Jump to content

தமிழினியின்; சுயசரிதை: “ ஒரு கூர்வாளின் நிழலில் “


Recommended Posts

'ஒரு கூர் வாளின் நிழலில்': தமிழினியின் கணவர் கருத்து

 

விடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிர் அணியின் பொறுப்பாளராக இருந்த தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமி, எழுதியதாகக் கூறப்படும்- ஒரு கூர் வாளின் நிழலில் என்ற நூலை வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள அவரது கணவர் ஜெயகுமரன் ஈடுபட்டுள்ளார்.

அந்த நூலை வெளியிடுவதற்கு காவல்துறையினர் முன்னர் அனுமதி மறுத்திருந்த நிலையில், அரசின் உயர்மட்ட அதிகாரிகளின் தலையீட்டில் தற்போது அந்த அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஏற்கனவே, இந்திய பதிப்பாக தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல், இலங்கையில் கிளிநொச்சியில் எதிர்வரும் 19-ம் திகதி சனிக்கிழமை வெளியிடப்படவுள்ளதாக தமிழினியின் கணவர் ஜெயக்குமரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

புனர்வாழ்வு முகாமிலிருந்து 2013-ம் ஆண்டில் விடுவிக்கப்பட்ட தமிழினி, 2014-ம் ஆண்டின் இறுதிக் காலத்தில் இந்த நூலை எழுத முடிவுசெய்ததாகவும் ஜெயக்குமரன் கூறினார்.

160317184224_tamilini_304x304_bbc_nocred
 

பள்ளி மாணவியாக இருந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் பங்கேற்ற விதம், பின்னர் அரசியல்துறை பொறுப்பாளராக ஏற்பட்ட அனுபவங்கள் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய ஒரு சுயசரிதையாக இந்த நூல் அமைந்திருந்தாகவும் தமிழினியின் கணவர் தெரிவித்தார்.

தமிழினி இறுதிக் காலங்களில் நோய்வாய்ப்பட்டிருந்த காரணத்தினால் அந்த நூல் வெளியீட்டை பிற்போட வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும், அவர் இறந்த பின்னர் அவரது விருப்பத்தை நிறைவு செய்வதற்காக இந்த நூலை எழுதுவதாகவும் ஜெயக்குமரன் பிபிசியிடம் கூறினார்.

ஆனால், 'முன்னாள் பயங்கரவாதிகளின் படங்களை அவர்களின் சீருடையுடன் சட்டவிரோதமானது' என்று தன்னிடம் கூறிய கிளிநொச்சி பொலிஸார், அதற்காக தான் கைதுசெய்யப்பட முடியும் என்றும் கூறியதாக ஜெயக்குமரன் தெரிவித்தார்.

பின்னர், தனது நண்பர்களூடாக சில அமைச்சர்களைத் தொடர்புகொண்டு, அவர்களின் உதவியுடன் தங்களின் நூல் வெளியீட்டுக்கு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாகவும் தமிழினியின் கணவர் தமிழோசையிடம் கூறினார்.

சில ஆண்டுகள் புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழினி, பின்னர் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் சுகவீனம் காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/03/160317_tamilini_book

Link to comment
Share on other sites

'ஒரு கூர் வாளின் நிழலில்'– சர்ச்சை குறித்து எழுத்தாளர் சயந்தன்

ஒரு கூர் வாளின் நிழலில்' எனும் தலைப்புடன் அண்மையில் ஒரு நூல் வெளியாகியுள்ளது. இந்நூல் காலமான தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பெண் பிரிவின் பொறுப்பாளராகவிருந்த தமிழினி எழுதியதாகவும் அது அவரது சுயசரிதை என்றும் சொல்லப்படுகிறது. இது முற்று முழுதாக தமிழினி எழுதியது தான் என்று ஒரு பகுதியினர் வாதிட,இடைச் செருகல்கள் நிறைய சேர்க்கப்பட்டிருக்கின்றன, இது தமிழினி எழுதியதாக இருக்காது என்று வேறு சிலர் வாதிடுகிறார்கள். அந்தவகையில் இந்தப் புத்தகத்தில் இடைச்செருகல்கள் இருக்க வாய்ப்பில்லை என்ற தனது கருத்தை முன்வைக்கிறார் எழுத்தாளர் திரு.சயந்தன். 

http://media.sbs.com.au/audio/tamil_160318_480793.mp3

 

http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/oru-kuur-vaallinnn-nillllil-crccai-kurrittu-ellluttaallr-cyntnnn?language=ta

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூர்வாளின் நிழல்
 

கூர்வாளின் நிழல்


ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டமும் அதன் பின்னரான தமிழர்களின் அரசியல் இருப்பு என்னவென்பதும், ஆயுதபோராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரான அரசியல் நிலை உண்மையில் தமிழர்களின் போராட்டத்தின் தோல்வியா என்பதிலும் பல வாதங்கள் உண்டு.

எனினும் தமிழர்களின் அடுத்த கட்ட அரசியல் நெறியானது, போராட்டத்திற்காக அர்ப்பணித்த மாவீரர்களினதும் பொதுமக்களினதும் தியாகத்தின் மீதுதான் நிலைப்படுத்தப்படமுடியும் என்பதும், அதன் ஊடாகவே தமிழர்கள் தமது அரசியல் பலத்தை பெறுவார்கள் என்பதும் ஒரு பொதுவான அபிப்பிராயமாக இருக்கின்றது.

அதனை மறுத்து போராட்டத்தின் தோல்விகளை ஏற்றுக்கொண்டு, போராட்டவழிமுறையே தோல்வி என ஏற்றுக்கொண்டு, அடுத்த கட்டத்திற்குள் நகருவதே தமிழர்களுக்கு மோட்சத்தை தரும் என்ற வகையில், பயணப்படவேண்டும் என்ற வாதத்துடன் சில கருத்துக்கள் எம்மவர் மத்தியில் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால் இதே கருத்தைத்தான் சிங்கள பெருந்தேசியவாதமும் முன்வைக்கின்றது என்ற யதார்த்தத்தை புரிந்துகொண்டால், அதன் வழிமூலம் எதுவென்பதை புரிந்துகொள்ளமுடியும்.

எமது போராட்டத்தினை தோல்வியடைந்த போராட்டமாக காட்டுவதற்காகவென பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதற்காக இறுதியாக பயன்படுத்தப்பட்ட உத்திகளில் ஒன்றுதான், தமிழினியின் கூர்வாளா என ஐயப்படவைக்கிறது அதன் உள்ளடக்கம்.

ஒரு விடுதலைப்போராளியின் புத்தகத்தை தங்களது நீண்டகால திட்டங்களுக்கு ஏற்றவாறு இடைச்செருகல்களை செய்து வெளியிட்டுள்ளார்கள் என்ற இயல்பான ஐயத்தை தோற்றுவிக்கின்றது அதன் தொடக்கமும் முடிவும்.

இப்போது ஒரு இனத்தின் தேசிய எழுச்சியை அடக்குவதற்கு நேரடியான உத்திகளை பயன்படுத்தாமல், தந்திரமான உத்திகளையே சிங்கள தேசிய அரச இயந்திரம் பயன்படுத்திவருகின்றது.

அந்தவகையிலேயே சரணடைந்த விடுதலைப்புலிகளின் தளபதிகளை இராணுவ உடுப்புகளுடன் விட்டிருந்தார்கள். அல்லது அவர்களது இணக்கத்துடன் அவர்கள் சுதந்திரமாக செயற்படுவதுபோன்று காட்ட விரும்பினார்கள். அவ்வாறு “சுதந்திரமாக” விடப்பட்டவர்கள் ஊடாக போராட்டதவறுகளை விளம்பரப்படுத்தினார்கள்.

பின்னர் அப்படியான உயர்மட்ட தலைவர்கள் ஊடான ஒரு அரசியலை மக்கள் மத்தியில் விதைக்க முயன்றார்கள்.

முன்னர் சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் சிங்கள புலனாய்வுத்துறை தளபதிகள், இராணுவதளபதிகளாக நியமிக்கப்பட்டு மக்களை கவர்ந்திழுக்கும் செயற்பாடுகளை செய்தார்கள். அவர்கள் வாகனங்களில் செல்லும்போது சிறுவர்கள் விளையாடுவதை கண்டால் அந்த இடத்தில் இறங்கி விளையாடுவார்கள். அதனை பார்க்கும் அயலவர்கள் “அந்த ஆமிக்காரன் நல்லவன்” என்பார்கள். இப்படித்தான் வடமராட்சியில் ஒரு இராணுவதளபதிக்கு பாராட்டுவிழா வைக்கப்படும் அளவுக்கு அவரது “திறமை” உயர்ந்திருந்தது.

இதன்மூலம் நடத்தப்பட்டுக்கொண்டிருந்த இனப்படுகொலைகளின் இறுகிய வடிவம் தந்திரமாக மறைக்கப்பட்டது. இப்படியான செயற்பாடுகளில் சிறிலங்கா புலனாய்வுத்துறை ஒரு படி மேலோங்கியிருந்தது என்றே சொல்லவேண்டும்.

அந்தவகையில் அரசஇயந்திரத்தின் நயவஞ்சக உத்திகளில் ஒன்றான இன்னொரு பக்கத்தை இப்புத்தகம் ஊடாக முன்வைக்கவிரும்புகின்றது இப்பத்தி.

பின்வரும் ஆதாரங்களை முன்வைத்து அதனை நிறுவ முயல்கின்றோம்.

  1. புத்தகத்தின் முகப்பும் அதன் அட்டையும்
  2. புத்தகத்தின் உள்ளடக்க தொடக்கமும் அதன் முடிவும்
  3. புத்தக வெளியீட்டின் பின்னணியும் அதன் அரசியலும்

இதனை சற்று விரிவாக பார்ப்போம்.

முகப்பு அட்டையில் தெறிக்கும் ‘ஒரு கூர்வாளின் நிழல்’ என்ற அதன் தலைப்பு சிங்கத்தின் கூர்வாளை குறிப்பதாக அண்மையில் ஒரு காட்டூன் வெளியாகியிருந்தது. உண்மையில் கூர்வாளின் நிழலில் என்பது சிங்கத்தின் நிழலில் இது எழுதப்பட்டது எனவே அதனை வாசகர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என தமிழினி சொல்கிறாரா?

அது போலவே புத்தகத்தின் பின்அட்டையில் “புலிகளின் வீர வரலாறு புலிகளின் துரோக வரலாறு இவையிரண்டுக்கும் இடையே தான் போராட்டத்தின் உண்மை வரலாறு இருக்க முடியும். ஆயிரக்கணக்கான கல்லறைகள் நிற்கும் இல்லங்களில் துயிலும் மாவீர்ர்கள் அனைவரையும் ‘துரோகிகள்’ என யாராலும் அடையாளப் படுத்திவிட முடியாது” இப்படி வருகின்றது வசனங்கள்.

புலிகளின் அணுகுமுறைகளில் சரிகள் பிழைகள் இருக்கமுடியும். ஆனால் வீரத்தையும் துரோகத்தையும் ஒப்பிடமுடியுமா? அதுபோன்று மாவீரர்கள் அனைவரையும் துரோகிகள் என சொல்லமுடியாது என சொல்வதும் எந்தவகையான ஒப்பீடு. இங்கு ஒரு இலக்கிய அறிவுமிக்க தமிழினியை காணமுடியுமா?

இந்த சொல்லாடல் ஒரு வகையான அன்னியப்பட்ட சொல்லாடல் இல்லையா?

இது முகப்புக்கும் முடிவுக்குமான ஒரு பார்வை.

இனி அடுத்த விடயத்திற்கு வருவோம்.

புத்தகத்தின் தொடக்கத்தில் “தலைவர்” என்றும் “இயக்கம்” என்றும் சொல்லப்படும் விடயங்கள் 69 வது பக்கத்திலிருந்து “புலிகளின் தலைவர்” என்றும் “புலிகளின் இயக்கம்” என்றும் மாறுபட்டு செல்வதை அவதானிக்கமுடியும்.

எமது போராட்டத்தை நியாயப்படுத்தும்போது தலைவர் என்றும் இயக்கம் என்றும் சொல்லப்படும் விடயங்கள் விமர்சிக்கும்போது புலிகளின் தலைவர் என்றும் புலிகளின் இயக்கம் என்றும் வருவது இயல்பானதா?

இடைச்செருகல்கள் செய்யபபட்டன என்பதற்கு வலுவான ஆதாரத்தை இது கொடுக்கின்றது.

இன்று தமிழீழ தாயகத்திற்கு வெளியே வாழ்பவர்களே தலைவர் என்றும் இயக்கம் என்றும் இயல்பாக சொல்லுகின்ற சொற்கள். அது மக்களுக்கும் இயக்கத்திற்கும் இடையே இருந்த நெருக்கத்தின் அடையாளம். அந்த அடையாளம் எப்படி தொலையும்?

அதனை தமிழினியால் தொலைக்கமுடியுமா? சாதாரண மக்களே இயக்கம் என்றும் தலைவர் என்றும் இயல்பாகச் சொல்லுகின்ற சொற்கள் அன்னியமானதேன்?

s1
s2
s5
 
s4
sn
koorvaal

 

 

 

 

 

 

 

 

 

 

 

தமிழினினியின் தொடக்ககால இராணுவப்பயிற்சிகளை பற்றி பக்கம் 65 – 66 களில் வருகின்றது. அது “எமது பயிற்சி ஆசிரியர்கள் மைதானங்களில் மிகக் கடுமையானவர்களாக நடந்துகொண்டபோதிலும் ஒவ்வொரு போராளிகளினது தனிப்பட்ட விடயங்களிலும் மிகுந்த கவனமும் அக்கறையும் கொண்டவர்களாக இருந்தார்கள்” என வருகின்றது.

