Jump to content

TELO இயக்கப் போராளிகள் அழிக்கப்பட்டு 30ஆண்டுகளின் பின் : சபா நாவலன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

TELO இயக்கப் போராளிகள் அழிக்கப்பட்டு 30ஆண்டுகளின் பின் : சபா நாவலன்

04/30/2016 இனியொரு.

 

leadersofenlf

 

ஈழ விடுதலைப் போராட்டத்தில் தனி நபர்களைப் படுகொலை செய்வதனூடாக அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதென்பது 80 களில் பொதுவான கலாச்சாரமாக மாற்றமடைந்திருந்தது. ஒரு புறத்தில் அறிதலுக்கான தேடல்கள் நிறைந்த இளைஞர்கள் மத்தியதர வர்க்கங்களிலிருந்து உருவாகியிருந்தனர். மறுபுறத்தில் தனி மனிதத் தாக்குதல்கள், தனிமனிதப் படுகொலைகள் போன்றன சமூகத்தின் அங்கீகாரம் பெற்ற பொதுப் புத்தியாக மாற்ரமடைந்திருந்தது.

தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தின் ஒரே முழக்கம் அரசுக்கு எதிராக ஒன்றிணையுங்கள் என்பது மட்டும்தான். அதற்குமேல் அவர்களிடம் குறிப்பான சமூகப் பார்வையோ அதனை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டமோ இருந்திருக்கவில்லை.

இந்திய அரசின் தலையீடும் வழங்கப்பட்ட ஆயுதப் பயிற்சியும் விடுதலை இயக்கங்களை வெற்று இராணுவக் குழுக்களாக மாற்றியமைத்திருந்தன. இந்த இராணுவக் குழுக்கள் தமது குழு நிலை நலன்களைப் பேணிக் கொள்வதற்காக தமக்கிடையே மோதிக்கொண்டன. தாமே சிறந்தவர்கள் என அறிவிப்பதற்கு ஒவ்வொரு இயக்கங்களுக்கும் ஒவ்வொரு பிரச்சார நியாயம் இருந்தது. புலிகளோ தாமே முதலில் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் ஆக, தம்மோடு இணைந்துகொள்ளுங்கள் என ஆண்டபரம்பரை ஆணவத்தோடு கூறினர். ஏனைய இயக்கங்களும் இராணுவக் குழுக்கள் என்ற வகையில் இவ்வகையான நிலப்பிரபுத்துவக் குழுவாத போக்குகளில் மூழ்கியிருந்தனர்.

அன்று 1986 ஏப்பிரல் மாதத்தின் கடைசிப்பகுதி – 29 ம் திகதி காலை, எப்போதும் போல விடியவில்லை. ஆங்காங்கே துப்பாக்கிப் சத்தங்கள் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு எதோ ஒரு பயங்கரத்தை அறிவித்தது. வேப்ப மரங்களைக் கடந்து தெருமுனைக்கு வந்து விசாரணை செய்ததில் புலிகளுக்கும் டெலோவிற்கும் சண்டை நடக்கிறது என்றார்கள்.

ஒரு பல்கலைக்கழகம் மக்களின் போராட்டத்தைத் தலைமை தாங்க முடியாது. அந்தவகையில், தான் சார்ந்த சமூகத்தின் அவலங்களில் தீர்க்கமான பங்கு வகித்த பெருமை யாழ்ப்பாணப் பல்கலைகழகத்திற்கு உண்டு. அங்கே சென்றால் தகவல்கள் தெரியாலாம் என எனது சைக்கிளில் பல்கலைகழகத்திற்குச் செல்கிறேன். ஒவ்வொரு மூலையிலும் பலர் கூடியிருக்கிறார்கள். டெலோ இயக்கத்தைப் புலிகள் அழித்துக்கொண்டிருகிறார்கள் என்ற தகவல் பரவாலகப் பேசப்படுகிறது. இனந்தெரியாத சோகம் அனைவரது முகங்களிலும் படர்ந்திருக்கிறது. டெலோவின் பிரதான இராணுவத் தளங்கள் அமைந்திருந்த யாழ்ப்பாணத்தின் புறநகர், கள்வியன்காட்டு கட்டப்பிராய் ஆகிய அருகருகேயான பகுதிகளை நோக்கிப் புலிகள் நகர்வதாகத் தகவல்கள் வருகின்றன.

அதிகாலையைக் கடந்துகொண்டிருந்த வேளையில் திருநெல்வேலி சந்தைக்கு அருகாமையில் இரண்டு பேரைப் புலிகள் உயிரோடு எரித்த தகவல்கள் மனிதாபிமானத்தின் உயிரை விசாரணை செய்தது.

