Jump to content

IPL 9 செய்திகள் கருத்துக்கள்


Recommended Posts

தன்னலமற்ற வீரர் டிவில்லியர்ஸ்: விராட் கோலி புகழாரம்

 

 
155 ரன்கள் கூட்டணி அமைத்து வெற்றிக்கு வித்திட்ட டிவில்லியர்ஸ், விராட் கோலி. | படம்: விவேக் பெந்த்ரே.
155 ரன்கள் கூட்டணி அமைத்து வெற்றிக்கு வித்திட்ட டிவில்லியர்ஸ், விராட் கோலி. | படம்: விவேக் பெந்த்ரே.

புனே அணியை வீழ்த்தியதில் டிவில்லியர்ஸின் ஆட்டம் நேற்று பிரதான பங்கு வகித்ததையடுத்து ஆர்சிபி கேப்டன் விராட் கோலி அவரை புகழ்ந்துரைத்துள்ளார்.

“ஒரு நேரத்தில் இருந்த நிலையை விட இந்தப் போட்டி நாங்கள் நினைத்ததை விட நெருக்கமாக அமைந்தது, ஆனால் கடைசியில் வெற்றி பெற்றது நல்லது.

நாங்கள் ஒரு அணியாக நல்ல கிரிக்கெட்டை ஆடி வருகிறோம், சரியான தருணங்களில் கொஞ்சம் நிதானித்து செல்லும் தன்மை தேவை.

அடுத்த முறை நான் டாஸில் வெல்வேன் என்று நினைக்கிறேன். வாட்சன் தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார், கேன் வில்லியம்சன் சிறந்த முறையில் முடித்து வைத்தார். அவர்கள் பதற்றமடையாமல் இருந்தது பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

நாங்கள் 175-180 ரன்கள் என்று பேசிவந்தோம். ஆனால் எனது பேட்டிங் திருப்திகரமாக அமையவில்லை. 30-35 பந்துகளுக்குப் பிறகே நான் பேட் செய்த விதம் சரியாக இல்லை, ஆனால் நான் டிவில்லியர்சுக்கு உறுதுணையாக ஆடுவது என்பதை தீர்மானித்தேன்.

அவர்தான் என்னை ஒரு முனையை தக்க வைக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் ஷாட்களை இஷ்டப்படி ஆட பிட்சில் வேகம் அதிகமில்லை. எங்கள் தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ். அவருடன் இணைந்து ஆடுவது ஒரு மகிச்சி தரும் அனுபவம். அவர் தொடர்புபடுத்தும் முறை, அவர் ஆடும் விதம் ஆகியவை அவரை ஒரு தன்னலமற்ற மனிதர் என்பதை அறிவுறுத்துகிறது.

அவர் தன்னுடைய திட்டம் குறித்துக் கூட கவலைப்படுவதில்லை தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளார். அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதை விட சிறந்த மனிதர் என்றே கூற வேண்டும்”

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article8513549.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • Replies 209
  • Created
  • Last Reply

விராட் கோலிக்கு 12 இலட்சம் ரூபா அபராதம்

விராட் கோலிக்கு 12 இலட்சம் ரூபா அபராதம்

IPL கிரிக்கெட் போட்டியின் 16 ஆவது லீக் ஆட்டத்தில் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரைஸிங் புனே சுப்பர் ஜயன்ட்ஸ் அணியைத் தோற்கடித்தது பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ்.

அந்த அணியின் தலைவர் விராட் கோலி (80), டி வில்லியர்ஸ் (83) ஜோடி 2 ஆவது விக்கெட்டுக்கு 155 ஓட்டங்களைக் குவித்தது. டி வில்லியர்ஸ் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்களூர் அணி 2 ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அதேநேரத்தில் 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள புனே அணி 3 ஆவது தோல்வியைப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், பெங்களூர் அணி பந்து வீசும்போது நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரத்தை எடுத்துக்கொண்டது. இதனால் அந்த அணியின் தலைவர் விராட் கோலிக்கு 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

http://newsfirst.lk/tamil/2016/04/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-12-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/

Link to comment
Share on other sites

இந்த சீஸன்ல நாங்கதான்!

 

 

p50a.jpg

கிளப், டிவிஷன், ஃபர்ஸ்ட் கிளாஸ் என படிப்படியாக ஆடி, இந்திய அணிக்குள் நுழைந்தது பழைய ஃபார்முலா.

p50j.jpg

ஐபிஎல் டு இந்திய அணி என்பதுதான் இப்போதைய ரூட் மேப். உலகின் தலைசிறந்த வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பு, சர்வதேசத் தரத்தில் கோச்சிங், கோடிகளில் சம்பளம், மீடியா வெளிச்சம்... என இளம் கிரிக்கெட்டர்களுக்கு ஐபிஎல் மிகப் பெரிய அனுபவக் களம். தேர்வாளர்களின் நேரடிப் பார்வையில் விளையாடுவதால், இந்திய அணிக்குள் ஐபிஎல் ஸ்டார்ஸ் உடனடியாக இடம்பிடித்துவிடுகிறார்கள். அப்படி இன்னும் சில மாதங்களில் இந்திய அணியில் இடம்பிடிக்கப்போகும் ஐபிஎல் வைரல் பாய்ஸ்களின் இன்ட்ரோ இங்கே!

ஷ்ரேயாஸ் ஐயர்

‘யங் வீரு’ என அழைக்கப்படும் மும்பை பையன். கடந்த ஐபிஎல் தொடரில் 2.6 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஷ்ரேயாஸ், டெல்லி அணிக்காக விளையாடினார். யுவராஜ், டுமினி போன்ற டி20 ஸ்பெஷலிஸ்ட்களையே ஓரங்கட்டி சிக்ஸரும் பவுண்டரியுமாக நொறுக்கி, ஒரே தொடரில் 439 ரன்களைக் குவித்தார். எப்பேர்ப்பட்ட பந்துவீச்சாளருக்கும் பயப்பட மாட்டார். கடந்த ரஞ்சி சீஸனில் தனி ஒருவனாக மும்பை அணியைத் தூக்கி நிறுத்தி, ரஞ்சி கோப்பையைக் கைப்பற்ற உதவினார் ஷ்ரேயாஸ். ஷேவாக் போலவே டெஸ்ட் போட்டிகளைக்கூட ஒருநாள் போட்டி பாணியில் ஆடுகிறார். வெகு விரைவில் இந்திய அணியில் இடம்பிடிக்க இருக்கிற நம்பிக்கை நட்சத்திரம்.

யுஸ்வேந்திர சாஹல்

p50b.jpg

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளர், இன்னும் சர்வதேசப் போட்டியில் காலடி எடுத்து வைக்காத சாஹல்தான். பிரமாதமாக கூக்ளி வீசக்கூடிய லெக் பிரேக் பவுலர். சர்வதேச மாஸ்டர் பேட்ஸ்மேன்களைக்கூட இவரால் எளிதில் வீழ்த்த முடிகிறது. 25 வயதாகும் ஹரியானாவைச் சேர்ந்த சாஹல், இந்திய செஸ் அணியிலும் விளையாடியிருக்கிறார். `ஒரு பந்துவீச்சாளராக, கிரிக்கெட்டில் சூழ்நிலைக்கு ஏற்ப உத்திகளை மாற்றுவதும், சமயோசிதமாக சில மூவ்களைச் செய்வதும் அவசியம். செஸ் போட்டிகளில் விளையாடுவது எனக்கு கிரிக்கெட்டுக்கும் உதவுகிறது’ என்கிறார் சாஹல். இந்திய அணியில் ஜடேஜா, அமித் மிஸ்ரா இடத்தைப் பிடிப்பதுதான் சாஹலின் உடனடி இலக்கு.