ஆனால் அவரது நண்பியின் பயிற்சி பற்றி பக்கம் 70 இல் இப்படி வருகின்றது. “குறுகிய மனப்பாங்கும் வக்கிர குணங்களும் கொண்டவர்களின் கரங்களில் ஆயுதங்களும் அதிகாரமும் போய்ச் சேரும்போது எத்தகைய மோசமான அத்துமீறல்கள் நடைபெறும் என்பதற்கு அந்தப் பயிற்சி முகாமின் ஒரு சில ஆசிரியர்கள் உதாரணமாக இருந்தனர். அரசியல் போராளிகளாகப் பணியாற்றிய பின்னர் ஆயுதப் பயிற்சி பெறுவதற்காக வந்தார்கள் என்ற காரணத்திற்காக வயது வித்தியாசமின்றி அங்கே கொடூரமான முறையில் பயிலுநர்கள் நடத்தப்பட்டிருந்தனர். இரத்தக் காயங்கள் ஏற்படுமளவுக்கு அடியுதைகளும், மனதை நோகடிக்கும் குரூரமான வார்த்தைகளும், தனிப்பட்ட பழிவாங்கல்களும் என அந்த மகளிர் பயிற்சி முகாமில் அரங்கேறிய சம்பவங்கள் ஒட்டுமொத்தமான பெண் போராளிகளுக்கும் மிகத் தவறான உதாரணங்களாக இருந்தனர்” என வருகின்றது.

இதன்மூலம் சொல்லமுனைவது என்ன?

இதேபோன்று மாத்தையா கருணா விடயம் ஒப்பிடப்படுகின்றது.

இந்தியாவில் சிறையிலிருந்த கிருபன் என்பவர் இந்திய காவல்துறை வண்டி ஒன்றிலிருந்து அங்கிருந்த பொலிசார் இருவரை சுட்டுவிட்டு தப்பியோடுகின்றார்.

அவர் உண்மையிலேயே அவ்வாறு தப்பிவந்ததாகவே விடுதலைப்புலிகள் நம்புகின்றார்கள். தப்பிவந்த கிருபனை சாதனைவீரனாக கணித்து அவருக்கு தலைவருக்கான பாதுகாப்பு பணி கொடுக்கப்படுகின்றது. பொலிஸ்காரனை சுட்டுவிட்டு தப்பியோடும் திட்டத்தை வடிவமைத்து நிறைவேற்றியது இந்திய புலனாய்வுத்துறையான றோ என்பதை அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை.

ஆனால் இதுபற்றி இச்சதியில் பங்குபற்றிய அனைவருமே ஏனைய போராளிகளுக்கு முன் சாட்சி வழங்கினர். அதனைத்தொடர்ந்து சிறைவைக்கப்பட்டிருந்த மாத்தையாவை சிறையில் சந்தித்த தலைவருக்கு தனது நம்பிக்கைக்குரிய ஒரு தளபதி அத்தகைய துரோகத்தை ஏன் செய்தார் என நம்பமுடியவில்லை. அதனால் சிறைக்கு நேரடியாகச்சென்று “நீ ஏன் அப்படி செய்தாய்” என கவலையுடன் கேட்டார் என்றும் அதற்கு மௌனமாக மாத்தையா இருந்ததாக பதிவு உண்டு.

மாத்தையாவின் துரோகத்தை அவரது மனைவியே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வரலாறு காட்டிய வழி. அது தெளிவாகவே தமிழினிக்கும் தெரிந்திருந்தது.

அதேபோன்ற நிலையே கருணாவுக்கும் ஏற்பட்டது. இதனை விளங்காமல் தமிழினி இருந்திருப்பாரா?

அடுத்ததாக விடுதலைப்புலிகள் இயக்கத்தை பொறுத்தவரை ஒரு அடிப்படையான வரையறையை எப்போதும் பேணிவந்தது. அது அதன் தலைமைத்துவத்தால் நெறிப்படுத்தப்படவில்லை. மாறாக அடிமட்ட போராளிகளாலேயே வழிப்படுத்தப்பட்டிருந்தது. அதாவது ஒருவரது நிலைப்பாடுகள் மாறலாம் ஆனால் செயற்பாடுகள் மாறக்கூடாது என்பதே அது.

போராட்டப்பாதையில் ஏற்படும் கடினங்களை கண்டு விலகுவது சாதாரணமானது. அதற்கான நிலைப்பாட்டை யாரும் எடுக்கமுடியும். ஆனால் அவர்கள் இயக்கத்தின் தியாகத்தையோ அதன் கொள்கைகளையோ கேள்விக்குட்படுத்தும் விதத்தில் செயற்படமுடியாது.

விடுதலைப்புலிகளுக்கு துரோகம் செய்து கருணா வெளியேறியபோது கருணா ஒரு துரோகி அவரைப்பற்றி கதைக்கதேவையில்லை என தமிழினி சொன்ன பதிவுகள் இப்போதும் உண்டு. எனவே அதற்கு முரணாக அவர் தனது நிலைப்பாட்டை மாற்றியிருப்பாரா?

இப்புத்தகத்தில் ஏனைய போராளிகளின் பெயர்கள் அவர்களது பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்தப்படவில்லை என தமிழினி சொன்னதாக அவரது கணவர் சொல்கிறார்.

அப்படியானால் அப்படியான நெருக்கடி இருந்தது இருக்கின்றது என்பது ஏன் சொல்லப்படவில்லை? தமிழினிக்கு எந்தவித சித்திரவதைகளும் செய்யப்படவில்லை என்றும் சட்டரீதியாகவே அவருக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழினியை சந்தித்த முதலாவது இராணுவத்தினன் சொல்வதாக இப்புத்தகம் சொல்வது ஏன்?

இப்போது இந்தப்புத்தகம் ஏன் அவசரம் அவசரமாக வெளியிடப்படுகின்றது? இதன் பின்னாலுள்ள பின்னனிகள் என்ன? இப்போது சிங்களத்திலும் இப்புத்தகம் வெளிவரவுள்ளது.

ஒரு புத்தகத்தை வெளியீடு செய்வது எவ்வளவு கடினமானது. ஆனால் புத்தகத்தை பிரசுரித்து கிளிநொச்சியில் வெளியீடு செய்வதும் அதன் சிங்கள பதிப்பு இப்போதே தொடங்கிவிட்டதன் பின்னனி என்ன?

தமிழ்மக்களின் அடிப்படை பிரச்சனைகளை பற்றியோ அதன் விளைவாக போராட்டம் ஆரம்பித்தது என்றோ போராளிகளின் தியாகங்கள் பற்றியோ சொல்லாத ஒரு புத்தகத்தை சிங்களத்தில் வெளியிடப்போவது எதற்காக?

சிங்கள அரசுடன் கைகோர்த்து நின்றவர்களே இதன் வெளியீட்டுக்கும் பின்னணியில் நிற்கும் ‘நல்நோக்கம்’ என்ன?

உண்மையாகவே தமிழினி போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாடுகளையே எடுத்திருந்தார் என வைத்துக்கொள்வோம். அப்படியானால் அவரது மருத்துவதேவைக்காக கூட அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்காதது ஏன்?

அனைத்துக்கும் மூலம் ஒன்றுதான்.

30 ஆண்டுகள் தொடர்ந்த ஒரு ஆயுதப்போராட்டமானது சரிகளுக்கு நிகராக தவறுகளை கொண்டுள்ளது. உங்களை அடக்குமுறை செய்த சிங்கள அரச இயந்திரத்திற்கு நிகராக உங்கள் விடுதலைப்போராட்டமும் அழிவை தந்துள்ளது. எனவே இரண்டு பக்கஅழிவுகளை மறந்து மீண்டும் உங்களுக்கான தீர்வுகளை 1948 இலிருந்து தொடங்குவோம் என்பதே அது.

அதற்கான சிறுக சிறுக போடப்படும் திட்டங்களின் ஒரு பகுதியே இத்தகைய படைப்பிலக்கிய முயற்சிகளாகும்.

எமது வரலாற்றை புனைந்து தமிழ்த்தேசியத்தை அரிக்கும் ஒரு கூர்வாளே இது.

அரிச்சந்திரன்

http://thuliyam.com/?p=18200

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி அக்கா.. விட்ட ஒரே தவறு.. தன் இறப்புக்கு முதல் தான் இதனை வெளியிடாமல் போனது தான்.

எனி என்னென்ன நிகழுமோ.. இந்த அக்காவின் பெயரை வைச்சு. 

இன்று யாரையும் நம்ப முடியாத சூழலை தான் எம்மவர்கள் தோற்றுவித்துள்ளனர். இதுதான் இந்தச் சுயசரிதை வெளியீடு வெளிக்காட்டி நிற்கிறது. 

10341483_685091084964178_366609923265210

அக்கா சுயசரிதை எழுதியதாகச் சொல்லப்படும் சூழல் இப்படி இருக்க.. அது வெளியிடப்படும் சூழல் இதை விட மோசமாக இருக்குது. 

பாவம் ஒரு போராளியின் உன்னத எண்ணங்களும் உழைப்புகளும் தியாகங்களும் எதிரிகளால் மட்டுமல்ல.. எம்மவர்களால் கூட எப்படி எல்லாம் மலினப்படுத்தப்பட்ட முடியும் என்பதற்கு தமிழினி அக்காவே ஒரு உதாரணமாகவும் உள்ளார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Quote

ஆனால் தமிழினியின் குடும்பத்தாரோ இறுதிச்சடங்கிற்கு கூட பணமில்லாமல் பிச்சையெடுக்கும் நிலமை.

 

இவரது கணவன் பிரித்தானிய புலம் பெயர்ந்தபிரஜை அவரிடமும் பணம் இருக்கவில்லையா?இந்த கருத்தை எழுதியவர் தமிழினி சார்ந்த‌ சமுகத்தின் வெறுப்பில் இப்படியான கருத்தை முன்வைக்கிறாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகரமுதல்வனின் கதை ஒரு புறமிருக்க, தமிழினியின் சுயவரலாற்று நூலை எனது நண்பர் இப்போதுதான் வாங்கி தபாலில் அனுப்ப இருக்கிறார். மாதக் கடைசியினுள் அது குறித்து விரிவாக எழுதும் எண்ணம். ஈழத்தின் எல்லா இயக்கங்களும் குவேரா-கியாப்-சமேரா மொச்சேல் குறித்த நூற்களைக் கொண்டு வந்தன. பெண் போராளிகள் குறித்த நூற்களை அவர்கள் கொணரவில்லை. இயக்கப் பெண்கள் எனும் அளவில் ஜென்னி,புஷ்பராணி,தமிழினி போன்றோரின் எழுத்துக்கள் எம்முன் இருக்கின்றன. ஈழப் போராட்டத்தை மீளாய்வு செய்வதற்கு புலி ஆதரவு-புலி எதிர்ப்பு எனும் இரு துருவச் சட்டகம் போதாது என நான் உறுதியாக நம்புகிறேன். இதற்குத் தனிநபர் புகழச்சி-இகழ்ச்சி எனும் அணுகுமுறையும் போதாது.

இந்திய இடதுசாரி மரபு என்பது இந்தியப் பெருந்தேசிய இடதுசாரி மரபு. தேசிய இனப் பிரச்சினையை பாசிசம் என முடிவுகட்டும் சிந்தனை முறை அது, ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளும் பிஜேபியும் காங்கிரசும் ஒன்றுபடும் இடம் இது, புலிகள் சார்ந்த எந்த விமர்சனத்தையும் அது தமது அரசியலுக்குச் சார்பாகவே பயன்படுத்தும். இதுவே இந்திய-தமிழக ஊடக நிலையும்.

தமிழினியின் நூலை மதிப்பிடுவதற்கான சட்டகம் என்பது ரோஸா லக்சம்பர்க்-பேபல் முரண் முதல் நிகரகுவா பெண் போராளிகள்-சான்டினிஸ்ட்டா முரண் ஈராக, மரபான இந்திய-ஈழ-தமிழக சமூகத்தின் பெண்ணொதுக்கம் என்பதை உட்கொண்டதாக, பின்புரட்சிகர சமூகங்களில் பெண்களின் நிலைதொடர்பான எழுத்துக்களுடன் வைத்துப் பார்ப்பதாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

குற்றச்சாட்டுக்களும் கூச்சல்களும் இருதுருவ வசவுகளும் நிச்சயமாக இதற்கான சட்டகம் அல்ல என உறுதியாக நம்புகிறேன்..

 

ஜமுனா ராஜேந்திரனின் முகநூல் பதிவிலிருந்து கொப்பி பண்ணியது நன்றிகள் ஜமுனா ராஜேந்திரன்...

 

Link to comment
Share on other sites

தமிழினி அக்காவின் சுயசரிதை அவரது இறப்பின் பின் திரிவுபடுத்தப்பட்டு/சில விடயங்கள் உட்புகுத்தப்பட்டு தான் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது என 100% என்னால் அடித்துக்கூற முடியும்.

அதற்கான ஆதாரங்களில் ஒன்று அப்புத்தகத்தின் பின் அட்டையிலுள்ள வரிகள்.

தமிழினி அக்கா சிறையில் இருந்த போது தமிழகத்தை சேர்ந்த பிரேமா ரேவதி என்பவர் "நலமா தமிழினி" என கேட்டு தமிழினி அக்காவையும் புலிகளையும் விமர்சித்து கடிதம் எழுதியிருந்தார். அதை வாசிக்க : http://www.kalachuvadu.com/issue-116/page63.asp

அதில் வரும் ஒரு பந்தியே இப்புத்தகத்தின் பின் அட்டையில் சேர்க்கப்பட்டு அதன் மேலே தமிழினி அக்காவின் படத்தையும் கீழே தமிழினி எனவும் போட்டு அதை தமிழினி அக்காவின் வரிகள் போல் காட்டியுள்ளார்கள். பிரேமா ரேவதி என்பவரின் வரிகள் இங்கே தமிழினி அக்காவின் வரிகளாக திரிவுபடுத்தி காட்டப்பட்டது ஏன் என தமிழினி அக்காவின் கணவர் ஜெயன் தேவா (ஜெயக்குமரன்) அவர்கள் விளக்குவீர்களா?

