Jump to content

இங்கிலாந்து எதிர் இலங்கை கிரிக்கெட் தொடர் செய்திகள்


Recommended Posts

'உபாய ரீதியாக மஹேல உதவலாம்'

 

InmahwilhelpMathews.jpg

Comments  

 

 

இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர், எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், அத்தொடரில், இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்தன, உபாய ரீதியாக இலங்கைக்கு உதவலாம் என, இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

 

ஓய்வுபெற்ற பின்னர், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராகச் செயற்பட்ட மஹேல ஜெயவர்தன, இறுதியாக, இந்தியாவில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 தொடரிலும் அவ்வாறு செயற்பட்டிருந்தார். இந்தத் தொடரில் அவர், இங்கிலாந்தின் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நேர்முக வர்ணனையாளப் பணியாற்றவுள்ளார். எனவே, இங்கிலாந்து அணியின் வீரர்கள் பற்றிய தகவல்களை, இலங்கைக்கு அவர் வழங்கலாம் என்ற எதிர்பார்ப்புக் காணப்படுகிறது.

 

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அஞ்சலோ மத்தியூஸ், 'சர்வதேசக் கிரிக்கெட்டில் இரகசியங்கள் இல்லை. எங்களிடம் ஏராளமான காணொளிக் காட்சிகள் உள்ளன. எங்களைப் பற்றிய காணொளிகளை அவர்கள் கொண்டுள்ளனர். எனவே, பெரிதான இரகசியங்கள் இல்லை" எனத் தெரிவித்தார்.

 

எனினும், மஹேலவின் பங்களிப்புக் குறித்து அவர், குறைவாக மதிப்பிட்டிருக்கவில்லை. 'அங்கு சில, உபாயக் கருத்துகளை மஹேல வழங்க முடியும்" என அவர் தெரிவித்தார். மஹேல தவிர, இலங்கையின் தற்போதைய பயிற்றுநரான கிரஹம் போர்ட், இங்கிலாந்தின் பிராந்திய அணியான சரே அணியின் பயிற்றுநராவார். அத்தோடு, கென்ற் அணியின் கிரிக்கெட் பணிப்பாளராகவும் இதற்கு முன்னர் பணியாற்றியவராவார்.

 

 

மறுபுறத்தில், இங்கிலாந்து அணியின் பயிற்றுநரான ட்ரெவர் பெய்லிஸ், உதவிப் பயிற்றுநரான போல் பப்ரேஸ் இருவரும், அதே பதவிகளில் இலங்கை அணிக்காகப் பணியாற்றியவர்களாவர். எனவே, எதிரணிகளைப் பற்றிய ஓரளவு அறிமுகம், இரு அணிகளுக்கும் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

http://tamil.wisdensrilanka.lk/article/3432

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
'இலங்கையின் துடுப்பாட்டம் தான் பிரச்சினை'
 
 

article_1462785489-TamilourbowlistroSanaஇலங்கை அணியின் பந்துவீச்சு, உலகில் மிகச்சிறந்த பந்துவீச்சு அணிகளுள் ஒன்று எனத் தெரிவித்துள்ள இலங்கை அணியின் பிரதம தேர்வாளர் சனத் ஜெயசூரிய, இலங்கை அணியின் துடுப்பாட்டத்தையே, பிரச்சினைக்குரிய பகுதியாக இனங்கண்டுள்ளார். மே முதலாம் திகதி முதல் தனது பதவியை ஏற்றுள்ள சனத் ஜெயசூரிய, ஆரம்பிக்கவுள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

'நாங்கள் சிறப்பாகவுள்ள ஒரு பிரிவென்றால், அது பந்துவீச்சுத் தான். உலகில் சிறந்த பந்துவீச்சு அணியை நாம் கொண்டுள்ளாம். அனுபவம் மிகுந்ததும் மிகச்சிறந்ததுமாகவும் உள்ளதான வேகப்பந்து வீச்சாளர்கள் ஐவரையும் சுழற்பந்து வீச்சாளர்களையும் நாம் கொண்டிருக்கிறோம்" என்றார்.

'நாங்கள் பின்தங்கியிருக்கிற ஒரு விடயமென்னவெனில், அது எங்கள் துடுப்பாட்டம். அங்கு தான் நீங்கள் கொஞ்ச காலம் கொடுக்க வேண்டும். துடுப்பாட்ட வீரர்களை இரவோடிரவாகக் கண்டுபிடிக்க முடியாது. அவர்களுடன் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். அதன் காரணமாகத் தான் திரிமான்னவுக்கு  வாய்ப்பு வழங்கியுள்ளோம். அவரால் பெறுபேறுகளை வெளிப்படுத்த முடியுமென்பது எமக்குத் தெரியும்" என்றார்.

இலங்கை அணிக்கு வீரர்களைத் தெரிவுசெய்யும்போது, தேர்வில் தொடர்ச்சியொன்று இருக்க வேண்டுமெனத் தெரிவித்த சனத் ஜெயசூரிய, இலங்கையின் கிரிக்கெட்டின் எதிர்காலமெனக் கருதும் வீரர்களையே, இங்கிலாந்துத் தொடருக்காகத் தெரிவுசெய்துள்ளதாகத் தெரிவித்தார்.

அத்தோடு, தெரிவுசெய்யப்பட்டுள்ள குழாமை, மிகவும் திறமையான குழாமென வர்ணித்த சனத் ஜெயசூரிய, இலங்கை 'ஏ" அணி, அபிவிருத்திக் குழாம்கள் ஆகியவற்றில், அவர்கள் நீண்டகாலமாக விளையாடியவர்கள் எனவும் தெரிவித்ததோடு, அவர்களின் திறமையை மெருகேற்ற வேண்டுமெனத் தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/171780#sthash.GBeXoLZh.dpuf
Link to comment
Share on other sites

காயமடைந்தார் தம்மிக்க பிரசாத்
 
 

article_1462880575-TamiliniedodPrasad.jpஇலங்கை டெஸ்ட் அணியின் முக்கிய பந்துவீச்சாளரான தம்மிக்க பிரசாத், இங்கிலாந்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த பயிற்சிப் போட்டியின் போது காயமடைந்துள்ளார். இது, இலங்கை அணிக்குப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 8ஆம் திகதி ஆரம்பித்து இன்றுடன் முடிவடைந்த, எசெக்ஸ் அணிக்கெதிரான பயிற்சிப் போட்டியின் இரண்டாவது நாளிலேயே, அவர் இவ்வாறு காயமடைந்தார்.