இஷான் கிஷன்

p50c.jpg

19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டன் இஷான் கிஷன். வயசு 17-தான். ஆனால், `இந்தியாவின் அடுத்த தோனி’ என இப்போதே கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். இடதுகை பேட்ஸ்மேனான இஷான், விக்கெட் கீப்பரும்கூட. தோனியும் கில்கிறிஸ்ட்டும்தான் இவரது ரோல்மாடல்கள். சமீபத்தில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒரு நாள் உலகக்கோப்பையில் இஷானின் கேப்டன்ஸி பெரிதும் பாராட்டப்பட்டது. தற்போது ஐபிஎல்-ல் குஜராத் அணிக்காக விளையாடுகிறார். பீஹாரில் இருந்து இதுவரை இந்திய அணிக்கு பெரிய அளவில் கிரிக்கெட் வீரர்கள் வந்தது கிடையாது என்பதால், இஷான் கிஷனை ஒட்டுமொத்த பீஹாரும் கொண்டாடுகிறது.

தீபக் ஹூடா

p50d.jpg

ஒரே ஒரு மேட்ச், தீபக் ஹூடாவின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக ஐபிஎல் விளையாடினார் ஹூடா. டெல்லிக்கு எதிரான ஒரு போட்டியில் 185 ரன்களை சேஸ் செய்ய வேண்டும் என்கிற நிலை. 11 ஓவரில் 78/4 என ராஜஸ்தான் தடுமாறிய நிலையில் களமிறங்கினார் தீபக். தொடர்ந்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் சிதறவிட்டவர், அதிரடியாக 25 பந்துகளில் 54 ரன்கள் குவித்து, அணியை வெற்றிபெறச் செய்தார். ராஜஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக இருந்த டிராவிட், ஹூடாவை நல்ல பேட்டிங் ஆல் ரவுண்டராக மாற்றினார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு தீபக் ஹூடாவை 4.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது ஹைதராபாத் அணி. காரணம், ‘பவர் ஹிட்டிங்’. ரெய்னா, யுவராஜ் சிங்கின் இடத்தை ஹூடா நிரப்புவார் என எதிர்பார்க்கலாம்.

சர்ஃபராஸ் கான்

p50e.jpg

`இந்தியாவின் டிவில்லியர்ஸ்’. அப்பா ஒரு கிரிக்கெட் கோச் என்பதால், சிறு வயதில் இருந்தே முறையாக டெக்னிக்குகளைக் கற்றுக்கொண்டு கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த சர்ஃபராஸ் கானுக்கு வயது 18. ஆனால், உலகின் முன்னணிப் பந்துவீச்சாளர்களையே கண்ணீர் விடவைக்கும் அளவுக்கு அடித்து நொறுக்குகிறார். நடப்பு ஐபிஎல்-லில் பெங்களூரு அணியின் முதல் போட்டியிலேயே பிரித்துமேய்ந்துவிட்டார் சர்ஃபராஸ். பத்தே பந்துகளைச் சந்தித்து 35 ரன்களை விளாசித் தள்ளினார். டிவில்லியர்ஸ் போலவே பந்தை எப்படிப் போட்டாலும் மைதானத்தின் 360 டிகிரியிலும் வெளுத்துக்கட்டுவார்.  விராட் கோஹ்லியைப் போலவே பந்தை ஃபீல்டர்களுக்கு இடையே ப்ளேஸ் செய்வதிலும் கெட்டிக்காரர். அணியின் தேவைக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ளும் பக்குவமும், இக்கட்டான தருணங்களில்கூட கூலாக விளையாடும் அனுபவமும் பெரிய ப்ளஸ். இந்த ஐபிஎல்-ல் சர்ஃபராஸின் அதிரடிக்காகக் காத்திருக்கலாம்.

கருண் நாயர்

p50f.jpg

களத்தில் அதிக நேரம் நின்று விளையாடும் திறன்பெற்றவர். 2014-15ம் ஆண்டு ரஞ்சி சீஸனில் தமிழ்நாடும் – கர்நாடகாவும் இறுதிப் போட்டியில் மோதின. கர்நாடகாவைச் சேர்ந்த கருண் நாயர் கிட்டத்தட்ட இரண்டரை நாட்கள் களத்தில் நின்று 560 பந்துகளில் 46 பவுண்டரிகள் விளாசி 328 ரன்களைக் குவித்து சாதனை படைத்தார். ரஞ்சி கோப்பை வரலாற்றிலேயே இறுதிப் போட்டியில் அதிக ரன்களைக் குவித்தவர் என்ற குல் முகமதுவின் 68 ஆண்டுகால சாதனையை முறியடித்து, புது சரித்திரம் படைத்தவர் கருண். ஷார்ட் ஃபார்மெட் கிரிக்கெட்டில் செம ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பதால், நான்கு கோடிக்கு ஏலத்தில் எடுத்த டெல்லி அணிக்காக இப்போது விளையாடிவருகிறார் கருண் நாயர்.

சஞ்சு சாம்சன்

p50g.jpg

இந்திய அணியில் எதிர்கால நட்சத்திரம். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். ராஜஸ்தான் அணிக்காக கடந்த இரண்டு வருடங்களாக விளையாடி வந்தவரை, 4.2 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறது டெல்லி டேர்டெவில்ஸ். அப்படி என்ன ஸ்பெஷல் சஞ்சுவிடம்? பொறுப்பான பேட்டிங்தான். இக்கட்டான சூழ்நிலைகளில் தனது மாஸ்டர் ஸ்ட்ரோக்குகளால் பந்துகளை சிக்ஸருக்குப் பறக்கவிடுவது சஞ்சுவின் வாடிக்கை. ` `டி20-க்கு என ஸ்பெஷலாக ஷோ காண்பிக்க முயற்சி செய்யாதே. பதற்றப்படாமல், வீசப்படும் பந்துகளைப் பொறுத்து அதற்குரிய ஷாட்டை ஆடினால் போதும். எல்லாம் சரியாக நடக்கும்' என டிராவிட் சார் அடிக்கடி அறிவுத்துவார்’ என்கிற சஞ்சு சாம்சனுக்கு டிராவிட்தான் உலகமே!

