Jump to content

தேசிய கீதத்தை தமிழில் பாடியமையானது, பிரிவினைவாதத்திற்கு அரசு அடிபணிந்தமையாகும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

நானும் என்ன கேட்கப்போகிறேன் என்று உங்களுக்கும் புரியும் 

ஒரு 30 பேர் கூட தேறாத கூத்தமைப்பு ஏகப்பிரதிநிதிகளா அல்லது குழுவா இவர்களிடம் முழுத் தமிழரின்  இனப்பிரச்சினைக்கு  தீர்வு காணும் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கு ...?

கூத்தமைப்பு மக்களால் வாக்கு மூலம் தேர்வு செய்யப்பட்ட ஏகபிரதிநிதிகள் என்றால் இராணுவம் அரசாங்கத்தால் தமிழர் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விட வாக்களிப்பின்றி தேர்வு செய்யப்பட்ட ஏகபிரதிநிதிகள் .....இப்படி நானும் கூறலாம் ...அதுசரி ஒரு குழு மீது நடவடிக்கை எடுக்க ஏன் முழு சிங்களவனும்  எதிர்க்கிறான் .....?  அவனுக்கு இனவாதம் இல்லை நமக்கு தான் அதிகம் இருக்கு போல 

நல்லெண்ண சமிங்க்சை ,விட்டுக்கொடுப்பு , எல்லாம் இரண்டு பக்கமும் இருக்கவேண்டும் ....நாம் மட்டும் 100 வீத விட்டுக்கொடுப்புடன் ,நல்லெண்ணம் 
காட்டும்போது நமக்கேதோ நம்மை பார்க்கும் போது பெரிய மகானை போலத்தான் தோன்றும் ...எதிர் பக்கத்திலிருப்பவனுக்கு அரை அல்லது முழு பைத்தியமாக மட்டுமே தெரிவோம்.....நன்றாக குனிய வைத்து குதிரை ஏறுவார்கள் 

நீங்களும்  தாயகத்திலிருந்து எழுதுவதால்....

அண்மையில் ஒரு தாயகத்து உறவுடன் தொலைபேசியல் பேசியபோது..

(அவர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டவர்)

கிழக்கு தமிழர்கள் இசுலாமியர்கள் சார்ந்து மிகவும் கவனமாகவும் அவர்களது அரசியல் தெரிந்து மிகவும் சாதுரியமாகவும் செயற்படுகிறார்கள் என்றும்

ஆனால் பலகாலமாக இசுலாமியர்கள் வடக்கில் இல்லாததால்

வடக்குத்தமிழர்களை அவர்கள் முழுவதுமாக விழுங்கி ஏப்பமிட்டுவருவதாகவும்

இதனால் இனி வடக்குத்தான் அவர்களின் குறியாகவும் இலகுவான ஆக்கிரமிப்பாகவும் இருக்கப்போகிறது.

வடக்குத்தமிழர்கள் முழிப்பதற்குள் காலம் கடந்திருக்கும் என்றார்....

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விசுகு said:

நீங்களும்  தாயகத்திலிருந்து எழுதுவதால்....

அண்மையில் ஒரு தாயகத்து உறவுடன் தொலைபேசியல் பேசியபோது..

(அவர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டவர்)

கிழக்கு தமிழர்கள் இசுலாமியர்கள் சார்ந்து மிகவும் கவனமாகவும் அவர்களது அரசியல் தெரிந்து மிகவும் சாதுரியமாகவும் செயற்படுகிறார்கள் என்றும்

ஆனால் பலகாலமாக இசுலாமியர்கள் வடக்கில் இல்லாததால்

வடக்குத்தமிழர்களை அவர்கள் முழுவதுமாக விழுங்கி ஏப்பமிட்டுவருவதாகவும்

இதனால் இனி வடக்குத்தான் அவர்களின் குறியாகவும் இலகுவான ஆக்கிரமிப்பாகவும் இருக்கப்போகிறது.

வடக்குத்தமிழர்கள் முழிப்பதற்குள் காலம் கடந்திருக்கும் என்றார்....

விசுகண்ணை வலு சரியாக எழுதியிருக்கிறீர்கள் ....இவர்களது இடக்கரடக்கல் .....காணிகளை எப்படி அரக்குவது ....எல்லைப்புற காணிகளை எப்படி ஏப்பம் விடுவது என்ற ஜில்மாட் வேலைகளை கண்டுப்பிடிப்பதில்  கிழக்கு தமிழன் புலி....என்ன இவ்வளவு அனுபவத்தையும் பெற கொடுத்த விலைகள் தான் கொஞ்சம் அதிகம் .....பல எல்லைப்புற கிராமங்கள் முற்றுமுழுதாக ஏப்பம் விடப்பட்டுவிட்டது

பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூர், சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டா வெட்டுவான், பூரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் இவை அனைத்தும் தமிழன் ஒருகாலத்தில் வாழ்ந்த எல்லைப்புற கிராமங்கள் அதாவது புட்டும் தேங்காய்பூவும் போல வாழ்ந்த கிராமங்கள் ....இன்று முற்று முழுதான முஸ்லிம் கிராமங்கள் தமிழன் வாழ்ந்ததற்கான சுவடே இல்லை ....

சமீப காலமாக இவர்களது புதிய அரக்கல்களாக காத்தான் குடி நிரம்பி வழிவதால் மஞ்சந்தொடுவாய் பொது மயான காணியை விழுங்கவும்,
கல்முனைகுடி நிரம்பி வழிவதால் தரவைப்பிள்ளையார் ஆலய வீதி பெயர் மாற்றல் என்றும்  ஆரம்பித்த காணி விழுங்கும் படலம் கிழக்கு தமிழரின் ஒட்டுமொத்த முயற்சியின் காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது .....