இப்போட்டியில் 17.3 ஓவர்கள் மாத்திரமே பந்துவீசிய தம்மிக்க பிரசாத், அந்த ஓவரின் நடுவே வெளியேறினார். அவரது தோட்பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணமாகவே அவர் இவ்வாறு வெளியேறினார். அவரது ஓவரை, திமுத் கருணாரத்னவே பூர்த்தி செய்தார்.

ஏற்கெனவே, கடந்தாண்டு இறுதியில், நியூசிலாந்துக்கெதிரான தொடரின்போது ஏற்பட்ட முதுகு உபாதை காரணமாகப் பல போட்டிகளைத் தவறவிட்டிருந்த தம்மிக்க பிரசாத், அதன் பின்னர் இத்தொடரிலேயே சேர்க்கப்பட்டிருந்தார்.

பிரசாத்தின் உபாதை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கௌஷால் சில்வா, அவருக்கு ஏற்பட்டிருப்பது தோட்பட்டை வலியே எனத் தெரிவித்தார். எனினும், அவரது தோட்பட்டையில் ஸ்கான் சோதனை செய்யப்படுமென்பதையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

'அவர் எங்களுக்கு முக்கியமான பந்துவீச்சாளர். கடந்த இரண்டு ஆண்டுகளாக, எங்கள் அணியின் தலைமைப் பந்துவீச்சாளராக உள்ளார். இங்கிலாந்துக்கெதிரான கடந்த தொடரின்போது, போட்டியை மாற்றியவரும் அவரே. ஆகவே, எங்களது பந்துவீச்சு வரிசையில், அவர் முக்கியமான நபர்" எனக் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர், 2014ஆம் ஆண்டில் இலங்கை அணி இங்கிலாந்துக்குச் சென்றிருந்த போது, முதலாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிய, இரண்டாவது போட்டியின் இரண்டாவது இனிங்ஸில், 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பிரசாத், இலங்கை அணி வெற்றிபெற வழிவகுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/171889#sthash.PQcRdsMx.dpuf
Link to comment
Share on other sites

உடற்கூற்று மருத்துவர் கண்காணிப்பில் தம்மிக்க பிரசாத்
2016-05-12 10:29:02

(நெவில் அன்­தனி)

 

1659529.jpgதோற்­பட்­டையில் உபா­தைக்­குள்­ளான வேகப்­பந்­து ­வீச்சாளர் தம்­மிக்க பிர­சாத்தை  உடற்­கூற்று மருத்­துவர் கண்­கா­ணித்து வரு­வ­தாக இலங்கை கிரிக்கெட் அணியின் தொடர்­பாடல் முகா­மை­யாளர் சந்த்­ரிஷான் பெரேரா தெரி­வித்தார்.

 

தம்­மிக்க பிர­சாத்தின் நிலைமை குறித்து சந்த்­ரிஷான் பெரே­ரா­வுடன் மெட்ரோ ஸ்போர்ட்ஸ் தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்டு கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

 

இசெக்ஸ் அணிக்கு எதி­ராக வெற்­றி­ தோல்­வி­யின்றி முடி­வ­டைந்த போட்­டியின் இரண்டாம் நாள் ஆட்­டத்­தின்­போது தனது 18ஆவது ஓவரை பூர்த்தி செய்ய முடி­யா­த­வ­ராக இலங்கை வேகப்­பந்­து­வீச்­சாளர் தம்­மிக்க பிரசாத் உபா­தை­யுடன் வெளி­யே­றினார்.

 

தம்­மிக்க பிரசாத் ஸ்கேன் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அதன் அறிக்­கையை எதிர்­பார்த்­தி­ருப்­ப­தா­கவும் சந்த்­ரிஷான் பெரேரா தெரி­வித்தார்.

 

லெஸ்­டர்­ஷயர் அணி­யு­டனும் முத­லா­வது டெஸ்ட் போட்­டி­யிலும் தம்மிக்க பிரசாத் விளை­யா­டு­வாரா என அவ­ரிடம் வின­வி­ய­போது, ‘‘தம்­மிக்க பிர­சாத்தை அணியின் உடற்­கூற்று மருத்­துவர் கண்­கா­ணித்து வரு­வ­துடன் தேவை­யான சிகிச்­சை­க­ளையும் வழங்கி வரு­கின்றார்.

 

 

1659528.jpg

 

 

அவர் தேறுவார் என நம்­பு­கின்றோம். பயிற்சிப் போட்­டியில் விளை­யா­டு­வது சற்று சந்­தே­க­மாக இருக்­கின்­ற­போ­திலும் முதலாவது டெஸ்ட் போட்டி நெருங்கும்போது அவர் பூரண ஆரோக்கியம் அடைந்துவிடுவார் என நம்புகின்றோம்’’ என்றார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=16595#sthash.7OdovekG.dpuf
Link to comment
Share on other sites

இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டுக்கான இங்கிலாந்துக் குழாம் அறிவிப்பு
 
