Jump to content

யாழ் பல்கலைக்கழகத்தில் காமலீலைகளில் ஈடுபடவேண்டாம் என எச்சரிக்கை சுவரொட்டிகள்


Recommended Posts

2 hours ago, ஜீவன் சிவா said:

வரம்பு என்றால் என்ன?
அது யாரால் ஏன் உருவாக்கப்படுகிறது?

பிளீஸ் கொஞ்சம் புரியவையுங்களேன்.

கிழிஞ்சுது போ..நீங்களாக போய் வலையில விழுந்து விட்டீர்கள்..இப்ப அவர் தலையும் புரியாமல் காலும் புரியாமல் எதையாவது எழுதி தள்ள போறார். 

Link to comment
Share on other sites

16 hours ago, colomban said:

யாழ்.பல்கலைக்கழகத்தில் விரிவுரை மண்டபங்களில் சிங்கள மாணவ ஜோடிகள் அநாகரீகமாக நடந்து கொள்ளும் நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்படி விரிவுரை மண்டபங்களில் “ரொமான்ஸ் பண்ணாதீர்கள்” என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

http://www.newtamils.com/fullview.php?id=24549

 

 

விரிவுரை நடந்து கொண்டிருக்கும் பொழுது கொஞ்சிக் கூத்தாடினால் பிழை..... மற்றும்படி ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

நீங்கள் கூறுவது ஒரு விதத்தில் சரிதான்!

நான் எழுத வந்த விஷயம் பிழையான தொனியைத் தந்து விட்டது போல உள்ளது!

தியேட்டர்களில் படம் பார்ப்பது ஒரு நல்ல உதாரணம்! பக்கத்தில் இருவர் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தால் படம் பாக்கும் உங்கள் கவனம் சிதறுகின்றது என்று வைத்துக் கொள்வோம்! என்ன செய்வீர்கள்? துண்டுப் பிரசுரம் ஓட்டுவீர்களா? வேறு தூரத்தில் உள்ள இருக்கைகளில் போய் இருப்பீர்களா?

காதலிப்பவர்கள் எல்லாம் காவாலிகள் என்பதை எமது வளர்ப்பு முறை எம்மில் ஆழமாகப் புதைத்து விட்டது! அதனால் தான் எமக்கு இவ்வாறான செயல்கள் ஆத்திரமூட்டுகின்றன என நினைக்கிறேன்!இந்த மாதிரி நம்பிக்கைகளால் எந்தனை தற்கொலைகள்...ஏற்பட்டிருக்கின்றன என்பதற்கு எமது கிணறுகளும், வேப்பமரத்துக் கொப்புகளும், தண்டவாளங்களும், சாட்சி கூறும்! 

கதவுகளை நாம் இறுக்க மூடுவதால் தான்.. எத்தனையோ பெண்கள்.. விலை கொடுத்து மணமகனை வாங்கவியலாதவர்கள் பெருமூச்சுக்களின் கொதிப்பில்.. தங்கள் இளமையைத் தொலைத்து விடுகின்றார்கள்!

மேலே் எழுதப்பட்ட  வரிகளை மற்றும் கருத்தில் எடுங்கள்!

 

 

உங்களுடைய கருத்தை நான் முன்னாடியே புரிந்ததால்தான் 

எனது எண்ணம் வேறு ...
ஆனால் செய்தியின் மூலமும் 
செயற்பாடும் தேவையானது என்று 
ஆரம்பம் முதலே சொல்லிவருகிறேன்.

சமூகம் சார்ந்த பிழையான எண்ணங்கள் 
காதலிக்கிறோம் எனும் பெயரில் நடக்கும் சீர்கேடுகள் 
ஒரு நாட்டு கலாச்சார பண்பாட்டு நிலைபாடுகளுக்கு 
ஒரு பல்கலைகழக வாளாகம் முண்டு கொடுக்க வேண்டியதில்லை 

அமெரிக்காவிலேயே ஓவரு கொலேஜ்ஜில் ஓவரு விதிமுறை 
அது அவர்கள் கல்வி வளாகத்தின் எதிர்கால வளர்ச்சி பற்றிய 
எண்ணங்கள் சிந்தனைகளால் விதித்து வைத்திருக்கிறார்கள் 