புத்தகத்தின் அட்டையிலேயே திரிவுபடுத்தல் இடம்பெற்றுள்ள போது உள்ளேயும் பல திரிவுபடுத்தல்கள், திட்டமிட்ட உட்புகுத்தல்கள் இடம்பெற்றிருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Thulasi KT

Link to comment
Share on other sites

நான் தடக்கி விழுந்தால் புத்தக விமர்சனம் எழுதுகிற ஆள். ஆனால் தமிழினியின் புத்தகத்தை ஆளாளுக்கு கிழித்து்த்தொங்கப்போட்டுவிட்டார்கள். புத்தகத்தின் விமர்சனம் வாசிப்பைத்தாண்டி வேறெங்கோ போய்விட்டது. புத்தகத்தின் ஆதார செய்திகளும் உணர்வுகளும் இந்த சர்ச்சைகளால் பேசப்படாமலேயே போய்விட்டன. இனிப்பேசினாலும் அவனா இவனா அரசியல்தான் நடக்கும். அதனால் முழுமையான விமர்சனத்தைத் தவிர்க்கிறேன். எழுத்தாளர்களின் நிகழ்ச்சி ஒன்றில் என்னிடம் கூர்வாளைப்பற்றி பேசச் சொன்னார்கள். மறுத்துவிட்டேன். "அந்தப் புத்தகத்தைப் பற்றி ஆராய்ந்து பேசக்கூடிய தகுதி எனக்கு இருப்பதாகப் படவில்லை. நன்றாகவும் இருக்காது" என்று சொல்லி வேண்டாமென்றுவிட்டேன்.
ஆனாலும் தூறல் நின்றபாடில்லை.
"அது சரி தம்பி, கூர்வாள் 
நிஜமா? நிழலா? 
வாசிக்கலாமா? வாசிக்க கூடாதா?"
-- ஜூட் பிரகாஷ்
Once for all!
 
கூர் வாள். வாசிக்கக்கூடாத புத்தகம் என்றில்லை. வாசிக்கலாம். வாசிக்கவேண்டும்.
நிஜமா நிழலா என்ற ஆய்வுக்குள் நான் நுழைய முடியவில்லை. தன் வரலாற்று நூல்கள் அத்தனைக்கும் இந்தப்பிரச்சனை உள்ளது. உண்மை சொல்லப்படும்போதே பொய்யாகிவிடுகிறது. இது தெரிந்தவர்கள் இதில் இத்தனை குத்தி முறியமாட்டார்கள்.
 
எனக்கு இறுதிச்சில பக்கங்கள் இடைச்செருகல் என்பதில் சந்தேகமில்லை. அது புத்தகத்தின் காப்புரிமையாளரான ஜெயன் தேவாவை புனிதராக்குவதற்காக நிகழ்த்தப்பட்ட ஒன்று என்பது என் ஊகம். இதற்குமேல் அதுபற்றி எழுதப்போவதில்லை. காரணம் அவை புத்தகத்தின் ஆதார செய்தி அல்ல.
ஆதார செய்தி தமிழினி என்கின்ற ஒரு விடுதலைப்போராளி போருக்குப்பின்னரும் சிறை அனுபவத்துக்குப் பின்னரும் எப்படி மாறிப்போனார் என்பதுதான். அந்த உணர்ச்சிகள் பொய்யானவை என்றால் அதை இடைச்செருகியவர்கள் எஸ்.ரா, லாகிரி போன்ற பெரும் எழுத்தாளர்களாகவே இருக்கமுடியும். வெறும் இலக்கியத்திருடர்களால் அவ்வகை உணர்ச்சிகளை வெளிப்படுத்தமுடியாது.எனவே தமிழினி காட்டுகின்ற உணர்ச்சிகளை வெறும் பொய் என்று சொல்லிக்கடந்துபோகும் நிலையில் நான் இல்லை. ஆனால் உண்மையில் இப்புத்தகத்தை எழுதியவரை குமுதினி என்று மாற்றிவிட்டு புனைவு என்று நினைத்துக்கொண்டுகூட வாசிக்கலாம். புத்தகத்தின் செய்திதான் என்னைப்பொறுத்தவரையில் முக்கியம்.
 
இன்னொன்று இது தமிழினியே எழுதியிருந்தாலும் வரலாறு என்று சொல்லமுடியாது. தமிழினி திரணகம கிடையாது. ஆய்வாளரும் கிடையாது. அவர் கடைசி ஓரிரு வருடங்களில் இருந்த மனநிலையுடனேயே தன்னுடைய இருபது வருட போர் வாழ்க்கையை எழுதியிருக்கிறார். சுயவரலாறு என்பது அந்தந்தக் காலங்களில் அவருக்கு என்ன மனநிலை இருந்ததோ அதையொற்றியே எழுதப்படவேண்டும். தொண்ணூறுகளில் அவர் கொண்டாட்ட மனநிலையில் இருந்தால் அப்படியே சொல்லவேண்டும். தவிர பல சம்பவங்களை கடந்தும் சொல்லாமலும் அவசரமாக எழுதப்பட்ட நூல் இது (அவருடைய நோய் அதற்குக் காரணமானது). பல விவரணங்கள் தீர ஆராயாமல் அமெச்சூர்த்தனமாக எழுதப்பட்டவை. மாத்தையாவின் சதித்திட்டம் குருதிப்புனல் கிளைமாக்ஸில் இருந்து அப்படியே உருவப்பட்டு சித்திரிக்கப்படுகிறது. உண்மையில் இறுதிப்போரில் நிகழ்ந்தது என்ன? தடுப்பு முகாம்களில் நிகழ்ந்தது என்ன? என்பதை அறிய வேண்டுமென்றால் பிரான்ஸிஸ் ஹரிசனுடைய "Still Counting The Dead" வாசிக்கவேண்டும். மனுஷி ஒரு பத்திரிகையாளருக்கேயுரிய நேர்மையோடு பல்வேறு மனிதர்களை நேர்காணல்கண்டு எழுதியிருக்கு. நாங்கள் கவனிக்கமாட்டோம். எங்களுக்கு இடப்பட்டிருக்கும் சாபம் இது.
என்னளவில் இந்த நூல் அவருடைய சிறை வாழ்வின் அவலங்களையும் இன்னும் சொல்லப்போனால் வாழ்க்கை எப்படியான உயரங்களையும் கீழ்நிலைகளையும் அவருக்குக் கொடுத்தது என்பதையும் அதற்கும் மேலே இது எல்லாமே எவ்வளவு அபத்தம் என்பதைத்தான் உணர்த்துகிறது.
இந்தப்புத்தகத்தைப்பற்றிய சர்ச்சைகள் எல்லாம் ஒழிந்து ஒரு பத்துவருடங்களில் இந்தப்புத்தகத்தை வேறொரு தலைமுறை எப்படி அணுகுகிறது என்பதை வைத்தே இதன் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.
பிறிதொரு நிலைத்தகவலில் “Earn This” என்று ஒரு குறிப்பு எழுதியுள்ளேன். சும்மா தமிழினியை வைத்து ஆளாளுக்கு குடுமிப்பிடி பிடிக்காமல் தாம் வாழும் வாழ்க்கையை “Earn” பண்ணுவதே புத்தகத்தை நேர்மையாக உள்வாங்கியவர் செய்யக்கூடியது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
நன்றி!
நன்றி
 
Jeyakumaran Chandrasegaram
முகநூலிலிருந்து
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றி,,

சிவகாமி ஞாபகார்த்த நிறுவகம் வெளியிட்டுள்ள தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூலின் இலங்கைப்பதிப்பின் பின் அட்டையில் பின்வருமாறுள்ளது"

"உயிருடனிருக்கும் ஒரு போராளி மக்களோடு சேர்ந்து வெளியேற வேண்டும் அல்லது தன்னத்தானே அழித்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தவிர வேறு வழியேதும் இருக்கவில்லை. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான போராளிகளும் மக்களோடு இணைந்தே வெளியேறத்தயாராகியிருந்தார்கள். ஆபத்துக்காலத்தில் கோழி தன் சிறகுகளுக்குள் குஞ்சுகளை இழுத்துக்கொள்வதுபோல் தமிழ் மக்கள் தம்முடனே போராளிகளையும் பாசத்துடன் அரவணைத்து உள்வாங்கிக்கொண்டார்கள்.  யாரெண்ரே தெரியாமல் காயமடைந்து அனாதரவாகக் கிடந்த பல போராளிகளையும் மக்களில் சிலர் தூக்கிச் சுமந்துகொண்டு வெளியேறத்தயாரானார்கள்."

இதற்குக் கீழே தமிழினி பற்றிய சிறு குறிப்பொன்றுள்ளது. ஆனால் தமிழகத்தில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட மேற்படி நூலின் பின் அட்டையில் வேறு யாரோ எழுதியதைத் தமிழினி எழுதியுள்ளதாகக் குறிப்பி்டப்பட்டுள்ளதை முகநூலில் பலர் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அது கண்டிக்கத்தக்கது. காலச்சுவடு பதிப்பகத்தார் இதற்கான பதிலை நிச்சயம் கூறவே வேண்டும். 

தமிழினியில் சுயசரிதையில் நான் வாசித்த வரையில் ஈழத்தமிழர் போராட்டத்தைக்கொச்சைப்படுத்தியதாக எதனையும் நான் காணவில்லை. அவர் தன் அனுபவங்களை , போராட்ட அனுபவங்களை, விடுதலைப்புலிகளின் பிரமிக்கத்தக்க போர் வெற்றிகளை எல்லாம் விபரிக்கின்றார். இறுதியில் இவ்விதமான வெற்றிகளுடன் கூடிய போராட்டமானது , முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டதுடன் முடிவடைந்தது அவருக்கு அதிர்ச்சியைத்தருகிறது. யுத்தத்தின் பின்னரான, மக்களின் முன்னாள் போராளிகள் மீதான புறக்கணிப்பு குறிப்பாகப் பெண் போராளிகள் மீதான புறக்கணிப்பு இதுவரை காலமும் யாருக்காகப் போராடினேன் என்ற கேள்வியை அவரிடத்தில் எழுப்புகிறது. அதன் பின்னரான அவரது அனுபவம் அவரை இதுவரை காலமும் நடந்த போராட்டம் பற்றிச் சிந்திக்க வைக்கிறது. அச்சிந்தனையை அவர் தன் சுயசரிதையில் வெளிப்படுத்துகிறார்.

அவ்விதம் வெளிப்படுத்தும்போது தலைமையின் பலமான அம்சங்களை ஆரம்பத்தில் மகிழ்ச்சியுடன் விபரித்த அவர் , முழு அமைப்புமே தலைமையை மையமாக வைத்துக்கட்டியெழுப்பப்பட்டிருந்ததால், தலைமையுடன் முடிவுடன் ஆயுதங்கள் மெளனிக்கப்படுவதுடன், ஆயிரக்கணக்கான போராளிகளும் கை விடப்பட்ட நிலையும் உருவானபோது அந்நிலை பற்றிய கேள்விகளை எழுப்புகின்றார். 

என்னைப்பொறுத்தவரையில் இவ்விதமான கேள்விகள், சுய பரிசோதனைகள் ஆரோக்கியமானவை. ஏன் இவ்வளவு வெற்றிகளுடன் விளங்கிய அமைப்பானது, முற்று முழுதாக இயங்க முடியாதவாறு, ஆயுதங்கள் மெளனிக்கப்பட வேண்டிய நிலையுடன் முடிவுக்கு வரவேண்டி வந்தது என்ற கேள்விகளுக்கான நியாயமான சுய ஆய்வே தமிழினியின் சுயசரிதை.

இன்று ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், அவரது அமைப்பினரால் தலைமையின் முடிவினை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம்: தலைமையை மையமாக வைத்துக் கட்டமைக்கப்பட்ட அவரது அமைப்பின் நிலைதான். தலைமையை மட்டும் மையமாக வைத்துக் கட்டப்படாமல் அந்த அமைப்பு விளங்கியிருக்குமானால், இப்பொழுதும் அந்த அமைப்பு அடுத்தக் கட்டத் தலைவர்களுடன் இலங்கையில் இயங்கிக்கொண்டிருக்கும். 

இந்த நிலையில் தமிழினியின் சுயசரிதை ஆரோக்கியமானது. ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்ட வரலாற்றில், முக்கிய அமைப்பாக இறுதி வரை விளங்கிய அமைப்பொன்று இறுதியில் ஏன் நந்திக்கடலில் முடிந்து போனது? ஏன் அவ்வமைப்பின் ஆயிரக்கணக்கான போராளிகள் இவ்விதம் அனாதரவாகக் கைவிடப்பட்டு சரணடையும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்? ஏன் மக்களுக்காகப் போராடிய போராளிகளை குறிப்பாக பெண் போராளிகளை சமூகம் யுத்தத்துக்குப் பின்னர் புறக்கணித்தது? இவ்விதமான கேள்விகளுக்கான சுய தேடலே தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்'.

இதிலிருந்து பாடம் படிப்பதற்குப் பதில் இந்த நூல் தலைமையினைக் கேள்விக்குள்ளாக்குக்கின்றது, தளபதிகளைக் கேள்விக்குள்ளாக்குகின்றது என்றெல்லாம் கண்டனம் தெரிவிப்பது ஆரோக்கியமானதல்ல. உண்மையைக் காண விரும்பாத தீக்கோழிகள் தம் தலைகளை மண்ணுக்குள் புதைப்பதைப் போன்றது.

இந்ந நூல் போராட்டத்தை எந்த வகையிலும் கொச்சைப்படுத்தவில்லை. உலகின் பல பாகங்களிலும் நடைபெற்ற மார்க்சிய புரட்சிகளையெல்லாம் கொச்சைப்படுத்துவதாகக்கூட ஒருவர் பதிவிட்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாகவிருந்தது. இந்த நூலில் அவ்விதம் எதுவுமே இல்லை. மேலும் வியட்நாம் மக்களின் விடுதலைப்போராட்டம் வெற்றியில் முடிந்ததொன்று. ஆனால் ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டதொன்று. மாறாக ஈழத்தமிழர்களின் , தமிழினி சார்ந்த அமைப்பு வெற்றிபெற்றிருக்குமாயின் இது போன்ற நூல்களும் எழப்போவதில்லை; இது போன்ற கண்டனங்களும் எழப்போவதில்லை. ஆனால் அவ்விதம் நடைபெறாததால், போராட்டத்துக்காகத் தன் முழு வாழ்வினையே அளித்த ஒருவர், அதுவும் ஒரு பெண், தன்னிடத்தில் எழுந்த கேள்விகளை எழுப்பியுள்ளார்?

அவரின் கேள்விகளிலுள்ள நியாயங்கள் உணர்ந்து , அவற்றுக்கான பதில்களைக் கண்டுபிடிப்பதற்குப் பதில், தொடர்ந்தும் மறைந்து போன ஒருவர் இன்னும் வருவார் , எல்லாருடைய விடிவினையும் பெற்றுத்தருவார் என்று  கற்பனையில் மிதப்பதற்குப் பதில், நடந்தவற்றிலிருந்து பாடங்களைப்படித்து , சிந்திப்பதே , தமிழர்தம் உரிமைகளுக்காய்க் குரல் கொடுப்பதே ஆரோக்கியமானது.

