Jump to content

ஐயோ அம்மா! ஏன் என் பிள்ளைக்கு பித்து பிடிச்சிடுச்சு


Recommended Posts

நோர்வே தமிழ் சங்கத்தின் இந்த நாடகம் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளின் வருங்காலத்தையும் அதனால் பெற்றொர் படபோகும் வேதனையையும் மிகவும் அற்புதமாக எடுத்து காட்டுது. இதற்கு என்ன உங்களின் தீர்வு என்பதை இங்கு பதிவுசெய்தால் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும். 

Link to comment
Share on other sites

நல்லா இருக்கு, சுகிர்தா அக்கா கலக்கிறா

மேடைக்கு கீள குறுக்கால மறுக்கால ஒருத்தரும் போகேல, ஆனால் வீடியோவ அங்கையும் இங்கையும் ஆட்டுறது பெரிசா குறையவில்லை

நாடகம்; பெரிசா நடிக்கவிலலை ஆனா நல்லா கதைச்சிருக்கினம், ஊத்த சொற்களை தவிர்த்திருக்கலாம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடிப்பு அருமை.மன்மதன் அங்கிள் கூட்டணி போல் இவர்களும் நடிப்பில் பிரகாசிப்பார்கள். இவர்கள் நடிப்பில் செயற்கைத்தனம் இல்லாமல் இயல்பாக இருப்பது ரசிக்கக்கூடியதாக இருக்கு.அதுவே இவர்களின் வெற்றி.

Link to comment
Share on other sites

பத்தைக்குள்ள ஒரு சோடி பாம்பிருந்தாலும் பதினோரு பேரை கூட்டிக்கொண்டு போய் காட்டுற சனம் எங்கட சனம் - அந்தபாவம்தான் எனக்கு உங்களை கட்டி வைச்சிருக்கு. - பிடித்திருந்தது. 

மகள் நோர்வேஜிய மொழியிலே உரையாடி இருந்தாலும் அவை யதார்த்தத்தை பிரதிபலிப்பதாகவும் இருந்த்தது.  அதுவும் அந்த லங்கர் என்ற சொல்லை கேட்கும் போது மகளின் ஞாபகம் வருவதை தவிர்க்கி முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி,
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு வயிறு குலுங்க சிரிக்கவைத்த ஒரு நாடகம்.
அருமையான நகைச்சுவை கொண்ட வசனங்கள், யதார்த்தமான வெளிப்பாடு.

"வெள்ளைக்காரன் கொம்ப்பியூட்டரை கண்டு பிடிச்சான் 
எங்கடவங்கள் அதில சாதியை கொண்டு போய் சொருகீட்டாங்கள்" Punch !!tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச்..சா அந்தமாதிரி இயற்கையாய் இருக்குது.........நடிப்பு எண்டே சொல்லேலாது. அதுசரி இப்ப உங்கை எல்லா வீடுகளிலையும் நடக்கிற பிரச்சனைதானே. நடிக்கவே தேவையில்லை......tw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு லண்டன் வாழ் தமிழர்கள் மீது ஏனோ ஒரு காண்டு. அது இதிலும் பிரதிபலிக்கிறது. tw_blush:

Link to comment
Share on other sites

13 hours ago, குமாரசாமி said:

ச்..சா அந்தமாதிரி இயற்கையாய் இருக்குது.........நடிப்பு எண்டே சொல்லேலாது. அதுசரி இப்ப உங்கை எல்லா வீடுகளிலையும் நடக்கிற பிரச்சனைதானே. நடிக்கவே தேவையில்லை......tw_thumbsup:

நல்லா சொன்னீங்கள்.

எங்கட ஆட்கள் அதிகமா புலத்துக்கு வந்தது 90 க்கு பிறகு. அவர்களின் பிள்ளைகள் இப்பதான் கல்யாணம் கட்டும் வயதில் இருப்பார்கள். ஆகவே பெற்றோர்கள் இந்த பிரச்சனைய இப்பதான் எதிர் நோக்குவார்கள். நான் கதைச்ச ஒரு குடும்பம் இந்த பிரச்சனைய இப்ப எதிர்நோக்குது. அவர்களின் கருத்து பொடியன் ஒரு இந்திய அல்லது இலங்கை பேட்டைய கொண்டுவந்தால் சந்தோசமா கட்டிவைக்க தயார் என்றினம்.

