Jump to content

கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் சிறுகதைப் போட்டி -2016 முடிவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் சிறுகதைப் போட்டி -2016 முடிவுகள்

ki-pi-short story winnersகவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவாக “காக்கைச் சிறகினிலே” இதழ் குழுமத்தினரால் நடத்தப்பட்ட புலம்பெயர் சிறுகதைப் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து வெளிவரும் இலக்கிய சஞ்சிகையான ‘காக்கைச் சிறகினிலே’ இதழ்க் குழுமம் ஆண்டு தோறும் கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசுத் திட்டமொன்றை நடத்துவதென அறிவித்தது.

அந்தவகையில் கவிஞர் கிபி அரவிந்தனது முலாவது நினைவையொட்டி ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016′ யை முன்னெடுத்தது.

இப்போட்டியின் கடைசி நாளாக 31. 01. 2016 என அறிவிக்கப்பட்டு முடிவு கி.பி. அரவிந்தன் அவர்களின் முதலாவது நினைவு மாதமான மார்ச்சு 2016 இல் அறிவிக்கப்படும் எனவும் வெளிப்படுத்தப்பட்டது.

இதன்படியாக இந்தப் போட்டியின் முடிவு  கடந்த 26. 03. 2016 சனியன்று பாரீசில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் அறிவிக்கப்பட்டது.

ki-pi-short story winners

பரிசு பெற்றோர் விபரம் :

முதற்பரிசு:
குருவிகளின் வீடு – சாந்தினி வரதராஜன் (ஜேர்மனி)

இரண்டாம் பரிசு :
ஒற்றை யானை – ஜோசப் அமுதன் டானியல் (மன்னார் அமுதன் – இலங்கை)

மூன்றாம் பரிசு :
முன்னும் பின்னும் சில நாட்குறிப்புகள் – சோ. சுப்புராஜ் (தமிழ்நாடு – இந்தியா)

ஆறுதல் பரிசுகள் :

4. ஒரு கதையும் கருமாந்திரங்களும் – வேலாயுதம் கிருபதாசன் (நெற்கொழு தாசன் – பிரான்சு)
5. அலுவாக்கரை – எஸ்.ஏ.உதயன் (இலங்கை)
6. நீள் பயணம் – இராசு தம்பையா (மணிதாசன் – ஜேர்மனி)

தமிழ் இலக்கிய ஆர்வலர் இ. பத்மநாப ஐயர் அவர்களது வழிகாட்டுதலுடன் உலகளாவிய தமிழ் எழுத்தாளர்கள் கொண்ட நடுவர் குழுவினராக  அ. முத்துலிங்கம் (கனடா), மு.புஸ்பராசன் (இங்கிலாந்து),  இளவாலை விஜயேந்திரன் (நோர்வே),  அ. யேசுராசா (இலங்கை),  ஜோ டி குருஸ் (தமிழ்நாடு) கலந்து கொண்டனர்.

 

http://www.puthinappalakai.net/2016/03/29/news/14925

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிசு பற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

குறிப்பாக யாழ் கள உறவு நேற்கொழுதாசனுக்கு  சிறப்பு வாழ்த்துக்கள்!

இணைத்த கிருபனுக்கும் நன்றி! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்....!

நெற்கொழுதாசன்...., பார்க்க சந்தோசமாய்  இருக்கு நன்பரே....!!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்....! நெற்கொழுதாசன் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், குறிப்பாக நெற்கொழு தாசனுக்கு.

புலம்பெயர் சிறுகதை போட்டி என்றுவிட்டு, இலங்கை, இந்தியா ஆக்களுக்கு கொடுத்திருக்கு?

கதைக்களமா அல்லது எழுத்தாளரா புலம்பெயர்?

Link to comment
Share on other sites

நன்றி நண்பர்களே, 

உங்கள் அன்பும் வாழ்த்தும் தான் இவ்வளவு தூரம் என்னைக் கொண்டுவந்திருக்கிறது. 

தொடர்ந்தும் இணைந்திருப்போம்.

இணைப்பினைப் பகிர்ந்த கிருபன் அண்ணைக்கும் என் அன்புகள்.

 

////புலம்பெயர் சிறுகதை போட்டி என்றுவிட்டு, இலங்கை, இந்தியா ஆக்களுக்கு கொடுத்திருக்கு?

கதைக்களமா அல்லது எழுத்தாளரா புலம்பெயர்?////

எனக்கும் உதே சந்தேகம் இருக்கிறது கோசான். :rolleyes:

Link to comment
Share on other sites

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள், குறிப்பாக நெற்கொழு தாசனுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

‘தமிழ் இலக்கிய ஆர்வலர் இ. பத்மநாப ஐயர் அவர்களது வழிகாட்டுதலுடன்‘

அது என்னவகை வழிகாட்டுதலாக இருக்கக்கூடுமென்று புரியவில்லை.  வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12919759_10204986341251830_9858709315800 எனது கதையும் தெரிவாகி இருக்கு

நேர்கெழுதாசனுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக சிறுகதைப் போட்டி நடுவர்குழுவென்றில்லாமல் கதைகளைத் தேர்ந்தெடுத்து பரிசுக்குரிய படைப்பை முன்னிலைப்படுத்த மேலதிகமாக ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது. இது தனியொருவரின் விருப்பு வெறுப்புக்கு இடமளித்துவிட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  எதிர்காலத்தில் இத்தகைய போட்டிகளை நடத்துபவர்கள் இத்தகைய கேள்விகள் எழாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்கொழுதாசனுக்கும் மெசோ ஆன்ரிக்கும் வாழ்த்துக்கள்.

யாழ் களத்தின் ஆரம்ப காலங்களில் எழுதி வந்த மணிதாசன் ஐயாவும் ஆறுதல் பரிசைப் பெற்றவர்களில் ஒருவர் என்று முகநூலில் அறியக்கூடியதாக இருந்தது. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

எப்போது வாசிக்கலாம் என்று ஆவலாய் உள்ளேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் காக்கா இணையத்தளத்திற்கு காக்கா பிடிப்பு தான். 

அநியாயம் என்ன என்றால்.. உதுகளுக்க தெரிஞ்சும் தெரியாமலும் போய் சிக்கிக்கிற சில நல்ல படைப்பாளிகள் என்பது தான். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.