Jump to content

தமிழில் சிறிலங்காவின் தேசிய கீதம் பாடப்பட்டபோது சம்பந்தன் கண்களில் கண்ணீர்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் சிறிலங்காவின் தேசிய கீதம் பாடப்பட்டபோது சம்பந்தன் கண்களில் கண்ணீர்

FEB 04, 2016

சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வின் இறுதியில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட போது, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின் கண்கள் பனித்து கண்ணீர் முட்டியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர நாள் நிகழ்வில் பங்கெடுத்த அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டியே ஆங்கில ஊடகம் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் வரலாற்றில், சுதந்திர நாள் நிகழ்வு ஒன்றில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது இது இரண்டாவது முறையாகும்.

முதல்தடவை 1949ஆம் ஆண்டு டி.எஸ்.சேனநாயக்க பிரதமராக இருந்த போது, முதலாவது சுதந்திர நாள் நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டிருந்தது.

sri lanka indipendence day

இன்று தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட போது, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் அனைவரும், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

இது ஒரு வரலாற்று சந்தர்ப்பம் என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதேவேளை இன்றைய அதிகாரபூர்வ நிகழ்வில் தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதம் பாடப்பட்டது நல்லிணக்கத்தை நோக்கிய நகர்வின் சமிக்ஞை என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2016/02/04/news/13306

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் காணாமல் போன தம் சொந்தங்களை எண்ணி கண்ணீர் வடிக்கிறார்கள் கறுப்புக்கொடி சுமந்து.. இவர் என்னத்தைச் சாதிச்சதாக நினைச்சுக் கண்ணீர் வடிக்கிறார். தமிழில் இது பாடப்பட்டதன் விளைவாக தமிழ் மக்களுக்கு கிடைத்த உடனடி நன்மை என்ன...??! நீண்ட கால நன்மை என்ன..??! பார்க்கப் போனால் இன்று இது தமிழில் இசைப்பட்டதால் தீமை தான் எமக்கு அதிகம்.  tw_angry::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

பார்க்கப் போனால் இன்று இது தமிழில் இசைப்பட்டதால் தீமை தான் எமக்கு அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவளவு நாளும் சிங்களத்தில் மட்டும் பாடியபோது ...
வாயில் சிரிப்பா ?? 

Link to comment
Share on other sites

மரணித்த எங்கள் வீரர்களை ஒரு கணம்  யோசித்திருப்பார். உங்களால் சிங்களவன்  தமிழில் பாட ஆதல் வந்து விட்டானே என்று..

Link to comment
Share on other sites

பேஸ்புக்கில் இலங்கை தேசிய கீதம் தமிழில் பாடப்படும் காணொலியை பார்த்தேன். கேட்கும்போது இனிமையாக இருந்தது, குறிப்பாக சிறுவயது நினைவுகளை மீட்டியது, ஏன் என்றால் சிறுவயதில் ரூபவாஹினியில் நிகழ்ச்சிகள் பார்க்கும்போது நிகழ்ச்சிகள் தொடங்கும் முன்பும், முடிந்த பின்னர் இரவிலும் இலங்கை தேசியகீதம் ஒலிபரப்பப்படும். தமிழில் பாடியவிதம் சிங்களத்தில் பாடப்படும்போது கேட்கும்போதுள்ள அதே இனிமையை தருகின்றது. 

இந்த கீதம் தமிழில் பாடப்படவேண்டுமா, கூடாதா, சரியா, தவறா, இதை கேட்கலாமா, கேட்கக்கூடாதா எனும் வாதங்களுக்குள் நான் வரவில்லை. ஏன் என்றால் நான் இலங்கையைவிட்டு வெளிக்கிட்டு பதினாறு வருடங்களாகிவிட்டது, இனி அங்கே செல்லும் எண்ணமும் இப்போதைக்கு இல்லை. எனது வாயில் வருகின்ற தேசியகீதம் இப்போது ஓ கனடா மட்டுமே. ஏன் என்றால் இலங்கையில் எனக்கு கிடைக்காத உரிமைகளை, எனக்கு தரப்படாத சுதந்திரத்தை கனடா நாடு தந்தது.

நான் கொழும்பில் இருந்தசமயத்தில் கொழும்பு கலைக்கூடத்தில் - விகாராமாதேவி பூங்காவுக்கு அருகில் - தேசியகீதத்தை எழுதிய பாடல் ஆசிரியரின் வாழ்க்கை வரலாறு சம்மந்தமான கண்காட்சி நிகழ்வில் சற்செயலாக அவ்விடத்தால் சென்ற சமயத்தில் உள்ளே சென்று பார்வையிட்டேன். எனது இனம், மொழி அடையாளங்களின் போர்வைகளை அகற்றிவிட்டு ஒரு கலைப்படைப்பாக இதைப்பார்த்தால் இந்த கீதம் அழகாகவே தெரிகின்றது.