12-05-2016 06:12 PM
Comments - 0       Views - 16

article_1463057030-tAMIVINCINSquad.jpgஇங்கிலாந்து அணிக்கெதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்தில் இலங்கை விளையாடவுள்ள நிலையில், இத்தொடரின் முதலாவது டெஸ்டுக்கான இங்கிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், இவ்வருட பருவகாலத்தின் ஆரம்பத்தில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய வேகப்பந்துவீச்சாளர் ஜேக் போல் முதற்தடவையாக இங்கிலாந்துக் குழாமில் இடம்பிடித்ததோடு, இதுவரையில் இங்கிலாந்து சார்பாக இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே விளையாடிய துடுப்பாட்டா வீரர் ஜேம்ஸ் வின்ஸ், முதற்தடவையாக டெஸ்ட் குழாமில் இடம்பிடித்துள்ளார். இவர், இருதய நோய் காரணமாக ஓய்வு பெற்ற ஜேம்ஸ் டெய்லரின் ஐந்தாம் இடத்தில் துடுப்பெடுத்தாடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற இங்கிலாந்தின் இறுதி டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயற்பட்டிருக்காத ஆரம்பத் துடுப்பாட்டவீரர் அலெக்ஸ் ஹேல்ஸுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, அத்தோடரின் பிற்பகுதியில் மோசமாக செயற்பட்டிருந்த மூன்றாமிலக்க துடுப்பாட்டவேறார் நிக் கொம்ப்டனுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அறிவிக்கப்பட்ட குழாமில், அண்மையில் அணியிலிருந்து நீக்கப்பட்ட இங்கிலாந்தின் சிரேஷ்ட வீரர் இயன் பெல்லுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லையென்பதோடு தென்னாபிரிக்கவுக்கெதிரான குழாமில் இடம்பெற்றிருந்த துடுப்பாட்டவீரர் கரி பலன்ஸூக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டவில்லையென்பதோடு, இங்கிலாந்தின் இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்த வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸுக்கும் குழாமில் இடம்கிடைக்கவில்லை. தவிர, காயம் காரணமாக மார்க் வூட், மார்க் பூட்டிட் ஆகியோரும் குழாமில் இடம்பிடிக்கவில்லை.

குழாம் – அலிஸ்டியர் குக் (தலைவர்), மொயின் அலி, ஜேம்ஸ் அன்டர்சன், ஜொனி பெயார்ஸ்டோ, ஜேக் போல்ம ஸ்டூவர்ட் புரோட், நிக் கொம்ப்டன், ஸ்டீவன் பின், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ்

- See more at: http://www.tamilmirror.lk/172089#sthash.OTVq5AP8.dpuf
Link to comment
Share on other sites

லெஸ்டர்ஷயர் அணியுடனான போட்டியில் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிப்பு
2016-05-17 09:59:06

இலங்கையர்கள் அணிக்கும் லெஸ்டர்ஷயர் அணிக்கும் இடையில் கிறேஸ் றோட் விளையாட்டரங்கில் நடைபெற்ற மூன்று நாள் முதல்தர கிரிக்கெட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

 

16675_Untitled-3.jpg

 

இலங்கையின் முதல் இன்னிங்ஸில் தசுன் ஷானக்க, குசல் மெண்டிஸ், ரங்கன ஹேரத் ஆகியோரும் இரண்டாவது இன்னிங்ஸில் திமுத் கருணாரட்ன, கௌஷால் சில்வா, லஹிரு திரிமான்ன ஆகியோரும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர்.

 

குறிப்பாக, தசுன் ஷானக்கவும் ரங்கன ஹேரத்தும் முதல் இன்னிங்ஸில் 9ஆவது விக்கெட்டில் 174 ஓட்டங்களைப் பகிர்ந்தமை விசேட அம்சமாகும்.

 

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அண்மிக்கும் நிலையில் இலங்கையின் துடுப்பாட்டம் திருப்தி தருவதாக அமைந்துள்ளது.

 

எண்ணிக்கை சுருக்கம்: 

இலங்கை 1வது இன்: 367 (தசுன் ஷானக்க 106, குசல் மெண்டிஸ் 65, ரங்கன ஹேரத் 55, கௌஷால் சில்வா 38, தினேஷ் சந்திமால் 30)

 

லெஸ்டர்ஷயர் 1வது இன்: 375 க்கு 5 விக்.  (மைக்கல் பேர்கஸ் 98, டொம் வெல்ஸ் 87, ரங்கன ஹேரத் 39 க்கு 2 விக்., மிலிந்த சிறிவர்தன 57 க்கு 2 விக்.)

 

இலங்கை 2வது இன்: 200 க்கு 4 விக். டிக். (திமுத் கருணாரட்ன 100 ஆ.இ., கௌஷால் சில்வா 44, லஹிரு திரிமான்ன 40 ஆ.இ.)

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=16675#sthash.OVRe8yZb.dpuf
Link to comment
Share on other sites

முதலாவது டெஸ்ட் போட்டியில் பிரசாத் இல்லை
2016-05-17 09:59:35

16677_Dhammika+Prasad.jpgஇங்­கி­லாந்­துக்கு எதி­ராக நாளை­ ம­று­தினம் ஆரம்­ப­மா­க­வுள்ள முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் வேகப்­பந்­து­ வீச்­சாளர் தம்­மிக்க பிரசாத் விளை­யா­ட­மாட்டார் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

இசெக்ஸ் பிராந்­திய அணிக்கு எதி­ராக நடை­பெற்ற முதல்­தர கிரிக்கெட் போட்­டி­யின்­போது தோள்­பட்­டையில் உபா­தைக்­குள்­ளான ப்ரசாத் இன்னும் பூரண ஆரோக்­கியம் பெற­வில்லை என அறி­விக்­கப்­ப­டு­கின்­றது.

 

ஆரம்­பத்தில் சுமா­ரான உபாதை எனக் கூறப்­பட்­ட­போ­திலும் நினைத்­த­தை­விட மோச­மான உபாதை என அணி பயிற்­றுநர் க்றஹம் ஃபோர்ட் தெரி­வித்­துள்ளார். 

 

“முத­லா­வது டெஸ்ட் போட்­டியில் அவர் விளை­யா­ட­மாட்டார். அவரை நாளாந்தம் கண்­கா­ணிக்க வேண்­டி­யுள்­ளது. விரைவில் அவரை பந்­து­வீச செய்­ய­மு­டியும் என நம்­பு­கின்றேன்.

 

இரண்­டா­வது, மூன்­றா­வது டெஸ்ட் போட்­டி­க­ளக்கு அவரைத் தயார் செய்­வ­தற்கு பல ஓவர்கள் அவர் வீசி பயிற்­சி­பெ­ற­வேண்டும்” என ஃபோர்ட் குறிப்­பிட்டார்.