தங்கள் முயற்ச்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல தங்களது கிழக்கு மாகாண சபையை பாவித்து இப்போது நகர அழகுபடுத்தல் என்று தமிழர்களின் 100 ஏக்கர் காணியை அபேஸ் பண்ணும் திட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளார்கள் ....கொடுமை என்னவென்றால் இந்த 100 ஏக்கர்  காணி எல்லைகள் எல்லாம் முஸ்லிம் பகுதியில் வயல்,வாய்க்காலூடாக செல்ல தமிழ்ப்பகுதிகளில் மட்டும் குடியிருப்புகளை ஊடறுக்கிறது ....

அதுதான் ஏற்க்கனவே சொன்னோமே இந்த நல்லிணக்க ,மன்னிப்பு ஒற்றுமை பாடமெல்லாம் வெளியில் இருந்து எடுக்கும் போது நல்ல சுதியாகத்தான் இருக்கும்....இங்கை வாங்கோ முன்னுக்கு நின்று நல்லிணக்கமாகுங்கோ அப்ப தெரியும் சேதி

இந்த நல்லிணக்கவான்கள்  எப்ப ஓடி முழிப்பாங்கள் ....தெரியுமா.....?
இவங்களின்ட சொந்த காணிக்குள்ளே சகோதரங்கள் வந்து கொட்டிலடிக்கும் போது சும்மா பொறி தட்டும் 

Link to comment
Share on other sites

அடைந்தால் தமிழ் ஈழம் அல்லது சாம்பல்மேடு என்பவர்களுக்கே அனைத்தும் சமர்ப்பணம் .

கடைசி இலங்கை -இந்திய ஒப்பந்தற்கு ஆவது ஒத்துழைத்து இருக்கலாம் .தலைவர் இந்தியன் ஆமிக்கே தண்ணி காட்டுகின்றார் என்றவர்கள் இன்று வந்து கத்தியழுது எதுவித பிரயோசனமுமில்லை 

மட்டகளப்பு எம்பியுடன் நேற்று உரையாடினேன் .வீட்டிற்கு ஒருவர் இருவர் என்று பிடித்த இழப்பில் இருந்து  பல குடும்பங்கள் இன்னமும் மீளவில்லை என்றார் .

வயது போன முஸ்லிம் வர்த்தகர்களை மூன்றாம் நாலாம் தரமாக வயது குறைந்த தமிழ் சிறுமிகள் மணம் முடிப்பதாகவும் பாஸ்போர்ட்டில் வயதை கூட போட்டு  மத்திய கிழக்கிற்கு செல்வதாகவும் ஆதங்கப்பட்டார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருந்தபோது

தமிழர்களில் பிச்சை எடுப்பவர்கள் இருந்ததில்லை

இது போன்ற திருமணங்கள் நடந்ததில்லை

நடக்கவும் முடியாது

அவர்களை அழித்தோம் என்பவர்கள் இப்பொழுது என்ன செய்கிறார்கள்????

அழித்தவர்களுக்கு இவற்றை தடுக்கும் திட்டங்களும் நோக்கங்களும் இருந்திருக்கவேண்டுமல்லவா?

அதிலும் எல்லாம் தெரிந்தவர்களுக்கு..?

அரசியலில் பட்டம் பெற்றவர்களுக்கு.....

ஏன் இந்த இழிநிலை தொடர்கிறது....

எந்த வேலைத்திட்டங்களுமில்லாது

தொழிற்பாடும் இல்லாது

வாயால் வடை சுடுவது மட்டுமே இவர்களது தாயக சேவை என்பதற்கு

எமது மக்களின் இன்றைய தொடர்நிலையே சாட்சி.

Link to comment
Share on other sites

புலிகள் செய்த இந்த நீண்ட யுத்தத்தால் தான் இவ்வளவு அழிவுகளும் என்று சொன்னது விளங்காமல் புலிகள் காலத்தில் இவை இல்லை என்று வியாக்கியானம் .

புலிகள் காலத்தில் அண்ணை மட்டகிளப்பில் தான் இருந்தவர் .

Link to comment
Share on other sites

புலிகள் மக்களின் தேர்வு இல்லை. ஆயுதத்தால் மக்களையும், மற்ற இயக்கங்களையும் மௌனித்து தாங்களாகவே ஏகபோக பிரதிநிதிகள் என்றவர்கள்.

இதுதான் உண்மை/நிஐம், இதை மறுத்து செய்யப்படும் எந்த அரசியலும் மக்களுக்கு நன்மை கிடைக்க விடாது. 

19 minutes ago, விசுகு said:

மற்றைய இயக்கங்களை அழித்தோம் என்பவர்கள் இப்பொழுது என்ன செய்கிறார்கள்????

அழித்தவர்களுக்கு இவற்றை தடுக்கும் திட்டங்களும் நோக்கங்களும் இருந்திருக்கவேண்டுமல்லவா?

அதிலும் எல்லாம் தெரிந்தவர்களுக்கு..?

அரசியலில் பட்டம் பெற்றவர்களுக்கு.....

ஏன் இந்த இழிநிலை தொடர்கிறது....

நிச்சயமாக இதை நிர்வாகம் தூக்கும் ஆனால் உண்மைகள் உறங்குவதில்லை. 

எமது உரிமைக்கான போராட்டத்தில் கடந்த பாதைகளில் புலிகளின் காலம் எமது வரலாற்றில் மன்னிக்க முடியாதது, இருந்தாலும் மறக்கப்பட வேண்டியது.

Link to comment
Share on other sites

தூக்கினாலும் தூக்காவிட்டாலும் உண்மை உண்மைதான் .

யுத்தம் செய்த கோரம் வடு எல்லாம் பற்றி மிக விபரமாக சொன்னார் மட்டகிளப்பு எம்பி .

புலிகள் மட்டும் என்று அவர் குற்றம் சொல்லவில்லை அனைத்து ஆயுத இயக்கங்கயும் பொதுவாக சொன்னார் .

