Jump to content

செம்மை காணுமா செர்பியா?


Recommended Posts

செம்மை காணுமா செர்பியா? - 1

 

 
செர்பிய தலைநகர் பெல்கிரேட்டில் பழங்காலத்திலேயே மிக நேர்த்தியாக அமைக்கப்பட்ட கெனிஸ் மிகாஜ்லோவா சாலை.
செர்பிய தலைநகர் பெல்கிரேட்டில் பழங்காலத்திலேயே மிக நேர்த்தியாக அமைக்கப்பட்ட கெனிஸ் மிகாஜ்லோவா சாலை.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்று செர்பியா. அதன் வட பகுதி யில் அமைந்த சில நாடுகள் பலருக்கும் அறிமுகமான இங்கி லாந்து, நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகியவை. ஐரோப்பாவின் தென் பகுதியில் அமைந்த நாடு என்று கிரீஸைச் சொல்லலாம். அதற்குச் சற்று மேலே அமைந்துள்ளது செர்பியா.

செர்பியாவைச் சூழ்ந்துள்ள நாடுகள் போஸ்னியா, மான்டெ னெக்ரோ, அல்பேனியா, மாசிடோ னியா, குரோவேஷியா போன் றவை. செர்பியாவைப் பற்றிய இந்தக் கட்டுரைத் தொடரில் இந்த நாடுகளும் அதிக அளவில் இடம் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்று. இவை ஒன்றுக்குள் ஒன்றாக இருந்த நாடுகள். கொலைவெறியோடு ஒன்றோடொன்று தாக்குதல் நடத்திக் கொண்ட நாடுகளும் கூட.

செர்பியாவில் வசிக்கிறார் 86 வயதான மரிஜா என்ற பெண்மணி. மலைப்பாங்கான பகுதியில் மண் வீடு ஒன்றில் வாசம்.

தனக்கு சமீபத்தில் கிடைத்த அத்தனை பணத்தையும் வேண்டா மென்று மறுத்திருக்கிறார். அவருக்குக் கிடைத்த தொகை சுமார் பத்து லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள்!

அவரும் அவர் கணவரும் 1956ல் மேற்கு ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்திருக்கின்றனர். கணவர் ஒரு தொழிற்சாலையில் தச்சு வேலை செய்பவராக இருந்தி ருக்கிறார். மரிஜா இல்லத்தரசி. ஆஸ்திரேலியா சென்ற ஒன்றரை வருடங்களிலேயே தாய்நாடான செர்பியாவுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் உண்டானது மரிஜாவுக்கு. காரணம் அவரது அம்மா மிகவும் நோய்வாய்ப் பட்டிருந்தார்.

அதற்குப் பிறகு மரிஜா ஆஸ்தி ரேலியா திரும்பவில்லை - அவரது தாய் இறந்த பிறகும். ஆனால் தொடர்ந்து தன் கணவருடன் தகவல் தொடர்பு கொண்டிருந்தார். ‘’வேலையிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்ட உடனே செர்பியா திரும்பிவிட வேண்டும்’’ என்பதை மட்டும் மரிஜா அவரிடம் வலியுறுத்திக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், 2011ல் தன் கணவர் இறந்துவிட்டதாக ஒரு செய்தி கிடைத்தது. அக்கம்பக்கத்தினரிடம் உதவி கோரினார் மரிஜா. உண்மை நிலையை அறிய முடியவில்லை. பெல்கிரேடிலிருந்த (செர்பியாவின் தலைநகரம் பெல்கிரேடு) ஆஸ்திரேலிய தூதரகம், ஆஸ்திரேலியாவில் இருந்த செர்பியத்தூதரகம் ஆகிய இரண்டுமே எந்த பதிலையும் தரவில்லை.

நான்கு வருடத் தேடுதலுக்குப் பிறகு சமீபத்தில் அவருக்கு அந்தச் செய்தி வந்து சேர்ந்தது. அவர் கணவர் இறந்துவிட்டிருந்தார். இறப்பதற்கு முன் சில வருடங்கள் ஆடு, மாடு, குதிரை லாயங்கள் நடத்தி நிறைய சம்பாதித்திருந்தார். அதன் மூலம் அவர் சேர்த்த தொகைதான் பத்து லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள்.

இந்தப் பணம் கைக்கு வந்தபோது ‘’அது எனக்கு வேண்டாம். என் இனத்தைச் சேர்ந்த மக்கள் இத்தனை நாள் என்னை ஆதரித்தார்கள். விறகுகளை வெட்டிக் கொடுத்தார்கள். மண் குடிசை ஒழுகியபோது அதை அடைத்தார்கள். அவர்களுக்கே இந்தப் பணம் போகட்டும். எனக்கு ரொட்டியும், தண்ணீரும் போதும். துணைக்கு என் நாய் இருக்கிறது’’ என்று கூறியிருக்கிறார்.

இப்படி தன்னலம் கருதாமை, இரக்க குணம் ஆகிய இரண்டுக்கும் உதாரணமாக செர்பியாவைச் சேர்ந்த ஒரு பெண்மணியைப் பற்றி செய்தி கிடைத்திருக்கும் அதே சமயம் கல் நெஞ்சம், கொடூரத்தனம் ஆகியவற்றுக்கு உதாரணம் காட்டப்படும் ஒருவராக அதே செர்பியாவைச் சேர்ந்த ஒருவரைப் பற்றிய தகவல்கள் உலகம் முழுவதையுமே பல ஆண்டுகளாகப் பதற வைத்துக் கொண்டிருக்கிறது.

அவர் செர்பியாவின் முன்னாள் ராணுவத் தளபதி. இருபதாம் நூற்றாண்டின் மிக மோசமான இனப்படுகொலைகளின் முக்கிய சூத்திரதாரி என்று சர்வதேச அரசியல் விமர்சகர்களால் கணிக்கப்பட்டவர்.

சமீப காலமாக செர்பிய ராணுவத்திலுள்ள ஆயிரக்கணக் கான ராணுவ வீரர்களுக்கு பைபிள்கள் வழங்கப்படுகின்றன. ‘சக மனிதர்களை நேசிக்க வேண்டும்’ என்பதை அவர்களுக்கு வலியுறுத்துவதுதான் நோக்கம்.

“கிறிஸ்தவ போதனைகளை மறந்ததன் காரணமாகத்தான் கடந்த காலத்தில் கடுமையான போர்க் குற்றங்களை செர்பிய ராணுவத்தினர் செய்தனர்” என்கிறார் தற்போதைய ராணுவத் தளபதிகளில் ஒருவர்.

1990-களில் நடைபெற்ற போஸ்னிய யுத்தத்தில் புரிந்த போர்க் குற்றங்களுக்காக செர்பியா வின் முன்னாள் ராணுவத் தளபதி ரட்கோ மிலாடிக் என்பவர்மீது வழக்கு நடந்து வருகிறது. அதன் கடைசி கட்டம் இப்போது. எனவே விரைவில் இது குறித்த செய்திகள் நாளிதழ்களில் முக்கிய இடம் வகிக்கத் தொடங்கும்.

முதலாம் உலகப்போருக்கு அடித்தளம் அமைத்த நாடு எது? அதாவது எந்த நாட்டைச் சேர்ந்த ஒருவனின் செயல்பாடு பல தொடர்நிகழ்ச்சிகளுக்குக் காரண மாகி முதலாம் உலகப்போருக்கு வழிவகுத்தது?

இதற்கான சரியான விடையை நீங்கள் கூறினால் ஒன்று உங்க ளுக்கு உலக வரலாறு நன்றாகத் தெரிந்திருக்கிறது என்று அர்த்தம். (அல்லது இந்தத் தொடரின் தலைப் பைக் கொண்டு ‘‘செர்பியா’’ என்று பதிலளிக்கும் மதியூகம் உங்களுக்கு இருக்கிறது!)

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-1/article8174802.ece

Link to comment
Share on other sites

செம்மை காணுமா செர்பியா? - 2

 

கடந்த 1430-ம் ஆண்டில் செர்பியாவின் ஸ்மெடிரெவோ நகரில் அன்றைய மன்னர் துராத் பிரான்கோவிக் பிரமாண்ட கோட்டையை எழுப்பினார். அந்த கோட்டையை ஒட்டோமான் பேரரசு கைப்பற்றியது. பின்னர் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு ஸ்மெடிரெவா கோட்டை மீண்டும் செர்பியா வசமானது. பல போர்களைக் கண்ட அந்த கோட்டை தற்போது யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்குகிறது. (கோப்புப் படம்)
கடந்த 1430-ம் ஆண்டில் செர்பியாவின் ஸ்மெடிரெவோ நகரில் அன்றைய மன்னர் துராத் பிரான்கோவிக் பிரமாண்ட கோட்டையை எழுப்பினார். அந்த கோட்டையை ஒட்டோமான் பேரரசு கைப்பற்றியது. பின்னர் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு ஸ்மெடிரெவா கோட்டை மீண்டும் செர்பியா வசமானது. பல போர்களைக் கண்ட அந்த கோட்டை தற்போது யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்குகிறது. (கோப்புப் படம்)

செர்பியா குறித்த இந்தத் தொடரில் ஸ்லாவ் என்ற இனத்தைப் பற்றியும் அவ்வப்போது குறிப்பிட நேரலாம். யுகோஸ்லாவியாவிலிருந்து பிரிந்த நாடு செர்பியா. யுகோஸ்லாவியா என்பதே ‘ஸ்லாவ்’ என்ற இனப் பெயரை அடிப்படையாகக் கொண்டதுதான்.

இஸ்லாமியர்கள் பல நாடுகளில் வசிக்கிறார்கள் அல்லவா? அதுபோலவே ஸ்லாவ் இனத்தவரும் கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பா, பால்கன் பகுதி, மத்திய மற்றும் வடக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் படர்ந்து இருக்கிறார்கள்.

இப்போது ஐரோப்பாவில் வாழும் இந்தோ-ஐரோப்பிய இனத்தவர்களில் மிக அதிகமான எண்ணிக்கையில் இருப்பவர்கள் இவர்கள்தான். பத்தாம் நூற்றாண்டுவரை எதையும் எழுதி வைப்பது என்ற பழக்கமே ஸ்லாவ் இனத்தவரிடம் இருந்ததில்லை. எனவே இவர்கள் குறித்த சரித்திரம் முரண்பட்டிருக்கிறது. ரோமானியர்கள் இவர்களை காட்டு மிராண்டித்தனமான நாடோடிகள் என்று குறிப்பிட்டாலும் அப்படியெல்லாம் இல்லை என்று வரிந்து கட்டிக் கொண்டு கூறும் வரலாற்று ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

ஏழாம் நூற்றாண்டில் ஸ்லாவ் இனத்தவர் பெருமளவில் பால்கன் பகுதியில் குடியேறி இருந்தார்கள். ( பால்கன் என்பது ஒரு தீபகற்பம். தென்கிழக்கு ஐரோப்பாவில் இருக்கிறது. அங்கு பால்கன் மலை படர்ந்திருப்பதால் அந்த தீபகற்பத்துக்கே இந்தப் பெயர் வந்து விட்டது).

1945-ல் உருவானது யுகோஸ்லாவியா. முழுமையான பெயர் யுகோஸ்லாவிய சோஷலிசக் குடியரசு. இதில் மொத்தம் 6 குடியரசுகள். அவை செர்பியா, மான்டே னேக்ரோ, ஸ்லோவேனியா, க்ரோவேஷியா, போஸ்னியா மற்றும் மாசிடோனியா (போஸ்னியாவின் முழுப்பெயர் போஸ்னிய - ஹெர்ஜகோவினா. ஒரு வசதிக்காக இதை போஸ்னியா என்றே குறிப்பிடுவோம்).

அதற்கு முன் இவை தனித்தனி நாடு களாக இருந்தன. ஸ்லோவேனியா நெடுங் காலத்துக்கு ஆஸ்திரியாவின் பிடியில் இருந்தது.

குரோவேஷியா பதினோராம் நூற்றாண் டில் ஹங்கேரியின் பிடிக்குச் சென்றது. முதலாம் உலகப்போர் முடியும் வரை ஹங்கேரியின் வசம்தான் இருந்தது.

தனி நாடாகவே இருந்த போஸ்னியா பதினைந்தாம் நூற்றாண்டில் துருக்கியரின் ஆட்சிக்கு உள்ளானது. பின்னர் ஆஸ்திரியா-ஹங்கேரி நாடுகளின் வசம் சென்றது.

பதினான்காம் நூற்றாண்டில் மாசிடோனி யாவை செர்பியா வென்று தன் வசம் சுவீகரித்தது. பின்னர் செர்பியாவோடு சேர்ந்து அதுவும் துருக்கியர் ஆளுகைக்குச் சென்றது.

பின்னர் பால்கன் யுத்தம் என்று அழைக் கப்பட்ட போரில் செர்பியா வென்றது. அங்கு ஒரு தனி ஆட்சி பதிமூன்றாம் நூற்றாண்டிலி ருந்து நடக்கத் தொடங்கியது. அது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது. என்றாலும் 1389-ல் துருக்கியரிடம் செர்பியா தோற்றது. 1459 வரை துருக்கியர்கள் வசம்தான் செர்பியா இருந்தது.

ஒட்டாமன் (துருக்கியர்) சாம்ராஜ்யம் பின்பு வலுவிழக்க, செர்பியாவுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கினார்கள் துருக்கியர்கள். ஐரோப்பிய நாடுகள் செர்பியாவை தனி நாடாக ஏற்றுக் கொண்டன.

இந்த நிலையில்தான் தன் காதல் மனைவியுடன் ஒரு டூர் சென்று வரலாம் என்று தீர்மானித்தார் ஆஸ்திரிய நாட்டு இளவரசர் பிரான்ஸிஸ் பெர்டினாயிட்.

முதலாம் உலகப் போருக்கு வித்திட்டது அந்தப் பயணம்.

மனைவியுடன் டூர் செல்வது தப்பே இல்லை. ஆனால் அவர் தன் உலாவுக்குத் தேர்ந்தெடுத்த இடம்தான் சரியில்லை. அது போஸ்னியா. போஸ்னியாவை 1908-ல் ஆஸ்திரியா-ஹங்கேரி தங்கள் கட்டுப்பாட்டுக் குள் கொண்டுவந்திருந்தன.

''வேண்டாம். போஸ்னியாவுக்குப் போகாதீர்கள். ரொம்ப அபாயம்'' என்று இளவரசரை எச்சரித்தார்கள் சிலர். ரிஸ்க் எடுக்கிறோம் என்பது இளவரசருக்கும் நன்றாகத் தெரியும். என்றாலும் தன் முடிவை அவர் மாற்றிக் கொள்ளவில்லை.

என்ன ரிஸ்க் என்கிறீர்களா? போஸ்னி யாவில் உள்ள மக்களில் நிறைய பேருக்கு - முக்கியமாக செர்ப் பிரிவினருக்கு - ஆஸ்திரியாவின் அதிகாரத்தில் தங்கள் நாடு இருப்பது பிடிக்கவில்லை. அவர்களிடமி ருந்து விடுதலை பெற வேண்டும். பக்கத்தி லுள்ள செர்பியாவோடு சேர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு ஆசை.

செர்பியாவில் அப்போது 'கருப்புக்கை' என்ற ஓர் இயக்கம் இருந்தது. செர்பியாவை மேலும் மேலும் விரிவாக்க வேண்டும். அதில் போஸ்னியாவையும் சேர்க்க வேண்டும் என்பது அந்த இயக்கத்தின் ஆசை. ஆகவே ஆஸ்திரியாவைத் தங்கள் எதிரியாக நினைத்தார்கள்.

கருப்புக்கை இயக்கத்தில் அப்போது 2,500 உறுப்பினர்கள் இருந்தார்கள். ராணுவ அதிகாரிகள் மட்டுமல்ல, வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோரும் இதில் உண்டு. இவர்களில் முப்பது பேர் போஸ்னியாவில் வசித்தவர்கள்.

1911-ல் பிரான்ஸ் ஜோசப் எனும் ஆஸ்திரிய சக்ரவர்த்தியைக் கொலை செய்ய ஒருவரை அனுப்பினார் கருப்புக்கை இயக்கத்தின் தலைவர். சில வருடங்களுக்குப் பிறகு போஸ்னியா - ஹெர்செகோவ் மாகாணங்களின் (ஆஸ்திரிய) கவர்னரை கொலை செய்யவும் ஒரு சதி செய்தார்கள். இரண்டிலும் தோல்வி.

