Jump to content

அமெரிக்க ஜனாதிபதியாக யாரை போட்டியிட வைப்பது தேர்தல் இன்று தொடங்குகிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் ஜனாதிபதியாக போட்டியிடுவதென்றால் நினைத்த மாத்திரத்தில் நான் ஜனாதிபதியாக போட்டியிட போகிறேன் என்று அறிவிக்க முடியாது.

நாடு முழுவதும் நான் என்ன என்ன செய்யப் போகிறேன் மற்றவர் சொல்வது சரியா பிழையா அமெரிக்க அரசியல் பொருளாதாரம் உலக அரசியல் உலக பொருளாதாரம் என்று அக்கு வேறு ஆணி வேறாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.யார் அமெரிக்காவுக்கு நல்லதைச் செய்வார்கள் யாரை போட்டியிட வைக்கலாம் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.

இன்று 2016 கார்த்திகையில் நடக்கப் போகும் ஜனாதிபதி தேர்தலுக்கு யாரை தெரிவு செய்யலாம் என்ற தேர்தல் ஐயோவா என்ற மாநிலத்தில் தொடங்குகிறது.இரவு 8 மணிக்கு வாக்களிக்கும் நேரம் முடிவடைகிறது. 8 மணி ஒரு நிமிடத்திற்குள் முடிவை அறிவித்து விடுவார்கள்.

இப்படி ஒவ்வொரு மாநிலமாக தேர்தல் நடக்க பின்னாடி வந்து கொண்டிருப்பவர்கள் தானாகவே நின்று விடுவார்கள்.

கடைசியில் குடியரசுக் கட்சியில் இருந்தும் ஜனநாயகக் கட்சியில் இருந்தும் ஒவ்வொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு கார்த்திகை மாதம் இரண்டாம் செவ்வாய்கிழமை அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக கட்சி இந்தமுறையும் வாறதுக்கு சந்தர்ப்பமில்லையெண்டு நான் நினைக்கிறன் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On February 1, 2016 at 6:31 PM, குமாரசாமி said:

ஜனநாயக கட்சி இந்தமுறையும் வாறதுக்கு சந்தர்ப்பமில்லையெண்டு நான் நினைக்கிறன் :rolleyes:

குடியரசுக் கட்சியில் நல்ல வேட்பாளர் இல்லாததால் சொல்ல முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடந்து முடிந்த தேர்தலில்
ஜனநாயக கட்சியில் கில்லாறியும்
குடியரசுக் கட்சியில் ரெட் குறூஸ்சும்
வென்றுள்ளனர்.

நாளை நியூகம்செயர் மாநிலத்தில் நடக்கும் தேர்தலில் புதியவர்கள் வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடந்த தேர்தலில்
குடியரசுக் கட்சியில் டொனால்ட் ரம்பும்

ஜனநாயக கட்சியில் பேர்ணி சான்டசும்

வென்றுள்ளனர்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று நெவாடா மாநிலத்தில் நடந்த தேர்தலில் கில்லாரி கிளின்டன் வெற்றி பெற்றுள்ளார்.

ஆண்களும் இளையோர்களும் சாண்டசையும்

பெண்களும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் கில்லாரியை விரும்புகிறார்கள்

http://www.nbcnews.com/politics/2016-election/primaries/NV

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கு கரோலினா மாகாணத்தில்

டெனால்ட் ரம் வென்றுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெவ் புஸ் ஜனாதிபதிக்கான அஞ்சல் ஓட்டத்தில் இருந்து ஒதுங்கி கொண்டார். 

(CNN)Jeb Bush is suspending his campaign for the Republican nomination, he announced Saturday night.

Bush struggled for months to make inroads against Donald Trump, who constantly mocked the former Florida governor's "low energy" and for spending tens of millions of dollars on his campaign.

http://www.cnn.com/2016/02/20/politics/jeb-bush-drops-out-2016/index.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாண்டர் தோற்றது கவலையளிக்கிறது 
அவருடைய நோக்கம் பலருக்கு புரியவில்லை 

தற்போதைய போக்கில் 
சாண்டர் போன்றவர்களே அமெரிக்காவை தக்க வைக்க கூடியவர்கள்.

மற்றையவர்களால் நாட்டு மக்களுக்கு பெரிதாக ஒன்றுமில்லை. 

செண்டிமெண்ட் நாடகம் போட்டு 
;லத்தீன் வாக்குகள் மூலம் கிலரி வென்று விட்டார் 

2 hours ago, ஈழப்பிரியன் said:

ஜெவ் புஸ் ஜனாதிபதிக்கான அஞ்சல் ஓட்டத்தில் இருந்து ஒதுங்கி கொண்டார். 

(CNN)Jeb Bush is suspending his campaign for the Republican nomination, he announced Saturday night.

