Jump to content

What it’s like to be a Tamil refugee in a Toronto kitchen


Recommended Posts

When I was a cook, I worked with a lot of Tamil men from Sri Lanka. These guys are the barely seen backbone of Toronto restaurants: they wash dishes, graduating to cooking when they’ve learned enough English. Usually they work two jobs, sending money home and saving as much as they can to bring over their wives, sisters, brothers and children.

One day, 10 years ago, I found my dishwasher co-worker Jaya taking a nap, his head propped against a 40-pound bag of rice. There’s not a lot of napping or resting in kitchens, but I knew that Jaya, like many of his brothers and cousins, worked night shifts here, plus day shifts in a factory.

When he woke up, I asked him about Sri Lanka. Back home, he said, his family were mango farmers. He would take naps under the shade of trees and eat their fruit when he woke. When I asked about the circumstances of his leaving, he only shook his head and said, “No good.”

It was a phrase he employed often to describe his disappointment at improperly delivered produce orders, the too-steep staircase he’d fallen down three times, or burnt yam fries. This time he added a third word – “war” – to sum up what had forced him and much of his generation to flee their homeland.

That night I read up on Sri Lanka and its civil war. But the history didn’t come alive until I heard it first-hand.

For many years, Cyrus Sundar Singh had unsuccessfully attempted to fund and film a documentary about the Sri Lankan civil war and how its refugees came to live in Canada and work in restaurants. Switching tactics, Singh stagedBrothers in the Kitchen as a “live documentary” last week as part of the Hot Docs festival.

“It’s the story about the uprising, exodus and survival of the Tamil Sri Lankan minority, who fled a brutal civil war in 1983,” Singh explains.

As in any documentary, Singh interviewed dozens of subjects, then edited those down to essential pieces that, stitched together, form a clear narrative. But instead of splicing footage he had each interview subject recount their story live as part of an interactive, multimedia tapestry.

The show opened with news clips from 1986, about a boat found floating off the shore of Newfoundland, containing 155 refugees from Sri Lanka. It’s presented, as the news was at the time, as a mystery — played like a cold opening from an episode of Lost. Who are these people in the boats? How and why did they get here?

From there, Singh builds the 20th-century history of conflict between Sri Lanka’s Sinhalese majority and Tamil minority. It begins with an elder, moving slowly toward the microphone, to recount his witnessing of the 1958 anti-Tamil pogrom, a series of riots that killed hundreds.

It’s a live performance, so no one gets a second take. Singh asks us at the beginning to be forgiving of technical hiccups. But there’s nothing to forgive in the rawness of testimony.

One woman begins to cry right away, as she remembers a mob forming around her house in 1983, throwing stones through the window before burning it down. Another woman describes hiding from the mobs in a neighbour’s house, seeing a human burned alive. “My childhood was over,” she says. “And I have never felt safe again.”

The orchestrated anti-Tamil mob violence, which would come to be known as Black July, killed thousands and plunged the country into civil war that lasted until 2009.

Singh uses the TV news device of an anonymous subject speaking in silhouette, staging it with a screen in front of the audience. The anonymous voice testifies about being in that boat in 1986. The men didn’t know how long they’d be in the water, or really where they were. Mostly they just shivered and prayed.

“We didn’t eat or shit for three days,” says the silhouette.

So the narrative circles back, explaining how people got into those boats, the terror and violence that led them there and the new challenges they’d face as immigrants. This brings us back to the news clips, expanding on the tone of the period, the CBC report incredulous about the motives of these illegal immigrants.

“We were not opportunists,” says the man behind the screen. “We had to leave or die.”

Canada would go on to host the largest population of Sri Lankan Tamil diaspora in the world, the majority of them in Toronto. (Statistics are disputed, ranging from 29,000 to 200,000, but perhaps the return of the longform census will help clarify.) And if you’ve ever worked in a restaurant kitchen, you know how tirelessly this population works, as theBrothers in the Kitchen narrator puts it, going from refugees to having an elected member of Parliament (former NDP MP Rathika Sitsabaiesan) within one generation.

