Jump to content

சாதியை ஒழிப்பது எப்படி?


Recommended Posts

sathi_2828032f.jpg
 

சாதியற்ற தேசமாக மாற இந்தியாவில் சமூக, கலாச்சார மாற்றம் ஏற்பட வேண்டும்

ஐக்கிய நாடுகள் சபை முதன்முறையாக பாபா சாஹேப் அம்பேத்கரின் பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறது. கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும், உலகெங்கும் சமத்துவத்துக்காகவும் சமூக நீதிக்காகவும் போராடுபவர்களுக்கும் உத்வேகமாகத் திகழ்பவர், இந்தியாவின் நாயகரான அம்பேத்கர் என்று அது தெரிவிக்கிறது.

சமீபத்தில் ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், சாதியப் பாகுபாடுகள் பற்றிய விமர்சனமும் உள்ளது. அதற்கு இந்திய அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளது. அந்த ஆட்சேபம், இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பியான அம்பேத்கருக்கு நிச்சயமாகத் திருப்தியானதாக இருக்காது.

ஏட்டளவிலும் நடைமுறையிலும்

ஐ.நா. அரங்கில் சாதிப் பிரச்சினை விவாதிக்கப் படுவதில் இந்தியாவுக்கு உள்ள எரிச்சலுக்குச் சமீபத்திய உதாரணம் இது. ரீட்டா ஈஸாக் - அந்தியாயெ எனும் ஐ.நா. பிரதிநிதியால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ‘பிறப்பு’ அடிப்படையிலான சாதிப் பாகுபாடுகளையும் தொழில்ரீதியிலான பாகுபாடுகளையும் தீண்டாமை நடைமுறைகளையும் வலுக்கட்டாயமான அகமண முறை போன்றவற்றையும் ‘உலகளாவிய நிகழ்வு’ என்கிறது. உலக அளவில் 25 கோடிக்கும் மேற்பட்டோரை இந்த நிகழ்வு பாதித்திருக்கிறது என்றும் குறிப்பிடுகிறது. இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்றும், யேமன், ஜப்பான், மொரிஷியானா போன்ற நாட்டு மக்களும் பாதிப்படைந்திருக்கிறார்கள் என்றும் அது குறிப்பிடுகிறது.

பட்டியல் இனத்தவருக்கு எதிரான குற்றங்கள் பெருகிக்கொண்டே வருவதைத் தெரிவித்து ‘குற்றப்பதிவுகளுக்கான இந்தியாவின் தேசிய ஆணையம்’ (என்.சி.ஆர்.பி.) வெளியிட்ட தரவுகள் அதில் உள்ளன. தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை 2013-ஐவிட 2014-ல் 19% அதிகரித்திருப்பதாக அந்தத் தரவுகள் சொல்கின்றன. கையால் மலம் அள்ளுவதைச் சட்டம் தடுத்திருந்தாலும் ‘உள்ளாட்சி அமைப்புகளும் நகராட்சிகளும் கையால் மலம் அள்ளுவோரை நியமிப்பதன்’ மூலம் அரசே அந்தச் செயல்பாட்டுக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறது என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

சித்தாந்த ஆயுதம்

முன்னதாக, ‘இனவெறிக்கு எதிரான சர்வதேச மாநாடு’ 2001-ல் டர்பனில் நடைபெற்றபோது, இனவெறிப் பட்டியலில் சாதியையும் சேர்க்க வேண்டும் என்று இந்தியத் தன்னார்வ அமைப்புகள் முயற்சிசெய்தன. இந்திய அரசோ அதைக் கடுமையாக எதிர்த்தது.

இனவெறி, இனப் பாகுபாடு, பிற நாட்டார் மீதான வெறுப்பு மற்றும் இது தொடர்பான சகிப்பின்மை போன்றவற்றின் சமகால வடிவங்கள் குறித்து ‘தி ஹக்’ நகரத்தில் ஐ.நா. சார்பாக ஒரு மாநாடு 2006-ல் நடந்தது. இந்த விவகாரங்கள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி துது தியனா ‘மனித உரிமைகளும் தலித் பெண்களின் கண்ணியமும்’ என்ற கருத்தரங்கில் பேசியதிலிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். “சட்டத்தைக் கடந்தும் நீங்கள் பார்த்தாக வேண்டும். அடையாளங்கள் குறித்த கருத்தாக்கம் நோக்கிச் செல்ல வேண்டும். இந்திய அடையாளம் என்பது பல நூற்றாண்டு காலமாக எப்படிக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். பாகுபாட்டின் எல்லா வடிவங்களின் வேர்களையும் வரலாற்றிலும் சித்தாந்தங்களிலும் காண முடியும். பாகுபாடு என்பது இயற்கையானது. அதாவது, இயற்கையின் ஒரு பகுதி. ஆகவே, அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நம்மை நம்ப வைப்பதுதான் இனவெறியாளர்களும், பாகுபடுத்தும் சமூகத்தினரும் கைக்கொண்டுள்ள உத்தி. அவர்களின் சித்தாந்த ஆயுதம் அதுதான். அதில் எந்த வித உண்மையும் இல்லை. பாகுபாடு என்பது அண்டவெளியிலிருந்து வரவில்லை. ஆகவே, சாதிரீதியிலான பாகுபாட்டை வீழ்த்துவதற்காக அதன் வேர்களைக் கண்டறிந்து, வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். பாகுபாட்டின் கலாச்சாரத்தையும் மனப்போக்கையும் கட்டமைத்துக்கொண்டிருக்கும் இந்த விஷயத்தை அழித்தொழிப்பதற்கான அறம்சார்ந்த, அறிவுபூர்வமான இந்த வழிமுறையைக் கைக்கொள்ளுங்கள்” என்று துது பேசியிருந்தார்.