Bush struggled for months to make inroads against Donald Trump, who constantly mocked the former Florida governor's "low energy" and for spending tens of millions of dollars on his campaign.

http://www.cnn.com/2016/02/20/politics/jeb-bush-drops-out-2016/index.html

மகிழ்ச்சியான செய்தி !

காரணம் இவர்கள் ஒதுங்கி சும்மா இருக்கபோவதில்லை 
ட்றம்மிற்கு எதிராக திரை மறைவில் எதையாவது செய்துகொண்டே இருப்பார்கள்.

எமக்கு கொண்டாடம்தான் ! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெவாடா மாநிலத்தில் டொனால்ட் ரம் வென்றுள்ளார்.

இரண்டாம் இடத்திற்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கும்
 ரெட் குருஸ்
மார்க்கோ ரூபியோ

இருவரும் என்றுமே இல்லாதவாறு ஆளாளுக்கு பொய்யன் கள்ளன் என்று சேறடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இருவரின் குடும்பமும் கியூபா பின்னணியைக் கொண்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம் வெல்லுவதுதான் நல்லது  நோவம்பரில் எமக்கு சாதகமாக அமையும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

ட்ரம் வெல்லுவதுதான் நல்லது  நோவம்பரில் எமக்கு சாதகமாக அமையும்

உஙகளுக்கு அரசியல் தான் தெரியாதே என்று கேட்க

உண்மை தான் ஆனால் கோடிக்கணக்கானவர்கள் என்னை விரும்புகிறார்கள்.அதனால் போட்டியிடுகிறேன் என்கிறார்.

அவர் சொல்வதெல்லாம் உண்மை
ஆனால் அரசியலில் உண்மை எடுபடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஜனாதிபதியாக போட்டியிட ஒவ்வொரு மாநிலமாக போட்டியிட்டு

ஜனநாயக கட்சி மொத்தமாக உள்ள 
4192 டிலிகேற்சில் 2383 உம்

குடியரசுக் கட்சி மொத்தமாக உள்ள
2347 டிலிகேற்சில் 1237 உம் எடுக்க வேண்டும்.

இவை ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சனத்தொகையை வைத்து அந்தந்த மாநிலங்களில் வெல்பவருக்கு வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடந்த ஜனநாயக கட்சிக்கான தேர்தலில் தெற்கு கரோலினாவில்

கில்லாரி மாபெரும் வெற்றியடைந்துள்ளார்.

இது வரை ஒவ்வொரு மாநிலமாக நடந்து முடிந்தது.வரும் செவ்வாய்கிழமை பங்குனி 1ம் திகதி இரு கட்சியினருக்கும் பல மாநிலங்களில் ஒரோ நாளில் நடக்கப் போகிறது.இதை இரு கட்சியினரும் சூப்பர் ரியூஸ்டே (Super Tuesday) என குறிப்பிடுகிறார்கள்.

இந்த சூப்பர் ரியூஸ்டேயில் யார் ஜனாதிபதி போட்டிக்கு நிற்பார் என்பதை ஓரளவு தெரிந்துவிடும்.

இவர்கள் வெல்லவதற்கு எத்தனை டிலிகேற்ஸ் எடுக்க வேண்டும் என்பதை கீழே உள்ள சுட்டியை அழுத்தி பார்க்கலாம்.

ஜனநாயககட்சி

https://www.google.com/search?q=democative+deligates&ie=utf-8&oe=utf-8#eob=m.09c7w0/D/2/short/m.09c7w0/

குடியரசுக்கட்சி

https://www.google.com/search?q=democative+deligates&ie=utf-8&oe=utf-8#eob=m.09c7w0/R/2/short/m.09c7w0/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் வெல்லவதற்கு எத்தனை டிலிகேற்ஸ் எடுக்க வேண்டும் என்பதை கீழே உள்ள சுட்டியை அழுத்தி பார்க்கலாம்.

 

http://www.politico.com/2016-election/results/delegate-count-tracker

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் ரியூஸ்டே தேர்தல் முடிவுகள்

http://www.nytimes.com/elections/results

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இது வரை நடந்த ஜனாதிபதி வேட்பாளருக்கான தேர்தல்களில்

ஜனநாயக கட்சியில் போட்டியிட்ட கில்லாரி கிளின்ரன் வேட்பாளருக்கு தேவையான

2383 டெலிகேற்சில் 1568 முன்னிலையிலும்

பேர்ணி சாண்டஸ்  797 டெலிகேற்சும் எடுத்து இன்னமும் போட்டியில் நிற்கிறார்.

