Jump to content

நியூசிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக வில்லியம்ஸன்


Recommended Posts

நியூசிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக வில்லியம்ஸன்
 

article_1461835012-TamiltesconKane.jpgநியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மூன்று வகைப் போட்டிகளின் தலைவராக உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கேன் வில்லியம்ஸன், இவ்வருட பிற்பகுதியில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான 29ஆவது தலைவராக மாறவுள்ளார்.

இவ்வருட ஆரம்பத்தில் இந்தியாவில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20-இல் நியூசிலாந்துக்கு தலைவராக இருந்த வில்லியம்ஸன், இதுவரையில், 36, ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் நியூசிலாந்து அணியின் தலைவராக இருந்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் பிரென்டன் மக்குலம் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வில்லியம்ஸனே நியூசிலாந்து அணியின் டெஸ்ட் தலைவராக நியமிக்கப்படுவார் என ஓரளவு உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று வியாழக்கிழமை (27) ஒக்லாந்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைபவ ரீதியாக, மூன்று வகையான போட்டிகளினதும் நியூசிலாந்து அணியின் தலைவராக வில்லியம்ஸன் உறுதிப்படுத்தப்பட்டிருந்தார்.

நியூசிலாந்து அணியின் அடுத்த சர்வதேச சுற்றுப்பயணம், ஜூலை-ஓகஸ்ட் மாதங்களில் ஆபிரிக்காவுக்கு இடம்பெறவுள்ள நிலையில், சிம்பாப்வேயிலும் தென்னாபிரிக்காவிலும் டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து கலந்து கொள்கிறது.

அந்தவகையில், தற்போது 25 வயதான வில்லியம்ஸன், ஸ்டீபன் பிளெமிங், ஜோன் பார்க்கருக்கு அடுத்ததாக, டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்துக்கு தலைமை தாங்கவுள்ள மூன்றாவது இளம் தலைவராக மாறவுள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/170902/%E0%AE%A8-%E0%AE%AF-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%9F-%E0%AE%B8-%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A3-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%B8%E0%AE%A9-#sthash.uuRbc4Ui.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.