 

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=3239:-162-&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54

Link to comment
Share on other sites

தமிழினியின் கூர் வாளின் பின்னணியில்… : வியாசன்

 

thamilini

வன்னி இனப்படுகொலை நடத்தி முடிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் வெறுமையோடு கலைந்துவிட்டன. போராட்டமும் சுய நிர்ணைய உரிமைக்கான நியாயமும் சர்வதேச மயப்படுத்தப்படுகிறது என்ற தலையங்கத்தில் அவற்றை அழிப்பதற்கான அத்தனை வழிமுறைகளும் கையாளப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபை உட்பட இராசதந்திரிகள் என உலாவரும் அதிகாரிகளின் பார்வைக்குள் மட்டுமே மக்களின் உயிர்களும் தியாங்களும் முடக்கப்பட்டுவிட்டது. வரலாற்றின் வரைபடங்களில் கூட இடம்பெற்றிராத தீவுகளின் போராட்டங்கள் கூட உலகின் ஜனநாயகவாதிகளை மையப்படுத்தி சர்வதேச மயப்பட்டிருக்க, ஈழப்போராட்டம் மட்டும் அதிகாரிகளின் பிடிக்குள் முடக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டது.

தமிழ்ப் பேசும் மக்களின் தன்னுரிமையைக்கான நியாயத்தை சர்வதேச மயப்படுத்துகிறோம் என அதனைக் கையகப்படுத்தி அழித்த பெருமை புலம்பெயர் அமைப்புக்களையே சாரும்.

தவிர, போராட்டம் தொட ர்பான காத்திரமான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்குக் கூட இக் கால இடைவெளி பயன்படுத்தப்படவில்லை. உலகின் அத்தனை போராட்டங்களின் தோல்விகளும் வெற்றிகளும் உலக மக்களுக்கும் புதிய சந்ததிக்கும் நிறையவே கற்பித்திருக்கின்றன. ஈழப் போராட்டத்தின் அழிவு இரண்டு ஆபத்தான முகாம்களுக்குள் அரசியலை முடக்குவதில் முடிவடைந்திருக்கிறது.

புலி ஆதரவு இல்லையெனின் புலி எதிர்ப்பு என்ற இரண்டு வியாபாரக் கும்பல்களின் பிடிக்குள் அரசியல் முடக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு எதிரெதிர்த் துருவங்களுக்கு அப்பால் சமூகத்தின் இயக்கம் தடுத்துவைக்கப்பட்டு தண்டிக்கப்படுகின்றது.

இந்த இரண்டு துருவங்களைக் கடந்து தமிழ்ப் பேசும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைக்கான போராட்டத்தின் நியாயம் வெளியே வராத வரைக்கும் அது மேலும் அழிவுகளுக்கே உள்ளாக்கப்படும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கதின் பெண் தலைவர்களின் ஒருவரான தமிழினியின் கூர் வாள் என்ற நூல் அவரின் அரசியல் வாழ்வு என்பதை புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்த பலரும் ஏற்றுக்கொள்ள, நூல் தொடர்பான விமர்சனங்களும் இந்த இரண்டு முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளது.

புலிகளின் ஆரம்பகாலங்கள் தொடர்பான விமர்சனம் சுய விமர்சனம் என்ற அடிப்படையிலான நூலான ஐயரின் ‘ஈழபோராட்டத்தில் எனது பதிவுகள்’ வெளியான நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழினியின் ‘கூர் வாளின் நிழலில்’ நூல் வெளியாகியிருக்கிறது.

ஈழப் போராட்டம் தொடர்பான இன்றைய ‘நாடுகடந்த’ அரசியலை நாடி பிடித்துப் பார்ப்பதற்கு தமிழினியின் நூலை விட அது தொடர்பான விமர்சனங்களே போதுமானவை.

நூலின் பல்வேறு கூறுகள் புலிகள் இயக்கத்தை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதால் அதனை முதலில் கையகப்படுத்திக்கொண்டவர்கள் புலியெதிர்பாளர்களே. நூல் வெளியிடு, அது தொடர்பான விமர்சனங்கள் போன்ற அனைத்து சம்பிரதாயங்களும் புலியெதிர்ப்பாளர்களாலேயே முன்வைக்கப்படுகின்றன. இவர்களி ல் பெரும்பாலனவர்கள், இலங்கை அரச சார்புக் குழுக்களையும், ஏகாதிபத்திய நிதி வழத்தில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்களையும், இது போன்ற அதிகாரம் சார்ந்த நிறுவனங்களையும் மையமாகக்கொண்டு செயற்படுபவர்கள்.

இலங்கை அரசின் பெருந்தேசிய ஒடுக்குமுறையிலிருந்து அதன் இனப்படுகொலை வரைக்கும் இந்த நபர்களின் பார்வைக்கு ஒடுக்குமுறை என்ற பக்கத்திலிருந்து எட்டுவதில்லை. அதிகாரவர்க்கத்தின் பிரதி விம்பங்களான இக் குழுக்களைப் பொறுத்தவரை புலி எதிர்ப்பு என்பது அரசைச் சார்ந்து செயற்படுவதற்கான தந்திரோபாயம்.
புலிகள் இயக்கத்தின் மீதான விமர்சனம் என்பது எதிர்காலத்தைச் செழுமைப்படுத்துவதற்கானதா அன்றி அதனை அழிப்பதற்கா என்ற வினவப்பட வேண்டும். ‘புலி எதிர்ப்புக்’ கும்பல்களைப் பொறுத்தவரை போராட்டத்தையும், உரிமைக்கான குரலையும் புலிகளின் தவறுகளை முன்வைத்து அழிப்பதற்கான ஆயுதமாகவே விமர்சனம் பயன்படுகிறது. அதிகாரவர்க்கத்தின் தரப்பிலிருந்து முன்வைக்கப்படும் விமர்சனமாகவே புலியெதிர்ப்புக் கும்பல்களின் கூச்சல்கள் கணிக்கப்பட வேண்டும்.

இந்தச் சூழலில் புலிகள் இயக்கத்தின் தவறுகளை முன்வைத்து மொத்தப் போராட்டத்தையும் அழிக்க முனையும் புலி எதிர்ப்புக் கும்பல்களுக்கு தமிழினியின் நூல் பொன்முட்டை போடுகின்ற வாத்து! எந்தக் கூச்சமுமின்றி முன்னை நாள் பெண் போராளி ஒருவரின் வாக்குமூலத்தை அரச பாசிஸ்டுக்களின் சார்பில் கையகப்படுத்திக்கொண்ட இக் குழுக்கள் தமக்கு வழங்கப்படும் ஊதியத்திற்காக உழைக்கும் கைக்கூலிகள்.

இதன் மறுபக்கத்தில் புலி ஆதரவுக் குழுக்கள் தமது வியாபார இருப்பிற்காகப் புலிகளைப் புனிதப்படுத்தி வழிபட வேண்டியை கட்டாயத்திலுள்ளனர். தவறுகளை நியாயப்படுத்துவதன் ஊடாக புலி எதிர்ப்புக் குழுக்களை வளர்க்கும் இவர்கள் போராட்டத்தின் மீதும் மக்கள் மீதும் எந்த நம்பிகையும் அற்றவர்கள்.மக்களின் கண்ணீரையும் அவலத்தையும் தமது சொந்த வயிற்றுப்பிழைப்பிற்காகப் பயன்படுத்திக்கொள்பவர்கள்.

புலிகள் இயக்கம் மட்டமன்றி கடந்த காலப் போராட்டம் மற்றும் வரலாறு தொடர்பான மதிப்பீடு ஒன்றை முன்வைப்பதை தமது பிழைப்பிற்கு ஆபத்தானது என்பதை அறிந்துவைத்திருப்பவர்கள். இக் கும்பல்களின் சதியை அறிந்துகொள்ளாத அப்பாவிப் போராளிகள் உட்படப் பலர் இவர்களின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர்.

கடந்த காலத்தை விமர்சிப்பது என்பதே எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தும் என்ற அடிப்படையை துரோகத்தனம் என்று கூறும் இக்குழுக்களைப் பொறுத்தவரை புலி அடையாளம் என்பது வெற்றிகரமாக நடைபெறும் வியாபாரத்திற்கான சின்னம். இந்த அடையாளம் தென்னிந்தியாவில் வாக்குப் பொறுக்கும் சீமான் வை.கோ போன்ற பிழைப்புவாதிகளிலிருந்து மக்களின் பணத்தைச் சூறையாடிய புலம்பெயர் குழுக்கள் வரைக்கும் பயன்பட்டுப் போகிறது.

தமிழினியின் நூல் தொடர்பாக அவதூறுகளை கட்டவிழ்த்துவிடும் இக் கும்பல்கள் மக்களுக்கு உண்மையை அறிந்துகொள்ளும் உண்மையை மறுத்துவருகின்றன. கடந்த காலத்தின் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு புதிய மக்கள் சார்ந்த அரசியலை முன்வைப்பதற்குப் பதிலாக அவற்றை நியாயப்படுத்தி அழித்துவருகின்றன.

தமிழினியின் நூல் வெளியானதும் பதைபதைத்துப்போன இக் குழுக்கள் அவர்மீதானதும் நூல் மீதானதுமான அவதூறுகளை கட்டவிழ்த்துவிட்டன. தமிழ் நாட்டிலிருந்த ‘சினிமப்பாணி’ கதைகளைத் தமிழினியைக் கொச்சப்படுத்தும் வகையில் புனைய ஆரம்பித்துள்ளனர். புலம்பெயர் மற்றும் தமிழ் நாட்டு புலி ஆதரவுப் பிழைப்புவாதிகள் முன்னைநாள் போராளியையும் அவரின் படைப்பையும் கொச்சைப்படுத்தி தமது பிழைப்பை உறுதிப்படுத்திக்கொள்கின்றனர்.

இன்றைய புலம்பெயர் மற்றும் தமிழ் நாட்டை மையமாகக் கொண்டிருக்கும் ஈழ ஆதரவு அரசியலின் இரண்டு பிரதான முகாம்களின் மோதல் தமிழினீயின் கூர் வாளை மட்டுமன்றி சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் நியாயத்தையும் அழித்துத் துவம்சம் செய்கின்றது.

ஆக, பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் சார்ந்த அரசியல் என்பது இந்த இரண்டு முகாம்களின் அழிவிலிருந்தே தோன்ற முடியும். இவர்களின் வஞ்சக அரசியலை நீக்கம் செய்வதலிருந்தே புதிய அரசியல் உதித்தெழ முடியும். அடிப்படை அரசியல் நேர்மையற்ற, மக்கள் விரோதக் குழுக்களான இந்த எதிரெதிர் முகாம்கள் ஒன்றையொன்று ஊட்டி வளர்க்கின்றன. தமிழினியின் நூல் மக்கள் சார்ந்த அரசியல் தளத்தில் விமர்சிக்கப்பட வேண்டும். புலியெதிர்ப்பு மற்றும் புலியாதரவுக் கும்பல்களின் பிடியிலிருந்து கூர் வாள் மட்டுமன்றி, தமிழ்ப் பேசும் அரசியலும் விடுவிக்கப்பட வேண்டும்.

 

http://inioru.com/background-critics-of-tamilinis-koor-vaal/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அரசியல்த் துறைப் பொறுப்பாளர் தமிழினியின் “ஒரு கூர் வாளின் நிழலில்” என்ற நூல் பற்றிய ஒரு பார்வை – நூல் அறிமுக விழாவிலிருந்து

Posted by: verni in கட்டுரைகள் 7 days ago  573 Views

 

12.03.2016 அன்று லண்டனில் தமிழினி எழுதிய “ஒரு கூர் வாளின் நிழலில் ” என்ற நூலின் அறிமுக விழா இடம்பெற்றது.  இந்த விழாவில் பங்கு கொண்ட  “வேணி”  இப் புத்தகம் தொடர்பாக தன்னுடைய பார்வையை அங்கு பதிவு செய்திருந்தார்.அந்த உரை இங்கே பதிவு செய்யப்படுகின்றது 

அனைவருக்கும் வணக்கம். தமிழினி அக்காவின் இந்த “ஒரு கூர்வாளின் நிழலில்” என்ற இந்த நூலில் சொல்லப்பட்டவற்றைப் பார்க்கும் முன் அவரின் வாழ்க்கைத் தொகுப்பு ஒன்றைச் சுருக்கமாகத் தருகின்றேன்.

சுப்பிரமணியம் சிவகாமி என்ற இயற்பெயரை உடைய தமிழினி அக்கா April 23rd 1972 அன்று பரந்தனில் பிறந்தார். இவர் பரந்தன்  மத்திய மகா வித்தியாலத்தில் உயர்தரம் பயின்று கொண்டிருந்த காலப்பகுதியில் விடுதலையின் தேவை உணர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைகின்றார்.

1993 இல் இவர் தனது முதல் கள போரில் அதாவது யாழ் தேவி இராணுவ நடவடிக்கையின் முறியடிப்புச் சமரில் பங்கேற்கின்றார். பின்னர் விடுதலைப் புலிகளின் வரலாற்றில் T- 55 ரக டாங்கி முதன் முதலில் கைப்பற்றப்பட்ட தவளை பாச்சல் நடவடிக்கையில் அதாவது தமிழீழ விடுதலைப் போரின் முதலாவது மரபுவழி வலிந்த போரான தவளைப் பாச்சல் நடவடிக்கையில் களமாடினார். பின்னர் பெண்புலிகளால் நிர்வகிக்கப்பட கயிறு தொழிற்சாலை மற்றும் பண்ணைகளிற்கு பொறுப்பாளராகின்றார்.

“சுதந்திரப் பறவைகள்” என்ற பெண்போராளிகளால் வெளியிடப்பட்டு வந்த இதழின் ஆசிரியர் குழாமிலும் முக்கிய இடம் வகித்தர். சுதந்திரப் பறவைகள் புத்தகத்துடன் வீடுவீடாக சென்று வீட்டிலுள்ள பெண்களுடன் பேசி, அவர்களிற்கு அரசியற் தெளிவூட்டி போராட்டத்தை மக்கள் மயப்படுத்தும் மிக முக்கிய பங்காற்றி வந்தார். பெண்ணியம் குறித்த புரிதல்களைப் பெற்று நேர்மையான பெண்ணியவாதியாகவும் உருவாகினார் தமிழினி அக்கா.