 

எவ்­வா­றா­யினும் லெஸ்­டர்­ஷயர் அணிக்கு எதி­ரான முதல்­தரப் போட்­டியில் இலங்கை துடுப்­பாட்ட வீரர்­களின் ஆற்­றல்கள் குறித்து திருப்தி அடை­வ­தாக அவர் தெரி­வித்தார்.

 

தசுன் சானக்க, திமுத் கரு­ணா­ரட்ன ஆகியோர் சதம் குவித்­தமை, கௌஷால் சில்வா மற்றும் லஹிரு திரி­மான்ன ஆகியோர் இரண்­டா­வது இன்­னிங்ஸில் துடுப்­பெ­டுத்­தா­டிய விதம் என்­பன குறித்து அவர் திருப்தி வெளி­யிட்டார்.

 

சக­ல­துறை வீரர்கள் எத்­த­கைய எத்­த­கைய மாறு­பா­டான முடி­வு­களை ஏற்­ப­டுத்­துவர் என்­பதை நாம் அறிவோம். இங்­கி­லாந்து அணியில் பல சக­ல­துறை வீரர்கள் இடம்­பெ­று­கின்­றனர்.

 

ஷானக்க இலங்கை குழாமில் இடம்­பெறும் சக­ல­துறை வீரர். மன உறு­தி­யுடன் துடுப்­பெ­டுத்­தாட முடியும் என்­பதை அவர் உணர்த்­தி­யுள்ளார்.

 

எம்­முன்னே இருக்கும் தொடர்­களை மனத்தில் நிறுத்தி ஷானக்­கவை சிறந்த வீர­ராக வளர்ப்­பது மிகவும் அவ­சி­ய­மாகும்” என ஃபோர்ட் கூறினார்.

 

முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் யார் விக்ெ­கட் ­காப்­பா­ள­ராக விளை­யா­டுவார் என்­பது குறித்தும் தீர்­ம­னிக்­கப்­ப­ட­வி­ருக்­கின்­றது.

 

லஹிரு திரி­மான்ன விளை­யா­டினால் தினேஷ் சந்­திமால் 6ஆம் இலக்­கத்தில் துடுப்­பெ­டுத்­தா­டு­வ­துடன் விக்ெ­கட்­காப்­பா­ள­ரா­கவும் விளை­யா­டுவார்.

 

தினேஷ் நான்காம் இலக்­கத்தில் விளை­யாட நேர்ந்தால் நிரோஷன் ஆறாம் இலக்­கத்தில் துடுப்­பெ­டுத்­தா­டு­வ­துடன் விக்­கட்­காப்­பா­ள­ரா­கவும் செயற்படுவார்.

 

தசுன் ஷானக்க சகலதுறை வீரராக ஏழாம் இலக்கத்தில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

சனத் ஜயசூரிய தலைமையிலான தெரிவுக்குழுவினர் இது குறித்து இன்று அல்லது நாளை தீர்மானிப்பர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=16677#sthash.5mQ8jDyz.dpuf
Link to comment
Share on other sites

இங்கிலாந்து எதிர் இலங்கை: முதலாவது டெஸ்ட் நாளை ஆரம்பம்
 
 

article_1463592121-Tamilsl16LEAD.jpgஇங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, நாளை ஆரம்பிக்கவுள்ளது. லீட்ஸிலுள்ள ஹெடிங்லீ மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இரு அணிகளும் கடந்த முறை இங்கிலாந்தில் சந்தித்தபோது, 2 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி, 1-0 என்ற கணக்கில் வென்றிருந்தது. வெற்றி - தோல்வியின்றி முடிந்த முதலாவது போட்டியிலும், இலங்கை அணி சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தியிருந்தது.

ஆனால், இம்முறை இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, அனுபவத்தில் மாத்திரமன்று, தன்னம்பிக்கையிலும் குறைவான அணியாகக் காணப்படுகிறது. குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன ஆகியோரின்றி, இலங்கையின் துடுப்பாட்ட வரிசை, பலவீனமானதாகவும் அனுபவமற்றதாகவும் காணப்படுகிறது.

பந்துவீச்சில் ஓரளவு நம்பிக்கை காணப்பட்டிருந்தாலும் கூட, கடந்த முறை வெற்றியைப் பெற்றுக் கொடுத்தவர்களில் முக்கியமானவரான தம்மிக்க பிரசாத், முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்குபெற மாட்டார் என்ற செய்தி, இலங்கை அணிக்குப் பலமான அடியாகும்.

இளைய துடுப்பாட்ட வீரர்களான குசால் மென்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரோடு, அனுபவம்வாய்ந்த அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோர் துடுப்பாட்டத்திலும், பந்துவீச்சில் ரங்கன ஹேரத், இளைய வீரர் துஷ்மந்த சமீர ஆகியோர், இலங்கைக்கு நம்பிக்கை தருகின்றனர்.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை, அனுபவமிக்க அலஸ்டெயர் குக்கின் தலைமையில், தெளிவான வெற்றி வாய்ப்புகளுடன் களமிறங்குகிறது. டெஸ்ட் போட்டிகளில் குக், 10,000 ஓட்டங்களைக் கடப்பதற்கு இன்னமும் 36 ஓட்டங்களே தேவையாகவுள்ள நிலையில், தனிப்பட்ட ரீதியிலும், அவருக்கு முக்கியமான போட்டியாக இது அமைந்துள்ளது.

எதிர்பார்க்கப்படும் அணிகள் -

இலங்கை: திமுத் கருணாரத்ன, கௌஷால் சில்வா, குசால் மென்டிஸ், டினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ், மிலிந்த சிரிவர்தன, நிரோஷன் டிக்வெல்ல, ஷமின்ட எரங்க, துஷ்மந்த சமீர, ரங்கன ஹேரத், சுரங்க லக்மால்.

இங்கிலாந்து: அலெக்ஸ் ஹேல்ஸ், அலஸ்டெயர் குக், நிக் கொம்ப்டன், ஜோ றூட், ஜேம்ஸ் வின்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஜொனி பெயர்ஸ்டோ, மொயின் அலி, ஸ்டீவன் பின், ஸ்டுவேர்ட் ப்ரோட், ஜேம்ஸ் அன்டர்சன்.