2 hours ago, nedukkalapoovan said:

உந்த ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு லண்டன் வாழ் தமிழர்கள் மீது ஏனோ ஒரு காண்டு. அது இதிலும் பிரதிபலிக்கிறது. tw_blush:

ஐரோப்பிய வாழ் தமிழ் பிள்ளைகள் நல்லா தமிழ் கதைப்பினம். அப்படியே எங்கள் கலாசாரமும் தெரியும். உங்க லண்டனில் பிள்ளைகளுக்கு தமிழும் தெரியாது. எங்கள் கலாசாரமும் தெரியாது. நோர்வேய விட உங்க லண்டனில் தான் இந்த பிரச்சனை அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறான். நீர் என்ன நினைக்கிறீர்.

இறுதியில் தமிழும் போய் எங்கள் கலாசாரமும் போகுது. இதுக்குதான் அப்ப சந்திரிக்கா தமிழனை வெளிநாடு போக வைச்சவள். இங்க பிள்ளைகள் கொண்டு வரும் மேலைத்தேய கலாசாரத்தை விட சிங்களவன் கலாசாரம் எவ்வளவோ மேல்.

நாங்கள் தமிழர் பெரியவர் காலில் கூட விழுவதில்லை. ஆனால் சிங்களவன் சிம்பிளா பெரியவர் காலில் விழுவான். எனக்கு என் பெடியன் ஒரு சிங்களத்த கட்டினால் கூட பரவாயில்ல. உந்த சீன, வெள்ளை, அல்லது காப்பிலிய கொண்டுவந்தால் பிள்ளைய கை கழுவி விட வேண்டியது தான். பிள்ளை இல்லாமல் என்ன பிற்கால வாழ்க்கை. நரகம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஊர்த் தமிழிலில், நல்ல குரலுடன்... நடித்துள்ளார்கள். Smiley
"ஐயோ...இவருக்கு,  பிறக் கத்தியாலும்... தேங்காய் வெட்ட தெரியாது, உங்களையே வெட்டப் போறார்" Smiley
"சோடிப் பாம்பு , போட்ட சோகம் தான்.... உங்களிட்டை வந்து, மாட்டுப் பட்டது"
"ஏன் பாருங்கோ.... உங்கடை பிள்ளையை உங்கடை வீட்டோடை கேட்டிருந்தால்,  பிரச்சினை முடிஞ்சிருக்கும் எல்லே......"
"அவன்... வளந்திட்டான்...." 
"பிடரியை.... பொத்தி போட்டுடுவான்,  பயம், + இங்கை ஒரு இளிச்ச வாய் இருக்கு, இங்கை கொண்டு வாறீங்கள்"  Smiley

அருமையான வசனம், அருமையான நடிப்பு.  அந்த நாடக நடிகர்களுக்கு பாராட்டுக்கள். Smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, M.P said:

ஐரோப்பிய வாழ் தமிழ் பிள்ளைகள் நல்லா தமிழ் கதைப்பினம். அப்படியே எங்கள் கலாசாரமும் தெரியும். உங்க லண்டனில் பிள்ளைகளுக்கு தமிழும் தெரியாது. எங்கள் கலாசாரமும் தெரியாது. நோர்வேய விட உங்க லண்டனில் தான் இந்த பிரச்சனை அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறான். 

ஐரோப்பாவில் மற்றைய நாடுகளில் பிள்ளைகள் தமிழ் கதைக்க முக்கிய காரணம்.. அந்தந்த நாட்டு பாசைகள் தாய் தகப்பனுக்கு பெரிசா வராதது தான். வீட்டில் தமிழ் தான் கட்டாயம் கதைக்க வேண்டிய சூழல். மற்றும்படி.. அங்கின உள்ளவையும் ஆங்கிலத்தில் கதைக்கிறது என்றால்.. ஒரு கெத்தாத்தான் பார்க்கினம்.

இங்கிலாந்தில்...  ஏதோ தெரிஞ்ச ஆங்கிலத்தை வைச்சு சமாளிச்சிடுவினம். மேலும் இங்கிலாந்திலும் ஊரில் இருந்து கிராமங்களில் வாழ்ந்துவிட்டு இங்கு குடிவந்தோர்.. குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் தமிழ் நல்லாக் கதைப்பினம். நகர்ப்புற இடம்பெயரிகள் தான்.. ஆங்கிலத்தில் முழுதாக மூழ்கி இருக்கிறார்கள். அதில பாதி பந்தா.