நானும் வேறு சிலரும் அங்கே சென்று விசாரிக்கிறோம். ஆடியபாதம் வீதியில் தான் அந்தக் கோரம் நடந்திருந்தது. திருநெல்வேலிச் சந்தைச் சைக்கிள் தரிப்பகத்தைப் TELO நடத்திக்கொண்டிருந்தனர். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 14 வயதளவிலான சிறுவர்கள் அதற்குப் பொறுப்பாக இருந்திருக்கிறார்கள். அவர்களைக் கைது செய்த புலிகள் சில மீட்டர் தூரம் வரை கொண்டுசென்று அங்கே அவர்களை எரித்திருக்கிறார்கள்.

நான் இளைஞன்.  அவலங்களையும், அதிர்ச்சிகளையும் உள்வாங்கிக்கொள்ளும் மனோபக்குவும் இன்னும் ஏற்பட்டிருக்கவில்லை.

பல்கலைக்கழகத்திற்குத் திரும்பி வருகிறோம். டெலோ இயக்கப் போராளிகளுக்கு பயப் பீதியை ஏற்படுத்தும் நோக்கிலேயே உயிருடன் எரித்ததாக புலிகளின் முக்கிய உறுப்பினர் தனக்குக் கூறினார் என்று உதவி விரிவுரையாளர் மு,திருநாவுக்கரசு எமக்குக் கூறுகிறார். புலிகளை விமர்சன அடிப்படையிலேயே ஆதரிப்பதாக எப்போதும் கூறும் திருநாவுக்கரசு, நாம் இவை குறித்துப் பேசினால் கொல்லப்படுவதற்கான அபாயம் உருவாகலாம் என எச்சரிக்கிறார்.

மதியம் கடந்த வேளையில் நான் சில பல்கலைக்கழக மாணவர்களோடு இணைந்து பேராசிரியர் சிவத்தம்பியைச் சந்திக்கிறேன். அவ்வேளையில் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இராணுவத் தளபதியாக செயற்பட்ட டக்ளஸ் தேவானந்தவுடன் சிவத்தம்பி அரசியல் தொடர்புகளைப் பேணிவந்தார். சிவத்தமபியிடம் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைவிடுகிறோம். குறைந்தபட்சம் ஒரு அறிக்கையாவது வெளியிட வேண்டும் என்று கேட்கிறோம். அதற்கு, பல்கலைக் கழகத்தில் உடனடி எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டால் அதனைத்தொடர்ந்து புலிகளிடம் கோரிக்கைகளை முன்வைக்க தான் முன்வருவதாகக் கூறினார்.

அதற்காக டெலோ இயக்கம் இன்னமும் பலத்துடன் நிலைகொண்டுள்ள கள்வியன்காட்டுப் பகுதியில் கார்த்திகேசு மாஸ்டர் என்பவர் உண்ணாவிரதமிருப்பதாகவும் அவரைப் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துவந்து அங்கு போராட்டத்தைத் தொடர்ந்தால் அவரோடு ஏனையவர்களும் இணைந்துகொள்ளலாம் என்றார்.

அவரை அழைத்துவருவதற்கு நானும் யோகன் என்பவரும் இணக்கம் தெரிவிக்கிறோம். யோகனை எனக்கு நன்கு அறிமுகமில்லாதவர். புலிகளின் ஆதரவாளர். அவரது மூத்த சகோதரர் புளட் அமைப்பின் அரசியல் பிரிவில் காண்டீபன் என்ற பெயரில் செயற்பட்டவர்.

நாங்கள் கார்த்திகேசு மாஸ்டரை அழைத்துவரப் புறப்பட்ட வேளையில் டெலோ இயக்கத்தில் பலர் கொல்லப்பட்டிருந்தனர். கள்வியன்காடு பகுதியில் மட்டும் டெலோ இயக்கம் எதிர்த்தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்து. அங்கு டெலோ இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினம் தங்கியிருந்ததால் இராணுவ பலமும் அதிகமாக்கப்பட்டிருந்திருக்க வேண்டும்.

கள்வியன்காட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையில் சட்டநாதர் கோவில் பகுதியில் புலிகள் இயக்கத்தினர் டெலோ நிலைகளை நோக்கி முன்னேறியவாறிருந்தனர். அவர்கள் முதலில் எங்களைக் கைது செய்து விசாரணை செய்கின்றனர். யோகன், சிவத்தம்பி ஆகியோர் மீது அதிக சந்தேகம் கொள்ளவில்லை என்பதால் எம்மை தொடர்ந்து செல்ல அனுமதிக்கின்றனர்.

