Jump to content

தமிழ் அரசுக் கட்சியும் ஆள்பிடி அரசியலும்


Recommended Posts

தமிழ் அரசுக் கட்சியும் ஆள்பிடி அரசியலும்
 

article_1455339754-sanjay.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், பலம் வாய்ந்த கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சி, மஹிந்த ராஜபக்ஷவின் பாணியில், பிற கட்சிகளை நசுக்க முனைகிறது என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கிறது.

அண்மையில், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன், தமிழ் அரசுக் கட்சியில் இணைந்து கொண்டதையடுத்தே, இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், அதன் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எபவினால், அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டவர் தான் இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன்.

மாகாணசபை உறுப்பினராக இருந்த அவரை, கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியில் நிறுத்தியிருந்தது ஈ.பி.ஆர்.எல்.எப்.

வன்னி மாவட்டத்தில் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நால்வரில், சிவசக்தி ஆனந்தன் மற்றும் சிவமோகன் ஆகியோர் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியை சேர்ந்தவர்கள். மற்றைய மாவட்டங்களில், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் எவரும் தெரிவாகவில்லை.

நாடாளுமன்றத்தில், 16 உறுப்பினர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருக்கின்ற நிலையில், அதில் இரண்டு பேர் மட்டும் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

இப்போது சிவமோகன் தமிழ் அரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதையடுத்து, சிவசக்தி ஆனந்தன் மட்டும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

ஏற்கெனவே, சுரேஷ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், அவருக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்க மறுக்கப்பட்ட விவகாரத்தால், தமிழ் அரசுக் கட்சிக்கும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிக்கும் இடையில் வெளிப்படையான முறுகல்நிலை நீடித்து வருகிறது.

கூட்டமைப்பின் தலைமையை சுரேஷ் பிரேமச்சந்திரன் பகிரங்கமாக விமர்சிப்பதும், குற்றம்சாட்டுவதும் வழக்கமான நிகழ்வாகவே மாறியிருக்கிறது. தமிழ் மக்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியத்தை அளிக்கவுமில்லை. இந்தப் பின்னணியில், தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தில், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியும் பங்களித்திருந்தது.

தமிழ் மக்கள் பேரவை மாற்றுத் தலைமையை உருவாக்கும் முயற்சி என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த போது, அவ்வாறான நோக்கம் எதுவும் இல்லை என்றும், இது வெறும் மக்கள் அமைப்பே, இதற்கு அரசியல் நோக்கங்கள் கிடையாது என்றும் இணைத்தலைவரான முதலமைச்சர் மற்றும் ஏற்பாட்டாளர்கள் கூறியிருந்தனர்.

ஆனால், சுரேஷ் பிரேமச்சந்திரன் மட்டும், அவ்வாறு கூறவில்லை. தமிழ் மக்கள் பேரவை எதிர்காலத்தில், அரசியல் கட்சியாக மாற்றமடையலாம் என்றும், மாற்றுத் தலைமையாக உருவெடுக்கலாம் என்றும், கூறியிருந்தார்.

அதெல்லாம் சம்பந்தனின் கையிலேயே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், தமிழ் அரசுக் கட்சியின் ஆதிக்கத்தை உடைப்பதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் எடுத்த முயற்சிகள் எதுவுமே வெற்றி பெறவில்லை. தமிழ் அரசுக் கட்சிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிக்கும் இடையில், இந்த முட்டுப்பாடுகள் கடந்த பல ஆண்டுகளாகவே நீடித்து வந்தன.

வலி.கிழக்கு பிரதேசசபையில் தலைவராக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியைச் சேர்ந்தவரை, வரவு - செலவுத் திட்டத்தை தோற்கடித்து, ஈ.பி.டி.பியுடன் இணைந்து, தமிழ் அரசுக் கட்சியினர் பதவியில் இருந்து நீக்கியிருந்தனர். தமிழ் அரசுக் கட்சியின் அந்தச் செயற்பாடு கூட்டணி தர்மத்தை மீறியதாக இருந்தது. அதே குற்றச்சாட்டுத் தான் இப்போது மீண்டும் வந்திருக்கிறது.