எனது காதல் ஒரு பெண்கள் காலேஜ்ஜில் இருந்தது 
அங்கு ஆண்கள் யாரும் இரவு 8 மணிக்கு பின் நிற்க முடியாது 
(அங்கு இந்தியன் பெண்கள் பல பேர் படிப்பார்கள். இவரது இரண்டு சினேகிதிகள் இரவு 
வேலை செய்தால் கம்பசிட்குள் நடந்து திரிவார்கள் யாராவது அங்கு இல்லாதவர்கள் இருக்கிறார்களா என்று பார்க்க.அந்த இரவுகளில் நான் அங்கேயே படுத்து விடுவேன். ஒரு சிக்கல் பாத்ரூம் போக முடியாது.  அதற்காக காலேஜ் பொலிசியை குறை கூற முடியுமா ?) 
நான் படித்தது வெள்ளி சனி எனது அறையிலேயே  யாரவது 
பெட்டைகள் காலையில் கதவு திறக்க படுத்திருக்கும்
 இரவு வெறியை போட்டுவிட்டு அந்த அந்த இடங்களிலேயே படுத்து விடுவார்கள். 
நானும் சில நேரம் மேல் வீடு கீழ் வீடில் படுப்பதுண்டு 

இங்கே இந்த நிலை இருக்கும்போது ....?
அங்கு கட்டி தலுவுறவர்களுக்கு இடம் விட்டு தள்ளி இருந்துதான் படிக்க வேண்டுமா ?

கம்பஸ் வளாகத்தின் பொலிசியை இந்த அளவில் 
விவாதிக்கும் எமது அறிவுதான் கேள்விக்கு உடபடுத்த பட வேண்டியது.
கம்பஸ் பொலிசி இடம் சூழல் சார்ந்த அவர்களுடையது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை அடக்க நினைப்பவரிடம் சுதந்திரமாக இரு....
சுதந்திரமாக இருக்க விடுபவரிடம் அடங்கி இரு....

 

இது நம்ம மகா பாரத்தில் படிச்ச ஞாபகம் 
இதைதான் நீங்களும் சொல்கிறீர்கள் 

அதாவது இதன் எதிர்விளைவை சொல்கிறீர்கள்.
உங்கள் கருத்து சமூகம் சார்ந்து இருக்கிறது.

நான் கம்பஸ் கேட்டுக்குள்ளேதான் நிற்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/2/2016 at 10:12 AM, colomban said:

யாழ்.பல்கலைக்கழகத்தில் விரிவுரை மண்டபங்களில் சிங்கள மாணவ ஜோடிகள் அநாகரீகமாக நடந்து கொள்ளும் நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்படி விரிவுரை மண்டபங்களில் “ரொமான்ஸ் பண்ணாதீர்கள்” என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

 

 

சிங்கள மாணவ ஜோடிகள்

1 -விரிவுரை மண்டபத்திற்குள் ஜோடியாக இருந்தல் மற்றும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருத்தல் மற்றும் முத்தமிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மாணவர்களால் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் மேற்படி சிங்கள

2 - மாணவர்களிடம் இது தொடர்பாக தெரியப்படுத்தியபோதும் அது தொடர்பாக அந்த மாணவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளாத நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் இந்த திடீர் சுவர் ஒட்டி முடிவை எடுத்துள்ளது.

இந்த சுவரொட்டி விரிவுரை மண்டபங்களில் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ரொமான்ஸ் பண்ணுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு ஒட்டப்பட்டிருந்தன.

12243231_952292941520387_176623523067517

11 hours ago, ஜீவன் சிவா said:

வரம்பு என்றால் என்ன?
அது யாரால் ஏன் உருவாக்கப்படுகிறது?

பிளீஸ் கொஞ்சம் புரியவையுங்களேன்.

இது ஒரு பாடசாலை 

வகுப்புக்குள் இவை இவை கூடாது என்ற கட்டுப்பாடுகளும் வரம்புகளும் இருக்கக்கூடாது என்கிறீர்களா?

மேலே செய்தியில் நான் ஒன்று இரண்டு என காட்டியபடி முறையாகத்தான் செய்யப்பட்டுள்ளது.

இதில் வகுப்பறைக்கு வெளியில் உள்ள விடயங்கள் பற்றி எந்தக்கட்டுப்பாடும் இல்லை.

இதற்குள் தலைவரது பிள்ளை பிறப்ப எப்படி உங்களால் நோக்கப்படுகிறது

இங்கு புகுத்தப்படுகிறது

அடுத்த கேள்வியாக உங்கள் சார்ந்து தானே கேள்வி வரும்

அதற்கு நீங்க தயாரா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, colomban said:

தமிழர்களின் குறுகிய புத்திக்கு இந்த எச்சரிக்கை சுவரொட்டி ஓர் நல்ல எடுத்துக்காட்டு.