முருகன் அஷ்வின்

p50h.jpg

`அவரு பெரிய அஷ்வின்; இவரு சின்ன அஷ்வின்' என `காக்கா முட்டை’ கணக்காக மீம்ஸ் போடுகிறார்கள் நெட்டிசன்ஸ். முருகன் அஷ்வினும் சென்னைப் பையன்தான். ரவிச்சந்திரன் அஷ்வின், ஆஃப் ஸ்பின்னர். முருகன் அஷ்வின், லெக் ஸ்பின்னர். ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை விலையாக 10 லட்ச ரூபாய் அஷ்வினுக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அவர் ஏலம் எடுக்கப்பட்டது 4.5 கோடி ரூபாய்க்கு! சிஎஸ்கே பயிற்சியாளர் ஃபிளமிங் மற்றும் தோனி இருவரும், முருகனின் அருமையான கூக்ளிகளில் இம்ப்ரஸ் ஆனதுதான் புனே அணியின் 4.5 கோடி ரூபாய் டீலுக்குக் காரணம். தற்போதைய ஐபிஎல் சீஸனில் புனே சார்பில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் முருகன் அஷ்வினும் ஒருவர். தொடர்ந்து இந்த சீஸனில் கலக்கினால் விரைவில் சென்னைப் பசங்களான இரண்டு அஷ்வினையும் ஒரு சேர இந்திய அணியிலும் பார்க்கலாம்!

vikatan

Link to comment
Share on other sites

கூக்ளி, யார்க்கர்களில் மடிந்த மும்பை இந்தியன்ஸ்: டெல்லி அணி வெற்றி

 

 
 
 
  • டெல்லி அணி கேப்டன் ஜாகிர் கானை பாராட்டும் சக வீரர்கள். | படம்: பிடிஐ.
    டெல்லி அணி கேப்டன் ஜாகிர் கானை பாராட்டும் சக வீரர்கள். | படம்: பிடிஐ.
  • தோல்வி ஏமாற்றத்தில் மும்பை திங்க்-டேங்க் சச்சின் பாண்டிங் அண்ட் கோ. | படம்: பிடிஐ.
    தோல்வி ஏமாற்றத்தில் மும்பை திங்க்-டேங்க் சச்சின் பாண்டிங் அண்ட் கோ. | படம்: பிடிஐ.

டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் 17-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை டெல்லி டேர் டெவில்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட டெல்லி டேர் டெவில்ஸ் அணி 4 விக்கெடுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி மந்தமான பேட்டிங், டெல்லி அணியின் அபார பந்து வீச்சு ஆகியவற்றின் கலவையில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.

குறைந்த இலக்கை டெல்லி டேர் டெவில்ஸ் அணி சிறப்பாக தடுத்து வெற்றி பெற்றதற்குக் காரணம் அமித் மிஸ்ரா, கிறிஸ் மோரிஸ், ஜாகிர் கான் ஆகியோரது பந்து வீச்சைக் குறிப்பிடலாம், அமித் மிஸ்ராவின் கூக்ளிகள் கடைசி வரை சரியாகவே புரிந்து கொள்ளப்படவில்லை, அதே போல் கிறிஸ் மோரிஸ், ஜாகிர் கான் யார்க்கர்களுக்கு மும்பை இந்தியன்ஸின் ரோஹித் சர்மா, கெய்ரன் பொலார்டு ஆகியோரிடம் கூட விடையில்லை. ஜாகீர் கான் கேப்டன்சி முறை கபில்தேவை நினைவூட்டுவதாக அமைந்தது. அதாவது கடைசி வரை வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகமும், தன்னம்பிக்கையும், யார்க்கர்களும், கடைசியில் பொலார்ட் ஷாட்டை கேட்ச் பிடிக்க முன்னால் ஓடி வராமல் பின்னால் நின்று தரையில் பட்டு பிடித்து 2 ரன்களை பவன் நேகி விட்டுக் கொடுத்த போது அவரது மந்தத் தன்மைக்கு உடனடியாக அதிருப்தியைத் தெரிவித்தது போன்றவை கபில்தேவ் ரக தலைமைத்துவ உணர்வு.

மும்பை இந்தியன்ஸ் அணி பவர் பிளே முடிவில் 50 ரன்களைக் கடந்து நன்றாகச் சென்று கொண்டிருந்தது. குருணால் பாண்டியா 17 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 36 ரன்கள் எடுத்து ஆடிக் கொண்டிருந்த போது 12.2 ஓவர்களில் 102/2 என்று மும்பை இந்தியன்ஸ் பாதுகாப்பாகவே சென்று கொண்டிருந்தது.

ஆனால் ஜாகிர் கான் ரோஹித் சர்மாவுக்கு ஒரு நெஞ்சுயர ஷார்ட் பிட்ச் பந்தை வீச அதை அவர் தடுத்தாட ரன்னர் முனையிலிருந்து தடதடவென ஓடிய குருணால் பாண்டியாவை, ஜாகிர் கான் பந்தை ஓடிச் சென்று எடுத்து சரியாக ரன் அவுட் செய்ய மும்பை இந்தியன்சின் ரன் வேகம் குறைந்தது. இதன் பிறகே மும்பை இண்டியன்ஸ் அணியின் ஆட்டம் உத்வேகம் குறைந்தது.

ரோஹித் சர்மா 48 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியாவிடம் நேருக்கு நேர் மோதிக்கொண்டு ரன் அவுட் ஆனார். ஆனால் அவர் முன்னமேயே அடிக்கத் தொடங்கியிருக்க வேண்டும், ஒரு முனையை தக்க வைக்கிறேன் பேர்வழி என்று 18 பந்துகளில் 41 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்று ஆகும் அளவுக்கு அவர் காலூன்றும் வேலையைச் செய்திருக்கக் கூடாது, ‘ஆங்க்கர்’ ரோலை அவர் கொஞ்சம் கூடுதலாகப் புரிந்து கொண்டார் போலும். இவரும் பொலார்டும் மாறி மாறி அவர் அடிப்பார் என்று இவரும், இவர் அடிப்பார் என்று அவரும் சிங்கிள்களை பரிமாறிக் கொண்டனர்.

கெய்ரன் பொலார்டால் ஒன்றும் செய்ய முடியவில்லை, அவருக்கு அமித் மிஸ்ரா, கிறிஸ் மோரிஸ், ஜாகிர் கான் ஆகியோர் கடும் தொல்லைகளைக் கொடுத்தனர், அவரும் நல்ல பந்துகளை அடிக்கும் அளவுக்கு உத்தி ரீதியான துல்லியமான வீரர் அல்ல. ஒரே புல்டாஸ் வீசினார் ஜாகீர் கான் அதனை முறையாக சிக்ஸ் அடித்தார். ஆனால் கடைசியில் 18 பந்துகளில் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஜாகீர் கானின் கட்டரை சரியாக கணிக்காமல் கவர் திசையில் மோரிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

முன்னதாக தொடக்கத்திலேயே பார்த்திவ் படேல் 1 ரன்னில் ரன் அவுட் ஆனார். அதன் பிறகு அம்பாத்தி ராயுடு 23 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து அமித் மிஸ்ராவின் ஹூக்ளிக்கு பவுல்டு ஆனார். குருணால் பாண்டியா ஜாகீர் கானால் ரன் அவுட் ஆன பிறகு அதிரடி வீரர் ஜோஸ் பட்லரை கடும் நெருக்கடிக்குள்ளாக்கிய அமித் மிஸ்ரா ஒரு வேகமான கூக்ளியை வீச பட்லர் ஒதுங்கிக் கொண்டு ஆட முயன்றார், ஆனால் அவரது வலது கால் ஸ்டம்புக்கு நேராக நிலைக்க பந்து கால்காப்பைத் தாக்க எல்.பி. ஆனார்.

14.3 ஓவர்களில் 110/4 என்ற நிலையில், 33 பந்துகளில் 55 ரன்கள் என்று ஓரளவுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு மும்பைக்கு இருந்தது, ஆனால் பிரமாதமான பவுலிங்கினால் பவுண்டரிகளே அடிக்க முடியாமல் 18 பந்துகளில் 41 என்பது 12 பந்துகளில் 32 என்பதாகி கடைசி ஓவரில் 21 ரன்கள் என்ற கடுமையான நிலையை எட்ட மும்பை இந்தியன்ஸ் தோல்வி தழுவியது.