1995-96 இல் நடந்த “ரிவிரச” இராணுவ நடவடிக்கையின் பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிக்கு பின்வாங்கிய பின்னர் 1997 இல் நடந்த ஜெயசிக்குறு எதிர்ச் சமரில், மாங்குளம் களமுனையில் உணவுமின்றி உறக்கமுமின்றி களமாடி பாரிய சண்டை அனுபவத்தை தமிழினி அக்கா பெற்றார்.

June 2000 இல் தமிழீழ மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளராக பொறுப்பேற்றார். எனினும் 2001 இல் சிங்களப் பேரினவாதப் படைகள் ஆணையிறவை மீட்க தமது முழு வளத்தையும் பயன்படுத்தி தொடுத்த “அக்கினிகீலா” என்ற உக்கிரமான இராணுவ நடவடிக்கையில் அதாவது மிகவும் உக்கிரமான இந்த முன்னகர்வைத் தடுத்து நிறுத்தும் போரில் தமிழினி அக்கா களமாடினார்.

2002 பெப்ரவரி மாதம் சமாதான உடன்படிக்கை கைச்சாத்திட்டதும் கிளிநொச்சியில் தமிழீழ மகளிர் அரசியற்துறை செயலகத்தை நிறுவினார் தமிழினி அக்கா. ஒரு “double cab” வாகனத்தில் மெய்ப்பாதுகாவலருடன் வரும் அவாவின் அந்த மிடுக்கான இராணுவத் தோற்றத்தை உற்று நோக்கிய உலகப் பெண்ணியவாதிகள் எல்லாம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெண்ணியத்திற்கான பங்களிப்பை பார்த்து மெய்சிலிர்த்து நின்றார்கள். இக்காலப்பகுதியில் தமிழினி அக்கா தலைமையில் பெண் போராளிகள் கொழும்பு சென்று அங்கு நடைபெற்ற பெண்கள் உரிமைகள் தொடர்பான கலந்துரையாடல்களிலும் கருத்திட்ட கூட்டங்களிலும் பங்குபெற்றனர்.

2003, 2005 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பியா வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அணியில் இடம் பெற்ற தமிழினி அக்கா, அந்தக்காலப்பகுதியில் புலம் பெயர் மக்களுடன் பழகி அவர்களுடன் நல்ல உறவையும் கொண்டிருந்தார்.

April 4 -5th 2009 இல் ஆனந்தபுரத்தில் நடந்த பெட்டி வடிவிலான முற்றுகையில் சிக்கி சிறு விழுப்புண்ணடந்து தமிழினி அக்கா வெளியேறினார்.

மே15 மக்களோடு மக்களாக தனது குடும்பத்துடன் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் நுழைந்த தமிழினி அக்கா 27 ஆம் திகதி இராணுவத்தால் இனங்காணப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் இவர் குற்றப் புலனாய்வுத்துறை, இராணுவப் புலனாய்வுத்துறை மற்றும் தேசிய புலனாய்வுத்துறை போன்ற சிறீலங்காவின் புலனாய்வு அமைப்புக்களால் கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு,  June 17th 2009 அன்று கொழும்பு நீதிமன்றத்தின் முன்னிறுத்தப்பட்டார். தமிழினியின் ஆரம்ப வழக்குரைஞராக இருந்த தமிழ்க் காங்கிரசின் தலைவர் விஞாயகமூர்த்தியால் கைவிடப்பட்ட பின்பு சிங்கள வக்கீலான மஞ்சுல பத்திராஜாவால் (Manjula Pathirajah) மேல்கொண்டு தமிழினியின் வழக்கு எடுத்து செல்லப்பட்டது. 26th 2012 அன்று கொழும்பு நீதிமன்ற நீதவான் இவரை பூந்தோட்டம் புணர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்ப உத்தரவிட்டார். அதன் பின் ஒரு வருட கால புணர்வாழ்வின் பின்னர் June 26th 2013 அன்று விடுதலை செய்யப்பட்டார்.

“ஒரு கூர் வாளின் நிழலில்” என்ற இந்த நூலிற்கான முன்னுரியை தமிழினி அக்காவின் கணவர் எழுதியுள்ளார். என்னுரையில் தமிழினி அக்கா இந்த நூல் எலுதப்பட்டதற்கான காரணங்களைக் கூறியுள்ளார். அதாவது இந்த நூல் ஏன் விடுதலைப் போராட்டம் தோற்றது என்ற கேள்விக்கு விடை தரும் என்று சொல்லியுள்ளார். இது 10 அத்தியாயங்களைக் கொண்டது.

“பாதை திறந்தது” என்ற அத்தியாயத்திலிருந்து ஆரம்பிகின்றது. இதில் யாழ்ப்பான இடம் பெயர்வின் பின் பாதை திறந்தது வரையாக வன்னியில் இடம்பெற்ற மாறங்களை, சண்டைகளை, நோய்களை பற்றி கூறியுள்ளார்.

அத்தியாயம் 2 “போருக்குள் பிறந்தேன்” இல் தன்னுடைய ஆரம்ப வாழ்க்கை எத்தகைய போர்ச் சூழலில் அமைந்தது என்றும், எப்போது போராட்டத்தில் இணைந்தார் என்றும் ஏன் இணைந்தார் என்றும் கூறியுள்ளார்.

அத்தியாயம் 3 “ஆயுதப்பயிற்சி பெற்ற அரசியல் போராளி ” என்பதில் போராட்டத்தில் இணைந்த பின் தான் பெற்ற பயிற்சிகள்,  செய்த அரசியல் செயற்பாடுகள், நிர்வாகப் பணிகள் பற்றியும் பேச்சாளராக ஆற்றிய பணிகள் பற்றியும் விபரித்துள்ளார்.

அத்தியாயம் 4 “ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்” என்பதில் பெண் போராளிகளை தமிழ் சமூகம் விலத்தி வைத்து ஒரு பிரமிப்புடன் பார்த்தார்கள் என்று குறிப்பிட்டு உண்மையான மாற்றத்தின் தேவை அந்த சமூகத்திற்கு இருந்தது என்று கூறியுள்ளார்.

அத்தியாயம் 5 “கிழக்கு மண்ணின் நினைவுகள் ” என்பதில் சுனாமிற்குப் பின் கிழக்கு மாகாணத்தில் உதவிகள் புரியச் சென்றிருந்த வேளையில் அங்குள்ள மக்களிடம் பழகிய நினைவுகளைப் பதிவு செய்துள்ளார்.

அத்தியாயம் 6 “உண்மையற்ற சமாதானமும் உருக்குலைந்த மக்கள் வாழ்வும்” என்பதில் சமாதான காலப் பகுதியில் தலைமையின் முடிவுகளில் ஏற்ப்பட்ட மாற்றங்கள், வன்னி மக்களின் வாழ்வியலில் ஏற்ப்பட்ட சடுதியான மாற்றங்கள் என்பன பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாயம் 7 “நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடுகின்றோம் ” என்பதில் கட்டைய ஆட்ச்சேர்ப்பு, போராட்டத்தின் தோல்வி, அதற்கான காரணங்கள் பற்றி தன்னுடைய கருத்துக்களை எழுதியுள்ளார்.

அத்தியாயம் 8 “தமிழ் மக்களும் ஆயுதப் போராட்டமும்” என்பதில் புலிகளின் யுத்தகளங்களில் (பூநகரி, கிளாலி ) போன்ற தனது அனுபவங்களையும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறும் காலம் வரையில் நடந்த நிகழ்வுகளையும் பகிர்ந்துள்ளார்.

அத்தியாயம் 9 “சரணடைவும் சிறைச்சாலையும்” ஆனது தமிழினி அக்காவின்  சரணடைந்த பொழுதுகள், புலனாய்வுத் துறையின்  விசாரணைகள், சிறைச்சாலையில் பெற்ற துன்பங்கள் என்பனவற்றை தாங்கி நிற்கின்றது. “புனர்வாழ்வு ” என்ற இறுதி அத்தியாயத்தில்  வவுனியா பூந்தோட்ட முகாமில் தான் பெற்ற பயிற்சி வகுப்புகள் சுற்றுலாக்கள் என்பவற்றை பற்றிக் கூறியுள்ளார். இனி இப் புத்தகம் தொடர்பான என் கருத்துக்களை முன்வைக்கின்றேன்.

தமிழினி அக்கா ஒரு விடுதலைப் போராளி. ஒரு விடுதலைப் போராளி எந்த அளவிற்கு ஒரு விடுதலைப் போராட்டத்தில் பங்களிகின்றார் என்பதைப் பொறுத்தே அவரது ஆளுமையானது வளர்த்தெடுக்கப் படுகின்றது.

அந்த வகையில் தமிழினி அக்காவின் தன் வரலாற்றிலிருந்து தமிழினி அக்கா கள அனுபவம் சம்பந்தமாகவும், கலை இலக்கியம் தொடர்பாகவும், மக்கள் சந்திப்பு மூலமாகவும், ஆரம்ப காலத்தில் விடுதலைப் புலிகள் உன்னதம் பெற்றிருந்த காலத்தில் தமிழ் மக்கள் மூலமான நெருக்கம் மூலமாகவும், மக்களிற்கு அரசியல் அறிவூட்டல் மூலமாகவும், நிர்வாக அனுபவம் மூலமாகவும், கதை சொல்லும் திறன் மூலமாகவும் ஒரு களப் போராளியாக, அரசியல் போராளியாக தியாகம் போராட்ட ஓர்மம் கொண்டு பல ஆளுமைகளைத் தன்னகத்தே வளர்த்தவர். பெண்ணியம் மற்றும் பல துறைகளில் அவர் ஆளுமை பெற்றிருந்தாலும் அவரிடத்தில் பூலோக அரசியல் நலன் சார் அரசியல் ஆய்வானது இருக்கவில்லை. திறனாய்வுகள் செய்யவில்லை புலனாய்வுகள் செய்ததாக எதுவும் இங்கு கூறப்படவில்லை.

சிங்கள கோட்டைக்குள் மறைவாய் வாழ்ந்த அனுபவம் இருந்ததில்லை. அனைத்துத் துன்பத்தையும் தாங்கி தலை மறைவாய் உரு மாற்றி கத்தியில் நடக்கும் போராட்டப் பணியும் செய்ததாயில்லை. தன்னையே பெயரிலந்து தனது சுயமிழந்து விடுதலைப் பணி செய்து விட்டு எவருக்கும் தெரியாமல் இருளுக்குள் ஒழிந்த தீபமாய் அவர் இருந்ததுமில்லை.

ஆகவே ஒரு போராளி தான் சார்ந்த விடயங்களை தனது பங்களிப்பு மூலமாகப் பெற்ற ஆளுமைத்திறன் ஆனது அந்த சமூகத்திற்குமானதும் அந்தச் சமூகத்தினது விடுதலைக்குமானதாகும். எனவே ஒரு போராளியின் கூட்டு முயற்சி, கூட்டு வெற்றி, சமூகப் புரட்சி, தேச விடுதலை என்றவாறு தான் ஒரு மக்கள் மயப்பட்ட அமைப்பு இயங்க முடியும்.

இதில் தமிழினி அக்க அனைவருக்கும் இலகுவாகத் தெரிந்து விடக்கூடிய சூழலைத் தன்னகத்தே கொண்ட ஒரு பெரும் பணியை ஒரு பெரும் பகுதியில் செய்துள்ளார். எனவே தமிழினி அக்காவால் சொல்லப்படும் விடயங்கள் எத்தகைய வரம்பு வீச்சுக்குட்பட்டது என்பதை வைத்தே அதன் செம்மையை நாம் விளங்கிக் கூற முடியும். அதைச் சமூகதிற்கும் எடுத்துச் செல்ல முடியும்.

தமிழினி அக்கா “என்னுரை” யில் “எதிர் கால சந்ததி தனது அறிவாற்றலால் உலகத்தை வென்றெடுக்க வேண்டும்” எனவும் பின் “ஆயுதப் போராட்டம் என்ற வகையில் எமது அடுத்த சந்ததி சிந்திக்கப்பட கூடாது” எனவும் இதை தான் ஆத்மாத்தமாக கூறுகின்றேன்” எனவும் சொல்லியிருக்கின்றார்.

தமிழினி அக்கா தன் இறுதி நாட்களில் தனது சமூக வாஞ்சையாக குறிப்பிட்ட அறிவுமைய உரிமைப் போராட்டம் என்பதற்கமைய, ஒரு அறிவு மையச்சமூகம் ஒரு போதும் எதனையும் ஒரு முடிந்த முடிவாகக் கருதாமல் பல்லாயிரம் ஆய்வுகளையும் மாறேறுப் பரிசோதனைகளையும், விஞ்ஞான ரீதியில் ஆராயாமல் அப்படியே அதுவும் ஒரு தன் வரலாறை முடிந்த ஒரு முடிவாக எடுத்துக் கொள்ளும் ஒரு சமூகமாக தமிழ்ச் சமூகம் அமையக் கூடாது. அது ஒரு நாகரீகமான அறிவுடமைச் சமூகத்திற்கு அழகும் அல்ல. ஆகவே தமிழினி அக்கா விரும்பிய அறிவுடமைச் சமூகம் இதையும் ஒரு முடிந்த முடிவாக எடுத்துக் கொள்ளது.

ஆகவே இதை வெறுமனே ஓர் பாடப்புத்தகமாக அத்தியாயங்களாகப் பிரித்து படிமுறைகளாக மனனம் செய்யும் ஒரு தீர்க்க நூலாக இதை அணுக முடியாது. ஆனால் மக்களோடு மக்களாக நின்று களமாடி அவர் பெற்ற அனுபவங்கள் ஆளுமைகளை இந்த நூல் தாங்கி நிற்பதனால் இதை ஒரு ஆய்விற்குரிய பால பாடமாக கட்டாயம் நோக்க வேண்டும்.