இப்போது ஆஸ்திரிய இளவரசர் போஸ்னி யாவுக்கு வரப்போகிறார் என்றதும் “கருப்புக்கை”யின் தளபதிகள் ஆலோசனை நடத்தினார்கள். போஸ்னியாவுக்குள் அடியெ டுத்து வைக்கும் இளவரசரைத் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். இதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. போஸ்னி யாவும் செர்பியாவும் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தார் இளவரசர். அடுத்ததாக இவரே அரசர் பதவிக்கும் வந்துவிட்டால் என்னாவது? ஆரம்பத்திலேயே இந்த சிக்கலை கிள்ளி எறிவது நல்லதுதானே.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-2/article8187624.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

செம்மை காணுமா செர்பியா? - 3

 

கடந்த 1914 ஜூன் 28-ம் தேதி போஸ்னியாவின் சரயேவு நகருக்கு வந்த ஆஸ்திரிய இளவரசர் பிரான்ஸிஸ் பெர்டினாயிட், அவரது மனைவி சோபி.
கடந்த 1914 ஜூன் 28-ம் தேதி போஸ்னியாவின் சரயேவு நகருக்கு வந்த ஆஸ்திரிய இளவரசர் பிரான்ஸிஸ் பெர்டினாயிட், அவரது மனைவி சோபி.

செர்பியாவில் தொடங்கப் பட்டது கருப்புக்கை இயக்கம். போஸ்னி யாவுக்கு வரவிருக்கும் ஆஸ்திரிய இளவரசரை தீர்த்துக் கட்டத் தீர்மானித்தது அந்த இயக்கம்.

கருப்புக்கையின் இயக்கத் தின் தலைவராக அப்போது விளங்கியவர் ட்ரகுடின் டிமிட்ரே ஜேமிக். பெயர் மட்டுமல்ல, ஆளும் கரடுமுரடானவர்தான். இவர் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்தார். ஒவ்வொருவருக்கும் ஒரு துப்பாக்கி, இரண்டு வெடி குண்டுகள் மற்றும் ஒரு சிறு சயனைடு குப்பி ஆகியவை வழங் கப்பட்டன. சயனைடு குப்பி எதற்காக? இளவரசரைத் தீர்த்துக் கட்டியவுடன் குப்பியில் உள்ள சயனைடைக் குடித்து தற்கொலை செய்து கொள்வதற்காக! அப்போதுதானே கருப்புக்கை இதில் சம்பந்தப்பட்டிருப்பது யாருக்கும் தெரியாமல் போகும்.

தன்னுடைய உயிரை இழப் பதற்கு யாராவது சம்மதிப்பார்களா? மாட்டார்கள்தான். ஆனால் வெளி நாட்டு சக்தியான ஆஸ்திரியாவை எப்படியாவது துரத்த வேண்டும் என்ற வெறி அவர்களுக்கு. அது மட்டுமல்ல. அவர்கள் மூவருக்கும் தீவிரமான காசநோய். எப்படியும் அதிக நாள் வாழமுடியாது. அதற்குள் நாட்டுக்கு ஒரு 'நல்லது' செய்துவிட்டுப்போவோமே என்று நினைத்தார்கள் அவர்கள்.

இந்த மூன்றுபேரும் போஸ்னி யாவின் தலைநகரான சரயேவுவில் வசித்த வேறு ஐந்து பேரையும் தங்கள் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்கள்.

ஜூன் 28, 1914 அன்று காலை பத்து மணியாவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. அப்போது சரயேவு நகருக்கு ரயிலில் வந்து சேர்ந்தார்கள் இளவரசரும் அவரது மனைவியும். அவர்களை வரவேற்கச் சென்றிருந்தார் போஸ் னியாவுக்கான ஆஸ்திரிய கவர்னர். நகரின் முக்கிய அரங்கிற்கு அவர்களை அழைத்துக்கொண்டு போய் பிரமாண்டமான ஒரு வர வேற்பை அளிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தார் அவர். மூன்று கார்கள் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பின. முதல் காரில் நகர மேயரும் போலீஸ் கமிஷ்னரும் இருந்தனர்.

இரண்டாவது காரில் இளவர சரும் அவரது மனைவியும். கூடவே கவர்னரும். இரண்டாவது காரின் மேற்புறம் திறந்துவிடப் பட்டிருந்தது. அப்போதுதானே தெருவின் இரண்டு பக்கங்களிலும் நிற்கும் மக்களால் இளவரசரையும் அவர் மனைவியையும் நன்றாகப் பார்க்க முடியும்?

சற்றுத் தள்ளி இன்னொரு காரும் வந்துகொண்டிருந்தது. அதில் இளவரசரின் கட்சியைச் சேர்ந்த இரண்டுபேர் வந்து கொண்டிருந்தனர். காவல்துறை எச்சரிக்கையாகத்தான் இருந்தது. கலவரம் செய்யக்கூடும் என நினைத்த 35 பேரை முன்னெச்சரிக் கையாக கைது செய்திருந் தார்கள். வழியெங்கும் காவல் காரர்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். இந்த வரிசையில் கொலை செய்யக் காத்திருந்தவர்களும் எப்படியோ இடம் பிடித்து விட்டார்கள்.

முதல் ஆளைக் கடந்து கார் செல்லும்போது துப்பாக்கியை எடுக்க முயற்சித்தான் அவர்களில் ஒருவன். ஆனால் அப்போதுதான் தனக்குப் பின்னால் ஒரு போலீஸ் காரர் இருப்பதை கவனித்தான். “அடடா, நான் வெடிகுண்டைத் தூக்கி எறிந்தபிறகு, சயனைடு குப்பியை எடுப்பதற்குள் இந்த போலீஸ்காரர் என்னைப் பிடித்து விட்டால் என்ன செய்வது? ரிஸ்க் வேண்டாம். அடுத்த கூட்டாளி பார்த்துக்கொள்வான்” என்று சும்மா இருந்துவிட்டான். கார் மேலும் நகர்ந்தது.

பத்தேகால் மணி இருக்கும். இரண்டாவது கூட்டாளி தன் கையிலி ருந்த வெடிகுண்டை இளவரசர் இருந்த காரை நோக்கி வீசினான்.

கார் டிரைவர் திறமைசாலி. தவிர எந்த நேரமும் அந்த இடத்தில் இளவரசர் உயிருக்கு அபாயம் நேரலாம் என்பதும் அவருக்குத் தெரியும். எனவே ஏதோ ஒரு பொருள் தங்கள் காரை நோக்கி வருகிறது என்பதை உணர்ந்தவுடனேயே காரை மிக வேகமாகச் செலுத்தினார். அவர்களுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த இன்னொரு காரின் மீது வெடிகுண்டு விழுந்தது. அதில் இருந்த இருவருக்கு பலத்த காயம். அதுமட்டுமா? வேடிக்கை பார்க்க வந்திருந்த பனிரெண்டு பேர் மீதும் வெடிகுண்டின் பாகங்கள் விசையுடன் விழுந்தன.

வெடிகுண்டை வீசியவன் தன்னிடமிருந்த சயனைடைக் குடித்துவிட்டு பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த மில்ஜக்கா நதியில் குதித்துவிட்டான். ஆனால் பாய்ந்து சென்ற சிலர் அவனைப் பிடித்து விட்டார்கள். அவன் குடித்த விஷம் வேலை செய்வதற்குள் அதில் ஒரு பகுதியை வெளியே எடுத்துவிட்டார்கள். பக்கத்தில் இருந்த காவல் நிலையத்தில் அவன் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டான்.

இளவரசரின் காரை ஓட்டிய டிரைவர் கண்மண் தெரியாத வேகத்தில் காரில் பறந்தார். போகும் பாதை முழுவதும் இளவரசர் வருகைக்காக காலி யாக இருந்ததால் இந்த வேகம் சாத்தியமானது. இவ்வளவு வேக மாக கார் செல்லும் போது வெடி குண்டை வீசுவதோ, துப்பாக்கியால் சுடுவதோ பலனைத் தராது என்று முடிவெடுத்த மூன்றாமவன் சும்மா இருந்து விட்டான்.

நகர அரங்கில் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தபடி இளவரச ருக்கும் அவரது மனைவிக்கும் மிகப் பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்து முடிந்தது. “எனக்குப் பின்னால் வந்த காரில் என் கட்சிக்காரர் இரண்டு பேர் வந்து கொண்டிருந்தார்களே. அவர்கள் இப்போது எங்கே?” என்று கேட்டார் இளவரசர். வெடிகுண்டினால் அவர் களுக்கு பெரிய பாதிப்பு இல்லை யென்றும் அதிர்ச்சி நீங்கியவுடன் அவர்களும் வரவேற்பில் கலந்து கொள்வார்கள் என்றும் இளவரச ருக்கு கூறப்பட்டிருந்தது.

இப்போது தயக்கத்துடன் 'அந்த இருவரும் பெரும் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருக்கிறார்கள்' என்று உண்மை யைச் சொன்னார்கள். “அப்படியா? நான் உடனே மருத்துவமனைக்குப் போக வேண்டும். அவர்களை நேரில் பார்த்து ஆறுதல் சொல்ல வேண்டும்” என்றார் இளவரசர். விதி!

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-3/article8197146.ece

 

Link to comment
Share on other sites

செம்மை காணுமா செர்பியா? - 4

 

 
ஆஸ்திரிய இளவரசர் பிரான்ஸிஸ் பெர்டினாயிட், அவரது மனைவி சோபி கடைசியாக பயணம் செய்த கார் வியன்னா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரிய இளவரசர் பிரான்ஸிஸ் பெர்டினாயிட், அவரது மனைவி சோபி கடைசியாக பயணம் செய்த கார் வியன்னா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தன்னுடன் வந்த இருவரும் பெரும் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்ததும் நேரில் பார்த்து ஆறுதல் சொல்ல முடிவெடுத்தார் இளவரசர் பிரான்ஸிஸ் பெர்டினாயிட்.

நிறைய பேருக்கு இதில் அதிர்ச்சி. வேண்டாமே என்று தடுத்துப் பார்த்தார்கள். ஆனால் நகர கவர்னருக்கு இது கவுரவப் பிரச்னையாகிவிட்டது. “சரயேவு நகரம் முழுவதும் கொலைகாரர்கள் இருப்பதாக நீங்களாக ஏன் கற்பனை செய்துகொள்கிறீர்கள்?” என்று கேட்டார்.

முதலில் இளவரசரின் மனைவி சோபி மருத்துவமனைக்கு அழைத் துச் செல்லப்படுவதாக இல்லை. ஆனால் தானும் வருவேன் என்று அவள் அடம் பிடிக்க, இருவருமே கிளம்பினார்கள்.

கவர்னர் நன்றாகத்தான் திட்ட மிட்டார். “நகரத்தின் நெரிசல் மிக்க சாலைகளையே தொடாமல், கொஞ்சம் சுற்றுவழியாக இருந் தாலும் வேறொரு வழியின் மூல மாகத்தான் கார் மருத்துவ மனைக்குப் போகவேண்டும்”. ஆனால் ஏதோ குழப்பத்தில் தன்னுடைய இந்த திட்டத்தை கார் ஓட்டுனரிடம் கூறுவதற்கு மறந்து தொலைத்துவிட்டார்.

அரங்கிலிருந்து கிளம்பிய கார் நகரத்தின் மையப்பகுதிக்குச் செல்லும் சாலையில் திரும்பியது. அப்போதுதான் இதை கவனித்த கவர்னர் “என்ன இது? இப்படிப் போகக்கூடாது. அப்பெல் குவே என்ற சாலையின் வழியாகத்தான் போக வேண்டும்” என்று கத்தினார்.

கார் ஓட்டுனர் பிரேக்கை அழுத்தினார். பிறகு மெல்ல மெல்ல காரை ரிவர்ஸில் எடுக்கத் தொடங்கினார். அங்கே அருகில் காத்துக்கொண்டிருந்தான் கவ்ரிலோ பிரின்ஸிப் - கூட்டுச்சதியில் ஈடுபட் டவன். 19 வயது இளைஞன். முன்பக்கமாக நகர்ந்து துப்பாக் கியை எடுத்தான். காரிலிருந்து சுமார் ஐந்தடி தூரத்தில் நின்று கொண்டு பலமுறை சுட்டுத்தள்ளினான்.

இளவரசரின் கழுத்துப் பகுதியில் குண்டு பாய்ந்தது. அவர் மனைவியின் வயிற்றுப்பகுதியில் குண்டுகள் பாய்ந்தன. இளவரசர் நினைவிழந்தார். ஆனால் அதற்கு முன் மனைவியைப் பார்த்து “சோஃபி இறந்துவிடாதே” என்றார்.

கவர்னரின் வீட்டை நோக்கி கார் பறந்தது. அங்கு போய்ச் சேர்ந்தபோது இருவருமே உயிரோடு இருந்தார்கள். என்றா லும் கடும் காயங்களினால் அவர்கள் பிறகு இறந்துவிட்டார்கள்.

இளவரசரை சுட்டவுடன் துப்பாக் கியை தன் நெற்றிப்பொட்டில் வைத்துக்கொண்டான் சதிகாரன். ஆனால் அருகிலிருந்த இருவர் சட்டென அவனை வளைத்துப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். மேலும் ஒருவனும் பிடிபட்டான். இரண்டு பேரையும் போலீஸ் விதவிதமாக விசாரித்தது. ஒரு கட்டத்தில் அவர்கள் உண்மையைக் கூறிவிட்டார்கள்.

இளவரசர் இறந்ததினால் கலவரங்கள் வெடிக்கும் என்று எல்லாரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் முதலாம் உலகப்போர் உருவாகும் அளவுக்கு இந்தக் கொலை பிள்ளையார் சுழி போடும் என்று அப்போது யாருமே எதிர்பார்க்கவில்லை

விஷயத்தைக் கேள்விப் பட்டதும் ஆஸ்திரியா கொதித்துப் போனது. செர்பியாவைச் சேர்ந்த மூவர்தான் இதற்கு காரணம் என்பதை அறிந்து கொண்டது. “செர்பியா அரசு இந்த மூன்று பேரையும் வியன்னாவுக்கு (ஆஸ்திரியாவின் தலைநகர்) உடனடியாக அனுப்ப வேண்டும்'' என்று ஆணையிட்டது. (அம்புகள் தான் போஸ்னியாவில் கைது செய்யப்பட்டிருந்தனர். எய்த வர்கள் செர்பியாவுக்குச் சென்று விட்டிருந்தார்கள்).

செர்பியாவின் அப்போதைய பிரதமர் நிகோலா பாசிக் இதற்கு மறுத்தார். “எங்கள் நாட்டில் கைது செய்தவர்களை வேறொரு நாட்டுக்கு அனுப்ப முடியாது. ஏனென்றால் எங்கள் சட்டம் இதற்கு இடம் கொடுக்கவில்லை” என்று பதில் அனுப்பினார்.

இளவரசர் கொலை செய்யப் பட்டு சுமார் மூன்று வாரங்களுக்கு அப்புறம்தான் செர்பியாவுக்கு ஆணையிட்டது ஆஸ்திரியா. ஆனால் செர்பியப் பிரதமரின் பதில் கிடைத்த மூன்றே நாட் களில் செர்பியாவின் மீது போர் தொடுக்கப்போவதாக அறிவித்தது. ஆக முன்பே தீர்மானித்துவிட்ட முடிவு இது.

இதைத் தொடர்ந்து நடை பெற்ற நிகழ்ச்சிகள் மிகவும் வேடிக் கையானவை, மேலும் விபரீத மானவை. சரவெடியின் ஒரு நுனியில் பற்றிக்கொண்ட நெருப்பு எல்லா பட்டாசுகளையும் வெடிக்க வைத்தபடி கடைசி வெடிவரை செல்வதுபோல இந்த யுத்தத்தில் ஒவ்வொரு நாடாக கலந்து கொள்ளத் தொடங்கின.

“கவலையே படவேண்டாம். உங்களுக்கும் செர்பியாவுக்கும் இடையே போர் நடந்து அப்போது ரஷ்யாவும் உங்களுக்கு எதிராக போரில் கலந்து கொண்டால் எங்கள் நாடு நிச்சயம் உங்களுக்குத் துணைவரும்” என்று உறுதி அளித்தார் ஜெர்மனியின் தலைவர் கைசர் இரண்டாம் வில்ஹெம்.

