Jump to content

EURO 2016 உதைபந்தாட்ட போட்டி செய்திகள், கருத்துக்கள்


Recommended Posts

EURO 2016 உதைபந்தாட்ட போட்டி செய்திகள், கருத்துக்கள்

இந்தவருடம் ஆனி மாதம் 10ம் திகதியில் இருந்து 10 ஆடி வரை ஐரோப்பியகிண்ண உதைபந்தாட்டபோட்டி பிரான்ஸ்சில் நடைபெற இருக்கிறது.

              og-default_zpsu2d8qfc1.jpg

 

 

 

                                                                                                           போட்டிகளின் விபரங்கள்

               spielplan-euro-2016_zpski1yjl7w.png

 

                                                                                         போட்டி நடைபெறபோகும் இடங்கள்

              2F521F7E00000578-3356068-image-a-8_14499

 

                                      இன்று ஜேர்மனி தனது அணியில் எந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்று அறிவித்துள்ளது.

                                          2c6e9560-762d-488a-9e37-2ed98e16037d.jpg

 

                      இந்த 27 வீரர்களுடன் சுவிஸ்லாந்தில் Ascona என்ற இடத்தில் பயிற்சி முகாமை 24ம் திகதி ஆரம்பிக்கிறது.

                                 31ம் திகதி  அணியில்  இடம் பெறபோகும் 23 வீரர்கள் யார் என்பது அறிவிக்கப்படும்.

 

 

 

 
Tor:
Manuel Neuer (FC Bayern München), Marc-André ter Stegen (FC Barcelona), Bernd Leno (Bayer Leverkusen)
 
Defensive:
Jerome Boateng (FC Bayern München), Emre Can (FC Liverpool), Jonas Hector (1. FC Köln), Benedikt Höwedes (FC Schalke 04), Mats Hummels (Borussia Dortmund), Shkodran Mustafi (FC Valencia), Antonio Rüdiger (AS Rom), Sebastian Rudy (1899 Hoffenheim)
 
Offensive:
Karim Bellarabi (Bayer Leverkusen), Julian Brandt (Bayer 04 Leverkusen), Julian Draxler (VfL Wolfsburg), Mario Götze (FC Bayern München), Mario Gomez (Besiktas Istanbul), Sami Khedira (Juventus Turin), Joshua Kimmich (FC Bayern München), Toni Kroos (Real Madrid), Thomas Müller (FC Bayern München), Mesut Özil (FC Arsenal), Lukas Podolski (Galatasaray Istanbul), Marco Reus (Borussia Dortmund), Leroy Sané (FC Schalke 04), André Schürrle (VfL Wolfsburg), Bastian Schweinsteiger (Manchester United), Julian Weigl (Borussia Dortmund)
 
 
 
 
 

     யாழ் கள ஐரோப்பியகிண்ண 2016 உதைபந்தாட்டபோட்டி

 
 
Link to comment
Share on other sites

  • Replies 163
  • Created
  • Last Reply
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நவீனன் said:

ஜேர்மன் அணியில் Marco Reus  (Borussia Dortmund) இடம்பெறவில்லை.

EM-Kader 2016: Joachim Löw streicht Marco Reus aus DFB-Aufgebot. Marco Reus, hier beim Länderspiel Ende März gegen Italien, wird verletzungsbedingt bei der EM fehlen.  (Quelle: imago/Eibner)

காயம் எண்டு சொல்லுறாங்கள்......உண்மை பொய் ஆருக்குத்தெரியும்?

Link to comment
Share on other sites

யூரோ கால்பந்து போட்டி அப்டேட்ஸ்

 

581870_1147894761935979_6214025115274882

ரொனால்டோ தலைமையில் போர்ச்சுகல் அணி!

யூரோவுக்கான போர்ச்சுகல் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரொனால்டோ தலைமையிலான இந்த அணியில் செட்ரிக், ரிச்சர்டோ கார்வாலோ, பெப்பே, ஜோஸ் வான்டே, டேனிலோ, ஆன்ரியா சில்வா, ஆன்ரோ கோமஸ், மட்டின்ஹோ, ரஃபா, குயிரேஸ்மா, ஈடர், நானி உள்ளிட்ட 23 வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

பிரான்ஸ் அணியில் ஓலிவர் ஜிரார்ட்

யூரோவுக்கான பிரான்ஸ் அணியின் கேப்டனாக லாரீஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். பேட்ரிஸ் எவ்ரா, சக்னா, அடில் ரேமி, லாரன்ட் கோசின்லி, மட்டோடி, பால் போக்பா, சிசாக்கோ, ஆன்ட்ரியோ கிரேஸ்மேன், ஓலிவர் ஜிரார்ட் , யோகன் கபாயி , கிங்ஸ்லி கோமன் உள்ளிட்ட 23 வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இத்தாலி அணியில் பாலோட்டலி இல்லை

கடந்த யூரோ கால்பந்து தொடரில் கலக்கிய மரியோ பாலோட்டலிக்கு இந்த யூரோவுக்கான இத்தாலி அணியில் இடம் கிடைக்கவில்லை. ஜியான்லுகி பஃப்பன் கோல்கீப்பரும் கேப்டனும் ஆவார். கெலினி, பானுச்சி, பர்சாக்லி, ஃபுளோரன்சி, தியாகோ மோட்டா, டேனியல் டி ரோஸி, கேன்ரீவா, ஸ்டீபன் எல்ஸ்ராவி, கிரான்சினோ பெல்லி உள்ளிட்ட 23 வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணி!