இதில் சொல்லப்பட்ட விடயங்களை (மக்களில் இருந்து போராட்டம் விலகிச் சென்றது என ) தமிழினி அக்கா என்றைக்குமே தன் போராட்ட காலத்தில் சொல்லவில்லை. இயக்கம் அழிந்து கொண்டிருக்கும் போதும் சொல்லவில்லை. அழிந்தவுடனும் சொல்லவில்லை. ஆனால் தடுப்பு முகாமில், (so-called rehabilitation centre) புனர்வாழ்வு முகாம் என கூறப்படும் முகாமில் இருக்கும் போது CID, TID, SIS போன்ற புலனாய்வு அமைப்புக்களால் கடும் விசாரணைகளை அனுபவித்த பின் போராட்ட சம்பந்தமான எந்தளவு சிறிய விடயத்திற்கும் நான் வரப்போவதில்லையென்றும் குமரன் பத்மனாதனால் வழங்கப்பட்ட நிர்வாகப் பொறுப்பு ஒன்றையும் ஏற்க மறுத்து அம்மாவுடன் காலத்தைக் கழிக்க வேண்டும் என்ற மன நிலையில் இருந்த போதே இவரால் இத் தன் வரலாறானது எழுதப்பட்டுள்ளது.

ஒரு படைப்பாளி இலங்கை போன்ற நாடுகளில் எவ்வாறு மனம் திறந்து பேச முடியும் என்பதை Amnesty International, Freedom of expression போன்றவற்றைப் பேசும் பல அமைப்புக்கள் கூறும் அறிக்கையிலிருந்து நாம் சிலவற்றைத் தெளிவாக முடிவெடுக்கலாம். ஆகவே தமிழினி அக்கா விமர்சனமாக முன் வைக்கும் தனது போராட்ட வாழ்வை தலைமை மீதான பல விமர்சனக்களை அன்றைய காலத்தில் பேசாமலிருந்தது போல் அன்று பேசியவற்றை இன்று பேசாமல் இருப்பதாகக் கொள்ளலாம். இந்த புத்தகத்தை தமிழினி அக்கா

சமூக வாஞ்சையுடன் எழுதினாவா ??

தோல்வி மனப் பான்மையில் எழுதினாவா ???

மன மாற்றத்தினால் எழுதினாவா ??

ஏதேனும் உந்துதல் காரணமாக எழுதினாவா???

உளவியல் தாக்கத்தினால் எழுதினாவா ???

என்ற பல கேள்விகள் இங்கு முன் வைக்கப்படுகின்றன

இந்த கேள்விகளுக்கான பதில்களை நாம் அந்த களத்தில் இருந்து கொண்டு இன விடுதலையை நெஞ்சில் நிறுத்தி இறுதி வரை மண்ணின் விடுதலைக்காய் பாடுபட்ட மக்களிடமும் சக போராளிகளிடமும் நேர்மையான சமூக ஆய்வாளர்களிடமும் தான் பெற முடியும்.

ஒரு முக்கிய விடயத்தை இங்கு இறுதியாக கூற விரும்புகிறேன் அதாவது தமிழினி அக்கா விடுதலையடையும் போது அது தேர்தல் காலம் என்பதால் இவர் தேர்தலில் நிற்கும் நோக்கத்துடன் வெளி வந்ததாக புலம்பெயர் ஊடகங்கள் பொய்யான பரப்புரை செய்தன. இதே போல் இன்னும் பல போராட்டத்துக்காக தம்மை அர்ப்பணித்த பின் சரணடைந்தோ கைதகியோ விடுதலையடைந்த பல போராளிகளுக்கு ( பதுமன் அண்ணா உட்பட ) இப்படியான துரோகிப் பட்டம் கட்டும் செயற்ப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இதனால் உண்மையான விடுதலைப் போராளி சமூகத்தில் இருந்து ஓரங்கட்டப் பட்டு அவர்களின் விடுதலை வேட்கையானது தணிக்கப் படுகின்றது. இதற்கு துணை போகின்றவர்களாக நாம் அமையலாகாது.

தமிழினி அக்காவின் அனைத்து விமர்சனங்களையும் உள்வாங்கி ஆயுதப் போர் சாத்தியமற்றது என்பதனை ஆத்மாதமாக கூறுகின்றேன் என்று கூறியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை தமிழினி அக்கா மட்டும் அல்ல தலைவர் பிரபாகரன் கூறினாலோ, சே குவேரா கூறினாலோ இதை ஏற்க முடியாது. ஏன் என்றால் இது இயங்கவியலுக்கு முரணானது…ஒரு மக்கள் மயப்படுத்தப் பட்ட போராட்டத்தில் மக்கள் தான் தங்கள் போராட வடிவத்தை காலதற்கு அமைய தீர்மானிப்பார்கள்.

இத்துடன் எனது கருத்துக்களை நிறைவு செய்கின்றேன்.

http://ethir.org/?p=355

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மின்னம்பலம்:புலிப் பெண்கள்: சோமீதரன்

விடுதலைப்புலிகளுடைய அரசியல்துறையின் மகளிர் பொறுப்பாளராக இருந்த தமிழினி எழுதிய "ஒரு கூர்வாளின் நிழலில்" என்ற தன்வாழ்க்கைக் குறிப்பு புத்தகத்தை முன்வைத்து, சில நினைவுகளையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்கிறார் சோமீதரன்

2003 மற்றும் 2004ல் கிளிநொச்சியில் நடைபெற்ற மகளிர் தினங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஒரு ஊடகக்காரனாக எனக்கு அப்போது வாய்த்திருந்தது. ஊர்வலம், பொதுக்கூட்டம், கலைத்துவ வெளிப்பாடுகள் என போராளிப் பெண்களும், பொதுப் பெண்களும் கூடி எழுந்துநிற்கும் நிகழ்வு. இதுபோன்ற மற்றுமொரு எழுச்சி நிகழ்வு, மாலதி படையணி கிளிநொச்சி மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த வீரத்தைப் பறைசாற்றும் விழா. கிளிநொச்சி வீதியெங்கும் பெண் போராளிகள் நிறைந்திருந்தனர்.

அப்போது சமாதானத்தின் கதவுகள் A9 நெடுஞ்சாலையில் திறந்துவிடப்பட்டிருந்ததால், உலக மற்றும் உள்ளூர் ஊடகவியலாளர்கள் அதிகளவில் வந்திருந்தனர். அந்த மைதானத்தில் தலைவர் பிரபாகரனைத் தவிர, மற்றைய தளபதிகள் அனைவரும் வெளிப்படையாகத் திரிந்தனர். ஒழுங்குபடுத்தும் பொறுப்பில் தமிழினி அக்காவும் முன்னின்று செயற்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது, எனக்கு அவர் பெரிய பழக்கமில்லை. பாவாடை சட்டையில் தலைகுனிந்து நடந்துசெல்லும் பெண்களை அதிகம் பார்த்திருந்த எனக்கு, நீண்ட இடைவெளிக்குப்பின்னர் வரியுடை தரித்த அந்தப் பெண்களின் மிடுக்கு அதிக கவர்ச்சியுடையதாக இருந்தது. நான் 10 வயதாக இருக்கும்போதே இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்துவிட்டிருந்தமை சூழலில், ஒரு அன்னியத்தை ஏற்படுத்தியிருந்தது. பெண் கடற்புலிகளின் தாக்குதல் படகுகள் கட்டி இழுத்துவரப்பட்டு வீதிகளில் பிரமாண்டமாக நிறுத்தப்பட்டிருந்தன. நான், பெண் போராளிகளை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்த மைதானத்திலேயே, மாலதி படையணியின் ஒரு தாக்குதல் நடவடிக்கையின் மாதிரியைச் செய்துகாட்டினர். ஆக்ரோஷமான ஒத்திகைப் பயிற்சியாக அது இருந்தது. பெண் போராளிகளின் கைகளில் ஒரு துப்பாக்கியும், சிலர் கைகளில் கமெராவும் இருந்தது. அங்கே ஆண்களுக்கு எந்த வேலையும் இருக்கவில்லை. பல சிங்களப் பத்திரிகையாளர்களுக்கு பேச்சே வரவில்லை. மச்சான் இந்த நாட்டுக்குள் இப்படியொரு பெண்களா! என்று வியந்தார்கள். சிறிலங்காவின் பெண்களில் இருந்து தமிழீழத்தின் பெண்கள் வேறுபட்டிருக்கிறார்கள் என்பதே அவர்களின் வெளிப்பாடாக இருந்தது.

2003ல் தான், எனக்கு தமிழினி பழக்கமானார். அவர் அறிமுகம் செய்துவைத்ததன் மூலம் மருத்துவப் பிரிவு, போர் பயிற்சிப் பிரிவு, புகைப்படப் பிரிவு என, சிலபல பிரிவுகளின் போராளிகள் அறிமுகமானார்கள். மற்றொருபுறம், வெளிச்சம் இதழின் ஆசிரியர் கருணாகரன் மூலமும், புலிகளின் குரல் வானொலி தவபாலன் மூலமும் சில போராளிகள் அறிமுகம் கிடைத்தது. பின்னாட்களில் தமிழீழ தேசிய தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டபோது, இசைப்பிரியா அறிமுகமானார். நான், என் ஊடகப் பணிக்காக எப்போது வன்னி சென்றாலும் தவறாமல் சந்திக்கும் நபராக தமிழினி இருந்தார். அவரின் அலுவலகத்தில் வைத்துத்தான் நான் மலைமகளையும் சந்தித்தேன். போர்க்குணமும், எழுத்துவன்மையும் கொண்டவர் மலைமகள்.

அமைப்புக்குள்ளும், வெளியேயும் வெளிப்படையாகவே இருக்கும் ஆணாதிக்க மனோநிலைக்கு, இந்த புலிப் பெண்கள் எதிர்வினையாற்றிக் கொண்டிருந்தது எனக்குத் தெரியும். ஆனால், வெளிப்படையாக வீரம்செறிந்த பெண்கள் பற்றிய பிரச்சாரங்களை மட்டுமே தமிழினி அப்போது விரும்பியிருந்தார். புலிப் பெண்களிடம் குறை கண்டுபிடிக்க காத்திருந்தவர்களுக்கு பிடி கொடுத்துவிடக்கூடாதென தமிழினி அப்போது எண்ணியிருக்கலாம்.

பெண்களுக்கான படையணியையும், பெண்களுக்கான உடையையும் நேர்த்தியாக உருவாக்கிய தலைவரைப் பற்றி அவர், அப்போது பெருமையாகச் சொல்வார். இப்போதும், இந்த நூலிலும் பெண்களையும், அவர்களின் வீரத்தையும், அறிவையும் குறைத்து மதிப்பிடாத தலைமைகுறித்து தமிழினி பல தடவை குறிப்பிடுகிறார். இந்திய ராணுவத்துக்குப் பின்னான ஈழப் போர்க்களத்தில் பெண்களின் பங்களிப்பு என்பது, ஆண்களுக்கு எந்தவகையிலும் குறைவில்லாமல் இருந்திருக்கிறது என்பது தமிழினியின் தன்வரலாற்று நூலின்மூலம் உணர்ந்துகொள்ள முடியும். இயக்கம் மீதான விமர்சனங்களும், கோபங்களும், ஆற்றாமைகளும், வெப்பிராயங்களும், கண்டனங்களும் நிறைந்ததாக தமிழினியின் நூல் இருக்கிறது. ஆனால், இந்தப் பிராந்தியத்தில் நடந்துமுடிந்த, நடந்துகொண்டிருக்கும் எந்தவொரு விடுதலைப் போராட்டத்தைவிடவும், விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் இருக்கும் சிறப்பே பெண்கள் படையணிகள்தான். இன்று குர்திஸ்தானிலும் அன்று எரித்திரியாவிலும் போர்க்களத் தலைமையேற்ற பெண்கள் அணிகளின் வீரத்திற்கு ஒப்பான அல்லது அதனிலும் சிறப்பான வீரத்தை ஈழப் பெண்களும் கொண்டிருந்தார்கள். அவர்கள் களமாடுபவர்களுக்கு துணைபுரியும் அணியாக இல்லாமல் களமாடும் அணியாக இருந்தார்கள்.

இதனாலேயே, சமாதானப் பேச்சு நடந்த காலத்தில் ஒருமுறை, விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் பெண்மை உணர்வு அற்ற மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள். உணர்வு மரத்தவர்கள் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இதற்கு தமிழினி கடுமையான எதிர்வினையாற்றியிருந்தார். இதை அடிப்படையாக வைத்து, பிபிசி தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் பிரான்ஸிஸ் ஹாரிஸனோடு அப்போது நானும் பணியாற்றினேன். வீரம்செறிந்த போர்க்களங்களில் களமாடத் தெரிந்த அந்தப் பெண்கள் எல்லோருக்கும் வைதீக ஆச்சரங்கள் நிறைந்த, சைவ பாரம்பரியத்தில் ஊறிய, சாதியச் சிறப்புமிக்க ஆண்மேலாதிக்க ஈழத்தமிழ் வாழ்வுக் களத்தில் களமாடத் தெரியுமா? என்ற கேள்விக்கு, தமிழினியிடம் அப்போது முழுமையான பதில் இருக்கவில்லை. ஆனால், இப்போது இந்த நூலில் அதை இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘‘பெண்கள் ஆயுதப் பயிற்சி பெற்றிருந்தபோதும், தமது உடல் வலிமையை நிருபிக்கக்கூடியதாக இருந்தபோதிலும் அவர்களது அடிப்படைச் சிந்தனைகளில் எந்தளவு மாற்றம் ஏற்பட்டிருந்தது என்பது கேள்விக் குறியானது.

குடும்பம் என்ற அமைப்புக்குள் இருந்து வெளியேவந்து, இயக்கம் என்ற அமைப்புக்குள் புகுந்துகொண்ட புலிப் பெண்கள் அனைவருமே புரட்சிகரமான புதிய சிந்தனை மாற்றத்துக்கு உட்பட்டார்கள் என்று சொல்லமுடியாது. எப்படி, கட்டுக்கோப்பான குடும்பப் பெண்களாக வீட்டில் வளர்க்கப்பட்டோமோ, அதேபோல கடினமான இராணுவப் பயிற்சிகளைப் பெற்ற கட்டுக்கோப்பான மகளிர் படையணிப் போராளிகளாகவே இயக்கத்திலும் வளர்க்கப்பட்டோம்.” இந்தக் கருத்தை, குறிப்பாக யாழ்ப்பாண மைய கலச்சார சமூகத்தில் நிகழ்ந்திராத சமூக மாற்றத்தினூடாகவே பார்க்க முடியும்.