இல்லை ஐயா

இலங்கையில் இரு தேசிய இனங்கள் உண்டு

அவைக்கென தனியான மொழி

பண்பாடு

 பழக்கவழக்கங்கள் உண்டு.

மனங்களால் பிரிவடைந்துவிட்ட இவ்விரு இனங்களும் ஒன்றாக வாழ முடியாதநிலை

முள்ளிவாய்க்காலுக்குப்பின்

அகதிமுகாமுகளுக்குள் அடைக்கப்பட்டபின்

இது மேலும் வலுவடைந்துவிட்டது தான் உண்மை.....

 

 

 

13 hours ago, புங்கையூரன் said:

பலகலைக்கழக வாழ்வு ஒருவரது வாழ்க்கையைப் பண்படுத்துகின்றது !

எனது நண்பர்கள் பலர் (தமிழர்கள் உட்பட) அந்தக் காலத்துக் காதல் பறவைகள் தான்!

காமம் வேறு.... காதல் என்பது வேறு..!

இவ்வாறு அறிவித்தல்கள் போட்டுத் தமிழினம் தன்னைத் தாழ்த்திக் கொள்ளக்கூடாது!

வள்ளுவன் இன்றிருந்தால்...மருந்து குடித்து மரணித்திருப்பான்!

அண்ணா

உங்களது பெருந்தன்மையோடு எனக்கு முரண்பாடில்லை

ஆனால் கண்முன்னால் நடப்பவை

அவற்றை தொடரவிடுவதா? கட்டுப்படுத்துவதா என்ற நிலை வரும் போது......??

ஒரு உதாரணம் எழுதலாம் என நினைக்கின்றேன்

எமது ஊரினூடாகத்தான் நயினாதீவுக்கு சிங்களமக்கள் செல்வார்கள்

செல்லும் வழியில் எமது ஊரின் மத்தியிலுள்ள முருகன் கோயிலுக்கு முன்னால் ஆலமரமும் கிணறும் குளமும் இருப்பதால் 

அங்கு வாகனங்களை நிறுத்தி சாப்பிட்டு இளைப்பாறிச்செல்வார்கள்

ஆனால் அந்த இடத்தை அவர்கள் படுத்திவிட்டுப்போகும் செயல் இருக்கிறதே..

(மீனும் இறைச்சியும் எலும்புகளும் கழிவுகளும்...)

நான் அங்கிருந்த காலத்தில் அந்த ஆலமரத்திலும் அதைச்சுற்றியும் சில சுவரொட்டிகளை ஒட்டினோம்

அதையும் அவர்கள் சட்டை செய்யாதபோது.....??

சில முரண்பாடுகள் வந்தன. 

அதன் பின் தான் அப்பகுதி சுத்தமானது..

உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

இப்பொழுதும் அதிகமாக வரும் சிங்கள மக்களால்

யாழ்ப்பாணத்தின் அதிகமான பகுதிகள் இவ்வாறு அசிங்கப்படுத்தப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.

மற்றும்படி படிக்கும் வயது தான் காதலிக்கும் வயதுமாக இருப்பது நாம் கண்டு கடந்துவந்த பாதை தானே.....

அதில் எந்த முரண்பாடுமில்லை...

Link to comment
Share on other sites

ஏன்  அவசரம், விரைவில் யாழ்பாணத்தில் இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்ட பின்னனர் , இதெல்லாம் முடிவுக்கு வரும். அனால் நாங்கள் வழமை போல்  யாழ் களத்தில் வந்து விசில் அடிப்பம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

இல்லை ஐயா

இலங்கையில் இரு தேசிய இனங்கள் உண்டு

அவைக்கென தனியான மொழி

பண்பாடு

 பழக்கவழக்கங்கள் உண்டு.

மனங்களால் பிரிவடைந்துவிட்ட இவ்விரு இனங்களும் ஒன்றாக வாழ முடியாதநிலை

முள்ளிவாய்க்காலுக்குப்பின்

அகதிமுகாமுகளுக்குள் அடைக்கப்பட்டபின்

இது மேலும் வலுவடைந்துவிட்டது தான் உண்மை.....

 

 

 

அண்ணா

உங்களது பெருந்தன்மையோடு எனக்கு முரண்பாடில்லை

ஆனால் கண்முன்னால் நடப்பவை

அவற்றை தொடரவிடுவதா? கட்டுப்படுத்துவதா என்ற நிலை வரும் போது......??

