Jump to content

சதாம் தூக்கிலப்பட்டார் !


Recommended Posts

_42399103_afp203bodynoose.jpg

வரலாற்றில் முதற்தடவையாக மரணதண்டனை கைதிக்கு அணிவிக்கும் முகத்திரையை தண்டனை வழங்குபவர்களே அணிந்துள்ளமை உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை உணர்த்தி நிற்கின்றன.

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சதாமுக்கு இந்தத் தண்டனை என்றால் வியட்நாம் தொடங்கி ஆப்கானிஸ்தான் வரை அமெரிக்கத் தலைவர்கள் நடத்திய மனித இனப் படுகொலைகளுக்கு தண்டனை எங்கே..??! புதைகுழிகளில் புதைத்த சந்திரிக்கா போன்ற தலைவர்களுக்கு தண்டனை என்ன..?! இராணுவத்தை ஏவி அப்பாவி மக்களைக் கொன்ற தலைவர்கள் எல்லோரும் தண்டிக்கப்பட்டு விட்டனரா. அவர்கள் அமெரிக்க மற்றும் மேற்குலகக் கைக்கூலிகள் என்றால் அவர்கள் மொத்த மனித இனத்தையுமே அழிக்கலாம். சதாம் அணுகுண்டு வைத்திருக்கிறார்..அந்திரஸ் வைத்திருக்கிறார்..இரசாயன ஆயுதம் வைத்திருக்கிறார் என்றதே பொய். எதுவுமே இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இந்த நிலையில் சதாமை தூக்கிலிட்டு அமெரிக்க இராணுவமும் மேற்குலக இராஜதந்திரமும் சந்தித்துவரும் தோல்வியை மூடிமறைக்க முற்படுகின்றனர். ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த மனிதாபிமானம் பேசுகின்றனர்.

சதாமை விட மோசமான தலைவர்கள் அமெரிக்க மேற்குலகக் கைக்கூலிகளாக இருக்கும் போது சதாமுக்கு வழங்கப்பட்ட தண்டனை மனிதப் படுகொலை என்றே நோக்கப்பட வேண்டும். சதாமை தூக்கிலிட வேண்டின் அணு ஆயுதங்களையும் இராசாயன ஆயுதங்களையும் உயிரியல் ஆயுதங்களையும் உற்பத்தி செய்யும் பதுக்கி வைத்திருக்கும்..ஆக்கிரமிப்பு ஜனநாயகப் போர் புரியும் அமெரிக்க மற்றும் மேற்குலக வல்லாதிக்க சக்திகளை யார் தூக்கிலிடுவது...??!

சதாமோடு உறவாடிய இந்தியா போன்ற சந்தர்ப்பவாத நாடுகளும் இறுதியில் அவரைக் கைவிட்டு விட்டன. மேற்குலகின் ஒரு தலைப்பட்சமான மனித உரிமைக் காவல் என்பது மிகவும் ஆபத்தானது. மனித இன அழிவுக்கான முதற்படி அது. சதாம் என்ற தலைவரை மனிதப்படுகொலைகளுக்காக கொல்ல முடியும் என்றால் புஷ் பிளேயர் உட்பட பலரையும் கொல்ல முடியும்...! நடக்குமா...??! நடக்க வேண்டும்..! :unsure:<_<

Link to comment
Share on other sites

இஸ்லாமியரின் Eid பெருநாளில் நிறைவேற்றப்பட்டது எதிர்விளைவாக வன்முறைகள் படுகொலை தூண்டாது என்ற திட்டத்தில் செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் Eid சமய சம்பிரதாயங்களில் இன்றும் நாளையும் முற்று முழுதாக மூள்கியிருப்பார்கள் திங்கட்கிழமை புதுவருடமும் பழய செய்தியும் ஆகவிடும் என்ற நோக்கில் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது அமெரிக்காவினால்.