Link to comment
Share on other sites

Ananda Samarakoon

ananda-samarakoon-sri-lankan-comp.jpg

Egodahage George Wilfred Alwis Samarakoon (January 13, 1911 – April 5, 1962) known as Ananda Samarakoon was a Sri Lankan composer and musician. He composed[a] the Sri Lankannational anthem "Sri Lanka Matha" and is considered the father of artistic Sinhala music and founder of the modern Sri Lankan Geeta Sahitya (Song Literature).

Life and career

Early life

Samarakoon was to a Christian family in Padukka, Sri Lanka on January 13, 1911. He had his primary and secondary education at Christian College, Kotte, presently known as Sri Jayawardenapura M.V.Kotte. His Sinhala Guru was Pandit D.C.P. Gamalathge. Later he served his Alma mater as a teacher of Music and Art. Samarakone left for the Visva-Bharati University, Santiniketan in India to study art and music. After six months he abandoned his studies and returned to Sri Lanka, and changed his name to Ananda Samarakoon, embracing Buddhism.[3]Then he served as the music teacher of Mahinda College, Galle from 1938 to 1942, And he wrote the national anthem of Sri Lanka.

Composer

In 1937, the popular music of Sri Lanka consisted of songs derived from the North Indian Ragadhari music. These songs lyrics often contained meaningless phrases with little or no literary merit. Samarakone set out to create a form of a music that can be classified as Sri Lanka's own and came out with the song Endada Menike (1940) that paved the foundation for the artistic Sinhala music. In 1940, he composed Namo Namo Mata to instil patriotism and love for one's country, in his students at Mahinda College.[4] That song was later selected as the National anthem of Sri Lanka by the Sri Lankan government.

The love themed song ' Endada Menike ' unfolds in the form of a dialogue between a young village boy and a girl. Poetic and beautifully rustic, it became a success and Samarakone followed it with a string of successful songs in the early to mid-1940s, the period considered his golden age. Among his best known works are:

  • Podimal Etano
  • Vilay Malak Pipila
  • Poson Pohoda
  • Asay madura
  • Sunila Guvanay
  • Punchi Suda
  • Nilvala Gangay
  • Sumano
  • Pudamu Kusum
  • Siri Saru Saara Ketay

Painter

In 1945 Samarakoon's only son died at the age of five and the grieving Samarakoon left Sri Lanka for India where he pursued a painting career and held eleven art exhibitions there. Though his painting were critically acclaimed, he returned to music in 1951 back in Sri Lanka.

National anthem

One of Samarakoon's early compositions, Namo Namo Mata was nominated as the national anthem and was officially adopted as the national anthem of Ceylon on November 22, 1951, from a committee headed by Sir Edwin Wijeyeratne.Critics attacked Namo Namo Mata, particularly the "Gana" significance of the introductory words (Namo Namo Matha) which designate disease and ill luck. Samarakone was not a believer in "Gana" and the criticism caused him to write numerous articles counterattacking his critics to defend his composition. However, without his consent, the introductory words were changed to "Sri Lanka Mathaa" so that the "Gana" significance now would designate victory and prosperity.

Death

On April 5, 1962, at the age of fifty one, Samarakoon committed suicide by taking an overdose of sleeping tablets and the cause is said to be the change of words of his composition without his consent.[citation needed]Samarakoon's legacy lives on in his music and in the musical style he created.

https://en.wikipedia.org/wiki/Ananda_Samarakoon

Link to comment
Share on other sites

எனக்கு என்னவோ காழ்புணர்வான சிங்கள தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகளை புறம் தள்ளி அடுத்த தலைமுறை ஒன்றுபட்ட இலங்கையில் வாழ ஆசைப்படுவது போல் தான் தெரிகின்றது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ 60வருசமாய் தனிநாட்டுக்குத்தான் தமிழ்ச்சனம் அடிபட்ட மாதிரியெல்லே ஒரு சிலரின்ரை கதை போகுது.... தந்தை செல்வா வரைக்கும் கேட்டு களைச்சுப்போய்த்தான் தனிநாட்டு முடிவு வந்தது.

அடுத்த தலைமுறைக்கு மோட்டச்சைக்கிளும் கான்போணும் பொக்கற்றுக்கை கொஞ்சகாசும் இருந்தால் காணும். வீட்டிலை சிங்களத்திலையே கதைக்க ரெடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

அடுத்த தலைமுறைக்கு மோட்டச்சைக்கிளும் கான்போணும் பொக்கற்றுக்கை கொஞ்சகாசும் இருந்தால் காணும். வீட்டிலை சிங்களத்திலையே கதைக்க ரெடி

இதுக்கு முந்தைய தலைமுறைகள் மட்டும்..