ஒரு உதாரணம் எழுதலாம் என நினைக்கின்றேன்

எமது ஊரினூடாகத்தான் நயினாதீவுக்கு சிங்களமக்கள் செல்வார்கள்

செல்லும் வழியில் எமது ஊரின் மத்தியிலுள்ள முருகன் கோயிலுக்கு முன்னால் ஆலமரமும் கிணறும் குளமும் இருப்பதால் 

அங்கு வாகனங்களை நிறுத்தி சாப்பிட்டு இளைப்பாறிச்செல்வார்கள்

ஆனால் அந்த இடத்தை அவர்கள் படுத்திவிட்டுப்போகும் செயல் இருக்கிறதே..

(மீனும் இறைச்சியும் எலும்புகளும் கழிவுகளும்...)

நான் அங்கிருந்த காலத்தில் அந்த ஆலமரத்திலும் அதைச்சுற்றியும் சில சுவரொட்டிகளை ஒட்டினோம்

அதையும் அவர்கள் சட்டை செய்யாதபோது.....??

சில முரண்பாடுகள் வந்தன. 

அதன் பின் தான் அப்பகுதி சுத்தமானது..

உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

இப்பொழுதும் அதிகமாக வரும் சிங்கள மக்களால்

யாழ்ப்பாணத்தின் அதிகமான பகுதிகள் இவ்வாறு அசிங்கப்படுத்தப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.

மற்றும்படி படிக்கும் வயது தான் காதலிக்கும் வயதுமாக இருப்பது நாம் கண்டு கடந்துவந்த பாதை தானே.....

அதில் எந்த முரண்பாடுமில்லை...

விசுகர், ஒருவர் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அனுபவங்களே அவரது வாழ்க்கையையும், குணாதிசயங்களையும் வடிவமைக்கின்றன! அதனால் தான், பல்கலைக்கழகத்தின்  'சுதந்திர வலயத்துக்குள்' நடைபெறுபவற்றுக்குத் தடை போடுவதை நான் விரும்பவில்லை! ஒரு கல்லூரிக்கும், பலகலைக் கழகத்துக்கும் நிறைய வேறு பாடுகள் உண்டு!

ஒரு மிருகக் காட்சிச் சாலை விலங்கைப் போல... சட்ட திட்டங்கள் என்ற கூட்டுக்குள் வாழ்வதில் எனக்கு உடன்பாடில்லை!பார்வையாளர்களைத் திருப்திப் படுத்துவதே அதன் வாழ்க்கையாக அமைந்து விடுகின்றது!

ஒரு கலாச்சாரக் காவலர் ஒருவரின் ஒரு கத்திக்குத்து ஒன்று... நாட்டில் ஏறத்தாழ ஒரு இனக் கலவரைத்தையே உண்டாக்கி விட்டதை நான் நேரடியாக அனுபவித்தவன் என்ற வகையில் தான் அவ்வாறு கருத்திட்டேன்!

அதற்காக சமூக விரோத நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் படி நான் கூறவில்லை! நீங்கள் சொல்வது போன்ற சம்பவம் 'சாட்டிப்பகுதியில் 'வெள்ளைக் கடற்கரைப்' பகுதியிலும் அவதானித்தேன்! கோவிலடியை அசிங்கப் படுத்துவதைத் தடுப்பதற்கு, அந்தச் சூழலில் வாழும் மக்களுக்குச் சகல உரிமைகளும் உண்டு!சட்டத்தைக் கையில் எடுக்காத வரையில்... அவர்கள் எதையும் செய்யலாம்! பொதுவாக இவ்வாறான ' யாத்திரைகளில் ஈடுபடுபவர்கள் படிப்பறிவு குறைந்த கிராமத்துச் சிங்களவர்கள்! 

சாம, பேத... தான.. தண்டம் என்ற வழியில் போக வேண்டியது தான்!

கருத்திட்டமைக்கு நன்றி..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎12‎/‎2016 at 11:49 PM, ஜீவன் சிவா said:

வரம்பு என்றால் என்ன?
அது யாரால் ஏன் உருவாக்கப்படுகிறது?

பிளீஸ் கொஞ்சம் புரியவையுங்களேன்.

ஒரு ஆணும் பெண்ணும் நாலு சுவருக்குள் செய்யவேண்டியதை நடுவீதியில் அல்லது வகுப்பறையில் செய்வதுதான் வரம்புமீறல். அதுதான் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உள்ள வித்தியாசம்.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.