ஆஸ்திரியாவுக்கு நிம்மதி ஏற்பட்டது. ‘நம்மால் செர்பியாவை எளிதில் ஜெயிக்க முடியும். ரஷ்யாவை எதிர்ப்பதுதான் கஷ்டம். ஆனால் இப்போது ஜெர்மனியின் துணை கிடைத்துவிட்டதே’

ஆனால் ஜெர்மனி வேறு விதமாக நினைத்திருந்தது. “அடுத்த மூன்று வருடங்களுக்கு ரஷ்யா இந்த போரில் ஈடுபடாது. ஏனென்றால் அதன் ரயில் பாதைகள் சிறந்தவையாக மாறு வதற்கு மூன்றுவருடங்கள் பிடிக்கும். அதுவரை ரஷ்யாவின் கவனம் தன் ரயில்பாதையை சிறப்பாக்குவதில்தான் இருக்கும்”.

அதாவது ஜெர்மனி தான் இந்தப்போரில் நேரடியாகக் கலந் துக்கொள்ள வேண்டியிருக்கும் என்று அப்போது கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

ஜூலை 23 அன்று ஆஸ்திரிய அரசு செர்பியாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியது. நீங்கள் இந்த நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொள்ள வில்லை என்றால் உங்கள் மீது போர் தொடுப்போம் என்றது. இரண்டே நாட்களுக்குள் பதிலை அளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. இந்தக்கடிதம் செர்பியா ஆட்சியாளர்களுக்குத் தரப்பட்டதே மாலை 6 மணிக்குத் தான்!.

எதற்காக இவ்வளவு அவசரம்? சட்டுப்புட்டென்று போரை நடத்தினால், இதற்கு இதுவரை தயாராக இல்லாத ரஷ்யா போரில் கலந்து கொள்ளாது. சீக்கிரமே செர்பியாவை ஜெயித்துவிடலாம் என்று கணக்குப்போட்டது ஆஸ்திரியா.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-4/article8201806.ece

Link to comment
Share on other sites

செம்மை காணுமா செர்பியா? - 5

 

 
முதலாம் உலகப் போரை நினைவுகூரும் வகையில் செர்பியாவின் ஆவாலா மலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம்.
முதலாம் உலகப் போரை நினைவுகூரும் வகையில் செர்பியாவின் ஆவாலா மலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம்.

போர் வேண்டாம் என்று நினைத்தது செர்பியா. ஆஸ்திரியாவின் பல நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டது. மீதி நிபந்தனைகளுக்கு சுற்றி வளைத்து மழுப்பலான பதிலைத் தந்தது. 'எல்லா நிபந்தனைகளையும் ஏற்கவில்லை, இரண்டு நாட்களுக்குள் பதில் வரவில்லை' என்று காரணம் காட்டி செர்பியா மீது போர் தொடுப்பதாக அறிவித்தது ஆஸ்திரியா.

“உங்கள் நிபந்தனைகள் எதையும் செர்பியா எதிர்க்க வில்லை. தவிர, போர் வேண்டாம் என்று அவர்கள் நினைப்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆக இதுவே உங்களுக்கு வெற்றிதான். எனவே போருக்கான காரணம் இப்போது இல்லை” என்றது ரஷ்யா. பிரிட்டனும் இந்த விவகாரத்தை ஒரு மாநாடு மூலம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று கருதியது.

செர்பியா மீது போர் தொடுப்ப தாக அறிவித்துவிட்டது. என்றாலும் அந்த போர் தொடங்கிய பிறகும் கூட ரஷ்யாவும் ஆஸ்திரியாவும் பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டு இருந்தன.

ரஷ்யாவுக்கு வேறு ஒரு கவலை. “இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால்? அப்போது செர்பியாவுக்கு நமது ராணுவம் உதவியாக வேண்டுமே. திடீரென்று ஒரே நாளில் ராணுவத்தை அனுப்ப முடியாதே. ஆகவே நம் ராணுவத் தின் ஒரு பகுதியை இப்போதே செர்பியாவுக்கு அனுப்பிவைப் போம். பேச்சு வார்த்தை வெற்றி அடைந்தால் ராணுவத்தை திருப்பி அழைத்துக் கொள்ளலாம். பேச்சு வார்த்தை தோல்வி என்றால் நம் ராணுவம் போரில் பங்கெடுத்துக் கொள்ளட்டும்” இப்படி நினைத்தது.

ஜெர்மனிக்கு சந்தேகம் வந்தது. பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே எதற்காக ரஷ்யா தன் ராணுவத்தை செர்பியாவில் குவிக்கவேண்டும்? நிச்சயமாக அது போரில் கலந்துகொள்ளத்தான் போகிறது.

ஜெர்மனி அவசரமாக ரஷ்யா வுக்கு ஓர் அறிக்கையை அனுப் பியது. “உடனடியாக உங்கள் ராணுவத்தை வாபஸ் பெறுங்கள்”.

அடுத்தது பிரான்ஸுக்கு ஓர் அறிக்கை அனுப்பியது. “இந்தப் போரில் நடுநிலை வகிப்பேன் என்று நீங்கள் அறிவிக்க வேண்டும்”.

பிரான்ஸிடமிருந்து எந்தவித மான பதிலும் இல்லை. இதற்காக பிரான்ஸ் போரில் ஈடுபட விரும் பியது என்று அர்த்தம் இல்லை. தான் இதுவரை சம்பந்தப்படாதபோது எதற்காக அறிக்கை விடவேண்டும் என்று பிரான்ஸ் நினைத்தது.

ஆகஸ்ட் 1 அன்று ஜெர்மனி “ரஷ்யாவுடன் போர்” என்று அறிவித்தது. அதற்கு இரண்டு நாள் கழித்து “பிரான்ஸுடனும் போர்” என்றது.

ஆக ஒரு பெரிய ஐரோப்பிய போர் நடந்தே தீரும் என்கிற நிலை உருவானது. அது முதலாம் உலகப்போராக வடிவெடுத்தது. அதற்கான பிள்ளையார் சுழி போஸ்னியாவில், செர்பிய இயக்கத்தினரால் போடப்பட்டது.

முதலாம் உலகப்போரின் முடிவில் கூட்டு நாடுகள் வென்றன. பல சாம்ராஜ்யங்கள் சரிந்தன. ஜெர்மனி வீழ்ந்தது. ரஷ்யாவுக்குத் தோல்வி முகம். ஒட்டாமன் சாம் ராஜ்யம் பெரும் சரிவைச் சந்தித்தது. பல ஜெர்மானிய காலனிகளும் ஒட்டாமன் சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த பகுதிகளும் பிற ஐரோப் பிய சக்திகளின் வசம் சென்றன. இன்றைய ஐ.நா.சபைக்கு முன்னோடியான லீக் ஆஃப் நேஷன்ஸ் உருவானது. ரஷ்யா விலிருந்து பின்லாந்து, எஸ்டோ னியா, லாட்வியா, லித்துவேனியா ஆகியவை தனி நாடுகள் ஆயின. (ஆஸ்திரிய ஹங்கேரிய, செக்கோஸ்லாவியக் குடியரசுகள் உருவாகவும் வழிவகை செய்யப்பட்டது).

செர்பிய மன்னர் முதலாம் பீட்டரின் கீழ் ஸ்லாவின மக்களுக் கான இணைப்பு முயற்சி தொடங்கப் பட்டது. 1918-ல் மோன்டேனெக் ரோவின் மன்னர் முதலாம் நிக்கோலஸ் உடல் நலம் இழந்து விட, அந்த நாடு செர்பியாவுடன் இணைக்கப்பட்டது. டிசம்பர் 1918-ல் ‘செர்புகள், க்ரோட்டுகள் மற்றும் ஸ்லோவேன்களின் அரசாங்கம்’ (Kingdom of the Serbs, Croates and Slovenes) உருவானது.

யுகோஸ்லாவியாவின் சரித்திரத் தின் அடுத்த கட்டத்தில் குறிப்பிடத் தக்கவர் மன்னர் முதலாம் அலெக்ஸாண்டர். (கிரேக்கத் தைச் சேர்ந்த மாவீரர் என்று அழைக்கப்படும் அலெக்ஸாண்ட ரோடு இவரைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்). செர்பியாவின் இளவரசர் என்பதிலிருந்து யுகோஸ் லாவியாவின் மன்னர் என்பதுவரை பதவி உயர்வு பெற்றவர் இவர்.

அலெக்ஸாண்டரின் தாய் இளம் வயதிலேயே இறந்து விட்டாள். அலெக்ஸாண்டரும், அவரது அண்ணனும் ரஷ்யாவில் பள்ளிப் படிப்பைப் பயின்றவர்கள் (அப்போது செர்பியாவில் ஆஸ்திரியா-ஹங்கேரியின் ஆதிக்கம் அதிகமாக இருந்த தால், ராஜகுடும்பத்துக்கு அச்சுறுத் தல்கள் இருந்தன).

அலெக்ஸாண்டரின் தந்தை பெடார் வன்முறை மூலம் செர்பியா வின் ஆட்சியைப் பிடித்தார். இதில் அப்போதைய மன்னரும் (அவர் பெயரும் முதலாம் அலெக் ஸாண்டர் என்பதால், அதைக் குறிப்பிட்டு குழப்பப் போவ தில்லை!) அரசியும் படுகொலை செய்யப்பட்டனர். தனது 58-வது வயதில் அலெக்ஸாண்டரின் தந்தை செர்பியாவின் மன்னர் ஆனார். இதற்குப் பின் அலெக்ஸாண்டரும் அவரது அண்ணனும் செர்பியா வந்து தங்கள் படிப்பைத் தொடர்ந்தனர்.

மார்ச் 1909-ல் ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற்றது. அலெக்ஸாண்டரின் அண்ணன் ஜார்ஜ் தனக்கு அரியணை ஏற இஷ்டமில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார். செர்பியாவில் உள்ள அதிகாரிகள் பலரும் ஜார்ஜுக்கு ஆட்சி செய்யும் தன்மைகள் இல்லை என்றே நினைத்தனர். அவர் களின் வற்புறுத்தலின் பேரில்தான் ஜார்ஜ் இப்படி அறிவித்தார் என்பவர் களும் உண்டு. அதுமட்டுமல்ல அரண்மனை சேவகர் ஒருவரை இளவரசர் ஜார்ஜ் காலினால் எட்டி உதைக்க, இதனால் வயிற்றில் கடும் பாதிப்பு ஏற்பட்டு அவன் சில நாட்களில் இறந்தான். இதுவும் பொதுமக்களை கொந்தளிக்க வைத்தது. இந்த நிலையில் இளவரசரின் அறிவிப்பு எல்லோராலுமே மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-5/article8211604.ece

Link to comment
Share on other sites

செம்மை காணுமா செர்பியா? - 6

 

 
முதலாம் உலகப்போரின்போது பிரிட்டிஷ் தலைநகர் லண்டனுக்கு வந்த செர்பிய இளவரசர் அலெக்ஸாண்டர்
முதலாம் உலகப்போரின்போது பிரிட்டிஷ் தலைநகர் லண்டனுக்கு வந்த செர்பிய இளவரசர் அலெக்ஸாண்டர்

இளவரசர் ஜார்ஜ் தனக்கு அரியணையில் நாட்ட மில்லை என்று ஒதுங்க, அவர் தம்பி அலெக்ஸாண்டர் ‘செர்புகள், க்ரோட்டுகள் மற்றும் ஸ்லோவேன்களின் அரசாங்கத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

பால்கன் போர்களில் இளவரசர் அலெக்ஸாண்டர் மிகச் சிறப்பாக வியூகம் அமைத்துப் போரிட்டு செர்பியாவை வெற்றி பெறச் செய்தார். செர்பிய சாம்ராஜ்யத் திலிருந்து துருக்கியர்கள் தங்கள் படைகளை பின்வாங்கிக் கொண்டனர். அலெக்ஸாண்ட ருக்கு பூ மழை பொழிந்து வாழ்த்து தெரிவித்தார்கள் மக்கள்.

முதலாம் உலகப்போர் வெடித்த காலத்தில் செர்பிய ராணுவத்தின் தலைவராக கருதப்பட்டார் அலெக் ஸாண்டர். செர்பிய ராணுவம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டது. ஆக்கிரமிக்க வந்த ஆஸ்திரியா-ஹங்கேரி ராணுவத்தினரை ஓடஓடவிரட்டியது.

எனினும் 1915-ல் பல திசைகளிலி ருந்தும் (ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, பல்கேரியா) வந்த எதிர்ப்புகளுக்கு செர்பிய ராணுவத் தினரால் ஈடுகொடுக்க முடியவில்லை.

1918-ல் ஸ்லோவேன்கள், க்ரோட்டுகள், செர்புகள் ஆகிய வர்கள் கொண்ட குழு ஒன்று அலெக்ஸாண்டரைப் பேச அழைத் தது. இதுவே அந்தப் புதிய ராஜாங்கம் (Kingdom of Serbs, Croats and Slovenes) பிறக்கக் காரணமாக இருந்தது.

இதற்குள் மன்னராகியிருந்த அலெக்ஸாண்டர், ரோமானிய இளவரசியைத் திருமணம் செய்து கொண்டார். கொஞ்சம் சர்வாதி காரத் தன்மையாகவே ஆட்சியை நடத்தினார் எனலாம். புதிய அரசிய லமைப்புச் சட்டத்தை அறிமுகப் படுத்தினார். அது முக்கிய அதிகாரங்கள் எல்லாம் மன்னருக்கு தான் என்றது. ஆண்கள் மட்டுமே தேர்தலில் ஓட்டுப் போடலாம் என்றார். இது அப்போதைய சூழலில் சகஜம். ஆனால் தேர்தலில் வாக்களிப்பு ரகசியமானதாக இருக்காது என்றார் (ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு நுழைவு வாயில். நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபரின் நுழைவுவாயில் வழியாகச் சென்றுதான் வாக்களிக்க வேண்டும்!).

இரண்டாம் உலகப்போரின் இறுதியில் நடைபெற்ற பாரிஸ் அமைதிப் பேச்சுவார்த்தையில் புதிய நாடு உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டது. அதுமட்டு மல்ல அதன் எல்லைப்பகுதிகள் மேலும் கொஞ்சம் விரிவாக்கப் பட்டன. பக்கத்து நாடுகளான ஆஸ்திரியா, ஹங்கேரி, க்ரோவேஷியா, ஸ்லோவேனியா ஆகியவற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சப் பகுதிகள் செர்பியாவுடன் இணைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து ஹங்கேரி யும் பல்கேரியாவும் தன்னை எதிர்க்கலாம் என்று கருதியவுடன் செக்கோஸ்லாவாகியா மற்றும் ரோமேனியா ஆகிய நாடுகளுடன் ஓர் உடன்படிக்கையில் கையெழுத் திட்டது செர்பியா. அதாவது இந்த மூன்று நாடுகளில் எதை வெளிநாடு ஆக்ரமித்தாலும், மற்ற இரு நாடுகளும் அந்த ஆக்கிரமிப்பை எதிர்த்துச் செயல்படும்.

ஆனால் உள்ளூர்க் கலவரங்கள் தான் பெருமளவில் ஏற்பட்டன. முதலில் குரல் கொடுத்தது க்ரோட்டுகள். ‘எங்களுக்குத் தன்னாட்சி உரிமை வேண்டும்’ என்று குரல் கொடுத்தார்கள். தங்களுக்கென ஒரு தனி நாடாளுமன்றத்தை க்ரோட்டுகள் உருவாக்கிக் கொண்டனர்.

இந்த மோதல் மிக விபரீத நிலையை விரைவில் எட்டியது. க்ரோவேஷியாவின் விவசாயக் கட்சித் தலைவர் ராடிக் என்பவர். அந்தப் பகுதியின் மிக முக்கியத் தலைவர். க்ரோவேஷியாவுக்குத் தன்னாட்சி வேண்டும் என்ற முழக்கத்தை அதிகமாகவே வெளிப் படுத்திய இவர் நாடாளுமன்ற வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். இவரைக் கொலை செய்தது செர்ப் இனத்தைச் சேர்ந்த ஒருவர். கலவரங்கள் உச்ச நிலையை எட்டின.