மறு பக்கத்தில் குடியரசுக் கட்சியில் டெனால்ட் றம் யாருமே எதிர் பார்காத வெற்றி எடுத்துக் கொண்டு இருக்கிறார்.வேடிக்கை என்னவென்றால் குடியரசுக் கட்சி தலைவர்களாலேயே இவரது எழுச்சியை கட்டுப்படுத்த முடியாமல் பகிரங்கமாகவே ரம்மைப் பற்றி கூடாமல் பிரச்சாரம் செய்தும் தொடர்ந்தும் வென்று கொண்டிருக்கிறார்.

இது வரை தேவையான 1237 டெலிகேற்சில்

றம் 640 உம்
குரூஸ் 405 உம் எடுத்த நிலையில் போட்டியில் இருக்கிறார்கள்.

http://www.politico.com/2016-election/results/delegate-count-tracker

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெர்னி சாண்டர் இல்னோயிஸ் ஓஹையோ வில் வெல்லுவார் என்று எதிர்பார்த்தேன்.
மிக நெருக்கமான போட்டியாக முடிந்திருக்கிறது.

இப்போதைய நிலையில் சாண்டர் சேனாதிபதி ஆவதுதான் நாட்டிற்கும் 
உலகிற்கும் சிறப்பாக அமையும்.

அவருடைய திட்டங்கள் பலருக்கு புரியவில்லை 
இளைய தலைமுறை புரிந்துகொண்டுள்ளது 
வயது போனவர்கள் வழமையான போக்கில் போகிறார்கள்.

இனி சாண்டர் வெல்ல அதிக சாத்தியம் இல்லை.
கவலையான விடயம்.

ஈழத்தமிழர் விடயத்தில் ஹிலரி ஓரளவு விடயம் புரிந்தவர் 
சரியானவர்கள் நாடினால் பலன் கிடைக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டொனால்ட் ரம்பை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்காவிட்டால் கலம்பகம் நடக்கும் என்று எச்சரிக்கிறார்.

 

Washington (CNN)Donald Trump and Ted Cruz warned fellow Republicans Wednesday of dire consequences if the GOP establishment attempts to have a brokered convention this summer.

"I think you'd have riots. I think you'd have riots," Trump said Wednesday on CNN's "New Day." "I'm representing a tremendous many, many millions of people."

The Republican Party veered closer to a contested convention Tuesday after Ohio Gov. John Kasich won his home state and deprived Trump, the party's front-runner, of its 66 delegates. That makes it more difficult for the billionaire to reach the 1,237 delegates he needs to capture the GOP prize without a floor fight.

http://www.cnn.com/2016/03/16/politics/donald-trump-ted-cruz-brokered-convention/index.html

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பெரும் இழுபறியுடன் நடந்து கொண்டிருக்கும் தேர்தலில் இது வரை எந்த ஒரு வேட்பாளரும் அவரவருக்கு தேவையான புள்ளிகளை எடுக்கவில்லை.
இருந்தாலும் குடியரசுக் கட்சியில் டெனால்ட் ரம்பும் ஜனநாயகக் கட்சியில் கிளின்டன் கில்லாரியும் முன்னணியில் நிற்கிறார்கள்.

இன்றுடன் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின் படி ஜனநாயக கட்சியில்

 
2026
pledged: 1524
super: 502
 
 
2383 delegates needed to win
1291
pledged: 1249
super: 42
 
 
2383 delegates needed to win

 குடியரசுக் கட்சியில்

926
pledged: 926
unpledged: 0
 
 
1237 delegates needed to win
563
pledged: 562
unpledged: 1
 
 
1237 delegates needed to win
147
pledged: 147
unpledged: 0
 

இன்னும் சில மாநிலங்களே மிச்சமாக இருக்கும் நிலையில் என்ன நடக்குதோ என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் 'பேயோட்டிகள்' தான்  அமெரிக்காவின் சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டார்கள்!

இனிமேல் தான் ஒரு பேய் ஒன்று முதல் முறையாக...அமரப்போகின்றது!

அமெரிக்கா உலகில் தான் இதுவரை நிலை நிறுத்தி வந்துள்ள...முதன்மை ஸ்தானத்தை விரைவில் இழந்து விடுவதோடு...அமெரிக்காவோடு இதுவரை தொங்கிக் கொண்டிருந்த நாடுகள்...நேரடியாகப் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும் காலமும் நெருங்கி வந்து கொடிருக்கின்றது போல உள்ளது!

அமெரிக்கா என்ற குதிரையின் வாலில் தொங்கிக் கொண்டிருத்த இந்தியா என்ற தேசம்...இனிமேல் தான் 'உண்மைகளை' சந்திக்கப் போகின்றது!

இது மூன்றாவது...உலக யுத்தம் ஒன்றுக்குக் கூடப் பல நாடுகளை இட்டுச் செல்லலாம்!