நாளையும் யாழ் இந்து சார்பில் அவருடன் சந்திப்பு 

அதன் பின்னர் விபரமாக பதிகின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் ஒருத்தர்  ஊருக்கு போய் எதோ கொஞ்ச நல்ல காரியங்கள் செய்யுறன், முயற்சிக்கிறன் என்றெல்லாம் சொன்னவர் ..வெறும் புலி எதிர்ப்பு, சிங்களத்திடம் எப்படி கையேந்தும் கலை 101 இது போன்ற விஷ விதைகளை மட்டுமே தான் அங்கே நின்று மாய்ந்து மாய்ந்து விதைக்கிறீர்கலாக்கும். உருப்பட்டது உங்கள் சமூகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, arjun said:

அடைந்தால் தமிழ் ஈழம் அல்லது சாம்பல்மேடு என்பவர்களுக்கே அனைத்தும் சமர்ப்பணம் .

கடைசி இலங்கை -இந்திய ஒப்பந்தற்கு ஆவது ஒத்துழைத்து இருக்கலாம் .தலைவர் இந்தியன் ஆமிக்கே தண்ணி காட்டுகின்றார் என்றவர்கள் இன்று வந்து கத்தியழுது எதுவித பிரயோசனமுமில்லை 

மட்டகளப்பு எம்பியுடன் நேற்று உரையாடினேன் .வீட்டிற்கு ஒருவர் இருவர் என்று பிடித்த இழப்பில் இருந்து  பல குடும்பங்கள் இன்னமும் மீளவில்லை என்றார் .

வயது போன முஸ்லிம் வர்த்தகர்களை மூன்றாம் நாலாம் தரமாக வயது குறைந்த தமிழ் சிறுமிகள் மணம் முடிப்பதாகவும் பாஸ்போர்ட்டில் வயதை கூட போட்டு  மத்திய கிழக்கிற்கு செல்வதாகவும் ஆதங்கப்பட்டார் .

இங்க ஒருத்தர் இருக்கார் மட்டக்களப்பு எம் பீ யோட  கதைப்பார், தமிழ் தேசிய கூட்டணி, மாற்று இயக்க கூட்டங்கள், இப்படி ஊரில இல்லாத எல்லா கூட்டத்துக்கும் போய் வருவார். 
அப்ப ஒரு காலத்தில "போராடுறதுக்கு" என்று இயக்கத்தில் சேர்ந்த மாதிரி..சும்மா போய் வருவம். அவ்ளோதான். 
எல்லா உலக ஞானமும் தெரியும், நடக்கிற அநியாயங்களும் புரியும். என்ன பிரயோசனம்...
இவர் உண்மையில் எங்களை விட புலிகளுடன் நெருக்கமானவர்.
விடி காலையில் எழுந்தால் புலி சுப்ரபாதம்.
டிவியை போட்டால் புலி சுப்ரபாதம்.
செய்தித்தாள் படித்தால் புலி சுப்ரபாதம்.
யாழுக்குள் கிளிக்கினால் புலி சுப்ரபாதம்.
போகும் கூட்டத்தில் எல்லாம் புலி சுப்ரபாதம்.
ஐ.நா அறிக்கை விட்டால் புலி சுப்ரபாதம்.
எலெக்சன் நடந்தால் புலி சுப்ரபாதம்..
எலெக்சன் நடக்காட்டி புலி சுப்ரபாதம்..
எவனோ கொத்து ரொட்டி கடை விரித்தால் புலி சுப்ரபாதம்.
எம் பீ யோடு கதைத்தால் புலி சுப்ரபாதம்..
தம்பி யோடு கதைத்தால் புலி சுப்ரபாதம்.
கிழட்டு நாணா எம் இளம் தமிழ் பிள்ளைகளை கல்யாணம் செய்து மதம் மாற்றினால் புலி சுப்ரபாதம்.

முந்திரிக்கொட்டை மாதிரி நீங்க தானே தமிழ் மக்களின் அவலம் பற்றி கவலை கொண்டு, கரிசனை கொண்டு போராட போனீர்கள்... சரி இந்த இந்த நயவஞ்சக புலிகள் தான் உங்களை போராட விடலை.
இப்போ அவர்கள் இல்லை (7 வருடங்களாக), ஆனால் மக்களின் அவலங்கள் மட்டுமே எஞ்சி இருக்கிறது.
நீங்கள் சொன்ன மாதிரி தான் "வயது போன முஸ்லிம் வர்த்தகர்களை மூன்றாம் நாலாம் தரமாக வயது குறைந்த தமிழ் சிறுமிகள் மணம் முடிப்பதாகவும் பாஸ்போர்ட்டில் வயதை கூட போட்டு  மத்திய கிழக்கிற்கு செல்வதாகவும்".
இப்போ உங்கள் போராட்ட குணம் என்ன சொல்லுது?
 புலி சுப்ரபாதம்...
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சசி அண்ணா.. இப்ப கொலை கொள்ளை செய்திட்டு ஊரை விட்டு ஓடியாந்து அசைலம் அடிச்ச... ஒட்டுக்குழுக்களும் கொலிடே போகலாம் தானே... அந்த சந்தோசத்தில தான்.. அதுங்க தலைகால் புரியாமல் ஆடுறது.

இதை எல்லாம் அரசியலுன்னு கணக்கில் எடுக்கிற நாங்க தான் மடையர். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஜீவன் சிவா said:

புலிகள் மக்களின் தேர்வு இல்லை. ஆயுதத்தால் மக்களையும், மற்ற இயக்கங்களையும் மௌனித்து தாங்களாகவே ஏகபோக பிரதிநிதிகள் என்றவர்கள்.

இதுதான் உண்மை/நிஐம், இதை மறுத்து செய்யப்படும் எந்த அரசியலும் மக்களுக்கு நன்மை கிடைக்க விடாது. 

நிச்சயமாக இதை நிர்வாகம் தூக்கும் ஆனால் உண்மைகள் உறங்குவதில்லை. 

எமது உரிமைக்கான போராட்டத்தில் கடந்த பாதைகளில் புலிகளின் காலம் எமது வரலாற்றில் மன்னிக்க முடியாதது, இருந்தாலும் மறக்கப்பட வேண்டியது.