இதைத் தொடர்ந்து மன்னர் அலெக்ஸாண்டர் சில உடனடி நடவடிக்கைகளை எடுத்தார். அரசியலமைப்பு சட்டத்தை முடக் கினார். ‘இனி எனது ஆட்சிப் பகுதி சர்வாதிகாரத்துக்கு உட்பட்டது’ என்றார். இந்த சர்வாதிகாரம் முதல் கட்டமாக இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும் அதற்குப் பிறகு மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அறிவித்தார். தனது நாட்டின் பெயரை யுகோஸ்லாவியா என்று மாற்றினார்.

சர்வாதிகார ஆட்சியில் எதிர்ப் புகள் நசுக்கப்பட்டன. எனினும் பொதுமக்களிடையே ஒரு வெறுப்பு அதிகரித்து வருவதை மன்னர் உணர்ந்தார். பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்தார். தன் உயிருக்கு ஆபத்து என்ற பயம். 1934-ல் பிரான்ஸுக்கு ஒரு முறை சென்றிருந்தார். நட்பு விஜயம். அப்போது பல்கேரியா வைச் சேர்ந்த ஒருவன் இவரைப் படுகொலை செய்தான்.

அலெக்ஸாண்டருக்குப் பிறகு அவரது மகன் இரண்டாம் பீட்டர் அரியணை ஏறினார். அப்போது அவன் பதினெட்டு வயது நிரம்பாத மைனர்.

காலம் நகர்ந்தது. உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு தலைவரின் கையில் யுகோஸ்லாவிய ஆட்சி வந்து சேர்ந்தது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-6/article8217831.ece

Link to comment
Share on other sites

செம்மை காணுமா செர்பியா? - 7

 
சோவியத் ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலின், ரஷ்ய மக்கள் சபைத் தலைவர் வியாசெஸ்லேவ் மலடோவ் ஆகியோருடன் ஜோசிப் புரோஷ் டிட்டோ (இடது).
சோவியத் ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலின், ரஷ்ய மக்கள் சபைத் தலைவர் வியாசெஸ்லேவ் மலடோவ் ஆகியோருடன் ஜோசிப் புரோஷ் டிட்டோ (இடது).

1918-ல் தெற்கு ஸ்லாவ் இன மக்களின் கூட்ட மைப்பாக உருவானது யுகோஸ்லாவிய ராஜாங்கம். முதலாம் உலகப் போருக்குப் பிறகு உருவான இந்தக் கூட்டமைப்பினால் இரண்டாம் உலகப் போர் வரைகூட தாக்குப் பிடிக்க முடியவில்லை.

1943-ல் மீண்டும் ஒரு பெரு முயற்சி காரணமாக சோஷலிஸ யுகோஸ்லாவிய குடியரசுகளின் கூட்டமைப்பு உருவானது. இது கொஞ்சம் நிலையாக இருந்தது என்றால் அதற்கு முக்கியக் காரணம் டிட்டோ எனும் உறுதிமிக்க தலைவர்.

யுகோஸ்லாவிய ராணுவத்தில் தீவிரப் பங்காற்றினார் டிட்டோ. நாஜிகளுக்கு எதிரான இயக்கத்தில் தன்னை வெகுவாக ஈடுபடுத்திக் கொண்டார்.

க்ரோவெஷியாவில் உள்ள ஒரு கிராமத்தில் ஏழை விவசாயிக்கு மகனாகப் பிறந்தவர் டிட்டோ. எந்த அரசியல் சாயமும் இல்லாமல்தான் இவர் பள்ளிப் பருவம் கழிந்தது. பின்னர் மெக்கானிக்காக பணிபு ரிந்தார். முதலாம் உலகப் போரின் போது ஆஸ்திரியா-ஹங்கேரிய ராணுவத்தில் சேர்க்கப்பட்டார். அந்தப் போரில் காயம் ஏற்பட்டு ரஷ்யர்களின் பிடியில் அகப்பட்டார். பின்னர் செம்படையில் சேர்ந்தார். (ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு ரஷ்யாவில் பெரிதாக வளர்ந்த கம்யூனிஸ்ட் அணி இது).

1920-ல் மீண்டும் க்ரோவெஷியா விற்குத் திரும்பினார். யுகோஸ் லாவிய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். கம்யூனிஸ செயல் பாடுகள் காரணமாக கைது செய்யப் பட்டு ஐந்து வருடங்கள் சிறையில் கழிக்க நேர்ந்தது. என்றாலும் இந்த செயல்பாடும் சிறைவாசமுமே கூட அவருக்குப் பெரும் புகழை அளித்தது.

தன் கட்சியை சீரமைத்தார். கட்டுப்பாடுகள் நிறைந்த கட்சி யாக அதை உருமாற்றினார். இரண்டாம் உலகப்போரின்போது தன் கட்சியை பெரும் பலம் மிக்கதாக அறிமுகப்படுத்தினார். ஜெர்மனி யுகோஸ்லாவியாவை 1941-ல் (இரண்டாம் உலகப்போர்) ஆக்கிரமித்தபோது அதை எதிர்த்தார். அதே சமயம் கம்யூ னிஸத்தைவிட தேச ஒற்றுமைக் குத்தான் டிட்டோ முன்னுரிமை கொடுக்கிறார் என்று அவரது கட்சியி லேயே சலசலப்பு உண்டானது.

ஆகஸ்ட் 1945-ல் யுகோஸ்லா வியா குடியரசு உருவானபோது அதன் பிரதமர் ஆனார். 1953 வரை அதன் பிரதமராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் விளங்கினார். ராணுவத் தளபதி மிஹஜ்லோவிக் என்பவருக்கு 1946-ல் இவர் தூக்கு தண்டனை விதித்தபோது அது பெரும் பரபரப்பை உண்டு பண்ணியது. பலப்பல வருடங் களாகவே தனிப்பட்ட முறையி லும் டிட்டோவை இவர் விமர்சித்தது தான் இதற்கு உண்மையான காரணம் என்று கூறப்பட்டது. சோவியத் யூனியன் போலவே யுகோஸ்லாவியாவும் விளங்க வேண்டும் என்று விரும்பினார் டிட்டோ. இதற்காக கிட்டத்தட்ட சர்வாதிகாரியாகவே செயல்பட் டார். ஆட்சிக் குழு இவரை ‘வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதி’ என்று அறிவித்தது.

ஆனால் 1953-ல் சோவியத் யூனியனுடன் இவர் மாறுபடத் தொடங்கினார். முக்கியமாக ஸ்டாலினின் திட்டங்களை இவர் ஏற்கவில்லை.

ஸ்டாலின் இறந்த பிறகு கூட்டு சேரா நாடுகளை இணைப்பதற்கு டிட்டோ முயன்றார். அரபு நாடு களோடு இணக்கமாக இருந்தார். இஸ்ரேலை எதிர்த்தார். ஹங் கேரியை சோவியத் யூனியன் ஆக்கிரமித்தபோதும் அதை விமர் சித்தார். ஐ.நா.வின் முக்கிய உறுப்பினராக யுகோஸ்லாவியா விளங்கியது. உலக சமாதானத் துக்கு பலவிதங்களில் பங்களிப் பைச் செய்தது.

டிட்டோவின் மனைவி ஒரு ரஷ்யப் பெண்மணி. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தன்னைவிட அதிக வயது இளைய வரான செர்பியப் பெண்மணி யையும் மணந்து கொண்டார். டிட்டோவின் பல வெளிநாட்டுப் பயணங்களில இந்தப் பெண் மணியும் கலந்து கொண்டார். 1980 மே 5 அன்று தான் இறக்கும்வரை யுகோஸ்லாவியாவின் தலைமைப் பதவியை டிட்டோ இழக்கவில்லை.

டிட்டோவின் ஆட்சியின்போது பிற குடியரசுகள் ஓரளவு திருப்தியுடன் இருந்தாலும், க்ரோவேஷியாவும், செர்பியாவும் அதிருப்தியோடுதான் இருந்தன. இவை இரண்டும் ஒன்றை ஒன்று கடும் போட்டியாளராகவே பார்த்தன. கூட்டமைப்பு அரசியலில் செர்புகளின் பங்கு அதிகம் இருந் ததாக க்ரோவேஷியா கருதியது. பல தொழிற்சாலைகள் க்ரோ வேஷியாவில் தொடங்கப்பட்டதாக செர்பியா பொறாமைப்பட்டது.

ஒரு க்ரோவேஷிய தந்தைக்கும், ஸ்லோவேனிய அன்னைக்கும் பிறந்த டிட்டோ யுகோஸ்லாவியக் கூட்டமைப்பில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-4/article8222137.ece

Link to comment
Share on other sites

செம்மை காணுமா செர்பியா? - 8

செர்பிய தலைநகர் பெல்கிரேடில் உள்ள டிட்டோவின் நினைவிடம்.
செர்பிய தலைநகர் பெல்கிரேடில் உள்ள டிட்டோவின் நினைவிடம்.

1980-ல் ஸ்லோவேனியா வில் உள்ள மருத்துவ மனையில் டிட்டோ அனுமதிக்கப்பட்டார். அவர் கால்களில் ரத்த ஓட்டப் பிரச்னை. இதன் காரணமாக சில விரல்களில் ரத்த ஓட்டம் நின்றுபோய் கருப்பாகி விட்டன. அவரது இடது கால் நீக்கப்பட்டது. அதற்குச் சில மாதங்கள் பொறுத்து, மே 4, 1980 அன்று அவர் இறந்தார். மேலும் மூன்று நாட்கள் உயிரோடு இருந்தி ருந்தால் அது அவரது 88-வது பிறந்த தினமாக இருந்திருக்கும்.

யுகோஸ்லாவியாவில் அதிபருக் காக அதிகாரபூர்வமான ஒரு ரயில் உண்டு. அதில் டிட்டோவின் உடல் தலைநகர் பெல்கிரேடுக்கு எடுத்து வரப்பட்டது.

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அந்த நாட்டின் தொலைக்காட்சியில் தேசிய கால்பந்துப் போட்டி ஒளிபரப் பாகிக் கொண்டிருந்தது. அன்றைய போட்டியின் 41-வது நிமிடத்தில் மூன்று பேர் மைதானத்துக்குள் நுழைந்து போட்டியை நிறுத்துமாறு நடுவரிடம் சைகை செய்தனர். அனைவரும் திகைக்க அந்த அறிவிப்பை ஒருவர் செய்தார். ‘அன்புக்குரிய அதிபர் டிட்டோ இறந்து விட்டார்’’.

பலரும் அழுதனர். சில விளையாட்டு வீரர்கள் தரையில் பொத்தென விழுந்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்கு கூடியிருந்த 50,000 கால்பந்து ரசிகர்களும் விம்மியபடி கலைந்து சென்றனர்.

டிட்டோவின் இறுதி ஊர்வலம் அவர் இறந்த நான்கு நாட்களுக்குப் பிறகு நடைபெற்றது. உலக சரித்திரத்திலேயே மிக அதிக அளவில் பிற நாடுகளின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் கலந்து கொண்ட இறுதி ஊர்வலம் என்கி றார்கள். ஐ.நா.வில் உறுப்பினர் களாக இருந்த 154 நாடுகளில், 128 நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டார்கள். நான்கு மன்னர்கள், 31 அதிபர்கள், 22 பிரத மர்கள் ஆகியோரும் இதில் அடக்கம். மார்கரெட் தாட்சர், சதாம் உசேன், யாசர் அராபத், ப்ரெஷ்னேவ் போன்ற பெருந்தலை வர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார்கள். இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் கலந்து கொண்டார். எனினும் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டரும், கியூபா வின் அப்போதைய அதிபர் பிடல் காஸ்ட்ரோவும் கலந்து கொள் ளாதது பலரால் விமர்சிக்கப்பட்டது.

இந்த அளவுக்கு அதிக எண்ணிக் கையில் அதற்குப் பிறகு வி.ஐ.பி.க்கள் கலந்து கொண்டது 2005-ல் நடைபெற்ற போப் இரண்டாம் ஜான் பாலின் இறுதி ஊர்வலத்தில்தானாம்.

முதுமை அடைந்துவிட்டிருந்த டிட்டோ தொடர்ந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நீண்ட காலகட்டத்திலேயே அவருடைய இறுதி ஊர்வலம் எப்படி இருக்க வேண்டுமென்று திட்டமிடப்பட்டன வாம்!

1980-ல் டிட்டோ இறந்த பிறகு யுகோஸ்லாவியா கூட்டமைப்பின் கட்டமைப்பு கொஞ்சம் ஆட்டம் கண்டது. அந்த நாட்டின் பொருளா தாரம் சரியத் தொடங்கியது. யுகோஸ்லாவியாவின் ஒவ்வொரு குடியரசும்

தன்னை முன்னிறுத்திக் கொள்ள ஆசைப்பட்டது. பின்னர் ஒவ்வொன்றும் பிரியக் குரல் கொடுத்தது. இதன் விளைவாக ரத்த ஆறுகள் ஓடத் தொடங்கின.

பல வருடங்கள் ஆட்சியில் இருந்த டிட்டோ தனது முதிய வயதில் இறந்திருந்தார். எனவே அவரோடு தொடக்கத்தில் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்ட யாருமே அவர் இறக்கும்போது அந்த நாட்டின் அரசியலில் குறிப்பிடத்தக்க அளவு இல்லை. இளைஞர்களைப் பொறுத்தவரை ‘அத்தனை குடியரசு மக்களும் சகோதரர்களாக இருப்போம்’ என்பதைவிட தங்கள் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றே நினைத்தனர். டிட்டோ மீது கொண்ட மரியாதை காரணமாக அமைதியாக இருந்தது போல் இருந்தது அவர்களின் நடவடிக்கை. டிட்டோ இரும்புக்கரம் கொண்டு புரட்சியாளர்களை அடக்கி விடுவார் என்ற பயமும் காரணமாக இருந்திருக்கலாம்.

டிட்டோ இறந்தவுடன் அவர் ஆட்சியைப் பற்றிய விமர்சனங் களும் மெல்ல மெல்ல கட்ட விழ்த்து விடப்பட்டன. புதிய தலைவர்கள் மெல்ல மெல்ல உருவாகி தங்களை வெளிகாட்டிக் கொண்டனர். யுகோஸ்லாவியாக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை தங்களை எதிரிகளாகவே கருதிக் கொண்டன செர்பியாவும், க்ரோவே ஷியாவும். ஆட்சி அதிகாரத்தில் செர்புகள் அதிக அளவில் இருப்ப தாக க்ரோவேஷியா குமுறியது. இரண்டாம் உலகப் போருக் குப் பிறகு மெல்ல மெல்ல செர்பியாவிலிருந்த முக்கிய தொழிற்சாலைகள் க்ரோவேஷி யாவுக்கும், ஸ்லோவேனியாவுக் கும் மாற்றப்பட்டதாக செர்பியா. ஆதங்கப்பட்டது.

ஏற்கனவே கூறியதுபோல தன் பிறப்பாலேயே கூட்டமைப்பின் பிரதிநிதியாக விளங்கினார் டிட்டோ. (க்ரோவேஷிய தந்தைக் கும் ஸ்லோவேனிய தாய்க்கும் பிறந்தவர்). டிட்டோ இறந்தவுடன், 35 வருடங்கள் அந்த நாட்டை கட்டிக் காத்து நாஜிக்களை உள்ளே அனுமதிக்காமல் பாது காத்த அவர் பாதையில் தொடர்ந்து செல்ல எந்தத் தலைவரும் உருவாகவில்லை.

தனக்கு ஒரு வாரிசை டிட்டோ ஏன் உருவாக்கவில்லை? தனது மறைவுக்குப் பிறகு யுகோஸ்லாவி யாவில் இப்படி ஆளப்பட வேண்டுமென்று ஒரு திட்டத்தை டிட்டோ வடிவமைத்திருந்தார். யுகோஸ்லாவியாவின் ஒவ்வொரு குடிதேசத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் சுழற்சி முறையில் யுகோஸ்லாவியாவை ஆள வேண்டும் என்றார். அனைத்து குடியரசுகளுக்கும் சம வாய்ப்பு என்று கூறிக் கொண்டார். ‘தனக்குப் பிறகு எந்த பெரிய தலைவரும் யுகோஸ்லாவியாவில் உருவாகிவிடக் கூடாது என்ற டிட்டோவின் எண்ணத்தின் வெளிப் பாடுதான் இது’ என்று கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-8/article8227040.ece

Link to comment
Share on other sites

  • 3 months later...

செம்மை காணுமா செர்பியா? - 9

 

 
கடந்த 1968 ஜனவரி 22-ல் டெல்லி வந்த யுகோஸ்லாவியா அதிபர் டிட்டோ அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்தார்.
கடந்த 1968 ஜனவரி 22-ல் டெல்லி வந்த யுகோஸ்லாவியா அதிபர் டிட்டோ அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்தார்.

