Jump to content

மிரட்டும் சாது…! – (பதிவு, படங்கள் மற்றும் காணொளி – ஜெரா)


Recommended Posts

மிரட்டும் சாது...! - ஜெரா

முல்லைத்தீவு மாவட்டத்தின் தென் பக்க முடிவும், திருகோணமலை மாவட்டத்தின் வட திசை தொடக்கமும்தான் கொக்கிளாய். அதாவது இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கினதும், கிழக்கினதும் இதயம் கொக்கிளாய். இப்போது இதயத்தில் பிரச்சினை. தமிழர்களின் இதய நிலத்துக்கு அபாயம்.

1984 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதி அது. கடற்றொழில் நிமித்தம் நீர்கொழும்பு பக்கமிருந்து வந்து, கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் குடியேறியிருந்த 13 சிங்கள குடும்பங்களுக்கும் , கொக்கிளாயின் பூர்வ குடிகளான தமிழர்களுக்கும் இடையில் முறுகல்நிலை உண்டானது. சிங்களவர்கள் தமிழர்களின் வீடுகளை சூறையாடினர். தமிழர்கள் சிங்களவர்களின் வாடிகளைக் கொளுத்தினர். பொலிஸும், ஊர்காவல் படையும் களத்தில் குதித்தது. தமிழர்களை அடித்துத் துவம்சப்படுத்தியது. இயக்கம் தமிழர்களுக்கு துணையாகவே, இராணுவம் நேரடியாக இறங்கி மக்களை இரவோடிரவாக அடித்து விரட்டியது. பலர் வீட்டோடு சேர்த்து எரித்துக்கொல்லப்பட, எஞ்சியோர் கையில் அகப்பட்ட பொருட்களுடன் நாயாற்றுப் பாலத்தைக் கடந்தனர்.

இவ்வாறு 1983 ஆம் ஆண்டில் கொக்கிளாயை விட்டு வெளியேறியவர்கள், 2011 ஆம் ஆண்டில்தான் மீளக்குடியேறினார்கள். கிட்டத்தட்ட 28 வருடங்கள் கொக்கிளாய் மக்கள் ஊரை பிரிந்திருந்தனர். அவர்களிடையே சொந்த ஊரை மறந்த முழுமையான தலைமுறையொன்றும், அந்தத் தலைமுறைக்கு புதிய வாரிசுகளும் இந்த இடைப்பட்ட காலத்தில் உருவாகியிருந்தனர். ஊர் பெருங்காடாகியிருக்கும் என்றும், தாம் விட்டுப்போன வளங்கள் அப்படியே இருக்கும் என்ற நினைப்புடனும் தான் கொக்கிளாய் மக்கள் மீளக்குடியேறினார்கள்

ஆனால்..

1984 ஆம் ஆண்டில் 13 ஆக இருந்த சிங்கள குடும்பங்களின் எண்ணிக்கை 2011 இல் 300 ஐ தாண்டியிருந்தது. 1984 ஆம் ஆண்டில் மீன்பிடிப்பதற்கான வாடிகளாக மட்டுமே இருந்த சிங்களவர்களின் வாழிடங்கள், 2011 இல் மாடிவீடுகள்போல மாறியிருந்தன. அங்கு வாழும் சிங்களவர்களுக்கு மட்டுமேயான பாடசாலை, தேவாலயம், விளையாட்டு மைதானம் எனப் பொது இடங்கள் என்பனவும் உருவாக்கப்பட்டிருந்தன. இந்த விருத்தித் திட்டங்களுக்குள் தமிழர்களின் உறுதிக் காணிகளும் உள்ளடக்கம். இவ்வாறே கொக்கிளாயின் முகத்துவாரம் பகுதி முற்றுமுழுதாக சிங்களமயப்பட்டிருந்தது.