- See more at: http://www.tamilmirror.lk/172556/%E0%AE%87%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%9F-%E0%AE%B8-%E0%AE%9F-%E0%AE%A8-%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%AE-#sthash.Oi7MwLah.dpuf
Link to comment
Share on other sites

முதல் டெஸ்ட்: 1 ரன்னுக்கு 3 விக்கெட்டுகள்- இலங்கையின் ஷனகா அசத்தல்; இங்கிலாந்து திணறல்

 

 
அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே இங்கிலாந்தை படுத்தி எடுக்கும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் ஷனகா. | கெட்டி இமேஜஸ்.
அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே இங்கிலாந்தை படுத்தி எடுக்கும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் ஷனகா. | கெட்டி இமேஜஸ்.

ஹெடிங்லேயில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் 3 விக்கெட்டுகளை 1 ரன்னை மட்டுமே கொடுத்து வீழ்த்தினார் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தசுன் ஷனகா. இதனால் இங்கிலாந்து 49/0 என்ற நிலையிலிருந்து 57/3 என்று சரிவு கண்டது.

தற்போது 5 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் எடுத்து இங்கிலாந்து திணறி வருகிறது. அலெக்ஸ் ஹேல்ஸ் 42 ரன்களுடன் கிரீசில் இருக்கிறார்.

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஆஞ்சேலோ மேத்யூஸ், வானிலை மேகமூட்டமாக இருந்ததால் முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தார். 49 ரன்கள் வரை குக் மற்றும் ஹேல்ஸ் ஆடினர். எரங்கா, பிரதீப், மேத்யூஸ், சமீரா ஆகியோர் வீசிய பிறகே 5-வது பவுலராக ஷனகாவை அழைத்தார்.

அவர் 16 ரன்களில் இருந்த குக்கிற்கு ஒரு அருமையான அவுட் ஸ்விங்கரை வீசி பெவிலியன் அனுப்பினா, இதனால் குக் 10,000 ரன்கள் மைல்கல்லை எட்ட முடியவில்லை.

அதே ஓவரில் காம்ப்டனையும் பூஜ்ஜியத்தில் வீழ்த்தினார் ஷனகா. டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 2-வது ஓவரையே வீசும் ஷனகா அறிமுக வீச்சாளராக ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதுவும் எட்ஜ், ஸ்லிப்பில் திரிமானே கேட்ச் பிடித்தார்.

பிறகு தனது அடுத்த ஓவரிலேயே இங்கிலாந்தின் அதிமுக்கிய வீரரான ஜோ ரூட்டையும் ரன்கள் எடுக்கும் முன்னரே வீழ்த்தினார் ஷனகா. இவரையும் ஆஃப் திசையில் டிரைவ் ஆட தூண்டிய பந்து, சற்று பலமாக அடிக்கச் சென்றார் ரூட், இதனால் எட்ஜ் ஆகி தேர்ட் ஸ்லிப்பில் மெண்டிஸிடம் கேட்ச் ஆனது.

8 பந்துகளில் 1 ரன் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தல் அறிமுக டெஸ்ட் போட்டி கண்டார் ஷனகா.

சிறிது நேரத்திற்கு முன் வின்சி என்ற வீரர் 9 ரன்கள் எடுத்த நிலையில் எரங்கா வீசிய மேலும் ஒரு ஃபுல் ஸ்விங் பந்துக்கு ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இங்கிலாந்து 70/4 என்று ஆனது.

தற்போது அபாய வீரர் பென் ஸ்டோக்ஸை 12 ரன்களில் வீழ்த்தினார் நுவான் பிரதீப். டிரைவ் ஆடும் போது கையில் மட்டை திரும்பியது இதனால் மிட் ஆனில் எளிதான கேட்ச் ஆனது .

அலெக்ஸ் ஹேல்ஸ் 43 ரன்களுடன் ஆட ஜானி பேர்ஸ்டோ களமிறங்கியுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-1-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/article8621383.ece

Link to comment
Share on other sites

இங்கிலாந்து 171/5 - இரண்டாம் நாள் இன்று!

இங்கிலாந்து 171/5 - இரண்டாம் நாள் இன்று!

May 20, 2016  09:19 am

Bookmark and Share
 
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. நாள் நிறைவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்க்கு 171 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இலங்கை அணி முதலில் களத்தடுப்பு தேர்வு செய்தது.

இங்கிலாந்தின் Headingley மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே பாரிய சரிவை சந்தித்தாலும், நேற்றைய முதல் நாள் ஆட்டம் மழையால் குருக்கிடப்பட்டு இடைநிறுத்தப் படுகையில் ஓரளவுக்கு வலுவான நிலையில் காணப்பட்டது.

AN Cook
16 ஓட்டங்கள்
AD Hales
71 ஓட்டங்கள் ஆட்டமிழக்காது
NRD Compton
0
JE Root
0
JM Vince
9
BA Stokes
12
JM Bairstow
54 ஓட்டங்கள் ஆட்டமிழக்காது


போட்டியின் 2 ஆம் நாள் ஆட்டம் இன்றாகும்.

http://tamil.adaderana.lk/news.php?nid=79958

Link to comment
Share on other sites

இலங்கையுடனான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் 298 ஓட்டங்களுடன் சுருண்டது இங்கிலாந்து
2016-05-20 19:28:58

இலங்கையுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதன் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 298 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

 

16760Sri-lanka--England-1st-Test---leeds


இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் நடைபறும் இப்போட்டியின் முதல் நாளான நேற்று இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்களைப்பெற்றிருந்தது.


இன்று மேலும் 123 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அவ்வணியின் சகல விக்கெட்களும் வீழ்ந்தன.


இங்கிலாந்து அணியின் சார்பில் ஜொனி பெயர்ஸ்டோவ் 140 ஓட்டங்களைக் குவித்தார்.


இலங்கை அணி பந்துவீச்சாளர்களில் தசுன் சானக்க  46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 64 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=16760#sthash.2b7bj74s.dpuf
Link to comment
Share on other sites

13239266_1170624432956796_11494522602902

இலங்கையுடனான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்துக்கு இன்னிங்ஸ் வெற்றி
2016-05-21 22:01:15

இலங்கையுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஓர் இன்னிங்ஸ் மற்றும் 88  ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

 

16763eng-vs-SL.jpg

 

லீட்ஸின் ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 298 ஓட்டங்களைப் பெற்றது.


இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 91 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.


அதனால் ஃபொலோ ஒன் நிலைக்குத் தள்ளப்பட்ட இலங்கை அணி நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.

16763_kusal-mendis.jpg

குசல் மெண்டிஸ்


 


இந்நிலையில் போட்டியின் 3 ஆவது நாளான இன்று இலங்கை அணி  119 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

 

இலங்கை அணியின் சார்பில் குசல் மெண்டிஸ்  54 ஓட்டங்களைக் குவித்தார். இப்போட்டியில் இலங்கையின் சார்பில் பெறப்பட்ட ஒரேயொரு அரைச்சதம் இதுவாகும்.

 

முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்திய ஜேம்ஸ் அண்டர்சன் 2 ஆவது இன்னிங்ஸிலும்  29 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார்.  ஸ்டீவன் ஃபின் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும்  மோயின் அலி  ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=16763#sthash.JAgXy1gB.dpuf
Link to comment
Share on other sites

அடுத்த போட்டியில் ஸ்டோக்ஸ் சந்தேகம்
 
22-05-2016 12:19 PM
Comments - 0       Views - 1

article_1463918090-Tami,stokmuzLEAD-Box.இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்தின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் பங்குபற்றுவது, சந்தேகத்துக்குரியதொன்றாக மாறியுள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளன்று, அவரது முழங்காலில் ஏற்பட்ட உபாதைக்காக சிகிச்சை பெற்ற அவர், பின்னர் மைதானத்திலிருந்து வெளியேறியிருந்தார். பின்னர், மூன்றாவது நாளில் சில ஓவர்கள் மட்டுமே களத்தடுப்பில்  ஈடுபட்டு விட்டு மைதானத்திலிருந்து வெளியேறியிருந்தார்.

இந்நிலையில், முதலாவது போட்டியில் பெறப்பட்ட வெற்றியின் பின்னர் கருத்துத் தெரிவித்த அலஸ்டெயர் குக், டேர்ஹாமில் இடம்பெறவுள்ள இரண்டாவது போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்புகள், ஸ்டோக்ஸூக்குக் குறைவாகவே காணப்படுவதை ஏற்றுக் கொண்டார். அவருக்கான ஸ்கான் பரிசோதனை மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்த அவர், அதன் பின்னர் இரண்டாவது போட்டிக்கான குழாமில் சேர்க்கப்பட்டாலும், இன்னுமொரு வீரர் மேலதிகமாகச் சேர்க்கப்படுவார் எனத் தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/172802#sthash.6FCjMZAm.dpuf
Link to comment
Share on other sites

மோசமான துடுப்பாட்டமே படுதோல்விக்கு காரணம் - ஏஞ்சலோ மெத்யூஸ்
2016-05-23 11:46:15

167862016-05-21T152616Z_1068459702.jpgஹெடிங்லே விளை­யாட்­ட­ரங்கில் பந்­து­களை வெறு­மனே செல்ல விடு­வ­தற்கு உரிய தீர்­மா­னங்­களை எடுக்கத் தவ­றி­யமை அணியின் மோச­மான இன்னிங்ஸ் தோல்­விக்குக் கார­ண­மா­னது என இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் தெரி­வித்தார்.

 

இங்­கி­லாந்து முதல் இன்­னிங்ஸில் பெற்ற சுமா­ரான மொத்த எண்­ணிக்­கை­யான 298 ஓட்­டங்­க­ளுக்கு பதி­ல­ளித்து துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை அதன் முதல் இன்­னிங்ஸில் 91 ஓட்­டங்­க­ளையும் தொடர்ந்து (ஃபலோ ஒன்) இரண்­டா­வது இன்­னிங்ஸில் 119 ஓட்­டங்­க­ளையும் பெற்று ஓர் இன்னிங்ஸ் மற்றும் 88 ஓட்­டங்­களால் தோல்வி அடைந்­தது.

 

‘‘இங்­கி­லாந்து பந்­து­வீச்­சா­ளர்கள் சரி­யான இலக்­கு­கனில் பந்து வீசி­னார்கள். நாங்­களோ துடுப்பை உரிய இடத்­திற்கு கொண்டு செல்­ல­வில்லை.

 

இதன் கார­ண­மாக எந்­நே­ரமும் பந்து எமது துடுப்­பு­களை உராய்ந்த­வாறு சென்­றது. எனவே நாங்கள் சரி­யான பந்­து­களைத் தேர்ந்­தெ­டுத்து விளை­யா­ட­வேண்டும்’’ என அவர் மேலும் கூறினார்.

 

இங்­கி­லாந்து முதலில் துடுப்­பெ­டுத்­தா­டி­ய­போது ஒரு கட்­டத்தில் 83 ஓட்­டங்­க­ளுக்கு 5 விக்கெட்­டுகளை இழந்­தி­ருந்­தது. அந்த சந்­தர்ப்­பத்தில் இலங்கை அணி சிறந்த நிலையில் இருந்­தது.

 

‘‘80 ஓட்­டங்­க­ளுக்கு நாங்கள் 5 விக்­கெட்­களை வீழ்த்­தி­யி­ருந்தோம். ஆனால் நாங்கள் எமது பிடியைத் தளர்த்­து­விட்டோம். இரண்டு பிடி­களைத் தவ­ற­விட்டோம். ஜொனி பெயாஸ்டோ மிகத் திற­மை­யாக துடுப்­பெ­டுத்­தா­டினார்.

 

அவ­ருக்கும் அலெக்ஸ் ஹேல்­ஸுக்­குமே பாராட்டு செல்ல வேண்டும். அவர்கள் இரு­வரும் கணி­ச­மான மொத்த எண்­ணிக்­கைக்கு வழி­வ­குத்­தனர்.