சென்ற நூற்றாண்டில் மிக மோசமான இனப்படுகொலை நடந்தது போஸ்னிய - செர்பிய யுத்தத்தில்தான் என்று பல சரித்திர ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 1990-க்களில் நடைபெற்ற இந்தப் போரில் ராணுவத் தளபதியாக கொடூரமாகச் செயல்பட்ட ரட்கோ மிலாடிக் என்பவர் மீது வழக்கு நடந்து வருகிறது. அதன் இறுதிக் கட்டம் நெருங்கி விட்டது.

அது மட்டுமல்ல, உலக நாடுகளால் மறக்கவே முடியாத ஒரு செயல் தொடங் கியது ஐரோப்பிய நாடான செர்பியா வில்தான். அந்தச் செயல்பாடுதான் பல நாடுகளை வெவ்வேறு விதங்களில் பாதித்து முதலாம் உலகப் போருக்கு வழிவகுத்தது.

போஸ்னியாவுக்கு வந்திருந்த ஆஸ்திரிய இளவரசரை செர்பிய தீவிரவாத இயக்கத்தினர் படுகொலை செய்தனர். செர்பியா மீது போர் தொடுப்பதாக ஆஸ்திரியா அறிவித்தது. ஏற்கெனவே செய்து கொண்டிருந்த உடன்படிக்கை காரணமாக ரஷ்யா தனது ராணுவத்தின் ஒரு பகுதியை செர்பியாவுக்கு அனுப்பியது. ‘‘உங்கள் ராணுவத்தை வாபஸ் பெறுங்கள்’’ என்று ரஷ்யாவுக்கு ஜெர்மனி அறிக்கை அனுப்பியது. கூடவே ‘‘இந்தப் போரில் நடுநிலை வகிப்பதாக நீங்கள் அறிவிக்க வேண்டும்’’ என்று பிரான்ஸுக்கு உத்தர விட்டது. பிரான்ஸ் பதிலளிக்கவில்லை. ரஷ்யா மற்றும் பிரான்ஸுடன் ஜெர்மனி போர்முழக்கம் செய்தது. முதல் உலகப் போர் வெடித்தது. முதலாம் உலகப் போரில் கூட்டு நாடுகள் வென்றன. ஜெர்மனி வீழ்ந்தது.

செர்பிய மன்னர் முதலாம் பீட்டர் தலைமையில் ஸ்லாவ் இன மக்களை (அவர்கள் அதிகமாக இருந்ததால்தான் யுகோ‘ஸ்லாவியா’) இணைக்க முயற்சி தொடங்கப்பட்டது. முதலில் மான்டே னேக்ரோ இணைக்கப்பட்டது. 1918-ல் புதிய ராஜாங்கம் (Kingdom of Serbs, Croats and Slovenes) உருவாக விதை போடப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் நடைபெற்ற அமைதிப் பேச்சு வார்த்தையில் இந்தப் புதிய ராஜாங்கம் தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டது. அதன் எல்லைப் பகுதிகள் மேலும் கொஞ்சம் விரிவாக்கப்பட்டன.

பின்னர் அதிலிருந்த (க்ரோவேஷியாவைச் சேர்ந்த) க்ரோட் இனத்தவர்கள் தன்னாட்சி உரிமை வேண்டும் என்று குரல் கொடுத்தார்கள். இப்படிக் குரல் கொடுத்த க்ரோட் தலைவர் ஒருவரை செர்பிய இனத்தைச் சேர்ந்த ஒருவர் நாடாளுமன்ற வளாகத்திலேயே படுகொலை செய்தார். கலவரங்கள் அதிகமாயின.

கலவரங்களை அடக்க ராஜாங்கத்தின் மன்னர் அலெக்ஸாண்டர் (மாவீரர் என்று நாம் அறியப்படுகிற கிரேக்க நாட்டு அலெக் ஸாண்டர் இவர் அல்ல) தன் சர்வாதிகாரத் தைச் செலுத்தத் தொடங்கினார். நாட்டின் பெயரை யுகோஸ்லாவியா என்று மாற்றினார். 1945-ல் உருவான யுகோஸ்லாவியாவில் 6 குடியரசுகள் இருந்தன. அவை செர்பியா, மான்டேனேக்ரோ, ஸ்லோவினியா, க்ரோவேஷியா, போஸ்னியா மற்றும் மாசிடோனியா (போஸ்னியாவின் முழுப்பெயர் போஸ்னிய - ஹெர்ஜகோவினா. ஒரு வசதிக்காக இதை போஸ்னியா என்றே குறிப்பிடுவோம்).

காலம் நகர்ந்தது. உலகையே தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு தலைவரின் கையில் யுகோஸ்லாவியா ஆட்சி வந்து சேர்ந்தது. இனி..

1918-ல் தெற்கு ஸ்லாவ் இன மக்களின் கூட்டமைப்பாக உருவானது யுகோஸ்லாவிய ராஜாங்கம் என்றோம். முதலாம் உலகப்

போருக்குப் பிறகு உருவான இந்தக் கூட்டமைப்பில் இரண்டாம் உலகப் போர் வரைகூட தாக்குப் பிடிக்க முடியவில்லை.

1943-ல் மீண்டும் ஒரு பெருமுயற்சி காரணமாக சோஷலிஸ யுகோஸ்லாவிய குடியரசுகளின் கூட்டமைப்பு உருவானது. இது கொஞ்சம் நிலையாக இருந்தது என்றால் அதற்கு முக்கியக் காரணம் டிட்டோ எனும் உறுதிமிக்க தலைவர்.

யுகோஸ்லாவியா ராணுவத்தில் தீவிரப் பங்காற்றினார் டிட்டோ. நாஜி இயக்கத்திற்கு எதிரான இயக்கத்தில் பெரும் பங்காற்றினார்.

க்ரோவேஷியாவில் உள்ள ஒரு கிராமத்தில் ஏழை விவசாயிக்கு மகனாகப் பிறந்தவர் டிட்டோ. எந்த அரசியல் சாயமும் இல்லாமல்தான் இவர் பள்ளிப் பருவம் கழிந்தது. பின்னர் மெக்கானிக்காக பணிபுரிந் தார். முதலாம் உலகப் போரின்போது ஆஸ்திரியா-ஹங்கேரிய ராணுவத்தில் சேர்க்கப்பட்டார். அந்தப் போரில் காயம் ஏற்பட்டு ரஷ்யர்களின் பிடியில் அகப்பட்டார். பின்னர் செம்படையில் சேர்ந்தார். (ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு ரஷ்யாவில் பெரிதாக வளர்ந்த கம்யூனிஸ்ட் அணி இது).

1920-ல் மீண்டும் க்ரோவேஷியாவிற்குத் திரும்பினார். யுகோஸ்லாவிய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். கம்யூனிஸ செயல்பாடுகள் காரணமாக கைது செய்யப்பட்டு ஐந்து வருடங்கள் சிறையில் கழிக்க நேர்ந்தது. என்றாலும் இந்த செயல்பாடும் சிறைவாசமுமேகூட அவருக்குப் பெரும் புகழை அளித்தன.

தன் கட்சியை மிகவும் சீரமைத்தார். கட்டுப்பாடுகள் நிறைந்த கட்சியாக அதை உருமாற்றினார்.. இரண்டாம் உலகப்போரின் போது தன் கட்சியை பெரும் பலம் மிக்கதாக அறிமுகப்படுத்தினார். ஜெர்மனி யுகோஸ்லாவியாவை 1941-ல் (இரண்டாம் உலகப்போர்) ஆக்கிரமித்தபோது அதை எதிர்த்தார். அதே சமயம் கம்யூனிஸத்தைவிட தேச ஒற்றுமைக்குதான் டிட்டோ முன்னுரிமை கொடுக்கிறார் என்று அவரது கட்சியிலேயே சலசலப்பு உண்டானது.

ஆகஸ்ட் 1945-ல் யுகோஸ்லாவியா குடியரசு உருவானபோது அதன் பிரதமர் ஆனார். 1953 வரை அதன் பிரதமராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் விளங்கினார். ராணுவத் தளபதி மிஹஜ்லோவிக் என்பவருக்கு 1946-ல் இவர் தூக்கு தண்டனை விதித்தபோது அது பெரும் பரபரப்பை உண்டுபண்ணியது. பலப்பல வருடங்களாகவே தனிப்பட்ட முறையிலும் டிட்டோவை இவர் விமர்சித்ததுதான் இதற்கு உண்மையான காரணம் என்று கூறப்பட்டது.

சோவியத் யூனியன் போலவே யுகோஸ்லாவியாவும் விளங்க வேண்டும் என்று விரும்பினார் டிட்டோ. இதற்காக கிட்டத்தட்ட சர்வாதிகாரியாகவே செயல் பட்டார். ஆட்சிக் குழு இவரை ‘வாழ்நாள் முழுவதும் அதிபர்’ என்று அறிவித்தது.

ஆனால் 1953-ல் சோவியத் யூனியனுடன் இவர் மாறுபடத் தொடங்கினார். முக்கிய மாக ஸ்டாலினின் திட்டங்களை இவர் ஏற்கவில்லை.

ஸ்டாலின் இறந்த பிறகு கூட்டு சேரா நாடுகளை இணைப்பதற்கு டிட்டோ முயன் றார். அரபு நாடுகளோடு இணக்கமாக இருந்தார். இஸ்ரேலை எதிர்த்தார். ஹங்கேரியை சோவியத் யூனியன் ஆக்கிர மித்தபோதும் அதை விமர்சித்தார். ஐ.நா.வின் முக்கிய உறுப்பினராக யுகோஸ்லாவியா விளங்கியது. உலக சமாதானத்துக்கு பலவிதங்களில் பங்களிப்பைச் செய்தது.

டிட்டோவின் மனைவி ஒரு ரஷ்யப் பெண்மணி. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தன்னைவிட அதிக வயது இளையவரான ஒரு செர்பியப் பெண்மணியையும் மணந்து கொண்டார். டிட்டோவின் பல வெளிநாட்டுப் பயணங்களில் இந்தப் பெண்மணியும் கலந்து கொண்டார். 1980 மே 5 அன்று தான் இறக்கும்வரை யுகோஸ்லாவியாவின் தலைமைப் பதவியை டிட்டோ இழக்கவில்லை.

டிட்டோவின் ஆட்சியின்போது பிற குடியரசுகள் ஓரளவு திருப்தியுடன் இருந் தாலும், க்ரோவேஷியாவும், செர்பியாவும் அதிருப்தியோடுதான் இருந்தன. இவை இரண்டும் ஒன்றை ஒன்று கடும் போட்டி யாளராகவே பார்த்தது. கூட்டமைப்பு அரசிய லில் செர்புகளின் பங்கு அதிகம் இருந்த தாக க்ரோவேஷியா கருதியது. பல தொழிற்சாலைகள் க்ரோவேஷியாவில் தொடங்கப்பட்டதாக செர்பியா பொறா மைப்பட்டது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-9/article8640254.ece?homepage=true&relartwiz=true

 

Link to comment
Share on other sites

செம்மை காணுமா செர்பியா?- 10

 

 
பெல்கிரேடு நகரில் உள்ள டிட்டோவின் நினைவிடம்.
பெல்கிரேடு நகரில் உள்ள டிட்டோவின் நினைவிடம்.

கடந்த 1980-ல் ஸ்லோவேனி யாவில் உள்ள மருத்துவ மனையில் டிட்டோ அனுமதிக் கப்பட்டார். அவர் கால்களில் ரத்த ஓட்டப் பிரச்சினை. இதன் காரணமாக சில விரல்களில் ரத்த ஓட்டம் நின்றுபோய் கருப்பாகி விட்டன. அவரது இடது கால் நீக்கப்பட்டது. அதற்குச் சில மாதங் களுக்குப் பிறகு 1980 மே 4-ம் தேதி அவர் இறந்தார். மேலும் மூன்று நாட்கள் உயிரோடு இருந்திருந்தால் அது அவரது 88-வது பிறந்த தினமாக இருந்திருக்கும்.

யுகோஸ்லாவியாவில் அதிபருக் காக அதிகாரபூர்வமான ஒரு ரயில் உண்டு. அதில் டிட்டோவின் உடல் தலைநகர் பெல்கிரேடுக்கு எடுத்து வரப்பட்டது.

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அந்த நாட்டின் தொலைக்காட்சியில் தேசிய கால்பந்துப் போட்டி ஒளிபரப் பாகிக் கொண்டிருந்தது. அன்றைய போட்டியின் 41-வது நிமிடத்தில் மூன்று பேர் மைதானத்துக்குள் நுழைந்து போட்டியை நிறுத் துமா று நடுவரிடம் சைகை செய்தனர். அனைவரும் திகைக்க அந்த அறிவிப்பை ஒருவர் செய்தார். ‘‘அன்புக்குரிய அதிபர் டிட்டோ இறந்துவிட்டார்’’.

பலரும் அழுதனர். சில விளையாட்டு வீரர்கள் தரையில் பொத்தென விழுந்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்கு கூடியிருந்த 50,000 கால்பந்து வீரர்களும் விம்மியபடி கலைந்து சென்றனர்.

டிட்டோவின் இறுதி ஊர்வலம் அவர் இறந்த நான்கு நாட்களுக்குப் பிறகு நடைபெற்றது. இது உலக சரித்திரத்திலேயே மிக அதிக அளவில் பிற நாடுகளின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் கலந்து கொண்ட இறுதி ஊர்வலம் என்கிறார்கள். ஐ.நா.வில் உறுப் பினர்களாக இருந்த 154 நாடுக ளில், 128 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். நான்கு மன்னர்கள், 31 அதிபர்கள், 22 பிர தமர்கள் ஆகியோரும் இதில் அடக்கம். மார்கரெட் தாட்சர், சதாம் உசேன், யாசர் அராபத், ப்ரெஷ் னேவ் போன்ற பெருந்தலைவர் கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் கலந்து கொண்டார். (எனினும் அப்போ தைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டரும், கியூபாவின் அப்போதைய அதிபர் பிடல் காஸ்ட்ரோவும் கலந்து கொள் ளாதது பலரால் விமர்சிக்கப் பட்டது).

இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையில் அதற்குப் பிறகு வி.ஐ.பி.க்கள் கலந்து கொண்டது 2005-ல் நடைபெற்ற போப் இரண்டாம் ஜான் பாலின் இறுதி ஊர்வலத்தில்தானாம்.

முதுமை அடைந்து விட்டிருந்த டிட்டோ தொடர்ந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நீண்ட காலகட்டத்திலேயே அவருடைய இறுதி ஊர்வலம் எப்படி இருக்க வேண்டுமென்று திட்டமிட்டனராம் அரசு அதிகாரிகள்!

1980-ல் டிட்டோ இறந்த பிறகு யுகோஸ்லாவியா கூட்ட மைப்பின் கட்டமைப்பு கொஞ்சம் ஆட்டம் கண்டது. அந்த நாட்டின் பொருளாதாரம் சரியத் தொடங்கியது. யுகோஸ் லாவியாவின் ஒவ்வொரு குடியரசும் தன்னை முன்னிறுத்திக் கொள்ள ஆசைப்பட்டது. பின்னர் ஒவ்வொன்றும் பிரியக் குரல் கொடுத்தது. இதன் விளைவாக ரத்த ஆறுகள் ஓடத் தொடங்கின.

பல வருடங்கள் ஆட்சியில் இருந்த டிட்டோ தனது முதிய வயதில் இறந்திருந்தார். எனவே அவரோடு தொடக்கத்தில் சுதந் திரப் போராட்டங்களில் ஈடுபட்ட யாருமே அவர் இறக்கும்போது அந்த நாட்டின் அரசியலில் குறிப் பிடத்தக்க அளவு செல்வாக் கானவராக இல்லை. இளைஞர் களைப் பொறுத்தவரை ‘அத்தனை குடியரசு மக்களும் சகோதரர்க ளாக இருப்போம்’ என்பதைவிட தங்கள் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றே நினைத்தனர். டிட்டோ மீது கொண்ட மரியாதை காரணமாக அமைதி யாக இருந்ததுபோல் இருந்தது அவர்களின் நடவடிக்கை. டிட்டோ இரும்புக்கரம் கொண்டு புரட்சியா ளர்களை அடக்கி விடுவார் என்ற பயமும் காரணமாக இருந்திருக் கலாம்.