புலிகள் இயக்கத்தின் நிலைகளைத் தாண்டிச் செல்லும் போது டெலோ இயக்கத்தினர் எம்மை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்கின்றனர். நாங்கள் ஏற்கனவே தயார்செய்திருந்த வெள்ளைத் துணிகளை உயர்த்திக் காட்டுகிறோம். கொல்லப்படுகின்ற அவலங்களைப் பார்த்த எங்களுக்கு எமது உயிர் மீது கூட வெறுப்பு மட்டுமே எஞ்சியிருந்தது. ஒருவாறு கள்வியன்காட்டை அடைந்ததும், டெலோ இயக்கப் போராளிகளிடம் எமது நோக்கத்தைச் சொல்கிறோம். அவர்கள் எங்களை மேற்கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என்றும், இறுதி மூச்சுவரை போராடுவோம் என்றும் சொல்கிறார்கள்.

மிகுந்த ஏமாற்றத்துடன் நாங்கள் இருவரும் பல்கலைக் கழகத்தை நோக்கித் திரும்பிவருகிறோம். சிவத்தம்பி அப்போது அங்கிருக்கவில்லை. அவருக்காகக் சில மணிநேரங்கள் காத்திருக்கிறோம். டெலோ இயக்கம் முழுவதும் அழிக்கப்பட்டுவிட்ட செய்தியோடு அவரும் பல்கலைக்கழகத்திற்கு வருகிறார். டெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் வேறு சில முக்கிய உறுப்பினர்களோடு தப்பிச் சென்றுவிட்டதாகவும் பலர் கொல்லப்பட்டும் கைதுசெய்யப்பட்டுமிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

1983ம் ஆண்டில் இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையைத் தொடர்ந்து உருவான தேசிய எழுச்சியோடு நான் டெலோவில் இணைந்துகொண்டேன். பின்னதாக டெலோவில் மத்திய குழுவை உருவாக்கி ஜனநாயக மத்தியத்துவத்தைக் கொண்ட அமைப்பாக மாற்ற வேண்டும் என்று நடைபெற்ற போராட்டங்களில் நானும் இணைந்து கொண்டேன். ஆக, ஆறு மாதங்கள் வரை அவ்வமைப்பின் செயற்பாடுகளோடு இணைந்திருந்தேன். பின்னதாக முன்று மாதங்கள் வரை தொடர்ந்த உட்கட்சிப் போராட்டத்தில் பங்கெடுத்ததால் டெலோ இயக்கத்தினர் கொலை செய்வதற்காக என்னையும் தேடியலைந்தனர். உட்கட்சிப் போராட்டம் உச்சமடைந்திருந்த வேளையில் சிறீ சபாரத்தினத்தைச் சந்திப்பதற்காக வெறு சிலரோடு, ஈ.பி.ஆர்.எல்.எப் இன் முக்கிய உறுப்பினரன கபூர் என்பவரின் ஒழுங்குபடுத்தலில் சென்னைக்குச் சென்றோம்.

நாளாந்தப் பத்திரிகைகள் கூடப் படிக்காத குறைந்தபட்ச அரசியல் அறிவுமற்றவராக சிறீ சபாரத்தினத்தை நாம் சந்தித்த போது ஏற்பட்ட அதிர்ச்சி பல ஆண்டுகள் நீடித்தது.

டெலோ இயக்கம் அழிக்கப்பட்ட போது, சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், எதிர்த்துப் போராடியவர்கள் என்று சற்றேறக்குறைய 400 டெலொ இயக்கப் போராளிகள் அழிக்கப்படிருக்கலாம் என்று பின்னதாகத் தகவல்கள் வெளியாகின.

சிறீ சபாரத்தினம் கோண்ட்டாவில் பகுதியிலுள்ள அன்னங்கை என்னுமிடத்தில் மறைந்திருந்தார். புலிகள் அவரைத் தேடிப் பல இடங்களைச் சுற்றிவளைத்தனர். பலர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். வசதி படைத்தவர்கள் கொழும்பிற்கும், சிலர் இந்தியாவிற்கும் தப்பியோடினர். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த போராளிகள் மாற்று வழிகள் இன்மையால் கைதுசெய்யப்படுக் கொலைசெய்யப்பட்டனர்.

இறுதியாக மே 5ம் திகதி சிறீ சபாரத்தினம் தலைமறைவாக இருந்த பகுதி புலிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. கிட்டு என அறியப்பட்ட சதாசிவம் கிருஷ்ணகுமாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு சிறீ சபாரத்தினம் இரைகிப் போகின்றார்.