இதுவரைக்கும் யாருமே அறியாத பெரியதொரு உண்மையை பகிரங்கமாய் வந்து சொன்ன உங்கள் "கட்ஸ்"
யூ ஆர் ரியலீ பிரேவ் யார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி புலிகள் ஆயுதத்தைக் காட்டி.. பயங்கரவாதத்தைக் காட்டி.. மக்கள் முன்னால் ஏக பிரதிநிதிகள் ஆகினார்கள்... ஒட்டுக்குழுக்கள் சொல்வதை உண்மை என்றே வைச்சுக்குவம்... (ஏன் ஒட்டுக்குழுக்களிடமும் ஆயுதமும்.. பயங்கரவாதமும் இருந்தது தானே. சொறீலங்கா சிங்களவனிடமும் அவை இருக்குது தானே.. அவை ஏன் ஏக பிரதிநிதிகளாக முடியல்ல.. ஓ.. புலிகளிடம் கொஞ்சம் வீரமும் கொள்கைப் பிடிப்பும்.. தியாக உணர்வும்..இருந்ததில்ல.)

புலிகள் மறக்கப்படனும்.. மன்னிக்கப்பட முடியாமல் காட்டிக்கொடுக்கப்படனும் என்று ஒட்டுக்குழுக்கள் சொல்வதையும் உண்மை என்றே வைச்சுக்குவம்..

இந்தப் புலிகள் யார்.. அவர்கள் தமிழ் மக்கள் அல்ல.. பயங்கரவாதிகள் என்று ஒட்டுக்குழுக்கள் சொல்வதையும் உண்மை என்றே வைச்சுக்குவம்...

ஒட்டுக்குழுக்கள்.. இவ்வளவு உண்மையும் பேசிக்கிட்டு எதுக்கு... இன்னும்.. புலிகளின் மிச்ச சொச்ச எச்சமான.. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பதுங்கிக் கிடக்கனும்....

வெளில வாறது.. வந்து இவ்வளவு உண்மையையும் மக்கள் முன் பேசி அவர்களின் ஏக பிரதிநிதிகள் ஆகிறது... அந்த மக்கள் வேண்டுவதை வாங்கிக் கொடுக்கிறது.

அதுக்கேன் இல்லாத புலியை திட்டிக்கிட்டு திரிவான் இன்னும் இன்னும்...

அதன் பின்.. மக்கள் தீர்மானிப்பார்கள்.. ஒட்டுக்குழுக்களே.. தங்கள் ஏக பிரதிநிதிகள் என்று.

இது நடக்கனுன்னா.. ஒட்டுக்குழுக்கள் முதலில் புலிகளை மறக்கனும்.. திட்டிறதை கைவிடனும்.

மக்களை விட புலிகளை அதிகம் ஞாபகப்படுத்துவது ஒட்டுக்குழுக்கள் தானே... காரணம்.. புலிகளை திட்டாமல் அவர்களுக்கு வாழ்க்கை இல்லை. அதுக்காகவாவது புலிகள் இன்னும் தேவைப்படுவது.. புலிகளின் வெற்றி... என்னதான் சொன்னாலும். எல்லாத்திலும் புலிகள் தோற்கனும் என்று எதிர்பார்க்கும் ஒட்டுக்குழுக்கள்..

இந்த வெற்றியை மட்டும் ஏன் ஏற்படுத்திக் கொடுக்கனும்.. சிந்தியுங்கள் ஒட்டுக்குழுக்களே.. புலிகளை... மக்கள் அடியோடு மறக்கனுன்னா.. நீங்கள் புலிகளை உச்சரிச்சு திட்டுறதைக் கைவிடனும். நீங்க திட்டத்திட்ட புலிகள் மக்களின் இதயங்களை வென்றது தான் கடந்த கால அனுபவம். :rolleyes:tw_blush:

இன்றும் ஒட்டுக்குழுக்கள் தம் இருப்பை இனங்காட்ட பாவிப்பது புலிகளை. இல்லை என்றால் இவர்கள் அடையாளம் தெரியாத அனாதைகளாவர் தமிழ் மக்கள் முன்னால். இது தான் ஒட்டுக்குழுக்கள் ஏற்க மறுக்கும் நடைமுறை யதார்த்தம். இதற்கு காரணமும் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகளே.  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழு அரசியல் இதுதான்..

களத்தில்.. மக்கள் என்ன தான் வதை பட்டாலும்... ஹிந்தியன் வென்றால்.. ஹிந்தியனுக்கு வால்பிடிப்பது..

என்ன தான் இனப்படுகொலை செய்தாலும்.. சிங்களவன் வென்றால்.. சொறீலங்காவை நேசிப்பது..

புலிகளை.. இவங்க எல்லாருக்கும் எதிரியாக்கி.. தமிழ் மக்களிடம் அவர்களை வளர்த்து விடுவது...

ஒட்டுக்குழுக்கள் விரும்பாத விளைவு அந்தக் கடைசி விளைவு.. அதை சகிக்க முடியாமல்.. தொடர்வது... காழ்புணர்வு  காட்டிக்கொடுப்பு சரணாகதி எஜமான விசுவாச ஒட்டுக்குழு வாழ்க்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

ம்ம் ஒருத்தர்  ஊருக்கு போய் எதோ கொஞ்ச நல்ல காரியங்கள் செய்யுறன், முயற்சிக்கிறன் என்றெல்லாம் சொன்னவர் ..வெறும் புலி எதிர்ப்பு, சிங்களத்திடம் எப்படி கையேந்தும் கலை 101 இது போன்ற விஷ விதைகளை மட்டுமே தான் அங்கே நின்று மாய்ந்து மாய்ந்து விதைக்கிறீர்கலாக்கும். உருப்பட்டது உங்கள் சமூகம்.

விடுங்க சசி

புலத்தில் இருந்தபோது நாட்டில் மட்டுமல்ல தங்கியிருந்த நாட்டிலும் எதுவும் தெரியாமல்

எந்த ஒரு அமைப்பிலும் இல்லாது

தான் மட்டுமென சுயநலமாக இருந்துவிட்டு 

இது போன்று  அந்த நாட்டு சட்டதிட்டங்களை பாவித்து பணம் வருவதை உறுதிப்படுத்திக்கொண்டு

அங்கு போய் விலாசங்காட்டுபவர்களுக்கு

கடற்கரையும் உணவகங்களும் தான் தெரியும்

வன்னியிலோ கிழக்கிலோ காலே பட்டிருக்காது

அதில் மிகக்கவனமாக இருப்பார்கள்.