தனது நூலில் தமிழினி பெண்கள் குறித்துப் பேசியிருப்பவை, போருக்குப் பின்னரான வாழ்வில் போராளிப் பெண்கள் சமுகத்தால் எதிர்கொள்ளப்படும்முறையின் தாக்கத்துடன் இணைத்தே பார்க்கப் பட வேண்டும். பல பெண்கள் இயக்கத்தில் சேர்வதற்குத் தூண்டுதலாகவும், ஆட்சேர்ப்பில் பிரபலமான பிரசாரகராகவும் தான் இருந்ததைப் பதிவுசெய்யும் தமிழினிக்கு இன்று, அந்தப் பெண்கள் வந்துநிற்கும் இடம், நிச்சயம் வலியை ஏற்படுத்தியிருக்கும். ஒரே ஆடையுடன் பல நாட்கள் வெயிலிலும், மழையிலும், களமுனையில் நின்ற பெண்களின் தீரம்பற்றி தமிழினி பதிவு செய்கிறார். போராட்டத்துக்கு வெளியே பெண்களின் சமூக வகிபாகம் என்பது பரதம் ஆடுவதும், அழகுபடுத்துவதும், வெளிநாட்டில் உள்ளவர்களைக் கரம்பிடிப்பதும், பாதுகாப்பான வேலைபெறுவதும் என்பதாகத்தான் பெரும்பாலும் இருந்தது. விடுதலைப் புலிகளின் மணக்கொடைத் தடைச் சட்டம் என்பதும் வலுவிழந்தே இருந்தது என்பதை தமிழினி குறிப்பிடுகிறார். அது,

கடுமையாக்கப்பட்டபோது அதற்கான மாற்று வழிகளில் சீதனமென்ற மணக் கொடைப் பரிமாற்றத்தை தமிழ்ச் சமூகம் நடத்தியது. பல சந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகளால் அவை கண்டுபிடிக்கப்பட்டபோது வாங்கிய சீதனத்தில் இருந்தே தண்டப் பணம் கட்டியதும் நடந்திருக்கிறது. இப்போது, புலிகள் இல்லாதபோது புலம்பெயர் நாடுகள் வரையிலும் சீதனம் வாங்குவது என்பதை திருமணத்தின் சம்பிரதாயங்களில் ஒன்றாக வைத்திருகிறார்கள். அதுகுறித்த கூச்சம்கூட வாங்குபவர்களுக்கு இருப்பதில்லை.

தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூலை முன்வைத்து, நான் இதை எழுத நினைத்தாலும் அந்த நூலின் பெண்கள் குறித்தான பதிவுகளின் தாக்கமாகவே இதைப் பதிவுசெய்ய விழைகிறேன். முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்களில் பெண் போராளிகளின் நிலை மிகப் பரிதாபமாக இருந்தது என்கிறார் தமிழினி. அதுவரை போராளிகளாக இருந்தவர்கள் அந்தக் கணம்முதல் ஈழத்துப் பெண்களாக மாறுகிற தருணம் அல்லது நிர்ப்பந்தம். அந்த இடத்திலே பல புலிப் பெண்கள் தற்கொலை செய்துகொண்டனர் என்று சொல்லும் தமிழினி, தான் அந்த முடிவை எடுக்காமல் வருவதை எதிர்கொள்ள முடிவெடுத்ததாகக் கூறுகிறார். அன்று, தற்கொலை முடிவை எடுக்காமல் எதிர்கொள்ளும் முடிவை எடுத்த பலர், அரச படையினரை எதிர்கொள்ளமுடியாமல் போயினர். இதைவிட,வலியானது எல்லாம் முடிந்து ஊர் மீண்டபின்னர் இந்த சமூகத்தை எதிர்கொள்ளமுடியாமல் தற்கொலை செய்துகொண்டவர்கள் நமக்குச் சொல்லிவிட்டுச் சென்ற சேதி என்ன?

தமிழினியின் நூலைப் படித்தபோது அதன் உள் அரசியல், வெளி அரசியல், புலிஅரசியல், புலி எதிர்ப்பு அரசியல் எல்லாவற்றையும் கடந்து, ஈழப் பெண் அரசியல்குறித்த கேள்விகளே அதிகம் இருந்தது. புலிப் பெண்களின் ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்திருக்கலாம். அந்தத் தோல்விக்கு பல காரணங்கள் உண்டு. ஆனால், அவர்கள் பெண்களாக தலைநிமிர்ந்துவிட முடியாமல் நாம் வாழும் இந்தச் சமூகம் அவர்களைத் தோற்கடிக்க முயல்கிறது. உலகின் உச்சபட்ச பெண்ணுரிமை பேசும் சமூகத்தின் போராட்டங்களைவிடவும் வீரியமான செயலை போர்க்களத்தில் அந்தப் பெண்கள் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், நாம் நிர்வாணப்படுத்தப்பட்ட அந்தப் பெண் உடல்களை வைத்துமட்டுமே அரசியல் செய்துகொண்டிருக்கிறோம். எதை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டுமானாலும் நமக்குப் பெண் உடல்தான் தேவையாக இருக்கிறது. அது உயிருடன் இருக்கும் பெண்ணா, கொல்லப்பட்ட பெண்ணா என்பது மட்டும்தான் வேறுபடுகிறது. ஒரு போராட்டத்தின் பயன் என்பது, போர் வெற்றி தோல்விகளுடன் மட்டும் முடிந்து போவதல்ல; அது உருவாக்கிய தாக்கம் என்ன?, அதன்மூலம் அடைந்திருக்கும் சமுக மாற்றம் என்ன? என்பதுதான் அதன் படுதோல்வியை மீண்டும் மீண்டும் பறைசாற்றுவன. இராணுவரீதியில் தோல்வியடைந்த போராளிகள் சுயநலமும், பிற்போக்கும் நிறைந்த நம் சமூகத்தின்முன்னே மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்படுகிறார்கள்.

(கட்டுரையாளர் குறிப்பு -சோமீதரன் -ஆவணப்பட இயக்குநர், ஊடகவியலாளர், கட்டுரையாளர்)

https://minnambalam.com/k/1457654463

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ரு கூர்வாளின் நிழலில்’ புத்தக ஆசிரியரான புலிகளின் மகளிரணித் தலைவி தமிழினி, புத்தகம் சொல்லும் செய்தி மற்றும் கருத்துக்களை தன் வரலாறு என்று தலைப்பிட்டிருந்தாலும், அவர் போராளியாக இருந்த 18 ஆண்டு கால இயக்கத்தின் வரலாற்றையே அதிகம் பேசிச் சென்றிருக்கிறார்.

புத்தகத்தின் பின் அட்டையின் தமிழினி சொல்வதாக இப்படி வந்திருக்கிறது: “இயக்கத்தின் தவறுகள் ஒரு போராட்டத்தின் நியாயத்தை முடக்கிவிடமுடியாது” ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் நியாயத்தை முடக்கின்ற வகையிலேயே,  புத்தகம் முழுக்க தமிழினியின் வாழ்க்கைப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

OruKoorvaalinNizhalil-109432zoomresized.விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 ஆண்டுகள் இருந்தவர், என்ன காரணத்திற்காகவோ அந்த இயக்கத்தின் குறைகளை தேடித் தேடி சுட்டிக் காட்ட முயல்கிறார். இந்த முயற்சியில் சில இடங்களில் வெற்றியும் பல இடங்களில் தோல்வியும் அடைந்திருக்கிறார். புத்தகம் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்க தமிழினி உயிருடன் இல்லை. 30 ஆண்டு காலமாக போராடிய ஓர் இயக்கத்தின் மீதான அவரது விமர்சனத்தை வாசித்துவிட்டு, அமைதி காக்கவும் முடியாது. புத்தகத்தில் முரண்பாடான பல கருத்துகள் முன்னின்று தொந்தரவு செய்கின்றன. அந்த முரண்பாடுகளை முடிந்தவரை வரிசைப்படுத்துவது,  புலிகளின் போராட்டத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த என்னைப் போன்றவர்களின் கடமை.

புத்தகம் முழுக்க பல இடங்களில்,  புலிகள் யாருக்காக போராட முனைந்தார்களோ அந்த மக்கள்,  புலிகளை வெறுத்தார்கள், அவர்களின் பல கேள்விகளுக்குப் புலிகளிடம் பதிலில்லை என்று தமிழினி ஆதங்கப்படுகிறார்.

இவரது பள்ளிப்  பருவத்தில் பாடசாலைக்கு வரும் இயக்கப் பிரதிநிதிகள்,  பெரிய வகுப்பு மாணவர்களிடம் கூட்டங்களை நடத்துகிறார்கள். அப்போது, தமிழினி உள்ளிட்ட சிறுவயது மாணவர்களை பொருட்டாக மதிக்காமல் துரத்தியிருக்கிறார்கள். குழந்தைகளை போராட்டத்தில் ஈடுபடுத்துவது குறித்து புலிகளுக்கு இருந்த பொறுப்புணர்ச்சியை இது உணர்த்தவில்லையா?

தமிழினியின் பள்ளிப் பருவத்தில், இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வருகிறது. அது பற்றி எழுதும்போது தமிழினி, “இந்திய அமைதிப்படை பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாக பேசிக் கொண்டார்கள்” என்கிறார். அமைதிப்படை தமிழ்ப் பெண்களிடம் நடந்த விதம் உலகம் அறிந்த உண்மை. ஆனால் தமிழினி தனக்கு எதுவுமே தெரியாததது போல, “பேசிக் கொண்டார்கள்” என்று மழுப்பலாக எழுதியிருப்பது நெருடலாக உள்ளது. ஒரு பெண்ணாக மட்டுமல்ல,  விடுதலைப் புலி இயக்கப் போராளியாக அமைதிப்படையின் அத்துமீறல்கள் பற்றி மேலதிகத் தகவல்களை அறிந்திருப்பார்தானே? ஆனால் புத்தகத்தில் எங்குமே அதைப்பற்றி பேசவில்லை!!

tamizhini2.jpgஇந்திய அமைதிப்படை,  இவரது பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து பாடசாலை அதிபரை தாக்கியிருக்கிறது. மாணவர்களை வெளியேற்றி,  மைதானத்தில் பல மணிநேரம் மண்டியிடச் செய்து கொடுமைப்படுத்தியிருக்கிறது. இதைக் கூறும் போதும் கூட, இந்திய ராணுவத்தைத் தாக்கியவிட்டு ஓடிச்சென்ற விடுதலைப்புலிகளை தேடும் நடவடிக்கையாக அது நடந்தது என்கிறார், தமிழினி. அமைதிப் படைகளால் தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளுக்கும் புலிகளே காரணம் என்று சொல்லாமல் சொல்வதாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது.

மாத்தையா மீதான புலிகள் இயக்கத்தின் குற்றச்சாட்டுக்குப் பின்,  அவர் என்ன ஆனார் என்ற கேள்வியோடு, “ஒரு இறுக்கமான நிறுவனமாகக் கட்டியெழுப்பப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கம்” என்று வர்ணிக்கிறார். அத்துடன், “இயக்கத்தின் ரகசியங்களை பற்றி கதைப்பதும், எமக்குத் தரப்பட்டிருந்த வேலைகளுக்கு அப்பாற்பட்ட விடயங்களை ஆராய்வதும் போராளிகளின் செய்யத் தகாத காரியங்களாக இருந்தன” என்கிறார்.

“விடுதலைப் புலிகள் இயக்கம், கெரில்லா இயக்கம் என்பதைக் கடந்து மரபு வழி ராணுவம் என்ற நிலைமையை அடைந்திருந்தது” என்று இந்தப் புத்தகத்தில் தமிழினியே ஒப்புக் கொண்டிருக்கிறார். அப்படியெனில் எந்த நாட்டின் ராணுவத்திலாவது அதில் உள்ள வீரர்கள், அந்த ராணுவத்தின் ரகசியங்களை பேசுவதும், தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் தலையிடுவதும் அனுமதிக்கப்படுமா? போராளிகள் அனைவருக்கும் வெளிப்படைத்தன்மையாக இருந்து கொண்டு ஒரு போராட்ட இயக்கத்தை வழிநடத்த முடியுமா? அது சாத்தியமா?


“பெண் போராளிகள் நீதிபதிகளாகவும், சட்டவாளர்களாவும், நிதிச் செயல்பாடுகளில் ஈடுபடுவோராகவும் ஊடகப் பிரிவுகளான நிதர்சனம், புகைப்படப் பிரிவு, பத்திரிகை, வானொலி ஆகிய துறைகளில் செயல்படுவோராகவும் இருந்தனர். பெண் போராளிகளில் பலர் சிறந்த இலக்கிய கர்த்தாக்களாகவும், ஆயுதப் போராட்டத்துக்கு அப்பால் அரசியல், சமூகம் பற்றிய தளங்களில் பரந்து விரிந்து தேடல் உள்ளவர்களாகவும் இருந்தனர்” என்று சொல்லிக் கொண்டே, “ஆனாலும் இயக்கத்தின் போராட்டக் கருத்தியலின் எல்லைக்கு வெளியே செல்லாமல்,  போராட்டத்தின் நியாயங்களை வலுப்படுத்தும் வகையிலேதான் அவர்களது படைப்பாற்றல்களும் வெளிப்படுத்தல்களும் அமைந்திருந்தது” என்று குற்றம் சாட்டுகிறார். தமிழினி என்ன சொல்ல வருகிறார்? ஓர் அமைப்பில் உள்ள நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் அந்த இயக்கத்தின் கருத்தியலோடு சம்பந்தப்பட்டவர்கள் இல்லையா?


LTTEPoliceWomen.jpg

2004 -ம் ஆண்டு சுனாமியின் போது நடந்த நிவாரணப்பணிகள் குறித்து பேசுகிறார். போர் நிறுத்தம் அமலிலுள்ளது. அப்போது கிளைமோர் தாக்குதலில் ஒரு ஆண் பொறுப்பாளர் உயிரிழந்ததுடன், பெண் போராளி பலத்த காயமடைகிறார். சுனாமி நிவாரணப்பணிகளில் ஈடுபட்டிருந்த அரசியல் துறை பொறுப்பாளர் கௌசல்யன் மற்றும் அம்பாறை தமிழ் எம்பி சந்திரநேருவும் கொல்லப்படுகிறார்கள். அவர்களுடன் போராளிகள் சிலரும் உயிரிழந்திருக்கிறார்கள். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் நல்வாய்ப்பாக தமிழினி உயிர்ப்பிழைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து ஆட்டோவில் சென்ற மூன்று பெண் போராளிகள் சுடப்படுகிறார்கள். அவர்கள் கொழும்பு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உயிர்ப் பிழைக்கிறார்கள்.