1984 ஆம் ஆண்டுக்கு முன்னர் கொக்கிளாய் மத்தியில்தான் அதிகளவு தமிழர்கள் தோட்டம் – துரவுகளுடன் குடியிருந்தார்கள். முகத்துவாரம் பகுதியை கடற்றொழிலுக்கான மையமாகவும், கொக்கிளாய் மத்திய பகுதி விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புக்காகவும் பயன்படுத்திவந்தனர். ஆனால் மீள்குடியேற்றத்துடன் முகத்துவாரம் பறிபோயிருந்தது. சரி, மத்தியாவது மிஞ்சியதே என்ற நம்பிக்கையுடன் கொக்கிளாய் மக்கள் ஊர் மீண்டனர். அவர்களில் ஒருவர்தான், திருஞானசம்பந்தன் மணிவண்ணதாசன். இடப்பெயர்வின் பேரவலங்களையும், பேரலைச்சலையும் தாண்டி, 2011 இல் பெரு நம்பிக்கையுடன் ஊர் திரும்பியிருந்தார்.

“சாமானுகள கொண்டு வந்து எங்கட காணிக்குள்ள இறக்கினவுடன வரிஞ்சி கட்டிக்கொண்டு பிக்கு ஒருத்தர் வந்திட்டார். இந்தக்காணி தங்கட எண்டும், இதுக்குள்ள யாரும் வரக்கூடாது எண்டும் சொல்லிட்டார். எங்கள விரட்டிப்போட்டு, எங்கட காணிய நீங்கதான் அடாத்தா பிடிச்சிருக்கிறியள் எண்டு சொல்லி நாங்கள் வாக்குவாதப்பட்டம். கொஞ்ச நேரத்தில ஆமிக்காரரும் வந்து குவிஞ்சிட்டாங்கள். எங்கள மிரட்டினாங்கள். சாதுவோடா பிரச்சினைக்கு போகக்கூடாது. இனி உந்தக் காணி உங்களுக்கு கிடைக்காது. வேற இடத்தில் காணியப் பாருங்க எண்டு சொல்லி மிரட்டினாங்கள்”

பிறகும் ஒரு நாள் சாதுவுக்கும் எங்களுக்கும் பிரச்சினை வந்தது. அன்றைக்கு இரவு ஆமிக்காரர் என்ர தம்பிய பிடிச்சிக்கொண்டு போயிட்டாங்கள். இரவு முழுதும் பதவியால கொண்டு போய் வச்சி, அடியடியெண்டு அடிச்சிப்போட்டு, இனிமேல் சாதுவிட்ட காணி கேட்கக்கூடாதெண்டு சொல்லி கொண்டு வந்து விட்டாங்கள். அன்றையில இருந்து ஆரம்பிச்ச பிரச்சின. உயிர்போனாலும் எங்கட காணிய நாங்க விடமாட்டம்..” என்கிறார் மணிவண்ணதாசன்.

…உண்மையில் இந்தக் காணி பிரச்சினை மணிவண்ணதாசனுக்கு மட்டும் இல்ல. ஒட்டுமொத்த முல்லைத்தீவு மக்களுக்கும், ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் இந்த விகாரையால பிரச்சின..“ என்று தன் பேச்சை ஆரம்பித்தார், கொக்கிளாய் கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையின் செயலாளர் தர்மரடணம்.

உங்களுக்கே தெரியும் இது வடக்கையும் கிழக்கையும் இணைக்கிற பகுதி. இங்க சிங்கள ஆக்களே இல்ல. இந்த இடத்தில ஏன் விகார. இந்தப் பகுதியெல்லாத்தையும் சிங்கள மயப்படுத்தத்தான். இங்க முகத்துவாரத்தில குடியேறியிருக்கிற சிங்கள ஆக்கள்கூட பௌத்தர்கள் இல்ல. அவங்கள் முழுக்க முழுக்க கிறிஸ்தவ ஆக்கள். அவங்களுக்கு தனிய சேர்ச் இருக்க. அதோட இங்க விகார கட்டுறது, வீண் பிரச்சினைகள கொண்டு வரும் எண்டு சொல்லிப்போட்டு, அவங்கள் கூட இதில நாட்டம் காட்டுறதில்ல. எல்லாத்துக்கும் காரணம் இந்த சாதுதான். அவரோட ஆமியும், சீ.ஐ.டியும் சேர்ந்து நிக்கிறாங்கள். சிலநேரங்களில அவர் ஆமியா, சாதுவா எண்டு கூட விளங்காமல் கிடக்கு. சின்னப் பிரச்சினை எண்டாலே சீ.ஐ.டிக்கு அறிவிச்சிப்போடுவார்.

