Jump to content

யாழ் இணையத்தால் ஏறாவூர் பற்று செயலக பிரதேச மக்களுக்கு வழங்கப்பட்ட உதவி விபரம்


Recommended Posts

இப்பணமானது யாழ் இணைய உறுப்பினர்கள் வாசகர்கள் மற்றும் யாழ் இணையத்தின் விளம்பரப் பணம் என அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு வாசம் உதவும் உறவுகள் மூலம் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் கணவனை இழந்து குடும்ப சுமைகளை தாங்கிய தாய்மார்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக 20 குடும்பங்களுக்கு கோழிக் கூடும் நாட்டுக் கோழி குஞ்சுகளும் வழங்கப்பட்டு அதனை பராமரிக்கின்ற பயிற்சியும் மிருக வைத்தியர் ஊடாக ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது

 

3b89e331b1f0e4d800cda2e9c02f1c0251899ebb7aef087d44ada69051bcf976_full.jpg

1b2c3df28f26cc8138ad9e3c55741729cb643047243b73401f546678f5f21fb7_full.jpg

e1679ac3bacf67b6a39f12b3e3eac489437aa99e703ff94e09705f0132247d82_full.jpg

d152a67d8058152e436acdc77a932521210e94cfd134f06731e9215438676773_full.jpg

caf83f94b6802bdf51ab7dc05731043200211e39e44dcd1016c5b655dfa826ab_full.jpg

c74a69efbb931e469c8f36aec0165fac2868aec7389c20fa8e35a647e3412754_full.jpg

bdbd5e227226d2ecca5f8998d6c85fbcc43b24e0ab31e234af4b914c5affa960_full.jpg

b44a9724e7552e7045b1ba4f99f94a44d9baaf55e32d47db9bb55be218ec5449_full.jpg

a9b43620b415d5eef387bdde2956e657f1d745b78e89085719d72a6188654263_full.jpg

a9af225f571277a42ea23f39ff600040ee7d359776c17288f0fc3da521e2b779_full.jpg

 

95458c6587b707f21f559966032d2eb59f40a6cb01ea1039549b54a447074ca3_full.jpg

3318a5650bb80250f6e4ac599e534bae8fc09d0d74a77cd9ab7345c7efea2d44_full.jpg

760d356fb07615e4404c507d8389e2da9523c56fc258f43d6902aa204d3e5cb8_full.jpg

416bceb138d399d47ec3235f8988c5ae7847aa391c34d506ab33d8ccf371fe5b_full.jpg

72f0937814db3f3bda8b9705e55385f02ba0c466f9ac29302c6720af877e37a7_full.jpg

50ffb6c08f1494e0e79accf0d168cd2ac820096fbddc38d89d9e09d56e8de490_full.jpg

45ebffc14f4fe41007cb704395fdba2b9ff71af350e3adefcb8d1d8103e801da_full.jpg

39f241d3db00600d60427ed71417546f948bb7daf1eb87fd7f393b74723406f0_full.jpg

 

7e4026efbd94c2eda2ec60121a3756ce167a4da8210ee7cc2a4e15250d01102f_full.jpg

3b17411603f4a24c410ca1bf4a335e780b587dd96cde8db439947e9d47aa620c_full.jpg

3b9312e85b4a163f397518401bcbdac0ea77870da5b0e6167e9498c7de758bad_full.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க சந்தோசமாய் இருக்கு , மிக நல்ல விடயம்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது யாழ் இணையம்

bdbd5e227226d2ecca5f8998d6c85fbcc43b24e0ab31e234af4b914c5affa960_full.jpg

Link to comment
Share on other sites

 

59 minutes ago, மோகன் said:

அனுப்பட்ட பணமானது 20 குடும்பங்களுக்கு வாழ்வாதார முயற்சியாக 20 கோழிக்குஞ்சுகளும் அதற்குரிய கோழிக்கூடும் என வழங்கப்பட்ள்ளது.

 

26 minutes ago, suvy said:

பார்க்க சந்தோசமாய் இருக்கு , மிக நல்ல விடயம்...!