இந்தியா சுதந்திரமடைந்து 68 ஆண்டுகள் ஆனாலும் நம்பவே முடியாத அளவுக்குச் சமூகப் பாகுபாடு களையும், ரத்தத்தை உறையவைக்கும் வன்கொடுமை களையும் நாடெங்கும் தலித் மக்களும் ஆதிவாசிகளும் எதிர்கொள்வது இன்னமும் தொடர்கிறது. ‘பயன்பாடுசார் பொருளாதார ஆய்வுக்கான தேசிய ஆணைய’மும் அமெரிக்காவின் மேரிலாண்ட் பல்கலைக்கழகமும் ஒரு ஆய்வை நடத்தியது. அதில் நான்கில் ஒரு இந்தியர் தனது வீட்டில் ஏதாவது ஒரு வடிவத்தில் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தியாவின் அனைத்து மதங்களையும் சாதிகளையும் சேர்ந்தவர்களும் - முஸ்லிம்கள், கிறித்தவர்கள், பட்டியல் இனத்தவர், சீர்மரபினர் போன்றோர் உட்பட - தாங்கள் தீண்டாமையை ஏதொவொரு வடிவத்தில் கடைப்பிடிப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் என்று ‘இந்திய மனித மேம்பாட்டு ஆய்வு’ (2011-2012) தெரிவிக்கிறது. ஆகவே, வெறும் அடையாளபூர்வமான செயல்பாடு மட்டுமே போதாது. சாதியப் பாகுபாடு என்ற நூற்றாண்டுகள் பழமையான, மனிதத்தன்மையற்ற சுமையை இந்தியா ஒட்டுமொத்தமாக உதறித்தள்ள வேண்டிய தருணம் இது. இந்தியா மறைப்பதற்கென்று ஏதும் அதனிடம் இருக்கக் கூடாது, யதார்த்தத்தை, அது எப்படி இருக்கிறதோ அப்படியே பார்த்து, அதில் உள்ள பிரச்சினைகளை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும்.

மாற்றத்தை நோக்கி…

சாதியற்ற தேசம் என்ற இலக்கை நோக்கி இந்தியா செல்ல வேண்டுமென்றால் சமூக, கலாச்சார மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும். அது இந்தியா முழுவதையும், அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதற்கான பாதையை அம்பேத்கர் நமக்கு இப்படிக் காட்டியிருக்கிறார்: “எந்தத் திசையில் வேண்டுமானாலும் பாருங்கள்! சாதி என்ற அரக்கன் உங்களுக்குக் குறுக்கே பாதையை மறைத்துக்கொண்டு இருப்பான். அந்த அரக்கனைக் கொன்றழிக்காமல் உங்களால் அரசியல் சீர்திருத்தத்தையோ பொருளாதாரச் சீர்திருத்தத்தையோ அடைய முடியாது.”

உண்மையில் இன்றைய தலித் அரசியல் பார்வை என்பது சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள், சுரண்டப்பட்டவர்கள், சாதி அமைப்பின் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் போன்றோரை மட்டும் உள்ளடக்கியது அல்ல; பிராமண மேலாதிக்கத்தை எதிர்த்து 1970-களிலும் 1980-களிலும் போராடிய பிற்படுத்தப்பட்ட சாதிகள், ஆதிவாசிகள் போன்றோரையும் உள்ளடக்கியதுதான். இன்றைய தலித் அரசியல் சித்தாந்தம் என்பது பகுஜன் சமாஜ் கட்சியின் உரை வீச்சுகளையும், குடியரசுக் கட்சியின் பிரிவுகளையும், காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம் போன்றவற்றின் அடையாள தலித் ஆதரவையும், ஏன் தாழ்த்தப்பட்ட சாதியினர் சார்ந்த மாவோயிஸ்ட் இயக்கங்களையும் தாண்டிச் சென்றுவிட்டது.

அம்பேத்கரை ‘இந்து சீர்திருத்தவாதி’ என்ற நோக்கில் பார்க்கும் முயற்சிகள் அவற்றின் உள்முரண்பாடுகள் காரணமாக வெற்றிபெறாது என்பதை ரோஹித் வெமுலாவின் தற்கொலை அம்பலப்படுத்திவிட்டது. இந்துத்துவத்தின் பிராமணிய மேலாதிக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏ.பி.வி.பி அமைப்புக்கு எதிராக ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் மாணவர் அமைப்பு எழுப்பிய சவால் தலித் அரசியல் பார்வையை அடிப்படையாகக் கொண்டதே.

கடந்த 68 ஆண்டுகளாகக் காப்பாற்றப்படாமல் இருந்த நமது உறுதிமொழி ஒன்றுக்கு நாம் இப்போது உயிர்கொடுப்போம்; இந்தியாவின் ஆதிவாசிகள், தலித் மக்கள், விளிம்பு நிலையினர், ஏழை மக்கள் ஆகிய சமூகத்தின் கடைக்கோடி ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாழ்வதற்கான வழியை ஏற்படுத்திக்கொடுத்து, உண்மையிலேயே அவர்களுக்கு உரியவற்றை அவர்களுக்கு அளிப்போம். இந்திய மக்களுக்கு முன்னால் உள்ள சவால் இதுதான்.

- சுஹாஸ் போர்க்கர்,

சிட்டிஸன்ஸ் ஃபர்ஸ்ட் டிவியின் எடிட்டர், மாற்று வழிமுறைகளுக்கான அமைப்பொன்றின் ஒருங்கிணைப்பாளர்.

© ‘தி இந்து’ (ஆங்கிலம்), சுருக்கமாகத் தமிழில்: ஆசை

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/article8518936.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.