டிட்டோ இறந்தவுடன் அவர் ஆட்சியைப் பற்றிய விமர்சனங் களும் மெல்ல மெல்ல கட்டவிழ்த்து விடப்பட்டன. புதிய தலைவர்கள் மெல்ல மெல்ல உருவாகி தங்களை வெளிகாட்டிக் கொண் டனர்.

யுகோஸ்லாவியா கூட்டமைப் பில் செர்பியாவும், க்ரோவேஷி யாவும் தங்களை எதிரிகளாகவே கருதிக் கொண்டன. ஆட்சி அதிகாரத்தில் செர்புகள் அதிக அளவில் இருப்பதாக க்ரோ வேஷியா குமுறியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மெல்ல மெல்ல செர்பியாவிலிருந்த முக்கிய தொழிற்சாலைகள் க்ரோ வேஷியாவுக்கும் ஸ்லோவேனி யாவுக்கும் மாற்றப்பட்டதாக செர்பியா ஆதங்கப்பட்டது.

ஏற்கனவே கூறியதுபோல தன் பிறப்பாலேயே கூட்டமைப்பின் பிரதிநிதியாக விளங்கினார் டிட்டோ. (க்ரோவேஷிய தந்தைக் கும் ஸ்லோவேனிய தாய்க்கும் பிறந்தவர்). டிட்டோ இறந்தவுடன், 35 வருடங்கள் அந்த நாட்டை கட்டிக் காத்து நாஜிக்களை உள்ளே அனுமதிக்காமல் பாது காத்த அவர் பாதையில் தொடர்ந்து செல்ல எந்தத் தலைவரும் உருவாகவில்லை.

தனக்கு ஒரு வாரிசை டிட்டோ ஏன் உருவாக்கவில்லை? தனது மறைவுக்குப் பிறகு யுகோஸ்லா வியா இப்படி ஆளப்பட வேண்டுமென்று ஒரு திட்டத்தை டிட்டோ வடிவமைத்திருந்தார். யுகோஸ்லாவியாவின் ஒவ்வொரு குடியரசைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் சுழற்சி முறையில் யுகோஸ் லாவியாவை ஆள வேண்டும் என்றார். அனைத்து குடியரசு களுக்கும் சம வாய்ப்பு என்று கூறிக் கொண்டார். (ஆனால் தனது மறைவுக்குப் பிறகு ‘தனக்குப் பிறகு எந்த பெரிய தலைவரும் யுகோஸ்லாவியாவில் உருவாகி விடக் கூடாது என்ற டிட்டோவின் எண்ணத்தின் வெளிப்பாடுதான் இது’ என்று கூறுகிறார்கள் சில அரசியல் விமர்சகர்கள்).

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/செம்மை-காணுமா-செர்பியா-10/article8659538.ece

Link to comment
Share on other sites

செம்மை காணுமா செர்பியா?

 

 
ஸ்லோவேனியாவின் சுதந்திரப் போரில் பங்கேற்ற அந்த நாட்டு மக்கள். (கோப்புப் படம்)
ஸ்லோவேனியாவின் சுதந்திரப் போரில் பங்கேற்ற அந்த நாட்டு மக்கள். (கோப்புப் படம்)

கடந்த 1980-ல் டிட்டோ இறந்ததும் யுகோஸ்லாவிய நாட்டில் அமைந்த குடி யரசுகள் சுயாட்சி மற்றும் சுதந்திரக் குரல்களை ஒலிக்கத் தொடங்கின.

1991-ல் இருந்து 1995 வரை நடைபெற்ற கடும் போர்களின் விளைவாக யுகோஸ்லாவியக் கூட்டமைப்பு உடைந்தது. ‘‘டிட்டோ இறந்தவுடன் நாங்கள் எல்லோரும் அழுதோம். ஆனால் அப்போது எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் புதைத்தது யுகோஸ்லாவியாவைத்தான் என்று’’ என்றார் ஓர் உள்ளூர் அரசியல்வாதி.

தனது 35 ஆண்டு ஆட்சிக் காலத்தில் யுகோஸ்லாவியாவின் அத்தனை இனங்களையும் மதங்களையும் டிட்டோ தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். கம்யூனிஸத்தைப் பரவ விட்டார். மக்களின் மதிப்பைப் பெற்றார்.

டிட்டோவுக்குப் பிறகு அவரது வாரிசு என்று யாரும் சரியாக முன்வரவில்லை. தனக்குப் பிறகு ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு குடியரசின் பிரதிநிதி சுழற்சி முறை யில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற டிட்டோவின் திட்டம் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அமலுக்கு வரவில்லை.

1991-ல் இருந்து 2001 வரை முன்னாள் யுகோஸ்லாவியா பரப்புக்குள் நடைபெற்ற இனப்போர்களை ‘யுகோஸ்லாவ் யுத்தங்கள்’’ என்பார்கள். யுகோஸ்லாவியக் குடியரசு உடைவதற்கு இந்தப் போர்கள் முக்கிய காரணமாக அமைந்தன.

1991-ல் ஸ்லோவேனியாவில் போர் நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெற்ற இந்த யுத்தத்தை ஸ்லோவேனியாவின் சுதந்திரப் போர் எனலாம். யுகோஸ்லாவிய மக்கள் ராணுவத்துக்கும் ஸ்லோ வேனிய எல்லைப் பாதுகாப்பு அமைப்புக்கும் இடையே நடைபெற்ற போர் இது.

டிட்டோ 1980-ல் இறந்ததிலிருந்தே யுகோஸ்லாவியாவில் பல தளங்களில் பிரச்சினைகள் தோன்றின. 1989-ல் மிலோசெவிக் செர்பியாவின் அதிபர் ஆனார். பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் செர்பியாதான் யுகோஸ்லாவியக் குடியரசு களில் மிகப் பெரியது. இதை அடிப்படையாக வைத்துக் கொண்டே செர்பியாவின் அதிகாரத்தை மேலும் மேலும் வலிமைப் படுத்திக் கொண்டார் மிலோசெவிக். மத்திய ஆட்சி செர்பியாவுக்கே பல சலுகைகளை வழங்குவதாகப் பிற குடியரசுகள் எண்ணத் தொடங்கின. 6 குடியரசுகளில், நான்கு சுதந்திரம் குறித்து வெளிப்படை யாகவே பேசத் தொடங்கின. ஸ்லோ வேனியா இதில் முன்னணியில் நின்றது. ஜெர்மனி மற்றும் வாடிகன் ஸ்லோவேனி யாவுக்கு ஆதரவாக களத்தில் குதித்தன.

டிட்டோ இறந்தபோது யுகோஸ்லாவியக் கூட்டமைப்பு 20 பில்லியன் டாலர் கடன் பட்டிருந்தது. அதே சமயம் அதன் இரு குடியரசுகளான க்ரோவேஷியா மற்றும் ஸ்லேவேனியா ஆகியவை பணக்காரக் குடியரசுகளாக இருந்தன. செர்பியத் தலைநகரான பெல்கிரேடிலிருந்து இவற் றிற்குத் தொடர்ந்து முதலீடுகள் வந்த வண்ணம் இருந்தன. 1980-க்களில் யுகோஸ்லாவியாவில் 8 சதவீத மக்கள் தொகையை மட்டுமே கொண்டிருந்த ஸ்லோவேனியா, நாட்டின் வருமானத்தில் 20 சதவீதத்துக்கு காரணமாக அமைந்திருந்தது. அதே சமயம் தொடர்ந்து பெல்கிரேட் தன் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடு வதாகவும் ஸ்லோவேனியா கருதத் தொடங் கியது. இதைத் தொடர்ந்து ஸ்லோவேனி யாவும் க்ரோவேஷியாவும் தனி நாடு கோரிக்கைகளை எழுப்பத் தொடங்கின. இவற்றைத் தனி நாடுகளாக முதலில் அங்கீகரித்த முக்கியமான தேசம் ஜெர்மனி.

1990-ல் ஸ்லோவேனியா மக்களிடையே ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. 93 சதவீதம் பேர் ஸ்லோவேனியா தனி நாடாக வேண்டும் என்று கூறினர். இதைத் தொடர்ந்துதான் மேற்படி போர் நடைபெற்றது. ஸ்லோவேனியா தனி நாடானது.

1991-ல் தொடங்கி 1995 வரை தொடர்ந்தது க்ரோவேஷியாவின் சுதந்திரப் போர். க்ரோவேஷியாவைச் சேர்ந்தவர் களுக்கும் செர்பியா மீது புகைச்சல். யுகோஸ்லாவிய ராணுவத்தின் தலைமைப் பீடத்தைப் பெரும்பாலும் செர்பியர்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தது க்ரோவே ஷியா. க்ரோவேஷியா தனி நாடாக வேண்டும் என விரும்பியது. ஆனால் அந்த நாட்டில் வசித்த செர்ப் இனத்தவர் க்ரோவேஷியா தனி நாடு ஆகக் கூடாது என்று கொடி பிடித்தனர்.

போரின் முடிவில் க்ரோவேஷியா வென்றது. தன்னை தனி நாடாக அறிவித்துக் கொண்டது. ஆனால் அதன் பொருளாதாரம் வெகுவாக சரிந்திருந்தது. இரு தரப்பிலும் 20,000 பேர் போரில் கொல்லப்பட்டிருந்தனர். தவிர இரு தரப்பிலும் போர் அகதிகளும் எக்கச்சக்கமாக இருந்தனர்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/செம்மை-காணுமா-செர்பியா/article8663002.ece

Link to comment
Share on other sites

செம்மை காணுமா செர்பியா?- 12

 

செர்பியாவின் முன்னாள் பிரதமர் ஸ்லோபோடன் மிலோசெவிக்
செர்பியாவின் முன்னாள் பிரதமர் ஸ்லோபோடன் மிலோசெவிக்

யுகோஸ்லாவிய அரசோடு இணைந்திருந்தபோதும் செர்பியா தனியானபோதும் அந்த சரித்திரங்களில் மறக்க முடியாத ஒரு நபராக விளங்கியவர் ஸ்லோபோடன் மிலோசெவிக்.

1980-ல் டிட்டோ இறந்தார். 1989-ல் ஸ்லோபோடன் மிலோசெவிக் செர்பியாவின் பிரதமர் ஆனார். இந்த இருவருக்குமிடையே உள்ள அணுகுமுறைகளில் எக்கச்சக்க வித்தியாசம்.

1987-ல் செர்பியாவில் கம்யூ னிஸ்ட் கட்சிப் பிரமுகராக விளங்கிய மிலோசெவிக் கொசோவா வுக்குச் சென்றார். கொசோவா ஒரு தனி மாகாணம். அங்கு வசித்த செர்பியர்கள் தங்களை அங்குள்ள மெஜாரிட்டி மக்கள் (அல்பேனி யர்கள்) துன்புறுத்துவதாகக் கூற அங்கு உணர்ச்சிகரமான உரையை ஆற்றினார் மிலோசெவிக்.

‘‘கொசோவா நம் மக்களுக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அதை மெல்ல மெல்லத் தான் தீர்க்க முடியும் என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அது வேகமாக தீர்க்க வேண்டிய பிரச்சினை. பொருளாதார சரிவின் போதுகூட கொசோவா தான் அதிகப் பிரச்சினையாக இருந்தது. நம் மக்களுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இதில் முக்கிய பொறுப்பு இருக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சியிலேயே இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்பதில் இருவேறு கருத்துகள் உள்ளன. ஒருமித்த கருத்துக்கு வரவேண்டும். ஓன்று பட்டால் செர்பியர்களின் பிரச்சி னைகளை சுலபமாக தீர்க்க முடியும்.

கொசோவா வளர்ச்சியடையாத ஒரு பகுதி. அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் மிகவும் அதிகம். வெளிநாட்டுக் கடனும் அதிகம். ஆரோக்கியமான எண்ணப் போக்கு இல்லாத பலரும் அதன் அரசியலில் இருக்கிறார்கள்.

கொசோவாவில் செர்புகள் மைனாரிட்டி என்று கூறக் கூடாது. இங்கு அல்பேனியர்களுக்கு உள்ள சகல உரிமைகளும் அவர்களுக்கும் உண்டு. யுகோஸ்லாவியாவின் பிற பகுதிகளில் வசிக்கும் அல்பேனி யர்கள் அங்கெல்லாம் தங்களை மைனாரிட்டி என்று அறிவித்துவிட்டு அடங்கிப் போவார்களா?’’ என்றவர் முத்தாய்ப்பாக ‘‘கவலைப் படாதீர்கள். வருங்காலம் செர்பியர் களாகிய நம் கையில்தான்’’ என்றார்.

1989-ல் செர்பியாவின் பிரதமரா னார் மிலோசெவிக். (நாளடைவில் யுகோஸ்லாவியாவின் தலைவரா கவும் ஆனார். ஆனால் இடைப்பட்ட காலகட்டத்தில் ஸ்லோவேனியா, மாசிடோனியா, க்ரோவேஷியா மற்றும் போஸ்னியா ஆகியவை யுகோஸ்லாவியாவிலிருந்து பிரிந்து விட்டன).

கொசோவா விடுதலை ராணுவம் என்ற புரட்சிகர அமைப்பு செர்பிய ஆட்சிக்கு எதிராகப் போராடியது. செர்பிய ராணுவம் அசுரத்தனமாக அவர்களை அடக்கியது. பல்லாயிரக்கணக் கான அல்பேனியர்கள் வெளிநாடு களுக்கு தெறித்து ஓடினர்.

மார்ச் 1989-ல் செர்பியாவுக்கும் கொசோவாவுக்கும் நடைபெற்ற மறைமுகப் போர் மேலும் அதிக மானது. செர்பிய அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்பட்டது. கொசோவா மாகாணம் செர்பியாவின் பகுதியாக ஆனது. யுகோஸ்லாவிய அரசை இப்போது செர்பியாவால் மேலும் ஆட்டிப் படைக்க முடிந்தது. காரணம் செர்பியாவின் தொகுதிகள் எண்ணிக்கையில் அதிகமாகி இருந்தது.

கொசோவோ விடுதலைப் படை புரட்சியாளர்கள் செர்பிய ஆட்சிக்கு எதிராகத் திரண்டு எழுந்தனர். செர்பிய ராணுவம் பதிலுக் குத் தாக்குதல் நடத்தியது. கொசோவோவில் வசித்த ஆயிரக் கணக்கான அல்பேனியர்கள் பிற நாடுகளுக்குப் பறந் தார்கள். கொசோவோவில் 45 அல்பேனியர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற குரல் வலுப் பெற்றது. ஆனால் மிலோ செவிக் இதற்கெல்லாம் அசருவதாக இல்லை. செர்பியாவுக்கு எதிரணி யில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகள் திரண்டன.

(பிப்ரவரி 2008-ல் செர்பியா விலிருந்து தான் சுதந்திரம் பெற்று விட்டதாகக் கூறியது கொசோவா. தன் பெயர் ‘கொசோவா குடியரசு’ என்றும் அறிவித்துக் கொண்டது. ஆனால் செர்பியாவைப் பொறுத்தவரை கொசோவாவுக்கு தன்னாட்சி அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. மற்றபடி இது இன்றுவரை செர்பியாவைச் சேர்ந்ததுதான்).ஆக யுகோஸ்லா வியக் குடியரசிலிருந்து ஸ்லோவே னியா பிரிந்தது. க்ரோவேஷியா பிரிந்தது. மாசிடோனியாவும் பிரிந்தது. இந்தக் காலகட்டத் திலேயே போஸ்னியாவிலும் ரண களம் தொடங்கியது.

“இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலக அளவில் மிக மோச மான இனப்போராட்டம் போஸ்னி யாவில்தான் நடந்தது” என்று அகில உலகப் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/செம்மை-காணுமா-செர்பியா-12/article8671349.ece

Link to comment
Share on other sites

செம்மை காணுமா செர்பியா? - 13

 

 
கடந்த 1995 நவம்பரில் போஸ்னியாவின் சரயேவோ பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட ஐ.நா. அமைதிப் படை வீரர்கள்.
கடந்த 1995 நவம்பரில் போஸ்னியாவின் சரயேவோ பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட ஐ.நா. அமைதிப் படை வீரர்கள்.