பின்னதாக ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்திலிருந்த கபூர் அந்த இயக்கத்தின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
சிறீ சபாரத்தினத்தின் மறைவிடத்தைப் புலிகளுக்குக் காட்டிக்கொடுத்தது ஈரோஸ் இயக்கம் என்று தனக்குச் சந்தேகமிருப்பதாக அவர் என்னோடு பேசும் போது ஒரு தடவை தெரிவித்தார்.

சிறீ சபாரத்தினதின் மறைவிடம் அவர் கொலைசெய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பதாக ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்திற்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர்கள் அவரை மீட்டு இந்தியாவிற்கு அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர் என்றும் தெரிவித்தார். இறுதியில் கோண்டாவிலில் இருந்து அவரை அழைத்து வருவதற்கான முயற்சியில் ஈரோஸ் இயக்கத்தையும் ஈடுபடுத்த எண்ணிய ஈ.பி.ஆர்.எல்.எப் தலைமை அவர்களிடம் அது குறித்துப் பேசியதாகவும், இரு இயக்கங்களும் இணைந்து வைக்கல் நிரப்பிய லொறி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தாகவும் கூறினார். வைக்கல் நிரப்பப்பட்ட லொறி சிறீ சபாரத்தினத்தின் மறைவிடத்தை அண்மித்ததும் பழுதடைந்து நின்றுவிட்டதாகவும், அதன் பின்னர் அரை மணி நேரத்திற்குள்ளாக சிறீ சபாரத்தினத்தின் மறைவிடத்திற்குப் புலிகள் சென்று அவரைப் படுகொலை செய்ததாகவும் கூறினார்.

ஈரோஸ் இயக்கத்தில் அதன் தலைவர் பாலகுமார் ஊடாகவே தொடர்புகளைப் பேணியதாகவும், ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தில் அதன் உளவுப் பிரிவிற்குத் பொறுப்பாகவிருந்த ஜேம்ஸ் என்பவரே மீட்பு முயற்சியை ஒழுங்கு செய்ததாகவும் அறியக் கூடியதாகவிருந்தது.

சிறீ சபாரத்தினம் மரணித்த செய்தி வெளியான போது அதற்காகக் கண்ணீர்வடிக்க முடியவில்லை. நாம் ஏன் கொல்லப்படுகிறோம் என அறியாமலே மரணித்துப் போன நூற்றுக்கான போராளிகள் கொசுக்கள் போலச் சாகடிக்கப்பட போது, இதயம் கனத்தது.

————————————————–

இவையெல்லாம் வெறுமனே சம்பவங்களோ மறுபடி இரைமீட்பதற்கான வரலாற்றுப் பதிவுகளோ அல்ல. நமது தவறுகள் ஒரு சுழற்சி போல ஒரு எல்லைக்குள்ளேயே மீண்டு வருகின்ற போது மீண்டும் மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டியவை.

அதிலும், தமிழ்ப் பேசும் மக்கள் மீதான் ஒடுக்குமுறை திட்டமிட்டு இலங்கை அரசிற்கும் புலிகளுக்கும் இடையேயான போர் என்ற விம்பம் உருவமைக்கப்பட்ட நாளிலிருந்து மிகவும் அவதானமாகக் கையாளப்பட வேண்டிய கற்கைகள். இந்த விம்பத்தின் ஒருபகுதியான புலிகளுக்கு எதிரன அரசியலெல்லாம் இலங்கை அரச சார்பானதாக மாற்றமடைந்து விடுமோ என்ற அச்சம் எழுவது இயல்பானது.

இவற்றிலிருந்து வெளியேறி, தவறுகளை சுயவிமர்சம் செய்துகொள்ளவும், அதன் வெளிச்சத்தில் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் சரியான திசைவழியை நோக்கிச் செல்லவேண்டும் என்பதுவும் சமூகப்பற்றுள்ள ஒவ்வொரு மனிதனதும் அவா.

தவறுகளைக சாவகாசமாகக் கடந்து சென்று மனிதாபிமானமற்ற கோரத்தனமான சமூகத்தைத் தோற்றுவிக்க நாம் காரணமாகிவிடக்கூடாது.

ஒவ்வொரு தவறுகளையும் எமது எதிரிகள் பயன்படுத்திக்கொண்டு முழுப் போராட்டமும் தவறு என நியாயப்படுத்துவதற்கான வழிகளை நாமே ஏற்படுத்திக்கொடுக்கிறோம்.