Towards the end of the show, former mayor Barbara Hall talks about helping to settle Tamil refugees in Toronto and former MP Bob Rae discusses the need to recognize the human rights tragedy of how the 25-year civil war ended, with an estimated 20,000 civilians killed by army shelling of the rebel stronghold.

With the addition of a narrator, a singing, dancing chorus and archival footage played overhead, Brothers in the Kitchenhas the charm of theatrical performance, starring amateurs as themselves, but sticking to a documentary story form.

During the show, boxes of vadai (a savoury donut), samosas and ladoo (a sweet ball of chickpea flour and coconut) are handed out. But the actual kitchen labour isn’t a big part of the performance.

“When we go to eat in a restaurant, if you take a peek in the back, it’s almost always a brown guy working there,” says Singh, who is Tamil from India. “And 90 per cent of the time it’s a Tamil Sri Lankan. The Toronto restaurant industry is essentially on the shoulders of these Tamils, who can be cooking French, Italian, Greek, greasy spoon. They do it all. So that became a window to frame the story of the Tamils.”

Singh saw the changing tide in feelings toward refugees as a good time to tell this story. And the kitchen is one effective way in.

In 2009, when Tamils blocked downtown Toronto’s Gardiner Expressway to protest the war crimes happening in Sri Lanka, it was condemned as the “wrong way to protest” by premier Dalton McGuinty. Last year, when Syrian refugees began to land in Canada, they were met by Prime Minister Justin Trudeau, amid a lot of back-patting from Canadians, ready to feel good about their generosity.

A dishwasher I worked with used to give a round of high-fives when he came in at 4 p.m. One day he was late. When he got there the sink was clogged with pots and pans. As he made his lap of high-fives around the room, the pastry chef told him, “Why don’t you go high-five the dishes?”

The dishwasher was probably coming from his other job, or a meeting with an immigration officer. Or he’d just woken from the bed he shared with a half-dozen other guys who sleep and work in shifts.

But when we don’t know each other’s stories, it’s easy to take the brothers in the kitchen for granted.

Corey Mintz is a Toronto-based food writer.

a cook making food in a restaurant kitchen

Link to comment
Share on other sites

சைறஸ் கிற்றாரைத் தூக்கிக்கொண்டு எமது மேடைகளிற்கு வர ஆரம்பித்து பதினைந்து வருடங்கள் இருக்கலாம் என்று நினைக்கிறேன்—காரணகாரியங்களிற்கு அப்பால், எமது சமூகம் சார்ந்து ஒரு படத்தை எடுத்து முடித்தமை பாரட்டப்படவேண்டியது. கதை முழுக்கதையாயில்லாவிடினும் கன்னத்தில் முத்தமிட்டால் வகையறாவை விட உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

எம்மவர்கள் இன்னமும் உணகவகங்களில் கோப்பை கழுவுகிறார்கள் என்றபோதும், ரொறொன்ரோவின் அத்தனை அதியுயர் விடுதிகள் முதல் அடிமட்டக் கடுகதி உணவகங்கள் வரை நம்மவர்கள் அத்தனை பதவிகளிலும் கோலோச்சுகிறார்கள். அதியுச்ச chef தொட்டு எத்தனையோ அதியுயர் உணவகங்களில் நம்மவர்களே முதலாளிகளாக இருக்கிறார்கள். எனவே கோப்பையோடு மட்டும் இன்னமும் கதை நிற்பது சற்று சலிப்பையும் எரிச்சலையும் வரவைக்கின்றது.

