Jump to content

ராஜீவ் கொலைவழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு :-


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

ராஜீவ் கொலைவழக்கில்  சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு :-


முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ் கொலைவழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரை விடுவிப்பதாக முடிவு எடுத்துள்ளதாகவும், அதற்கான கருத்தை கேட்டு மத்திய அரசின் உட்துறைச் செயலருக்கு, தமிழக தலமைச்செயலர் ஞானதேசிகன் கடிதம் எழுதி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தின் இந்தக்கைதிகளை விடுதலை தொடர்பான முடிவுக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவை பெற்றிருக்கிறது மத்திய அரசு.


குற்றப்புலனாய்வுப் பிரிவால் குற்றம் சட்டப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்ட  கைதிகளுக்கு, குற்றவியல் சட்டப்பிரிவு 435 இன் படி மானில அரசானது மத்திய அரசின் ஒப்புதலுடன் மத்திய  இந்தக்கைதிகளை விடுதலை செய்யலாம் என சட்டம் சொல்கிறது.


தமிழ் நாட்டில் மானிலத்தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் இந்தக்கடிதம் முக்கியத்துவம் பெறுகிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129605/language/ta-IN/article.aspx
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது விடியட்டும் அந்த (அப்) பாவிகளுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் அரசியல் சூதாட்டம்.
முன்பும் பல தேர்தல்கள் வந்தன அப்போது எடுக்காத முடிவை இப்போது எடுத்ததற்கான காரணம் சீமானின் அரசியல் பிரவேச அச்சம் என கொள்ளலாமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன்,முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் கருத்தைக் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசின் இந்த நடவடிக்கை குறித்து பல்வேறு தரப்பினர் சந்தேகங்களை எழுப்பியபோதும், 7 பேரையும் விடுதலை செய்வதற்கான இந்த முயற்சியை வரவேற்றுள்ளனர்.7 பேரின் விடுதலை தொடர்பான மத்திய அரசின் கருத்தினை காலம் தாழ்த்தி பெற முயற்சிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறிய விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், முடிவு நல்லெண்ண அடிப்படையில் இருந்தால் வரவேற்கத்தக்கது என்றார்.

   

தமிழக அரசின் இந்த முடிவை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் வரவேற்றுள்ளார். 7 பேரை விடுவிக்கும் விஷயத்தில் மத்திய அரசின் கருத்தை கேட்கத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 7 பேரையும் விடுவிக்க மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என பழ.நெடுமாறன் வலியுறுத்தி உள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=152573&category=IndianNews&language=tamil

இராசீவ் கொலை வழக்கில் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய 7 தமிழர்கள், தாங்கள் 20 ஆண்டுகளைக் கடந்தும் நீண்ட காலம் சிறையில் வாடுவதைக் குறிப்பிட்டு, தங்களை விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை மனு செய்திருந்தனர். இதனடிப்படையில், தமிழ்நாடு அரசு இந்த ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வது என முடிவு செய்து நடுவண் அரசின் உள்துறை அமைச்சகத்திற்குக் கருத்துக் கேட்டு இன்று, கடிதம் அனுப்பியிருக்கிறது. அண்மையில் வெளியான உச்ச நீதிமன்ற அரசியல் அமர்ப்பின் தீர்ப்பிற்கு ஏற்ப, இந்த கடிதத்தைத் தமிழ்நாடு அரசு அனுப்பியிருக்கிறது.

இராசீவ் கொலை வழக்கில் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய 7 தமிழர்கள், தாங்கள் 20 ஆண்டுகளைக் கடந்தும் நீண்ட காலம் சிறையில் வாடுவதைக் குறிப்பிட்டு, தங்களை விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை மனு செய்திருந்தனர். இதனடிப்படையில், தமிழ்நாடு அரசு இந்த ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வது என முடிவு செய்து நடுவண் அரசின் உள்துறை அமைச்சகத்திற்குக் கருத்துக் கேட்டு இன்று, கடிதம் அனுப்பியிருக்கிறது. அண்மையில் வெளியான உச்ச நீதிமன்ற அரசியல் அமர்ப்பின் தீர்ப்பிற்கு ஏற்ப, இந்த கடிதத்தைத் தமிழ்நாடு அரசு அனுப்பியிருக்கிறது.

   

இது வரவேற்கத்தக்கது. ஏழு தமிழர் விடுதலை நோக்கிய முயற்சியில், முக்கியமான ஒருபடி முன்னேற்றமாகும். தமிழ்நாடு அரசின் முடிவை ஏற்று, இந்திய அரசு இந்த ஏழு தமிழர்களின் விடுதலைக்கு ஒத்துழைப்பதற்கு முடிவு செய்து உடனே அறிவிக்க வேண்டும் என இந்திய அரசை தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னணம்,

பெ. மணியரசன்

தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

http://www.seithy.com/breifNews.php?newsID=152575&category=IndianNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தை ஜெயா அம்மையார் தேர்தல் நேரத்தில் முன்னிறுத்துவதால் சில சந்தேகங்கள் இருந்தாலும்... தேர்தல் நேரத்தில் நன்மையும் நடக்கலாம்.. என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இந்த அப்பாவிகள் விடுதலை ஆகனும் அதுதான் தமிழ் மக்களின் பொது விருப்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசர்ப்படாதீங்கப்பா!

இப்பத் தான் கடிதமே எழுதியிருக்கிறாங்கள்!

கொஞ்சம் பொறுங்கோ...!

விடுதலையாகி வரட்டும்!

 

Link to comment
Share on other sites

எனக்கு ஒரு சந்தேகம் இவர்கள் அனைவரும் கடிதம் எழுதி முத்திரை ஒட்டி அனுப்புவார்களா இல்லை அப்படியே குப்பையில் பேடுவர்களா ???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.