2 hours ago, Sasi_varnam said:

இங்க ஒருத்தர் இருக்கார் மட்டக்களப்பு எம் பீ யோட  கதைப்பார், தமிழ் தேசிய கூட்டணி, மாற்று இயக்க கூட்டங்கள், இப்படி ஊரில இல்லாத எல்லா கூட்டத்துக்கும் போய் வருவார். 
அப்ப ஒரு காலத்தில "போராடுறதுக்கு" என்று இயக்கத்தில் சேர்ந்த மாதிரி..சும்மா போய் வருவம். அவ்ளோதான். 
எல்லா உலக ஞானமும் தெரியும், நடக்கிற அநியாயங்களும் புரியும். என்ன பிரயோசனம்...
இவர் உண்மையில் எங்களை விட புலிகளுடன் நெருக்கமானவர்.
விடி காலையில் எழுந்தால் புலி சுப்ரபாதம்.
டிவியை போட்டால் புலி சுப்ரபாதம்.
செய்தித்தாள் படித்தால் புலி சுப்ரபாதம்.
யாழுக்குள் கிளிக்கினால் புலி சுப்ரபாதம்.
போகும் கூட்டத்தில் எல்லாம் புலி சுப்ரபாதம்.
ஐ.நா அறிக்கை விட்டால் புலி சுப்ரபாதம்.
எலெக்சன் நடந்தால் புலி சுப்ரபாதம்..
எலெக்சன் நடக்காட்டி புலி சுப்ரபாதம்..
எவனோ கொத்து ரொட்டி கடை விரித்தால் புலி சுப்ரபாதம்.
எம் பீ யோடு கதைத்தால் புலி சுப்ரபாதம்..
தம்பி யோடு கதைத்தால் புலி சுப்ரபாதம்.
கிழட்டு நாணா எம் இளம் தமிழ் பிள்ளைகளை கல்யாணம் செய்து மதம் மாற்றினால் புலி சுப்ரபாதம்.

முந்திரிக்கொட்டை மாதிரி நீங்க தானே தமிழ் மக்களின் அவலம் பற்றி கவலை கொண்டு, கரிசனை கொண்டு போராட போனீர்கள்... சரி இந்த இந்த நயவஞ்சக புலிகள் தான் உங்களை போராட விடலை.
இப்போ அவர்கள் இல்லை (7 வருடங்களாக), ஆனால் மக்களின் அவலங்கள் மட்டுமே எஞ்சி இருக்கிறது.
நீங்கள் சொன்ன மாதிரி தான் "வயது போன முஸ்லிம் வர்த்தகர்களை மூன்றாம் நாலாம் தரமாக வயது குறைந்த தமிழ் சிறுமிகள் மணம் முடிப்பதாகவும் பாஸ்போர்ட்டில் வயதை கூட போட்டு  மத்திய கிழக்கிற்கு செல்வதாகவும்".
இப்போ உங்கள் போராட்ட குணம் என்ன சொல்லுது?
 புலி சுப்ரபாதம்...
 
சசி

ஐந்தில் வளையாதது ஐம்பதில்.....???

அதே புத்தகமும் பேச்சும் தான் ஆயுதம்.

புலிகளை கணக்குப்போட்டு அழித்தவையாம்.

சரி அழித்தாச்சு

இப்போ மக்களின் நலன்களை இவர்கள் அல்லவா பொறுப்பெடுக்கணும்

அதற்கெப்படி புலிகள் பொறுப்பாளியாவார்கள்??

அழித்தவர்கள் அதற்கான திட்டங்களையும் தேவையான பணத்தையும் வரைந்து திரட்டியல்வா இருக்கணும்.

யாரையாவது சந்திக்கப்போறது

புலியைப்பற்றி எதையாவது கிளறி விழுங்கிவந்து இங்க வாந்தி எடுக்கவேண்டியது

எம்பியின் ஆதங்கம் என்ன?

வந்தவர்களிடம் அந்த மக்களின் துக்கங்களைச்சொன்னால் ஏதாவது உதவுவார்கள் என்பது தானே..

அதைத்தவிர அத்தனையும் செய்வார்கள்

பொக்கற்றில் மட்டும் கை வைக்கப்படாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, arjun said:

புலிகள் செய்த இந்த நீண்ட யுத்தத்தால் தான் இவ்வளவு அழிவுகளும் என்று சொன்னது விளங்காமல் புலிகள் காலத்தில் இவை இல்லை என்று வியாக்கியானம் .

புலிகள் காலத்தில் அண்ணை மட்டகிளப்பில் தான் இருந்தவர் .

அவர் இருந்தாரோ இல்லையோ .....நான் இருந்ததும் மட்டுவில் தான் இருப்பதும் மட்டுவில் தான் 
உங்கட மட்டு எம்.பீயிடம் கேளுங்கள் ....ஒருகாலத்தில் முஸ்லிம்களின் காடைத்தனமும் ,காணிக்கபளீகரமும்,காணி அரக்கலும்  எப்படி தடுத்து நிறுத்தப்பட்டது என்று (முக்கியமாக கல்முனைக்குடியிலிருந்து கல்முனை மூன்றாம் குறிச்சி வரை காணி அரக்க வந்தவைங்களுக்கு என்ன நடந்தது என்று ) ....ஒரியினல் மட்டு எம்...பீயாக இருந்தால் நிச்சயம் தெரிந்திருக்கும்...சில வேளை புலி வாந்தியெடுக்க மட்டுமே அங்கே வந்திருந்தாரென்றால்.....கஷ்ட்டம் தான் ஒழுங்கான பதில் வராது....எங்களூர் ஆத்து கட்டால எருமை மாடு நடந்து  சலசலப்பு கேட்டாலே செக்போயிண்டில நிண்ட போலிசும் ....இரவோட இரவாக வேலிபோட, ஆடு,மாடு  லவட்ட போடர் தாண்டின சகோதரங்களும் சாரனிலேயே போன கக்கா,உச்சா மணம் ...எம் பீக்கு  ஞாபகம் இருக்கோ தெரியாது எங்களுக்கு நல்லாவே ஞாபகம் இருக்கிறது  