குறுகிய கால எதிர்விளைவுகளை மட்டுப்படுத்த செய்தாலும் நீண்ட நோக்கில் இஸ்லாம் - மேற்கத்தேய உறவில் ஒரு வடுவாகிப் போனால் அதன் பாதிப்பு அதிகம். சதாமை வெறுத்தவர்கள் சதாம் தண்டிக்கப்பட வேண்டியவர் என கூறுபவர்களே கூட ஆனால் இது மதத்தை அவமதிக்கும் செயலாகவும் தெரிவு செய்யப்பட்ட நாள் காலப்பகுதி தவறு என்று கூறுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சதாம் கைது செய்யப் பட்ட போது தற்கொலை மரணத்தை தழுவியிருந்தால் அமெரிக்க முகத்தில் கரி பூசப்பட்டிருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகிகளால் எவ்வளவு தூரம் ஆபத்து என்பதைச் சதாமின் முடிவு காட்டுகின்றது. அமெரிக்கப்படைகள் ஈராக்கினுள் நுழைந்தபோது, அதை எதிர்கொள்ள முடியாத அளவு அமெரிக்க உளவாளிகள் நாட்டினுள் நுழைந்திருந்திருந்தது முதல் தோல்வி.

பின் மகன்மார்களை, ஒருவர் நயவஞ்சகமான முறையில் காட்டிக் கொடுத்தது இரண்டாவது தோல்வி. பின் இவரும் அதே போன்ற ஒரு முறையில் அமெரிக்காவிடம் மாட்டுப்பட்டதும் தோல்வி. இவ்விடத்தில் நாம் படிக்க வேண்டிய பாடமும் அது தான்.

எக் காலத்திலும் போராட்டத்துக்கு துரோகம் செய்பவர்களை எக் காரணம் கொண்டும் மன்னிப்பு அளிக்கவே கூடாது. எதிரிக்கு கூட பொதுமன்னிப்புக் கொடுக்கலாம். இவர்களுக்கு கொடுக்கவே கூடாது.

தம்மினத்தைக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும் எவரையும் விட்டு வைக்கலாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கிலிடும்போது தனது தலைக்கு துணி போட வேண்டாம் என்றும் தூக்கினை தானும் மற்றவங்களும் பார்க்க வேண்டும் என்றும் தன் மதத்தினை வழிபட்டவாறே உயிர் பிரிந்திருக்கின்றது.

Link to comment
Share on other sites

Dec. deadliest month in Iraq for U.S.

By LAUREN FRAYER, Associated Press Writer 24 minutes ago

BAGHDAD, Iraq - At least 46 Iraqis died in bombings Saturday, including one planted on a minibus that exploded in a fish market in a mostly Shiite town south of Baghdad.

ADVERTISEMENT

The man blamed for parking the vehicle in Kufa, a Shiite town 100 miles south of the Iraqi capital, was cornered and killed by a mob as he walked away from the explosion, police and witnesses said.

Another explosion killed 15 civilians and wounded 25 in Hurriyah, a mixed neighborhood of the Iraqi capital, police said.

There was no indication the attacks were related to the execution of

Saddam Hussein. They came on the eve Eid al-Adha for Iraqi Shiites, the most important holiday of the Islamic calendar, and shoppers crowded into markets to buy supplies for the four-day festival.

At least 58 people were wounded in the Kufa blast, said Issa Mohammed, director of the morgue in the neighboring town of Najaf.

Television footage showed hundreds of men in traditional Arab headdresses swarming around the vehicle's charred frame, toppled on its side in the street. Ambulances and fire trucks pulled up to the site, and a coffin could be seen being loaded onto the top of a car.

The U.S. military announced the deaths of three Marines and two soldiers, making December the year's deadliest month for U.S. troops in

Iraq with the toll reaching 108.

The Marines, all assigned to Regimental Combat Team 5, died Thursday of wounds from fighting in western Anbar province, the U.S. military said. A soldier assigned to 1st Brigade, 1st Armored Division and also died in combat in Anbar, and another was killed by a roadside bomb in northwest Baghdad, the military said.

Their deaths pushed the toll past the 105 U.S. service members killed in October. At least 2,997 members of the U.S. military have been killed since the Iraq war began in March 2003, according to an AP count.

Saddam was hanged early Saturday, after his conviction last month for crimes against humanity in connection with the 1982 killings of 148 Shiites. Despite concerns about a spike in unrest, Saturday's violence was not unusually high.

Curfews were enforced in Saddam's hometown of Tikrit and in Samarra, both in the predominantly Sunni Salahuddin province north of Baghdad.

Mostly peaceful demonstrations broke out in several towns across Iraq, with hundreds of people marching in the streets carrying Iraqi flags and banners. Despite the curfew, gunmen in Tikrit paraded with his picture and fired their weapons into the air, calling for vengeance.

Police said Iraqi troops arrested 39 suspects with "quantities of weapons" in Balaz Ruz, 45 miles northeast of Baghdad.