புலிகளுக்கும் புலி எதிர்ப்பாளர்களுக்கும் நூலிடை இடைவெளி தான் காணப்படுகிறது. இரு பிரிவினருமே குறைந்தபட்ச சமூக அக்கறை கூட இல்லாமல் தமது சொந்த நலன் சார்ந்த உணர்ச்சி அரசியலையே முன்வைக்கின்றனர். ஏதாவது ஒரு வகையில் இவ்விரு பிரிவினருமே எங்காவது ஒரு அதிகாரவர்க்கத்தின் நேரடியான அல்லது மறைமுகமான ஆதரவு நிலைப்பாட்டையே வரித்துக்கொள்கின்றனர். தாம் சார்ந்த குறுகிய நலன்களை நோக்கி அரசியல் தலைமையற்ற ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களை ஒன்றிணையக் கோருகின்றனர். இறந்துபோன காலத்தின் அவலங்களை மறுபடி பேசுவதெல்லாம் இந்த இரண்டுக்கும் அப்பாலான புதிய அரசியல் சிந்தனையை உருவாக்குமானால் தெற்காசியாவின் தென் மூலையிலிருந்து புரட்சிக்கான வேர்கள் படர வாய்ப்புக்களுண்டு.

 

http://inioru.com/30-year-after-the-death-of-telo-freedom-fighter/

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கும் போது இதயம் கனக்கின்றது. ஈழ விடுதலை போராட்டத்தை ஆச்சரியத்தோடும், சாகசச் செயல்கலாகவும் மட்டுமே பார்க்கத் தெரிந்த வயது அது.
மண்ணில் சாய்க்கப்பட்ட அணைத்து போராளிகளுக்கும் மனதுக்குள் அழுது அவர்களின் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
நம் போராட்ட காலத்தில் கரை படிந்த துயர நாட்கள் இவை.

சில காரணங்களுக்காக மாற்று இயக்கங்களை போற்றமுடியாமலும்
பல காரணங்களுக்காக புலிகள் இயக்கத்தை தூற்ற முடியாமலும் கடந்த, கடக்கின்டற காலங்கள்...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆசிரியர்  ஒரு மாணவன்.. 4ம் வகுப்பில் படிக்கேக்க செய்த குற்றத்துக்கு வழங்கிய தண்டனையை.... அந்த மாணவன்.. வளர்ந்து கல்யாணம் கட்டி பிள்ளை பெத்த பின்.. அவரின் பிள்ளை 4ம் வகுப்பில் படிக்கும் போது அந்த ஆசிரியரிடம் அந்தப் பிள்ளை.. எதுக்கு என் அப்பாவை அடித்தாய் என்று கேட்பது போல் உள்ளது.. இன்னொரு பைத்தியக்காரர்களின் பைத்தியம்.tw_angry::rolleyes:

சிலருக்கு.. சிலதை மறக்கவும் முடியவில்லை.. மறக்கவும் நினைக்கவில்லை.. ஆனால்.. நல்லா மறைக்க நினைக்கிறார்கள்... நியாயங்களை. :rolleyes:

Link to comment
Share on other sites

நானும் எனது அண்ணனும் வேட்டையாடுவதை நேரில் கண்டோம் மிக அருகிலிருந்து (மயிற்கூச்செறியும் காட்சி). இதில் இறந்தவர்கள் பெரும்பாலும் சாதி குறைந்தவர்கள், படிக்காதவர்கள் (வறியவர்கள்) என எங்களால் (வெறியர்களால்) கொள்ளப்பட்டவர்கள், கொல்லப்பட்டதன் காரணங்கள் வேறு, சொல்லி விளங்க வைக்கேலாது இவர்களுக்கு, சாதியின் பெயரால் திருப்பியடிப்பார்கள், அஞ்சமாட்டார்கள் என்பதால். எங்கள் வீடை கட்டியவரின் மகன் உட்பட-அவரை விடுவிக்க அப்பா முயற்சித்தார் முடியாமல் போனது, இதற்குள் அடக்கபடாதவர்கள் எனக்கருதியவர்கள் எங்கள் ஊரில் 3-4 பேர் விடிவிக்கப்பட்டார்கள், வாத்தி (கெட்டிக்காரர் என்று சொல்வார்கள்) அடங்கலாக; கிறணைற்றுடன் தப்பியோடி பின்னர் பிடித்தார்கள்.

Link to comment
Share on other sites

12 hours ago, Sasi_varnam said:

வாசிக்கும் போது இதயம் கனக்கின்றது. ஈழ விடுதலை போராட்டத்தை ஆச்சரியத்தோடும், சாகசச் செயல்கலாகவும் மட்டுமே பார்க்கத் தெரிந்த வயது அது.
மண்ணில் சாய்க்கப்பட்ட அணைத்து போராளிகளுக்கும் மனதுக்குள் அழுது அவர்களின் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
நம் போராட்ட காலத்தில் கரை படிந்த துயர நாட்கள் இவை.

