Jump to content

முருங்கைப்பூ முட்டை சாதம் : செய்முறைகளுடன்...!


Recommended Posts

முருங்கைப்பூ முட்டை சாதம் : செய்முறைகளுடன்...!

 

 

satham.jpg


தேவையான பொருட்கள்:

முருங்கைப்பூ – ஒரு கைபிடி கொழுந்து
முருங்கைக்கீரை – ஒரு கைப்பிடி
வெங்காயம் – 1
பூண்டு – 3
 முட்டை – 1
முழு சீரகம் – 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
வேகவைத்த சாதம் – பாதி கோப்பை
உப்பு, மிளகுத்தூள் – தேவைக்கு.

செய்முறை :

• வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சிறிது காய்ந்தவுடன் சீரகம் போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். மிதமான தீயில் நன்கு வதக்கவும். அத்துடன் சுத்தம் செய்து கழுவிய முருங்கைப்பூ, கொழுந்து முருங்கைக்கீரை சேர்த்து நன்கு வதக்கவும்.

• முட்டை ஒன்றை தேவைக்கு மிளகு, உப்பு சேர்த்து அடித்து கொள்ளவும்.

• கலந்த முட்டையை சேர்க்கவும். குறைவான தணலில் வேக விடவும். வெந்து வரும் பொழுது பிரட்டி விடவும்.

• வடித்த அரைக்கோப்பை சாதத்தை சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். உப்பு தேவைப்பட்டால் சிறித்து சேர்த்து பிரட்டிகொள்ளவும்.

• சுவையான சத்தான முருங்கைப்பூ முட்டை சாதம் ரெடி. அப்படியே சூடாக எடுத்து பரிமாறவும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.