On Friday, a suicide bomber killed at least nine people near a Shiite mosque in Baghdad, and 32 tortured bodies were found across the country.

American troops killed six people and destroyed a weapons cache in separate raids Friday in Baghdad and northwest of the Iraqi capital, the U.S. military said. One of the raids targeted two buildings in the village of Thar Thar, where U.S. troops found 16 pounds of homemade explosives, two large bombs, a rocket-propelled grenade, suicide vests and multiple batteries, the military said.

Iraqi forces backed by U.S. troops entered a mosque southeast of Baghdad, capturing 13 suspects and confiscating weapons, the U.S. military also said.

December was also shaping up to be one of the worst months for Iraqi civilian deaths since The Associated Press began keeping track in May 2005.

Through Thursday, at least 2,139 Iraqis have been killed in war-related or sectarian violence, an average rate of about 76 people a day, according to an AP count. That compares to at least 2,184 killed in November at an average of about 70 a day, the worst month for Iraqi civilians deaths since May 2005. In October, AP counted at least 1,216 civilians killed.

The AP count includes civilians, government officials and police and security forces, and is considered a minimum based on AP reporting. The actual number is likely higher, as many killings go unreported.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சதாம் ஒரு குற்றவாளி.தண்டிக்கப்பட வேண்டியவர். அனால் மரணதண்டணை மூலம் அல்ல. இறுதி நிமிடம் வரைக்கும் எதற்கும் அஞ்சாமல் நின்ற தைரியசாலி. சதாமிற்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதயம் நிறைந்த கண்ணீர் அஞ்சலிகள்...

கொலைகாரன் புஸ்க்கும் விரைவில்... யாரோ ஒருவனால், எங்கோ ஓரிடத்தில்...

விரைவில்.

Link to comment
Share on other sites

இந்தியா ஏமாற்றம்: கட்சிகள் கண்டனம்

டெல்லி: சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட செயல் இந்தியாவுக்கு கடும் ஏமாற்றத்தைக் கொடுத்திருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சதாம் உசேனுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என இந்தியா கோரியிருந்தது. தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாது என நம்பிக் கொண்டிருந்த நிலையில் சதாம் தூக்கிலிடப்பட்டது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

சதாமைத் தூக்கிலிட்டதால், ஈராக்கில் தற்போது நடந்து வரும் மறு சீரமைப்பு, சமாதான முயற்சிகள் பாதிக்கப்படாது என நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், ஈராக்கில் இன்னும் பிரச்சினைகள் பெரிதாகும். ஈராக்கின் சாதாரண குடிமக்களின் மனதை அங்கு தற்போது உள்ள அரசு வெல்லவில்லை. அதைத்தான் சதாம் உசேனின் ரகசிய தூக்குத் தண்டனை நிரூபித்துள்ளது.

திணிக்கப்பட்ட வெற்றியின் மூலம் ஈராக்கில் அமைதி, நீதியை நிலை நாட்ட முடியாது என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலோத்பல் பாசு கூறுகையில், சதாமை அவசர அவசரமாக தூக்கிலிட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இந்த தண்டனையை மிகக் கடுமையாக அனைவரும் கண்டிக்க வேண்டும்.

சதாமின் படுகொலை ஈராக்கில் மட்டுமல்லாது, உலகின் பல்வேறு பகுதிகளிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றார்.

முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர்சிங் கூறுகையில், மேற்கு ஆசியாவில் பதட்ட நிலை மேலும் அதிகரிக்கும் என்றார்.

முன்னாள் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் ஜி.பார்த்தசாரதி கூறுகையில், ஈராக்கில் தற்போது நடந்துவரும் உள்நாட்டுப் போர் மேலும் மோசமடையும். ஷியா பிரிவினருக்கும், சன்னி பிரிவினருக்குமான மோதல் மேலும் அதிகரிக்கும்.

இனிமேல் இந்த இரு பிரிவினரும் எப்படி இருக்கப் போகிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது என்றார்.

ராஜ்யசபா முன்னாள் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா கூறுகையில், சன்னி முஸ்லீம்களுக்கு மிகவும் புனிதமான பக்ரீத் நாளின்போது சதாம் கொல்லப்பட்டுள்ளார். புனித நாளின்போது இயற்கையாக மரணம் அடைந்தால் நல்லது. ஆனால் நல்ல நாளில் கொலை செய்வது நாகரீகமானதல்ல.