பைலா பாட்டும்.. கள்ளுக்கொட்டிலும்... சாராய பார்களும்.. ஹொண்டா சுசிக்கி மோட்டார் சைக்கிள்களும்.. யானைக்கால் பெல்சுகளும் என்று தானே கிடந்தவை. அவையை போராடப் போகச் சொல்ல.. 70 சதவீதம் பேர் கொழும்புக்கும்.. தமிழ்நாட்டுக்கும்.. கனடா.. அமெரிக்கா.. ஐரோப்பா.. அவுஸி.. நியூசி என்று தானே ஓடினவை.

அப்படி ஓடின ஆக்கள் தான் இப்ப இந்தத் தலைமுறையையும் அப்படி ஆக்கி அடிமைகளாகவே இருத்திடுவம் என்று நினைக்கினம். அவையாள முடிஞ்சது தாங்கள் தப்பிப்பிழைக்கவும் குடும்பம் குட்டின்னு பெருகவும்.. அடிமைப்பட்டுக்கிடக்கவும். அதையே அவர்கள் இப்ப மற்றவர்களிடமும் எதிர்பார்க்கிறார்கள். தங்கள் இயலாமையை பொது இயலாமை ஆக்கி குளிர்காய முனைகிறார்கள். அவ்வளவே. :rolleyes:

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

இதை வன்னியில் இருப்பவர் கூறினால் ஒரு நியாயம் இருக்கு. லண்டனில இருந்து அடுத்தவன் ஓடிட்டான் என்றா எப்படி? 
நாட்டில் இருக்கும் அடுத்த தலைமுறை நிச்சயம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழவே முழு முயற்சிகளை மேற்கொள்ளும். வெளிநாடுகளில இருந்து ஸ்கோர் கேட்ட கூட்டம் அதை பார்த்து புலம்பியே அழிந்து போகும். அவர்களது அடுத்த சந்ததி தமிழ் கதைத்தால் அதுவே பெரிய விடயம். 

Link to comment
Share on other sites

19 minutes ago, தெனாலி said:

சிரிச்சு குடல் அறுந்து போச்சு 

Link to comment
Share on other sites

6 hours ago, கலைஞன் said:

Ananda Samarakoon

பகிர்வுக்கு நன்றி கலைஞன். இதுவரை நான் சிந்தித்துப் பார்க்காத புதிய தகவல் இது. Ananda Samarakoon தற்கொலை செய்தது மனவருத்தத்திற்குரியது.

Link to comment
Share on other sites

சிறீ லங்கா தாயே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
சிறீ லங்கா தாயே
தாய் இலங்கை
Flag of Sri Lanka.svg
தேசியக் கீதம் 23px-Flag_of_Sri_Lanka.svg.png இலங்கை
இயற்றியவர் ஆனந்தசமரக்கோன்
இசை ஆனந்தசமரக்கோன்
சேர்க்கப்பட்டது 1950

"சிறீ லங்கா தாயே" என்பது இலங்கையின் நாட்டுப்பண் ஆகும். இலங்கையின் இயற்கை வளம், அழகுஎன்பவற்றை எடுத்துக்கூறும் இப்பாடல், இலங்கையர்களுக்கு இலங்கைத் தாயின் முக்கியத்துவம் பற்றியும் விபரிக்கிறது. நாட்டின் சகல பிரிவினருக்கும் இடையேயான ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தும் இப்பாடல், தேசபக்தியை ஊட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

இலங்கையில் பிரித்தானியர் ஆட்சியின் இறுதிக்காலத்தில், இந்திய விடுதலைப் போராட்டத்தின் செல்வாக்கால், இலங்கையிலும் தேசிய விழிப்புணர்வு ஏற்பட்டது. தேசபக்திப் பாடல்கள் பல எழுதப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகளின் போதும் பாடப்பட்டு வந்தன. பிரித்தானிய குடியேற்றவாத ஆட்சி முடிவுக்கு வந்து, இலங்கை விடுதலை பெற்றபோது, நாட்டின் இறைமையின் சின்னங்களாகத் தேசியக் கொடி, நாட்டுப் பண் என்பவற்றை உருவாக்கும் முயற்சி இடம்பெற்றது. ஏற்கனவே புழக்கத்திலிருந்த தேசபக்திப் பாடல்களிலொன்றைத் தெரிவு செய்வதில் சிக்கல்கள் எழுந்தமையால், போட்டி ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இப்போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட கீதங்களிலிருந்து ஒன்றைத் தெரிவு செய்வதற்காக நடுவர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

ஆனந்த சமரக்கோன் என்பவர் 1940 ஆம் ஆண்டு எழுதி ஏற்கனவே பரவலாகப் புழக்கத்திலிருந்த நமோ நமோ மாதா என்று தொடங்கும்சிங்களப் பாடலும் தேர்வுக்காக நியமிக்கப்பட்டவற்றுள் அடங்கும். எனினும், பி. பி. இலங்கசிங்க, லயனல் எதிரிசிங்க என்னும் இருவரால் எழுதப்பட்ட ஸ்ரீ லங்கா மாதா பல யச மஹிமா என்று தொடங்கும் பாடல் தெரிவு செய்யப்பட்டு, 1948 பெப்ரவரி 4 ஆம் தேதி இலங்கையின் சுதந்திர நாளன்று வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டது.