 

இந்நிலையில் எமது துடுப்­பாட்ட வீரர்கள் கணி­ச­மான ஓட்­டங்­களைப் பெற வழி­வ­கித்­தி­ருக்­க­வேண்டும். ஆனால், வெறும் 90 ஓட்­டங்­களை மொத்த எண்­ணிக்­கை­யாக பெற்­று­விட்டு இரண்டாம் மூன்றாம் நாட்­களை எதிர்­கொள்­வது கடி­ன­மா­னது’’ என்றார் மெத்யூஸ்.

 

‘‘கடந்த காலங்­களில் நாங்கள் மீண்­டெ­ழுந்து வந்­துள்ளோம். நாங்கள் மீண்டும் ஓர­ணியாக திரள்­வ­தற்கு இரண்டு தினங்கள் உள்­ளன. எமது தந்­தி­ரோ­பா­யங்கள் பற்றி சிந்­தித்து கடு­மை­யான பயிற்­சி­களில் ஈடு­பட்டு மீள் எழுச்சி பெற­வேண்டும்.

 

எமது உள்ளக் கிடக்­கையை மாற்­றிக்­கொள்­ள­வேண்டும். நம்­பினால் சாதிக்­க­மு­டியும்’’ என அவர் மேலும் தெரிவித்தார்.

 

இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட் விளையாட்டரங்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=16786#sthash.fzmpSmY9.dpuf
Link to comment
Share on other sites

உபாதையால் நாடுதிரும்புகிறார் சமீர
 
24-05-2016 10:57 AM
Comments - 0       Views - 0

article_1464067753-chamee.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர, உபாதை காரணமாக, இங்கிலாந்து தொடரிலிருந்து விலகி, நாடுதிரும்பவுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபை, இன்று(24) அறிவித்துள்ளது.

கீழ் முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக, நான்கு மாதங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைத் தெரிவாளர் சனத் ஜயசூரிய தலைமையிலான தேசிய தெரிவுக்குழு, அடுத்த 24 மணிநேரத்துக்குள் கூடி, பொருத்தமான வீரரைத் தெரிவுசெய்யவுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட்சபை தெரிவித்துள்ளது.

தோள்ப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக, அணியின் மிதவேகப் பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத், கடந்த வாரம் நாடுதிரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/172944/%E0%AE%89%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%B0#sthash.eeKzfbDm.dpuf
Link to comment
Share on other sites

சமீரவுக்குப் பதில் புதுமுக வீரர்
 
25-05-2016 06:15 PM
Comments - 0       Views - 5

article_1464176798-Bandara%201.jpgஇங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதலாவது போட்டியின் பின்னர் காயமடைந்து இலங்கைக்குத் திரும்பியுள்ள இளம் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவுக்குப் பதில், பெரியளவில் அறியப்பட்டிருக்காத வீரரான சமிந்த பண்டார சேர்க்கப்பட்டுள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான சமிந்த பண்டார, இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபை கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடுபவராவார். அவருக்கு 29 வயதாகும்.

காயமடைந்த சமீரவுக்குப் பதிலாக, இங்கிலாந்துத் தொடருக்கான உத்தேச 20 பேர் கொண்ட குழாமில் இடம்பெற்றிருந்த கசுன் ராஜித அல்லது விஷ்வா பெர்ணான்டோவே தெரிவுசெய்யப்படுவர் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், சனத் ஜெயசூரிய தலைமையில் ஒன்றுகூடிய தேர்வாளர்கள் குழு, சமிந்த பண்டாரவைத் தெரிவுசெய்துள்ளனர்.

இதுவரை 51 முதற்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள சமிந்த பண்டார, 29.85 என்ற சராசரியில் 141 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இனிங்ஸொன்றில் அவர் பெற்றுக்கொண்ட 68 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகள் என்ற பெறுமதி, அவர் இறுதியாக இவ்வாண்டு மார்ச் மாதத்தில் விளையாடிய போட்டியில் பெறப்பட்டதாகும். அவரது இறுதி 3 போட்டிகளில், 2 தடவைகள் 5 விக்கெட் பெறுதிகளைக் கைப்பற்றியுள்ள அவர், 24 விக்கெட்டுகளை மொத்தமாகக் கைப்பற்றியுள்ளார். அத்தோடு, இப்பருவகால முதற்தரப் போட்டிகளில், அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் 15 பந்துவீச்சாளர்களில் இடம்பிடித்த ஒரேயொரு வேகப்பந்து வீச்சாளர் இவராவார்.

தற்போது இங்கிலாந்தில் அவர் கழக மட்டப் போட்டிகளில் பங்குபற்றிவரும் நிலையில், அவரை அணியில் இணைப்பதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

- See more at: http://www.tamilmirror.lk/173086/%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%B0-#sthash.p2Wt2bPJ.dpuf
Link to comment
Share on other sites

'பந்துவீச்சாளர்களில் நம்பிக்கையுண்டு': 'எதிர்காலத்துக்காக விளையாடுகிறேன்'
 
26-05-2016 09:10 AM
Comments - 0       Views - 12

article_1464264473-TamilakmanaLEAD-Box.jதுஷ்மந்த சமீரவின் இழப்பின் பின்னர் தடுமாற்றத்துக்கு உள்ளாகியுள்ள இலங்கை அணியின் பந்துவீச்சு வரிசை, நாளை ஆரம்பிக்கவுள்ள இரண்டாவது போட்டியில் சிறப்பாக பந்துவீசுமென்ற நம்பிக்கை காணப்படுவதாக, இலங்கையின் வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநர் சம்பக்க ராமநாயக்க தெரிவித்துள்ளார். சமீரவுக்குப் பதிலாக, சுரங்க லக்மால் இணைத்துக் கொள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரின் திறமையில், ராமநாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.