ஈராக் மக்கள்தான் தங்களுக்கு எது சரி, எது தவறு என்பதை முடிவு செய்ய வேண்டும். அவர்கள்தான் சதாமின் ஆட்சியின் கீழ் இருந்தவர்கள். அமெரிக்காவின் தலையீடு இங்கே எதற்கு?. சதாமை எனக்கு நன்கு தெரியும். பலமுறை பல சந்தர்ப்பங்களில் அவரை சந்தித்துள்ளேன். அவரைத் தூக்கிலிட்டுள்ளது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.

வைகோ அதிர்ச்சி:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், இந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி தருகிறது. கலக்கம் தருகிறது. ஒரு தலைப்பட்சமான இந்தத் தீர்ப்பினால், நீதியின் கோட்பாடுகள் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில், நாகரீக வேடமணிந்து உலக மக்களின் உணர்வுகளை, சட்டத்தை மதிக்காமல், அமெரிக்க ஏகாதிபத்தியம் செய்த படுகொலை இது என்று கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வரதராஜன் கூறுகையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்த வெறிச்செயலைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதற்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறுகையில், இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஆக்கிரமிப்பாளர்கள் அமைத்த ஒரு நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என எப்படி எதிர்பார்க்க முடியும்? உலக சமுதாயத்தின் எதிர்ப்பையும் மீறி சதாம் தூக்கிலிடப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்றார்.

முஸ்லீம்கள் அமரர் தொழுகை:

சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளிலும் முஸ்லீம்கள் அமரர் தொழுகை நடத்தி சதாமின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை நடத்தினர்.

இன்று காலை சதாம் மரணச் செய்தி பரவியதும் தமிழகத்தில் பல முஸ்லீம்களின் வீடுகளிள் அமரர் தொழுகை நடத்தப்பட்டது. குடும்பத்தோடு சதாமுக்காக பிரார்தித்தனர்.

தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் ஷேக்தாவூத் தனது குடும்பத்துடன் தொழுகை நடத்திய பின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜனநாயக விரோத செயல். அமெரிக்க எதேச்சதிகாரத்தை பலப்படுத்த உலக நாடுகளை அடி பணிய வைக்கும் செயல் இது. இப்படிப்பட்ட செயல்களால் முஸ்லீம்களை ஒடுக்க நினைக்கும் அமெரிக்காவை கடுமையாக கண்டிக்கிறோம். சதாமின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம் என்றார்.

சதாம் தூக்கிலிடப்பட்டதை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகமும் கண்டித்துள்ளது. அதன் தலைவர் ஜவாஹிருல்லா கூறுகையில், இந்த நூற்றாண்டின் மிகவும் காட்டுமிராண்டித்தனமான, மிருகத்தனமான செயல் இது.

ஜனநாயகம், மனித உ>மை, சட்டம் பற்றிப் பேசுவதற்கு அமெ>க்காவுக்கு தகுதியே இல்லை. சர்வதேச நீதிமன்றத்தை மதிக்காமல், சதாமை அங்கு நிறுத்தாமல், தனது ஆதிக்க பலத்தால் சதாமை தூக்கிலிட்டுள்ளதன் முலம் உலகின் பயங்கரமான பயங்கரவாதி ஜார்ஜ் புஷ்தான் எனபது தெளிவாகியுள்ளது.

இந்த செயலைக் கண்டித்து சென்னையில் உள்ள அமெ>க்க துணைத் தூதரகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம் என்றார் இதேபோல பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் சார்பிலும் இன்று மாலை 3 மணிக்கு அமெ>க்க துணைத் தூதரகத்தை நோக்கி ஊர்வலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்க துணைத் தூதரகம் உள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.http://thatstamil.oneindia.in/news/2006/12/30/india.html

Link to comment
Share on other sites

நன்றாகச்சொன்னீர்....அடி பணியாத வாழ்வு அதைவிட அவருக்கு வேருஎன்ன புகழாழம் வேண்டிக்கிடக்கு.....உன் ஆத்மா வாழ்க நாம் உள்ளவரை உனை நினைப்போம்....பாடம் படிப்பிப்போம்....இருந்து பார்.... ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரணம் சதாமை மாவீரனாக்கி விட்டது: கருணாநிதி

டிசம்பர் 31, 2006

சென்னை: மரண தண்டனை சதாம் உசேனை மாவீரனாக்கி விட்டது என்று முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

சதாம் உசேன் மரண தண்டனை குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

மரண தண்டனை, மனித வாழ்வின் சில பக்கங்களை கிழித்து எறிந்து விடுகிறது. பிழை மலிந்த அந்த பக்கங்களுக்கு பதிலாக திருத்தப்பட்ட புதிய பதிப்பு வெளி வர முடியாமலேயே செய்து விடுகிறது.