இதன் பாடலாசிரியர் இருவரும், தேசியகீதத் தேர்வுக்குழுவில் உறுப்பினராக இருந்ததால். இத்தெரிவு குறித்துச் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் இரண்டாவது, மூன்றாவது சுதந்திர தினங்களில் ஆனந்த சமரக்கோனின் பாடல் உத்தியோகபூர்வமற்ற முறையில் பாடப்பட்டு வந்தன. 1950இல், அக்காலத்தில் நிதியமைச்சராக இருந்த ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் ஆலோசனையை ஏற்று ஆனந்த சமரக்கோனின் நமோ நமோ மாதா என்று தொடங்கும் பாடலைத் தேசியகீதமாக ஏற்க முடிவு செய்யப்பட்டது.

1951 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி இதற்கு முறைப்படியான அங்கீகாரமும் கிடைத்தது. இப்பாடலுக்கான இசையும் ஆனந்த சமரக்கோன் அமைத்ததே. தொடர்ந்து வந்த நாட்டின் நான்காவது சுதந்திர தினத்தன்று இப் பாடல் முதல் முதலாக, கொழும்பு, மியூசியஸ் பாடசாலையைச் சேர்ந்த 500 மாணவ மாணவிகளால் பாடப்பட்டு வானொலி மூலம் நாடெங்கும் ஒலிபரப்பப்பட்டது.

1956 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தின் காலத்தில் இப் பாடலின் ஆரம்ப வரிகள் நமோ நமோ என  என்னும் எழுத்துடன் தொடங்குவது அபசகுனம் என்றும், அது நாட்டுக்கு துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்றும் ஒரு பகுதியினர் குரல் எழுப்பினர். தொடர்ந்து வந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியின்போது, 1961 இல், செல்வத்தைக் குறிக்கும் ஸ்ரீ என்னும் மங்கல எழுத்துடன் தொடங்கும்,ஸ்ரீ லங்கா மாதா என்ற வரி முதல் வரியாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இப்பாடலை எழுதிய ஆனந்த சமரக்கோன் இந்த மாற்றத்தைக் கடுமையாக எதிர்த்தார் என்றும் இது தொடர்பான விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பல கட்டுரைகளை அவர் எழுதியதாகவும் கூறப்படுகின்றது. எனினும் இம் முயற்சியில் அவர் வெற்றியடையவில்லை.

தமிழ் மொழிபெயர்ப்பு[தொகு]

இப்பாடல் பின்னர் பொருள் மாறுபடாமல் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. 1950ம் ஆண்டில் தமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்தார்.

தமிழ் மொழிபெயர்ப்பை உத்தியோக பூர்வமாக நீக்க மகிந்த இராசபக்ச தலைமையிலான அமைச்சரவை கலந்துரையாடல்களை டிசம்பர், 2010 இல் நிகழ்த்தியது. இதற்கு இலங்கை தமிழ் கட்சிகள், தமிழக அரசின் முதல்வர் கருனாநிதி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். ஆயினும் பின்னர் தமிழ் மொழி தேசிய கீதத்தை நீக்கும் உத்தேசம் தமக்கு இல்லை என இலங்கை அரசின் அமைச்சர் செனிவரத்ன ஊடகங்கள் மூலம் அறிவித்தார்[1].

2015 இல் புதிதாதகப் பதவியேற்ற அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன தமிழில் தேசியப் பண்ணைப் பாடுவதைத் தடை செய்யப்போவதில்லை எனத் தாம் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடவிருப்பதாக 2015 மார்ச் மாதத்தில் அறிவித்தார்.[2][3] இவ்வறிவிப்பு பொது பல சேனா போன்ற பௌத்த தேசியவாதிகளின் கண்டனத்திற்கு உள்ளானது.[4][5][6][7]

இராஜபக்ச தலமையிலான அரசுக்குப் பின்னர் ஆட்சியேற்ற மைத்திரிபால சிரிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலமையிலான அரசு இலங்கையின் 68ம் சுதந்திரதின விழாக் கொண்டாட்டத்தின் முடிவில் தேசிய கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை பாட அனுமதி வழங்கினர்.[8].