சில காரணங்களுக்காக மாற்று இயக்கங்களை போற்றமுடியாமலும்
பல காரணங்களுக்காக புலிகள் இயக்கத்தை தூற்ற முடியாமலும் கடந்த, கடக்கின்டற காலங்கள்...

 

 

 

உண்மை

தவறுகளை மனதில் வைத்து, துரோகிகளை உருவாக்காமல், இலட்சியத்தால் ஒன்று படுவோம் வெல்வோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அரசன் அன்று கொல்வான்.தெய்வம் நின்று கொல்லும்" என்பது புலிகள் விசயத்தில் உண்மை தான்.அன்று புலிகள் எப்படி மற்ற இயக்கங்களை ஈவு இரக்கமின்றி வேட்டையாடி கொண்டார்களோ அதை மாதிரி அவர்களும் வேட்டையாடி கொல்லப்பட்டார்கள்.இதற்கு முழு பொறுப்பும் அன்று வேடிக்கை பார்த்த மக்கள் தான் காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதேன் உங்கட கடவுள் புலிகள் தோன்ற முதலிருந்தே.. தமிழர்களை வதைத்து ஒழிக்கும்.. சிங்களவனை நின்று கொல்லுதில்லை. ஓ.. அவனிடம் அதிகாரமும்.. ஆட்பலமும்.. ஆயுதமும்.. தமிழனை அழிக்கிறதில ஒற்றுமையும்.. இருக்கென்று தெய்வத்துக்கு விளங்கிட்டுப் போல.

ஏன் இப்படியும் சொல்லலாம்.. டெலோ செய்த பாவத்திற்கு.. புலிகள் தெய்வம் நின்று கேட்டுது. புலிகள் செய்த பாவத்திற்கு சிங்களத் தெய்வம் நின்று கேட்டிச்சுது.. சிங்களத் தெயம் செய்த பாவத்தை.. பெரிய தெய்வம் மன்னிச்சிட்டுது. மிச்சாக்களுக்கு மன்னிப்பில்லை.

நீங்களும்.. உங்கட நிறம் மாறும்.. கருத்துக்களும் கட்டுரைகளும்.. தெய்வங்களைக் கோர்த்துவிட்டு.. விடுப்பு விண்ணானம் பேசிறது தான்.. எம்மை இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கே தவிர.... வேறு ஒன்றுமில்லை. 

அநியாயங்களை தட்டிக்கேட்டு.. திருத்த வக்கில்லாமல்.. அழிவு வரை அவை பெருக இடமளிச்சதுதான் எங்கடை ஆக்கள் அப்பவும் இப்பவும் செய்வது. இன்று வடக்குக் கிழக்கில்.. நடக்கும் ரவுடிசம் இதற்கு நல்ல சாட்சி. tw_blush::rolleyes:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல், போராட்டங்களுக்கு அப்பால்.....

ஒவ்வொரு மனிதருக்கும் இறைவனுடனான தனிக் கணக்கு என்று ஒன்று உண்டு. செய்யும் செயல்களுக்கு அடுத்த மனிதர்களுக்கு நியாயம் கூறினாலும், இறைவனிடன் பதில் சொல்லி யாக வேண்டும் ஒருநாள்.

அரசன் அன்றே அறுப்பான், தெய்வம் நின்று அறுக்கும் என்று சொல்வார்கள்.

கிட்டு அவர்கள்  கடலில் மறைய நேர்ந்த போது, அதை நினைத்துக் கொண்டேன்.

Link to comment
Share on other sites

நீங்களும்.. உங்கட நிறம் மாறனும்.. கருத்துக்களும் கட்டுரைகளும்.. விடுதலைப்புலிகளைக் கோர்த்துவிட்டு.. விடுப்பு விண்ணானம் பேசிறது தான்.. எம்மை இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கே தவிர.... வேறு ஒன்றுமில்லை.

அநியாயங்களை தட்டிக்கேட்டு.. திருத்த வக்கில்லாமல்.. அழிவு வரை அவை பெருக இடமளிச்சதுதான் நீங்கள் அப்பவும் இப்பவும் செய்வது. இன்று வடக்குக் கிழக்கில்.. நடக்கும் ரவுடிசம் இதற்கு நல்ல சாட்சி.

விடுதலைப்புலிகளே அவர்கள் தவறுகளை ஒத்துக்கொண்டுவிட்டார்கள், ஏன் நீங்கள் இன்னும் மறுக்கிறீர்கள், அது உங்கள் இருப்புக்கு தேவைப்படுகிறதா? தமிழ்நாட்டு கட்சி அரசியல் போல்

தவறுகளை மனதில் வைத்து, துரோகிகளை உருவாக்காமல், இலட்சியத்தால் ஒன்று படுவோம் வெல்வோம்!

