Jump to content

பொருத்து வீடுகள் தொடர்பில் எனக்கு திருப்தியில்லை


Recommended Posts

பொருத்து வீடுகள் தொடர்பில் எனக்கு திருப்தியில்லை
 

article_1463134461-aaaaaaaaa.jpg-சொர்ணகுமார் சொரூபன்

அரசாங்கத்தின் 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் அமைக்கப்படும் பொருத்து வீடுகள் தொடர்பில் எனக்கு திருப்தியில்லை. நீண்டகாலத்துக்கு பாவிக்கும் வகையில் அது இல்லை என மின்சக்தி பிரதி அமைச்சர் அஜீத் பீ.பெரேரா தெரிவித்தார்.

இலங்கை  மின்சார சபையின் வட பிராந்திய காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற அனைவருக்கும் மின்சாரம் நிகழ்ச்சித் திட்டதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

“65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வீட்டுத்திட்டத்தில் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட பொருத்து வீடுகளை நேரில் சென்று இன்று பார்வையிட்டேன். எனக்கு அந்த வீடுகளில் திருப்தியில்லை. வீடுகள் நீண்டகாலத்துக்கு பாவிக்க வேண்டும். அது அவ்வாறு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் ஈஸ்வரன் சரவணபவன் ஆகியோர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்த வீட்டுத்திட்டம் சரியில்லையென்பதை தெளிவுபடுத்தி மாற்றுத்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். பொருத்தமானவற்றை தெரிவு செய்து, அதன் மூலம் பயனாளிகள் பயனடைய வேண்டும்.

மக்களுக்கு வீடுகள் எவ்வளவு முக்கியம் என்று எனக்குத் தெரியும். வீடுகள் இல்லாதவனுக்குத் தான் வீட்டின் அருமை தெரியும். இந்த 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை மாற்றுவழிகளில் பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களுக்கான மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்” என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/172187#sthash.OTPHRnF8.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதை சுவாமிநாதனுக்கு சொல்லுங்கள். சும்மா மாடு சொன்னால்க் கேக்காயினம். மணி கட்டின மாடு சொன்னால் ஒருவேளை கேப்பினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்கு மணிகட்டின மாடில்லை நல்ல கறவைமாடா பாத்து அனுப்பணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்தமில்லாமல் தமிழனின் கலை கலாச்சாரங்களை அழிப்பதற்கு சிங்கள அரசின் மிகச்சிறந்த தெரிவு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.