கடந்த 1992-லிருந்து 1995 வரை நடைபெற்றது போஸ்னிய யுத்தம். இதில் செர்பியா முக்கிய பங்குவகித்தது என்பதால் போஸ்னியா குறித்த விளக்கங் களும் செர்பியா குறித்த விளக்கங்களும் இந்தத் தொடரில் அவசியமாகின்றன.

சரித்திரத்தால் மிகவும் வஞ்சிக்கப்பட்ட நாடு போஸ்னியாதான் என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். ஆரம்பத்திலிருந்தே பல அரசியல் மாற்றங்களால் அலைக் கழிக்கப்பட்டு ரத்தத்தில் தோய்ந்தபடியே தொடர்ந்தது.

போஸ்னிய யுத்தத்தின்போது அதன் தலைநகரான சரயேவோவில் கூட எந்த வீட்டிலும் மின் விநியோகம் கிடையாது. உணவுப் பொருள்கள் எல்லாம் யானை விலை. ஒரே ஒரு காரட்டின் (தங்கம் அல்ல...காய்) விலை மூன்று டாலர்கள். வீடுகளில் தண்ணீர் விநியோகம் கிடையாது.

போஸ்னியாவில் உள்ள மக்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முஸ்லிம்கள் (இவர்களில் பலர்

‘ஸ்லாவ்’ என்ற பழைய இனத்திலிருந்து இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறியவர்கள்), கிரேக்கப் பழமையினமான

‘செர்பு’கள், ‘க்ரோட்’டுகள் என்று அழைக்கப்படும் ரோமன் கத்தோலிக் கர்கள்.

ரோமப் பேரரசு, அதன்பிறகு அட்டோமன் துருக்கியர்கள் ஆட்சி என்று அடிமை வாழ்வு அனுபவித்தது போஸ்னியா. ஐரோப்பியத் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து நடத்திய பெர்லின் மாநாட்டின்போதுதான் ஆஸ்திரியா - ஹங்கேரி வசம் போஸ்னியாவை ஒப்படைக்க, 1908-ல் ஆஸ்திரியா - ஹங்கேரி நாடுகள் போஸ்னியாவை அதிகாரப் பூர்வமாக சுவீகரித்துக் கொண்டன. என்றாலும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தான் அவை போஸ்னியாவை நடத்தி வந்தன.

நாளடைவில் முதலாம் உலகப் போர் நடைபெற்றதையும் பின்னர் டிட்டோ வின் ஆட்சியில் போஸ்னியா, யுகோஸ்லாவி யாவின் ஒரு பகுதியானதையும் இத் தொடரில் நாம் கண்டோம்.

டிட்டோவின் இறப்புக்குப் பிறகு க்ரோவேஷியாவும் ஸ்லோவேனியாவும் தங்களைச் சுதந்திர நாடுகளாக அறிவித்துக் கொண்டன. ஆனால் போஸ்னியா சுதந்திர மான தனி நாடாக மாறுவதை அந்த நாட்டில் வசித்த செர்புகள் ஒப்புக் கொள்ளவில்லை. செர்பியாவோடு சேர்ந்தே இருந்தால்தான் போஸ்னியாவில் உள்ள தங்களுக்குப் பாதுகாப்பு என்பது அவர்கள் எண்ணம். ஆனால் முஸ்லிம்கள் மற்றும் க்ரோட் இனத்தவரின் மெஜாரிட்டி வாக்குகளைப் பெற்று போஸ்னியா தனி நாடாகத் தன்னை அறிவித்துக் கொண்டது. உள்நாட்டுக் கலவரம் உச்சத்தை அடைந்தது.

போஸ்னியாவில் மிகப்பெரிய அளவில் இனக்கலவரம் உண்டானது. இதற்கு அதன் மக்கள் தொகையில் பல்வேறு இனத்தவரின் எண்ணிக்கையும் அவர்களுக்கிடையே நிலவிய வெறுப்புணர்வும்தான் காரணம்.

மொத்த மக்கள் தொகையில் சுமார் நாற்பது சதவீதம் பேர் முஸ்லிம்கள். முப்பத்திரெண்டு சதவீதம் பேர் செர்புகள். பதினெட்டு சதவீதம் பேர் க்ரோட்டுகள்.

மெஜாரிட்டியாக இல்லையென்றாலும் செர்பு பிரிவினர் வலுவாக இருந்தார்கள். கொரில்லா போர்முறை தெரிந்திருந்தது மட்டுமல்ல, செர்பியா இவர்களுக்கு ஆயுத விநியோகம் செய்துவந்தது.

‘தனி நாடு’ அறிவிப்பு வந்ததும் 1992-ல் வெடித்த உள்நாட்டுக் கலவரத்தில் போஸ்னியாவில் ஆயிரக்கணக்கில் உயிர்கள் பறிக்கப்பட்டன. நாளாக ஆக கலவரம் பெரிதானது. “முஸ்லிம்களை போஸ்னியாவிலிருந்து வெளியேற்றுவதே எங்கள் நோக்கம்” என்று சபதம் செய்தனர் செர்பு இன மக்கள். “எத்னிக் க்ளென்சிங்” என்று வர்ணிக்கப்படும் இந்த

‘இனரீதியில் பரிசுத்தப்படுத்தும்’ அழிக்கும் வேலை வெறித்தனமாக விரிவுபடுத்தப்பட்டது. இரண்டே மாதங்களில் போஸ்னியாவில் மூன்றில் இரு பகுதியை பலத்தை உபயோ கித்து ஆக்கிரமித்துவிட்டனர் செர்புகள்.

செர்புகளின் முஸ்லிம் அழிப்பு சபதம் ஒரு பக்கம் நடக்க, க்ரோட்டுகளுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே இன்னொரு அடிதடி தொடங்கியது.

ஐ.நா.சபை முன்வைத்த எந்த அமைதி திட்டத்தையும் செர்புகள் ஏற்றுக் கொள்ள வில்லை. அரை மனதோடு ஏற்றுக் கொண்ட நிபந்தனைகளையும் கையெழுத்திட்ட சில நாட்களிலேயே மீறினார்கள்.

இத்தனை குழப்பங்கள் ஒரு நாட்டில் நடக்கும்போது

‘உலக ரட்சகன்’ அமெரிக்கா சும்மா இருக்குமா? தலையிட்டது. சம்பந்தப்பட்ட தலைவர்களை அழைத்து சமரச பேச்சுவார்த்தையைத் தொடங்கியது.

அமெரிக்காவிலுள்ள டேடன் என்ற இடத்தில் இந்த சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஏற்பாடு செய்யப்பட்டது. போஸ்னியாவின் தலைவரான அலிஜா இதற்கு அழைக்கப்பட்டார். அதே சமயம் போஸ்னியாவில் உள்ள க்ரோட் மற்றும் செர்ப் இனப்பிரிவுகளின் தலைவர்களை அமெரிக்கா அழைக்கவில்லை. இவர்களை ஆட்டுவிப்பது முறையே க்ரோவேஷியா மற்றும் செர்பியா ஆகிய நாடுகள்தான். எனவே க்ரோவேஷிய நாட்டு அதிபர் டுட்ஜ்மென் மற்றும் செர்பிய நாட்டு அதிபர் மிலோசெவிக் ஆகியோரைத்தான் சமாதானம் பேச அழைத்தது.

பேச்சு வார்த்தைகளின் முடிவில் “செர்பு களுக்கு 49 சதவீதம், மற்றவர்களுக்கு 51 சதவீதம் என்ற வகையில் போஸ்னியாவைப் பங்கு போட்டுவிடலாம். அவரவர் பகுதிகளில் அவரவர் தங்கியிருக்கட்டும். தனித்தனி குடியரசுகளாக - ஆனால் ஒரே நாடாக - போஸ்னியா இருக்கும்” என்ற ஏற்பாட்டுக்கு எல்லா தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.

51 சதவீதத்துக்கு கொஞ்சம் குறைவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தொடக்கத்தில் செர்பு பிரிவினர் முறுக்கிக் கொண்டனர். என்றாலும் உலக நாடுகளின் தீவிரமான கருத்துகளும் அதனால் வலுவடைந்த போஸ்னிய முஸ்லிம்களின் நிலையும் அவர்களை மாற்றிக் கொள்ள வைத்தது.

ஆனால் பிரச்சினை தீர்ந்துவிடவில்லை. அது வேறு புதிய வடிவத்தில் தலைகாட்டியது. எந்தப் பகுதியை யார் எடுத்துக் கொள்வது என்பதில்தான் இடியாப்பச் சிக்கல்! சரயேவோ இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதில் ஒரு பகுதி தங்களுடையதாக வேண்டும் என்றார்கள் செர்புகள். முஸ்லிம்களோ அது அப்படியே முழுமையாகத் தங்களுக்குத் தேவை என்றனர். செர்பிய நாடு மற்றும் போஸ்னியாவில் உள்ள செர்புகள் வாழும் பகுதி ஆகிய இரு பரப்புகளை இணைக்கும்

‘போஸ்னியா காரிடார்’ என்ற நிலப்பகுதி யாருக்கு என்பதில் நிறைய வெப்ப விவாதங்கள்.

தொடர்ந்தன கலவரங்கள்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/செம்மை-காணுமா-செர்பியா-13/article8676539.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

செம்மை காணுமா செர்பியா?- 14

 
 
போஸ்னியாவின் சரஜீவோ நகரில் செர்புகள் நடத்திய தாக்குதலில் மொமோ மற்றும் உசிர் ஆகிய இரட்டை கட்டிடங்கள் தீப்பிடித்து எரிகின்றன.
போஸ்னியாவின் சரஜீவோ நகரில் செர்புகள் நடத்திய தாக்குதலில் மொமோ மற்றும் உசிர் ஆகிய இரட்டை கட்டிடங்கள் தீப்பிடித்து எரிகின்றன.

போஸ்னியாவின் முஸ்லிம்கள், செர்புகள் மற்றும் க்ரோட்டுகள் ஆகியோருக்கிடையே தோன்றிய பகை தீரவில்லை..

வரலாறு காணாத அதிசயமாக ஐ.நா.சபையின் அமைதிப்படை போஸ்னியாவில் டென்ட் அடித்தது. ஐ.நா.ராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள்,

‘‘இவ்வளவு நடந்த பிறகும் நீங்கள் வேற்றுமை பாராட்ட லாமா?’’ என்று வெவ்வேறு தரப் பைச் சேர்ந்தவர்களைக் கேட்க, ‘‘இவ்வளவு நடந்த பிறகும் நாங்கள் ஒற்றுமையாக இருக்க முடியுமா? ’’ என்று எதிர் கேள்வி கேட்டனர் மக்கள்!

போருக்குப் பிறகு ஏற்பட்ட உடன்பாட்டின்படி ஜோரன் ஜிந்த்ஜிக் என்பவர் போஸ்னி யாவின் பிரதமரானார். போஸ்னி யாவின் கம்யூனிஸ்ட் கட்சியைச் சாராத முதல் பிரதமர் இவர்தான்.

ஆனால் ஒரு சில ஆண்டு களிலேயே அவர் படுகொலை செய்யப்பட்டார். மிலோசெவிக் ஆண்டபோதே அவருக்கு எதிராக ஊர்வலங்கள் நடத்திய ஜனநாயக வாதி இவர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தப் படுகொலை போஸ் னிய மக்களை கவலையடையச் செய்தது.

மொத்தத்தில் இனவெறியும் மத வெறியும் எந்த அளவுக்கு மனிதர்களை கூண்டோடு சீரழிக்க முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்கியது போஸ்னியா.

போஸ்னியாவை ஆண்ட முஸ்லிம் அரசு, இயங்காத நிலை ஏற்பட்டது. அங்குள்ள செர்பு பிரிவினர் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் ஆக்கிரமிப்பு பகுதியை அதிகரித்துக் கொண்டே வந்தனர். ஐ.நா. அமைதியை ஏற்படுத்துவதற்காக போஸ்னி யாவுக்கு அனுப்பிய அமைதிப் படையால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சொல்லப் போனால் இந்த அமைதிப் படையின் மீது கூட குண்டு வீச்சுகள் நடந்தன.

போதாக்குறைக்கு அந்தப் படையினரில் சிலரையே பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு, “ஐ.நா. சபை தன் இடையூறை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று எச்சரித்தனர் செர்பு பிரிவினர்.

‘போஸ்னியாவில் அமைதி தேவை’ என்ற பொதுவான அறிக்கையையாவது மற்ற அனைத்து ஐரோப்பிய நாடுகளும் சேர்ந்து வெளியிட வேண்டும் என்ற ஜெர்மனியின் கோரிக்கையைக்கூட ஏற்க மறுத்து செர்பு பிரிவினரை வெளிப்படையாகவே ஆதரித்தது ரஷ்யா. “ஐ.நா.வின் அமைதி முயற்சியில் எந்தப் பயனும் இல்லை. பேசாமல் அது தன் முயற்சி யிலிருந்து பின் வாங்கி விடலாம்” என்று பிரெஞ்சு அதிபர் வெளிப் படையாகவே விமர்சித்தார்.

இப்படி அமைதியை மேலும் மேலும் குலைக்கும் வழியில்தான் செய்திகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் இந்த நிலையில் சில திடீர் மாற்றங்கள் ஏற்பட்டன.

ஐ.நா.வின் ராணுவப் பிரதிநிதி போஸ்னியாவில் உள்ள முஸ்லிம் அரசு மற்றும் செர்பு பிரிவு தலைவர் ஆகியோரிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு ஒருவழியாக பலன் கிடைக்கத் தொடங்கியது. முதல் கட்டமாக ஒரு வாரம் போர் நிறுத்தத்துக்கு ஒத்துக் கொண்டனர் இரு தரப்பினரும். அதைத் தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு போர் நிறுத்தத்தைத் தொடரவும் சம்மதித்தனர். முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கும் இந்த அமைதி முயற்சியில் பங்கு உண்டு.

இருந்தாலும் பல விஷயங்கள் சங்கடத்தை ஏற்படுத்தின. இரு தரப்பினரும் கைகுலுக்கிக் கொள்ள வோ, ஏன் ஒரே இடத்தில் சேர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவோ கூட மறுத்து விட்டனர்.

போஸ்னியாவின் தலை நகர் சர்ஜேவோவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் போஸ்னிய அதிபரும் அந்நாட்டு ராணுவத் தளபதியும். பிறகு அந்த ஒப்பந்தம் அங்கிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பலே என்ற இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. (அது ‘செர்பு பிரிவினரின்’ கோட்டை என்று வர்ணிக்கப்படும் இடம்).

அங்குள்ள போஸ்னிய செர்பு பிரிவினரின் தலைவரிடமும், அந்தப் பிரிவின் கமாண்டரிடமும் கையெ ழுத்து பெறப்பட்டது. இந்த ஒப்பந்தத் தில் ஐ.நா. தன் அமைதிப் பணி களை தொடர இருதரப்பும் ஒத்துக் கொண்டதோடு, வேற்று நாட்டு ராணுவம் போஸ்னியாவில் நுழையாமல் பார்த்துக் கொள்வ தற்கும் சம்மதித்திருக்கிறார்கள்.

“பேச்சு வார்த்தையின் மூலம் சமாதானத்துக்கு வரத் தயார்” என்று செர்பு பிரிவினர் கூறினாலும் போஸ்னியாவில் 51 சதவீத பரப்பாவது எங்கள் கைக்கு வர வேண்டும் என்ற தங்கள் அடிப்படை கோரிக்கையை சிறிதளவுகூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் அவர்கள் அறிவித்தனர். ஏற்கெனவே போஸ்னியாவில் மூன்றில் இரு பங்கு பரப்பை செர்பு பிரிவினர் தங்கள் ஆளுகைக்குள் வைத்துக் கொண்டிருந்தனர் என்பதும், போர் நிறுத்தத்துக்குக் கொள்கையளவில் ஒத்துக் கொண் டாலும் தாங்கள் ஆக்கிரமிப்பு செய்த இடத்திலிருந்து அவர்கள் இம்மியும் பின்வாங்கத் தயாராக இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

எனினும் தொடர்ந்து சுமார் மூன்று வருடங்களாக நடந்து வந்த கடுமையான உள்நாட்டுக் கலவரம் தற்காலிகமாகவாவது நின்றது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/செம்மை-காணுமா-செர்பியா-14/article8680599.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

செம்மை காணுமா செர்பியா?- 15

 

 
செர்பியாவின் ராணுவத் தளபதியாக பணியாற்றிய ராட்கோ மிலாடிக் (நடுவில் இருப்பவர்).
செர்பியாவின் ராணுவத் தளபதியாக பணியாற்றிய ராட்கோ மிலாடிக் (நடுவில் இருப்பவர்).