முடிவு உங்களைப் போன்ற வாக்காளர்களின் கையில் தான் உள்ளது...நுணாவிலான்/ ஈழப்பிரியன்/ மருதர்/ ஜூட், ஜஸ்டின்....!:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புங்கையூரன் said:

இவ்வளவு காலமும் 'பேயோட்டிகள்' தான்  அமெரிக்காவின் சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டார்கள்!

இனிமேல் தான் ஒரு பேய் ஒன்று முதல் முறையாக...அமரப்போகின்றது!

அமெரிக்கா உலகில் தான் இதுவரை நிலை நிறுத்தி வந்துள்ள...முதன்மை ஸ்தானத்தை விரைவில் இழந்து விடுவதோடு...அமெரிக்காவோடு இதுவரை தொங்கிக் கொண்டிருந்த நாடுகள்...நேரடியாகப் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும் காலமும் நெருங்கி வந்து கொடிருக்கின்றது போல உள்ளது!

அமெரிக்கா என்ற குதிரையின் வாலில் தொங்கிக் கொண்டிருத்த இந்தியா என்ற தேசம்...இனிமேல் தான் 'உண்மைகளை' சந்திக்கப் போகின்றது!

இது மூன்றாவது...உலக யுத்தம் ஒன்றுக்குக் கூடப் பல நாடுகளை இட்டுச் செல்லலாம்!

முடிவு உங்களைப் போன்ற வாக்காளர்களின் கையில் தான் உள்ளது...நுணாவிலான்/ ஈழப்பிரியன்/ மருதர்/ ஜூட், ஜஸ்டின்....!:unsure:

Donald-Trump.jpg

இவர்தான் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி எண்டு நானும் நினைக்கிறன். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேடுவாரற்றுக்கிடந்த இன்டியானா மாநிலம் இன்று உலகம் முழுவதும் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
பெரும் கழேபரங்களுக்கு மத்தியில் நடந்த தேர்தலில் டொனால்ட் ரம் அமோக வெற்றியடைந்துள்ளார்.
இவருடன் கடும் போட்டி போட்டுக் கொண்டிருந்த ரெட் குரூஸ் படு தோல்விக்கு பின் போட்டியில் இருந்து வாபசாகி உள்ளார்.

cnn.com/2016/05/03/politics/indiana-primary-highlights/index.html

கில்லாரி சான்டஸ் இடையேயான போட்டி தொடர்ந்தும் போகும்.
சான்டஸ் இன்னமும் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

தேடுவாரற்றுக்கிடந்த இன்டியானா மாநிலம் இன்று உலகம் முழுவதும் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
பெரும் கழேபரங்களுக்கு மத்தியில் நடந்த தேர்தலில் டொனால்ட் ரம் அமோக வெற்றியடைந்துள்ளார்.
இவருடன் கடும் போட்டி போட்டுக் கொண்டிருந்த ரெட் குரூஸ் படு தோல்விக்கு பின் போட்டியில் இருந்து வாபசாகி உள்ளார்.

cnn.com/2016/05/03/politics/indiana-primary-highlights/index.html

கில்லாரி சான்டஸ் இடையேயான போட்டி தொடர்ந்தும் போகும்.
சான்டஸ் இன்னமும் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை.

என்ன அண்ணே நீங்களும் இப்படி எழுதி கடுப்பை உண்டு பண்ணுகிறீர்கள்.
கலிபோர்னியாவில் சாண்டருக்கு வெற்றி என்றே எண்ணுகிறேன்.
சென்றவாரம் நடந்த 5 மாநிலத்திலும் பதிவு செய்தவர்கள் மட்டுமே வாக்கு போடலாம் எனும் 
நிலை பாட்டால் மட்டுமே கிலரி வென்றார். 

கிலரிக்கு இன்னமும் 180 டெலகேட்ஸ் மட்டுமே தேவை இதை பெறுவது மிக இலகு.

சாண்டருக்கு இனி சந்தர்ப்பமே இல்லை.

சாண்டர்தான் இப்போதைய நிலையில் நாட்டுக்கு தேவை. இவரை மக்கள் புரியும் முன்பே 
பல இடங்களில் தேர்தல் முடிந்துவிட்டது. 
தவிர 600 சுப்பர் டெலெகெட்சை வைத்து கொண்டுதான் கிலரி ஆடுகிறார்.

உண்மையை பார்த்தால் மக்கள் ஆதரவு சாண்டருக்கு தான் அதிகம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Maruthankerny said:

 

சாண்டருக்கு இனி சந்தர்ப்பமே இல்லை.

 

பிரச்சனையே இது தான்.இனி நகரவே முடியாது என்றால் தொடர்ந்தும் கோடிக் கணக்கான பணத்தை ஏன் செலவு செய்வான்?

இதே தவறை 2008 இல் கில்லாரியும் செய்திருந்தார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.