யூரோவுக்கான இங்கிலாந்து அணியில் கேப்டன் ரூனி தலைமையில் 23 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஜோ ஹர்ட் கோல்கீப்பராக களமிறங்குவார். கேரி காகில், கிறிஸ் ஸ்மால்லிங், ரஹீம் ஸ்டெர்லிங், ஜேம்ஸ் மில்னர், ஆடம் லல்லனா, ஜோர்டான் ஹேண்டர்சன், ஜேக் வில்ஷயர், ஜேமி வார்டி, ஸ்டர்ரிஜ், ரஷ்ஃபோர்ட்டு ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

vikatan

Link to comment
Share on other sites

இனவாதத்தால் ஈரோ 2016 ஆட்டத்தில் தான் விலக்கப்படுவதாக கரீம் பென்ஜீமா குற்றச்சாட்டு

 

பிரான்சின் முன்னணி கால்பந்தாட்ட வீரரான கரீம் பென்ஜீமா, தேசிய கால்பந்துக் குழுவின் மேலாளர் இனவாதிகளுக்கு தலைவணங்கி யூரோ 2016 கால்பந்து போட்டியில் பங்கேற்கவுள்ள அணியில் இருந்து தன்னை விலக்க முடிவு செய்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

151201155040_karim_benzema_512x288_reute

 

தற்போதுள்ள எந்த பிரெஞ்சு கால்பந்து விளையாட்டு வீரரைக் காட்டிலும் பென்ஜீமா பிரான்சுக்கு அதிக கோல்களைப் போட்டவராவார்.

ஆனால் தனது குழுவை சேர்ந்த வீரருக்கு பாலியல் ஒலிநாடா ஒன்றை வைத்து மிரட்டியதாக எழுந்த குற்றச்சாட்டுகளால் குழுவிலிருந்து நீக்கப்பட்டார்.

 

160413182047_karim_benzema_304x171_reaxf

 

பென்ஜீமா தனக்கு இந்த விவகாரத்தில் தனது ஈடுபாடு இருந்ததாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார். அவர் கடந்த ஆண்டு தேசிய அணியில் இருந்து இடை நீக்கப்பட்டார்.

ஆனால் ஸ்பெய்ன் சஞ்சிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பிரான்சில் அதிகரித்து வரும் இனவாத அரசியல் கட்சிகளின் செல்வாக்கால்தான் தனது தொடர் விலக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் மிரட்டல் குறித்த குற்றச்சாட்டால் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப்புக்காக அவர் விளையாடுகிறார்

http://www.bbc.com/tamil/sport/2016/06/160601_football_player

Link to comment
Share on other sites

யூரோ 2016 கால் பந்து திருவிழாவுக்கு தயாராகும் ஃபிரான்ஸ்!

ஃபிரான்ஸ் நாட்டில், வரும் ஜூன் 10 ம் தேதி யூரோ கால்பந்துப் போட்டிகள் நடக்கவிருக்கின்றன. முதல் முறையாக 24 நாடுகள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

ஹென்றி தௌலாண்ட் என்பவர், 1927 ல் பி்ரான்ஸ் கால்பந்து சங்கத்தின் செயலாளராக இருந்தார். அவர்தான் இதற்கான ஐடியாவை கொடுத்தது முதல் பல்வேறு வேலைகளையும் செய்து வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, 1960 ல் யூரோ விளையாட்டு ஆரம்பிக்கும்போது அவர் இறந்து விட்டார். அதனால்  அவர் நினைவாகவே அந்த கோப்பைக்கு அவரின் பெயர் வைக்கப்பட்டது.

இந்தப் போட்டிகளில் ஒன்றுபட்ட சோவியத் யூனியன், முதல் கோப்பையை வென்றது.

og-default.jpg

இதுவரை நடந்துள்ள 14 இறுதிப் போட்டிகளில் ஜெர்மனி, ஸ்பெயின் 3 முறையும், பிரான்ஸ் 2 முறையும்  சோவியத் யூனியன், நெதர்லாந்து, செக்கஸ்லோவோகியா, டென்மார்க், கிரீஸ், இத்தாலி ஆகிய நாடுகள்  ஒரு முறையும் இந்த கோப்பைகளை கைப்பற்றின.

வெள்ளியினால் ஆன இந்த கப்பின் எடை தற்போது 8 கிலோவாகவும், அகலம் 60 செ.மீ ஆகவும் உள்ளது.

போனமுறை போலந்து, உக்ரைன் சேர்ந்து நடத்திய இறுதிப் போட்டியை 30 கோடி மக்கள் பார்த்தார்கள்.இந்த முறை இன்னும் அதிகமான மக்கள் பார்வையாளர்களாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் விசேஷம் என்னவென்றால் போட்டியினை நடத்தும் நாடு, இறுதிச்சுற்றுக்கு  நேரடியாக தகுதி பெறும்.உலகக் கோப்பை போல அதற்கு முந்தையக் கோப்பையை வாங்கிய அணியும் தகுதிச் சுற்றில் சேர்ந்துதான் வரவேண்டும்..

உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள், ஃபிரான்சில் இந்த வாரமே குவியத் துவங்குவார்கள். ஜூன் 10 முதல் ஜூலை 10 வரை ஒரு மாத காலம் ஃபிரான்ஸ் நாட்டில் திருவிழா கொண்டாட்டம்தான்!

http://www.vikatan.com/news/sports/64831-france-preparing-for-euro-2016.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிக கோல்களை அடிக்கும் வீரர்களுக்கான பந்தய வெற்றி அளவீடு

T. Müller              8,00     
C. Ronaldo          9,00     
A. Griezmann      11,00     
H. Kane               13,00     
O. Giroud            15,00     
R. Lewandowski  17,00     
R. Lukaku            21,00

கோப்பையை வெல்லும் நாடுகளுக்கான பந்தய வெற்றி அளவீடு

பிரான்ஸ்        4,2     
ஜேர்மனி        4,5     
ஸ்பெயின்      6,0     
இங்கிலாந்து 9,5     
பெல்ஜியம்     12     
இத்தாலி          17     
போர்த்துக்கல்21     
குராசியா       29     
ஆஸ்திரியா    41     
சுவிஸ்             67     
துருக்கி           81

Link to comment
Share on other sites

Foto:  

EURO 2016 ஜேர்மன் அணியில் இடம்பெற்று இருந்த Antonio Rüdiger  காயம் காரணமாக அணியில் இருந்து விலகினார்.