எமது சமூகத்தின் கதை மிகக்குழப்பகரமாக இன்னமும் இருப்பதற்கு என்ன காரணம் என்பது ஓயாத கேள்வியாக இன்னமும் தொடர்கிறபோதும், என்னைப் பொறுத்தவரை இதற்கான காரணம் ஏறத்தாள ஒரு புள்ளியில் குவிவதாகவே படுகிறது. அதாவது, எம்மை நாம் அகதிகளாக என்றைக்கும் பார்த்ததில்லை என்பதே இந்தக் குழப்பத்தின் காரணம் என்பது எனது கருத்து,

எமக்கு நிகழ்ந்த அத்தனை கொடுமைகளும் உலகின் இதர அகதிளோடு ஒப்பிடுகையில் எந்த வகையிலும் குறைந்ததில்லை. பள்ளி உடையில் பள்ளிக்குச் செல்லும் ஒரு மாணவனை ஒரு ஆயுத படை காரணமின்றி யுத்த சூழ்நிலைக்குள் நியாப்படுத்தி அடிப்பது அகதியாவதற்குப் போதுமானது. நாங்கள் கண்ணுற்ற கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. உலகின் எந்த அகதிக்கும் சற்றும் சழையாத இன்னல்கள் எங்கள் அனைவரிற்கும் நடந்தது. ஆனால், நாங்கள் எங்களை என்றைக்கும் அகதிகளாக உள்ளுர உணர்ந்ததில்லை. ஏதோ ஒரு நாட்டிற்குச் செல்வதற்காக முகவரிற்குப் பாரிய பணத்தைக் கட்டிவிட்டு, அந்நாட்டிற்குள் சென்று உயர்ந்து விடவேண்டும் என்று ஒற்றை இலக்கை மட்டும் நாங்கள் வரித்துக் கொண்டு பயணித்தவர்கள். எங்கள் சொந்தங்களை எம்மோடு அழைத்து வந்துவிடவேண்டும் என்று இயங்கியவர்கள். உளவியல் சாhந்து அலட்டிக்கொள்ளவோ, வலிகள் சார்ந்து புலப்பிக்கொள்வதற்கோ எங்களை நாங்கள் அனுமதித்ததில்லை. 83 கலவரத்தை இற்றைவரை கொழும்பில் பிறந்து வழர்ந்தவர்கள் அலட்டிக்கொள்ளும் அளவிற்கு ஈழத்திற்குள் வலி பெற்றவன் எதையும் அதிகம் பேசுவதில்லை. இது ஏன் என்று எமக்கு நாமே கேட்டுக்கொண்டு போகையில் பல பக்கங்களிற்குக் காரணங்களும் தெளிவும் மிக இலகுவில் எமக்குக் கிடைக்கும்—எனவே அதை இங்கு எழுதவில்லை. ஆனால், எமக்கு நிகழ்ந்த கொடுமைகள் நாங்கள் உலகெங்கும் அகதிநிலை கோருவதற்கு முற்று முழுதாய்ப் போதுமான நியாயங்கள்.