டெல்லி அணியில் அமித் மிஸ்ரா 4 ஓவர்களில் 24 ரன்கள் 2 முக்கிய விக்கெட்டுகள். மொகமது ஷமி 3 ஓவர்களில் 24 ரன்கள் விக்கெட் இல்லை, பவன் நெகி (அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர்) 1 ஓவர் 19 ரன்கள் சாத்துமுறையைச் சந்தித்தார். கிறிஸ் மோரிஸ் 4 ஓவர் 27 ரன் 1 விக்கெட், ஜாகிர் கான் 4 ஓவர் 30 ரன் ஒரு விக்கெட், இம்ரான் தாஹிர் 4 ஓவர் 29 ரன் விக்கெட் இல்லை.

சஞ்சு சாம்சன், டுமினி அதிரடி:

முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியினால் பேட் செய்ய அழைக்கப்பட்ட டெல்லி டேர் டெவில்ஸ் அணி முக்கிய அதிரடி வீரர் குவிண்டன் டி காக் விக்கெட்டை அவரது சொந்த எண்ணிக்கையான 9 ரன்களில் மெக்லினாகனிடம் இழந்தது.

ஸ்ரேயஸ் ஐயர் நன்றாகத் தொடங்கி ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 19 ரன்கள் எடுத்து ஹர்திக் பாண்டியாவிடம் ஆட்டமிழக்க, கருண் நாயரும் 5 ரன்களில் ஹர்பஜனிடம் அவுட் ஆக டெல்லி அணி 8 ஓவர்களில் 54/3 என்று தடுமாறியது.

இந்நிலையில் சஞ்சு சாம்சன் (60), ஜே.பி.டுமினி ஜோடி இணைந்து 51 பந்துகளில் 4-வது விக்கெட்டுக்காக 71 ரன்களைச் சேர்த்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது, சஞ்சு சாம்சன், 48 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 60 ரன்கள் எடுத்து மெக்லினாகனிடம் வீழ்ந்தார். கடைசியில் ஜே.பி.டுமினி சில அருமையான அதிரை ஷாட்களை ஆடி 31 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 49 ரன்கள் எடுக்க, பவன் நேகி 10 ரன்கள் எடுக்க 164 ரன்களை எட்டியது.

மும்பை பந்து வீச்சிலும் குருணால் பாண்டியா சிக்கனமாக வீசி 4 ஓவர்களில் 25 ரன்களையே விட்டுக் கொடுத்தார். ஆனால் ஹர்திக் பாண்டியா 1 ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்திய நிலையிலும் அவருக்கு மீண்டும் பவுலிங் அளிக்கப்படவில்லை. பும்ரா தொடர்ந்து சாத்து வாங்கியும் அவர் 4 ஓவர்கள் கொடுக்கப்பட்டார், இதில் அவர் 42 ரன்களை விட்டுக் கொடுத்தார். சவுதிக்கும் ஓவர் முடிக்கப்படவில்லை. ஹர்பஜனுக்கும் ஓவர் முடிக்கப்படவில்லை, இது என்ன ரோஹித் சர்மாவின் கேப்டன்சி என்பது புரியாத புதிராகவே உள்ளது.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி டேர் டெவில்ஸ் அணி கொல்கத்தா போலவே 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆனால் நிகர ரன் விகிதத்தின் படி 2-வது இடம். ஆட்ட நாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article8513927.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட்: ஐதராபாத் அசத்தல் வெற்றி
 
 

ஐதராபாத்: ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத்தில் நடந்த ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியும் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய ஐதராபாத் அணி 17.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர் 59 ரன்னும் சிகர் தவான் 45 ரன்னும் எடுத்தனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1507962

Link to comment
Share on other sites

3 விக்கெட்டுகளை தேவையில்லாமல் இழந்தோம்: தோனி

நோபாலன்

 
 
புனே கேப்டன் தோனி. | படம்: ஏ.எஃப்.பி.
புனே கேப்டன் தோனி. | படம்: ஏ.எஃப்.பி.

புனேயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோனியின் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விராட் கோலி தலைமை ராயல் சாலஞ்சர்ஸ் அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

இதனையடுத்து தோனி கூறும்போது, இலக்கைத் துரத்தும் போது தேவையில்லாமல் விக்கெட்டுகளை இழந்ததால் தோல்வி தவிர்க்க முடியாததாகி விட்டது என்றார்.

முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட பெங்களூரு அணி விராட் கோலி (80; 63 பந்துகள் 7 பவுண்டரி 2 சிக்சர்), ஏ.பி. டிவில்லியர்ஸ் (83, 46 பந்துகள் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) ஆகியோரது 155 ரன்கள் கூட்டணியினால் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய ரைசிங் புனே அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து தோல்வி தழுவியது. இதில் விராட் கோலி மிடில் ஓவர்களில் சரியாக ஆடவில்லை, திணறினார். டிவில்லியர்ஸ் தன் இஷ்டப்பட்ட ஸ்ட்ரோக்குகளை ஆடினார், கட்டுப்படுத்த முடியவில்லை.

புனே அணியில் இசாந்த் சர்மா படுமோசமாக வீசினார், அஸ்வின் 3 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து விக்கெட் எடுக்க முடியவில்லை, முருகன் அஸ்வின் 2 ஓவர்களில் 29 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட்டுகள் இல்லை. பெரேரா மட்டுமே 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதுவும் கோலி, டிவில்லியர்ஸ் விக்கெட்டுகளை கடைசி ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் கைப்பற்றினார்.

பெங்களூரு அணியில் கேன் ரிச்சர்ட்ஸன் 3 ஓவர்களில் 13 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வாட்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஃபா டு பிளேசிஸ், ஸ்மித் விக்கெட்டும், கெவின் பீட்டர்சன் ரன் எடுக்கும் முன்னரே காயம் ஏற்பட்டு வெளியேறியதும் புனே அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. ஸ்மித் ரன் அவுட் துரதிர்ஷ்டவசமானது. அஜிங்கிய ரஹானே 46 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். தோனியின் 38 பந்து 41 ரன்கள் சொல்லிக் கொள்ளும் படி அமையவில்லை.

கடைசியில் 109/3 என்ற நிலையில் ஓவருக்கு 15 ரன்கள் தேவைப்படும் போது பெரேரா இறங்கி மட்டையைச் சுழற்றினார். தப்ரைஸ் ஷாம்சியை மிட் விக்கெட்டில் ஒரு சிக்சரும், 18-வது ஓவரில் ஹர்ஷல் படேலை 3 பவுண்டரி 2 சிக்சர்கள் என்று 25 ரன்களை விளாச 18 பந்துகளில் 50 ரன்கள் என்ற சமன்பாடு, 12 பந்துகளில் 25 என்று வெற்றி வாய்ப்பையும் உருவாக்கியது. ஆனால் வாட்சன், கேன் ரிச்சர்ட்ஸன் புனே வெற்றியை அனுமதிக்கவில்லை. பெரேரா 13 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 34 ரன்கள் எடுத்து வாட்சனிடம் வீழ்ந்தார். அஸ்வினும் இதே ஓவரில் அவுட் ஆக 19-வது ஓவரில் 4 ரன்களே எடுக்க முடிந்தது. 20-வது ஓவரில் பாட்டியா, முருகன் அஸ்வினை கேன் வில்லியம்சன் அடுத்தடுத்து வீழ்த்தினார்.