Link to comment
Share on other sites

ஸ்பெயின் தோல்வி

 

யூரோ கால்பந்து தொடர் வரும் 11-ம் தேதி தொடங்குகிறது. இத்தொடருக்கான பயிற்சி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின், 137-வது இடத்தில் உள்ள ஜார்ஜியாவுடன் தனது சொந்த நாட்டில் மோதியது.

இதில் ஜார்ஜியா 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை தோற்கடித்தது. கடந்த 2015-ம் ஆண்டு நெதர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற நட்பு ரீதியான போட்டியில் ஸ்பெயின் அணி தோல்வியை சந்தித்திருந்தது. அதன்பின் சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும்.

http://tamil.thehindu.com/sports/ஸ்பெயின்-தோல்வி/article8709053.ece

Link to comment
Share on other sites

யூரோ கால்பந்தாட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
2016-06-09 11:20:42

பிரான்ஸின் பத்து நக­ரங்­களில் நடை­பெ­ற­வுள்ள யூரோ 2016 கால்­பந்­தாட்டப் போட்­டி­களை முன்­னிட்டு பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

 

இப் போட்­டிகள் நடை­பெறும் காலப்­ப­கு­தியில் தீவி­ர­வாதத் தாக்­கு­தல்கள் இடம்­பெ­றலாம் என பிரான்ஸ் ஜனா­தி­பதி ஃப்ரான்கொய்ஸ் ஹொலண்டே தெரி­வித்­துள்ளார். 

 

17211511046-01-02.jpg

 

எனினும் அச்­ச­றுத்­தல்­க­ளுக்கு பிரான்ஸ் அடி­ப­ணி­யக்­கூ­டாது என அவர் கூறி­யுள்ளார்.போட்­டிகள் நடை­பெ­ற­வுள்ள பத்து நக­ரங்­களில் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­படும் என்­பதை அவர் உறுதி செய்தார். பத்து நக­ரங்­க­ளிலும் 90,000 பாது­காப்புப் பிரி­வினர் பாது­காப்பு வழங்­குவர் எனவும் அவர் தெரி­வித்தார்.

 

யூரோ (ஐரோப்­பிய) கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டிகள் நாளை­ம­று­தினம் ஆரம்­ப­மாகி ஜூலை மாதம் 10ஆம் திகதி நிறைவு பெறு­கின்­றன. 

 

செய்ன்ட் டெனிஸ், ஸ்டேட் டி பிரான்ஸ் விளை­யாட்­ட­ரங்கில் வெள்­ளிக்­கிமை நள்­ளி­ர­வுக்கு சற்றுப் பின்­னர் நடை­பெறும் ஆரம்பப் போட்­டியில் பிரான்ஸை ருமே­னியா எதிர்த்­தாடும்.

 

இப் போட்­டி­களில் 24 நாடுகள் நான்கு குழுக்­களில் பங்­கு­பற்­று­கின்­றன.
குழு ஏ : அல்­பே­னியா, பிரான்ஸ், ருமே­னியா, சுவிட்­சர்­லாந்து.
குழு பி: இங்­கி­லாந்து, ரஷ்யா, ஸ்லோவேக்­கியா, வேல்ஸ்.
குழு சி: ஜெர்­மனி, வட அயர்­லாந்து, போலந்து, யூக்ரெய்ன்.
குழு டி: க்ரோஏ­ஷியா, செக் குடி­ய­ரசு, ஸ்பெய்ன், துருக்கி.
குழு ஈ: பெல்ஜியம், இத்தாலி, அயர்லாந்து குடியரசு, சுவீடன்.
குழு எவ்: ஆஸ்திரியா, ஹங்கேரி, ஐஸ்லாந்து, போர்த்துக்கல்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=17211#sthash.okRH6I8W.dpuf
Link to comment
Share on other sites

இது கால்பந்து சீஸன்!

எம்.குமரேசன்

 

p36a.jpg

கால்பந்து கோலாகலத்துக்குத் தயாராகி விட்டது பிரான்ஸ். உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு அடுத்து, உலகின் மிகப் பெரிய கால்பந்து போட்டி யூரோ கப். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் யூரோ கப், ஜூன் 10-ம் தேதி தொடங்கி, பிரான்ஸின் 10 நகரங்களில் நடைபெற இருக்கிறது. உலக சாம்பியன் ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், இங்கிலாந்து என கால்பந்து விளையாட்டின் முக்கிய நாடுகள் அனைத்தும் கலந்துகொள்வதால் உலகின் ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களின் கவனமும் யூரோ கோப்பை மீதுதான்.

p36d.jpg

ஜெர்மனி 

கால்பந்து உலகக்கோப்பையை நான்கு முறையும், யூரோ கோப்பையை மூன்று முறையும் வென்றிருக்கும் ஜெர்மனியே இந்த முறையும் கோப்பையை வெல்லும் அணியாக கணிப்பில் முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால் சோகம் என்னவென்றால், கடைசியாக யூரோ கோப்பையை ஜெர்மனி வென்று 20 வருடங்களாகிவிட்டது. இந்த முறை உலக சாம்பியன் என்ற கெத்துடன் யூரோ கோப்பைக்குள் நுழையும் ஜெர்மனி, கோப்பையை வென்றாக வேண்டும் என்ற வெறியில் இருக்கிறது.