யுகோஸ்லாவியாவின் போர் குற்றவாளிகளில் மிகவும் அதிகமாக செய்திகளில் இடம் பெற்றவர்கள் செர்பியாவின் ராணுவத் தளபதியான ராட்கோ மிலாடிக் மற்றும் க்ரோவேஷிய-செர்பிய தளபதியான கோரான் ஹாட்ஜிக்.

வடக்கு செர்பியாவிலுள்ள லாஸரேவோ என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டார் ராட்கோ மிலாடிக். விடியற் காலையில் அந்த கிராம மக்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் அங்கிருந்த நான்கு வீடுகளில் ஒரே சமயத்தில் புகுந்தனர் காவல் துறையினர். இந்த நான்கு வீடுகளுமே மிலாடிக்கின் உறவினர்களுக்கானது. சின்னதாக ஒரு நடைபயிற்சி செய்து வரலாம் என்று கிளம்பிய மிலாடிக்கை சூழ்ந்து கொண்டு கைது செய்தார்கள். அவரிடமிருந்த இரு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர் பெல்கிரேடுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நெடுங்காலத்துக்கு காவல் துறைக்கு ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தார் மிலாடிக். செர்பியாவின் அதிபர் போரிஸ் டாடிக், ‘மிலாடிக்கை கைது செய்து விட்டோம்’ என்று பத்திரிக்கையாளர் கூட்டத்தில் உறுதி செய்தார்.

வித்தியாசமான மாறுவேடத்தில் மிலாடிக் இருந்திருப்பார் என்று பலரும் நம்பியிருக்க, அப்படி எதுவும் இல்லாமல் இயல்பான தோற்றத்தில்தான் அவர் இருந்தார்.

பெல்கிரேடில் உள்ள உயர் நீதிமன்றத்துக்கு அவர் அழைத்து வரப்பட்டிருந்தார். நெதர்லாந்திலுள்ள ஹேக் நகரின் உலக நீதிமன்றம் அவரை விசாரணைக்காக அனுப்பக் கோரியிருந்தது. மிலாடிக்கின் வழக்கறிஞர் மிலாடிக்கின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அவரது ஒரு கை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறி அவர் ஹேக் நகருக்குச் செல்வதோ, விசாரணையில் தகவல் அளிப்பதோ முடியாத காரியம் என்றார். ஆனால் அவர் ஹேக் செல்லும் அளவுக்கு உடல் நலம் தகுதியாக இருக்கிறது என்பதை மருத்துவர்களின் மூலம் உறுதி செய்தது நீதிமன்றம். 2011 மே 31 அன்று ஹேக் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டார் மிலாடிக். அங்கு அவர் விசாரணைக் கைதியாகத் தொடர்கிறார். இந்த வழக்கு 2012 மே, 16 அன்று தொடங்கியது.

செர்பிய அரசு எதனால் தன் முன்னாள் ராணுவ அதிபரைக் கைது செய்ய வேண்டும்? வேறு வழியில்லை. செர்பிய அரசு மிலாடிக்கை மறைத்துப் பாதுகாப்பதாக ஐ.நா. குற்றம் சாட்டியது. ஐரோப்பிய யூனியனில் உள்ள சக நாடுகள் செர்பியாவை தவிர்க்கத் தொடங்கின. மிலாடிக்கை கைது செய்த பிறகுதான் ஐரோப்பிய யூனியன் நாடுகள் செர்பியாவுடன் சுமுகமான உறவைத் தொடர்ந்தன.

மிலாடிக் மீது வைக்கப்படும் பல்வேறு போர்க் குற்றங்களில் முக்கியமானது இது. ஜூலை 12, 1995 அன்று 700 போஸ்னிய ராணுவ வீரர்களும் பொதுமக்களுமாக ஒரு சாலையைக் கடந்து கொண்டிருந்தனர். அப்போது மிலாடிக்கின் ஆணையின்படி செர்பிய ராணுவத்தினர் அவர்களைச் சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்கினர்.

இந்தக் குற்றச்சாட்டை மிலாடிக்கின் வழக்கறிஞர் மறுத்தார். நேரடி சாட்சிகள் என்று அழைத்து வரப்பட்டவர்கள் தாக்குதல் எப்படித் தொடங்கியது என்பதில் மாறுபட்ட சாட்சியங்களை அளித்தாகக் குறிப்பிட்டார். என்றாலும் அடிப்படையான விஷயங்களும் மிருகத்தனமான தாக்குதலும் எந்தவிதத்திலும் மறுக்கப்படவில்லை.

7000-க்கும் அதிகமான முஸ்லிம்களைக் கொன்றதாக மிலாடிக் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு நடந்து வருகிறது.

அதுவும் போஸ்னியாவில் செர்பியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை செர்பியா கைப்பற்றியவுடன் அங்கிருந்த 15000 போஸ்னிய முஸ்லிம்கள் தப்பிச் செல்ல முயற்சித்தனர். அவர்கள் மீதும் கடும் தாக்குதல் நடத்தச் சொல்லி மிலாடிக் உத்தரவிட்டார் என்பது குற்றச்சாட்டு. இது போர் நெறிகளுக்கு எதிரான ஒன்று. கடும் போர்க்குற்றம்.

போதாக் குறைக்கு ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த சிலரை பணயக் கைதியாக வைத்துக் கொண்டு நடுவில் கோரிக்கைகளை வைத்தார்.

72 வயதான ராட்கோ மிலாடிக் தனது உயர் ராணுவ அதிகாரியாகவும், செர்பிய அதிபராகவும் விளங்கிய மிலோசெவிக்கைத் தாண்டியும் உயிர் வாழ்கிறார்.

பல விபரீதமான போர் கட்டளைகளைப் பிறப்பித்த மிலாடிக், நரம்புக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார். நீதிபதி நீதிமன்றத்துக்குள் நுழைந்தவுடன் முதிய வயதை எட்டியுள்ள மிலாடிக் தலையைத் தாழ்த்துவதும் பின் தன் இதயத்தின் மீது இரு கைகளையும் வைத்துக் கொள்வதும் பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவம்.

இப்போதும்கூட சாட்சிகள் மிலாடிக்கு எதிராக சாட்சியம் கூற பயப்படுகிறார்கள். மூடிய திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு அவர்கள் சாட்சியம் அளிக்க நீதிமன்றம் ஒத்துக் கொண்டிருக்கிறது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/செம்மை-காணுமா-செர்பியா-15/article8685758.ece

Link to comment
Share on other sites

செம்மை காணுமா செர்பியா?- 16

 

 
க்ரோவேஷியாவின் கும்ரோவேக் நகரில் அமைக்கப்பட்டுள்ள யுகோஸ்லாவியா முன்னாள் அதிபர் டிட்டோவின் சிலைக்கு மரியாதை செலுத்தும் அந்த நாட்டு மக்கள். (கோப்புப் படம்)
க்ரோவேஷியாவின் கும்ரோவேக் நகரில் அமைக்கப்பட்டுள்ள யுகோஸ்லாவியா முன்னாள் அதிபர் டிட்டோவின் சிலைக்கு மரியாதை செலுத்தும் அந்த நாட்டு மக்கள். (கோப்புப் படம்)

நேட்டோ அமைப்பில் செர்பியா பல கசப்புகளை உருவாக்கியதைத் தொடர்ந்து அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் செர்பியாவுக்கு அளித்து வந்த நிதி உதவிகளை நிறுத்திக் கொண்டுவிட்டன. என்றாலும் ரஷ்யா, சீனா, கிரீஸ் ஆகிய நாடுகள் செர்பியாவுக்கு நிதி உதவிகளை அளிக்கத் தொடங்கின. என்றாலும் கி.பி. 2000-க்குப் பிறகு ஐரோப்பிய யூனியன், செர்பியாவுக்கான நிதி உதவியை ஓரளவு அதிகரித்தது. 2003-ல் அமெரிக்க உள்துறை அமைச்சர் காலின் பவல் செர்பியாவுக்கும், மான்டேனெக்ரோவுக்கான உறவுகள் ஒப்பந்தத்தைப் பின்பற்றுவதாக இருப்பதாக சான்றிதழ் அளித்தார். செர்பியா வைச் சேர்ந்த அரசியல் கைதிகளை அமெரிக்கா விடுதலை செய்தது. பின்னர் நிதி உதவிகளையும் அளிக்கத் தொடங்கியது.

இன்றளவும் பல பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறது செர்பியா. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

ட்ரீனா நதிக்கரைகளில் உள்ள சில பகுதிகளை போஸ்னியா, செர்பியா ஆகிய இரண்டுமே சொந்தம் கொண்டாடுகின்றன.

கொசோவாவைத் தனது பகுதி என்று செர்பியா கூற, தங்களை முழுவதும் சுயாட்சி பெற்ற பகுதியாக கொசோவா அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பை அல்பேனியா அரசு அங்கீகரித்திருக்கிறது.

தனியாகப் பிரிந்த பிறகும் அமைதி அடைய வில்லை செர்பியாவும் க்ரோவேஷியாவும். மேலோட்டமாக இவை தங்களுக்குள் அமைதி நிலவ வேண்டுமென்று கூறினாலும் நடப்பது வேறாகத்தான் இருக்கிறது.

தன் எல்லைக்குள் க்ரோவேஷியாவிலி ருந்து பொருள்கள் நுழையத் தடை விதித்தது செர்பியா. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 2015-ல் க்ரோவேஷியா ஓர் ஆணையை வெளியிட்டது. ‘’செர்பிய குடிமக்களும், செர்பிய கார்களும் எங்கள் எல்லைக்குள் நுழையக் கூடாது’.

2000-ல் மிலோசெவிக் காலத்திலிருந்தே இரு நாடுகளுக்கிடையே நிலவிய பகை மைக்குப் பிறகு இப்போது அந்த விரோதம் மீண்டும் உச்ச கட்டத்தை அடைந்திருக்கிறது எனலாம்.

க்ரோவேஷியாவில் உற்பத்தி செய்யப் பட்ட பொருள்கள் எதுவுமே தனது நாட்டுக் குள் நுழையக் கூடாது என்பதில் செர்பியா தெளிவாக இருக்கிறது.

மிலோசெவிக் ஆட்சிக்குப் பிறகு இரு நாடுகளுமே சமரசத்துக்கு அவ்வப்போது முயன்றன. ஆனால் கூடவே கடுமையான வார்த்தைகளையும் ஒன்றுக்கெதிராக ஒன்று பேசிக் கொண்டிருந்தன.

2013-ல் க்ரோவேஷியா ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர் ஆனது. செர்பியாவும் ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக விருப்பம் தெரிவித்திருக்கிறது.

க்ரோவேஷியா அகதிகள் நேரடியாக செர்பியாவுக்குள் நுழைவதற்குப் பதிலாக மாசிடோனியாவை அடைந்து அங்கிருந்து செர்பியாவுக்குள் நுழைகிறார்கள்.

பதிலுக்கு செர்பிய அகதிகளும் க்ரோவேஷியாவுக்கு அனுப்பப்படுகி றார்கள். இதை க்ரோவேஷியப் பிரதமர் ஜோரான் மிலநோவிக் எதிர்க்கிறார். ‘’இந்த மக்களை ஹங்கேரிக்கு அனுப்பட்டுமே’’ என்கிறார் அவர்.

இதனிடையே மிலோசெவிக் சிறையில் மாரடைப்பால் மார்ச் 11, 2006 அன்று இறந்தார். நான்கு வருடங்களாக அவர் மீது நடந்து வந்த வழக்கின் தீர்ப்பு மேலும் சில மாதங்களில் வெளிவரும் என்ற நிலையில் அவர் இறந்திருந்தார்.

இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் தனக்கு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டி ருக்கிறது என்றும், மாஸ்கோவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் இதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்ள விரும்புவதாகவும் அவர் கூற, உலக நீதிமன்றம் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தது.

அவர் இயற்கையாக இறந்ததில் கணிச மானவர்களுக்கு வருத்தம்! அதே சமயம் செர்பியாவில் மிலோசெவிக் ஆதரவாளர்கள் இன்னமும் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களின் பிரதிநிதியாக ஒருவர் கூறியது - “மிலோசெவிக் ஹேக் நகரில் இறக்க வில்லை. அங்கு அவர் கொலை செய்யப்பட்டி ருக்கிறார்’’.

செர்பியாவின் அதிபர் போரிஸ் டாடிக் என்பவர் மிலோசெவிக்கை உறுப்பினராகக் கொண்ட சோஷலிசக் கட்சியின் எதிரி. ‘‘மிலோசெவிக்கின் இறப்புக்கு ஐ.நா. போர்க் குற்ற வழக்கு மன்றம்தான் பொறுப்பேற்க வேண்டும். எனினும் செர்பியா தொடர்ந்து சர்வதேச நீதிமன்றத்துக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கும்’ என்று கூறியிருக் கிறார். மிலோசெவிக் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார் என்கிற கருத்து செர்பியாவில் பரவலாக உள்ளது.

முன்பு யுகோஸ்லாவியாவின் ஒரு பகுதியாக விளங்கிய க்ரோவேஷியாவில் சமீபத்தில் ஒரு பேச்சு வந்தது. மறைந்த ஜனாதிபதி ஃப்ரான்ஜோ டுட்ஜ்மேன் என்பவருக்கு சிலையை எழுப்பலாம் என்றனர் சிலர். யுகோஸ்லாவியாவிலிருந்து க்ரோவேஷியா தனி நாடாகப் பிரிவதற்குப் போரிட்டவர்களில் அவர் முக்கியமானவர்.

ஆனால் மிக அதிகமானவர்கள் வேறொருவருக்குதான் அங்கு சிலை எழுப்புவோம் என்று தீர்மானித்தார்கள். அவர் டிட்டோ. அதாவது நாட்டின் சுதந்திரத் திற்குப் போரிட்டவரைவிட அந்த நாட்டைப் பிற நாடுகளோடு இணைத்து ஆட்சி செய்த வருக்குதான் அங்கே அதிக மரியாதை நிலவுகிறது! டிட்டோ இறந்து முப்பது வருடங்களுக்குமேல் ஆகிறது. அவர் உருவாக்கிய யுகோஸ்லாவியா பிரிந்தும் சுமார் இருபது வருடங்கள் ஆகின்றன. என்றா லும் டிட்டோ என்றால் அத்தனை (முன்னாள்) யுகோஸ்லாவிய நாட்டு மக்களுக்கும் இன்னமும் பிரியம். பொதுவாக சர்வாதிகாரிகள் இப்படி மக்களின் அன்பைப் பெறுவது என்பது அரிதுதான்.

உள்ளூர் மக்கள் மட்டுமல்ல மேலை நாட்டு மக்களும் வேறொரு காரணத்துக்காக டிட்டோவை மதிக்கிறார்கள். உலக கம்யூனிஸத்துக்கே தான்தான் தலைமை என்பதுபோல் சோவியத் யூனியன் நடந்து கொணடபோது, இந்தப் போக்கை ஏற்க மறுத்தவர் டிட்டோ. ‘’எங்கள் நாட்டுக்கு எது தேவை என்பதை நாங்கள் தீர்மானித்துக் கொள்கிறோம்.

நான் விரும்பும் கம்யூனிஸம் என்பது என் நாட்டு நலனுக்கு அடுத்ததாகத்தான் இருக்கும்’’ என்றார்.

பெல்கிரேடில் உள்ள டிட்டோவின் மார்பளவுச் சிலைக்கு எதிராக நின்று பவ்யத்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். பிற முன்னாள் யுகோஸ்லாவிய நாடுகளிலிருந்து செர்பியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள்.

டிட்டோவின் ஆட்சியில் மத சகிப்புத் தன்மை பரவலாகவே இருந்தது. அப்போது நிலவிய மத சுதந்திரத்தை அதற்குப் பிறகு எப்போதுமே அந்த நாடுகள் கண்டதில்லை.

ஆக இன்றளவும் செர்பியா தன் ‘சகோதர’ நாடுகளுடன் பங்காளிச் சண்டை மனநிலையில்தான் இருந்து வருகிறது.

முற்றும்

 

(அடுத்து சமீபத்தில் உலகையே கிடுகிடுக்க வைத்த நாடு)

http://tamil.thehindu.com/world/செம்மை-காணுமா-செர்பியா-16/article8690294.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.