இந்தத் தோல்வி குறித்து தோனி கூறியதாவது:

3 விக்கெட்டுகளை தேவையில்லாமல் இழந்தோம். ஃபாஃப் அவுட் ஆனார், பீட்டர்சன் காயமடைந்தார், ஸ்மித் ரன் அவுட் ஆனார். 185 ரன்கள் என்பது சற்றே கூடுதலான இலக்குதான். 3 பேட்ஸ்மென்கள் பெவிலியன் திரும்ப பின்னடைவு ஏற்பட்டு, இலக்கு கடினமானது. ஆனால் நெருக்கமாக வந்த விதம் குறித்து மகிழ்ச்சி. பீட்டர்சன் காயமடைந்தது ஒரு மறைமுக நன்மை. நாங்கள் 6 பவுலர்களுடன் ஆடுகிறோம். ஆனாலும் இறுதி ஓவர்கள் சரியாக அமைவதில்லை. ஆல்பி மார்கெல் அல்லது மிட்ச் மார்ஷ் ஆகியோரில் ஒருவரை அடுத்த போட்டிகளுக்கு அழைக்கலாம்.

எங்களிடம் உள்ள வீரர்களைப் பார்க்கும் போது ஒருவரையும் அணியிலிருந்து நீக்குவது என்பது முடியாது. எங்களது பந்து வீச்சை கொஞ்சம் பலப்படுத்த வேண்டியுள்ளது. அதிக நெருக்கடி இல்லாமலும் இன்னும் சில போட்டிகள் விளையாடி அனுபவம் பெற்ற பிறகும் முருகன் அஸ்வின் இன்னும் சிறப்பாகச் செயல்படுவார் என்று நினைக்கிறேன்.

நாங்கள் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று அனைத்திலும் இன்னும் நன்றாக செயல்பட வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். அணியில் சில மந்தமான பீல்டர்கள் உள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் இவர்கள் கேட்ச்களை பாதுகாப்பாகப் பிடித்து விட்டால் அதற்கு மேல் நான் ஒன்றும் அவர்களிடம் கேட்கப்போவதில்லை.

இவ்வாறு கூறினார் தோனி.

http://tamil.thehindu.com/sports/3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/article8513460.ece

Link to comment
Share on other sites

முஸ்தபிசுர் ரஹ்மான், வார்னர் அபாரம்: சன் ரைசர்ஸ் அணிக்கு மேலும் ஒரு வெற்றி

 

 
ஆட்ட நாயகன் முஸ்தபிசுர் ரஹ்மான். | படம்: பிடிஐ.
ஆட்ட நாயகன் முஸ்தபிசுர் ரஹ்மான். | படம்: பிடிஐ.

ஹைதராபாதில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் 18-வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சன் ரைசர்ஸ் அணி 13 பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்களுக்கு மட்டுமடுத்தப்பட்டது. தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

சன் ரைசர்ஸ் அணிக்காக முஸ்தபிசுர் ரஹ்மான் மீண்டும் தனது கட்டர்கள் மற்றும் யார்க்கர்களை துல்லியமாக வீசி 4 ஓவர்களில் 9 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பேட்டிங்கில் டேவிட் வார்னர் 31 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 59 ரன்கள் எடுத்தார்.

வார்னர் தனது அரைசதத்தை 23 பந்துகளில் விளாசினார். 3-வது வெற்றியைப் பெற்ற சன்ரைசர்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் கொல்கத்த, டெல்லி அணிகளுக்குப் பிறகு 3-ம் இடத்தில் உள்ளது.

கிங்ஸ் லெவன் பேட்டிங்கைத் தொடங்கிய போது புவனேஷ் குமாரின் அவுட் ஸ்விங்கரைத் துரத்தி முரளி விஜய் 3-வது ஓவரில் நமன் ஓஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பிறகு மனன் வோரா சில பவுண்டரிகளை அடித்தார், இதில் கவர் திசையில் அடித்த சிக்ஸ் அவருக்காக பேசும். 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் வோரா 25 ரன்கள் எடுத்த நிலையில் இல்லாத சிங்கிளுக்காக ஓடி கவர் திசையில் தவணின் நேரடி த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். முழு டைவ் அடித்து ரீச் ஆனாலும் மட்டை கிரீஸின் மேல் காற்றில் இருந்தது.

இதன் பிறகு மோய்சஸ் ஹெண்ட்ரிக்ஸ் மேலும் கிங்ஸ் லெவனுக்கு சிக்கலை ஏற்படுத்தி, 5 பந்துகளில் டேவிட் மில்லர், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரை வெளியேற்றினார். 3-வது முறையாக ஒரே ஓவரில் இருவரும் இந்தத் தொடரில் அவுட் ஆகியதும் குறிப்பிடத்தக்கது. ஷான்மார்ஷ் 34 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 40 எடுத்த நிலையில் முஸ்தபிசுர் ரஹ்மானின் கட்டருக்கு எல்.பி.ஆனார்.

ஆனால் ஐபிஎல் அறிமுக வீரர் நிகில் நாயக், அக்சர் படேல் ஆகியோர் 6-வது விக்கெட்டுக்காக 50 ரன்களைச் சேர்க்க ஸ்கோர் ஓரளவுக்கு தேறியது. அக்சர் படேல் 17 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 36 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். கடைசி 7 ஓவர்களில் கிங்ஸ் லெவன் எடுத்த 54 ரன்களில் முஸ்தபிசுர் ரஹ்மான் 3 ஓவர்களில் 9 ரன்களை மட்டுமே கொடுத்தது கவனிக்கத்தக்கது. ஆஃப் கட்டர்கள், யார்க்கர்கள், ஸ்லோ பவுன்சர்கள் என்று அவர் அசத்தினார்.

மீண்டும் ஷிகர் தவண், வார்னர் விக்கெட்டைக் கொடுக்காமல் ஜெயிக்க வேண்டுமென்று களமிறங்கினர், தவண் முதல் 2 ஓவரில் 2 அருமையான கவர் டிரைவ்களை ஆடி பவுண்டரிக்கு விரட்டினார், பிறகு வார்னர் (சாத்து) முறை. சந்தீப் சர்மாவை லாங் ஆஃபில் இரண்டு ஷாட்களை அற்புதமாகத் தூக்கி அடித்து பவர் பிளே முடிவதற்குள் 6 பவுண்டரிகளை விளாசினார். சன் ரைசர்ஸ் 65/0 என்று அபாரத் தொடக்கம் கண்டது. வார்னர் 59 ரன்களில் அவுட் ஆன பிறகு ஆதித்ய தாரே முதல் பந்தில் ரன் அவுட் ஆனார். வார்னர் ஆட்டமிழந்த பிறகு தவண் நின்று ஆடும் முடிவை எடுத்தார். தவண் 44 பந்துகளில் 45 ரன்களையும், இயன் மோர்கன் 25 ரன்களையும் எடுக்க கிங்ஸ் லெவன் பஞ்சாபிடம் துளிர் விட்ட ஒரு துளி நம்பிக்கையும் காற்றில் கரைந்தது.