ஜெர்மனியைப் பொறுத்தவரை, சூப்பர் ஸ்டார் என யாரும் கிடையாது. அனைத்து வீரர்களும் சூப்பர்ஸ்டார்ஸ்தான். கோல்கீப்பர் மேனுவல் நூயூவரைத் தாண்டி பந்து எல்லைக்கோட்டைக் கடப்பது கடினம் என்றால், முன்களத்தில் தாமஸ் முல்லர் எப்போது, எங்கு இருந்து வருவார் எனத் தெரியாது. மிக லாகவமாகக் கடந்து செல்லும் அசாத்திய திறமையும் வேகமும்தான் முல்லரின் பலம்.

2014-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் வெற்றி கோல் அடித்து அர்ஜென்டினாவின் வெற்றியைப் பறித்த மரியோ கோட்சேவும் சாதாரண ஆள் இல்லை. மைதானத்தில் ஓடிக்கொண்டே இருப்பார் கோட்சே. நடுகளத்தில் அனுபவமிக்க பாஸ்டியன் ஸ்வான்ஸ்டேகர் ஜெர்மனியின் மிகப் பெரிய பலம். டோனி க்ருஸ், சமி கெடிரா, மெசூத் ஒசில் என ஜெர்மனியின் ஒவ்வொரு வீரரும் எதிர் அணியை மிரளவைப்பவர்கள்.

p36b.jpg

ஸ்பெயின்

ஜெர்மனியைப் போலவே யூரோ கோப்பையை மூன்று முறை வென்றிருக்கும் அணி என்பதோடு, ஸ்பெயின்தான் யூரோ கோப்பையின் நடப்பு சாம்பியன். ஆனால், 2014-ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஸ்பெயின் மரண அடி வாங்கி முதல் சுற்றிலேயே வெளியேறியதால், ஸ்பெயினுக்கு இந்த முறை மனரீதியிலான சவால்களும் அதிகம். ஸ்பெயின், டிக்கி டாக்கா ஆட்டமுறையைப் பின்பற்றும்.

தங்களுக்குள் ஷாட் பாஸ் போட்டுக்கொண்டு, தங்கள் கட்டுப்பாட்டிலேயே பந்தை வைத்துக்கொண்டு, எதிர் அணி வீரர்களை சோர்வுக்குள்ளாக்கி தக்க சமயத்தில் கோல் அடிப்பது டிக்கி டாக்கா உத்தி. `ஒருகாலத்தில் ஸ்பெயினுக்கு டிக்கி டாக்கா, மந்திரம் போல பலித்தது. ஆனால், கடந்த உலகக்கோப்பையில் டிக்கி டாக்கா எடுபடவில்லை. அதனால் இந்த முறை புதிய ஆட்டமுறையில் ஸ்பெயின் ஆடும்' என்கிறார் அதன் பயிற்சியாளர்.

ஸ்பெயின் அணி, நட்சத்திர வீரர்கள் நிறைந்த அணி. ஐகெர் கெசிலாஸ் ஸ்பெயின் அணியின் அனுபவமிக்க கோல்கீப்பர். 2000-ம் ஆண்டு முதல் இதுவரை தொடர்ந்து ஐந்து யூரோ கோப்பைத் தொடரில் விளையாடியிருக்கிறார். நடுகளத்தில் ஆன்ட்ரஸ் இனியஸ்டா பிரித்து மேய்வார்; எதிர் முகாமில் இருந்து கோல் போஸ்ட்டுக்குப் பந்தைக் கடத்தி வருவதில் கில்லாடி. டேவிட் சில்வா, ஃபெப்ரிகாஸ் ஆகியோர் நடுகளத்தில் இனியஸ்டாவுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். தடுப்பாட்டத்தைப் பொறுத்தவரை செர்ஜியோ ரமோஸ் எப்போதுமே அதிரடிதான். ஒன்று பந்தைத் தூக்கு இல்லையென்றால், ஆளைத் தூக்குவதுதான் ரமோஸின் பாலிசி. நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்த்தை ஸ்பெயின் தக்கவைத்துக் கொண்டால், யூரோவை நான்கு முறை வென்ற சாதனையையும் படைக்கும்.

p36c.jpg

இங்கிலாந்து

அது உலகக்கோப்பையாக இருந்தாலும் சரி, யூரோ கோப்பையாக இருந்தாலும் சரி ஒவ்வொரு முறையும் கப்பு எங்களுக்குத்தான் என ஓவர் சவுண்டோடு நுழையும் அணி இங்கிலாந்து. இந்த முறையும் அந்தப் பாரம்பர்யம் தொடர்கிறது.

இந்த முறை இங்கிலாந்து பயிற்சியாளர் ஹாட்ஸன், திறமைமிகுந்த இளம் அணியைத் தயார்செய்திருக்கிறார். கேரி காகில், கிறிஸ் ஸ்மால்லிங், ஆடம் லல்லென்னா, ரஹீம் ஸ்டெர்லிங், ஸ்டர்ரிஜ், ஜேமி வார்டி என இளம் வீரர்கள் பட்டாளம் எதிர் அணிக்கு நிச்சயம் கிலியை ஏற்படுத்தத்தான் செய்கிறது. இதில் ஜேமி வார்டி மிக முக்கியமானவர். இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் பெரிய அணிகள் எல்லாம் வெளியேற, லியோசெஸ்டர் சிட்டி என்ற கத்துக்குட்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு முழுமுதற் காரணம் ஜேமி வார்டிதான். லியோசெஸ்டர் அணிக்காக 24 கோல்கள் அடித்து அந்த அணிக்குக் கோப்பை வென்று கொடுத்துள்ளார் ஜேமி. இங்கிலாந்து அணியின் கேப்டன் வேன் ரூனேவும் வேறு களத்தில் இருக்கிறார்.