இது சாதாரண மனிதருக்கு மாத்திரமல்ல, சர்வாதிகாரிகளுக்கும் பொருந்தக் கூடிய வாசகம்தான். சதாம் உசேனுக்கும் கூட என்று கடந்த நவம்பர் முதல் வாரத்திலேயே எழுதினேன்.

மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, கைவிடப்பட வேண்டிய அந்த மரண தண்டனை இன்றைக்கு சதாமை மாவீரனாக்கி விட்டது. அவர் ஆட்சியில் மனித உடல்கள் குவிக்கப்பட்டதே என்பர்.

கலிங்கத்துப் போரிலே கணக்கற்ற உயிர்களை போக்கிய பிறகுதானே அசோகர் பவுத்தர் ஆனதாக வரலாறு. அந்த அசோக சின்னம் தானே இந்தியாவின் கீர்த்தியை பாடிக் கொண்டிருக்கிறது.

போரிலே தோற்ற போரஸ் மன்னிடம் அலெக்சாண்டர் நடந்து கொண்ட முறையை சதாம் உசேனிடம், அமெரிக்கா பின்பற்றியிருக்கலாம். வெறிக்குணத்தைக் காட்டி வெகு மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்க வேண்டியதில்லை. அவசரத்தில் தீர்ப்பு, ஆத்திரத்தில் அநீதி என்று கூறியுள்ளார் கருணாநிதி.

சதாம் கதி யாருக்கும் வரக் கூடாது: ஜெயலலிதா

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டதும் உலகுக்கு நம்ப முடியாத அதிர்ச்சி ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் தூண்டுதலின் பேரில் ஈராக் கோர்ட் மூலமாக இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சதாம் உசேனை டிசம்பர் 31ம் தேதிக்குள் தூக்கிலிட வேண்டும் என்று அதிபர் புஷ் கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. புஷ்ஷை முழு திருப்தி அடையச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் தனக்கு வேண்டாத நாடுகளின் உள் விவகாரத்தில் தலையிட்டு தான் விரும்பும் முடிவை மேற்கொள்ளும் எஜமானனைப் போல அமெரிக்கா காட்டிக் கொள்வது தெளிவாகியுள்ளது.

தனது ராணுவ பலத்தின் மூலம் ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவது மட்டுமன்றி, அந்த நாட்டின் தினசரி அரசியல் நிகழ்வுகள் அமெரிக்க அதிபரின் விருப்பத்தின் பேரிலேயே நடைபெறும் என்பதை உலகுக்கு அந்த நாடு உணர்த்தியுள்ளது.

ஈராக்கில் நிகழ்ந்தது போன்ற சம்பவம் இனி வேறு எங்கும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அமெரிக்காவின் கையில் மாட்டிக் கொண்டு எந்த நாடும் சிக்கிக் கொள்ளக் கூடாது. சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி உலகின் வேறு எந்த நாட்டுத் தலைவருக்கும் ஏற்படக் கூடாது.

உலக நாடுகளை தனது பாசிச, முதலாளித்துவ திட்டங்கள் மூலம் அடிமைப்படுத்த நினைக்கும் அமெரிக்காவை அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

http://thatstamil.oneindia.in

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த ஊரில் சதாம் உடல் அடக்கம்

டிசம்பர் 31, 2006

திக்ரித்: தூக்கிலிடப்பட்ட சதாம் உசேனின் உடல் இன்று அதிகாலை அவரது சொந்த ஊரான திக்ரித் நகருக்கு அருகே உள்ள அவ்ஜா கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

148 ஷியா முஸ்லீம்களைக் கொல்ல உத்தரவிட்ட வழக்கில் சதாம் உசேனுக்கு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டு, நேற்று அதிகாலையில் அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்டு சதாம் கொல்லப்பட்டார்.