'எங்களது அணியில், சமீர தான் அதிவேகப் பந்துவீச்சாளர். ஆகவே அவரது இழப்பு, எங்களுக்குப் பெரியது தான். ஆனால் இங்கு, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளங்கள் உதவுகின்றன. எனவே, ஏனையோரும் சிறப்பாகப் பந்துவீசுவர். ஏனைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசுவர். வலைப்பயிற்சியில், சுரங்க லக்மால் சிறப்பாகப் பந்துவீசி வருகிறார். அவர் அனுபவமான வீரர், எனவே, சமீரவின் இடத்தை அவரால் நிரப்ப முடியும்" எனத் தெரிவித்தார். அத்தோடு, முதலாவது போட்டியில், நுவான் பிரதீப், ஷமின்ட எரங்க ஆகியோரின் பந்துவீச்சிலும் திருப்தியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இங்கிலாந்து அணியின் மூன்றாமிலக்கத் துடுப்பாட்ட வீரரான நிக் கொம்ப்டன், தனது கிரிக்கெட் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் போட்டித் தொடரில் விளையாடுவதாக ஏற்றுக் கொண்டுள்ளார். இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 30.16 என்ற துடுப்பாட்டச் சராசரியையே கொண்டுள்ளதோடு, அவரது இறுதி 6 இனிங்ஸ்களில், 15, 26, 0, 19, 6, 0 என ஓட்டங்களைப் பெற்றுள்ளார். தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை, இரண்டு கரங்களாலும் ஏந்தவில்லை எனத் தெரிவித்த அவர், அவரது எதிர்காலத்துக்காக விளையாடுவதாக ஏற்றுக் கொண்டார்.

- See more at: http://www.tamilmirror.lk/173168#sthash.CB30QZfR.dpuf
Link to comment
Share on other sites

இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம் : இக்கட்டான நிலையில் இலங்கை 

 

இலங்கை - இங்­கி­லாந்து அணிகள் மோதும் இரண்­டா­வது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இங்­கி­லாந்­திற்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யாடி வரும் இலங்கை அணி மூன்று போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோது­கின்­றது.

Sri_Lankan.jpg

இதில் லீட்ஸில் நடை­பெற்ற முதல் போட்­டியில் இலங்கை அணி அதிர்ச்சி தோல்­வி­ய­டைந்­தது. இந்­நி­லையில் இரண்­டா­வது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்­ப­மா­கின்­றது.

 

2014ஆம் ஆண்டு இவ்­விரு அணி­களும் மோதிய டெஸ்ட் தொடரை இலங்கை வெற்­றி­கொண்டு அசத்­தி­யது. அந்த போட்­டி­க­ளின்­போது குமார் சங்­கக்­கார மற்றும் மஹேல ஜய­வர்­தன ஆகியோர் அணியில் இடம்­பெற்­றி­ருந்­தனர். இவர்கள் இரு­வரும் ஓய்­வு­பெற்ற பின்னர் இலங்கை அணி சற்று தடு­மா­றி­வ­ரு­கி­றது.

இந்­நி­லையில் இளம் வீரர்­க­ளுடன் கள­மி­றங்­கி­யுள்ள இலங்கை அணி 2014ஆம் ஆண்டு பெற்ற வெற்­றியை தக்­க­வைத்­துக்­கொள்ள வேண்­டிய இக்­கட்­டான நிலையில் இருக்­கி­றது.

எது எவ்வாறாயினும் வெற்றி வேட்கையோடு இன்றைய போட்டியில் களமிறங்குகிறது இலங்கை.

http://www.virakesari.lk/article/6870

Link to comment
Share on other sites

இங்கிலாந்து முதலில் துடுப்பாட்டம்

 

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறுகிறது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

http://tamil.adaderana.lk/news.php?nid=80165

Link to comment
Share on other sites

இலங்கை அணியின் அபாரமான களத்தடுப்பால் 10,000 ஓட்டங்களை தவறவிட்ட குக்

Published by Gnanaprabu on 2016-05-28 12:32:37

 

இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவின் போது இலங்கை அணியின் சிறந்த களத்தடுப்பு காரணமாக இங்கிலாந்து அணி 310 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இந்த போட்டியில் நாணயச் சுழற்ச்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது.

இந்தநிலையில் இங்கிலாந்து அணியின் சார்பாக டெஸ்ட் போட்டிகளில்  10,000 ஓட்டங்களை கடந்த முதலாவது இங்கிலாந்து  வீரர் என்ற சாதனையை தக்கவைத்துக்கொள்ள  இங்கிலாந்து அணித்தலைவர் அலிஸ்டர்  குக்கிற்கு 20 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 15 ஓட்டங்கள் மாத்திரமே பெற்று ரசிகர்களுக்கு பெரும்  ஏமாற்றத்தை அளித்துள்ளார்.

இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியிலேயே இந்த இலக்கை பெறுவார் என்று ரசிகர்கள் நினைத்த போதிலும் 2 ஆவது டெஸ்டிலும் முதல் இன்னிங்ஸில் இலக்கை தவறவிட்டு ஆட்டமிழந்தமை இங்கிலாந்து ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

243975.jpg

இதேவேளை இங்கிலாந்து அணியின் முதல் நாள் ஆட்டத்தின்போது அணியின் சார்பாக அதிகபட்சமாக அலெக்ஸ்ஹெல்ஸ் 83 ஓட்டங்களையும்,ஜோ ரூட் 80 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் நுவான் பிரதீப் 3 விக்கட்டுகளையும், சிறிவர்தன 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/6909

Link to comment
Share on other sites

ரங்கன ஹேரத் சாதனை

ரங்கன ஹேரத் சாதனை

டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் 300 விக்கட்டுக்களை கைப்பற்றிய மூன்றாவது இலங்கை பந்து வீச்சாளராக ரங்கன ஹேரத் இடம்பிடித்துள்ளார்.

இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் தனது 300வது விக்கட்டை கைப்பற்றியுள்ளார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=80190

Link to comment
Share on other sites

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 498 ஓட்டங்கள்

 

இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 9 விக்கட்டுக்களை இழந்துள்ள 498 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி சார்பாக முஈன் அலி 155 ஓட்டங்களையும் ஹெல்ஸ் 83 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் நுவன் பிரதீப் 4 விக்கட்டுக்களையும், சிறிவர்தன 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.

முன்னதாக நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் விக்கட்டுக்களை வீழ்த்திய இலங்கை பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் 300 விக்கட்டுக்களை கைப்பற்றிய மூன்றாவது நபராக இடம்பிடித்துள்ளார்.

v

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.