p36e.jpg

இத்தாலி

நான்கு முறை உலகக்கோப்பை சாம்பியன் அணியான இத்தாலிக்கு, இந்த யூரோ கப் மிகப் பெரிய சவால்தான். இத்தாலியின் முக்கிய வீரரும், `மிட்ஃபீல்ட் மேஸ்ட்ரோ' எனப் புகழப்படுபவருமான ஆண்ட்ரூ பிர்லோ இப்போது அணியில் இல்லை. கடந்த யூரோவில் கலக்கிய சேட்டைக்கார மரியோ பாலோட்டலியும் இந்த முறை அணியில் இல்லை. பலோட்டலிக்குப் பதிலாக ஸ்டீபன் எல்சார்வி என்கிற இளம் வீரர் முன்களத்தில் விளையாடப்போகிறார். இத்தாலி அணி எப்போதும் தடுப்பாட்டத்தை நம்பியே களம் இறங்கும். கடந்த உலகக்கோப்பையில் உருகுவே வீரர் சுவாரஸிடம் கடி வாங்கிய கெலினியை மையமாக வைத்ததுத்தான் இந்த முறை இத்தாலியின் தடுப்பாட்டம் இயங்கப்போகிறது. பானுச்சி, பர்சாக்லி ஆகியோரும் பின்களத்தில் இத்தாலிக்கு நம்பிக்கை கொடுப்பவர்கள்.

கேப்டன் ஜியான்லுகி பஃபன் உலகிலேயே மிகச் சிறந்த கோல்கீப்பர். இத்தாலி அணிக்காக 157 சர்வதேசப் போட்களில் விளையாடியுள்ளார். இவருக்கு இது 4-வது யூரோ தொடர். இத்தாலியைப் பொறுத்தவரை எடுத்தோம் கவிழ்த்தோம் என ஆடுவது இல்லை. எதிர் அணியைப் பொறுத்து தடுப்பாட்டத்தைக் கையாளும். தேவைப்பட்டால் தாக்குதல் ஆட்டத்தைத் தீவிரப்படுத்தும். இந்த யூரோவில், அனுபவமும் இளமையும் கலந்த ஒரு கலவையாக இத்தாலி இருக்கிறது.

p36f.jpg

போர்ச்சுகல்

`போர்ச்சுகல்...' என்றதுமே நமக்கு ரொனால்டோதான் நினைவுக்கு வருவார். இந்த முறை ரியல்மாட்ரிட்டுடன் சேர்ந்து சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்ற தெம்பில் ரொனால்டோ இருக்கிறார். பந்து காலுக்குக் கிடைத்துவிட்டால், கோல் கம்பம்தான் இவரது இலக்காக இருக்கும். கவுன்டர் அட்டாக்கில் ரொனால் டோவைப் பிடிக்கவே முடியாது. அந்த அளவுக்கு ஒரு வேகம் இருக்கும். ஆனால், ரொனால்டோவைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், போர்ச்சுகல் என்ற அணியே காற்றுபோன பலூன்தான். ஒவ்வொரு முறையும் ரொனால்டோவை நம்பியே களம் இறங்குவதால் ஆரம்பத்திலேயே வெளியேறிவிடுகிறது போர்ச்சுகல்.

p36g.jpg

பிரான்ஸ்

போட்டியை நடத்தும் பிரான்ஸ், இதற்கு முன்னர் 1984 மற்றும் 2000-ம் ஆண்டில் யூரோ கோப்பையை வென்றிருக்கிறது. தற்போதையை அணியில் பால் போக்பா என்கிற இளம் வீரரைத்தான் பிரான்ஸ் பெரிதும் நம்பியிருக்கிறது. யோகன் கபாயி, சக்னா, கோல்கீப்பர் லாரிஸ், ஆலிவர் ஜிராட்டு ஆகியோர் பிரான்ஸின் நம்பிக்கை நட்சத்திரங்கள். சொந்த மண்ணில் போட்டிகள் நடைபெறுவது பிரான்ஸுக்குக் கூடுதல் பலம்.

p36h.jpg


நெதர்லாந்து அவுட்!

2016-ம் ஆண்டு நடக்கவிருக்கும் யூரோவில், அதிர்ச்சியான ஒரு விஷயமும் இருக்கிறது. கால்பந்து விளையாட்டில் மிக முக்கியமான அணியான நெதர்லாந்து இந்த முறை யூரோவுக்குத் தகுதி பெறவே இல்லை. நெதர்லாந்து யூரோவில் இல்லாதது, போட்டியின் சுவாரஸ்யத்தைக் குறைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இதுவரை 16 அணிகளே மோதிய யூரோ கோப்பையில் இந்த முறை 24 அணிகள் மோதுவதால், புதிய அணிகளும் புதிய வீரர்களும் போட்டியை சுவராஸ்யப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்!

http://www.vikatan.com/anandavikatan/2016-jun-15/interviews---exclusive-articles/120046-uefa-euro-2016-teams-and-players-details.art

 

Link to comment
Share on other sites

ஸ்பெயின் உட்பட 24 அணிகள் பங்கேற்கும் ஐரோப்பிய கால்பந்து திருவிழா இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் பிரான்ஸ்- ருமேனியா மோதல்

 
 
ron_2889132f.jpg
 

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு அடுத்து மிகவும் பிரபலம் பெற்றது ஐரோப்பிய கோப்பை போட்டியாகும். மினி உலகக் கோப்பை என அழைக்கப்படும் இந்த தொடரில் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டுமே கலந்து கொள்ளும்.