ஆட்ட நாயகனாக மிகச்சரியாக முஸ்தபிசுர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article8515944.ece?homepage=true

Link to comment
Share on other sites

டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி முதல் சதம்: பெங்களூரு 180 ரன்கள்

 

டி20 கிரிக்கெட்டில் முதல் சதம் கண்ட விராட் கோலி. ராஜ்கோட்டில் குஜராத் லயன்சுக்கு எதிராக சாதனை. | படம்: ஏ.எஃப்.பி.
டி20 கிரிக்கெட்டில் முதல் சதம் கண்ட விராட் கோலி. ராஜ்கோட்டில் குஜராத் லயன்சுக்கு எதிராக சாதனை. | படம்: ஏ.எஃப்.பி.

ராஜ்கோட்டில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு கேப்டன் விராட் கோலி தனது முதல் டி20 சதத்தை எடுக்க அந்த அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்த பெங்களூரு கேப்டன் கோலி அரைசதத்தை 40 பந்துகளில் எடுக்க அதன் பிறகு 23 பந்துகளில் சதத்தை எட்டி 63 பந்துகளில் 11 பவுண்டரி 1 சிக்சருடன் 100 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

அவருடன் 121 ரன்கள் 3-வது விக்கெட் கூட்டணி அமைத்த கே.எல்.ராகுல் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 35 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். விராட் கோலி 50 ரன்களையே ஓடாமல் எடுத்துள்ளார், மீதி 50 ரன்களை ஓடியே அவர் எடுத்துள்ளார் என்பது சமீபத்தில் அவர் வளர்த்துக் கொண்ட ஓட்டத்திறமையின் வெளிப்பாடு, ஆனால் எப்போதும் விரைவில் ஒன்று அல்லது இரண்டு, அல்லது மூன்று ரன்களை ஓடி எடுப்பதில் கவனம் செலுத்தும் வீரர்கள் பவுண்டரி விளாச வேண்டிய பந்துகளை கவனிக்கத் தவறி அதிலும் 2 ரன்கள் எடுப்பர், தோனியின் பேட்டிங் காலியானது இப்படித்தான்.

அந்த வகையில் தொடக்கத்தில் களமிறங்கிய விராட் கோலி முதல் 10 ஓவர்களில் 30 பந்துகளைச் சந்தித்து 41 ரன்களையே எடுத்தார். பவர் பிளே முடிவில் 6 ஓவர்களில் 50/1 என்று இருந்த பெங்களூரு கோலி, டிவில்லியர்ஸ் இருந்தும் அடுத்த 4 ஓவர்களில் 26 ரன்களையே எடுத்து 10 ஓவர்களில் 76 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. கடைசி 10 ஓவர்களில் 104 ரன்கள் என்பது அபாரம்தான், ஆனால் இடைப்பட்ட ஓவர்களில் சிங்கிள்கள், இரண்டுகள் அதிகம் எடுக்கப்பட்டால் அது ஸ்கோர் 200 ரன்களுக்குச் செல்ல வேண்டியதை தற்போது தடுத்துள்ளதாகவே படுகிறது.

குஜராத் லயன்ஸ் அணியில் பிரெண்டன் மெக்கல்லம் இருக்கும் போது, அவர் என்னதான் 5 போட்டிகளுக்கு ஒருமுறைதான் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்றாலும், மற்றொரு அதிரடி வீரர் ஏரோன் பிஞ்ச் உள்ளார், டிவைன் ஸ்மித் உள்ளார் இவர்களுக்கு ஆட்டம் பிடித்தால் நிச்சயம் கோலியின் சதம் விரயமாவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் 2-வதாக பேட் செய்யும் அணிக்கு கடினமாக இருக்கும் என்று கோலி தனது இன்னிங்ஸ் முடிந்து கூறினார். இது எந்த அளவுக்கு செயலாகும் என்பது குஜராத் இன்னிங்ஸ் தொடங்கி சில ஓவர்கள் கழித்துதான் தெரியவரும்.

முன்னதாக பெங்களூரு அணி வாட்சன் (6), டிவில்லியர்ஸ் (20) ஆகியோரை முறையே குல்கர்னி மற்றும் தாம்பேயிடம் இழந்தது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-180-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8516466.ece?homepage=true

Link to comment
Share on other sites

சச்சின் பிறந்தநாளில் கோலி சதம் வீண்!

 

2408473.jpg

உலகக் கோப்பையில் எதிரணிகளுக்கு தண்ணி காட்டிய இந்திய அணியின் துணை கேப்டன் கோலி. ஐ.பி.எல் தொடரிலும் தனது தெறி பேட்டிங்கை காட்டி வருகிறார். ராயல் சேலஞ்சர் அணியின் கேப்டனான கோலி குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி கடைசி பந்தில் பவுண்டரி அடித்து தனது முதல் ஐ.பி.எல் சதத்தை பதிவு செய்தார்.

குஜராத்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் தனி ஒருவனாக பெங்களூரு அணியின் பேட்டிங்கில் கெத்து காட்டிய கோலி கடைசி ஓவருக்கு முன் 85 ரன்களில் இருந்தார். கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் என 15 ரன்கள் குவித்து சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆனாலும் பெங்களூரு அணியில் கோலி தவிர மற்ற வீரர்கள் ஜொலிக்காததால் அந்த அணி 180 ரன்களை மட்டுமே குவித்தது. அடுத்து ஆடிய குஜராத் லயன்ஸ் 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 182 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 4 வெற்றிகளுடன் குஜராத் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

2408533.jpg

சச்சின் பிறந்தநாளில் இந்திய அணியின் அடுத்த சச்சின் என வர்ணிக்கப்படும் கோலி சதமடித்தது மகிழ்ச்சி தான் என்றாலும் அந்த சதம் அவரது அணிக்கு வெற்றியை தேடி தரவில்லை என்பது ஆர்.சி.பி அணியின் வருத்தம். ஆனால் இதே போன்று சச்சின் டெண்டுல்கரும் தனது ஒரே ஒரு ஐ.பி.எல் சதத்தை பூர்த்தி செய்த போது அவரது அணி தோல்வியை சந்தித்து குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/sports/63041-kohli-hits-maiden-ipl-ton-on-sachins-birthday.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

RPS பேசாமல் மாடு மேய்க்க போகலாம், 

Link to comment
Share on other sites

புனே: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் புனே அணியும் கோல்கட்டா அணியும் மோதுகின்றன டாஸ் வென்ற புனே அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய புனே அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. இதையடுத்து கோல்கட்டா அணிக்கு 161 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது புனே அணி. பின்னர் களமிறங்கிய கோல்கட்டா அணி 19.1 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் புனே அணியை வீழ்த்தியது.