எங்கள் ஒவ்வொருவரிற்கும், அகதி அந்தஸ்த்துக் கிடைத்தபோது நீதிபதியினை ஏமாற்றி விட்டோம், வெள்ளைக் காரன் ஏமாந்தான் என்று தான் எமக்குத் தோன்றியதே தவிர, எங்கள் கதையில் உலகிற்குக் தெரிந்த வலியினைக் கூட எங்களிற்கு நாங்கள் அனுமதிக்கவில்லை. என்ன தான் பொய்ககதைகளை இட்டுக் கட்டி யாரோ எமக்கு எழுதிக் கொடுத்திருப்பினும், எமது உண்மையான வலிகளைக் கிரமமாக எழுதும் ஆற்றல் எங்கள் எல்லோரிற்கும் இயலுமானதில்லை என்றபோதும், உலகிற்கு எங்களின் அகதி நிலைக் கோரிக்கையில் தெரிந்த நியாயம் தான் எங்களின் இன்றைய புலம்பெயர் எண்ணிக்கை. எங்களிற்கு அகதி அந்தஸ்தஸத்துத் தந்த வெள்ளையன் எல்லாம் முட்டாள்கள் இல்லை. எங்கள் பிரச்சினை எங்கள் வலிகைள எங்களிற்குள்ளேயே நாங்கள் அனுமதிப்பதில்லை.ஈழத்தவன் அப்படித்தான். எமது அபரிமித உயர்விற்கும் இது தான் காரணம். இன்னுமொரு புறத்தில், தப்பித்தவறி மாணவ வீசாவில், அல்லது அகதியற்ற இதர மார்க்கங்களில் புலம்பெயர்ந்த எம்மவர்கள் அகதி சார்ந்து பேசும் காழ்ப்புணர்ச்சிகள் ஒரு புத்தகம் எழுதுவதற்குப் போதுமான அறியாமைகளையும் பிறழ்வுகளையும் கொண்டிருப்பன. இதையெல்லாம் புரிவதற்கு ஈழத்தவனின் மனநிலை புரியவேண்டும். அதை உலகு இன்னமும் சரியாகப் புரியவில்லை—காரணம் புரியவைப்பதற்கு நாங்கள் அலட்டிக்கொள்வதில்லை. எங்களிற்கு அது முக்கியமில்லை. எங்களின் மற்றையவர்களுடனான அனைத்துப் பரிமாற்றங்களும் ஏதோ ஒரு விம்பம் சார்ந்து மட்டும் நிகழ்ந்து அத்தோடு நின்று கொள்கிறது. எங்களை எங்களிற்கு மட்டும் தான் தெரியும். அதனால் தான் எங்களைச்சார்ந்து ஒரு குழப்பம் உலகெங்கும் இருக்கிறது. தமிழ்நாட்டுத் தமிழரிற்கும் எங்களிற்கும் இதில் ஏகப்பட்ட வித்தியாசம். அதனால் தான் தமிழ் நாட்டுத் தமிழரால் கூட எங்களைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.

மேலே சொன்ன எதிலும் எனக்குக் கிஞ்சித்தும் பிரச்சினையோ ஆதங்கமோ இல்லை. உண்மையில் பெருமை தான் மிஞ்சுகிறது. 'என்ர கதை உனக்குத் தேவையில்லை ஓட்டத்தைக் கவனி' என்று எமது சமூகம் வளர்ந்து கொண்டிருப்பது மகிழ்வு தான்.

ஒரே ஒரு ஆதங்கம் மட்டுமே... எனக்குத் தெரிந்த பல இரண்டாம் சந்ததி தமது பெற்றோரைப் புரியாதவர்களாக இருக்கிறார்கள். செல்வமும் கல்வி ஆழுமையும் எவ்வளவிற்கெவ்வளவு ஒரு குடும்பத்தில் இருக்கிறதோ அவ்வளவிற்கு அவ்வளவு அக்குடும்பங்களில் பிள்ளைகள் பெற்றோரையும் அவர்தம் கதைகளையும் அறிந்தவர்களாகப் புரிந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால், எங்கெல்லாம் பணம் குறைவாகவும் பெற்றோர் உடல்சார்ந்த பணிகளில் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் ஈழத்தவன் பிள்ளைகளிற்கும் தன் கதையினைப் பற்றிப் பேசாதே வளர்க்கிறான். இதனால் இரண்டாம் முறை ஈழத்தவன் மத்தியிலும் ஈழத்தவன் கதைசார்ந்து ஒருமுகமான பார்வை இல்லை. எனவே எமது கதை சார்ந்து வெள்ளையனிற்கு என்றைக்கும் ஒரு தெளிவு வரப்போவதில்லை—மானிட பொது விழுமியங்களிற்குள்ளாலும் உலக அரசியல் வரைமுறைகளிற்கூடாகவும் பொதுப்பட எம்மை அவர்கள் புரிந்து கொள்ள முடியுமே தவிர எமது essense என்றைக்கும் அவர்களிற்குப் புரியப்போவதில்லை. அதில் பிரச்சினை இல்லை. ஆனால் எமது அடுத்த சந்தததிக்கு எம்மைப் புரியமுடியாதிருப்பது வருத்தத்திற்குரியதே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.