உலகக் கோப்பையை போலவே இந்த தொடரும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. 1960-ம் ஆண்டு இந்தப் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. கடைசியாக 2012-ம் ஆண்டு போலந்தும், உக்ரைனும் இணைந்து போட்டியை நடத்தியது. இதில் ஸ்பெயின் சாம்பியன் பட்டம் பெற்றது.

கால்பந்து திருவிழா

15-வது ஐரோப்பிய கால்பந்து போட்டி பிரான்சில் இன்று நள்ளிரவு தொடங்குகிறது. ஜூலை 10-ம் தேதி வரை ஒரு மாத காலம் இந்த கால்பந்து திருவிழா நடைபெறுகிறது. மொத்தம் 54 ஆட்டங்கள் இடம் பெறுகிறது. ஐரோப்பிய கால்பந்து தொடரை பிரான்ஸ் நடத்துவது இது 3-வது முறையாகும். அறிமுக தொடர் 1960-ம் ஆண்டிலும், அதன் பின்னர் 1984-ம் ஆண்டி லும் பிரான்சில் போட்டிகள் நடைபெற்றது.

எப்போதும் இல்லாத வகையில் இம்முறை 24 நாடுகள் பங்கேற்கின்றன. இவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. நடப்பு சாம்பியனான ஸ்பெயின் டி பிரிவில் உள்ளது. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும்.

நாக் அவுட் சுற்று

லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றில் 16 அணிகள் மோதும். லீக் சுற்றில் 6 பிரிவுகளிலும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகளின் புள்ளிகள் அடிப்படையில் மீதமுள்ள 4 அணிகள் தேர்வாகும்.

இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு செயின்ட் டெனிஸ் நகரில் உள்ள ஸ்டேடு டி பிரான்ஸ் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் பிரான்ஸ், ருமேனியாவுடன் மோதுகிறது. இந்த கால்பந்து தொடரை சோனி சிக்ஸ் மற்றும் சோனி இஎஸ்பிஎன் சானல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

22-ம் தேதி வரை லீக் ஆட்டம் நடைபெறுகிறது. 25-ம் தேதி நாக் அவுட் சுற்று தொடங்கும். காலிறுதி ஆட்டங்கள் ஜூன் 30, ஜூலை 1 மற்றும் 3, 4-ம் தேதிகளிலும், ஜூலை 6 மற்றும் 7-ம் தேதிகளில் அரையிறுதியும், 10-ம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறும்.

ரொனால்டோ

உலகின் சிறந்த கால்பந்து வீரரான போர்ச்சுக்கலின் கிறிஸ் டியானோ ரொனால்டோ இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இந்த சீசனில் 51 ஆட்டத்தில் 51 கோல்கள் அடித்துள்ளார்.

ஜெமர்மனியின் தாமஸ் முல்லர், பிரான்சின் பவுல் போகாபா, போலந்தின் லெவர் ஸ்டோஸ்கி, வேல்ஸின் காரத் பாலே, சுவீடனின் இப்ராகிமோவிக், ஸ்பெயினின் இனியஸ்டா, இங்கிலாந்தின் ரூனி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இந்தப்போட்டியில் முத்திரை பதிக்க காத்திருக்கின்றனர்.

வரலாறு

ஐரோப்பிய கோப்பையை ஜெர்மனி, ஸ்பெயின் அதிகபட்சமாக தலா 3 முறை வென்றுள்ளன. பிரான்ஸ் 2 முறையும், சோவியத் யூனியன், இத்தாலி, செக்கோஸ்லோவாக்கியா, நெதர்லாந்து, டென்மார்க், கிரீஸ் ஆகிய அணிகள் தலா 1 முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளன. உலகக் கோப்பை சாம்பி யனான ஜெர்மனி, ஐரோப்பிய கோப்பை யையும் வெல்ல போராடும். நடப்பு சாம்பியனான ஸ்பெயின் தொடர்ச்சியாக 3-வது முறையாக பட்டம் வெல்லும் கனவுடன் தொடரை சந்திக்கிறது. போட்டியை நடத்தும் பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, போர்ச்சுக்கல், பெல்ஜியம் போன்ற அணிகளும் சவாலாக விளங்கும்.

பாதுகாப்பு அதிகரிப்பு

பிரான்சில் கடந்த நவம்பர் மாதம் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. மேலும் ஐரோப்பிய கால்பந்து தொடரின் போது தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெறக் கூடும் என இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் எச்சரிக்கை விடுத் துள்ளன. இதனால் பிரான்சில் போட்டி நடைபெறும் நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

தொடரின் மொத்த பரிசுத் தொகை 2 ஆயிரத்து 273 கோடி. பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.60 கோடியும், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.37 கோடியும் வழங்கப்படும்.

ron1_2889141a.jpg

ron11_2889140a.jpg

ron2_2889137a.jpg

http://tamil.thehindu.com/sports/ஸ்பெயின்-உட்பட-24-அணிகள்-பங்கேற்கும்-ஐரோப்பிய-கால்பந்து-திருவிழா-இன்று-தொடக்கம்-முதல்-ஆட்டத்தில்-பிரான்ஸ்-ருமேனியா-மோதல்/article8713620.ece?homepage=true

Link to comment
Share on other sites

யூரோ 2016: டிமிட்ரி பயெட்டின் அபாரமான கோலினால் ருமேனியாவை வீழ்த்தியது பிரான்ஸ்

 

 
மஞ்சள் சிராய் ருமேனிய வீரர்களின் தடுப்பணையை மீறி நீல நிற உடையில் உள்ள பிரான்ஸ் வீரர் பயெட் அடித்த வெற்றி கோலுக்கான ஷாட். | படம்: ஏ.எஃப்.பி.
மஞ்சள் சிராய் ருமேனிய வீரர்களின் தடுப்பணையை மீறி நீல நிற உடையில் உள்ள பிரான்ஸ் வீரர் பயெட் அடித்த வெற்றி கோலுக்கான ஷாட். | படம்: ஏ.எஃப்.பி.