அதாவது, கூட்டமைப்பில் உள்ள மற்றொரு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரை, தமிழ் அரசுக் கட்சி தன் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனை திட்டமிட்டு. வலிந்து இழுத்துக் கொண்டதா அல்லது, அவராகவே அதிருப்தியில் விலகிக் கொண்டாரா என்பது மற்றொரு விடயம்.

எவ்வாறாயினும், ஒரே அணியில் இருக்கின்ற இரண்டு கட்சிகளுக்கு இடையில், கட்சி தாவலை ஊக்குவிப்பதோ, அதனை அங்கிகரிப்பதோ கூட்டணி தர்மத்துக்கு முரணானது.

கூட்டமைப்பு வலுவானதாக இருக்க வேண்டுமாயின் அதில் உள்ள பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான உறவுகள் சுமுகமானதாக இருக்க வேண்டும்.

எப்போதுமே கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையில், பிரச்சினைகள் தனியே பதவிப் போட்டியால் மட்டும் எழுவதில்லை. இதுபோன்ற கட்சி தாவல்களாலும் கூட ஏற்படுவது வழக்கம்.

தற்போதைய கூட்டு அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு முன்னதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தியிருந்தன என்பது பலருக்கும் நினைவிருக்கலாம். அதில் முக்கியமான விடயம், ஒரு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரை, மற்றக் கட்சியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதேயாகும்.

அறுதிப் பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு சில ஆசனங்களே தேவைப்படும் நிலையில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி, தனது உறுப்பினர்களை இழுத்துக் கொள்ளும் என்ற கவலை சுதந்திரக் கட்சிக்கு இருந்தது.

ஏற்கெனவே மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது இந்த உத்தியைக் கையாண்டு தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நாடாளுமன்றத்தில் பெற்றுக் கொண்டார் என்பதால், சுதந்திரக் கட்சிக்கு அந்த அச்சம் வந்ததில் ஆச்சரியமில்லை.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, ஐக்கிய தேசியக் கட்சியை மட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசையும், கூட உடைத்து சிலரைத் தம் பக்கம் இழுத்துக் கொண்டார்.

எதிரணியில் உள்ள கட்சிகளை உடைத்துப் பலவீனப்படுத்தி, தனது அதிகாரத்தைப் பலப்படுத்திக் கொள்வதில் அவர் வெற்றிகரமாகவே செயற்பட்டிருந்தார். அதனால் தான், மஹிந்த ராஜபக்ஷ பாணியில், தமிழ் அரசுக் கட்சி செயற்படத் தொடங்கியுள்ளதான விமர்சனங்கள் தோன்றியிருக்கின்றன.

தமிழ் அரசுக் கட்சி, பங்களாளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை, தம்பக்கம் இழுத்துக் கொண்டது, கூட்டணி தர்மத்துக்கு ஒவ்வாத செயல் என்ற கருத்தில் எவருக்கும் கருத்து மாறுபாடு இருக்க முடியாது.

இந்த தவறான முன்னுதாரணம், வருங்காலத்தில் தமிழ் அரசுக் கட்சிக்கே கூட ஆபத்தானதாகவும் அமைய வாய்ப்புகள் இருக்கின்றன.

இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், தமிழ் அரசுக் கட்சி சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர், மாகாணசபை உறுப்பினர்களாக இருக்கின்ற வேறு பலரும் கூட, ஏனைய பங்காளிக் கட்சிகளின் வழியாக அரசியலுக்குள் நுழைந்தவர்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், தமிழ் அரசுக் கட்சி முதன்மை இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக, ஆள்பிடி அரசியலை செய்ய முயன்றால், அது பங்காளிக் கட்சிகளுக்கிடையில் இன்னும் விரிசலையே ஏற்படுத்தும்.

அதேவேளை பங்காளிக் கட்சிகளும், எவ்வாறான தமிழ் அரசுக் கட்சியுடன் நடந்து கொண்டனஎன்பதையும் கவனத்தில் கொள்ளாமல் விட முடியாது.