மேற்கண்ட தாக்குதல்கள்,  போர் நிறுத்த நேரத்தில் சுனாமிக்குப் பின்னர் நடந்து கொண்டிருந்த நிவாரணப்பணிகளின் போது போராளிகள் மீது நடத்தப்பட்டன. இவ்வளவையும் கூறிவிட்டு, இலங்கைத் தீவில் போரா சமாதானமா என்பதைத் தீர்மானிக்கக் கூடிய சக்தி மிக்க மனிதராகத் திகழ்ந்தார் பிரபாகரன் என்கிறார்.

மேற்கண்ட சம்பவங்களில்,  போர் நிறுத்த உடன்படிக்கையை மீறிய இலங்கை ராணுவம் பற்றி  புத்தகம் முழுக்க எந்த இடத்திலும் தமிழினி பதிவு செய்யவில்லை என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.


zpage-07-Terrorists-all-01.jpgபிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி,  இறுதிக்கட்டப் போரின் போது கட்டாய ஆள் சேர்ப்பில் ஈடுபட்டதை தவறான நிலைப்பாடு என்று சொல்கிறார். அப்போது, கட்டாய ஆள் சேர்ப்பு  வேலையை தமிழினி செய்ய மறுத்திருக்கிறார். உடனே அந்தப் பணியிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
கட்டாய ஆள் சேர்ப்பு தவறான முடிவு என்றாலும் கூட,  அதை எதிர்த்த தமிழினிக்கு அந்தப் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதை பக்குவப்பட்ட ஜனநாயக நடவடிக்கையாகத்தான் பார்க்க முடிகிறது.

இறுதிக்கட்டப்  போரின் தொடக்க காலத்தில்,  செஞ்சோலை பள்ளி வளாகத்தில் பள்ளிக் குழந்தைகள் மீதான இராணுவத்தின் தாக்குதலை மறக்க முடியுமா? 50க்கும் அதிகமான பள்ளிமாணவிகள் அதில் உயிரிழந்தனர் என்று சொல்லும் தமிழினி, அங்கேயும் விடுதலைப்புலிகளையே குற்றம் சுமத்துகிறார். மாணவர்களுடைய பாதுகாப்பைப் பற்றிய போதிய திட்டமிடல் இல்லாததால் இந்த அவலம் நேர்ந்ததாக சொல்கிறார். ராணுவத்தினர் பள்ளிக் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தியிருக்கக்  கூடாது என்று ஒரு வார்த்தை கூட தமிழினி பதிவு செய்யவில்லை.

இறுதி கட்டப் போரின் போது,  அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் கொல்லப்பட்டபின் பொறுப்பேற்ற நடேசன்,  தமிழ்நாட்டு ஈழ ஆதரவு தலைவர்களுடன் நெருக்கமாக இருந்ததைக் குறிப்பிட்டு, 2009-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா முதல்வர் ஆனதும், மைய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படும் என்ற கருத்து புலிகளிடம் ஏற்படுத்தப்பட்டிருந்ததாகக் கூறுகிறார். இந்தக் கருத்தில் தனக்கு நம்பிக்கை இருக்கவில்லை என்றும் தமிழினி கூறுகிறார்.

யாருக்குத்தான் இருக்கும்? ஏனெனில், இந்தியாவில் 2009-ம் ஆண்டு நடந்தது நாடாளுமன்றத் தேர்தல். ThiyakiMuthukumar14021.jpgதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அல்ல. இந்தத் தேர்தலில் ஜெயலலிதா முதல்வர் ஆவது சாத்தியமா? அதே போல் முத்துக்குமார், செங்கொடி உறவுகளின் தீக்குளிப்புத் தியாகங்களும் இந்திய அரசின் கவனத்தைத் திருப்பும் என எதிர்பார்க்க முடியவில்லை என்று சொல்கிறார். முத்துக்குமார் போர் நிறுத்தம் வேண்டி தீக்குளித்தார் என்பது சரி. முள்ளிவாய்க்கால் பேரவலம் அரங்கேறிய ஓரிரு ஆண்டுகளுக்குப் பின், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளனை தூக்கில்போட எதிர்ப்புத் தெரிவித்து தீக்குளித்தவர் செங்கொடி. செங்கொடிக்கும் போர் நிறுத்தத்திற்கும் என்ன சம்பந்தம்?

இதுபோன்ற தவறான தகவல்களை எப்படி எடுத்துக் கொள்வது? இந்தியா-தமிழ்நாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் உள்ள தவறுகளை உறுதியாக நம்மால் சுட்டிக்காட்ட முடிகிறது. அப்படியென்றால் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிற விஷயங்களில் இன்னும் என்னென்ன தகவல்கள் தவறுதலாக இருக்கிறதோ?

2009 மே மாதம்,  போரின் இறுதி நாட்களில் கடற்புலி தளபதி ஸ்ரீராமை சந்தித்தாகவும்,  அவர் மனைவி இசைப்ரியாவுக்காக காத்திருந்ததாகவும் தமிழினி கூறியிருக்கிறார். அதன்பின்பு இசைப்ரியாவுக்கு ஏற்பட்ட கதி நம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் அதைப் பற்றி புத்தகத்தில் வேறு எங்கேயும் தமிழினி பேசவில்லை என்பது மிக வருத்தப்படக் கூடிய செய்தி.

 sin.jpg

மே பதினாறாம் தேதி தமிழினியும் சில போராளிகளும் வெளியேறுகிறார்கள். முல்லைத்தீவு மைதானத்தில்,  இலங்கை ராணுவத்தின் முன்பு மக்களோடு மக்களாக இவரும் பிற போராளிகளும் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது ராணுவத்தினர் தண்ணீர் போத்தல்களும் உணவுப் பொட்டலங்களும் வழங்குகின்றனர். சரணடந்தால் என்ன நடக்குமோ என போராளிகள் பயந்திருக்கும்போது,  ராணுவத்தினர் மும்முரமாக மக்களுக்கான தேவைகளைக் கவனிப்பதில் ஈடுபட்டிருந்தனர் என்கிறார், தமிழினி!!

ராணுவத்தினர் பற்றி தமிழினி கூறுவது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் அந்த இறுதி நாட்களில் இசைப்ரியா போன்ற பெண் போராளிகள் பலருக்கும் ஏற்பட்ட அவலத்திற்கு இலங்கை ராணுவம் காரணம் இல்லையா? அது பற்றி தமிழினி சொல்லாமல் சாதாரணமாகக் கடந்து செல்வது அறமா? இதை எல்லாவற்றிற்கும் மேலாக “நந்திக் கடல் நீரேரியை சிறு படகு மூலம் கடந்து தப்பிச் செல்ல பிரபாகரன் திட்டமிட்டு இருந்த"தாக கூறுகிறார். அத்துடன், “தோல்வியைக் கற்பனை செய்தபடிதான் தலைவர் இறுதி யுத்தத்தை ஆரம்பித்தாரோ” என்று தமிழினி தன் சந்தேகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். மே 19-ம் தேதி தமிழினி,  பொதுமக்களோடு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த நேரத்தில், நந்திக்கடல் பகுதியில் பிரபாகரனின் உடல் கிடைத்ததாக புகைப்படம் வெளியான செய்தித்தாளைக் காட்டிய தமிழ் இளைஞர்(!), “உங்கள் தலைவர் செத்துப் போனார். எல்லோரும் அழுங்கோ” என்று கேலி செய்து அழுது காட்டியதாக சொல்கிறார்.

தமிழினி சொல்வது போல, அல்லது கேள்விப்பட்டது போல பிரபாகரனுக்கு போரின் முடிவு முன்னரே தெரிந்திருக்கும் பட்சத்தில், நந்திக் கடல் வழியாக தப்பிச் செல்ல திட்டமும் இருந்திருக்கும் பட்சத்தில், பேரழிவுக்கு முன்பாக அவர் எளிமையாக தப்பித்திருக்க முடியுமே? குறைந்தபட்சம் அவரது குடும்பத்தாரையாவது தப்பிப் பிழைக்கச் செய்திருக்க முடியுமே? பாலச்சந்திரனுக்கு இந்தக் கதி ஏற்பட்டிருக்காதே?!

Le.jpg

 தமிழினி, “பிரபாகரனுடைய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற தீர்மானங்களின் படி இயக்கம் வழிநடத்தப்பட்டது இத்தகைய இனஅழிவை ஏற்படுத்தியிருக்கிறது” என்கிறார். இந்த வார்த்தைகள் மூலம், தமிழின அழிப்பை செய்தது, இலங்கை ராணுவம் அல்ல பிரபாகரன் என்று தமிழினி நிறுவ முயல்கிறார்.

ஒட்டுமொத்த இயக்கத்தின் மீதும் குறைகளை அடுக்கிக் கொண்டே செல்லும் தமிழனி, இலங்கை ராணுவத்தைப் பற்றி கூறும்போது, 'சுனாமியின்போது நிவாரணப் பணிகளை சிறப்பாகச் செய்தார்கள்; தஞ்சமடைந்த தமிழ் மக்கள், சரணடைந்த போராளிகள் ஆகியோரை நல்ல முறையில் நடத்தினார்கள்' என்று நற்சான்றிதழ் வாங்கியிருக்கிறார். இதற்கு அவர்கள் தகுதியானவர்களாகவே இருக்கட்டும். ஆனால் சுட்டிக்காட்ட அவர்களிடம் எந்தத் தவறுமே இல்லை என்று தமிழினி நினைத்து விட்டார் போலும்!! அதை வாசகனையும் நம்ப வைக்க முயற்சி செய்திருக்கிறார்.

சரணடைந்த பின்பு, “நாட்டின் விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய பெண்களின் நிலை இன்று சமூகத்தில் எவ்வளவு மோசமானதாக ஆகிவிட்டது. ஒரு நாள் உயிர் தப்பி வந்த குற்றத்திற்காக ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்கும் துன்பத்தை அனுபவிக்க வேண்டியதாகவே இருக்கிறது” என்று தமிழினி தன் இறுதி நாட்களில் வேதனைப்பட்டுச் சொல்லியிருக்கிறார்.

உண்மைதான். நாட்டின் விடுதலைக்காக ஆயுதமேந்தி போராடிய குற்றத்திற்காக இன்னும் எத்தனை எத்தனை குற்றச்சாட்டுகளுக்கு பிரபாகரனும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் ஆளாக நேரிடுமோ?
'ஒரு கூர்வாளின் நிழலில்' புத்தகத்தின் பின் அட்டையில்,  தமிழினி கூறியதாக வெளியான கருத்தை சொல்லியே இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

“இயக்கத்தின் தவறுகள் ஒரு போராட்டத்தின் நியாயத்தை முடக்கிவிட முடியாது!”
 

http://www.vikatan.com/news/miscellaneous/62014-koorvaalin-nizhalil-book-review.art

Link to comment
Share on other sites

  • 6 months later...

தமிழினி கொடுக்கும் பூங்கொத்து!

இலங்கையில் போருக்குப் பின்னும் நீடிக்கும் கசப்பான சூழலின் இடையே சிறு பூங்கொத்தை நீட்டியிருக்கிறது ஒரு புத்தகம். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த தமிழினி எழுதி, அவரது இறப்புக்குப் பின் வெளிவந்த ‘ஒரு கூர்வாளின் நிழலில்…’ புத்தகம்.

தமிழில் ‘காலச்சுவடு பதிப்பகம்’ இந்தப் புத்தகத் தைக் கொண்டுவந்தபோதே இங்கு அதிர்வுகள் ஏற்பட்டன. இப்போது சிங்களச் சூழலிலும் அதிர்வுகள் உருவாக்கி யிருக்கின்றன. இதுகுறித்து இந்த மாதம் ‘அம்ருதா’ இத ழில் ஒரு கருத்துத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார் எம்.ரிஷான் ஷெரீப். வெளியான ஒரே மாதத்தில் இரு பதிப்பு களை இப்புத்தகம் கண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் ரிஷான் ஷெரீப், புத்தகத்தைப் படித்த சிங்கள இளைஞர்களின் கருத்துகளையும் தொகுத்திருக்கிறார். போரின் குரூரத்தை தமிழினியின் எழுத்து அவர்களின் இதயத்துக்குக் கொண்டுசென்றிருப்பதை இந்தப் பதிவில் உணர முடிகிறது.

பள்ளியில் படிக்கும் வயதிலேயே சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராகப் போராட முடிவெடுத்து விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தவர் தமிழினி. அங்கு தொடங்கி ஈழப் போரின் முடிவில் அங்குள்ள தமிழ் மக்களின் வாழ்க்கை சின்னாபின்னமாக்கப்பட்டு, விடுதலைப் புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்படுவது வரையிலான 18 ஆண்டு காலப் போராளி வாழ்க்கை இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. அதனூடே ‘இறுதிப் போர்’ அவலங்களைப் பதிவுசெய்திருக்கிறார் தமிழினி. போரில் தமிழ் மக்களுக்கு இலங்கை ராணுவம் இழைத்த கொடுமைகளை விலாவரியாக எழுதியிருக்கும் தமிழினி, மறுபுறம் விடுதலைப் புலிகள் இயக்கம் தம் சொந்த மக்களுக்கு இழைத்த துரோகங்களையும் நேர்மையாகப் பதிவுசெய்திருக்கிறார். ஒரு போர் கடைசியில் யாருக்குமே நிம்மதியைத் தருவதில்லை என்பதையும் இலங்கை போன்ற ஒரு தேசத்தின் அமைதி அனைத்துத் தரப்பு மக்களின் ஒருமித்த மகிழ்ச்சியில் இருக்கிறது என்பதையும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்…’ நூல்.

சிங்களவர்களின் இதயத்தை இந்நூல் உலுக்கத் தொடங்கியிருப்பதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. எனினும், தமிழ் மக்களுக்கு இந்நூல் சொல்லும் கூடுதல் சேதி ஒன்று உண்டு. நம் தரப்பு நியாயங்களை நம்மைத் தாண்டி மாற்றுத்தரப்பிடம் கொண்டுசேர்ப்பதன் முக்கியத்துவமே அது. தமிழ் - சிங்களச் சமூகங்கள் இடையிலான இடைவிடாத உரையாடலின் தேவையைத் தமிழினியின் எழுத்து மேலும் அழுத்திச் சொல்கிறது.

http://tamil.thehindu.com/opinion/editorial/தமிழினி-கொடுக்கும்-பூங்கொத்து/article9201113.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
    • பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜
    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.