தனது உடலை ஏமன் நாட்டில் தற்காலிகமாக அடக்கம் செய்ய வேண்டும். ஈராக்கை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் ஈராக்கில் மறு அடக்கம் செய்ய வேண்டும் என சதாம் உசேன் விருப்பம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சதாமின் உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சதாமின் மகள் ரஹத் கோரியிருந்தார். இந்தக் கோரிக்கையை ஈராக் அரசு நிராகரித்து விட்டது. சதாமின் உடல் ஈராக்கில்தான் அடக்கம் செய்யப்படும் என அது அறிவித்தது.

மேலும் சொந்த ஊரான அவ்ஜா கிராமத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என விடுத்த கோரிக்கையையும் அது முதலில் நிராகரித்தது. இருப்பினும் சதாம் உடலை சொந்த ஊரில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என திக்ரித் நகர பழங்குடியின தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்ற ஈராக் அரசு அவ்ஜாவில் சதாமை அடக்கம் செய்ய சம்மதித்தது. இதையடுத்து சதாமின் உடல் அமெரிக்க விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் திக்ரித் நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.

திக்ரித் நகருக்கு உடல் வந்தவுடன், சதாம் சார்ந்த அல்பு நஸீர் பழங்குடியினத் தலைவர் அலி அல் நிடா, சதாமின் உடலைப் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து உடல் அவ்ஜாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கான சன்னி முஸ்லீம்கள் கூடி சதாமின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் முஸ்லம் மத சடங்குகள் நிறைவேற்றப்பட்டு சதாமின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. சதாம் குடும்பத்திற்குச் சொந்தமான இடத்தில் அடக்கம் நடதந்தது. இங்குதான் சதாமின் மகன்களான உதய் மற்றும் குவாசி ஆகியோரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க படையினரால் 2003ம் ஆண்டு குவாசியும், உதய்யும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in

Link to comment
Share on other sites

தனது உடலை ஏமன் நாட்டில் தற்காலிகமாக அடக்கம் செய்ய வேண்டும். ஈராக்கை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் ஈராக்கில் மறு அடக்கம் செய்ய வேண்டும் என சதாம் உசேன் விருப்பம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சதாமின் உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சதாமின் மகள் ரஹத் கோரியிருந்தார். இந்தக் கோரிக்கையை ஈராக் அரசு நிராகரித்து விட்டது. சதாமின் உடல் ஈராக்கில்தான் அடக்கம் செய்யப்படும் என அது அறிவித்தது.

ஒருவரின் இறுதி ஆசையை கூட நிறவேற்றாத காட்டுமிராண்டிகள் யார் உண்மையான குறவாளி 148 பொதுமக்களை கொல்லச்சொன்னவரா அல்லது 500,000 மக்களை ஈராக்கில் கொன்றவருக்கா

இதுக்கெல்லாம் புஸ் பதில்சொல்லித்தான் ஆகவேண்டும் அவசர அவசரமாக ஈராக்கை விட்டு வெளியேற புஸ் செஉயும் தந்திரம் இது அடுத்த ஜனாதிபதி தேர்தலை கருத்தில் கொண்டு செய்ற்படுகிறது அமெரிக்கா

அமெரிக்கா வெளியேறியபின் நாடு துண்டுதுண்டாக பிளவுபடப்போகுது என்பது திண்ணம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

148 மக்களை கொன்றவரை தண்டிப்பதற்காக அமெரிக்கா 6 லட்சம் ஈராக்கியரை கொலை செய்திருக்கிறது. இந்த 6 லட்சம் மக்களை கொன்றவரை தண்டிப்பதற்காக அமெரிக்கா எத்தனை தன் மக்களை இழக்கப் போகிறதோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

148 உயிர்களின் மரணங்களுக்கு நீதி 60 000 மரணங்களின் விலையால் வாங்கப்பட்டிருக்கிறது.

அமரிக்க அதிகார அரக்கனுக்கு மனிதப்பசி பாவத்தை மறந்து பல ஆண்டுகள்ளாக இருந்தாலும்.

இம்முறைதான் அவன் பாதகம் மிடுக்காக உலகத்தின் முன் அரங்கேறி இருக்கின்றது.

Link to comment
Share on other sites

சதாமை தூக்கில் போடும் விடியோ காட்சி அவர் உயிர் துறக்கும் வரையிலான காட்சி

http://www.youtube.com/watch?v=RrFEyPwRcRY

Link to comment
Share on other sites

பலவீனமான மனம் உள்ளவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்.