Link to comment
Share on other sites

தமிழ் மக்களின் ஆயுத போராட்டம் தோல்வியில் முடிய இடப்பட்ட அத்திவாரம் இதுதான் .

அந்த அத்திவாரம் மாட மாளிகையாக முள்ளிவாய்காலில் கட்டி முடித்தாயிற்று .

தியாகம் என்ற சொல்லை வைத்து அநியாயங்களை மறைக்க  முயற்சிற்கின்றோம் ஆனால்  மறையாது .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுழிபுரத்தில் தோண்டப்பட்டது அத்திவாரம்.

Link to comment
Share on other sites

விதை விதைத்தது சுந்தரம் கொலை தான் .

ஆனால் தனி நபர்கள் கொலைகளுக்கும் ஒரு அமைப்பை தடை செய்வதற்கும் பெரிய வித்தியாசம் அது விளங்க சிறிது அது வேண்டும் .

அது அதிலிருந்த பலருக்கு இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது எமக்கு தாராளமாகவே இருக்கு உங்களை விட

 

Link to comment
Share on other sites

1 hour ago, MEERA said:

சுழிபுரத்தில் தோண்டப்பட்டது அத்திவாரம்.

அப்ப கட்டிடம் ஏன் முள்ளிவாய்க்காலில் கட்டப்பட்டது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

அப்ப கட்டிடம் ஏன் முள்ளிவாய்க்காலில் கட்டப்பட்டது?

எனக்கு முன்னர் அத்திவாரம் இட்டவரிடம் இதை கேட்டிருக்கலாமே? ஓ..... நோ அவர் உங்கள் தோஸ்து அல்லவா.

Link to comment
Share on other sites

14 minutes ago, MEERA said:

நோ அவர் உங்கள் தோஸ்து அல்லவா.

எனது வாசிப்பு அரசியலுடன்  மட்டுப் படுத்தப்படவில்லை. மற்றைய திரிகளிலும் எனது கருத்துக்களை வாசித்திருந்தால் இதை கேட்டிருக்க மாட்டீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

அரசியல், போராட்டங்களுக்கு அப்பால்.....

ஒவ்வொரு மனிதருக்கும் இறைவனுடனான தனிக் கணக்கு என்று ஒன்று உண்டு. செய்யும் செயல்களுக்கு அடுத்த மனிதர்களுக்கு நியாயம் கூறினாலும், இறைவனிடன் பதில் சொல்லி யாக வேண்டும் ஒருநாள்.

அரசன் அன்றே அறுப்பான், தெய்வம் நின்று அறுக்கும் என்று சொல்வார்கள்.

கிட்டு அவர்கள்  கடலில் மறைய நேர்ந்த போது, அதை நினைத்துக் கொண்டேன்.

அப்படின்னா.. தமிழர்களை சிங்களவன் வதைக்கிறானே.. ஒருவேளை தமிழர்கள் பெரும் பாவிகளோ.. மிகப் பெரிய தெய்வக்குற்றத்துக்கு ஒட்டுக்குழுக்களை தவிர ஒட்டுமொத்தமாக உள்ளாகி விட்டார்களோ..

முடியல்லைண்ணே... 

ஒரு உண்மையான.. போராளி போர்க்களத்தில் வீழாமல்.. தெருவிலா... குடிபோதையில் வீழ்ந்து கிடப்பானுன்னு எதிர்பார்க்கிறீங்க. அதனை தெய்வத்துக்கு படை சாத்தும்.. பூசாரியிடம் எதிர்பார்க்கலாம்.. இன விடிவுக்காக எதிரிக்கு எதிராக படை நடத்தும்...போராளியிடம் கூடாது. :rolleyes:tw_blush:

மரணம் ஒன்றை வைச்சே... எதிர்கால மனிதன்.. அனுபவிக்க வேண்டிய உரிமைகளைப் பறிப்பது அபந்தம். tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nedukkalapoovan said:

அப்படின்னா.. தமிழர்களை சிங்களவன் வதைக்கிறானே.. ஒருவேளை தமிழர்கள் பெரும் பாவிகளோ.. மிகப் பெரிய தெய்வக்குற்றத்துக்கு ஒட்டுக்குழுக்களை தவிர ஒட்டுமொத்தமாக உள்ளாகி விட்டார்களோ..

முடியல்லைண்ணே... 