இலங்கையின் தேசிய மொழிகளில் நாட்டுப்பண்[தொகு]

சிங்கள மொழியில் தமிழ் ஒலிபெயர்ப்பு தமிழ் மொழிபெயர்ப்பு  
ශ්‍රී ලංකා මාතා
අප ශ්‍රී... ලංකා, නමෝ නමෝ නමෝ නමෝ මාතා
සුන්දර සිරිබරිනී, සුරැඳි අති සෝබමාන ලංකා
ධාන්‍ය ධනය නෙක මල් පලතුරු පිරි ජය භුමිය රම්‍යා
අපහට සැප සිරි සෙත සදනා ජීවනයේ මාතා
පිළිගනු මැන අප භක්‍තී පූජා
නමෝ නමෝ මාතා
අප ශ්‍රී... ලංකා, නමෝ නමෝ නමෝ නමෝ මාතා
ඔබ වේ අප විද්‍යා
ඔබ මය අප සත්‍යා
ඔබ වේ අප ශක්‍ති
අප හද තුළ භක්‍තී
ඔබ අප ආලෝකේ
අපගේ අනුප්‍රාණේ
ඔබ අප ජීවන වේ
අප මුක්‍තිය ඔබ වේ
නව ජීවන දෙමිනේ නිතින අප පුබුදු කරන් මාතා
ඥාන වීර්ය වඩවමින රැගෙන යනු මැන ජය භූමී කරා
එක මවකගෙ දරු කැල බැවිනා
යමු යමු වී නොපමා
ප්‍රේම වඩා සැම භේද දුරැර දා නමෝ නමෝ මාතා
අප ශ්‍රී... ලංකා, නමෝ නමෝ නමෝ නමෝ මාතා
ஸ்ரீ லங்(க்)கா மா(த்)தா
அ(ப்)ப ஸ்ரீ... லங்(க்)கா, நமோ நமோ நமோ நமோ மா(த்)தா
சுன்தர சிரிபரினீ, சுரெதி அ(த்)தி யோபமான லங்(க்)கா
தான்ய தனய நெ(க்)க மல் பல(த்)துரு (ப்)பிரி ஜய பூமிய ரம்யா
அ(ப்)பஹ(ட்)ட செ(ப்)ப சிரி செ(த்)த சதனா ஜீவனயே மா(த்)தா
பிழிகனு மென அ(ப்)ப பக்(த்)தீ பூஜா
நமோ நமோ மா(த்)தா
அப ஸ்ரீ... லங்(க்)கா, நமோ நமோ நமோ நமோ மா(த்)தா
ஒப வே அ(ப்)ப வித்யா
ஒப மய அ(ப்)ப சத்யா
ஒப வே அ(ப்)ப சக்(த்)தி
அ(ப்)ப ஹத (த்)துழ பக்(த்)தீ
ஒப அ(ப்)ப ஆலோ(க்)கே
அ(ப்)பகே அனுப்ராணே
ஒப அ(ப்)ப ஜீவன வே
அ(ப்)ப முக்(த்)திய ஒப வே
நவ ஜீவன தெமினே நி(த்)தின அ(ப்)ப (ப்)புபுது கரன் மா(த்)தா
ப்ரதான வீர்ய வடவமின ரெகென யனு மென ஜய பூமி (க்)கரா
எ(க்)க மவ(க்)ககே தரு கெல பெவினா
யமு யமு வீ நொ(ப்)பமா
ப்ரேம வடா செம பேத துரெர தா நமோ நமோ மா(த்)தா
அ(ப்)ப ஸ்ரீ... லங்(க்)கா, நமோ நமோ நமோ நமோ மா(த்)தா
சிறீ லங்கா தாயே-நம் சிறீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நல்லெழில் பொலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நம தலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே-நம் சிறீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதாரருள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதேர் வலியானாய்
நவில் சுதந்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல் செறி துணிவருளே - நம் சிறீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதார் ஒளி வளமே
நறிய மலர் என நிலவும் தாயே
யாமெலாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே - நம் சிறீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

[9]