Link to comment
Share on other sites

7 hours ago, Sasi_varnam said:

ம்ம் ஒருத்தர்  ஊருக்கு போய் எதோ கொஞ்ச நல்ல காரியங்கள் செய்யுறன், முயற்சிக்கிறன் என்றெல்லாம் சொன்னவர் ..வெறும் புலி எதிர்ப்பு, சிங்களத்திடம் எப்படி கையேந்தும் கலை 101 இது போன்ற விஷ விதைகளை மட்டுமே தான் அங்கே நின்று மாய்ந்து மாய்ந்து விதைக்கிறீர்கலாக்கும். உருப்பட்டது உங்கள் சமூகம்.

தம்பிக்கு பதில் எழுதி பிரயோசனம் இல்லை ,

பொய் சொல்ல தொடங்கிவிட்டார் .சிங்களத்திற்கு எதிராக போராட போன எங்களை விட போராட்டம் என்றவுடன் ஓடிவந்தது மேடையில் தபேலா அடித்தவர் போராட போனவர்களை பார்த்து சிங்களத்திற்கு கை ஏந்தும் கலை மட்டும் என்று எழுத வெட்கமாக இல்லை ,ஓடிவந்த நீங்கள் எல்லாம் ஒரே வண்டியில் தான் பயணிப்பீர்கள் .

80-90 ஆண்டு கால பகுதியில் ஏதாவது ஒரு இயக்கத்தில் சேர்ந்து விடுதலை போராட்டத்தில் சேராதவர்கள் ஒருவித குற்றஉணர்வில் தான் இப்பவும் இருக்கின்றார்கள் என்பது உங்கள் பதிவுகளும் இப்போ காணக்கூடியதாக இருக்கு ,

அதுதான் இங்குள்ள பலரை போல வெறும் செறடிப்பில் இறங்கிவிட்டீர்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

அவர் இருந்தாரோ இல்லையோ .....நான் இருந்ததும் மட்டுவில் தான் இருப்பதும் மட்டுவில் தான் 
உங்கட மட்டு எம்.பீயிடம் கேளுங்கள் ....ஒருகாலத்தில் முஸ்லிம்களின் காடைத்தனமும் ,காணிக்கபளீகரமும்,காணி அரக்கலும்  எப்படி தடுத்து நிறுத்தப்பட்டது என்று (முக்கியமாக கல்முனைக்குடியிலிருந்து கல்முனை மூன்றாம் குறிச்சி வரை காணி அரக்க வந்தவைங்களுக்கு என்ன நடந்தது என்று ) ....ஒரியினல் மட்டு எம்...பீயாக இருந்தால் நிச்சயம் தெரிந்திருக்கும்...சில வேளை புலி வாந்தியெடுக்க மட்டுமே அங்கே வந்திருந்தாரென்றால்.....கஷ்ட்டம் தான் ஒழுங்கான பதில் வராது....எங்களூர் ஆத்து கட்டால எருமை மாடு நடந்து  சலசலப்பு கேட்டாலே செக்போயிண்டில நிண்ட போலிசும் ....இரவோட இரவாக வேலிபோட, ஆடு,மாடு  லவட்ட போடர் தாண்டின சகோதரங்களும் சாரனிலேயே போன கக்கா,உச்சா மணம் ...எம் பீக்கு  ஞாபகம் இருக்கோ தெரியாது எங்களுக்கு நல்லாவே ஞாபகம் இருக்கிறது  

அதெல்லாம் உண்மையை

நடந்ததை

வரலாற்றை தரிசிக்கவிரும்புபவர்களுக்கு...

இங்கு

நான் சொன்னால் புலப்புலி எனும் வாந்தி

நீங்க சொன்னால் தாயகப்புலி என்னும் புலிவாந்தி...

Link to comment
Share on other sites

3 hours ago, அக்னியஷ்த்ரா said:

அவர் இருந்தாரோ இல்லையோ .....நான் இருந்ததும் மட்டுவில் தான் இருப்பதும் மட்டுவில் தான் 
உங்கட மட்டு எம்.பீயிடம் கேளுங்கள் ....ஒருகாலத்தில் முஸ்லிம்களின் காடைத்தனமும் ,காணிக்கபளீகரமும்,காணி அரக்கலும்  எப்படி தடுத்து நிறுத்தப்பட்டது என்று (முக்கியமாக கல்முனைக்குடியிலிருந்து கல்முனை மூன்றாம் குறிச்சி வரை காணி அரக்க வந்தவைங்களுக்கு என்ன நடந்தது என்று ) ....ஒரியினல் மட்டு எம்...பீயாக இருந்தால் நிச்சயம் தெரிந்திருக்கும்...சில வேளை புலி வாந்தியெடுக்க மட்டுமே அங்கே வந்திருந்தாரென்றால்.....கஷ்ட்டம் தான் ஒழுங்கான பதில் வராது....எங்களூர் ஆத்து கட்டால எருமை மாடு நடந்து  சலசலப்பு கேட்டாலே செக்போயிண்டில நிண்ட போலிசும் ....இரவோட இரவாக வேலிபோட, ஆடு,மாடு  லவட்ட போடர் தாண்டின சகோதரங்களும் சாரனிலேயே போன கக்கா,உச்சா மணம் ...எம் பீக்கு  ஞாபகம் இருக்கோ தெரியாது எங்களுக்கு நல்லாவே ஞாபகம் இருக்கிறது  

ஞாயிறு நடந்த கூட்டத்தில் புலி என்ற சொல்லே உச்சரிக்கப்படவில்லை .அவ்வளவு தெளிவிற்கு பலர் வந்துவிட்டார்கள் .

யுத்தத்தின் வடு ,இன்றைய நிலை ,செய்யவேண்டிய செயற்திட்டங்கள் பற்றித்தான் பேசினோம் .