1 minute ago, MEERA said:

RPS பேசாமல் மாடு மேய்க்க போகலாம், 

நான் சொன்னேன் தானே தோனிக்கு வயது போட்டுது என்று...:grin: நீங்கள்தான் தல.. தல... என்று நின்றீர்கள்.tw_tounge:

இனி 2 வருடத்திற்கு  பின்தான் நான் IPL பார்ப்பதாக முடிவு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தல மட்டுமல்ல அங்கு இருக்கும் மற்றவர்களும் சோம்பேறித்தனமாக இருக்கிறார்கள் களத்தடுப்பில்

Link to comment
Share on other sites

ஐ.பி.எல் தொடரிலிருந்து பீற்றர்சன் விலகல்
 

article_1461500156-TamilleaviplKP.jpgஇந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரிலிருந்து விலகுவதாக, பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியின் வீரர் கெவின் பீற்றர்சன் அறிவித்துள்ளார். அவருக்கு ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்தே, அவர் இவ்வாறு விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராகக் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போட்டியில், துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும்போது காயமடைந்த கெவின் பீற்றர்சன், உடனடியாகவே மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றைப் பகிர்ந்துள்ள கெவின் பீற்றர்சன், 'இந்தியாவிலிருந்து வெளியேறுகிறேன். காயங்களென்பவை, பணியின் ஓர் அங்கம் தான். எனது கெண்டைக்கால் பின்தசையில் மோசமான கிழிவு ஏற்பட்டுள்ளது. சிறந்த வீரர்களை விட்டு விலகுவதையிட்டுக் கவலையடைகிறேன். ஆனால், எனது குடும்பத்துடன் சேர்ந்திருப்பதை எதிர்பார்க்கின்றேன். கோடை காலத்தில் இலண்டனில் இருப்பேன். நவம்பர் வரை விமுறை. இப்போதைக்குச் சென்றுவருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

அஜின்கியா ரஹானே, பப் டு பிளெஸிஸ், கெவின் பீற்றர்சன், ஸ்டீவன் ஸ்மித், மகேந்திரசிங் டோணி என, நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர்களைக் கொண்ட அணியாக இருந்தாலும், பூனே அணி, இத்தொடரில் இதுவரை தடுமாற்றத்தையே வெளிப்படுத்தியுள்ள நிலையில், கெவின் பீற்றர்சனின் இழப்பு, அவ்வணிக்கு இன்னமும் பாரிய இழப்பாக அமையுமெனக் கருதப்படுகிறது.

இந்தத் தொடரில் கெவின் பீற்றர்சன், 4 இனிங்ஸ்களில் 73 ஓட்டங்களை 36.50 என்ற சராசரியில் 119.67 என்ற அடித்தாடும் வீதத்தில் ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/170575#sthash.siUXfSQp.dpuf
Link to comment
Share on other sites

 பஞ்சாப்பை வீழ்த்தி மும்பை வெற்றி

 

Daily_News_5527416467667.jpg

 

மொகாலி: ஐபிஎல் சீசன் 9ன் இன்றைய போட்டியில் பஞ்சாப்பை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை வெற்றி பெற்றது. முன்னதாக முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை குவித்தது. 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=212530

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாப் விளையாடிய எல்லாவற்றிலும் இரண்டாவதாகத்தான் வந்திருக்கின்றார்கள் போல....!டில்லி பாதுஷாக்கள் சீறுகின்றார்கள்....!  tw_blush:

Link to comment
Share on other sites

நெருக்கடியான சூழ்நிலையில் வெற்றிக்கு என்ன தேவை என்பதை அறிய வேண்டும்: புனே கேப்டன் தோனி அறிவுரை

 
 
புனே கேப்டன் தோனி. | படம்: ஏ.எஃப்.பி.
புனே கேப்டன் தோனி. | படம்: ஏ.எஃப்.பி.

ஐபிஎல் தொடரில் நேற்று முன் தினம் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் புனே அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந் தது. முதலில் பேட் செய்த புனே 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. அஜிங்க்ய ரஹானே 52 பந்தில் 67 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 31, தோனி 23 ரன் சேர்த்தனர்.

161 ரன்கள் இலக்குடன் விளையாடி கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. முதல் பந்தில் ராபின் உத்தப்பா ஆட்டமிழக்க 3-வது ஓவரில் 2 ரன்களுக்கு ஆசைப்பட்டு காம்பீர் ரன் அவுட் ஆனார். அவர் 11 ரன் எடுத்தார். எதிர்பாராத வகையில் சூர்ய குமார் யாதவ் சிறப்பாக விளையாடி 49 பந்தில், 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் விளாச கொல்கத்தா அணிக்கு நம்பிக்கை பிறந்தது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் திஷாரா பெரேரா வீசிய 3-வது பந்தை உமேஷ் யாதவ் சிக்ஸருக்கு விளாச 19.3 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. உமேஷ் யாதவ் 8, சுனில் நரைன் ரன் எதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். ஆட்ட நாயகனாக சூர்ய குமார் யாதவ் தேர்வானார்.

தோல்வி குறித்து புனே கேப்டன் தோனி கூறும்போது, "சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரன் குவிப்பது சிரமமாக இருந்தது. இதனால் மட்டைக்கு நேராக பந்து வீச வேண்டாம் என சுழற்பந்து வீச்சாளர்களிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்களது பந்தில் 5 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. என்ன நடந்தது என்பது பற்றி கவலையில்லை. களத்தில் எப்படி திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்பது முக்கியமானது. களத்தில் சந்தோஷமாக தருணம் நிலவ வேண்டுமென்றால் நெருக்கடியான நிலையில் வெற்றி பெற என்ன தேவை என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

இதில் நிச்சயமாக நாங்கள் பின்தங்கியே உள்ளோம். அதிலும் முக்கியமாக பந்து வீச்சு துறையில் இந்த நிலையே காணப்படுகிறது. வீரர்களுக்கு அறிவுரைதான் வழங்க முடியும். பந்தை கையில் எடுக்கும் நீங்கள், எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். ஒட்டுமொத்தமாக பல்வேறு துறைகளில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டும்.

இவ்வாறு கூறினார் தோனி.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/article8523354.ece

Link to comment
Share on other sites

புனே அணி வீரரை விமர்சித்த பயிற்சியாளர்

 

800f14db7dabf78472c1e89d052b1062e3a.jpg

ஐபிஎல் போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினின் செயல்பாடு சரியில்லை என்று புனே அணியின் பயிற்சியாளரான  பிளமிங் அவரை வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.

தமிழக வீரரான அஸ்வின் சென்னை அணிக்காக விளையாடி வந்தவர். இருப்பினும் அந்த அணிக்கு 2 வருடங்கள் தடைவிதிக்கப்பட்ட நிலையில், டோனி தலைமையிலான புதிய அணியான புனே அணியில் தற்போது விளையாடி வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற போட்டிகளில் அஸ்வினின் செயல்பாடுகள்  மோசமாக உள்ளது. தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் ஓட்டங்களை அள்ளிக் கொடுத்த அஸ்வின் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

இது குறித்து புனே அணியின் பயிற்சியாளர் பிளமிங் கூறுகையில், எங்கள் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் அஸ்வினின் செயல்பாடு அணிக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது. அவர் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் முற்றிலும் ஏமாற்றினார்.

’பவர் பிளே’ ஓவர்களில் சரியான வேகத்தில் பந்துவீச முடியாமல் திணறுகிறார். அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்படுவார் என்று நினைக்கிறேன். ஆடுகளங்கள் கைகொடுக்காத நிலையில், பவுலர்கள் தங்களை மாற்றிக்கொள்ள நினைக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

http://onlineuthayan.com/sports/cricket/a1ZjSmdxR21ZUnc9

 

Link to comment
Share on other sites

பவுலிங், பீல்டிங் படுமோசம்: கிங்ஸ் லெவன் வீரர் கிளென் மேக்ஸ்வெல் சாடல்

 

 
பவுல்டு ஆன கிளென் மேக்ஸ்வெல். | படம்: ஏ.எஃப்.பி.
பவுல்டு ஆன கிளென் மேக்ஸ்வெல். | படம்: ஏ.எஃப்.பி.

மும்பை இந்தியன்ஸ் அணியிடம் நேற்று மொஹாலியில் தோல்வியடைந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 போட்டிகளில் 5-வது தோல்வியைச் சந்தித்தது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கிங்ஸ் லெவன் வீரர் கிளென் மேக்ஸ்வெல், பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகியவற்றில் மிக மோசமாக இருப்பதாக சாடியுள்ளார்.