சுவி, மோகன் - இதை நானிங்கு எழுதுவதை  தவறு என்று கருத வேண்டாம். 

இங்கு பலருக்கு இவ்வாறான பல உதவிகள் கிடைத்ததையும் அவர்கள் அவற்றை கொண்டு நீண்ட கால பயன்களை பெறாமல், பணத்தேவை ஏற்படும் போது விற்று பணமாக்கிவிட்டு மறுபடியும் பழைய நிலைக்கே சீக்கிரம்  சென்றுவிடுகிறார்கள். முடிந்தவரை இவ்வாறான உதவிகளை பெறுவோர் இவற்றை இலகுவாக பணமாக்க  முடியாமல் இருக்குமாறு நாம்தான் பார்த்துக் கொள்ளவேண்டும். அல்லது இவ்வாறு இலகுவில் பணமாக்கக் கூடிய உதவிகளை குறைக்க  வேண்டும். வாழ்வாதாரத்தை மேம்படுத்த கொடுக்கப்பட்ட ஆடு, மாடு, கோழி, நீரிறைக்கும் இயந்திரம், தையல் மிசின் ... போன்றவை விற்கப்படுவதே இங்கு பொதுவான நிலை.  அவர்களிலும் பிழை சொல்லமுடிஆது - அவர்களின் பணத்தேவை அப்படி. நாம்தான் வேறு வழி காணவேண்டும். 

Link to comment
Share on other sites

கடந்த கால யுத்தத்தில் அங்கவீனமான மற்றும் சுகவீனமுற்று வாழும் 
எமது உறவுகளுக்காக யாழ் இணையத்தின் யாழ் இணையத்தின் நல்லதொரு
சிந்தனையுடன் வாழ வைக்கும் வாசத்தின் வழி நடத்தலின் யாழ் இணையத்தால் 137000 /= ரூபா நிதி வழங்கபட்டு வாசத்தின் ஊடாக மிகவும் கொடிய யுத்தம் மற்றும் இயற்க்கை அனர்த்தம் காரணமாக கணவனை இழந்து 
குடும்ப சுமைகளை தாங்கிய தாய்மார்களுக்கான வாழ்வாதாரத்தை மேன்படுத்தும் முகமாக ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் 20 குடும்பங்களை வாசம் உதவும் உறவுகளால் இனங்காணப்பட்டு அவர்களுக்காக கோழி கூடும் ,நாட்டு கோழி குஞ்சுகளும் கையளித்ததோடு அதனை பராமரிக்கின்ற பயிச்சியும் மிருக வைத்தியர் ஊடாக ஆலோசனைகளும் வழங்கபட்டுள்ளது.

இன் நிகழ்வில் கிராம சேவகர் ,கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள் ,
மிருக வைத்திய குழுமம் ,வாசம் உதவும் உறவுகள் அமைப்பின் தலைவர் ,உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இவ் உதவியினை வழங்கிய யாழ் இணைய நிர்வாகி ,யாழ் இணைய வாசகர் வட்டம் மற்றும் உதவியை ஒருங்கிணைத்து தந்த எங்களது வாசம் உதவும் உறவுகள் அமைப்பின் நோர்வே நாட்டிக்கான இணைப்பாளர் ‪#‎திரு_பரணி‬ அவர்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தொடர்புகள் 
வாசம் உதவும் உறவுகள் அமைப்பு 
தலைவர் வே.பிரபாகரன் - 0094774846143

உதவிகள் ஒருங்கிணப்பாளர்
வி.விஜய் -0097430877400 அல்லது 0097455761235
இதன் கணக்கு விபரங்கள் யாவும் ‪#‎யாழ்__இணைய‬நிர்வாகிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ரவிக்குமார் [ஆலோசகர்,இணைப்பாளர் லண்டன்] 00447722522555