ஆங்கில மொழிபெயர்ப்பு அபஅ எழுத்துப் பெயர்ப்பில் சிங்கள வரிகள்  
Mother Lanka we salute Thee!
Plenteous in prosperity, Thou,
Beauteous in grace and love,
Laden with grain and luscious fruit,
And fragrant flowers of radiant hue,
Giver of life and all good things,
Our land of joy and victory,
Receive our gratefull praise sublime,
Lanka! we worship Thee.
Thou gavest us Knowledge and Truth,
Thou art our strength and inward faith,
Our light divine and sentient being,
Breath of life and liberation.
Grant us, bondage free, inspiration.
Inspire us for ever.
In wisdom and strength renewed,
Ill-will, hatred, strife all ended,
In love enfolded, a mighty nation
Marching onward, all as one,
Lead us, Mother, to fullest freedom.
ʃriː laŋkaː maːtaː, apa ʃriː laŋkaː,
namoː, namoː, namoː, namoː maːtaː!
sundara siri barini,
surændi ati soːbamaːna laŋkaː.
daːnja ɖanaja neka,
mal palaturu piri, dʒaja bʱumija ramjaː.
apa ɦaʈa sæpa siri seta sadanaː,
dʒiːwanajeː maːtaː!
piɭiɡanu mæna apa bʱaktiː pudʒaː,
namoː, namoː maːtaː, apa ʃriː laŋkaː,
namoː, namoː, namoː, namoː maːtaː!
oba weː apa vidjaː, oba maja apa satjaː,
oba weː apa ʃaktiː, apa ɦada tula bʱaktiː.
oba apa aːloːkeː, apaɡeː anupraːneː,
oba apa dʒiːwana weː, apa muktija oba weː.
nawa dʒiːwana demineː,
nitina apa pubudu karan, maːtaː.
ɲaːna wiːrja waɖawamiːna ræɡena,
janu mæna dʒaja bʱumi karaː.
eka mawakaɡe daræ kæla bæwinaː,
jamu jamu wiː nopamaː.
prema waɖaː sæma bʱeːda duræra laː,
namoː, namoː maːtaː, apa ʃriː laŋkaː,
namoː, namoː, namoː, namoː maːtaː!

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80_%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%87

Link to comment
Share on other sites

Mano Ganesan
18 hrs
 
தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது, பெரிய விஷயம் அல்ல என கூட்டமைப்பு தலைவர் சொல்லியுள்ளார். உண்மைதான். இது பெரிய விஷயம் இல்லை. ஒரு சிறுவனின் சிறு காலடிதான். ஆனால், மனரீதியாக ஒரு நீண்டதூர பாய்ச்சல். (small step but a long leap). முன்பு பாடப்பட்டதுதான், மீண்டும் பாடப்படுகிறது என்றும் சொல்லியுள்ளார். உண்மைதான், தேசிய நிகழ்வில், 1949ல் முதலில் பாடப்பட்டது, இப்போது 2016ல் பாடப்படுகிறது. ஆக, 67 வருடங்கள். அவ்வளவுதான்.

அதுசரி, சம்பந்தன் ஐயா, தமிழ் கீதத்தை கேட்டு கண்கலங்கி உணர்ச்சிவசப்பட்டார் என்று தமிழ் ஊடகங்கள் எழுதியுள்ளனவே! எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி உதை அரபிகில
சிறிலங்கா உம்மா நம் சிறிலங்கா உம்மா உம்மா
என்று பாடலாம் தானே  
சைக்..... மொழி பெயர்க்கும் போதே சகிக்கலை  ....அடுத்தடுத்த வருஷம் அரபிக்கிலையும் பாட வேண்டி வரும் ....
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தெனாலி said:

இதை வன்னியில் இருப்பவர் கூறினால் ஒரு நியாயம் இருக்கு. லண்டனில இருந்து அடுத்தவன் ஓடிட்டான் என்றா எப்படி? 
நாட்டில் இருக்கும் அடுத்த தலைமுறை நிச்சயம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழவே முழு முயற்சிகளை மேற்கொள்ளும். வெளிநாடுகளில இருந்து ஸ்கோர் கேட்ட கூட்டம் அதை பார்த்து புலம்பியே அழிந்து போகும். அவர்களது அடுத்த சந்ததி தமிழ் கதைத்தால் அதுவே பெரிய விடயம். 

நாங்க வன்னிலும் இருந்திட்டு தான் வந்தனாங்க. எல்லாக் கஸ்டங்களும் எங்களுக்குத் தெரியும். ஒன்னும் போராட்டத்தை சாட்டி சனத்துக்கு இந்தா ஈழம் எடுத்துத்தாறமென்டு அவிச்சுப் போட்டு.. வெளிநாட்டுக்கு அகதின்னு ஓடிவந்து.. இப்ப மொத்த மக்களையும் நாட்டையும் காட்டிக்கொடுத்துக்கிட்டு இருக்கிற கூட்டமில்லை நாங்க.. என்பதே போதும் சிலதை துணிவாச் சொல்ல. அதெல்லாம் போராட்டம் என்ற உடனவும்.. போராட்டப் போறம் என்றிட்டு போக்குக்காட்டிட்டு.. பதுங்கி ஓடியாந்த காமடிஎலிகளுக்கு புரியாது.tw_blush:

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

நாங்க வன்னிலும் இருந்திட்டு தான் வந்தனாங்க. எல்லாக் கஸ்டங்களும் எங்களுக்குத் தெரியும். ஒன்னும் போராட்டத்தை சாட்டி சனத்துக்கு இந்தா ஈழம் எடுத்துத்தாறமென்டு அவிச்சுப் போட்டு.. வெளிநாட்டுக்கு அகதின்னு ஓடிவந்து.. இப்ப மொத்த மக்களையும் நாட்டையும் காட்டிக்கொடுத்துக்கிட்டு இருக்கிற கூட்டமில்லை நாங்க.. என்பதே போதும் சிலதை துணிவாச் சொல்ல. அதெல்லாம் போராட்டம் என்ற உடனவும்.. போராட்டப் போறம் என்றிட்டு போக்குக்காட்டிட்டு.. பதுங்கி ஓடியாந்த காமடிஎலிகளுக்கு புரியாது.tw_blush:

நாட்டில் இருப்பவனுக்கும் அடுத்தவனுக்கும் பாடம் எடுக்க வன்னியில் கொஞ்ச காலம் இருந்திருந்தால் போதும் என்றால் இனி நானும் பாடம் எடுக்க துவங்கலாம் போலிருக்கிறது. நாங்களும் மொத்த கஷ்டத்தையும் அனுபவிச்சு அனைத்தையும் இழந்து தான் வந்தனாங்கள்..என்னவோ மற்றவர்களெல்லாம் பதுங்கி ஓடிவந்தவர்கள் இவர் மட்டும் புலிகொடியோட கட்டுநாயக்காவுக்குள்ளால வந்தவர் என்று நினைப்பு. நாட்டில் நின்று போராடாமல் வெளிநாடு ஓடியவர்கள் எவருக்கும் நாட்டு மக்கள் என்ன செய்யவேண்டும் என்று கூற உரிமை இல்லை!

Link to comment
Share on other sites

வன்னி ஊடாக பஸ்ஸில் போனனான் நானும் போராளிதான்  என்று வரப்போகின்றார்கள் .

Link to comment
Share on other sites

9 minutes ago, arjun said:

வன்னி ஊடாக பஸ்ஸில் போனனான் நானும் போராளிதான்  என்று வரப்போகின்றார்கள் .

கொஞ்சம் இறங்கி ஆராய்ந்தால் வன்னியை விக்கிபீடியாவில் தான் பார்த்திருப்பார்கள் என்ற உண்மையும் வெளிப்படலாம்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

,நாங்கள் பிறந்து வளர்ந்த மண்ணைப்பற்றிக் கருத்துக் கூறக்கூடாது என்று  யாரும் சொல்ல முடியாது.1977 ஆம் ஆண்டு வரையும் யாரும் தமிழீழம் கேட்டுப் போராடவுமில்லை. அகதியாய் வேறு நாடுகளுக்கு ஓடிவரவுமில்லை. எங்கள் அப்பா .தாத்தா காலத்தில் வராத பொருளாதார கஸ்டம் ஏன் 1977 இற்குப் பிறகு வந்தது. தமிழருக்கு தமிழீழமே தீர்வு என்று வாக்குக் கேட்டுத்தான் சம்பந்தர் முதற்தடைவையாக நாடளுமன்றம் போனார்.தமிழ் அரசியல்வாதிகள் ஏற்றுக்கொண்ட தீரவை அடையவே தமிழ் இளைஞர்கள் தமக்குத் தெரிந்த வழிகளில் போராடப் புறப்பட்டார்கள். பலர் தடம்மாறி தங்கள் Nராட்டம் சிங்களவர்களுக்கு எதிரானது அல்ல புலிகளுக்கு எதிரானது  எனப் புலிகளுக்கெதிராகப் போராடினார்கள்.புலிகள் இறுதிவரை தடம்புரளாமல் இறுதிவரைக்கும் உயிரைக் கொடுத்துப் போராடினார்கள். காட்டிக் கொடுப்புகளாலும் கழுத்தறுப்புகளாலும்சர்வதேச சதிகளாலும் போராட்டம் அழிக்கப்பட்டது.ஆனல் 30 வருடகாலத்தில் சிங்கள அரசின் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் அந்த மக்களைத் தாங்கிப் பிடித்த மக்களை அதுவும் அங்கேயுள்ள மக்களில் கிட்டத்தட்ட10 இலட்சம் மக்களை ஓதுக்கி வைத்து விட்டு தீர்வு காண வேண்டும் என்பது எந்த வகையில் நீதியானது.

Link to comment
Share on other sites

3 minutes ago, புலவர் said:

வரலாற்றை திரிக்ககூடாது ,

தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, புலவர் said:

,நாங்கள் பிறந்து வளர்ந்த மண்ணைப்பற்றிக் கருத்துக் கூறக்கூடாது என்று  யாரும் சொல்ல முடியாது.1977 ஆம் ஆண்டு வரையும் யாரும் தமிழீழம் கேட்டுப் போராடவுமில்லை. அகதியாய் வேறு நாடுகளுக்கு ஓடிவரவுமில்லை. எங்கள் அப்பா .தாத்தா காலத்தில் வராத பொருளாதார கஸ்டம் ஏன் 1977 இற்குப் பிறகு வந்தது. தமிழருக்கு தமிழீழமே தீர்வு என்று வாக்குக் கேட்டுத்தான் சம்பந்தர் முதற்தடைவையாக நாடளுமன்றம் போனார்.தமிழ் அரசியல்வாதிகள் ஏற்றுக்கொண்ட தீரவை அடையவே தமிழ் இளைஞர்கள் தமக்குத் தெரிந்த வழிகளில் போராடப் புறப்பட்டார்கள். பலர் தடம்மாறி தங்கள் Nராட்டம் சிங்களவர்களுக்கு எதிரானது அல்ல புலிகளுக்கு எதிரானது  எனப் புலிகளுக்கெதிராகப் போராடினார்கள்.புலிகள் இறுதிவரை தடம்புரளாமல் இறுதிவரைக்கும் உயிரைக் கொடுத்துப் போராடினார்கள். காட்டிக் கொடுப்புகளாலும் கழுத்தறுப்புகளாலும்சர்வதேச சதிகளாலும் போராட்டம் அழிக்கப்பட்டது.ஆனல் 30 வருடகாலத்தில் சிங்கள அரசின் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் அந்த மக்களைத் தாங்கிப் பிடித்த மக்களை அதுவும் அங்கேயுள்ள மக்களில் கிட்டத்தட்ட10 இலட்சம் மக்களை ஓதுக்கி வைத்து விட்டு தீர்வு காண வேண்டும் என்பது எந்த வகையில் நீதியானது.

புலிகள் மாற்று இயக்கங்கள் மேல் கைவைக்காமல் சும்மா எடுத்த வீச்சுக்கு புலிகளுக்கு எதிராக மற்றைய இயக்கத்தவர்கள் போராடினார்கள் எனச் சொல்கிறீர்கள்.  இப்படி எழுத உங்களால் எப்படி முடிகின்றதோ தெரியவில்லை. புலிகள் கொள்கையில் உறுதியாக நின்றார்கள் என்பது மெய், ஆனால் இறுதியில் தடம்புரண்டார்கள், தமிழீழக் கோரிக்கையை கைவிடாமல் இருப்பது மட்டும் கொள்கை உறுதியல்ல. மக்களின் பாதுகாப்புக்காக ஏந்தப்பட்ட ஆயுதங்கள் இறுதியில் மக்களுக்கு எதிராகவே நீட்டப்பட்டன. மக்களைப் பாதுகாக்கவென புறப்பட்டவர்கள் இறுதியில் தமது பாதுகாப்பிற்காக மக்களை கேடயங்களாக்கியது வரலாறு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வாலி said:

மாற்று இயக்கங்கள் எல்லாம் புலிகளுக்கு எதிராகத் துப்பாக்கியை நீட்ட வில்லையா?தங்கள்' சொந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களையே பொட்டுத் தள்ள வில்லையா?மாலைதீவில் போய் அங்குள்ள மக்களை அழித்து தமிழீழத்துக்கான போரை மாலைதீவில் நடத்தவில்லையா ? ஆக தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும் என்ற டார்வினின் கோட்பாட்டுக்கு அமையவே புலிகள் தலையெடுத்தார்கள்.சர்வதேசத் தலையீடே அவர்களை அழித்தது.

Link to comment
Share on other sites

15 minutes ago, வாலி said:

புலிகள் மாற்று இயக்கங்கள் மேல் கைவைக்காமல் சும்மா எடுத்த வீச்சுக்கு புலிகளுக்கு எதிராக மற்றைய இயக்கத்தவர்கள் போராடினார்கள் எனச் சொல்கிறீர்கள்.  இப்படி எழுத உங்களால் எப்படி முடிகின்றதோ தெரியவில்லை. புலிகள் கொள்கையில் உறுதியாக நின்றார்கள் என்பது மெய், ஆனால் இறுதியில் தடம்புரண்டார்கள், தமிழீழக் கோரிக்கையை கைவிடாமல் இருப்பது மட்டும் கொள்கை உறுதியல்ல. மக்களின் பாதுகாப்புக்காக ஏந்தப்பட்ட ஆயுதங்கள் இறுதியில் மக்களுக்கு எதிராகவே நீட்டப்பட்டன. மக்களைப் பாதுகாக்கவென புறப்பட்டவர்கள் இறுதியில் தமது பாதுகாப்பிற்காக மக்களை கேடயங்களாக்கியது வரலாறு. 

1.இலங்கை இராணுவம் மக்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு ஏன் குண்டு வீசினார்கள்.

2.புலிகள் பயங்கரவாதிகள் அவர்களுக்கு மக்கள் நலம் பற்றி அக்கறை இல்லை , ஆனால் மக்கள் இருக்கின்றார்கள் என்றும் தெரிந்து கொண்டு ஏன் இலங்கை இராணுவத்தின் அடாவடிக்கு சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்க்கியது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.