ஒரு உண்மையான.. போராளி போர்க்களத்தில் வீழாமல்.. தெருவிலா... குடிபோதையில் வீழ்ந்து கிடப்பானுன்னு எதிர்பார்க்கிறீங்க. அதனை தெய்வத்துக்கு படை சாத்தும்.. பூசாரியிடம் எதிர்பார்க்கலாம்.. இன விடிவுக்காக எதிரிக்கு எதிராக படை நடத்தும்...போராளியிடம் கூடாது. :rolleyes:tw_blush:

மரணம் ஒன்றை வைச்சே... எதிர்கால மனிதன்.. அனுபவிக்க வேண்டிய உரிமைகளைப் பறிப்பது அபந்தம். tw_blush::rolleyes:

அரசியல், போராட்டங்களுக்கு அப்பால்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

அரசியல், போராட்டங்களுக்கு அப்பால்.....

ராஜீவ் காந்தி ஒரு ஏவல் படைக்கு முதலாளி.. உமாமகேஸ்வரன் ஒரு ஒட்டுக்குழு தலைவர்.. சிறிசபாரட்ணம்.. பத்மநாபா.. பிரேமதாச.. டெல்சில் கொப்பேகடுவ.. ரஞ்சன் விஜயரட்ன.. லலித் அதுலத் முதலி..... அமிர்தலிங்கம்... யோகேஸ்வரன்.. மகேஸ்வரி... etc... etc... etc...இப்படியான.. ஆட்களும்... அதே தெய்வத்தால் தான் நின்று நீதி.. கேட்கப்பட்டிருப்பார்கள்.. என்பதையும்.. நீங்கள் ஏற்றுக் கொண்டால்..  தெய்வமே யாரையோ வைச்சு.. இப்படியானவர்களை தண்டிச்சிருக்கென்று ஏன் எடுக்கப்படாது. :rolleyes:

Link to comment
Share on other sites

இந்தியா தேடிய ஒரு மண்டையில் இல்லாத ஆள் அவர்களுக்கு கிடைத்தார் .

மற்றவர்களை உடனேயே அவர்கள் இனம் கண்டுவிட்டார்கள் குறிப்பாக உமாவை ,

பாவம் இலங்கை தமிழர்கள் என்ன நடக்கின்றது என்று தெரியாமலே அழிந்து போனோம் .-

3 hours ago, MEERA said:

அது எமக்கு தாராளமாகவே இருக்கு உங்களை விட

 

 

முள்ளிவாய்கால் முடிவை பார்த்தால் தெரியும் எவ்வளவு இருந்தென்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் உங்களுக்கு வெள்ளவத்தை முடிவு தெரியாதா? 

Link to comment
Share on other sites

பிழையான தலைவனுக்கு நம்பி வந்தவர்கள் கொடுத்த தண்டனை ஆனால் அதையும் இந்தியாதான் செய்தது ..

எதிரியுடம் மண்டியிட்டு நடக்கவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலி அடிக்க திருப்பி அடிக்க வக்கில்லாமல் எந்த அரசை எதிக்க புறப்பட்டார்களோ அந்த எதிரியிடமே மண்டியிட்டவர்கள் உங்கள் குழுவினர். 

 

Link to comment
Share on other sites

1 minute ago, MEERA said:

புலி அடிக்க திருப்பி அடிக்க வக்கில்லாமல் எந்த அரசை எதிக்க புறப்பட்டார்களோ அந்த எதிரியிடமே மண்டியிட்டவர்கள் உங்கள் குழுவினர். 

 

 

அதற்கு பெயர் ராஜதந்திரம் .

 

மூளை இருப்பவர்கள் செய்வது அது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

80 களில் சுழிபுரத்தில் குழி வெட்டத் தொடங்கியவர்கள் 2009 வரைக்கும் தொடர்ந்து தொடர்ந்து வெட்டியதே முள்ளிவாய்க்கால். 

பிரேமதாசாவுடன் பேச்சுவார்த்தைக்கு புறப்பட்ட வேளை பாலா அண்ணை வன்னியில் போராளிகளுடன் கலந்துரையாடும் போது கூறியது " ஒரு காம்ப் அடித்தால் எவ்வளவு ஆயுதம் எடுப்பியள்? எவ்வளவு இழப்பு? எத்தனை காயம்? பாருங்கோ நான் எத்தனை காம்ப் அடிச்சுட்டு வாறன் என்டு" 

"ராஜதந்திரம்"

8 minutes ago, arjun said:

அதற்கு பெயர் ராஜதந்திரம் .

 

மூளை இருப்பவர்கள் செய்வது அது .

இதைத்தான் புலிகளில் ஒரு பகுதியினர் செய்தனர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.