மகிந்தன்ர ஆட்சிக்காலத்தில அவங்களும் இதில விகார கட்ட சரியா கஸ்ரப்பட்டாங்கள். நாங்களும் விடல்ல. தொடர்ச்சியா போராடிக்கொண்டேயிருந்தம். விகார கட்ட விடல்ல. ஒரு மண்டபமும், புத்தரின்ர சிலையும் தான் வச்சிருந்தாங்கள். நல்லாட்சி அரசாங்கம் வந்த பிறகு தான் இதுக்கு பொலிஸ் – ஆமி பாதுகாப்பெல்லாம் குடுத்து அத்திவாரம் போட்டாங்கள். இப்ப சாதுவே நேரடியா கட்டிக்கொண்டிருக்கிறார்.

இதுக்கு பக்கத்தில முதல் ஒரு பிள்ளையார் கோயில் இருந்தது. இப்ப அதை காணவேயில்ல. விகார கட்டுற இடத்துக்கு அடுத்த காணியிலதான், பல நூற்றாண்டு பழமையான கண்ணகியம்மன் கோயில் இருந்தது. அந்தக் கோயில ஆமிக்காரங்கள் தரைமட்டமாக்கி அழிச்சிட்டாங்கள். இப்ப, கண்ணகியம்மன் கோயிலின்ர ஈசான மூலையிலதான் இந்த விகாரைக்கான மலசல கூடத்த கட்டியிருக்கிறாங்கள். எங்கட பண்பாட்ட எப்பிடியெல்லாம் அவமானப்படுத்துறாங்கள் எண்டு பாருங்கோ…எனக் கூறிய தர்மரட்ணம் ஐயாவின் குரலில் தளதளப்பு இருந்தது. என்னபாடுபட்டாவது இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற துடிப்பு அவரின் உரையாடல் முழுவதிலும் இருந்தது.

தடுத்து நிறுத்துவதற்காக அப்படியேதும் முயற்சிகள் இடம்பெற்றதா? தமிழ் தேசிய அரசியல் பேசுவோர், அரசியலவாதிகள், அரச அதிகாரிகள் இதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் ஏதாவது எடுத்தார்களா?

பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவரிடம் இந்தக் கேள்விகளுக்குப் பதில் உண்டு.

கொக்கிளாய் விகார பிரச்சின பலருக்கும் தெரியும்.தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆக்களுக்கும் தெரியும். முதலமைச்சருக்கு கடிதம் மூலமா இந்தப் பிரச்சினைய தெரிவிச்சம். நேரடியாவும் சந்திச்சி கதைச்சிருக்கிறம். அதுக்குப் பிறகு முதலமைச்சர் முல்லைத்தீவில் இருக்கிற பொலிஸ் டி.ஐ.ஜீக்கு, தனியார் காணில் விகார அமைக்கிறது சட்டத்துக்கு முரணானது எண்டும், அதை தடுத்து நிறுத்துமாறும் சொல்லி கடிதம் எழுதினார். அந்தக் கடிதமும் சாதுவுக்கு குடுத்தது.

பிறகு எங்கட பழைய பிரதேச செயலாளரும், தானியார் காணியில விகார கட்டினால் பிரச்சினைகள் வரும், எனவே இதை நிப்பாட்டுங்கோ எண்டு சொல்லி சாதுவுக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதமும் சாதுவுக்கு குடுத்தது.

பிறகு காணி ஆணையாளர் முல்லைத்தீவுக்கு வந்து கூட்டம் வைக்கேக்க, கொக்கிளாயில் விகார கட்டுற சாதுவும் வந்திருந்தார். அதில, பிணக்குகள ஏற்படுத்தப் போற கொக்கிளாய் விகாரய கட்டவேண்டாம் எண்டும், உடனடியாவே அதை விட்டு வெளியேற வேண்டும் எனவும் சாதுவுக்கு காணி ஆணையாளர் சொன்னார். சாது கூட்டத்த விட்டு வெளியேறினாரே தவிர, அதுக்குப் பிறகு கொக்கிளாயில் வேகமா விகார கட்டத் தொடங்கினார். இப்ப ஆட்சி மாற்றத்தோட கட்டி முடிக்கிற அளவுக்கு விகார வேலைகள் நடந்துகொண்டிருக்கு..என்றார் அந்த அதிகாரி.