நேற்று சற்றே பசுந்தரை ஆடுகளத்தில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் தொடக்கத்தில் தட்டுத்தடுமாறியது. பார்த்திவ் படேல் 15 ரன்களில் மிட்செல் ஜான்சன் நோபாலில் அவுட் ஆனார், அடுத்த ப்ரீ ஹிட் பந்திலும் கேட்ச் கொடுத்தார். 32 ரன்களில் நெருக்கமான ஸ்டம்பிங் வாய்ப்பில் தப்பினார். பிறகு 66 ரன்களில் மிட் ஆஃபில் ஒரு கேட்ச் அவருக்கு விடப்பட்டது. இப்படி வாய்ப்புகள் கொடுத்தால் என்ன நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடந்தது, அவர் 58 பந்துகளில் 81 ரன்களை எடுக்க அம்பாத்தி ராயுடு 35 பந்துகளில் 67 ரன்களை விளாச இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 137 ரன்களைச் சேர்த்தனர்.

கிங்ஸ் லெவன் அணியில் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா அபாரமாக வீசி 4 ஓவர்களில் 20 ரன்களையே விட்டுக் கொடுத்து ரோஹித் சர்மாவை தொடகக்திலேயே பெவிலியன் அனுப்பினார். ஆனால் ஜான்சன், அக்சர் படேல், மோஹித்சர்மா, மேக்ஸ்வெல், சாஹு ஆகியோருக்கு சாத்துமுறை காத்திருந்த்து. இதனால் 189 ரன்களை குவித்தது மும்பை இந்தியன்ஸ், தொடர்ந்து ஆடிய கிங்ஸ் லெவன் மார்ஷ், மேக்ஸ்வெல், மில்லர் ஆகியோரது விடா முயற்சி பயனளிக்காமல் 164 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது. பும்ரா 4 ஓவர்களில் 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த, மெக்லினாகன், சவுதீ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்தத் தோல்வி குறித்து கிளென் மேக்ஸ்வெல் கூறும்போது, “எதிரணியினருக்கு நிறைய வாய்ப்புகளை கோட்டை விட்டோம், வந்த வாய்ப்புகளை தவற விட்டதுதன தற்போது நாங்கள் அட்டவணையில் கடைசி இடத்தில் இருக்கக் காரணமாகியுள்ளது.

இருமுறை பார்த்திவ் அவுட் ஆனார், ஆனால் அது நோ-பால், இதற்குப் பிறகு அவர் தனது இயல்பான ஆட்டத்தை ஆட முடிந்தது. ராயுடுவுக்கும் இதையேதான் செய்தோம். கேட்சைத் தவறவிட்டோம் இவரும் அடிக்க ஆரம்பித்தார். இவரும் தனது இயம்பான ஆட்டத்தை ஆடினார் இரண்டு சிக்சர்கள் எங்களுக்கு நெருக்கடியை அதிகரித்தது.

இப்போதைக்கு அணிக்கு எதுவும் சரியாக நடைபெறவில்லை. 12 ஓவர்கள் முடிந்து ஸ்கோரைப் பார்த்தால் 108-109 என்றுதான் இருந்ததாக நினைக்கிறேன். பவர் ப்ளேயில் நன்றாக கட்டுப்படுத்தி பிறகு தவற விட்டோம், மோசமான பீல்டிங்தான் எங்களை இந்த நிலைக்கு தாழ்த்தியுள்ளது.

தொடர்ந்து 2 வெற்றிகளைப் பெற்றால் போதும். நாங்கள் எங்களுக்குள் நேர்மையாக இருக்க வேண்டும், பேட்டிங் பீல்டிங், பவுலிங் ஆகியவற்றில் பெரிய முன்னேற்றம் தேவை”, இவ்வாறு கூறினார் மேக்ஸ்வெல்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/article8523824.ece

Link to comment
Share on other sites

குஜராத் - டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை

 

 

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடை பெறும் ஆட்டத்தில் ஜாகீர்கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ், சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன.

அறிமுக அணியான குஜராத்தை ரெய்னா சிறப்பாக வழிநடத்துகிறார். 5 ஆட்டத்தில் விளையாடி உள்ள இந்த அணி 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் டெல்லி அணி 4 ஆட்டத்தில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோல்வியை சந்தித்த போதிலும் தொடர்ச்சியாக 3 ஆட்டத்தில் வெற்றி பெற்று எழுச்சியுடன் உள்ளது.

இன்று 4-வது வெற்றியை எதிர்நோக்கி உள்ளது. பெங்களூரு அணிக்கு எதிராக சதம் அடித்த குயின்டன் டி காக், மும்பை அணிக்கு எதிராக சிறப்பாக விளை யாடிய சஞ்சு சாம்சன், டுமினி, கரண் நாயர் ஆகியோர் பேட்டிங்கில் வலுசேர்ப்பவர்களாக உள்ளனர்.

பந்து வீச்சில் ஜாகீர் கான் தனது அனுபவத்தால் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறார். கிறிஸ்மோரிஸ் கடைசி கட்ட ஓவர்களில் ரன் குவிப்பை கட்டுப்படுத்துபவராக உள்ளார். சுழற்பந்து வீச்சில் அமித் மிஸ்ரா, இம்ரன் தகிர் ஆகியோர் ஆட்டத்தின் நடுப்பகுதியில் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் செயல் படுவது பலம் சேர்ப்பதாக உள்ளது.

குஜராத் அணி தொடர்ச்சியாக 3 ஆட்டத்தில் வெற்றி கண்ட நிலையில் ஐதராபாத் அணியிடம் 4-வது ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது. எனினும் அடுத்த ஆட்டத்தில் பெங்களூரு அணியை புரட்டி எடுத்து மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியது.

டிவைன் ஸ்மித், ஆரோன் பின்ச், பிரண்டன் மெக்கல்லம், பிராவோ, ரெய்னா, தினேஷ் கார்த்திக் என அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது.

தொடக்க வீரர்களாக மெக்கலம், ஸ்மித் ஜோடியை களமிறங்கக் கூடும். ஆல்ரவுண்டர்களான பிராவோ, ஜடேஜாவும் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளுமே மேலாதிக்கம் செலுத்த முயலும் என்பதால் வெற்றி பெற கடுமையான போராட்டம் நிலவும்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/article8527145.ece

Link to comment
Share on other sites

மக்ஸ்வெல்லுக்கு அபராதம்

 

800652983555e0a38902ee031e33ce0869c.jpg

 

ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்பொழுது, சாதனங்களைச் சேதப்படுத்தல் என்ற விதிமுறையின் கீழ் மக்ஸ்வெல்லுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். தொடரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஹைதராபாத், பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மக்ஸ்வெல் ஆட்டமிழந்த பிற்பாடு இலக்கை அடிப்பதற்காக தனது துடுப்பு மட்டையை ஓங்கினார்.

இது விதிமுறைக்கு முரணானது. அவர் தனது தவறை ஒப்புக் கொண்டதையடுத்து மக்ஸ் வெல்லுக்குக் குறித்த ஆட்டத்துக்கான கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே தவறுக்காக மக்ஸ்வெல் ஏற்கனவே ஒரு தடவை எச்சரிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.        http://onlineuthayan.com/sports/cricket/azB6c0YybHc1eFE9

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.