பரணி -[ நோர்வே இணைப்பாளர் ] 004747348226

ஸ்ரீ - [ கனடா இணைப்பாளர் ] 0014168296387

சான் முரளி [பிரான்ஸ் இணைப்பாளர் ] 0033611688250

https://www.facebook.com/profile.php?id=100009679953523

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மோகண்ணா. தொடர்ந்து இப்படி உதவிகள் செய்தால் நன்று, அறியத் தாருங்கள் தொடர்வதாக இருந்தால்

"தொடர்புகள் 
வாசம் உதவும் உறவுகள் அமைப்பு 
தலைவர் வே.பிரபாகரன் - 0094774846143"

 

Link to comment
Share on other sites

22 hours ago, ஜீவன் சிவா said:

 

 

சுவி, மோகன் - இதை நானிங்கு எழுதுவதை  தவறு என்று கருத வேண்டாம். 

இங்கு பலருக்கு இவ்வாறான பல உதவிகள் கிடைத்ததையும் அவர்கள் அவற்றை கொண்டு நீண்ட கால பயன்களை பெறாமல், பணத்தேவை ஏற்படும் போது விற்று பணமாக்கிவிட்டு மறுபடியும் பழைய நிலைக்கே சீக்கிரம்  சென்றுவிடுகிறார்கள். முடிந்தவரை இவ்வாறான உதவிகளை பெறுவோர் இவற்றை இலகுவாக பணமாக்க  முடியாமல் இருக்குமாறு நாம்தான் பார்த்துக் கொள்ளவேண்டும். அல்லது இவ்வாறு இலகுவில் பணமாக்கக் கூடிய உதவிகளை குறைக்க  வேண்டும். வாழ்வாதாரத்தை மேம்படுத்த கொடுக்கப்பட்ட ஆடு, மாடு, கோழி, நீரிறைக்கும் இயந்திரம், தையல் மிசின் ... போன்றவை விற்கப்படுவதே இங்கு பொதுவான நிலை.  அவர்களிலும் பிழை சொல்லமுடிஆது - அவர்களின் பணத்தேவை அப்படி. நாம்தான் வேறு வழி காணவேண்டும். 

இவ்வாறன செயல்கள் பலஇடங்களிலும் நடக்கின்றது ,உதவி செய்ய முன்பு உதவி பெறுகிறவர்களை ஊரில் விசாரித்து தெரிந்து கொள்ளலாம் ,இப்படியானவர்கள் மீண்டும் கேட்கும் போது அவர்களுக்கு வழங்க கூடாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி....யாழ் இணையம்!

படங்களைப் பார்க்க...இதன் பின்னால் மறைந்திருக்கும் சோக வரலாறு பிரமாண்டமாய் மனதினுள் விரிகின்றது!

தொடர்வதாக இருந்தால் தெரியப்படுத்துங்கள்!

Link to comment
Share on other sites

நன்றிகள் யாழ் இணையத்திற்கும் , வாசம் உதவும் உறவுகள் அமைப்பிற்கும் !

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டு அம்பாறையில் இதை போலவே பல உதவிகளை வழங்க வேண்டும் ஆனால் அவை விற்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதும் விருப்பமும் கூட 

அண்மையில் குறைநினைக்க வேண்டாம் வெளிநாட்டில் இருந்து வந்த நபர்  ஒருவர் சில இல்லங்களுக்கு சென்று உணவுகள் சமைத்து வழங்கினார் அவருக்கு நன்றி . 

இருந்தாலும் அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட வலியை மறந்துவிட்டு வாழ்க்கையில் வெற்றி பெற முடியாத நிலையிலும்  அதை மறந்துவிட்டு வாழ தேவையான உதவிகளையே கேட்டு இருந்தனர் 

கால் கை இழந்தாலும் எப்படி முழு மனிதரின் தரத்திற்கு வேலை செய்யவார்கள் எம் தமிழ் மக்கள் என்று சிலருக்கு தெரியும்  ஆகையால் இவர்களுக்கான உதவிகளை செய்து இவர்கள் வாழ்க்கையின் இடைவெளியை நிரப்பி விடுங்கள். 

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்திற்கு  நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் யாழ் இணையத்திற்கும் , வாசம் உதவும் உறவுகள் அமைப்பிற்கும் !

 

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.