உதாரணத்துக்கு, தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அரசியலுக்கு வந்து, வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவராக பதவி வகித்த, ந.அனந்தராஜ், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எப்வினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.

தமிழ் அரசுக் கட்சியின் பொருளாளரான எவ்.எக்ஸ்.குலநாயகம் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் பதவியை குறுக்கு வழியில் பெறுவதற்கு தடையாக இருந்ததால், நகரசபை நிர்வாகத்தை, கொண்டு நடத்த முடியாத நிலைக்கு உள்ளாக்கப்பட்டவர் தான் அனந்தராஜ்.

அந்தப் பிரச்சினைக்குத் தமிழ் அரசுக் கட்சி தீர்வு காணத் தவறியதால், கட்சியின் தலைமை மீது அதிருப்தியுற்றிருந்த அவரை, சுரேஷ் பிரேமச்சந்திரன் வேட்பாளராக நிறுத்தினார்.

பருத்தித்துறை தொகுதியைச் சேர்ந்த அனந்தராஜ், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியினால், வேட்பாளராக நிறுத்தப்பட்டமைக்கு மற்றொரு காரணம், அதே தொகுதியைச் சேர்ந்த, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைத் தோற்கடிப்பது தான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எப்வின் அந்த வியூகம் முற்றாகவே சிதைந்து போனது. யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட, சுரேஷ் பிரேமச்சந்திரனும், அனந்தராஜும் வெற்றிபெற முடியவில்லை. ஆனால், சுமந்திரன் வெற்றி பெற்றார்.

இப்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தமிழ் அரசுக் கட்சியின் பக்கம் சாய்ந்து கொண்டதும், தம்மை அழிக்க அந்தக் கட்சி முனைவதாக ஈ.பி.ஆர்.எல்.எப் குற்றம்சாட்டுகிறது.

இந்தநிலைக்கு, இப்போது அடித்தளம் இடப்படவில்லை, ஏற்கெனவே பிரதேசசபை மட்டத்தில், மாகாணசபை மட்டத்தில் போடப்பட்ட விதை தான் இப்போது வினையாக வந்திருக்கிறது.

மாகாணசபைத் தேர்தலில், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது, சகோதரரான க.சர்வேஸ்வரனை அமைச்சராக்க முயன்றார்.

அந்தக் கட்டத்தில், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில், தெரிவான பொ.ஐங்கரநேசனை அமைச்சராக்கினார் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.அப்போது, தமது கட்சிக்குத் தெரியாமலும், தமது அனுமதியைப் பெறாமலும் ஐங்கரநேசன் அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டதான குற்றச்சாட்டு ஈ.பி.ஆர்.எல்.எப்பினால் சுமத்தப்பட்டது.

தமிழ் அரசுக் கட்சி தார்மீக நெறிமுறைகளுக்கு அப்பால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தனது நிலையைப் பலப்படுத்தி வருகிறது என்பது உண்மை.

அதற்காக பங்காளிக் கட்சிகள் நியாயபூர்வமாகவே நடந்து கொண்டிருக்கின்றன என்றும் கூறமுடியாது. இத்தகைய நிலைக்கு அவர்களும் காரணம் என்பதை ஏற்கத் தான் வேண்டும்.

- See more at: http://www.tamilmirror.lk/165945/%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%AE-%E0%AE%86%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%AE-#sthash.qlooTjCI.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம் வேக‌ ப‌ந்து வீசாள‌ர்க‌ள் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்சில் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்வ‌து முட்டாள் த‌ன‌ம்...........................
    • இந்தத் தேர்தலில் எவ்வளவு அதிகமாக போனது என்று தெரியவில்லை. ஆனால் மறியலில் இருக்கும் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி ஒரு தேர்தலில் அந்தத் தொகுதி மக்கள் எல்லாருக்கும் லட்சக் கணக்கில் பணத்தை விநியோகித்தது தெரியும். 😎
    • த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌ இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000 2000ரூபாய் எடுப‌டாது...................... நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................
    • அதுதான்…. இல்லை. அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................     இந்த‌ பெடிய‌னுக்கும் மேடையில் பேசிக்கு கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌க் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.