முஸ்லிம்கள் ஆட்சியில் வரும் எந்த அரசோடும் ஒத்து ஓடி தமது தேவைகளை நிறைவேற்றிகொள்ளுகின்றார்கள் .அப்படி தமிழர்கள் அரசுடன் சேர்ந்தால் துரோகி பட்டம் உதாரணம் டக்கிலஸ் .

எதிர்ப்பு அரசியல் செய்து சலுகளைகளை பெறமுடியாது .தமிழர்கள் அரசியல் தீர்வு கிடைக்கமட்டும் சலுகைகள் வேண்டாம் என்று அரசியல் செய்தால் வெகு விரைவில் கிழக்கு மாகாணத்தின் நிலை வடக்கிற்கும் ஏற்படும் .

திரும்ப திரும்ப புலி இருந்த காலத்தில் ....... என்று எழுதி அலுத்துவிட்டது .

மகிந்தா ,கோத்தா செய்த அநியாயங்களை நியாப்படுத்தும் சிங்களவர்கள் போலத்தான் புலிகளின் செய்கைகளை நியாயபடுத்தும் தமிழர்கள் .

இவர்களுக்கு ஜனாநாயகயகத்தில் நம்பிக்கை இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில உள்ள உண்மையை மறந்த மறைக்கத் தெரிந்த சில பார்ப்பர்ணிய கிழட்டுப் பத்திரிகையாளர்கள் மாதிரி எங்கள் மத்தியிலும் சிலதுகள் இருக்குதுங்க. யாழ் களம் இப்படியானவர்களையும் கண்டு தான் வருகிறது.

திருமுருகன் காந்தியின் மேற்படி பேச்சைக் கேளுங்க உறவுகளே. இங்குள்ள சில விசக்கிருமிகளின் நோக்கம் எதிரிக்கு சாமரம் வீசுவதே தவிர..மொத்த இனத்தையும் அடிமைப்படுத்தி ஆதாயம் அடைய நினைப்பவனுக்கு உதவி நற்பதும்.. அதில் தங்கள் சுயலாபங்களை நிவர்த்திக் கொண்டு அனுபவிச்சு செத்துப் போவதே தவிர வேறு ஒரு உருப்படியான சிந்தனையும் இல்லை.

இதுகளோட கருத்தியல் இதுங்களுக்கும் பெரிசா உதவாது (அற்பசொற்ப சந்தோசம் கிடைப்பதை தவிர)  மற்றவைக்கும் உதவாது. மேலும் இதுங்க சாகும் வரை திருந்தவோ.. திருத்தவோ போறதும் இல்லை. tw_blush: இதுங்களோட கருத்துப் பகிர்வு என்பது அநாவசியம்.. நேர விரையம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன், புலிகள் மக்களது தெரிவு இல்லை என்டால் யார் மக்களது தெரிவு உங்கட ஈபீடிபீயா?...எந்த ஆயுதக் கூட்டமும் மக்களது தெரிவு இல்லை என எழுதி இருந்தால் கூட பேசாமல் இருந்திருப்பேன்.ஆனால் புலிகளை மட்டும் இழுத்து எழுதி நீங்கள் யார் என காட்டி விட்டீர்கள்.

எனக்கும் புலிகள் மீது நிறைய விமர்சனங்கள் உண்டு.ஆனாலும்,எந்த ஒரு அமைப்போ அல்லது போராட்ட குழுக்களோ மக்கள் ஆதரவு இல்லாமல் இந்தளவிற்கு வளர்ந்திருக்க முடியாது...வட,கிழக்கில் உள்ள 99% மக்கள்,புலிகளை நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ ஆதரித்தார்கள்...புலிகளது அயுதப் போராட்டம் தோத்தது,இத்தனை காலமும் பாடுபட்டது,உயிரிழப்புகள் போன்ற காரணமாக மக்கள் விரக்தியில் கதைப்பார்கள் தான்....அதை வைத்துக் கொண்டு புலிகள் மக்களது தெரிவு இல்லை என சொல்வது உங்களுக்கே கொஞ்சம் ஓவராய் இல்லை.

நடந்த இறுதி யுத்தத்தில் தோற்றதன் மூலம் புலிகள் மக்களை[போராட்டத்தை] 40.50 வருடங்களுக்கு பின் தள்ளி விட்டார்கள் என்பது உண்மை தான்...ஆனால் அதே புலிகள் இவ்வளவு காலமும் போராடிய படியால் கொஞ்ச மாவது சர்வதேசத்திற்கு பயந்தாவது இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு செய்கிறது...இதே ஒரு கதைக்கு ஆரம்பத்திலேயே புலிகள் அழிந்து மற்ற இயக்கங்கள் ஏதாவது இருந்திருந்தால் தமிழ் இனத்தையே இல்லாமல் அழித்திருப்பார்கள்...இந்தியன் ஆமிக்கு தங்கட சொந்த இனத்தையே கூட்டிக் கொடுத்தவர்கள் அல்லவா இவர்கள்.

ஆயுதப் போராட்டமே தோன்றாமல் இருந்திருந்தால் வசதியுள்ளவன் வெளி நாட்டுக்கு ஓட,அதி திறமைசாலி யூனி போக,திற்மை இருந்தும் வெட்டிப் புள்ளியினால் யூனி போக முடியாமல் கிடந்து தவிக்க,கல்வி,தொழில் வாய்ப்பு போன்ற பல்வற்றில் திறமை இருந்தும் தமிழனாய்ப் பிறந்ததால் அடிமையாய் வாழ் வேண்டும் என்பது ஜீவனின் விருப்பம் போல...ஆயுதப் போராட்டமும்,புலிகளும் இருந்த போதே முஸ்லீம்கள், கிழக்கு மாகணத்தில் எத்தகைய அழிவு செய்தார்கள்/செய்து கொண்டு இருக்கிறார்கள்...ஆயுதப் போராட்டம் ஒன்று தோன்றாமல் இருந்திருந்தால் தமிழன் அவன்ட காலைத் தான் நக்க வேண்டும். இதெல்லாம் 3,4 மாதம் ஹொலிடே போய் வருபவர்களுக்கு புரியாது. அங்கேயே இருப்பவர்களுக்குத் தான் அந்த வலியும்,வேதனையும் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஜீவன் சிவா said:

புலிகள் மக்களின் தேர்வு இல்லை. ஆயுதத்தால் மக்களையும், மற்ற இயக்கங்களையும் மௌனித்து தாங்களாகவே ஏகபோக பிரதிநிதிகள் என்றவர்கள்.