மற்றும்படி.. காதல்....  திருமணம் என்பது எமது சமூகத்தில் ஒரு சமூக வியாபாரம். அது இப்ப.. ஆடம்பர வியாபாரமாகிக் கொண்டு வருகுது. அதில இப்படி நடப்பது எல்லா இடமும் தான். ஐரோப்பாவில் என்று மட்டுமில்லை. tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

11 minutes ago, nedukkalapoovan said:

மற்றும்படி.. காதல்....  திருமணம் என்பது எமது சமூகத்தில் ஒரு சமூக வியாபாரம். அது இப்ப.. ஆடம்பர வியாபாரமாகிக் கொண்டு வருகுது. அதில இப்படி நடப்பது எல்லா இடமும் தான். ஐரோப்பாவில் என்று மட்டுமில்லை. tw_blush::rolleyes:

சிறப்பாக சொன்னீர்கள். இந்த நாடகத்தில் புரோக்கர் சொல்லுறார் இப்ப பிள்ளை மட்டும் படிச்சால் போதாது. பெற்றோர் என்ன படிச்சது எண்டும் கேக்கினமாம். இது பாருங்கோ பெரும் வேடிக்கையாய் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, M.P said:

இந்த நாடகத்தில் புரோக்கர் சொல்லுறார் இப்ப பிள்ளை மட்டும் படிச்சால் போதாது. பெற்றோர் என்ன படிச்சது எண்டும் கேக்கினமாம். இது பாருங்கோ பெரும் வேடிக்கையாய் இருக்கு.

படிச்சு பாஸ் பண்ணாத ஆட்கள் பாடு திண்டாட்டம் தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

ஐரோப்பாவில் மற்றைய நாடுகளில் பிள்ளைகள் தமிழ் கதைக்க முக்கிய காரணம்.. அந்தந்த நாட்டு பாசைகள் தாய் தகப்பனுக்கு பெரிசா வராதது தான். வீட்டில் தமிழ் தான் கட்டாயம் கதைக்க வேண்டிய சூழல். மற்றும்படி.. அங்கின உள்ளவையும் ஆங்கிலத்தில் கதைக்கிறது என்றால்.. ஒரு கெத்தாத்தான் பார்க்கினம்.

என்ன நெடுக்கர்!  அவிட்டு விடுறதுக்கு இன்னும் இருக்கோ?  இல்லை இவ்வளவும் தானோ? எதோ எல்லார்ரை வீடு வாசல் எல்லாம் தெரிஞ்ச மாதிரி எழுதுறியள்!!!! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

என்ன நெடுக்கர்!  அவிட்டு விடுறதுக்கு இன்னும் இருக்கோ?  இல்லை இவ்வளவும் தானோ? எதோ எல்லார்ரை வீடு வாசல் எல்லாம் தெரிஞ்ச மாதிரி எழுதுறியள்!!!! :rolleyes:

இது.. நிறைய அவதானிச்சதில் வந்த பொது அறிவு... அண்ணே. tw_blush:

Link to comment
Share on other sites

நான் இதை ஆமோதிக்கிறன். 

ஊரில் ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட ஆங்கிலம் பேசும் தேசம் வந்தவுடன் தங்களின் கொச்சை ஆங்கிலத்தில் பிள்ளைகளுடன் கதைக்கிறவே.  பிறகு எப்படி பிள்ளைகள் தமிழ் கதைக்கும். எங்கள் பிள்ளைகள் வெள்ளைமாதிரி ஆங்கிலம் கதைத்தாலும் வெள்ளைக்காரன் எங்களை இந்தியன் என பொதுபடதான் சொல்லுவான். 

கடையில் தமிழ் ஆக்களின் சில ஆங்கிலம் எனக்கு UK வந்த ஆரம்பத்தில் விளங்கவில்லை. உதாரணம்:
யு கமிங், என?
யு டேக் பெட்ரோல், என?
இது சரியோ பிழையோ எனக்கு தெரியாது. ஏனெனில் எனக்கும் ஆங்கிலம் முழுவதுமாக தெரியாது. ஆனால் இந்த "என" என்பதை என்னுடன் ஆபீஸ்ல் வேலை பார்த்த ஒருவரும் பாவித்ததில்ல. யாரவது இதற்கு விளக்கம் தாங்கோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, M.P said:

யு கமிங், என?
யு டேக் பெட்ரோல், என?

இதெல்லாம் லண்டன் சிலாங்க் (slang). லண்டனுக்கு வெளி இடங்களில் வசிக்கும் வெள்ளைகள் இப்படிக் கதைப்பதில்லை. tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.