நல்லாட்சி மிக அமைதியான, சதிமிக்க அரசியலை தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லுகின்றது என்கின்றனர் புத்திஜீவிகள். அதற்கு இந்த “மிரட்டும் சாது“வையும் ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

கொக்கிளாய் பௌத்த விகாரை - திட்ட வரைபடம்

கொக்கிளாய் பௌத்த விகாரை – திட்ட வரைபடம்

 

கொக்கிளாய் பௌத்த விகாரை

கொக்கிளாய் பௌத்த விகாரை         kokilai-9

கொக்கிளாய் பௌத்த விகாரை          கொக்கிளாய் பௌத்த விகாரை

கொக்கிளாய் பௌத்த விகாரை              கொக்கிளாய் பௌத்த விகாரை

கொக்கிளாய் பௌத்த விகாரை

 

கொக்கிளாய் கண்ணகை அம்மன் அழிவுகள்

கொக்கிளாய் கண்ணகை அம்மன் அழிவுகள்              கொக்கிளாய் கண்ணகை அம்மன் அழிவுகள்

 

kokilai-9           கொக்கிளாய் கண்ணகை அம்மன் அழிவுகள்

 

 

http://tamilleader.com/

Link to comment
Share on other sites

நாம் விழுந்து கிடந்து அழுது அரட்டினாலும், எவ்வளவுதான் கத்திப் பார்த்தாலும் இனி ஒரு --ரையும் புடுங்க முடியாது. சிங்களத்துக்கு தெரிந்த ஒரே ஒரு மொழியில் கதைத்தவர்கள் இல்லாமல் போன பின் இனி எவராலும் இதை தடுத்திட முடியாது.

Link to comment
Share on other sites

பள்ளி வாசலும் அல்லாவும் வருவதை விட புத்தரும் விகாரையும் வருவது பரவாயில்லை.

இன்னமும் சொல்லப் போனால் இது எமக்கு பாதுகாப்புதான்.

முஸ்லிமிடம் இருந்து எம்மை காக்க இப்போது இருக்கும் ஒரே வழி இது தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

சிங்களத்துக்கு தெரிந்த ஒரே ஒரு மொழியில் கதைத்தவர்கள் இல்லாமல் போன பின் இனி எவராலும் இதை தடுத்திட முடியாது.

அப்படி சொல்லுங்க ஜீ .....சிலபேர் இதுக்கு ஜனநாயகம் ,இராசதந்திரம் என்று கூத்தமைப்பின் கூத்தாடிகளுக்கு வால்பிடிச்சினம். 2016 என்று கோரஸ் போட்டினம் ..இப்ப பியூஸ் போய் கிடக்கினம் ..சிங்களவனுக்கு போர் வெற்றி என்பது வேறு லெவல் ..எங்களுக்கு புலிகளின் அழிவு என்பது வேறு லெவல்
எல்லாவற்றுக்கும் புலிகளை வைத்து பேய்காட்டிவிட்டு போய்விடுவினம் ..தங்கடை திருகு தாளங்களை மூச்சு கூட விடமாட்டினம்..புலிகள் ஏனையவர்களுக்கு யாராகவும் இருக்கலாம் ஆனால் அவர்கள் ஈழத் தமிழர்களின் சுய மரியாதை ..புலிகளின் பின் தமிழர்களின் அரசியல் தலைவிதியை பொறுப்பெடுத்தவர்கள் செய்தது ..கெஞ்சிக்கூட கேட்கமுடியாதவாறு தமிழனின் பேரம்பேசலை அதல பாதாளத்தில் நிபந்தனையற்ற அது இது என்று சொல்லி சொல்லி தள்ளியது..ஆனாலும் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளில் தங்கடை அடிமட்ட வால்களை விட்டு  புலிகளை வைத்து அரசியல் விபச்சாரம் செய்வது..      
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.