Jump to content

Whats App-பை மாதமொன்றுக்கு ஒரு பில்லியன் பேர் பயன்படுத்துவதாக தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Whats App-பை மாதமொன்றுக்கு ஒரு பில்லியன் பேர் பயன்படுத்துவதாக தகவல்

[ Tuesday,2 February 2016, 07:02:00 ]   
WhatsApp.jpg

கையடக்க தொலைபேசி தகவல் சேவையான வட்ஸ் அப்பை ஒவ்வொரு மாதமும் ஒரு பில்லியன் பேர் பயன்படுத்துவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

 

பேஸ்புக் வலையமைப்புக்கு சொந்தமான மெசஞ்ஜர் கையடக்க தொலைபேசி அப்-பை விட வட்ஸ் அப்-பை அதிகளவிலானவர்கள் பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் மெசஞ்ஜர் அப்-பை மாதமொன்றுக்கு 800 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர்.

நாளாந்தம் வட்ஸ் அப்-பின் ஊடாக 42 பில்லியன் தகவல்களும் 250 மில்லியன் காணொளிகளும் அனுப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

எவ்வாறாயினும் போட்டிமிக்க உள்ளூர் சந்தைகளில் வட்ஸ்- அப் தற்போதும் பின்னிலையில் உள்ளதாக சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சீனாவில் வீ சட்-டை (WeChat) 500 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்துகின்ற அதேவேளை ஜப்பானின் லைய்ன் அப் (Line App) பிரபலமாக காணப்படுகின்றது.

எவ்வாறாயினும் சர்வதேச ரீதியில் வட்ஸ் அப் வெற்றிகரமான ஒன்றாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.