பிரான்சில் தொடங்கிய யூரோ 2016 கால்பந்து தொடரின் முதல் போட்டியில் ருமேனியா அணியை பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிக்கணக்கைத் தொடங்கியது.

88-வது நிமிடம் வரை ருமேனியா அணி 1-1 என்று டிரா செய்து பிரான்ஸை வெறுப்பேற்றவே ஆடியது. ஆனால் 89வது நிமிடத்தில் டிமிட்ரி பயெட்டின் இடது கால் சுழற்றல் ருமேனியாவை வெறுப்பேற்றியது, கடைசியில் சற்றும் எதிர்பாராத நிலையில் எதிரணி வீரர்கள் புடைசூழ நின்ற நிலையிலும் அசாத்தியமான அந்த பயெட்டின் இடது கால் சுழற்றல் 2-வது கோலாக, வெற்றி கோலாக மாறியதில் ருமேனியா அதிர்ச்சியடைந்தது. இது உண்மையில் எங்கிருந்தோ வந்த கோல்தான்!

அதாவது ருமேனிய வீரரிடமிருந்து தட்டிப்பறித்த பந்தை உள்ளுக்குள் கொண்டு வந்து இடது காலால் ஒரே உதை! டாப் கார்னரில் கோல் ஆனது.

ஆனால் பிரான்ஸ் அணி ஹியூகோ லோரிஸுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது. தொடக்க நேரங்களில் ருமேனிய வீரர் போக்டான் ஸ்டான்கு ஷாட்டை கோல் செல்ல விடாமல் தடுத்தார் லோரிஸ். அதே போல் 2-வது பாதியின் தொடக்கத்தில் ருமேனிய மிட்ஃபீல்டர் தவற விட்ட வாய்ப்பும் பிரான்ஸுக்கு உதவியது, இந்த இரண்டு தருணங்களும் ருமேனியாவுக்குச் சாதகமாகியிருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறாகியிருக்கும்.

பிரான்ஸ் வீரர் ஆலிவர் கிரவ்ட் 3 வாய்ப்புகளை கோட்டை விட்டார். முதலில் தலையால் முட்டிய வாய்ப்பு ஒன்று சற்றே வைடாகச் சென்றது. ஆனால் 58-வது நிமிடத்தில் ஆலிவர் கிரவ்ட் முதல் கோலை அடிக்கக் காரணமானவரும் வெற்றி கோலை அடித்த பயெட் என்றால் மிகையாகாது. ஆனால் இதிலும் ருமேனிய கோல் கீப்பர் சிப்ரியன் ததாருசானு தவறிழைத்தார், பயெட் ஷாட்டை அவர் தவறவிட்டார். அதாவது கிரவ்ட் தன்னை தடுத்ததாக ருமேனிய கோல் கீப்பர் நினைத்தார். இது முதல் கோலானது. அதாவது 58-வது நிமிடத்தில் பிரான்ஸ் 1-0 என்று முன்னிலை.

ஆனால் இந்த முன்னிலையை 7 நிமிடங்களுக்குத்தான் பிரான்ஸால் தக்கவைக்க முடிந்தது. 65-வது நிமிடத்தில் வலது புறத்திலிருந்து ருமேனிய வீரர் அட்ரியன் போபா அடித்த கிராஸை பிரான்ஸ் சரியாகக் கையாளத் தவறியது. இதனையடுத்து வாய்ப்பை பயன்படுத்தி ருமேனிய வீரர் நிகோலே ஸ்டான்சியு அதனை கோல் நோக்கி எடுத்துச் செல்ல பிரான்ஸ் வீரர் பாட்ரீஸ் எவ்ரா மடத்தனமாக அதனை தடுக்க நினைத்தார். ஹங்கேரி நடுவர் விக்டர் கசாய் மிகவும் தைரியமாக பெனால்டி வழங்கினார். பெனால்டியை எளிதில் ஸ்டான்கு கோலாக மாற்றி சமன் செய்தார். 1-1 என்ற நிலையில் ஆட்டம் சென்று கொண்டிருந்த போதுதான் டிரா என்று நினைத்த தருணத்தில் பயெட்டின் அதிர்ச்சிகரமான வெற்றி கோல் 89-வது நிமிடத்தில் பிரான்ஸுக்கு அபார வெற்றியை கொடுத்தது.

முன்னதாக கிரவ்ட் தலையால் அடித்த ஷாட் கோலுக்கு சற்று வெளியே செல்ல, அடுத்ததாக, பகாரி சக்னாவின் கிராஸை கோட்டை விட்ட அன்டாயின் கிரீய்ஸ்மான் 2-வது முயற்சியில் கோலை நோக்கி அடிக்க போஸ்டில் பட்டது.

ருமேனிய அணியும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைக் கோட்டை விட்டது. 2-வது பாதியில் 3-வது நிமிடத்தில் பந்தை நெஞ்சில் வாங்கி கட்டுப்படுத்திய ருமேனியாவின் ஸ்டான்கு இறங்கிய பந்தை கோலாக மாற்ற முடியாமல் போனார்.