சதாமினால் கஸ்டங்களை அழிவுகளை அனுபவித்தவர்களிற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய விடியோவாக இருக்கும். மனச்சாட்சியுள்ள மற்றவர்களின் மனத்தை சங்கடப்படுத்துவதாக இருக்கும்.

எங்கடன சனம் சதாமால் என்னத்தை இழந்ததுகள்? வருடப்பிறப்பில பாத்துட்டு குழம்பிக் கொண்டு சங்கடப்பட்டுக் கொண்டு எல்லோ இருக்கப் போகுதுகள்.

இவற்றை எடுத்தால் என்ன?

Link to comment
Share on other sites

தன் கடைசி நிமிடத்திலும் சாவுக்கு அஞ்சாமல் சாவைத்தழுவி உள்ளார் சதாம் ஆனால் அவமானப்பட்டு சாவடைந்ததை தாங்கமுடியவில்லை

அவுஸ்திரேலியாவில் வெளிவரும் herald sun பத்திரிகையில் சதாமின் கடைசி இரவில் அவரை துங்க முடியாமல் செய்ததை அமெரிக்கா கூலிப்படையினன் செய்ததாக பெருமையாக கூறுகிறார்

அவரின் இருதி இரவை நரகமாக அனுபவிக்கச்செய்ததாக கூறுகிறான் அவன்

அவருக்கு முன்னால் நடனம் ஆடியதகவும் அவரை துங்க விடாமல் செய்ததாகவும் அவர் கேட்ட சிகரட்டை குடுக்காமல் அவமானப்படுத்தியதாகவும் சொல்லி பெருமைப்படுகிரான் அந்த ஏகாதிபத்திய படையினன்

என்னை பொருத்தவரையில் அவர் இப்படி அவமானப்பட்டு சாவடைந்ததை விட தற்கொலை செய்து தன்னுயிரை மாய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

Link to comment
Share on other sites

வல்லரசு அமெரிகா செய்யாத அட்டூழியமா கொலைகளா? இவற்றிற்கு என்ன தண்டனை? ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் கொன்று குவித்த அப்பாவிகளின் மரணத்திற்கான தண்டனையாக, புஸ்சிற்கு புனித நத்தார் தினத்தில் தூக்கிலிடப்பட்டால் இந்த உலகம் மௌனம் சாதித்திருக்குமா? என்ன தான் அநியாயங்கள் செய்தாலும் இஸ்லாமியரின் புனித நாளான ஹஜ் புனித நாளில் சாதாமை தூக்கிலிட்டதை ஏற்றுக் கொள்ள முடியாமலுள்ளது. உலக வல்லரசுக்களையே எதிர்த்து நின்று போரிட்டு தோல்வியிலும் சரணடையாமல் துரோகிகளின் காட்டிக் கொடுப்பில் பிடிபட்டு மரணதண்டனை பெற்ற பின்னும் அச்சமின்றி தூக்குமேடை சென்ற அந்த வீரனை போற்றாமல் இருக்க முடியாது. இதற்கான பலனை தண்டனையை அமெரிக்கா மிக விரைவில் பெறும்.

ஈழத்திலிருந்து

ஜானா

Link to comment
Share on other sites

சித்தன் என்ற -கருத்தாளன் சொன்னதுபோல்......

சதாமுக்கு கிடைத்த தண்டனை - நியாயமானது!

அமெரிக்கா அதை கொடுத்ததுதான் தவறு!

உள்ளூர்"ஷியா"களால் - சதாம் -மரணதண்டனை பெற்றிருந்தால்...

எம்மில்- எவ்ளோபேர் -இதே அனுதாபத்துடன் - அவர் மரணத்தை -

நோக்கியிருப்போம்?

அமெரிக்காவின்மீதுள்ள -கோபமே-

அப்பிடி போடு -இப்பிடி போடு -பண்ணுறோம்!!

அவர் சார்ந்த- சன்னி இனத்தவர் தவிர்த்து.......!!

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறையில் பறவைகளுக்கு உணவளித்த சதாம்!

Tuesday, 02 January 2007(http://www.sooriyan.com)

பாக்தாத்: சிறையில் இருந்த காலத்தில் சதாம் உசேன் தனக்கு தரப்பட்ட உணவிலிருந்து கொஞ்சம் எடுத்து வைத்து பறவைகளுக்கு இரையாகப் போட்டதாக அவருடைய ஆண் செவிலியர் ராபர்ட் எல்லீஸ் கூறியுள்ளார்.

