான் போல..:grin:

ஒரு சின்ன நாடு ஐஸ்லாந்திட்ட தங்கட வீரத்தை காட்டின பிரான்சுக்கு நான் ஆதரவில்லை.. :D:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.