இதுதான் உண்மை/நிஐம், இதை மறுத்து செய்யப்படும் எந்த அரசியலும் மக்களுக்கு நன்மை கிடைக்க விடாது. 

நிச்சயமாக இதை நிர்வாகம் தூக்கும் ஆனால் உண்மைகள் உறங்குவதில்லை. 

எமது உரிமைக்கான போராட்டத்தில் கடந்த பாதைகளில் புலிகளின் காலம் எமது வரலாற்றில் மன்னிக்க முடியாதது, இருந்தாலும் மறக்கப்பட வேண்டியது.

ஜீவன்,

இரண்டாம் முள்ளிவாய்க்கால் கட்டுரைத்தொடரில் சிவா சின்னப்பொடி எழுதியது...

‘விடுதலைப்புலிகள் கொலைகாரர்கள். பணம் பறிப்பவர்கள். பிள்ளை பிடிப்பவர்கள் பாசிஸ்டுகள்’ என்று ஒத்தோடிகளை வைத்து கூவி கூவி சிறீலங்கா அரசாங்கம் பிரச்சாங்களை செய்த போதிலும் அவற்றை மக்கள் செவி மடுக்கவில்லை.

உங்களுக்கும் புலிகளுக்கும் ஏதாவது தனிப்பட்ட பகை இருக்கலாம். ஆனால் புலிகளின் முப்பது வருட போராட்டத்தில் அவர்கள் தமிழ்மக்களை அடக்குமுறை செய்துகொண்டிருந்தார்கள் என்ற ரீதியில் சொல்லுவது வெறும் வன்மம் கொண்ட கருத்துத்தான்.

இறுதிப் போர்க்காலத்தில் புலிகளால் எடுக்கப்பட்ட சில அரசியல் முடிவுகளும், கட்டாய ஆட்சேர்ப்பும் அவர்களின் அழிவுக்குக் காரணமாகின. ஆனால் ஆயுதப் போராட்டம் ஆரம்பமானதற்கான அரசியல் காரணிகள் இப்போதும் அப்படியேதான் உள்ளன.

எனவே, மேலே உள்ளதுபோல் ஒத்தோடிகள் என்னதான் கூவிக்கூவி பிரச்சாரங்களை மேற்கொண்டாலும் தமிழ் மக்கள் அப்பிரச்சாரங்களைக் கணக்கில் எடுப்பதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

உண்மைதான் சிவாசின்னப்பொடி போன்ற ஒத்தோடிகளின் பிரசாரங்களை தாயகத்தில் இருக்கும் மக்கள் கணெக்கெடுப்பதில்லை. முதலில் இவர்கள் யாரென்றே மக்களுக்குத் தெரியாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வாலி said:

உண்மைதான் சிவாசின்னப்பொடி போன்ற ஒத்தோடிகளின் பிரசாரங்களை தாயகத்தில் இருக்கும் மக்கள் கணெக்கெடுப்பதில்லை. முதலில் இவர்கள் யாரென்றே மக்களுக்குத் தெரியாது!

ஆதாரங்கள் ஏதாவது இருக்கின்றதா?

Link to comment
Share on other sites

சிவா சின்னபொடி யாழில் நவம் என்ற பெயரில் எழுதுபவர் ,

முன்னர் எங்களுடன் இருந்தவர் உமாவின் பெரிய விசுவாசி .

Link to comment
Share on other sites

17 minutes ago, கிருபன் said:

உங்களுக்கும் புலிகளுக்கும் ஏதாவது தனிப்பட்ட பகை இருக்கலாம். ஆனால் புலிகளின் முப்பது வருட போராட்டத்தில் அவர்கள் தமிழ்மக்களை அடக்குமுறை செய்துகொண்டிருந்தார்கள் என்ற ரீதியில் சொல்லுவது வெறும் வன்மம் கொண்ட கருத்துத்தான்.

எனக்கு புலிகள் மீது எந்தவித காழ்ப்புணர்வும் இல்லை. ஆனால் புலிகள் மட்டுமே புனிதர்கள் போலவும், மற்றய இயக்கத்திலிருந்தவர்களை துரோகிகளாகவும், கேவலமானவர்களாகவும் சித்தரிக்கும் பதர்களைத்தான் நான் வெறுக்கின்றேன். யாவரும் எமது மைந்தர்கள். ஒவ்வொரு இளைஞனும் எமக்காக போராட போனவன். ஆனாலும் தலைமையின் தவறுகளால் ஏற்பட்ட விளைவுகளினால்தான் இன்றைய எமது நிலை. மற்றைய இயக்கங்களை ஆயுதமுனையில் அழித்துவிட்டு மக்களை அம்போவென்று நந்திக்கடலில் விட்ட புலிகளே இதற்கு முழுவதுமாக பொறுப்பு ஏற்கவேண்டும். அதைவிடுத்து இன்னமும் விசங்களைக் கக்குவதால் எதுவித பலனும் இல்லை.

இவற்றையும் தாண்டி தாயக மக்கள், அவர்களின் அரசியல், சர்வதேசம் எவ்வளவோ தூரம் வந்தாச்சு. இவர்களது கூச்சல்களையும் தாண்டி சுபீட்சம் மலரும்.

பிகு : இத்திரியில் இனி கருத்திடுவதில்லை என்றிருந்தேன். எனது கருத்திற்கெதிராக பதிவிடாமல் தனி நபர் தாக்குதல்தான் வழமைபோல நடத்தப்பட்டது. ஆனாலும் நீங்கள் அவ்வாறு இல்லாமையால் இப்பதில்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.