சதாம் உசேனின் மறைவுக்குப் பிறகு அவருடைய மறுபக்க செய்திகள் படிப்படியாக வெளியாகி வருகின்றன.

சதாம் உசேனின் அமெரிக்க படையினரிடம் சிறைப்பட்டிருந்தபோது அவருக்கான செவிலியராக பணியாற்றியவர் ராபர்ட் எல்லீஸ். அமெரிக்கரான இவர் சதாம் சிறையில் இருந்தபோது எப்படி நடந்து கொண்டார் என்பதை வெளியிட்டுள்ளார்.

ராபர்ட் எல்லீஸ் கூறியதாவது: தினமும் இரண்டு முறை நான் சதாமை பரிசோதிப்பேன். தினசரி அவரது உடல் நலம், மன நலம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது.

முதலில் அறைக்குக் கீழே உள்ள துளை வழியாக சாப்பாட்டுத் தட்டை உள்ளே தள்ளி விட்டனர். இதை சதாம் ஏற்கவில்லை. கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கத்திற்கு சாப்பாடு தருவது போல தனக்கு தருவதை அவர் விரும்பவில்லை.

இதனால், கதவைத் திறந்து உள்ளே போய் சாப்பாடு கொடுத்தனர். அதை அவர் ஏற்றுக் கொண்டார். தனக்கு தரப்படும் சாப்பாட்டிலிருந்து சில பகுதிகளை தனியாக அவர் எடுத்து வைப்பார். அவ்வப்போது அவரை வெளியே உலவ விடுவோம்.

அந்த சமயத்தில் தான் எடுத்து வைத்த சாப்பாட்டை பறவைகளுக்கு இரையாக கொடுப்பார். அவைகள் சாப்பிடுவதை ரசித்துப் பார்ப்பார். அங்குள்ள செடிகளுக்கும் அவர் தண்ணீர் ஊற்றுவார்.

அப்போது, நான் சிறு வயதில் விவசாயம் செய்துள்ளேன். அந்த அனுபவம் இன்னும் எனக்குள் உள்ளது என்பார்.

பிறகு தான் சிகரெட் பிடிக்கும்போது என்னையும் புகை பிடிக்குமாறு அன்போடு கூறுவார்.

சிறை அறையில் இருக்கும்போது தனது சிறு வயது கதைகளை அவர் சொல்வார். சிறு வயதில் தான் செய்த சேஷ்டைகளை புன்முறுவலோடு வர்ணிப்பார்.

ஒருமுறை அவரது குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் போய் விட்டதாம். அப்போது இரவெல்லாம் விழித்திருந்து தனது குழந்தையைப் பார்த்துக் கொண்டாராம்.

எனது சகோதரர் அமெரிக்காவில் இறந்தபோது நான் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள கிளம்பினேன். அதை அறிந்த அவர் என்னைக் கட்டித் தழுவிக் கொண்டு நான் உனது சகோதரன், கவலைப்படாமல் போய் வா என்று அன்போடு அனுப்பி வைத்தார். அவரது அன்பு என்னை மிகவும் கலங்கச் செய்து விட்டது.

சாவைப் பற்றி அவர் ஒருபோதும் கவலைப்படதாகவே தெரியவில்லை. சாவு குறித்து யாரிடமும் அவர் பேசியதும் இல்லை. நான் எனது ஆட்சியை தவறாக நடத்தவில்லை. நான் செய்த அனைத்துமே எனது நாட்டு மக்களின் நன்மைக்காகத்தான் என்று கூறிக் கொண்டே இருப்பார் சதாம் என்றார் எல்லீஸ்.

Link to comment
Share on other sites

முதலே இணைக்கப்பட்டுள்ளது என்னால் சதாம் துக்கிலடப்பட்டார் என்ற தலைப்பிலும் கிசானால் பொழுதுபோக்கு தலைப்பிலும் இணைக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புஷ் மட்டுமா மகிழ்ச்சியை தெரிவிக்கலாம் நானும் கங்காரு படையணி சார்பில் எனது மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன்

:lol::lol::lol::D:D:D

ஒரு மனிதன் இறந்த பின் மகிழ்ச்சி தெரிவிப்பதா?இதைப்போல் ஒரு காட்டுமிராண்டித்தனம் வேறொன்றுமில்லை.மனித நாகரிகமற்ற செயல். :angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.