வெற்றி கோலை அடித்து வெளியேறிய பயெட் கண்ணீருடன் ஓய்வறைக்குத் திரும்பினார். பிரான்ஸ் வெற்றியுடன் தொடங்கியது.

http://tamil.thehindu.com/sports/யூரோ-2016-டிமிட்ரி-பயெட்டின்-அபாரமான-கோலினால்-ருமேனியாவை-வீழ்த்தியது-பிரான்ஸ்/article8717882.ece?homepage=true

Link to comment
Share on other sites

யூரோ கால்பந்து:சுவிட்சர்லாந்து அணி வெற்றி
 

பிரான்ஸ்: பிரான்ஸ் நாட்டில் யூரோ கால்பந்து போட்டிகள் நடந்து வருகிறது. இதில் முதல் வார பிரிவு போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் அப்பேனியா அணியும் சுவிட்சர்லாந்து அணியும் மோதின. இதில் சுவிட்சர்லாந்து அணி அல்பேனியா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது

http://www.dinamalar.com/news_detail.asp?id=1540518

 
Link to comment
Share on other sites

23 minutes ago, நவீனன் said:

இந்தாள் எப்ப அனுஷ்காவை விட்டுதோ அண்டையிலிருந்து  கொஞ்சம் உருப்பட்டமாதிரிதான் தெரியுது. :grin:

Link to comment
Share on other sites

40 minutes ago, ஜீவன் சிவா said:

இந்தாள் எப்ப அனுஷ்காவை விட்டுதோ அண்டையிலிருந்து  கொஞ்சம் உருப்பட்டமாதிரிதான் தெரியுது. :grin:

IPL யோடு அவர்கள்  மீண்டும் சேர்ந்து விட்டார்கள்... என்று நான் வாசித்த நினைவு..

Link to comment
Share on other sites

ரஷியா மீது ஐரோப்பிய கால்பந்து அதிகாரிகள் அபராதம்: ரஷிய அமைச்சர் விட்டலி முட்கோ

160609083654_russia_mutko_640x360_afp_no

 

தனது நாட்டின் கால்பந்து ரசிகர்களின் தவறான நடத்தை என்று கருத்து தெரிவித்துள்ள ரஷிய விளையாட்டுத்துறை அமைச்சர் விட்டலி முட்கோ, அதற்காக ஐரோப்பிய கால்பந்து அதிகாரிகள் ரஷியா மீது அபராதம் விதிக்கலாம் என கூறியுள்ளார்.

160612002318_euro_2016_clashes_640x360_a

 

இங்கிலாந்துக்கு எதிரான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதியில் வன்முறை சம்பவங்கள் நடந்தேறியதால், ரஷியா மீது ஒழுங்கு நடவடிக்கையை துவங்க உள்ளதாக யுஇஃபா உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், பிரான்ஸில் நடைபெறும் யூரோ 2016 கால்பந்து போட்டிகளில் பாதுகாப்பு அதிகரிப்படும் என யுஇஃபா தெரிவித்துள்ளது.

160612030824_euro2016_fans_clash_marseil

 

இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்கம் மீது எவ்விதமான ஒழுங்கு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

கூட்டத்தில் இடையூறு செய்தது, இனவெறியைத் தூண்டியது மற்றும் பட்டாசுகளை வெடிக்க வைத்தது போன்ற குற்றச்சாட்டுகள் ரஷியா மீது சுமத்தப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ள ஒழுங்கு நடவடிக்கை கூட்டத்தில் இந்த விஷயத்தில் தடை குறித்தான முடிவுகள் எடுக்கப்படும்.

http://www.bbc.com/tamil/global/2016/06/160612_vitaly_mutko_comments_on_football

Link to comment
Share on other sites

யூரோ 2016: சுவிஸ், வேல்ஸ் வெற்றி, ரஷ்யா - இங்கிலாந்து போட்டி சமநிலை
 
 

article_1465731896-LEAD-BoxBaleGarferkusயூரோ 2016 கிண்ணப் போட்டிகளில் சுவிற்ஸர்லாந்து, வேல்ஸ் அணிகள் வெற்றிபெற்றதோடு, ரஷ்ய அணிக்கும் இங்கிலாந்து அணிக்குமிடையில் இடம்பெற்ற போட்டி, சமநிலையில் முடிவடைந்தது.

சுவிற்ஸர்லாந்து அணிக்கும் அல்பேனிய அணிக்குமிடையில் இடம்பெற்ற போட்டியில், சுவிற்ஸர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. போட்டியின் 5ஆவது நிமிடத்தில் சுவிற்ஸர்லாந்தின் பபியன் ஷ்சாவேர் பெற்ற கோலின் உதவியுடன், அவ்வணி முன்னிலை பெற்றது. அதுவே, இறுதி கோலாகவும் மாறியது.

வேல்ஸ் அணிக்கும் ஸ்லோவாக்கியா அணிக்குமிடையில் இடம்பெற்ற போட்டியில் வேல்ஸ் அணி, 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

போட்டியின் 10ஆவது நிமிடத்தில் வேல்ஸின் கரித் பேல் பெற்ற கோலின் உதவியுடன், முதற்பாதியில் அவ்வணி முன்னிலை வகித்தது. 61ஆவது நிமிடத்தில் ஸ்லோவாக்கியாவின் ஒன்ட்ரெஜ் டூடா பெற்ற கோலினால், கோல் எண்ணிக்கை சமப்பட்டது. ஆனால், 81ஆவது நிமிடத்தில் வேல்ஸின் ஹல் றொப்சன்-கானு பெற்ற கோலினால், வேல்ஸ் அணி 2-1 என்ற முன்னிலையைப் பெற்று, வெற்றிபெற்றது.

இங்கிலாந்து அணிக்கும் ரஷ்ய அணிக்குமிடையிலான போட்டி, 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. முதலாவது பாதியில் கோல்களெவையும் பெறப்படாத நிலையில், 73ஆவது நிமிடத்தில் இங்கிலாந்தின் எரிக் டையர் பெற்ற கோலினால் அவ்வணி முன்னிலை பெற்ற போதிலும், இறுதி நேரத்தில் ரஷ்யாவின் வசிலி பெரெஸூட்ஸ்கி பெற்ற கோலினால், போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

- See more at: http://www.tamilmirror.lk/174502#sthash.fLRDDM6K.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.